உலக அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆரம்ப நிலையில் மிக சிறிய அளவில் வர்த்தக நோக்குடன் தொடங்கப்பட்டு எதிர் காலத்தில் உலக அளவில் பெரிய நிறுவனங்களுடன் வர்த்தக போட்டியிடும் அளவிற்கு திறனை உருவாக்கியுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களின் திறனை உள்ளடக்கி உலக அளவில் தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டில் பங்குதாரர்களாக மாறி வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
இந்திய பொருளாதாரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிவேக மற்றும் ஆற்றல் வாய்ந்த தொழில் நிறுவனங்களாக மாறியுள்ளது. மேலும் இக்குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறைந்த முதலீட்டில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி ஊரக மற்றும் நகர் புற பகுதிகளில் அதிக அளவில் வேலை வாய்ப்பினை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பினை செய்துள்ளன. மேலும், வட்டார அளவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை குறைத்து நாட்டின் வருவாய் மற்றும் வளம் சம அளவில் இருக்க உதவுகிறது. குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சார்பு நிறுவனங்களாக இருப்பதோடு நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நான்காவது அகில இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கணக்கெடுப்பில் இந்தியாவில் உள்ள 3.6 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் சுமார் 8 கோடி நபர்கள் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். இதில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தி நிறுவனங்களின் பங்கு சுமார் 7.09 விழுக்காடு ஆகும். சேவை துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு சுமார் 30.50 விழுக்காடு ஆகும். மேலும் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு 37.59 விழுக்காடு ஆகும்.
தமிழ் நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ அனைத்து பிரிவுகளிலும் பல்வேறு விதமான பொருட்களை தயாரிக்கிறது. இவற்றில் முன்னிற்பவை ஜவுளி, மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், தானியங்கி உப பொருட்கள், தோல் பொருட்கள், இரசாயனம், நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்), ஆயத்த ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் முதலானவை
தமிழ்நாட்டில் www.msmeonline.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக தொழில் முனைவோர் ஒப்புதல் பதிவறிக்கை பகுதி-IIஐ பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை அறிமுகப்படுத்தியப் பின் சுமார் 5.80 இலட்சம் தொழில் முனைவோர்களால் ஒப்புதல் பதிவறிக்கை பகுதி II பதிவு செய்யப்பட்டு, சுமார் 33.26 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. மொத்த முதலீடு ரூ. 74,662.27 கோடி ஆகும்.
கீழ்க்கண்ட அட்டவணை 1-ல் கடந்த எட்டு ஆண்டுகளில், வருடாந்திர குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பதிவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை – 1
ஆண்டு |
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை |
முதலீட்டு அளவு (ரூபாய் கோடியில்) |
உற்பத்தி அளவு (ரூ.கோடியில்) |
வேலை வாய்ப்பு (எண்ணிக்கை) |
2007-08 |
27209 |
2547.14 |
8739.95 |
242855 |
2008-09 |
32049 |
3557.89 |
13354.86 |
294255 |
2009-10 |
41799 |
3214.22 |
10880.01 |
151743 |
2010-11 |
57902 |
5872.37 |
12500.86 |
405233 |
2011-12 |
70758 |
7429.59 |
15496.00 |
502381 |
2012-13 |
83348 |
8751.54 |
17503.08 |
583436 |
2013-14 |
116393 |
18939.87 |
16832.25 |
494990 |
2014-15 |
143104 |
24349.65 |
59789.70 |
651180 |
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரையறை
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வகைபாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டம் 2006-ன் படி வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இந்நிறுவனங்களை இயந்திரம் மற்றும் தளவாடங்களின் (நிலம் மற்றும் கட்டடங்கள் தவிர) முதலீட்டின்படி வரையறுக்கப்பட்டது அட்டவணை-2-ல் கொடுக்கப்பப்பட்டுள்ளது.
அட்டவணை - 2
உற்பத்தி நிறுவனங்கள் |
முதலீட்டின் அளவு |
சேவை நிறுவனங்கள் |
முதலீட்டின் அளவு |
குறு நிறுவனங்கள் |
ரூ.25 இலட்சம் வரை |
குறு நிறுவனங்கள் |
ரூ.10 இலட்சம் வரை |
சிறு நிறுவனங்கள் |
ரூ.25 இலட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை |
சிறு நிறுவனங்கள் |
ரூ.10 இலட்சத்திற்கு மேல் ரூ. 2 கோடி வரை |
நடுத்தர நிறுவனங்கள் |
ரூ.5 கோடிக்கு மேல் ரூ.10 கோடி வரை |
நடுத்தர நிறுவனங்கள் |
ரூ.2 கோடிக்கு மேல் ரூ.5 கோடி வரை |
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
இத்துறையில் நிர்வாக கட்டுப்பாட்டில் கீழ்கண்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
தொழில் வணிக ஆணையரகம் (IC & DIC)
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO)
தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் (TANSI)
தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDI)
தொழில் வணிக ஆணையரகம் பொதுவாக தொழில்களின் மேம்பாட்டிற்கும் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டிற்கும் கட்டாய பொறுப்பாக விளங்குகிறது. இந்த கட்டாய பொறுப்பை செயல்படுத்த இவ்வாணையரகத்தின் கீழ் 32 மாவட்டங்களிலும் மாவட்டத் தொழில் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் துவங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட தொழில் மையங்கள், தொழில் நடவடிக்கைகளை கண்டறிதல், திட்ட அறிக்கை தயாரித்தல், பல்வேறு வங்கிகள்/நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுதல், அரசுத் துறைகளிடமிருந்து சட்ட பூர்வ அனுமதிகளை பெறுதல், தகுதியான மானியங்களை பெற்றுத் தருதல் மற்றும் நிலுவையிலுள்ள தொகைகளை பெற்று தருதல் உள்ளிட்டப் பணிகளைச் செய்து வருகின்றன.
தொழில் முனைவோர் பதிவறிக்கை பதிவு செய்தல்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுச் சட்டம் 2006ன்படி தொழில் முனைவோர் பதிவறிக்கை (தொ.ப.) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறு மற்றும் சிறு உற்பத்தி / சேவை தொழில்கள் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது. ஆயினும், நடுத்தரத் தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு இப்பதிவு கட்டாயமானது. எந்த ஒரு தொழில் முனைவோரும் www.msmeonline.tn.gov.in இணையதள வழியாக தொழில் முனைவோர் பதிவறிக்கை ஒப்புகையினை மாவட்ட தொழில் மையத்திற்கு செல்லாமலே உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டமானது தொழில் முனைவோரிடமிருந்து மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் 2014-15ல் தொழில் முனைவோர் ஒப்புதல் பதிவறிக்கை இணையதளம் வாயிலாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் தொழில் முனைவோர் பதிவறிக்கை ஒப்புகை வழங்கப்பட்டதின் போக்கு அட்டவணை -3ல் கொடுக்கப்பட்டுள்ளது. 31.03.2015 வரையில் தொழில் முனைவோர் பதிவறிக்கை பகுதி I-இல் 5,27,952 நிறுவனங்களும், பகுதி II-இல் 4,65,286 நிறுவனங்களும் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளன.
மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைத் திட்டங்கள் கீழ்வருமாறு:
i .முதலீட்டு மானியம்
தகுதியான இயந்திரத் தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் அதிகப்பட்சமாக ரூ.30 இலட்சம் வரை.
மகளிர், பட்டியலிடப்பட்ட இனம் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தொழில் முனைவோராக இருக்கும் நேர்வுகளில் அவற்றின் தகுதியான இயந்திர தளவாடங்களின் மீதான முதலீட்டின் மதிப்பில் 5 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.2 இலட்சம், கூடுதல் முதலீட்டு மானியம்.
மாசற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு இயைந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியச் சான்றின் பேரில் அந்நிறுவனங்களுக்கு தகுதியான இயந்திர தளவாடங்கள் மீதான முதலீட்டின் மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சம் ரூ.3 இலட்சம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து முதல் 5 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்குள், குறைந்தபட்சம் 25 வேலையாட்களைப் பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு அவற்றின் தகுதியான இயந்திர தளவாடங்களின் மீதான முதலீட்டின் மதிப்பில் 5 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.5 இலட்சம் வேலைவாய்ப்பு பெருக்க மானியம்
அடிப்படைத் தகுதி
மாநிலத்தில் எப்பகுதியில் நிறுவப்படும், அனைத்து புதிய குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள்.
தமிழ்நாட்டில் எப்பகுதியிலும் நிறுவப்படும் கீழ்க்கண்ட 13 சிறப்பு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் (கூடுதல் முதலீட்டு மானியம் மற்றும் வேலைவாய்ப்பு பெருக்க மானியம் நீங்கலாக)
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 251 வட்டாரங்களில் அமைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.
மாநிலத்தின் 385 வட்டாரங்களில் அமைக்கப்படும் வேளான் சார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
மேற்கண்ட வகையை சார்ந்த தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில்கள் துவங்கும் பொழுது.
ii. குறைந்தழுத்த மின் மானியம்
20 விழுக்காடு குறைந்த அழுத்த மின் மானியம், வணிக ரீதியாக உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின்இணைப்பு பெற்ற நாள் இவற்றில் எது பிந்தியதோ அந்நாளிலிருந்து 36 மாதங்களுக்கு வழங்கப்படும்.
அடிப்படைத் தகுதி
மாநிலத்தில் எப்பகுதியில் நிறுவப்படும், அனைத்து புதிய குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள்.
மாநிலத்தின் 385 வட்டாரங்களில் அமைக்கப்படும் வேளான் சார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 251 வட்டாரங்களில் அமைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.
மேற்கண்ட வகையை சார்ந்த தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில்கள் துவங்கும்பொழுது
iii. மதிப்பு கூட்டு வரிக்கு ஈடான மானியம்
குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு, அவற்றின் இயந்திர தளவாடங்களின் மதிப்புக்கு ஈடான தொகை, அவை உற்பத்தி தொடங்கிய முதல் 6 ஆண்டுகளில் செலுத்தப்படும் மதிப்பு கூட்டு வரிக்கு ஈடாக அவர்களுக்கு 100 சதவிகிதம் திருப்பி வழங்கப்படும்.
அடிப்படைத் தகுதி
மாநிலத்தில் எப்பகுதியில் நிறுவப்படும், அனைத்து புதிய குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள்.
iv. மின்னாக்கி மானியம்
இம்மானியத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் எப்பகுதியிலும் அமைந்துள்ள குறு சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் வாங்கியுள்ள மின்னாக்கியின் மதிப்பில் 25 விழுக்காடு (320 KVA வரை) அதிகபட்சமாக ரூ. 5 இலட்சம் வரை மின்னாக்கி மானியம்
v. பின்முனை வட்டி மானியம்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனப் படுத்துதல், கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் ஆகியவற்றிற்காக வாங்கும் ரூ.1 கோடி வரையிலான கடன்களின் மீது 5 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ. 10 இலட்சத்திற்கு கடனுக்கான வட்டியில் 3 விழுக்காடு என்ற அளவில் பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீன படுத்துதல், தேசிய பங்கு நிதி திட்டம், சர்வதேச தரநிலைப்படுத்தல் நிறுவனத்தின் தரச்சான்று பெறுதல், காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் போன்ற அனைத்து திட்டங்களுக்கான காலக்கடன்களுக்கும், 3 விழுக்காடு பின்முனைவட்டி மான்யம் வழங்கப்பட்டு வருகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக கீழ்கண்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன:-
உரிமைக்காப்பு (கண்டறிதல் உரிமை) பதிவு விண்ணப்பத்திற்கான தொகையில் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 50 விழுக்காடு, அதிக பட்சமாக ரூ.2 இலட்சம் மானியம்.
வர்த்தக குறியீடு பதிவு தொகையில் 50 விழுக்காடு அல்லது ரூ.25,000/- இதில் எது குறைவானதோ.அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் மூலம் தொழில் குழுமங்கள் மற்றும் சிறு கருவி மையங்கள் அமைப்பதற்கு, அவற்றின் திட்டமதிப்பீட்டில் 25 விழுக்காடு, அதிக பட்சமாக ரூ.1 கோடி வரை மானிய உதவி.
தூய்மையான, மின் திறனுள்ள தகவல் தொழில் நுட்பம் சார்புடைய தொழில் நுட்பங்களை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி ஏற்படுத்துதல்
நேர்த்திமிகு மையங்கள் மற்றும் தொழில் நுட்ப வணிக சேவை வளர்ப்பகங்களை உருவாக்கி அதன் மூலம் நவீன உற்பத்தி உத்திகள் மற்றும் வடிவமைப்பு மேம்பாடு மேற்கொள்ள ஒவ்வொரு தொழில்நுட்ப வணிக சேவை வளர்ப்பகம் / நேர்த்திமிகு மையத்திற்கும் ரூ.50 இலட்சம் வரை மானிய உதவி.
அரசு, குறு மற்றும் சிறுதொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கீழ்க்கண்ட சந்தை வாய்ப்பு உதவிகளை வழங்குகிறது.
ஒப்பந்தப்புள்ளிகளில் கலந்து கொள்வதற்கு முன்வைப்புத் தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு.
இம்மாநிலத்திலும் மற்றும் மற்ற மாநிலங்களிலும் நடைபெறும் பொருட்காட்சிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சார்புடைய சங்கங்கள் கலந்து கொள்ளும் நேர்வுகளில் அரங்க வாடகையில் 50 விழுக்காடு மானியம்
பொதுவான பெயர் அல்லது பொது வணிக சின்னத்தில் விற்பனை செய்ய ஆதரவு அளித்தல்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் எனும் திட்டத்தை 2008-09ஆம் ஆண்டு முதல் மைய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 இலட்சம், சேவை தொழில்களுக்காக ரூ.10 இலட்சம் வரையிலும் அதிக பட்சமாக வழங்கப்படுகிறது.
திட்ட மதிப்பீட்டில் தனது பங்களிப்பாக பொது பிரிவில் 10 விழுக்காடும், சிறப்பு பிரிவினர் (பட்டியலிடப்பட்ட இன/ பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மை இனத்தினர், மகளிர்/முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், வடகிழக்கு பகுதியினர் மலை மற்றும் எல்லைப் பகுதியினர்) 5 விழுக்காடும் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையினை வங்கிகள் காலக் கடனாக வழங்கும். மைய அரசானது மானியங்களை பயனாளிகளுக்கு அட்டவணை-4ன் படி வழங்குகிறது.
அட்டவணை – 4
பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வகை |
மானிய விகிதம் |
|
நகர்புறம் |
கிராமப்புறம் |
|
பொதுப்பிரிவினர் |
15% |
25% |
சிறப்புப் பிரிவினர் (பட்டியலிடப்பட்ட இனம்/பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மை இனத்தினர், மகளிர்/முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், வடகிழக்கு பகுதியினர் மலை மற்றும் எல்லைப் பகுதியினர்) |
திட்ட மதிப்பீட்டில் 25% |
திட்ட மதிப்பீட்டில் 35% |
தமிழக அரசு சமுதாயத்தில் பின் தங்கியுள்ளவர்களை முன்னேற்ற வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மூலம் உற்பத்தி/சேவை/வியாபார நிறுவனங்கள் அதிகபட்சம் முறையே ரூ.5 இலட்சம்/ரூ.3 இலட்சம் மற்றும் ரூ.1 இலட்சம் வரையான திட்டங்களுக்கு பொருந்தும். அட்டவணை-5ல் குறிப்பிட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில்திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு அரசு மானியம் வழங்கப்படுகிறது.
அட்டவணை – 5
தகுதிகள் |
|
குறைந்தபட்ச வயது வரம்பு |
18 வயது |
அதிகபட்ச வயது வரம்பு |
45 வயது வரை சிறப்பு பிரிவினர்களுக்கு (தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர்/பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ பெண்கள்/ முன்னாள் இராணுவத்தினர்/மாற்றுத் திறனாளிகள்/திருநங்கைகள்) |
கல்வித்தகுதி |
8ம் வகுப்பு தேர்ச்சி |
தமிழக அரசின் தலைமை திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 20.02.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்தல், தொழில் தொடங்க திட்டங்கள் தயாரித்தல், நிதி நிறுவனங்களின் நிதியுதவி பெற உதவுதல் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களுடன் வணிக தொடர்பு அமைத்து தருதல் ஆகிய உதவிகளை அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் அட்டவணை-6-ல் குறிப்பிட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் துவங்குவதற்கு 25 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் (அதிகப்படியாக ரூ.25 இலட்சம்) கடனுக்கான வட்டியில் 3 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தப்பட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 இலட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். பயனாளிகள் பங்குத்தொகை பொதுப் பிரிவினருக்கு திட்டமதிப்பீட்டில் 10 விழுக்காடும் சிறப்புப் பிரிவினருக்கு 5 விழுக்காடும் ஆகும். தகுதி விபரம் அட்டவணை-6ல் கொடுக்கப்பட்டுள்ளது.
அட்டவணை-6
தகுதிகள் |
|
வயது |
குறைந்த பட்ச வயது 21 மற்றும் அதிகப்பட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 35க்கு மிகாமலும், சிறப்பு பிரிவினருக்கு 45க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் |
கல்வித்தகுதி |
பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ/ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழிற்சார் பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும். |
|
முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். |
தமிழகத்தில் தொழில் தொடங்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான தொழில் உரிமங்கள் மற்றும் அனுமதிகள் மாவட்டத் தொழில் மையத்தில் செயல்படும் ஒரு முனை தீர்வுக் குழு விரைந்து பெற்று அளித்திட ஆதரவளிக்கிறது.
அரசு இந்த ஒரு முனைத் தீர்வு குழுவினை சீரமைக்கவும் வலுவூட்டவும் மாவட்ட தொழில் நிறுவன மேம்பாட்டு ஆலோசகக் குழுவினை அமைத்துள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள தொழில்களை அமைக்கத் தேவையான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் பெறுவதற்கு நிறுவனங்கள் அனைத்து விண்ணப்பங்களையும் குறிப்பிடப்பட்ட பொது விண்ணப்பப் படிவத்தில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையத்திற்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் தொழில் தொடங்கிட தேவையான உரிமங்கள் மற்றும் அனுமதிகள் சம்மந்தப்பட்ட துறையின் மூலம் 60 நாட்களுக்குள் வழங்கப்படவில்லையெனில் மேற்கண்ட விண்ணப்பங்கள் மாவட்ட தொழில் நிறுவன ஆலோசனை குழு கூட்டத்தில் வைக்கப்பட்டு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகின்றன. 2014-15ஆம் ஆண்டு 695 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 649 விண்ணப்பங்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை புனரமைத்தல்
நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை புனரமைக்க உதவும் நோக்கத்துடன் பாரத ரிசர்வ் வங்கியால், ஒரு மாநில அளவிலான நிதி நிறுவனங்களுக்கிடையிலான குழு (SLIIC) அமைக்கப் பட்டுள்ளது. இக்குழு காலாண்டுக்கு ஒரு முறை கூட்டப்பட்டு நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை புனரமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு அறிக்கையினை ஆய்வு செய்து இக்குழுவின் துணைக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான புனரமைப்பு உதவிகளை முடிவு செய்யும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளரின் தலைமையில் இக்குழு காலாண்டுகளுக்கு ஒரு முறை கூடுகின்றது. பாரத ரிசர்வ் வங்கியால் நடத்தப்படும் நலிவுற்ற நிறுவனங்களின் ஆய்வறிக்கையின் பேரில் வங்கிகள் நலிவுற்ற நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதோடு அவை சந்தித்து வரும் இடர்பாடுகளை நீக்க தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.
அரசு, நலிவுற்ற நிறுவனங்களின் புனரமைப்பை மேற்கொள்ள தீர்வு நடவடிக்கைகளை எடுத்துரைக்க ஏதுவாக அவற்றின் பிரச்சனைகளையும் நலிவுற்ற தன்மையின் தீவிரத்தையும் ஆராய்வதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயலர் தலைமையில் மாநில அளவிலான புனரமைப்புக்குழு (SLRC) ஒன்றை அமைத்துள்ளது. நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் புனரமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மற்றும் கண்காணிக்கவும் இக்குழு காலாண்டு அடிப்படையில் கூட்டங்களை நடத்த வேண்டும்.
