பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பொருளாதார வளர்ச்சிக்கு மற்றும் நிகரான மேம்பாட்டிற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். குறைந்த மூலதனத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதே இப்பிரிவின் மேன்மையாகும். பெருந்தொழில் நிறுவனங்களைவிட இந்நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் தொழில் முனைவோரின் தனித்திறன் மற்றும் ஆக்கப்பூர்வத்திறனின் வளர்ப்பிடமாக திகழ்கின்றன.

நம் நாட்டின் மொத்த தொழில்களின் பொருளாதார வளர்ச்சியிலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய மொத்த உற்பத்தியில் 8 சதவீதமும், உற்பத்தி திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும் இந்நிறுவனங்கள் பங்களிக்கின்றன. 2.6 கோடி நிறுவனங்கள் வாயிலாக, 6 கோடி நபர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கின்றன.

சமீப காலங்களில் மொத்த தொழில் பிரிவில் இந்நிறுவனங்கள் உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளன. இப்பிரிவானது காலத்திற்கு ஏற்றவாறு விரைவில் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையின் மூலமும், முன்னோடித் திறன் மூலமும் சமீபத்தில் பொருளாதார நெருக்கடியில் சமாளித்து நிலைநிறுத்தி கொள்ள முடிந்தது. தேசிய நோக்கமான ஒருங்கிணைந்த சம வளர்ச்சியடைவதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாகும்.

நம் நாட்டிலேயே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி எண்ணிக்கை அதிக அளவில் 15.07 சதவிதம் அதாவது 6.89 இலட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இவை ரூ.32.008 கோடி மேலான மொத்த முதலீட்டில் 8,000 வகையான பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்கின்றன.

வாகன உதிரிபாகங்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்களின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. சிறப்பு உற்பத்தி தொழில் பிரிவுகளை ஊக்குவிப்பதன் பொருட்டு கீழ்க்கண்ட 13 தொழில்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தொழில்கள்

 1. மின் மற்றும் மின்னணு பொருட்கள்
 2. தோல் மற்றும் தோல் பொருட்கள்
 3. வாகன உதிரி பாகங்கள்
 4. மருந்து மற்றும் மருந்து பொருட்கள்
 5. சூரிய சக்தி பயன்பாட்டு உபகரணங்கள்
 6. ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைகள்
 7. மாசுக்கட்டுப்பாடு உபகரணங்கள்
 8. விளையாட்டு பொருட்கள் மற்றும் உபகரணங்கள்
 9. சிக்கன கட்டுமான பொருட்கள்
 10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு
 11. உணவு பதப்படுத்துதல்
 12. பிளாஸ்டிக் மற்றும்
 13. இரப்பர்

தொழில் மற்றும் வணிகத் துறை, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சிட்கோ), மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் (டான்சி) ஆகியன குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில் அனுமதி மற்றும் மானியம் வழங்குதல், தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், தொழிலாளர்களுக்கு தேவையான தளவாடங்களை வழங்குதல் போன்ற முக்கிய பணிகளை செய்துவருகின்றன. இ.டி.ஐ. என்று அழைக்கப்படும் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், சிறு தொழில் நிறுவனங்களின் பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு தனி நிறுவனம் அவசியம் என்ற நெடுநாள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்டது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு, தொழில்துறை.

2.68421052632
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top