பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / தொழில் கடனுதவி நிறுவனங்கள் / கயிறு தொழில் முனைவோர் திட்டம் - காயர் உத்யமி யோஜனா
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கயிறு தொழில் முனைவோர் திட்டம் - காயர் உத்யமி யோஜனா

கயிறு தொழில் மேம்பாட்டிற்கான கயிறு தொழில் முனைவோர் திட்டம் -காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) பற்றிய குறிப்புகள்

COIR UDYAMI YOJANA

கயிறு தொழில் அதிக தொழிலாளர்களை கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான  விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. கயிறு தொழிலில் கேரளா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளது. ஆனாலும் பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே  தமிழகம் முதன் இடத்தில் உள்ளது.

மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கு, ‘காயர் உத்யமி யோஜனா’ (COIR UDYAMI YOJANA) என்ற கயிறு தொழில் முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது .

நோக்கம்

 • கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல்.
 • பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்.
 • தேங்காய் மட்டை கொண்டு வருமானத்தை பெருக்குதல்.
 • நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல்.
 • தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தை புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது.
 • தேங்காய் மட்டையை பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருட்களின் உற்பத்தியை அதிகபடுத்துவது.
 • கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈர்ப்பது.

தொழிலின் திட்ட மதிப்பு

தொழிலுக்கான திட்ட மதிப்பு அதிகபட்சமாக ரூ.10 இலட்சத்திற்குள் இருந்தால் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் விண்ணபிக்கலாம். இந்த திட்டத்தில் நடைமுறை மூலதனத்தையும் (working capital) பெறலாம். இந்த நடைமுறை மூலதனம் தொழிலுக்கான திட்ட மதிப்பில் 25%-க்குள் இருக்க வேண்டும்.

அரசு மூலதன மானியம்

காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானியம் (Subsidy) தொழிலின் திட்ட மதிப்பில் 40% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வரை வழங்கப்படும்.

தொழில் முனைவோர் சொந்த முதலீடு

தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை பயனாளிகள் தொழிலில் முதலீடு செய்ய வேண்டும்.

வங்கிக் கடன்

வங்கி பயனாளிகளுக்கு அதிகபட்சமாக தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 55% சதவிதத்தை வங்கி கடனாக வழங்கும்.

பயனாளிகளின் தகுதிகள்

 • 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
 • காயர் உத்யமி யோஜனா விண்ணபிக்க எந்த வித வருமான வரம்பும் கிடையாது.
 • தென்னை நார் சம்மந்தமான பொருட்கள் உற்பத்தி செய்யபவர்களுக்கு மட்டும் காயர் உத்யமி யோஜனா திட்டம் பொருந்தும்.
 • தனிநபர்கள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புடன் கூடிய நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய அரசு அலுவலகங்கள்

காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற கயிறு வாரியம் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் விண்ணபிக்கலாம்.

கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள்

காயர் உத்யமி யோஜனா திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு :

Coir Board Regional Office,

Door No.103, Vallalar Street,

Venkatesha Colony,

Pollachi – 642001.

Tel/Fax : 04259-222450

http://coirboard.gov.in/

காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆதாரம் : காயர்போர்டு வாரியம்

3.15068493151
வேல்முருகன் ம Apr 19, 2020 12:06 PM

காயர் தொழில் நன்கு தெரியும் சார். புதிதாக எங்கள் கிராம பகுதியில் ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன். இதற்கு காயர் போர்டு உதவி செய்யுமா?
My WhatsApp number is:
+91*****2652

ரவிச்சந்திரன் Oct 15, 2019 08:03 PM

பயனுள்ள தகவல்

வேலுச்சாமி Feb 20, 2018 04:20 PM

அருமையான தகவல்

வி.குமார் Nov 24, 2017 08:14 PM

மிக்க நன்றி

Ramesh Apr 02, 2016 10:27 AM

அருமையான பதிவு

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top