பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / தொழிலாளர் நலன் / இந்தியாவின் முறைப்படுத்தப்படாத தொழிலாளர் சந்தை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியாவின் முறைப்படுத்தப்படாத தொழிலாளர் சந்தை

இந்தியாவின் முறைப்படுத்தப்படாத தொழிலாளர் சந்தை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள்

இந்திய தொழில் சந்தையில் இருவகையான நிலைமைகள் உள்ளன – 92 சதவிகித வேலையாட்கள் முறைப்படுத்தப்படாத துறைகளிலும் பத்த சதவிகிதத்தினர் முறைப்படுத்தப்பட்ட துறைகளிலும் உள்ளனர்.  பெரும்பான்மையான பணியாளர்கள் முறைப்படுத்தப்படாத துறைகளில் இருப்பதற்கு அன்னிய ஆதிக்க காலத்திலிருந்து சமூக பொருளாதார நிலைகளே காணரம்.  அந்நிய ஆதிக்கக் காலத்தில் இந்திய தொழில்துறை கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் முழுவதுமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் பயன்பட்டது.  பிரிட்டனில் ஏற்பட்ட தொழில் புரட்சியினால் இந்திய பொருளாதாரம் பயன்பெறவில்லை.  முதலாம் உலகப்போரின் போதே தொழிற்சாலைகள் சார்ந்த பொருள் உற்பத்தி துவங்கியது.  அதுவும் போருக்கு தேவையானவைகளை உற்பத்தி செய்ய.  ஆகவே இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்ததிய பொருளாதாரத்தில் பெருமளவு விவசாயத் தொழிலாளர்களே இருந்தனர்.  பிற தொழில்களில் ஜாதி சார்ந்த மக்களே பணியாற்றினர்.  தொழில் முனைவில் சில வகுப்பு மக்களே இருந்தனர்.  இரும்பு எஃகு சுரங்கங்கள் ஜவுளி காகிதம் போன்ற துறைகளில் மட்டும் தொழிற்சாலைகள் தோன்றின.  அங்கும் குறைவான மக்களே பணியாற்றினர்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்பு முதலீடு மிகுந்த தொழில் கூடங்கள் அமைந்தன.  பணியாளர்கள் மிகுந்த துறைகளில் குறிப்பாக விவசாயம் அல்லாத துறைகளில் கிராமப்புற கூட்டுறவு அமைப்புகள் மேற்கொள்ளளப்பட்டன.  சில தொழில்கள் மக்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு அது முறைப்படுத்தப்படாமலேயே சிறிய அளவில் இருந்து வந்தது.  1977 – 78 இல் மொத்த பணியாளர்களில் 92.2 சதவிகித்தினர் முறைப்படுத்தப்படாத துறையில் இருந்தனர்.  இது 1993 – 94 இது 92.7 சதவிகிதமாக உயர்ந்தது.  ஆகவே 90 களின் துவக்கத்தில் இந்தியாவில் முறைப்படுத்தப்படாத பணியாளர்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.  தாரளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலுக்கு பின் இந்த நிலைமை மிகவும் மோசமானது.

ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான தேசிய கமிஷனின்படி முறைப்படுத்தபடாத / ஒழுங்குபடுத்தப்படாத துறை  என்பது தனியார்கள் மற்றும் குடும்பங்களில் தனித்தோ கூட்டு வியாபாரத்திலோ பத்து பணியாளர்களுக்கு மேற்படாத தொழில்களை நடத்தும் பதிவு செய்யப்படாத தொழில் நிறுவனங்களிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் மற்றும் சேவைகள் என்று கூறப்படுகிறது.  முறைப்படுத்தப்படாத இரு துறைகளிலும் இருந்த இவர்கள் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள் என்பவர்கள் முறைப்படாத துறைகளிலும் வீடுகளிலும் முதலாளிகளால் சமூக பாதுகாப்பு வசதிகளை கொடுக்க முடியாதவர்களாகவும் முறைப்படுத்தப்பட்ட துறையில் தொழில் மற்றும் சமூக பாதுகாப்புப் பலன்கள் இல்லாதவர்களையும் குறிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  மேற்கண்ட விளக்கத்தின்படி தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பின் தகவல்களின்படி முறைப்படுத்தப்படாத தொழில்களின் நிலைமை அட்டவனை 1ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அட்டவனை 1 – ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள்

(மில்லியன்களில்) - அடைப்புக்குள் உள்ளது சதவிகித்தைக் காட்டுகிறது.