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிதி உதவி
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் வணிக வங்கிகளிடமிருந்து கடனுதவி பெறுகின்றன. இம்மாநிலத்தில் ஏப்ரல் 2014 முதல் டிசம்பர் 2014 வரையிலான காலத்தில் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு முறையே ரூ.15330.69 கோடியும், ரூ.12721.51 கோடியும், ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2014 முதல் டிசம்பர் 2014 வரை ரூ. 28052.20 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு டிசம்பர் 2014 வரை மொத்தம் வழங்கப்பட்ட முன்பணத்தொகையில் குறுந் தொழில்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட முன்பணத்தொகை 54.65 விழுக்காடு ஆகும்.
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் வசதியாக்கக் குழுக்கள்
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து தாங்கள் விற்பனை செய்த பொருள்களுக்கு உண்டான தொகையை கால தாமதமின்றி உடன் பெற்றுத்தருதல் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம் 2006ன் நோக்கங்களில் ஒன்றாகும்.
அதற்கிணங்க அரசு சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு மண்டலங்களில் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான வசதியாக்கக் குழுக்களை அமைத்துள்ளது.2.12 சோதனை சேவைகள் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பரிசோதனை மற்றும் சான்றிதழ் வழங்கி கீழ்கண்ட ஆய்வுக்கூடங்கள் சேவை செய்து வருகின்றன.
மத்திய மின் பரிசோதனை மையம், காக்களூர், திருவள்ளூர் மாவட்டம்
இரசாயன பரிசோதனை மற்றும் பகுப்பாய்வகம், கிண்டி மற்றும் மண்டல சோதனை ஆய்வுக்கூடங்கள் மதுரை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் தூத்துக்குடி.
கீழ்காணும் பயிற்சி நிலையங்கள் தொழிநுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கு ஏற்ப சான்றிதழ்கள் மற்றும் பட்டய படிப்புக்களை வழங்குகிறது.
அரசு தொழில்நுட்பப் பயிற்சி மையம், கிண்டி, சென்னை
1962ஆம் ஆண்டில் கிண்டி, சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட அரசு தொழில்நுட்ப பயிற்சி மையம் கீழ்காணும் மூன்றாண்டு பட்டயப்படிப்புகளை வழங்கி வருகிறது.
இயந்திரவியல் பொறியியல் பட்டயம் (கருவி மற்றும் அச்சு)
இயந்திரவியல் பொறியியல் பட்டயம் (குளிர்சாதனம் மற்றும் காற்று பதனம்)
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன அங்கிகாரத்துடன் நடத்தப்படும் மேற்கண்ட பட்டய படிப்புகள் மூலம் ஆண்டு ஒன்றிற்கு தோராயமாக 100 பட்டய படிப்பு மாணவர்களை இப்பயிற்சி நிறுவனம் உருவாக்குகிறது.
கருவி பொறியியல் பயிலகம், திண்டுக்கல்
1961ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிலகம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, 3 ஆண்டு கருவி மற்றும் அச்சு பட்டய படிப்பை வழங்கி வருகின்றது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற இப்பயிலகம் ஆண்டு ஒன்றிற்கு தோராயமாக 44 பட்டயபடிப்பு மாணவர்களை உருவாக்குகிறது.
பீங்கான் தொழில்நுட்பப்பயிற்சி நிலையம், விருத்தாச்சலம்
அரசு தொழில்நுட்ப கல்வி துறையின் அங்கீகாரம் பெற்ற இப்பயிற்சி நிறுவனம் 3 ஙூ ஆண்டுகள் கால அளவு கொண்ட பீங்கான் தொழில்நுட்பவியல் பட்டய பயிற்சி நடத்தி வருகிறது. இப்பயிற்சி நிலையத்தில் ஒவ்வொரு வருடமும் 50 மாணவர்களை முதலாம் ஆண்டிலும், 10 மாணவர்கள் இரண்டாம் ஆண்டிலும், பிற்சேர்க்கை மூலமாக சேர்க்ப்படுகிறார்கள்.
அரசினர் அறிவியல் கண்ணாடிப் பயிற்சி மையம், கோயம்புத்தூர்
சென்னை கிண்டியில் இருந்து கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்ட இப்பயிற்சி நிறுவனம், இரண்டாண்டு கால அளவு கொண்ட அறிவியல் கண்ணாடி உற்பத்தி செய்வதற்கு தேவையான செயல்முறை பயிற்சியினை வழங்கி வருகிறது.
அரசு அறிவியல் கண்ணாடி கருவிகள் உற்பத்தி மையம், கோயம்புத்தூர்
அரசு அறிவியல் கண்ணாடி கருவிகள் உற்பத்தி மையம் கோயம்புத்தூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சுகாதாரத் துறை, தடய அறிவியல் துறை மற்றும் வேளாண்மை துறை ஆய்வகங்களுக்கு தேவையான அறிவியல் கண்ணாடி உபகரணங்களை தயாரித்து வருகிறது.
மின் மற்றும் மின்னணு தொழில்களுக்கான அடிப்படை விவர வங்கி மற்றும் தகவல் மையம், சென்னை
குறு, சிறு மற்றும் நடுத்தரத் மின் மற்றும் மின்னணு தொழில் முனைவோர்களுக்கு பயனளிக்கும் விதமாக உதவிட இத்தகவல் தொழில் முனைவோர்களுக்கு தேவையான தொழில் நிறுவனங்கள் பற்றிய விவரம், குறிப்பிட்ட தொழில்களுக்காக தொழில் திட்ட குறிப்பேடுகளை வழங்குதல் மற்றும் மாநில அளவில் வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் குறித்த தேவையான அடிப்படை தகவல்கள் அடங்கிய கையேடுகளை பராமரித்து வருகிறது. தொழில் நுட்ப நுhலகம் ஒன்று 1517 புத்தகங்கள் மற்றும் 70 சஞ்சிகைகளைக் கொண்டுள்ளது.
