பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / தொழில்முனைவோர்க்கான தகவல்கள் / தொழில் முனைவோருக்கான குணாதிசயங்கள் மற்றும் சிறப்புத் தகுதிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழில் முனைவோருக்கான குணாதிசயங்கள் மற்றும் சிறப்புத் தகுதிகள்

தொழில் முனைவோருக்கான குணாதிசயங்கள் மற்றும் சிறப்புத் தகுதிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தொழில் முனைவோராக மாறுவது ஒரு பாரம்பரிய தொழிலாகக் கருதப்பட்டு வருகிறது. எனினும் படிப்பு வசதி, தொழில் நுட்பம், அறிவியல் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள வேகமான முன்னேற்றங்களின் துணை கொண்டு பாரம்பரிய ரீதியாக தொழில் முனைவோராகக் கருதப்பட்டு வந்த போக்கை மாற்ற, அனைவரையும் தொழில் முனைவோராக மாற்ற சில சிறப்புத் தகுதிகள் தேவைப்படுகின்றன. தொழில் முனைவோர்கள் ஒரு புதிய தொழில் கண்டுபிடிப்பை வணிக ரீதியாக மாற்றுவதற்கு, ஒரு நிறுவனத்தை சிறிய அளவில் துவக்கி பொருளாதார மதிப்பு கூட்டும் பொருட்கள் மற்றும் சேவைகளை நுகர்வோருக்கு அளிக்கின்றனர். இந்த சேவை புரிவதால் தொழில் முனைவோர் பொருளாதார வரவு மற்றும் மன நிறைவு போன்ற வெகுமதிகளை அடைகின்றனர்.

தொழில் முனைவோருக்கான குணாதிசயங்கள்

தொழில் முனைவோராக மாறுவதற்கு முனைப்பு மற்றும் கடின உழைப்பு தேவை. இவற்றை தனி நபர் குணாதிசயங்கள் என்று கூறுவர். தொழில் துவங்க தேவையான தனிநபர் குணாதிசயங்களாவன பின் வருமாறு :

  • பொறுப்பு ஏற்றல்
  • தன்னிச்சையாக செயல்படுதல்
  • விடாமுயற்சி
  • வாழ்க்கைக் குறிக்கோள்கள்

எனவே, தொழில் முனைவோர் திட்டமிட்டு நிறுவனம் அமைத்து, பணியாட்களை அமர்த்தி, அவர்களை முன்நடத்தி, நிறுவனத்தில் நடக்கும் அனைத்து செயல்களையும் கட்டுப்பாட்டில் வைத்து வெற்றி காண வேண்டும்.

அதிக நேரம் செயல்படுவதால் மட்டும் வெற்றி பெற முடியாது. சில நேரங்களில் தொழில்கள் வெற்றியடையாமல் தோல்வியைத் தழுவுவதற்கு செயல்திட்டங்களை மேலாண்மை முறையில் செயல்படுத்தாதது மற்றும் முக்கியமாக, மிகக் கடினமாக எதிர்கொள்ளக்கூடிய சவால்களைத் தவிர்ப்பது போன்ற காரணங்களே ஆகும்.

தொழில் முனைவோருக்கானத் தகுதிகள்

முனைப்பு மற்றும் முன் நடத்திச் செல்லுதல்

தொழில் முனைவோர் தாங்கள் மட்டும் முனைப்புடன் இருந்தால் போதாது. மற்றவர்களும் வெற்றி இலக்குகளை அடைய முன்னின்று, அரவணைத்து செயல்பட வேண்டும். பொதுவாக முன்நடத்திச் செல்பவர்களையே தலைவர்கள் எனக் கூறலாம். தலைவர்களைப் பல விதமாக வகைப்படுத்தலாம். எந்தத் தலைமை வகையை பின் பற்றிச் சென்றாலும், ஊழியர்கள் தலைவர்களுக்கு உறுதுணையாக நின்று, அவரின் கொள்கைகளை வெற்றியடையச் செய்ய வேண்டும்

சக ஊழியர்களை அரவணைத்துச் செல்லுதல்

தொழில் முனைவோர் தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன், அன்புடன் மற்றும் அவர்களின் கவலைகளைப் போக்கும் வண்ணம் உதவிட வேண்டும். அவர்களை மனித நேயத்துடன் நடத்த வேண்டும். தன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடன் நன்கு பழகி மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மனநிறைவு அடைந்திட தொழிலாளர்களுக்குத் தகுந்த பயிற்சிகளை அவ்வப்போது வழங்கிட வேண்டும்.

