பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / தக்காளி சூப் மிக்ஸ் தயாரிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தக்காளி சூப் மிக்ஸ் தயாரிப்பு

தக்காளி சூப் மிக்ஸ் தயாரிப்பு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

முழுவதுமாக பழுத்த கெட்டியான தக்காளிப் பழங்களை குழாயில் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பின் இதனை சிறு துண்டுகளாக வெட்டி தனி அறை உலர்த்தியில் 80 0 செல்சியஸில் 10 மணி நேரம் உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட துண்டுகளை மின் அம்மியில் அரைத்து பொடியாக்க வேண்டும்

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

அளவு

தக்காளிப் பொடி

5.0 கிராம்

வெங்காயப் பொடி

0.5 கிராம்

சோள மாவு

2.0 கிராம்

சீரகத் தூள்

0.5 கிராம்

மிளகுத் தூள்

0.3 கிராம்

உப்பு

1.5 கிராம்

அஜினமோட்டோ

0.5 கிராம்

செய்முறை

அனைத்து தேவையான பொருட்களை நன்கு கலக்கி பாலித்தீன் பைகளில் மூட்டை கட்டவேண்டும்.

வெங்காயப் பொடியை தயாரிக்கும் முறை

பெரிய வெங்காயத்தை தேர்வு செய்து தோலை உறிக்கவும். பின் இதனை குழாயில் ஓடும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனை தனி அறை உலர்த்தியில் 60 0 செ 7 மணி நேரம் வரை வைத்து உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட செதில்களை அரைத்து பொடியாக்கி பாலித்தீன் பைகளில் மூட்டைகட்டவும். 10 கிராம் செய்து வைத்திருந்த தக்காளி சூப் மிக்ஸை 150 மில்லி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு கிளறவும்.

ஆதாரம் : தொழில்யுகம் மாத இதழ்

2.91071428571
முருகன்.r Jan 18, 2018 10:54 AM

எவ்வளவு நாள் கெட்டுபோகாமல் இருக்கும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top