பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / தொழில் கடனுதவி நிறுவனங்கள் / தொழில் வளர்ச்சிக்கு உதவும் MSME-DI,CHENNAI
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழில் வளர்ச்சிக்கு உதவும் MSME-DI,CHENNAI

தொழில் வளர்ச்சிக்கு உதவும் MSME-DI,சென்னை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

MSME DI : Micro Small and medium Enterprises Development institute, 1954 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.

தொழில் முனைவுச் சிந்தனை உள்ள பலரும் செயல்பாட்டில் இறங்காமல் நினைவுகளுடனேயே நின்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட ஆர்வமுள்ளவர்களுக்கு தயக்கம் போக்கி சரியான தொழில் ஆலோசனைகளைத் தந்து அதற்குரிய தொழிற் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது MSME-DI.

பெரிய நிறுவனங்களுக்கு அடித்தளங்கள் வலுவாக உள்ளதால் அவைகளின் வளர்ச்சி விரிவாகவும் , வேகமாகவும் அமைந்து விடுகிறது. ஆனால் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் நிலை எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவதற்கு மிகவும் போராட வேண்டியுள்ளது. இத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு குழந்தையைக் காப்பாற்றும் தாயினைப் போல உதவுவதில் MSME-DI -ன் பங்கு குறிப்பிடத்தக்கது.

MSME -DI யின் சேவைகள்

 1. தொழில்நுட்ப பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் ( Technical /டெக்னாலஜி Training & consultancy/ counselling) வழங்குகிறது.
 2. திறன் மேம்பாடு பயிற்சிகளை (Skill Development Programme) வழங்குகிறது. தொழில் சார்ந்த கருத்தரங்குகளை (Seminar / Workshop)நடத்துகிறது .
 3. தொழில் சார்ந்த சந்திப்புகளையும், கண்காட்சிகளையும் (Trade Fair / