பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள் (அ) இரண்டாம் நிலை துறையானது நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள மூன்று துறைகளில் ஒன்று. தொழிற்துறையானது முதன்மை துறையின் உற்பத்தி பொருட்களை ஏற்றுக் கொள்வதும், தனது உற்பத்தி பொருட்களை பயனாளிகளுக்கும் மற்றும் அடுத்த நிலை செயலாக்கத்திற்கும், அடுத்த துறைகளுக்கும் அனுப்புகிறது.

தொழிற்கொள்கைத் தீர்மானங்கள் - 1948

(நோக்கம் - இறக்குமதி குறைத்தல்)

முதல் தீர்மானம் 1948 இந்திய அரசால் வெளியிடப்பட்டது. இது தொழிற்சாலைகளை ‘4’ பிரிவுகளாக பிரிக்கிறது. சிறு மற்றும் குடிசை தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும், இது தனியார் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இது மைய அரசின் ஒட்டு மொத்த உரிமையை கொண்டுள்ளது. ஆயுதங்கள், இராணுவ தளவாடங்கள் உற்பத்தி, இரயில்வே, அணுசக்தி உற்பத்தி மற்றும் கட்டுப்பாடுகள் இதில் உள்ளன.

அடிப்படை தொழிற்சாலைகள் :

இதில் 6 துறைகளை கொண்டது அவையாவன, நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு தொழிற்சாலைகள், கப்பல் கட்டுமானம், விமானங்கள் உற்பத்தி, தொலைபேசி, தந்தி நீங்கலாக மற்றும் கனிம எண்ணெய்

ஒழுங்கு படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் :

பெரும்பான்மையான மக்களுக்கு முக்கியமானதாக உள்ளதால் இவை இந்திய அரசால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. அவையாவன தானியங்கிகள், கனரக இயந்திரங்கள், இரசாயனங்கள், உரங்கள், சர்க்கரை, காகிதம், சிமெண்ட், பருத்தி, கம்பளி.

தனியார் தொழிற்சாலைகள் :

இது கடைசி பிரிவு, மற்ற அனைத்து தொழிற்சாலைகளும் (மேல் குறிப்பிடப்படாதவைகள்) இதில் அடங்கும்.

தொழிற்சாலை (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்) சட்டம் 1951

இச்சட்டம் தொழிற்சாலைகள் மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய அரசால் இயற்றப்பட்டது.

இதன் முக்கிய நோக்கங்கள்:

 • தொழிற்சாலை மேம்பாட்டிற்கான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
 • தொழிற்சாலை மேம்பாட்டின் நோக்கம் மற்றும் முறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.
 • பொதுமக்கள் நன்மைக்காக கையகப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளின் செயல்பாடு, முன்னேற்றம் மற்றும் முடிவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
 • இச்சட்டம் முதல் அட்டவணையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
 • அதேபோல் அரசுடைமையான சிறு தொழிற்சாலைகள் மற்றும் அவற்றின் துணை அலகுகளுக்கு இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தொழிற் கொள்கை தீர்மானம் (1956) (இந்திய தொழிற்சாலைகளின் மாக்னா கார்டா)

 • இந்த தொழிற் கொள்கையானது மஹாலோனோபிஸ் வளர்ச்சி மாதிரியை அடிப்படையாக கொண்டது இந்திய பொருளாதாரம் நீண்டகால அதிக வளர்ச்சியில் அமைய கனரக தொழிற்சாலைகளின் முக்கியத்துவத்தை இந்த மாதிரி வலியுறுத்துகிறது.
 • பொதுத்துறைகள் விரிவாக்கப்பட வேண்டும்
 • சமத்துவ அடிப்படையான சமூக வளர்ச்சியே அரசின் நோக்கம் என்று வலியுறுத்தப்பட்டது.
 • முதன் முறையாக இந்திய தொழிற்சாலைகள் வகைப்படுத்துதலில் தெளிவாக முடிவு எடுக்கப்பட்டது
 • மக்களின் பயன்பாட்டு தேவைக்கான அடிப்படை மற்றும் முக்கிய தொழிற்சாலைகளில் அதிக முதலீட்டை கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் அரசுடைமையாக்கப்பட்டது
 • கட்டாய உரிமை வழங்கும் முறை மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையானது பொதுத்துறை மேம்பாட்டிற்கு வழிவகுத்தது.

மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானம்

 • இதில் 12 தொழிற்சாலைகள் அடங்கும், இவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசு நடவடிக்கையை எடுக்கவும் தொடர்ந்து கவனிக்கவும் செய்கிறது. மாநில அரசின் கட்டாய உரிமம் பெற்ற தனியார் துறைகளும் உள்ளன.
 • மாநில அரசு இந்த தொழிற்சாலைகளின் மேம்பாட்டில் தனியாரின் பங்களிப்பை ஐந்தாண்டு திட்டங்களுக்கு உட்பட்டு திட்டம் இயற்ற ஊக்கமளித்து தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

தொழிற்கொள்கை தீர்மானத்தின் (1956)ன் பிற சிறப்பியல்புகள்

தொழிற் வளர்ச்சிக்கு பொது துறை கனரக தொழிற்சாலை காரணமாயின. பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை போக்க பின் தங்கிய பகுதிகளில் பொதுத்துறை நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வளர்ச்சியில் சிறு தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்மை துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

ஹசாரி குழு (1967):

ஏகபோக உரிமை விசாரணை ஆணையம் திட்ட குழுவினால் உரிமம் வழங்கும் முறையை மறு ஆய்வு செய்து ஆலோசனை வழங்க அமர்த்தப்பட்டார். இவர் தனது அறிக்கையை 1967ல் சமர்ப்பித்தார்.

தத் குழு (1969)

திரு. சுபிமால் டட் (ளுரடிiஅயட னுரவவ) தலைமையில் தொழிற்சாலைகளின் உரிமக் கொள்கையின் மற்றுமொரு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இது தத் குழு என்று அழைக்கப்பட்டது.

தத் குழுவின் பரிந்துரைகள்

 • பெரும் தொழிற்குழுமங்களுக்கும், முதன்மை மற்றும் பெரும் முதலீட்டு நிறுவனங்கள் அமைப்பதற்கும் உரிமம் வழங்க வேண்டும்
 • தொழிற் உரிமம் கொள்கையை மறு ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்
 • பெரும் நிறுவனம் மற்றும் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஏகபோக உரிமையை கையாள, ஏகபோக உரிமை ஆணையம் அமைக்கப்படவேண்டும்.
 • தொழிற்சாலைகளை முதன்மை துறைகள், பிற முதன்மை துறைகள், ஒதுக்கீடு துறைகள் என்று வகைப்படுத்த வேண்டும்
 • வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைத் தடுக்கும் சட்டம் 1969 ஆண்டு தத் குழுவின் பரிந்துரையால் உருவாக்கப்பட்டது.

வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை தடுக்கும் சட்டம்

 • பொருளாதார அமைப்பில் ஒரு சிலரிடம் மட்டும் பொருளாதார வலிமை குழுமி இருப்பதை தடுப்பதை உறுதி செய்யவும்.
 • ஏகபோக உரிமை கட்டுப்படுத்தவும்.
 • வர்த்தகத்தில் ஏகபோக உரிமை தடுக்கவும் இச்சட்டம் இயற்றப்பட்டது.
 • வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை தடுக்கும் சட்டமானது பொருளாதார சக்திகள், வர்த்தகம், நுகர்வோரின் விருப்பம் ஆகியவற்றில் ஏகபோக உரிமை கொள்வதை தடை செய்கிறது.

வர்த்தகத்தில் ஏகபோக உரிமைமுறை

 • வர்த்தகத்தில் ஏகபோக உரிமை என்பது பொருட்கள் மற்றும் சேவையில் உற்பத்தி மற்றும் சந்தை படுத்துதலில் பிற போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டு, சந்தையின் மீது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும், காரணமின்றி விலை ஏற்றம், சந்தையில் போட்டிகளை குறைத்தல் அல்லது தடுத்தல், தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்தல், பொருட்களின் தரத்தை நிர்ணயித்தல், முறையற்ற வியாபாரம் இவையே வர்த்தகத்தில் ஏகபோக உரிமைமுறை எனப்படும்.

அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் 1973

முன்னர் இயற்றப்பட்ட சட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தவும், தடைகளை நீக்கவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காக்கவும், ஒழுங்குபடுத்தவும் இயற்றப்பட்டது. இதில் மிகவும் கடுமையான விதிகளும் இதை மீறும் போது (அ) குற்றம் விளைவிக்கும் போது சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

தொழிற்கொள்கை அறிவிக்கை 1977

 • இந்த கொள்கையானது கிராம தொழில்கள், சிறு மற்றும் குடிசைத் தொழில்களை மறுவரையறை செய்தது. சிறு தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை 180இல் இருந்து 500 ஆக ஒதுக்கீடு செய்தது (விரிவடைய செய்தது)
 • முதல் முறையாக சிறிய அலகு விவரிக்கப்பட்டது. 50,000 (1971 சென்செஸ்)- க்கும் குறைவான மக்கள் தொகை உள்ள கிராமம் மற்றும் நகரங்களில், ரூ1 லட்சத்துக்கும் குறைவான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் முதலீடு கொண்டது.
 • இக்கொள்கையானது வேளாண்மைத்துறை மற்றும் தொழிற்துறைக்கு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது. மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தொழிற்கொள்கை தீர்மானங்கள்

ஜூலை 1980 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டது. பொருளாதார உள்கட்டுமானங்களை வலிமைப்படுத்த பொதுத்துறை மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அதன் நம்பிக்கையும், அதிக முதலீடும் மேலும் கூடுதலான கால அளவும் தேவைப்பட்டது.

புதிய தொழிற்கொள்கை 1991

நேரு காலங்களில் இருந்து வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் தொழிற்சாலைகளின் குறைகளை நீக்குவதற்கும் குறைபாடுகளை களைவதற்கும் இது ஏற்படுத்தப்பட்டது. இது 5 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.

 • தொழிற் உரிமக் கொள்கை
 • வெளிநாட்டு முதலீடு
 • வெளிநாட்டு தொழில்நுட்ப உடன்படிக்கை
 • பொதுத்துறை
 • வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை தடுக்கும் சட்டம்

தொழிற் உரிமக் கொள்கை

 • ஆயுதங்கள், ஆயுத தளவாடங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள், அணுசக்தி, நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி, கனிம எண்ணெய், இரும்பு, மாங்கனீஸ்,குரோமியம், ஜிப்சம், சல்பர், தங்கம், வைரம் ஆகிய தாதுக்கள் வெட்டி எடுத்தல், தாமிரம், காரீயம், துத்தநாகம், மாலிப்டினம், வோல்ஃரேம் தாதுக்கள் வெட்டி எடுத்தல்,
 • அணுசக்தி பட்டியலிடப்பட்ட தாதுக்கள் (உற்பத்தி மற்றும் பயன்பாட்டு கட்டுப்பாடுகள் ஆணை 1959)
 • புகைவண்டி போக்குவரத்து

முதலீடுகள்

அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்க இரண்டு சிறப்பு அதிகாரங்களை கொண்ட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

அன்னிய முதலீடுகள் வளர்ச்சி குழு

அன்னிய முதலீடுகளை செயல்படுத்தும் அமைப்பு

 • வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்தும் இது ஒரு அரசு அமைப்பு, இந்தியாவில் ஒற்றைச் சாளர முறையில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்கிறது. நேரடியாக அனுமதிக்கப்படாத துறைகளுக்கு அனுமதி வழங்குகிறது.
 • அரசின் நேரடி முதலீட்டு கொள்கையில் வெளிநாட்டு முதலீட்டு வளர்ச்சி குழு ஒரு முக்கியமான நிர்வாக மற்றும் செயல்படுத்தும் அமைப்பாகும். இவ்வமைப்பு இந்தியாவில் வேகமான மற்றும் ஒளிவுமறைவற்ற முறையில் அந்நிய நேரடி முதலீட்டு விண்ணப்பங்கள் பற்றிய விளக்கங்களையும் அனுமதியையும் வழங்கியது.
 • சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள், தடைகளை தீர்த்து முதலீட்டார்களுக்கு சாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டது.

வெளிநாட்டு முதலீடு செயல்படுத்தும் அமைப்பு

இது 1999 ஆண்டு அமைக்கப்பட்டது. நேரடி முதலீடுகள் தொடர்பான அனுமதிகளை ஒரே இடத்தில் விரைவாக செயல்படுத்த முனைகிறது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி, மற்றும் நடைமுறை படுத்துவதில் உள்ள பல்வேறு பாதகங்களை களைவதற்கு இது உதவுகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் அரசு முகவராக செயல்படுகிறது.

அதில் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்தின் உச்சவரம்பு நீக்கப்பட்டது. நிறுவனங்கள் இணைப்பு, விசித்தரிப்பு, இயக்குனர்களை நியமித்தல் ஆகியவற்றில் மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் நீக்கப்பட்டது.

இந்திய பொதுத்துறை நிறுவனங்கள்

நிறுவனங்களில் 51மூக்கும் மேல் உரிமை அல்லது அதற்கு மேல் அரசு பங்கு வகிக்கும் நிறுவனங்களே பொதுத்துறை நிறுவனங்கள் எனப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது மத்திய அரசோ அல்லது மாநில அரசாகவோ இருக்கலாம். 1947க்கு முன்னர் பொதுத்துறை நிறுவனங்கள் என்பது இந்திய பொருளாதாரத்தில் இல்லை. ஒரு சில அரசு நிர்வகித்த நிறுவனங்களே இருந்தன அவை இரயில்வே, தபால் மற்றும் தந்தி, துறைமுக பொறுப்பு கழகம், வளமான உற்பத்தி, உப்பு உற்பத்தி நிறுவனங்கள். 1956 ஆம் ஆண்டு தொழில் கொள்கை தீர்மானம் மற்றும் சோசியலிஸ முறையை ஏற்றுக் கொண்டது.

பாதுகாப்பு, உயர் தொழில் நுட்பம், தேவையான உள்கட்டமைப்பு, அரசுத்துறை முதலீட்டு காரணங்களால் பொது துறைக்கு பெரும் விரிவாக்கம் ஏற்பட்டது. மறுபரிசீலனையில் பொது துறைக்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது என்பது உணரப்பட்டது. அரசு துறை நிறுவன குழுவுக்கு அதிக அதிகாரங்கள் மற்றும் நிபுணத்துவ மேலாண்மை அளிக்க அரசு வாக்களித்துள்ளது.

மகாரத்னா, நவரத்தனா மற்றும் மினிரத்தனா பொதுத்துறை நிறுவனங்கள்

மகாரத்னா, நவரத்னா மற்றும் மினிரத்னா தகுதி நிலையானது பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பு மிக்க பட்டமானது அந்நிறுவனங்களுக்கு அதிகப் பட்ச தன்னாட்சியையும், உலக சந்தையில் போட்டியிடவும் உதவுகிறது.