பீங்கான் தொழிற்பேட்டை, விருத்தாச்சலம்
பீங்கான் தொழிலின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் பொருட்டு தனித்துவமாக பீங்கான் தொழிற்பேட்டை விருத்தாசலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பேட்டையில் 64 தொழிற்கூடங்கள் குறைந்த அழுத்த இன்சுலேட்டர்கள், பீங்கான் பொம்மைகள், உயர் வெப்பம் தாங்கக் கூடிய செங்கற்கள் போன்ற பீங்கான் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
மின் மற்றும் மின்னணு தொழிற்பேட்டைகள்
மின் மற்றும் மின்னணு தொழில் முனைவோர்களின் தேவைக்கிணங்க மாநில அரசால் 517 மேம்படுத்தப்பட்ட மனைகள் மற்றும் 140 தொழிற்கூடங்களுடன் கூடிய எட்டு தொழிற்பேட்டைகள் உள்ளன. இத்தொழிற்பேட்டைகள் திருவான்மியூர் (சென்னை மாவட்டம்) பெருங்குடி (சென்னை மாவட்டம்), காக்களூர் (திருவள்ளூர் மாவட்டம்), கப்பலூர் (மதுரை மாவட்டம்), சூரமங்கலம் (சேலம் மாவட்டம்), காளப்பட்டி (கோயம்புத்தூர் மாவட்டம்), ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) மற்றும் துவாக்குடி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
தமிழக அரசு சிறந்த சிறு தொழில் முனைவோர்களுக்கான விருதுகள் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் சிறப்பாக செயல்படும் வங்கிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் விருதுகள் கீழ்கண்ட இனங்களில் வழங்க அட்டவணை தயார் செய்யபட்டுள்ளது.
சிறந்த தொழில் முனைவோருக்கான மாநில விருது ரூ.50,000/- மற்றும் நினைவுப்பரிசு ரூ.10,000/-.
சிறந்த தொழில் முனைவோருக்கான வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கான மாநில விருது ரூ.50,000/- மற்றும் நினைவுப்பரிசு ரூ.10,000/-.
சிறந்த தொழில் முனைவோருக்கான உற்பத்திப் பொருளின் தரம் மற்றும் ஏற்றுமதிக்கான மாநில விருது ரூ.50,000/- மற்றும் நினைவுப்பரிசு ரூ.10,000/-.
சிறந்த மகளிர் தொழில் முனைவோருக்கான மாநில விருது ரூ.50,000/- மற்றும் நினைவுப்பரிசு ரூ.10,000/-.
சிறந்த தொழில் முனைவோருக்கான மாவட்ட அளவிலான நினைவுப்பரிசு ரூ.10,000/- (ஒவ்வொரு மாவட்டத்திற்கும்).
குறுந் தொழில்களுக்கு கடன் வழங்குவதில் முன்னோடி வங்கிகளுக்கான மாண்புமிகு முதலமைச்சர் விருது:
முதல் பரிசு (நினைவுப்பரிசு) ரூ. 30,000/-
இரண்டாம் பரிசு (நினைவுப்பரிசு) ரூ. 20,000/-
மூன்றாம் பரிசு (நினைவுப்பரிசு) ரூ. 15,000/-
இத்துறையின் மூலம் கைவினைஞர்கள், தொழிலாளர்கள், தொழில்நுட்ப தொழிலாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் இன்ட்கோசர்வ், சேகோசர்வ், டீசர்வ் போன்ற சங்கங்கள் மிக முக்கியமானவைகளாகும். இக்கூட்டுறவு சங்கங்களுக்கு போதுமான நிதி வசதி தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கென்று தனியாக ஒரு நிதி நிறுவனம் தாய்கோ வங்கி என அழைக்கப்படும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது.
இன்ட்கோசர்வ்
‘இன்ட்கோசர்வ்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகள் தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணையம் 1965-ல் குன்னூரில் நிறுவப்பட்டது. தலைமை நிறுவனம் தமது உறுப்பினர் தொழிற்சாலைகளின் அனைத்து செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இச்சங்கம் தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான சேமிப்பு கிடங்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உள்ளீடுகள் அளித்தல் மற்றும் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளை சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்பொழுது 15 தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் 24,780 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகின்றன. வருடத்திற்கு 188.00 இலட்சம் கிலோ தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மாநிலத்தின் மொத்த தேயிலைத்தூள் உற்பத்தியில் 17 விழுக்காடாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பகுதியினைச் சார்ந்த சிறு தேயிலை விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, நஞ்சநாட்டில் புதிய தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை ஒன்று ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவித்தார். இத்திட்டத்தற்காக, அரசானது ரூ.2 கோடியை தனது பங்காக வழங்கியுள்ளது. அதே போன்று இப்புதிய தொழிற்சாலைக்கு மானியத்துடன் கூடிய நிதியுதவியாக ரூ.2.50 கோடி நபார்டு வங்கியால் வழங்கப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டுதல் மற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்தல் ஆகிய பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
விலை நிலைநிறுத்தல் நிதியம் ஏற்படுத்துதல்
தேயிலை சந்தையில் ஏற்படும் பெரும் விலை ஏற்ற இறக்கம் காரணமாக தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதால், அவைகளுக்கு மாதந்தோறும் மிகப் பெரிய நட்டம் ஏற்படுகின்ற சூழலுக்கு தள்ளப்பட்டு, அதன் காரணமாக தங்களின் உறுப்பினர்களான சிறு தேயிலை விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு உரிய விலையினை வழங்க இயலாத சூழ்நிலை ஒவ்வொரு மாதமும் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, அரசானது ரூ.12 கோடி மதிப்பீட்டில் விலை நிலைநிறுத்தும் நிதியத்தினை அமைத்து, அதில் தனது பங்காக ரூ.8 கோடியை 2014-15ஆம் ஆண்டில் ஒரே தவணையில் தொடராச் செலவினமாகவும், மீதி ரூ.4 கோடியை இண்ட்கோசர்வ் தனது பங்காகவும் வழங்கியுள்ளது.
தேயிலை தொழில் பிரிவில் சிறு தேயிலை விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பசுந்தேயிலை எடையிடுதலை மேம்படுத்துதல்
பசுந்தேயிலை சேகரிப்பு மற்றும் நியாயமான, கணக்கிடுதல் முறையை ஒளிவுமறைவற்ற வகையில் மேற்கொள்ள (குறைந்த கால அளவு மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்ளவும்) அரசானது 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டுகளில் அனைத்துத் தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கும் 200 மின்னணு தராசுகள் கொள்முதல் செய்து நிறுவ ரூ.113 இலட்சம் மானியமாக வழங்கியது.
மின்சக்தி சிக்கன நடைமுறைகள்
தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் மின் சிக்கன நடைமுறை திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, மின்திறன் சேமிப்பு கருவிகள் கொள்முதல் செய்து நிறுவ அரசு இரண்டு கட்டங்களாக ரூ.105 இலட்சத்தை விடுவித்துள்ளது.
