பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / தொழிலாளர் நலன் / இடம் விட்டு இடம் பெயர்சார் தேசியக் கொள்கை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இடம் விட்டு இடம் பெயர்சார் தேசியக் கொள்கை

இடம் விட்டு இடம் பெயர்சார் தேசியக் கொள்கையை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இடம்விட்டு இடம் பெயர்வதற்கான சட்டம்

நாட்டிற்குள் மக்கள் இடம்விட்டு இடம் பெயர்வதற்கான தேசிய கொள்கை எதுவும் இந்தியாவில் இல்லை. அப்படி ஒரு கொள்கை இருந்தால், அது பிற இடம்விட்டு இடம் பெயர்வதற்கான காரணங்கள் தவிர மாநிலங்களுக்குள்ளோ மற்ற மாநிலங்களுக்கோ இடம் விட்டு இடம் பெயரும் போது அவர்கள் பெற்று வந்த சலுகைகள் தொடர்ந்து கிடைக்குமா என்பதும் முக்கியமாகும். இடம் விட்டு இடம் பெயர்பவர்கள் சார் கொள்கை ஏதாவது இந்தியாவில் இருக்கிறது என்று பார்த்தால் இது 1979 ல் இடம் விட்டு இடம் பெயர்ந்து வேலை தேடி செல்பவர்களுக்கான மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பணியாளர்கள் (வேலை வாய்ப்பு ஒழுங்கு முறை மற்றும் பணி சார்ந்த நிலைமைகள்) சட்டமாகத்தான் இருக்க முடியும்.

இந்த சட்டம் தவிர ஒரு முழுமையான கொள்கை எதுவும் கிடையாது. ஆகவே தற்போது இடம் விட்டு இடம் பெயர்பவர்களின் பல தரப்பட்ட பிரச்சினைகள் உள்ள நிலைமையில் அதனை எதிர்கொள்ளும் விதம் ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்றவாறு அமைகிறது. மாநில அரசுகள் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள மேற்கொண்ட தற்காலிக நடவடிக்கைகளை பார்க்கும் போது, இது தெள்ளத்தெளிவாகிறது. இதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேச மாநிலம் மற்றும் ஓடிசா மாநிலத்திற்ககும் இடையே இடம் விட்டு இடம் பெயர்ந்து செங்கல் சூலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பற்றிய ஒரு மாநில புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கருதலாம்.

இடம் பெயர்வதற்கான காரணங்கள்

இப்படி ஒரு முழுமையான கொள்கை இல்லாத நிலையில் லட்சக்கணக்கான இந்திய மக்கள் ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்கு நீண்ட காலத்திற்காகவோ குறுகிய காலத்திற்காகவோ போக நேரிடுகிறது. இதில் பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய மாநிலத்திற்குள்ளேயே இடம் விட்டு இடம் பெயர்கிறார்கள். சிலர் பிற மாநிலங்களுக்கு செல்கிறார்கள். இந்த இரண்டு வகையான இடம் மாற்றங்களிலும் பெரிய வித்தியாசம் உள்ளது. அவர்கள் இடம் பெயர்வதற்கான காரணங்கள் மாறுபடுகிறது. பிறந்த இடத்தைவிட்டு திருமணத்திற்குப்பின் கல்விக்காக, வேலை வாய்ப்புகளை தேடி என்ற வகையில், பெண்கள் இடம் மாறுவது பெரும்பாலும் திருமணக் காரணங்களால் தான். ஆனால் ஆண்கள் இடம் மாறி செல்வது வேலை தேடும் காரணத்திற்காக. இது அல்லாமல் நாம் ஒரு கொள்கைமுடிவு எடுக்கும்போது ஒருவர் நீண்ட காலத்திற்காக அல்லது நிரந்தரமாக வேறு இடத்திற்கு இடம் பெயர்வது மற்றொருவர் ஓராண்டிற்குள் சில காலங்களுக்காக இடம் பெயர்வது என்ற இரண்டையும் தனித்தனியாக விவரமாக கவனிக்க வேண்டும்.

இந்திய மக்கள் கணக்கெடுப்பு 2011 ன் விவரங்கள் வெளிவருவதற்கு முன் நகர்ப்புற ஜனத்தொகை வளர்ச்சிக்கு எந்த அளவு கிராமப்புறங்களிலிருந்து மற்ற நகர்புறங்களுக்கு இடம் பெயர்வது காரணமாக அமைகிறது என்பதை அறியும் ஆவல் இருந்தது. வேலை தேடி மக்கள் பெருமளவில் நிரந்தரமாக கிராமத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்கிறார்கள் என்று கருதப்பட்ட கருத்து தவறு என்று அறியப்பட்டது. கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்கள் செல்வதால் நகர்ப்புற ஜனத்தொகை வளர்ச்சி 1991 – 2001 மற்றும் 2001 – 2011 ஆண்டுகளில் 20 முதல் 25 சதவிகிதமே இருந்தது என்ற கொள்கை ஆய்வு மைய ஆய்வாளர் கான்ஹ சரண் பிரதான் கூறுகிறார். இந்திய மக்கள் ஜனத்தொகை கணிப்பு 2011 ன்படி இடம் விட்டு இடம் பெயர்வதற்கு என்ன காரணங்ள் கூறப்பட்டிருந்தாலும் கிட்டத்தட்ட 35 சதவிகிதம் பேர் தங்களுடைய வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் நிரந்தரமாக இடம் விட்டு இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

புள்ளி விவரங்கள்

2001-11 ஆண்டுகளில் சராசரியாக 1.5 மில்லியன் ஆண்களும் 0.3 மில்லியன் பெண்களும் ஒவ்வொரு ஆண்டும் நிரந்தரமாக தாங்கள் வசிக்கும் இடத்தை மாற்றியுள்ளனர். இதே சமயம் பலர் தங்களுடைய வசிக்கும் இடத்தை மாற்றாமலேயே இடம் விட்டு இடம் பெயர்ந்து வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள். அவர்கள் ஓர் ஆண்டில் வேலைக்காரணமாக வீட்டை விட்டு குறுகிய காலங்களுக்கு வெளியே தங்குகிறார்கள். கிராமப்புறங்களில் சுமார் பத்தி மில்லியன் குடும்பங்களில் ஒருவர் வீட்டைவிட்டு வெளிய ஆண்டுக்கு 15 நாட்களுக்கு மேல் சுமார் ஆறு மாதம் வரை தங்கியிருக்கிறார் என்று கணிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவராவது வீட்டைவிட்டு வெளியே சென்று வேலை தேடுகிறார் என்று வைத்துக்கொண்டால்கூட ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 மில்லியன் பணியாளர்கள் குறுகிய கால அல்லது பருவ கால இடம்விட்டு இடம் பெயர்ந்து பணி செய்யும் கிராமப்புற மக்களாக நாம் கருதலாம்.

எந்தவொரு ஆண்டிலும் நிரந்தரமாக இடம்விட்டு இடம் பெயரும் பணியாளர்களின் எண்ணிக்கையைவிட குறுகிய காலத்திற்காக இடம் விட்டு இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை 5 ½  மடங்கு அதிகமாகி உள்ளது. அவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பார்கள். மேலும் அவர்கள் வயதானவர்களாக அல்லாமல் குறைந்த வயதுள்ளவர்களாகவே இருப்பார்கள். இடம்விட்டு இடம் மாறி வேலை தேடுபவர்கள் குழுக்களில் இருப்பவர்கள் வேலைக் காரணமாகவே இடம் மாறுகிறார்கள். அவர்கள் வாழும் இடங்களில் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இடம் பெயர்கிறார்கள். பிற இடங்களில் உள்ள பருவ நிலைக்கால வேலையாட்கள் குறைபாட்டை நீக்க இவர்களின் இடம் மாற்றம் உள்ளது. தாங்கள் சென்ற இடத்தில் வேலை கிடைக்காவிட்டால் அங்கு தங்க மாட்டார்கள். ஆகவேதான் அவர்கள் தங்கள் வீட்டை விட்டு குறுகிய காலத்திற்கே இடம் பெயர்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

தொழில் வகைகள்

பருவகால தேவைகளால் இடம் விட்டு இடம் பெயர்ந்து வேலை தேடுபவர்கள் முக்கியமாக விவசாயம் சுரங்கங்கள் மற்றும் சேவைத்தறைகளில் பணியாற்றுகின்றனர். கட்டுமானத்துறையில் அது மிகப்பெரிய உள் கட்டமைப்பு வசதி திட்டமானாலும் பெரிய வீடுகள் சார்ந்த திட்டமானாலும் சிறிய சாலை வேலையானாலும் பெருமளவிலான மக்கள் இந்த பணிகளில் ஈடுபடுவது நமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஒரு மதிப்பீட்டின்படி பருவ காலங்களில் வேலை செய்ய போவதில் 36 சதவிகிதம் கட்டுமானத்துறையிலும் 15 சதவிகிதம் பிற துறைகளிலும் உள்ளது.