1999 - 2000

 

ஒழுங்குபடுத்தப்பட்ட

ஒழுங்குபடுத்தப்படாத

மொத்தம்

முறைப்படுத்தப்பட்ட

33.7

1.4

35

 

(62.3)

(0.41)

(8.8)

முறைப்படுத்தப்படாத

20.5

341.3

361.7

 

(37.9)

(99.60)

91.20

மொத்தம்

54.1

342.6

396.8

 

(13.6)

(86.3)

100

 

 

2004-05

 

முறைப்படுத்தப்பட்ட

32.06

1.35

33.41

 

(52)

(0.3)

(7.30)

முறைப்படுத்தப்படாத

29.54

396.66

426.2

 

(48)

(99.7)

(92.7)

மொத்தம்

61.61

398.01

459.61

 

13

87

100

2011- 12

 

ஒழுங்குப்படுத்தப்பட்ட

ஒழுங்குப்படுத்தப்படாத

மொத்தம்

முறைப்படுத்தப்பட்ட

37.18

1.39

38.56

 

(45.4)

(0.4)

(8.1)

முறைப்படுத்தப்படாத

44.74

390.92

435.66

 

(54.6)

(99.6)

(91.9)

மொத்தம்

81.92

391.31

474.23

 

(17.3)

(82.7)

100

ஆதாரம் : 1999 – 2000இ 2004 – 05 &  2011 – 12 ஆம் ஆண்டுகளில்   மேற்கொள்ளப்பட்ட வேலையில் இருப்பவர்கள் வேலையில்லாதவர்களுக்கான கணப்கெடுப்பின்படி தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் அடிப்படை தொழில் அமைப்புகளின் நிலைமையை சார்ந்தது.

ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்படாத துறைகளிலுமிருந்து முறைப்படுத்தப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கை 1999 – 2000 இல் 91.2 சதவிகிதமாக இருந்தது.  2004 – 05 இல் 91.2 சதவிகதமாக உயர்ந்தது.  2011 – 12 இல் அது மீண்டும் குறைந்து 91.9 சதவிகதமாக இருந்தது.  (அட்டவணை 1) இப்படி பெருமளவிலான பணியாளர்கள் முறைப்படுத்தப்படாத துறையில் இருப்பதற்குக் காரணம் பணியாளர்களில் 50 சதவிகிதத்தினருக்கும் மேல் சொந்தக் தொழில் செய்பவர்கள் அல்லது ஒழுங்குப்படுத்தப்படாத துறைகளில் உள்ளதாகும்.  தொழில் உற்பத்தித் துறையில் கவனம் பெருமளவு கனரகத் தொழில்களுக்கு கொடுக்கப்பட்டதாலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்தி பெருமளவு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஒதுக்கப்பட்டதாலும் அவைகள் சிறிய அளவிலேயே இருந்து அவர்களுக்கு மானியங்களும் சலுகைகளும் கிடைக்கமல் போயின.  1991 க்குப்பிறகு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டபின்னும் வெளிநாடுகளிலிருந்து போட்டி மிகுந்த பின்னும் ஒழுங்குப்படுத்தப்பட்ட துறைகளில் முறைப்படுத்தப்படாத பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.  இது 1999 – 2000 மாவது ஆண்டுகளில் 37.9 சதவிகிதமாக இருந்தது 2004 – 05 இல் இது 48 சதவிகதமாக உயர்ந்து 2011 – 12 இல் 54.6 சதவிகதமாக உயர்ந்தது.

கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பாரம்பரிய சதவிகித்திற்கும் அதிகமாக உயர்ந்து பொருளாதாரம் வளர்ந்த நிலையில் பணியாளர்கள் சந்தையில் அடிப்படை மாற்றங்கள் எற்பட்டு விவசாயத்துறையில் வேலை வாய்ப்புக்கள் குறைந்து பெரும்பான்மையான மக்கள் வாய்ப்புக்கள் குறைந்து பெரும்பான்மையான மக்கள் கட்டுமானம் மற்றும் பிற குறைந்த திறன் தேவையான துறைகளில் முறைப்படுத்தப்படாத வகையில் இருந்தனர்.  தாராளமயமாக்கப்பட்டதற்குப்பின் உலகளவிலான போட்டி அதிகரித்து ஒதுக்கீடுகளும் மானியங்களும் குறைந்த நிலையில் ஆபத்துக்கள் அதிகமாகி தொழில் முறைவோர் ஒழுங்குமுறைகள் வரிகள் தொழிலாளர் நல சட்டங்கள் பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு ஆகியவைகளிலிருந்து விலக்கு பெற தங்களுடைய நிறுவனங்களை சிறிய அளவிலேயே வைத்துக்கொண்டனர். இப்படி அவர்கள் தங்களுடைய நிறுவனங்களை சிறியதாக வைத்து கொள்வதால் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை தாராளமயமாக்கலுக்குப்பின் அதிகரித்தது.  இது அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியால் மற்ற நாடுகளிலிருந்து பொருள்களையும் சேவைகளையும் பெறுவது மற்றும் பிற நாடுகளுக்கு ஒப்பந்தங்களை பகிர்ந்தளிப்பது ஆகியவை அதிகரித்து நிலையான வேலை வாய்ப்புக்கு பதிலாக தற்காலிக வேலைவாய்ப்பு அதிகமாகிறது.  ஒப்பந்தப் பணியாளர்களை வைத்துக்கொள்வதன் மூலம் 1947 ஆம் ஆண்டில் தொழில்துறை பிணக்குகள் சட்டத்தீருந்து விடுபட்டு பணியாளர்களை வைத்துக் கொள்வதிலோ வேலையிலிருந்து நீக்குவதையோ தடையின்றி செய்ய முடியும். வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப மாறுதல்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் வாழ்நாள் காலம் குறைந்து புதிய பொருட்கள் தேவைப்படுகின்றன.  இவைகளை தயாரிக்கும் மூலம் இயந்திரங்களின் இறக்குமதி மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிலுக்கிறது அல்லது முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது.  இதனை எதிர்கொள்ளும் கட்டாயத்தில் சிறு தொழில் உற்பத்தியாளர்கள் செலவுகளை குறைக்க பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தும் நிரந்தர பணியாளர்களுக்கு பதிலாக ஒப்பந்த பணியாளர்களை அமைத்தும் செயல்பட்டனர்.  இந்த நிலைமை பொது துறை நிறுவனங்களிலும் ஊடுருவி இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி ஆறு பேருக்கும் குறைவாக பணியமர்த்தியுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 1990 இல் 93  சதவிகிதமாக உயர்ந்துள்ளது.  இதைப்போலவே 10 பேருக்கும் குறைவாக பணியமர்த்தப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 3.5 சதவிகிதத்திலிருந்து 3.1 சதவிகிதமாக குறைந்துள்ளது.  10 தொழிலாளருக்குமேல் பணியமர்த்தியுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 1990 இல் 93 சதவிகிதம் இருந்ததகக் காட்டிலும் 201 இல் 95.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.  இதைப்போலவே 10 பேருக்கும் குறைவாக பணியமர்த்தப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை 3.5 சதவிகிதத்திலிருந்து 3.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. 10 தொழிலாளருக்கு மேல் பணியமர்த்தப்பட்டுள்ள தொழில்களின் சதவிகிதம் 199 இல் 1.4 ஆக குறைந்து மொத்தம் பணியமர்த்தப்பட்டவர்களில்  அவர்களுடைய பங்கு 37.1 சதவிகித்திலிருந்து 27.2 சதவிகிதமாக குறைந்தது.

அட்டவணை 2 : தொழில் நிறுவனங்களின் அளவு – வேலை வாய்ப்பு நிலைமை விவரம் (சதவிகிதத்தில்)

வரிசை எண்

பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில

விவரம்

பொருளாதார கணக்கெடுப்பு வருடங்கள்

1990

1998

2005

2013

1

15

நிறுவனங்கள்

93.4

94

95.4

95.5

வேலைவாய்ப்பு

54.5

58.6

67.3

69.5

2

69

நிறுவனங்கள்

3.5

3.3

3.4

3.1

வேலைவாய்ப்பு

8.4

8.3

10.3

9.3

3

10க்கும் மேற்பட்ட

நிறுவனங்கள்

3.1

2.8

1.3

1.4

வேலைவாய்ப்பு

37.1

33.1

22.4

21.2

ஆதாரம் : ஐந்தாவது மற்றும் ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு – அகில இந்திய அறிக்கை.

இப்படி ஒப்பந்த அடிப்படையில் / தற்காலிக அடிப்படையில் பணியாளர்கள் அமர்த்தப்படுவதால் அவர்களுக்கு வேலைப் பாதுகாப்பு தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மருத்துவ வசதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பணியில் ஏற்படும் விபத்துக்களுக்கான இழப்பீடு குறைந்தபட்ச ஊதியம் அதிக நேரப்பணிக்கான ஊதியம் தொழில்சார் ஆபத்துக்களுக்கான இழப்பீடு ஆகியவைகள் குறைகின்றன.

இப்படி பெருகிவரும் முறைப்படுத்தப்படாத தொழில்துறையை எதிர்கொள்ள பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.  அவைகளாவன : இரண்டாவது தேசிய தொழிலாளர் நலக் கமிஷன் (2002) பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 10 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்க இலக்கு க்கான S.P  குப்தா அறிக்கை (2002) 10 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் செயல்படை 2002 ஒழுங்குப்படுத்தப்படாத துறைகளில் தொழில் முனைவுகளை ஏற்படுத்த தேசிய கமிஷன் (2004 – 2008) மிகக்குறைந்த கல்வியறிவும் தொழில் அறிவும் உள்ள பணியாளர்கள் விவசாயத் துறையிலிருந்து பொருள் மற்றும் சேவை உற்பத்தித் துறைக்கு மாறுவதில் இடர்பாடுகள் உள்ளதாக இந்த அறிக்கைகள் கூறுகின்றன.  ஆகவே ஏற்பட்ட பணி மாற்றங்கள் விவசாயத்திலிருந்து பெரும்பாலும் திறன் குறைவான கட்டுமானப் பணிகள் சில்லறைக் கடைகள் தனிநபர் கடைகள் போக்குவரத்துத் துறையில் ஒட்டுநர்கள் வீட்டில் பணி செய்பவர்கள் குடிசைத் தொழிலில் பணியாற்றுபவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களாக இருந்தனர்.  பணியாளர் சட்டத் சீர்திருத்தங்கள் திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றை இந்தக் குழுக்கள் பரிந்துரைத்தன.

கொள்கை நடவடிக்கைகள்

மிகக்குறைந்த திறன் படைத்த பணியாளர்கள் வேலை செய்யும் கட்டுமானத்துறையில் உள்ளவர்களின் ஊதியம் பணி செய்யும் நிலைமைகள் பாதுகாப்பு உடல்நலம் மற்றும் நல திட்டங்கள் ஆகியவைகளை மேம்படுத்த கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் (பணியமர்த்தல் மற்றும் வேலை ) தொழிலாளர்கள் கூடுதல் வரி சட்டம் 1996 இயற்றப்பட்டுள்ளன.   ஒழுங்குபடுத்தப்படாத பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் 2008 இயற்றப்பட்டது. இது அல்லாமல் ஒழுங்குபடுத்தப்படாத துறைகளின் பணியாளர்களின் மருத்துவ செலவுகளுக்கான கைப்பணத்திற்காகவும் அவர்களின் நலன்களின் ஒரு பகுதியாகவும் ராஷட்ரிய ஸ்வத்திய பீமா யோஜனா 2008ல் துவக்கபட்டது.  கட்டிட மற்றும் கட்டுமானத் தொழிலாளிகள் ரயில்வே கூலியாட்கள் சாலையில கடை வைத்திருப்போர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டப் பணியாளர்கள் வீடுகளில் வேலை செயவோர் ஆட்டோ டாக்ஸி ஒட்டுனர்கள் ரிக்ஷா ஒட்டுபவர்கள் குப்பை பொருக்குபவர்கள் பீடித் தொழிலாளர்கள், சுரங்கங்களில் வேலை செய்வோர் மற்றும் துப்புரவுப் பணி செய்பவர்கள் போன்ற பலதரப்பட்ட ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் உள்ள மக்களுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கிறது.  31 மார்ச் 2016 வகையில் இந்த திட்டத்தின் கீழ் 41.3 கோடி மக்கள் சிறப்பு அங்கீகார அட்டை பெற்றிருந்தார்கள்.

ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை வாய்ப்பை ஒழுங்குபடுத்த ஒப்பந்தப் பணியாளர்கள் நல (ஒழுங்குபடுத்துதல் மற்றும் நீக்குதல் ) சட்டம் 1970 இயற்றப்பட்டுள்ளது.  இந்த சட்டம் 20 பேர்களுக்கு மேல் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்துமாகையால் இந்த திட்டத்தின் கண்காணிப்பிலிருந்து பெருமளவிலான ஒப்பந்தப் பணியாளர்கள் விடுபட்டுள்ளனர்.  ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்று பணிபுரிபவர்களின் வேலை மற்றும் நலன்களை பாதுகாக்க வெளி மாநிலங்களுக்குச்சென்று பணியாற்றுபவர்களுக்கான வேலை வாய்ப்பு ஒழுங்குமுறை மற்றும் பணியமர்த்து நிலைமைசார் சட்டம் பணியாளர்களுக்கு உள்ளுர் மக்களுக்கு சமமான சம்பளத்தோடு விடுப்பு மருத்துவ வசதி வீட்டு வசதி ஆகியவை அளிக்கப்படவேண்டும்.

ஆனால் நடைமுறையில் இந்த கவலைவசதிகள் அவர்களுக்கு அளிக்கப்படாமல் அவர்கள் மிகவும் கவலைக்கிடமான சூழ்விலையில் வேலை செய்கிறார்கள்.  இது அல்லாமல் சினிமாத் துறை பணியாளர்கள் சுரங்கத் தொழிலாளர்கள் பீடி மற்றும் சுருட்டு பணியாளர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியவர்களுக்கு தனித்தனியே நலம் சார் சட்ட்ங்கள் உள்ளன.  ஆனால் இப்படிப்பட்ட முறைப்படுத்தப்படாத துறைகளில் உள்ளவர்கள் தங்களுடைய சட்டபூர்வ நலன்களை அறியாமலும் இந்தப் பணிகளை நம்பி மிக அதிகமான மக்கள் உள்ளதாலும் அவர்கள் பேரம் பேவ முடியாமல் அவர்களுடைய நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.

பிரதம மந்திரி திட்டங்கள்

எல்லோருக்கும் சமூகப் பாதுகாப்பு அளிக்ககூடிய பல நலத்திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன.  18 முதல் 40 வயது வரை பணியில் உள்ளவர்கள் 60 வயது   அடைந்த பின் மாதம் குறைந்தபட்சம் ரூ.1000 ஓய்வூதியம் பெறும் வகையல் அவர்களின் சந்தா செலுத்தும் அளவுக்கேற்ப நலன் கிடைக்க அடல் ஓய்வூதியத் திட்டம் உள்ளது.  ஆண்டுக்கு பணியாளர்கள் ரூ.12 மட்டும் செலுத்தி விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு அல்லது உடல் ஊனம் பெற்றால் பாதுகாப்பாக ரூ.2 லட்சம் வரை ஆயுள் காப்பு பெறுவதற்கு பிரதம மந்திரி ஆயுள் காப்பு திட்டம் உள்ளது.  விவசாயிகளுக்கு பயிரிடும் காலம் துவங்கி அறுவடை வரை எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் பயிர் நஷடங்களை ஈடுகட்ட பிரதம மந்திரி பயிர்காப்பு திட்டம் உள்ளது.

