பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / தொழிலாளர் நலன் / தொழிலாளர் சட்டங்களின் கீழ் பதிவேடுகளை பராமரித்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழிலாளர் சட்டங்களின் கீழ் பதிவேடுகளை பராமரித்தல்

பல்வேறு தொழிலாளர் சட்டங்களின் கீழ் பதிவேடுகளை பராமரிப்பது எளிமைப் படுத்தப்பட்டுள்ளதைப் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வேளாண் மற்றும் வேளாண் அல்லாத துறைகளில் சுமார் 5.85 கோடி நிறுவனங்களின் தொழிலாளர் பதிவேடுகள் பராமரிக்கபடுவதை அரசு எளிமைப்படுத்தியுள்ளது.  தொழிலாளர்களின் விவரங்கள், அவர்களது ஊதியங்கள், கடன்கள் /  மீட்கப்பட வேண்டியவை வருகை உள்ளிட்டவை தொடர்பானவை இந்தப் பதிவேடுகள்.  இதன் மூலம் இந்த நிறுவனங்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் எண்ணிக்கை 56 லிருந்து 5 ஆக குறைந்துள்ளது.  இந்த நிறுவனங்களின் செலவு, வேலை ஆகியவற்றை குறைத்து தொழிலாளர்கள் சட்டங்கள் சிறப்பாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும்.

மத்திய அரசின் பல்வேறு தொழிலாளர் சட்டங்களின் கீழ் வேளாண் மற்றும் வேளாண்மை அல்லாத துறைகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக பல்வேறு பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.  2013 – 14 ஆம் ஆண்டு மத்திய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பில் இந்தியாவில் மொத்தம் 5.85 கோடி வேளாண் மற்றும் வேளாண் அல்லாத துறைகளில் தொழில் நிறுவனங்கள் உள்ளன.  இவற்றில் 4.54 கோடி நிறுவனங்கள் வேளாண் அல்லாத துறையில் உள்ள நிறுவனங்களாகும்.  பல்வேறு கணக்குகள் /  பதிவேடுகள் / படிவங்கள் ஆய்வு செய்ய்பபட்ட போது அவற்றில் பல அனைத்து இடங்களிலும் மீண்டும் மீண்டும் இடம்பெற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பதிவேடுகளை பராமரிப்பதற்கான மென்பொருள்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 5 பதிவேடுகளுக்கான மென்பொருள் உருவாக்கும் பணியை இதே நேரத்தில் தொடங்கியுள்ளது.  இந்த மென்பொருள் உருவாக்கப்பட்ட பின்னர் அது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஷ்ரம் சுவிதா இணையதளத்தில் இணைக்கப்பட்டு நிறுவனங்கள் இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து பதிவேடுகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கலாம்.

கீழ்க்காணும் தொழிலாளர் சட்டங்களின் கீழ் இந்தப் பதிவேடுகள் நிர்வகிக்கப்படுகின்றன.

‘கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலை வரன்முறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள் ) சட்டம் 1996; ஒப்பந்தத் தொழிலாளர் (வரன்முறை மற்றும் நீக்கம்) சட்டம் 1970; சம ஊதியச் சட்டம் 1976; மாநிலங்களுக்கு இடையே இடம்பெயரும் தொழிலாளர் (வேலை வரம்முறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள்) சட்டம் 1979; சுரங்கச் சட்டம் 1952; குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948; ஊதியம் செலுத்தும் சட்டம் 1936; விற்பனை மேம்பாட்டுத் தொழிலாளர் (சேவைக்கான நிபந்தனை) சட்டம் 1976; உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் இதர செய்தித்தாள் பணியாளர்கள் (சேவைக்கான நிபந்தனை) சட்டம் 1955.

6 கோடி கிராமப்புற வீடுகளுக்கு டிஜிட்டல் கல்வி

6 கோடி கிராமப்புற வீடுகளுக்கு டிஜிட்டல் கல்வி அளிக்கும் பிரதம மந்திரி கிராம டிஜிட்டல் கல்வித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  2019 மார்ச்சுக்குள் கிராமப்புற வீடுகளுக்கு டிஜிட்டல் கல்வி புகட்ட இந்தத் திட்டத்திற்கு ரூ. 2351.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிராம டிஜிட்டல் கல்வித் திட்டம் உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும்.  இந்தத் திட்டத்தின் கீழ் 2016 – 17 இல் 25 இலட்சம் பேருக்கும் 2017 – 18 ஆம் நிதியாண்டில் 275 லட்சம் பேருக்கும் 2018 – 19 ஆம் ஆண்டில் 300 லட்சம் பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளது.  பூகோள ரிதியாக சம நிலையை எட்டும் வகையில் 250000 பஞ்சாயத்துக்களும் தலா 200 முதல் 300 பேரை பதிவு செய்ய வேண்டும்.

டிஜிட்டல் கல்வி பெற்றவர்கள் கணினி மற்றும் இதர டிஜிட்டல் உபகரணங்களான டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் இயக்கவும், மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும், அரசு சேவைகளை இணையதளத்தில் அணுகி தகவல் பெறவும், ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் அதன் மூலம் தேசத்தின் வளர்சசியில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் முடியும்.

இந்தத் திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நடைமுறைப் படுத்தப்படும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

2.78260869565
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top