மாநிலங்களுக்கிடையே இடம் பெயர்ந்து பணி செய்பவர்கள் சட்டம் கான்ட்ராக்டர்கள், பணியமர்த்துவோர் மற்றும் மாநில அரசுகளின் பங்கும், பொறுப்புகள் பற்றியும் விளக்குகிறது. இது அல்லாமல் கட்டுமானத்துறையில் உள்ள பணியாளர்களுக்கான மேலும் இரண்டு சட்டங்கள் உள்ளன. கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானப்பணி வேலையாட்கள் (வேலை ஒழுங்குமுறை மற்றும் பணி நிலைமைகள்) சட்டம் 1996 மற்றும் கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானப் பணியாளர்கள் நல கூடுதல் வரிசட்டம் 1996 ஆகியனவாகும். இந்த சட்டத்தை சம்மந்தப்பட்ட எல்லா மாநில அரசுகளும் உண்மையாக செயல்படுத்தினார்களா என்ற கவலை உண்மையாகவே உள்ளது. இந்த இரண்டு சட்டங்களும் எனோதானோவென்றுதான் செயல்பட்டிருக்கிறது என்று உயர் நீதி மன்றங்களிலும், உச்ச நீதி மன்றங்களிலும் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று சட்டங்களும், இடம் விட்டு இடம் பெயரும் பணியாளர்களின் வேலை நிலைமைகள் பற்றியும் கட்டுமானப் பணியில் வேலை செய்பவர்கள் பற்றியும் சார்ந்ததாகும்.  ஆனால், இந்த கொள்கை சார்ந்த பேச்சுக்களில் மற்ற பல பிரச்சினைகள் கருதப்படவே இல்லை.

இந்தியாவில் பொருள் செய்வோம் என்பதை பற்றி நாம் பேசும் போது, அடிக்கடி நாம் குறிப்பிடுவது பாரதத்தில் எதைச் செய்ய வேண்டும் மற்றும் இந்தியாவில் எங்கு செய்ய வேண்டும் என்பது தானே தவிர யார் செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும், இந்தியாவில் எங்கு செய்ய வேண்டும் என்பது பற்றி அல்ல. உண்மையில் இடம் விட்டு இடம் சென்று வேலை செய்பவர்கள்தான் இந்த யார் என்பவரில் பெரும்பான்மையினர். இந்தியாவில் பொருள் செய்வோம் என்ற முயற்சிக்கு அவர்கள் மிகவும் இன்றியமையாதவர்கள். பல கருத்துரையாடல்களில் இதை நாம் மறந்து விடுகிறோம். இடம் விட்டு இடம் சென்று வேலை செய்பவர்களால் வீட்டு வசதி உள் கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் மீது என்ன வகையான தாக்கம் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்த ஒரு செய்றகுழுவின்படி இந்திய பொருளாதாரத்திற்கு இப்படி இடம் விட்டு இடம் பெயர்ந்து பணி செய்பவர்கள்தான் பெரும்பான்மையான பங்களிக்கிறார்கள் என்று உணர்த்தப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு அமைச்சகம் 2015 ல் இந்த செயற்குழுவை கூட்டியபோது முக்கியமான குறுக்கீட்டு செயல்களை கண்டறிந்து செயல்படுத்துமாறு பணித்தது. இந்த செயற்குழு தன்னுடைய அறிக்கையை அமைச்சகத்துக்கு மார்ச் 2017 சமர்ப்பித்தது. கட்டுமான பணியாளர்கள் நல சிறப்பு வரி நிதி பயன்படுத்தப்படாமலேயே உள்ளது என்று இந்த செயற்குழு கூறியது. இந்த நிதியத்தை அம்மக்களுக்கான வீட்டு வசதிக்கும் தங்கும் விடுதிக்கும் பயன்படுத்தப்படலாம். இடம் விட்டு இடம் பெயர்ந்து பணியாற்றுபவர்கள் தங்களுடைய ஊதியத்தின் பெரும்பகுதியை தன்னுடைய குடும்பத்திற்கு சுமார் 50,000 கோடி வரை அனுப்புகிறார்கள். இதனால் இடைப்பட்டவர்களுக்கு வருமானம் குறைகிறது.

உரிமைகளை பாதுகாத்தல்

இடம் விட்டு இடம் பெயர்ந்து செய்யும் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சில நலன்கள் அவர்கள் எங்கு வேலைக்கு சேர்ந்தாலும் கிடைக்க வேண்டும். இதில் முக்கியமான ஒரு அம்சம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பொது விநியோக் பொருட்கள் வீணாகாமல் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். முதல் கட்டத்தில் அவர்கள் ஒரு மாநிலத்துக்குள்ளேயே இடம் மாறி இடம் சென்று வேலை செய்யும் போது அவர்களுடைய பொது விநியோக பொருட்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ராய்ப்பூரில் அம்மாநில அரசு, இப்படி பொது வினியோகத்தில் கிடைக்க வேண்டிய பொருட்களை அங்குள்ள எந்த பொது விநியோக கடைகளிலிருந்தும் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இப்படிப்பட்ட மக்கள் இந்த பகுதியிலுள்ள எந்த ஒரு பொது வினியோகக் கடைகளிலிருந்தும் தங்களுடைய பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் அம் மாநிலத்திலுள்ள மற்ற நகரங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. தற்போது பொது விநியோக பொருட்கள் கடைக்காரர்களுக்கும் பயனீட்டாளர்களுக்குமிடையே உள்ள உறவு கடைகாரர்களுக்கு சாதகமாகவே உள்ளதை மாற்ற வேண்டும்.

இடம் விட்டு இடம் பெயர்வோரின் குழந்தைகளுக்கான பள்ளி வசதி

இடம் விட்டு இடம் மாறும் பணியாளர்களின் மற்றொரு பெரிய பிரச்சினை அவர்களோடு செல்லும் குழந்தைகளுக்கு உள்ளுரில் சென்று படிக்க பள்ளி வசதி தேவை. பெற்றோர்கள் வேலை தேடி பிற இடங்களுக்கு செல்லும் போது குழந்தைகள் சில சமயம் பழைய இடத்திலேயே தங்கி இருக்க முடிவதில்லை. இதற்காக ஒடிசா அரசு, குறுகிய கால தங்கும் விடுதிகளை இடம் விட்டு இடம் பெயர்வோரின் குழந்தைகளுக்காக செய்து கொடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் கல்வி நல அமைப்பும், மகாராஷடிரா அரசும் இணைந்து இடம் விட்டு இடம் மாறிய பணியாளர்கள் பெயர்ந்து வந்த இடத்திலும் குழந்தைகள் தங்கி படிக்க வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.

இந்திய அரசியலமைப்பு சட்டம் குடிமக்கள் நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் இடம் விட்டு இடம் செல்ல அடிப்படை உரிமை வழங்கியுள்ளது என்பதை இந்த செயற்குழு சுட்டிக் காட்டியுள்ளது. ஆனாலும், சில மாநிலங்களில், உள்ளுர் மக்களுக்கே கல்வியிலும், அரசு வேலைகளிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைமை இருப்பதை நாம் பார்க்கிறோம். இப்படி உள்ளுர் மக்களுக்கே கல்வியில், வேலையில் முன்னுரிமை என்பதை மாநில அரசுகள் கைவிட வற்புறுத்தப்பட வேண்டும் என்று செயற்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த செய்றகுழுவின் பரிந்துரைகளும் தற்போதுள்ள சட்டங்களையும் இணைத்து செயல் படுத்துவதே, நாட்டிற்குள் இடம் விட்டு இடம் பெயர்ந்து வேலை செய்பவர்களுக்கான கொள்கையை வகுப்பதிலும் அவர்களின் நல உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஒரு நல்ல முன்னோடியாக இருக்கும்.

ஆசிரியர் : எஸ் . சந்திரசேகர்

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.39130434783
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top