டீசர்வ்
‘டீசர்வ்’ என்று பரவலாக அழைக்கப்படும் தேயிலை உற்பத்தியாளர்கள் சேவை தொழிற் கூட்டுறவு சங்கமானது, நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிறுவப்பட்ட நாட்டின் முதல் மின்னணு தேயிலை ஏல மையமாகும். இச்சங்கம் 2002-ல் பதிவு செய்யப்பட்டு, 2003 முதல் செயல்படத் துவங்கியது. தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள், தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள், எஸ்டேட் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் டான்டீ ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். தேயிலை ஏல முறையில் நியாயமான, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கத்தின் மூலம் உற்பத்தியாளர்களின் தேயிலைத் தூளுக்கு அதிக விலை கிடைக்க செய்வதுடன், அதன் மூலம் சிறு தேயிலை விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்கவும் வழிவகை செய்கிறது.
சேகோசர்வ்
‘‘சேகோசர்வ்’ என்று பொதுவாக அனைவராலும் அழைக்கப்படும் சேலம் ஸ்டார்ச் மற்றும் சவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழிற்கூட்டுறவு சங்கம் மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்யும் மாவட்டங்களிலுள்ள சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதற்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 1981-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இச்சங்கம் துவங்கப்படுத்துவதற்கு முன்பு, சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு உற்பத்தியாளர்கள் குறிப்பாக சிறு தொழில் நிறுவனங்கள், அமைப்பு சார்ந்த சந்தை வாய்ப்பு இல்லாததினால், வியாபார இடைத்தரகர்களின் சுரண்டல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். உற்பத்தியாளர்களின் இவ்வாறான துயரினை போக்கவும், அவர்களது உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் நிறுவப்பட்ட சேகோசர்வ் சங்கமானது, தனது உறுப்பினர்களுக்கு நிதி உதவி மற்றும் சேமிப்பு கிடங்கு வசதிகளையும் வழங்கி வருகிறது.
1960-ம் ஆண்டுகளில், தொழிற் கூட்டுறவு சங்கங்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு நிதியுதவி பெறுவதில் கூட பெரும் சிரமங்களை சந்தித்து வந்தன. இத்தகைய இடர்பாடுகளை நீக்கும் பொருட்டும், அச்சங்கங்களுக்கு நிதி வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டும், தாய்கோ வங்கி என்று பிரபலமாக அழைக்கப்படும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியானது 1961-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இத்துறையின் கீழ் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் தொழிற் கூட்டுறவு சங்கங்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இவ்வங்கி துவங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் இவ்வங்கியானது தமது சேவைகளை அனைத்து பிரிவினருக்கும் விரிவு செய்துள்ளது. தற்போது தாய்கோ வங்கியானது தனிநபர்களுக்கும் பல்வேறு கடன் வசதிகளை வழங்கி வருகிறது. மேலும் இவ்வங்கி, பொது மக்களிடமிருந்து வைப்புத் தொகைகளைப் பெற்றும், அவர்களுக்கென சேமிப்பு மற்றும் வியாபார கணக்கு வசதிகளை வழங்கியும் வருகிறது. இவ்வங்கியானது மாநிலத்தில் அரசுத் துறைகளின் கடன் வழங்கும் திட்டங்களை செயல்படுத்துவதிலும் பங்கேற்று வருகிறது. 417 சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கும் இவ்வங்கி, அரசின் பங்குத்தொகை ரூ.268.30 இலட்சம் உட்பட மொத்தம் ரூ.631.44 இலட்சத்தை பங்கு மூலதனமாகக் கொண்டு இயங்கி வருகிறது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இவ்வங்கி மொத்தம் 44 கிளைகளை கொண்டு மாநிலம் முழுவதும் இயங்குகிறது.
உறுப்பினர் கயிறு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் கயிறு பொருட்களை சந்தைப்படுத்தவும், அச்சங்கங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை கொள்முதல் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்துடனும் மாநில அளவில் தமிழ்நாடு கூட்டுறவு கயிறு விற்பனை இணையம் என்று அழைக்கப்படும் “டான்கோபெட்” என்ற கயிறு விற்பனை இணையம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்பொழுது, இத்துறையின் கீழ் 66 கயிறு தொழிற் கூட்டுறவு சங்கங்கள், அரசின் பங்கு ரூ.252.47 இலட்சம் உட்பட ரூ.281.96 இலட்சத்தை மொத்த பங்கு மூலதனமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. கயிறு தொழிலானது 11,073க்கும் மேற்பட்ட தொழிலாளர் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. இதில் 80 விழுக்காடு மகளிராவர்.
சந்தை மேம்பாட்டு நிதி உதவி என்ற திட்டத்தினை கயிறு வாரியம் 2000-2001 ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டமானது கயிறு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் கயிறு பொருட்களை சந்தைப்படுத்துவதோடல்லாமல், அச்சங்கங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் இதர சட்டப்பூர்வ பயன்களை பெறச் செய்து, அதன் மூலம் உற்பத்தியினை ஊக்குவித்து, பெருமளவில் வேலைவாய்ப்பினையும் நல்கி வருகிறது.
இதர தொழிற் கூட்டுறவு சங்கங்கள்
தொடர்ச்சியான வேலைவாய்ப்பினை வழங்கும் பொருட்டு, செங்கல் உற்பத்தி, பாலித்தீன் பை தயாரித்தல், ஆட்டோ சேவை, அச்சக உற்பத்தியாளர்கள் சேவை, ஒப்பந்தத் தொழிலாளர் சேவை, கைவினைத்தொழில், தையல் தொழில், பொறியியல் ஆகிய பிற பிரிவுகளிலும் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் இத்துறையால் துவங்கப்பட்டுள்ளன. இச்சங்கங்களின் மூலம், நலிந்த பிரிவினைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்வாறான தொழிற் கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதன் மூலம், திறன் மற்றும் பகுதி திறன் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் நிலையான வேலைவாய்ப்புகள் கிடைப்பதோடு அல்லாமல், சட்ட ரீதியான பலன்களை பெறவும் வழிவகை செய்யப்படுகிறது.