மகாரத்னா:

ஒரு நிறுவனம் மகாரத்னா நிலையை பெற செபியின் முறைப்படுத்தல்களுக்கு உட்பட்டு இந்திய பங்கு மாற்று சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் சராசரி வருட வருமானம் ரூ25,000 கோடிக்கு மேல் இருக்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் வரிக்கு பின்பான சராசரி இலாபம் ரூ.5,000 கோடிக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

நிறுவனத்தின் சராசரி நிகர மதிப்பு ரூ15,000 கோடி ஆக இருக்கவேண்டும்.

மகாரத்னா:

 1. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்.
 2. கோல் இந்தியா லிமிடெட்.
 3. கெயில் இந்தியா லிமிடெட்.
 4. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்.
 5. என்.டி.பி.சி லிமிடெட்.
 6. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்ரேஷன் லிமிடெட்.
 7. இந்தியா ஸ்டீல் லிமிடெட் அதாரிட்டி.

நவரத்னா:

 1. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்.
 2. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்.
 3. இந்தியா கொள்கலன் கார்ப்ரேஷன் லிமிடெட்.
 4. பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்.
 5. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட்.
 6. மகாநகர் டெலிகாம் நிகம் லிமிடெட்
 7. தேசிய அலுமினிய கம்பெனி லிமிடெட்.
 8. தேசிய கட்டிடங்கள் கார்ப்ரேஷன் லிமிடெட்.
 9. என்எம்டிசி லிமிடெட்.
 10. நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன்.
 11. இந்திய எண்ணெய் நிறுவனம்.
 12. பவர் பைனான்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட்.
 13. இந்தியா பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட்
 14. ராஷ்டிரிய இஸ்பத் நிகாம் லிமிடெட்.
 15. இந்தியா கப்பல் கூட்டுஸ்தாபனம் லிமிடெட்.

மினிரத்னா தரம் -- ஐ

 1. இந்திய விமான ஆணையம்.
 2. ஆன்ட்ரிக்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட்.
 3. பாமர் லாவ்ரி மற்றும் கோ லிமிடெட்.
 4. பாரத் சமையல் நிலக்கரி லிமிடெட்.
 5. பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்.
 6. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்.
 7. பாலம் மற்றும் கூரை நிறுவனம் (இந்தியா) லிமிடெட்
 8. மத்திய கிடங்கு கழகம்.
 9. மத்திய நிலக்கரி சுரங்க லிமிடெட்.
 10. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்.
 11. மராஜர் போர்ட் லிமிடெட்.
 12. கார்டன் ரிச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் லிமிடெட்.
 13. கோவா ஷிப்யார்ட் லிமிடெட்.
 14. ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்.
 15. எச்எல்எல் லைப் கேர் லிமிடெட்.
 16. இந்துஸ்தான் செய்தித்தாள் லிமிடெட்.
 17. இந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட்.
 18. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்.
 19. இந்தியா சுற்றுலா வளர்ச்சி கழகம்.
 20. இந்திய அரிய பூமிகள் லிமிடெட்.
 21. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்.
 22. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு முகமை லிமிடெட்
 23. இந்தியா வர்த்தக மேம்பாட்டு அமைப்பு.
 24. மஜ்தூர் கப்பல்துறை லிமிடெட்.
 25. மகாநதி நிலக்கரி சுரங்க லிமிடெட்.
 26. தாது (இந்தியா லிமிடெட்) மாங்கனீசு.
 27. மங்கலூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலிய லிமிடெட்.
 28. மிஸ்ரா தத்து நிகாம் லிமிடெட்.
 29. எம்எம்டிசி லிமிடெட்.
 30. தேசிய பெர்டிலைசர்ஸ் லிமிடெட்.
 31. தேசிய விதை கழகம்.
 32. என்.எச்.பி.சி. லிமிடெட்.
 33. வடக்கு நிலக்கரி சுரங்க லிமிடெட்.
 34. வடகிழக்கு எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்.
 35. நுமாலிகார் சுத்தகரிப்பு லிமிடெட்.
 36. பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர்கள் லிமிடெட்.
 37. திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு இந்தியா லிமிடெட்.
 38. இந்தியா லிமிடட் ரெயிடெல் கார்ப்ரேஷன்.
 39. ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்.
 40. கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்.
 41. ரைட்ஸ் லிமிடெட்.
 42. தென் கிழக்கு நிலக்கரி சுரங்க லிமிடெட்.
 43. இந்தியா லிமிடெட் அரசு வர்த்தகம்.
 44. இந்தியா தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் லிமிடெட்.
 45. மேற்கத்திய நிலக்கரி சுரங்க லிமிடெட்.
 46. மினிரத்னா தரம் -- ஐஐ
 47. பாரத் பம்ப்ஸ் மற்றும் அமுக்கிகள் லிமிடெட்.
 48. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் லிமிடெட்
 49. மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம்.
 50. மத்திய ரயில் கிடங்கு கம்பெனி லிமிடெட்.
 51. பொறியியல் திட்டங்கள் (இந்தியா) லிமிடெட்.
 52. ஆரவல்லி ஜிப்சம் மற்றும் மினரல்ஸ் இந்தியா லிமிடெட்.
 53. பெரோ ஸ்க்ரேப் நிகாம் லிமிடெட்
 54. இந்திய மருந்துகள் மற்றும் மருந்துகள் கார்ப்ரேஷன் லிமிடெட்.
 55. மேகோன் லிமிடெட்.
 56. மினரல் எக்ஸ்ப்லரேஷன் கார்ப்ரேஷன் லிமிடெட்.
 57. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்.
 58. தேசிய சிறுதொழில் கழகம் லிமிடெட்.
 59. பி.இ.சி லிமிடெட்.
 60. ராஜஸ்தான் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கருவிகள் லிமிடெட்.

குறு, சிறு மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்கள் மற்றும் குடிசைத் தொழில்கள்

உலகம் முழுவதும் குறு, சிறு மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்கள் வளர்ச்சியை தரும் என அங்கீகரிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் இந்நிறுவனங்கள் வளர்ச்சி முகமையை உயர்த்தும் அமைப்பாக அமைந்துள்ளன. மைய முகமையாக சிறு மற்றும் நடுத்தர அமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. அரசு ஒருங்கிணைந்து மேற்பார்வையிட்டு இத்துறையை வளர்க்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பல நாடுகளில் உள்ளது.

இந்திய பொருளாதாரத்தில் மொத்த தொழிற்சாலைகளின் பங்கில் 40 சதவிகிதம் வகிக்கின்றது. இவை வருடாவருடம் வேகமான வளர்ச்சியை அடைகின்றது. ஒவ்வொரு திட்ட காலங்களிலும் சிறப்பான வளர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி சட்டம் (2006) இதனை இரண்டாக வகைப்படுத்துகிறது.

உற்பத்தி நிறுவனங்கள்

 • தொழிற்சாலைகள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்ததுல்) சட்டம் 1951ன் கீழ் முதல் பட்டியலில் உள்ள பொருட்களை தயாரிப்பு அல்லது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி நிறுவனங்கள் எனப்படும்.
 • இவை தொழிற்கூடங்கள் மற்றும் இயந்திரங்களுக்கான முதலீட்டின் அளவை பொருத்து வரையறுக்கப்படுகிறது.

சேவை நிறுவனங்கள்

சேவை அளிக்கும் நிறுவனங்கள் சேவை நிறுவனங்கள் எனப்படும். இவைகள் இயந்திரங்களுக்கான முதலீட்டின் படியே வரையறுக்கப்படுகின்றது.

அரசுடமை நிறுவனங்களின் வகைப்பாடு

 • அரசு பொதுத்துறை நிறுவனங்கள்
 • மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள்
 • பொதுத்துறை வங்கிகள்

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்

முக்கியத்துவம் மற்றும் முக்கியத்துவம் குறைந்த நிறுவனங்களாக இருவகைப்படுத்துகிறது.

அதிமுக்கியத்துவ நிறுவனங்கள்

இராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள், உபகருவிகள், போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள், அணுசக்தி நிலையங்கள் நிர்வகிப்பது, கதிர்வீச்சின் பயன்பாடுகள், விவசாயம் மற்றும் மருத்துவத்தில் பயன்படும் ரேடியோ ஐசோடோப்புகள் ஆகியவை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

லாபம் நோக்கம் அற்ற நிறுவனங்கள்

நிறுவனங்கள் சட்டம் 1956, பிரிவு 25-யின் கீழ் பொதுத்துறை நிறுவனங்கள் வணிகம், கலை, அளவியல், மதம், சேவை மற்றும் பிற பயனுள்ள வழிகளில் லாபம் நோக்கம் இன்றி செயல்படும் நிறுவனங்கள் லாபம் நோக்கம் அற்ற நிறுவனங்கள் என்று அழைக்கப்படும்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கம்

இந்தியா போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளில், பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 • உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்
 • வலிமையான தொழிற்சாலை கட்டமைப்பை ஏற்படுத்துதல்
 • பொருளாதார மேம்பாட்டிற்கு தேவையான வளங்களை ஏற்படுத்தல்
 • வளங்களை தேவையான அளவு ஒதுக்கீடு செய்தல்.
 • நடுநிலையான பிராந்திய வளர்ச்சியை உறுதிப்படுத்துதல்
 • வருமான ஏற்றத்தாழ்வை குறைத்தல்

நலிவடைந்த நிறுவனங்கள் சட்டம் 1985

 • நலிவடைந்த நிறுவனங்கள் எனப்படுபவை (குறைந்தது 5 ஆண்டு அதற்கு மேல் இருக்கும் நிறுவனங்கள்) ஏதாவது ஒரு நிதி ஆண்டின் இறுதியில் மொத்தம் அல்லது நிகர மொத்த முதலீடு மதிப்பை விட அதிகமாக இருக்கும் நிறுவனங்கள் ஆகும்.
 • மேலும், இவை ஒரு நிதி ஆண்டின் இறுதியில் அவற்றின் மொத்த மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இருக்கும் போது அடுத்தடுத்த 4 நிதி ஆண்டுகளின் கடன் பெற்றவர்களிடம் திருப்பி கடன் செலுத்தப்படாத நிலையில் உள்ள நிறுவனங்கள் ஆகும்.
 • நலிவடைந்த நிறுவனங்களை காலத்தே கண்டறிய வேண்டும்.
 • சிறந்த நிர்வாக குழுவை அமைத்து நலிவடைந்த நிறுவனங்களை விரைவாக காத்தல் மறு சீரமைப்பு செய்தல் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப முடிவு செய்தல்.

தொழிற்சாலைகள் மற்றும் நிதி மறுசீரமைப்பு மேல்முறையீட்டு அமைப்பு

தொழிற்சாலை மற்றும் நிதி மறுசீரமைப்புக் குழு

 • உயர்மட்ட குழுவை ஏற்படுத்தி தொழிற்சாலையில் நலிவை சரிசெய்கிறது. இது தகுந்த நடவடிக்கை மூலமாக நலிவடைந்த தொழில் நிறுவனங்களுக்கு மறுவாழ்வு தருகிறது. மீள இயலாத நலிவடைந்த நிறுவனங்களை விற்பனை செய்கிறது.
 • தொழிற்சாலை மற்றும் நிதி மறுசீரமைப்பு மேல்முறையீடு ஆணையம் நடவடிக்கைகளை மேல்முறையீடு செய்ய வேண்டிய அமைப்பு.
 • தொழிற்சாலை மற்றும் நிதி மறுசீரமைப்புக் குழுவின் தீர்ப்பை தெரிவித்து வரும் மேல்முறையீடுகளை தொழிற்சாலை மற்றும் சீரமைப்பு ஆணையம் விசாரிக்கும்.
 • தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்பாயம் அமைக்கப்பட வேண்டும். இது நலிவடைந்த நிறுவனங்களின் சீரமைப்பு அமைப்பின் பணிகளையும் செய்ய வேண்டும். நிறுவனங்களை கலைப்பதற்கு, நிறுவனங்களின் சட்ட குழு உயர்நீதி மன்றங்கள் ஈடுபட வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குவிலக்கல் விற்பனைக் கொள்கை

தேசிய வளங்களை முறையான வழிகளில் பயன்படுத்தவும், பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தியை பெருக்கிடவும் பொதுத்துறையில் அரசின் முதலீடு குறைப்பு உதவுகிறது.

சிறப்பியல்புகள்:

 • பொதுத்துறை நிறுவனங்களை நவீனப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்
 • புதிய சொத்துக்களை உருவாக்குதல்
 • வேலை வாய்ப்பை உருவாக்குதல்
 • பொதுமக்களின் கடன்களை பெருக்காமல் இருத்தல்

பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்களிப்பை குறைப்பது தொடர்பான குழுவின் அறிக்கை

அறிக்கையானது அதிக அளவில் அரசின் பங்களிப்பை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. 49 சதவிகிதம் வரை மட்டுமே அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

சில நிலைகளில் இது பொதுத்துறை நிறுவனங்களின் சந்தையில் உள்ள தனிப்பட்ட அடையாளம் அல்லது அதிகபட்ச பங்களிப்பு ஆகிய முக்கிய காரணங்களால் 26 சதவிகிதம் வரை குறைக்கப்படவேண்டும். சில நேரங்களில் இது 74 சதவிகிதம் வரையும் சில நிலைகளில் 100 சதவிகிதம் வரையும் அரசின் பங்களிப்பை குறைக்க வேண்டும்.

6 நிறுவனங்களில் மட்டுமே 51 சத விகிதம் அல்லது அதற்கு மேல் அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும் அவையாவன:

 • நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி
 • கனிம எண்ணெய்
 • ராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள்
 • அணுசக்தி
 • கதிர் இயக்க கனிமங்கள்
 • இரயில்வே

தேசிய முதலீட்டு நிதி

2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பெறப்படும் அரசின் முதலீடானது தொழில் நுட்ப வல்லுநர்களால் நிர்வகிக்கப்படும். நிதியினை அழித்து விடாமல் பாதுகாக்கப்படும். இது ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய நிதிக்கு வெளியில் வைத்து நிர்வகிக்கப்படும்.

நோக்கங்கள்

 • உற்பத்தி துறையின் பங்களிப்பு 2022 ஆம் ஆண்டு 25 சதவிகிதமாக உயர்த்துவது
 • 2022 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் வேலை வாய்ப்பை உருவாக்குவது
 • உலக அளவில் போட்டியை சமாளிப்பது, உள்நாட்டில் மதிப்பு கூட்டுதல்
 • தொழில்நுட்பம் வளர்த்தல், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வளர்ச்சியை அடைதல்

புதிய தொழிற்சாலை உற்பத்தி குறியீடு

2011-ம் ஆண்டு மத்திய புள்ளியியல், மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் புதிய தொழிற்சாலை உற்பத்தி குறியீடுகளை வெளியிட்டது. இது 2004-05 அடிப்படை ஆண்டாக வைத்து கணக்கிடப்படுகிறது. இந்த அடிப்படை ஆண்டானது புள்ளியியல் துறையில் நிலைக்குழுவின் பரிந்துரையின் பேரில் மாற்றி அமைக்கப்படும்.

ஆதாரம் : அறம் ஐ.ஏ.எஸ் அகடாமி, அண்ணாநகர், சென்னை

Filed under:
3.2
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top