பிரதம மந்திரி வேலை ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இப்படிப்பட்ட மக்களுக்கு முதலாளிகள் செலுத்த வேண்டிய 8.33 சதவிகித பணியாளர் பிராவிடண்ட் ஃபண்ட் தொகையை அரசே செலுத்தும்.  இதில் ஜவுளித் துறையில் உள்ள பணியாளர்களுக்கு ஏப்ரல் 2016க்கு பின் துவக்கப்பட்ட புதிய கணக்குகளுக்கு முதலாளிகள் செலுத்த வேண்டிய 12 சதவிகித்தை அரசு செலுத்தும்.  இதனால் சிறிய தொழில் நிறுவனங்கள் அதிகப் பணியாளர்களை நியமித்து வேலை வாய்ப்பு சமூகப் பாதுகாப்பு அளிக்க ஏதுவாகும்.  நிறுவனங்கள் பயிற்சி ஊழியர்களை பணியமர்த்த ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படும்.  அதன் அளவு ரூ.1500/- வரை அதிக பட்சமாக இருக்கும்.  இது அல்லாமல் எந்தப் பயிற்சியும் இல்லாமல் நேரடியாக பயிற்சிப் பணியாளராக சேருபவர்களுக்கு பயிற்சி அளிக்க உதவித்தொகையாக 500 மணி நேரம் அல்லது மூன்று மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.7500 வழங்கப்படும்.

திறன்மிகு இந்தியா திட்டம் மூலம் பிரதம மந்திரி திறன் வளர்ப்புத் திட்டங்கள் மூலம் 20க்ம் மேற்பட்ட மத்திய அமைச்சகங்கள் புதிதாக வேலைக்கு சேருபவர்களின் திறன்களை வளர்த்து நல்ல பணியில் அமர்த்த திறன் வளர்ப்பு திட்டங்களை செயலாற்றி வருகிறது.

எளிதாக தொழில் செய்ய ஏதுவாக பதிவு பணியாளர் நலச் சட்டங்களைப் பின்பற்றுவது நிறுவனங்களை ஆய்வு செய்வது போன்றவற்றை எளிதாக்கி தரமாக வேலை வாய்ப்புகளைத் வழங்க ஏதுவாக புதிய தொழில்களை துவங்க ஊக்கமளிக்கப்படுகிறது.  அரசின் முக்கியமான திட்டங்களான இந்தியாவில் உற்பத்தி செய்வோம். மின்னணு இந்தியாவில் சுத்தமான பாரதம் திட்டம் ஆகியவைகளினால் நல்ல வேலை வாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது.

இது அல்லாமல் தொழில் முனைவுகளை ஊக்குவிக்க இந்தியாவில்; தொழில் துவங்குவோம் நிமிர்ந்து நில் இந்தியா முத்ரா முனைந்து செய், அடல் புதியன கண்டுபிடிப்பு திட்டம் பிரதம மந்திரி இளைஞர்கள் திட்டம் போன்றவைகளால் புதிய தொழில் முனைவோர் உருவாகி வேலை வாய்ப்புகளை வழங்குவர்.

முடிவாக முறைப்படுத்தப்படாத துறைகளில் உள்ள பணியாளர்களுக்கு சமுக பாதுகாப்பு வழங்க பல சட்டங்களும் திட்டங்களும் இருந்த போதும்புதிதாக உருவாக்கப்படும் வேலைகள் தரமாக உள்ளதா என்பதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஆசிரியர் : அ.ஶ்ரீஜா

ஆதாரம் : திட்டம் மாத இதழ், ஏப்ரல் 2017

3.11111111111
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top