செயல் திட்டங்களை நன்கு விளக்குதல்

தொழிலில் வெற்றி கண்டிட தொழில் முனைவோர், வாடிக்கையாளர், தொழிலாளர், இடுபொருள் அளிப்போர் மற்றும் கடன் வழங்குபவர்களுடன் எழுத்து மூலமாகவும், வாக்கு மூலமாகவும் நன்கு விளக்கி தனது சாதனைக் குறிக்கோளை அடைந்திட செயல்பட வேண்டும்.

தொழில் நுட்பத்திறன்

தொழில் நுட்பத்திறன் நன்கு அறிந்திருந்தால் மிகச் சிறப்பாக செயல்படலாம். எனினும் தொழில் நுட்பத்திறனில் வெற்றிடம் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை பயிற்சிகள் மூலமாக மேம்படுத்திடலாம். எல்லோரும், எல்லாத் தொழில் நுட்பங்களையும் ஆழமாக அறிந்திட முடியாது. இருப்பினும், தன் தொழிலுக்குத் தேவையான தொழில் நுட்பத்திறன் பலவற்றை ஆழமாகவும், சிலவற்றில் சிறிதளவும் தெரிந்திருந்தால் போதுமானது. எடுத்துக்காட்டாக பேருந்து ஓட்டுநர் பேருந்து என்ஜின் எப்படி செயல் படுகிறதென்று முழுமையாக அறியத் தேவையில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அது எப்படி செயல்படுகிறது, பழுது ஏற்பட்டால் எந்த இடத்தில் பழுது உள்ளது எனக் கண்டறியும் திறன் இருந்தால் போதுமானது.

முடிவெடுக்கும் திறன்

எந்தவொரு திட்டத்தையும், செயலையும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் செயல்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு முறையிலும் நன்மைகள், தீமைகள் இருக்கும். இவற்றை சரியாக அளந்து எந்த முறையில் செயல்பட்டால் அதிக இலாபமும், மிகச் சொற்பமான நஷ்டத்தையும் அடையலாம் என்பதை தொழில் முனைவோர் அறிந்திட வேண்டும். மேலும், வாய்ப்புகள் எப்படி நாளடைவில் மாறிவருகின்றன என்பதை முன்கூட்டியே அறிந்து தேவையான முடிவுகளை மாற்றி, தொழில் தொடர்ந்து வளர்ச்சியடைய முடிவுகளை எடுக்கும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.

கருத்துக் கூர்மை

சிறு தொழில் நிறுவனம், அதன் ஒட்டு மொத்த அமைப்பு மற்றும் அதில் செயல்படும் பல பிரிவுகள், அந்த பிரிவுகளுக்கிடையே உள்ள கருத்துக்களை வெகு விரைவில் அறிந்து கொண்டு வாய்ப்புகளை அடுத்தவர் தட்டிச் செல்வதற்கு முன், இவர் முந்திக் கொண்டு செயல்பட்டு வெற்றி காண வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கானத் தகுதிகள் எல்லோரிடமும் சமமாகவும், வெகுவாகவும் இருப்பதில்லை. எனினும், எந்தத் துறைகளில் குறைகள் உள்ளனவோ அவற்றை அறிந்து மேம்படுத்திக் கொள்ளலாம் அல்லது அத்தகுதிகள் உள்ளவர்களுடன் ஒன்று சேர்ந்து தொழிலைத் தொடங்கி வெற்றி பெற்றிடலாம்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்- 641 003

2.97297297297
முபாரக் அலி Apr 17, 2019 09:44 PM

மின்சார உபகரணங்கள் தயாரிப்பு தொழில் தொடங்க கிராமங்களில் இதற்கான அங்கீகார ம்(லைசன்ஸ்) கிடைக்க எந்த அலுவலகத்தை அனுக வேண்டும்

S.kavitha Sep 20, 2018 10:28 AM

பயனுள்ள தகவல். நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top