பாரம்பரிய தொழில்களை புத்துயிர் ஊட்டும் நிதியுதவி வழங்கும் திட்டம் (SFURTI)
கயிறு தொழில் உட்பட பாரம்பரிய மிக்க தொழில்களின் உற்பத்தி திறனையும், அதன் சந்தை வாய்ப்பினையும் அதிகரித்து இதர தொழில்களுடன் போட்டியிடும் செயல்பாட்டினை ஊக்குவித்து அதன் மூலம் அவ்வகையான தொழில்களை வளர்ச்சி அடையச் செய்யும் பொருட்டு, மத்திய அரசானது பாரம்பரிய தொழில்களை புத்துயிர் ஊட்டும் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை (ஸ்பூருட்டி) உருவாக்கியது. இத்திட்டத்தின் கீழ் உபகரணங்களை மாற்றியமைத்தல், பொது வசதி மையங்கள் அமைத்தல், திறன் வளர்த்தல், வடிவமைத்தல், சிப்பமிடுதல், சந்தை வாய்ப்பினை மேம்படுத்தல் மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. XII-வது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் ஸ்பூருட்டி திட்டத்தின் கீழ் 9 கயிறு குழுமங்கள் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், புதுக்கோட்டை, மற்றும் திருநெல்வேலி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இக்கயிறு குழுமங்களில் நார்கழிவு கட்டிகள் தயாரித்தல், கயிறு பிரஷ், ஊசிவலை மெத்தை தயாரித்தல், தோட்ட வேலை சாதனங்கள், கயிறு ஆபரணங்கள், கயிறு ஒட்டுப்பலகை, தானியங்கி இயந்திரம் மூலம் கயிறு திரித்தல் மற்றும் கயிறு ஜீயோ டெக்ஸ்டைல்ஸ் தயாரித்தல் போன்ற உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இக்குழுமங்களில் கண்டறியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவ்வாய்வறிக்கைகள் மத்திய அரசின் வழிகாட்டுதல் குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆரம்ப மொத்தத் திட்ட மதிப்பீட்டு தொகையான ரூ.8.81 கோடிக்கு பதிலாக, ரூ.25.86 கோடிக்கு மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கயிறு குழுமத்தின் வழிகாட்டுதல் குழுவானது மார்ச் 2014-இல் நடைபெற்ற கூட்டத்தில் கண்டறியும் ஆய்வு அறிக்கைகளின் நிலைத்தன்மை மற்றும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்துள்ளது. இதற்கிடையில், மத்திய அரசானது மறுசீரமைக்கப்பட்ட வழிமுறைகளை வெளியிட்டு அதனடிப்படையில் கயிறு வாரியம் இட்காட் நிறுவனத்தை தொழில்நுட்ப முகவராக நியமித்துள்ளது. இந்த இட்காட் நிறுவனம் தற்பொழுது விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான தொடக்க பணிகளை மேற்கொண்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு உருவாக்கம்
XI-ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் இத்துறையால் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை அட்டவணை-7ல் கொடுக்கப் பட்டுள்ளது.
அட்டவணை – 7
ஆண்டு |
வேலை வாய்ப்பு உருவாக்கம் |
2007-08 |
150599 |
2008-09 |
110346 |
2009-10 |
146029 |
2010-11 |
330145 |
2011-12 |
320165 |
மொத்தம் |
1057284 |
XII-ஆம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் சுமார் 15 இலட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், XII ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 31.03.2015 வரையிலான காலத்தில் மாநிலத்தில் 10.34 இலட்சம் நபர்களுக்கு அட்டவணை-8ல் கொடுக்கப்பட்டுள்ளவாறு வேலைவாய்ப்பு உருவாக்க பட்டுள்ளது.
அட்டவணை- 8
வருடம் |
வேலை வாய்ப்பு உருவாக்கம் |
2012-13 |
3,38,435 |
2013-14 |
3,43,665 |
2014-15 |
3,52,152 |
மொத்தம் |
10,34,252 |
குறு, சிறு மற்றும் நடுத்தரக் கொள்கை 2008-ன்படி 2011-12 முதல் 2014-15 வரை வழங்கப்பட்ட மானிய திட்டங்களின் விவரம்
i. முதலீட்டு மானியம்
2011-12 முதல் 2014-15 வரை, அட்டவணை-9ல் உள்ளவாறு 5930 பயனாளிகளுக்கு ரூ.25000 இலட்சங்கள் மூலதன மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2014-15ல் மட்டும் 1460 பயனாளிகளுக்கு ரூ.7000 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அட்டவணை – 9
வருடம் |
நிதி ஒதுக்கீடு |
செலவு செய்யப்பட்டது |
நிறுவனங்களின் எண்ணிக்கை |
(ரூபாய் இலட்சத்தில்) |
|||
2011-12 |
5000.00 |
5000.00 |
1316 |
2012-13 |
6000.00 |
6000.00 |
1613 |
2013-14 |
7000.00 |
7000.00 |
1541 |
2014-15 |
7000.00 |
7000.00 |
1460 |
மொத்தம் |
25000.00 |
25000.00 |
5930 |
ii. குறைந்தழுத்த மின் மானியம்
2011-12 முதல் 2014-15 வரை, அட்டவணை-10ல் உள்ளவாறு 4776 பயனாளிகளுக்கு ரூ.2400 இலட்சங்கள் குறைந்தழுத்த மின் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2014-15ல் மட்டும் 1106 பயனாளிகளுக்கு ரூ.600 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அட்டவணை – 10
வருடம் |
நிதி ஒதுக்கீடு |
செலவு செய்யப்பட்டது |
நிறுவனங்களின் எண்ணிக்கை |
(ரூபாய் இலட்சத்தில்) |
|||
2011-12 |
600.00 |
600.00 |
1371 |
2012-13 |
600.00 |
600.00 |
1130 |
2013-14 |
600.00 |
600.00 |
1169 |
2014-15 |
600.00 |
600.00 |
1106 |
மொத்தம் |
2400.00 |
2400.00 |
4776 |
iii. மின்னாக்கி மானியம்
2011-12 முதல் 2014-15 வரை, அட்டவணை-11-ல் உள்ளவாறு 4210 பயனாளிகளுக்கு ரூ.4748.09 இலட்சங்கள் மின்னாக்கி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2014-15ல் மட்டும் 734 பயனாளிகளுக்கு ரூ.800 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அட்டவணை – 11
வருடம் |
நிதி ஒதுக்கீடு |
செலவு செய்யப்பட்டது |
நிறுவனங்களின் எண்ணிக்கை |
(ரூபாய் இலட்சத்தில்) |
|||
2011-12 |
800.00 |
800.00 |
852 |
2012-13 |
2348.09 |
2348.09 |
1936 |
2013-14 |
800.00 |
800.00 |
666 |
2014-15 |
800.00 |
800.00 |
734 |
மொத்தம் |
4748.09 |
4748.09 |
4188 |
iv. மதிப்பு கூட்டு வரிக்கு ஈடான மானியம்
2011-12 முதல் 2014-15 வரை, அட்டவணை-12ல் உள்ளவாறு 1165 பயனாளிகளுக்கு ரூ.1300 இலட்சங்கள் மதிப்பு கூட்டு வரிக்கு ஈடான மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2014-15ல் மட்டும் 365 பயனாளிகளுக்கு ரூ.350 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அட்டவணை – 12
வருடம் |
நிதி ஒதுக்கீடு |
செலவு செய்யப்பட்டது |
நிறுவனங்களின் எண்ணிக்கை |
(ரூபாய் இலட்சத்தில்) |
|||
2011-12 |
250.00 |
250.00 |
285 |
2012-13 |
350.00 |
350.00 |
234 |
2013-14 |
350.00 |
350.00 |
281 |
2014-15 |
350.00 |
350.00 |
365 |
மொத்தம் |
1300.00 |
1300.00 |
1165 |
v. பின்முனை வட்டி மானியம்
அ. தொழில் நுட்ப மேம்பாடு நவீன மயமாக்கல்
2011-12 முதல் 2014-15 வரை, அட்டவணை-13ல் உள்ளவாறு 346 பயனாளிகளுக்கு ரூ.388.35 இலட்சங்கள் தொழில் நுட்ப மேம்பாடு, நவீன மயமாக்கல் - பின்முனை வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2014-15ல் மட்டும் 60 பயனாளிகளுக்கு ரூ.30 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அட்டவணை -13
வருடம் |
நிதி ஒதுக்கீடு |
செலவு செய்யப்பட்டது |
நிறுவனங்களின் எண்ணிக்கை |
(ரூபாய் இலட்சத்தில்) |
|||
2011-12 |
303.87 |
303.87 |
172 |
2012-13 |
24.48 |
24.48 |
89 |
2013-14 |
30.00 |
30.00 |
25 |
2014-15 |
30.00 |
30.00 |
60 |
மொத்தம் |
388.35 |
388.35 |
346 |
ஆ. கடன் உத்தரவாத நிதிகுழும திட்டம்
2011-12 முதல் 2014-15 வரை, அட்டவணை-14ல் உள்ளவாறு 135 பயனாளிகளுக்கு ரூ.44.62 இலட்சங்கள் - கடன் உத்தரவாத நிதிகுழும திட்ட-பின்முனை வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2014-15ஆம் ஆண்டில் மட்டும் 53 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அட்டவணை-14
வருடம் |
நிதி ஒதுக்கீடு |
செலவு செய்யப்பட்டது |
நிறுவனங்களின் எண்ணிக்கை |
(ரூபாய் இலட்சத்தில்) |
|||
2011-12 |
14.74 |
14.74 |
33 |
2012-13 |
10.00 |
9.88 |
22 |
2013-14 |
10.00 |
10.00 |
27 |
2014-15 |
10.00 |
10.00 |
53 |
மொத்தம் |
44.74 |
44.62 |
135 |
இ. தேசிய விளிம்பு நிதி திட்டம்
2011-12 முதல் 2014-15 வரை, அட்டவணை-15ல் உள்ளவாறு 362 பயனாளிகளுக்கு ரூ.10.725 இலட்சம் தேசிய விளிம்பு நிதி திட்ட - பின்முனை வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
அட்டவணை – 15
வருடம் |
நிதி ஒதுக்கீடு |
செலவு செய்யப்பட்டது |
நிறுவனங்களின் எண்ணிக்கை |
(ரூபாய் இலட்சத்தில்) |
|||
2011-12 |
8.85 |
8.85 |
284 |
2012-13 |
1.875 |
1.875 |
78 |
2013-14 |
0.00 |
0.00 |
- |
2014-15 |
0.00 |
0.00 |
- |
மொத்தம் |
10.725 |
10.725 |
362 |
பல்வேறு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் சாதனைகள் (2011-12 முதல் 2014-15 வரை)
i. பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)
2011-12 முதல் 2014-15 வரை, அட்டவணை-16ல் உள்ளவாறு 5168 பயனாளிகளுக்கு ரூ.10,362.03 இலட்சங்கள் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2014-15ல் மட்டும் 1256 பயனாளிகளுக்கு ரூ.2827.71 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அட்டவணை – 16
நிதியாண்டு |
எண்ணிக்கை |
விடுவிக்கப்பட்ட விளிம்பு தொகை (ரூ. இலட்சத்தில்) |
2011-12 |
1560 |
2909.03 |
2012-13 |
1316 |
2258.40 |
2013-14 |
1036 |
2366.89 |
2014-15 |
1256 |
2827.71 |
மொத்தம் |
5168 |
10,362.03 |
ii. வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)
இத் திட்டத்தின் கீழ் 2011-12 முதல் 2014-15 வரை, அட்டவணை 17-ல் உள்ளவாறு, 17758 பயனாளிகளுக்கு ரூ.6121.79 இலட்சம், வழங்கப் பட்டுள்ளது. நிதியாண்டு 2014-15ல் மட்டும் 3465 பயனாளிகளுக்கு ரூ.1817.68 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அட்டவணை – 17
நிதியாண்டு |
எண்ணிக்கை |
வழங்கப்பட்ட மானியம் (ரூ. இலட்சத்தில்) |
2011-12 |
4750 |
1314.17 |
2012-13 |
4892 |
1490.41 |
2013-14 |
4651 |
1499.53 |
2014-15 |
3465 |
1817.68 |
மொத்தம் |
17758 |
6121.79 |
2011-12 முதல் 2014-15 வரை அட்டவணை 18-ல் உள்ளவாறு, 92 வசதியாக்க குழு அமர்வுகளின் மூலமாக 260 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையாக சுமார் ரூ.1420.96 இலட்சம் பெற்று வழங்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2014-15ல் மட்டும் 27 வசதியாக்க குழு அமர்வுகளின் மூலமாக 45 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையாக சுமார் ரூ.233.93 இலட்சம் பெற்று வழங்கப்பட்டுள்ளது.
அட்டவணை – 18
வருடம் |
குறு சிறு தொழில் நிறுவனங்கள் வசதியாக்க குழு அமர்வுகளின் எண்ணிக்கை |
தீர்வு காணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை |
தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிலுவைத் தொகை (ரூ.இலட்சத்தில்) |
2011-12 |
15 |
38 |
233.86 |
2012-13 |
35 |
115 |
396.65 |
2013-14 |
15 |
62 |
556.52 |
2014-15 |
27 |
45 |
233.93 |
மொத்தம் |
92 |
260 |
1420.96 |
2012-13 முதல் 2014-15 வரை, அட்டவணை-19-ல் உள்ளவாறு, 846 பயனாளிகளுக்கு ரூ.7716.70 இலட்சம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
அட்டவணை – 19
பொருள் |
2012-13 |
2013-14 |
2014-15 |
மொத்தம் |
||||
எண் |
மானியம் |
எண் |
மானியம் |
எண் |
மானியம் |
எண் |
மானியம் |
|
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்கள் |
559 |
6531.39 |
1247 |
12380.70 |
1397 |
11720.17 |
3203 |
30632.26 |
தற்காலிக கடன் ஒப்பளிப்பு |
305 |
3902.94 |
744 |
7847.27 |
826 |
7673.00 |
1906 |
19423.21 |
தொழில் முனைவோர் பயிற்சி பெற்றோர் |
284 |
- |
645 |
- |
789 |
- |
1718 |
- |
இறுதி கடன் ஒப்பளிப்பு பெறப்பட்டவை |
224 |
2504.57 |
482 |
4335.52 |
172 |
995.42 |
846 |
7716.70 |
மானியம் |
218 |
2385.76 |
456 |
4335.52 |
172 |
995.42 |
846 |
7716.70 |
ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்