অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இந்தியாவின் தொழில்முனைவு ஆற்றலை கொண்டுவருதல்

இந்தியாவின் தொழில்முனைவு ஆற்றலை கொண்டுவருதல்

பிரதமரின் வேண்டுகோள்

இந்தியாவில் ஏராளமான தொழில்முனைவுத் திறன் சக்தியைக் கொண்டுள்ளதால், இது உரிய முறையில் பயன்படுத்தப்பட்டால் நாம் வேலை தேடுவோர் கொண்ட நாடாக இல்லாமல் வேலை தரும் நாடாக மாறமுடியும் என நான் நம்புகிறேன். - நரேந்திர மோடி.

இந்தியாவில் தயாரிப்போம்

இந்திய அரசு தொழில்முனைவுக்கு ஊக்கம் தருவதில் கண்ணோட்டம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் முயற்சி என்பது நான்கு தூண்களின் அடித்தளத்தில் இந்தியாவில் உற்பத்தி துறையில் மட்டும் இன்றி இதர துறைகளிலும் தொழில்முனைவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

புதிய நடைமுறைகள்

தொழில்முனைவை மேம்படுத்துவதற்கான ஒரு மிக முக்கியமான அம்சமாக எளிதாக வர்த்தகம் செய்வதை இந்தியில் தயாரிப்போம் அங்கீகரிக்கிறது.

புதிய உள்கட்டமைப்பு

நவீன மற்றும் வசதிமிக்க உள்கட்டமைப்பு இருப்பது தொழில் துறையில் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான தேவையாகும். நவீன உயர் வேக தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து ஏற்பாடுகளுடன் அதிநவீன தொழில்நுட்பம் அடிப்படையிலான உள்கட்டமைப்புக்களை அளிக்க தொழில் வழித்தடங்கள் மற்றும் அதிநவீன நடகரங்களை உருவாக்க அரசு விரும்புகிறது.

புதிய துறைகள்

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் சேவை ஆகியவற்றில் 25 துறைகளை அடையாளம் கண்டு அது குறித்த விரிவான தகவல்கள் சம்பந்தப்பட்ட அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

புதிய சிந்தனை

தொழில்துறை அரசை ஒரு வரன்முறையாளராகவே பார்க்கிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் இதனை மாற்றி அரசு எவ்வாறு தொழில்துறையுடன் கலந்துரையாடுகிறது என்பதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது. அரசின் அணுகுமுறை வரன்முறையாளர் என்பதற்கு பதிலாக வசதி செய்து கொடுப்பவராகவே இருக்கும்.

தொழில்முனைவை ஊக்குவிக்க மூன்று அம்ச யுக்தியை அரசு பின்பற்றி வருகிறது. இந்த அணுகுமுறை 3 சி என்ற முறையில் அமைந்துள்ளது.

உடன்படிக்கைகள்

உலக வங்கியின் எளிதாக வர்த்தகம் செய்தல் தரவரிசையில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு முன் இருந்ததை விட இன்று ஒரு புதிய வர்த்தகத்தைத் தொடங்குவது எளிதாகியுள்ளது. தேவையற்ற உடன்படிக்கைகள் நீக்கப்பட்டு, ஏராளமான அனுமதிகளை இணையதளம் மூலமாக பெறலாம்.

தொழில் உரிமம் பெற விண்ணப்பிக்கும் முறை மற்றும் தொழிற்சாலை முனைவு உடன்படிக்கை இணையதளத்தில் அளிக்கப்பட்டு, இந்த சேவைகள் வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் தொழில்முனைவோருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 20 சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒற்றை சாளர இணையத்தில் செயல்படுவதால் பல்வேறு அரசுகள் மற்றும் அரசு முகமைகளிடமிருந்து ஒப்புதல்களை பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி குழுமம் மற்றும் கே.பி.எம்.ஜி. ஆதரவுடன் இந்திய அரசு மாநில அரசுகள் வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து மதிப்பீடு செய்தது. இந்த தரவரிசை மாநில அரசுகள் ஒருவரிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொண்டு அதே வெற்றியைப் பெற்று அதன் மூலம் தங்களது வரன்முறை சுற்றுச்சூழலை விரைவாக மேம்படுத்திக் கொள்ளலாம்.

அரசு அந்நிய நேரடி முதலீடு விதிகளையும் பல்வேறு துறைகளில் விடுவித்து அதன் மூலம் முதலீட்டு வகை செய்துள்ளது.

மூலதனம்

சுமார் 58 மில்லியன் நிறுவனங்கள் அல்லாத தொழில் நிறுவனங்கள் 128 மில்லியன் வேலைகளை இந்தியாவில் அளித்துள்ளன, இவற்றில் 60 சதவிகிதம் கிராமப்புறங்களில் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராலும் 15 சதவிகிதம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினராலும் நடத்தப்படுகிறது. ஆனால் அவர்களது நிதியில் வங்கிகளின் பங்களிப்பு மிகக்குறைவாக உள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த வங்கிக் கடனையும் பெறவில்லை. அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய துறைகள் குறைந்த அளவு கடனையே பெற்றுள்ளது என்றும் இதனைக் கூறலாம். இந்த நிலையை மாற்ற அரசு, பிரதம மந்திர முத்ரா திட்டத்தையும் முத்ரா வங்கியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிக அளவு வட்டியை செலுத்தும் சிறு தொழில் நிறுவன தொழில்முனைவோருக்கு அடமானம் இல்லாத குறைந்த வட்டி கடன் அளிக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டுள்ளது. இது தொடங்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளாகவே இது 1.18 கோடி கடன்களை 65,000 கோடி ரூபாய் அளவுக்கு அளித்துள்ளது. ரூ. 50,000த்துக்கும் குறைவான அளவு கடன் பெற்றவர்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் 2015 வரையிலான காலகட்டத்தில் 555 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.

ஒப்பந்த அமலாக்கம்

ஒப்பந்த அமலாக்கத்தை சிறப்பான முறையில் எட்டுவதற்காக சம்பந்தப்பட்ட சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து நடுவர் மன்றங்கள் தங்களது முடிவுகளை அமல்படுத்த அதிகாரம் அளிக்கப்படும்.

இந்த அரசு ஒரு நவீனமான திவால் குறியீட்டைக் கொண்டு வந்துள்ளது, இது வர்த்தகம் செய்வதை ஆச்சரியமூட்டும் வகையில் எளிதாக்கும்.

ஆதாரம் : http://www.pmindia.gov.in/ta/© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate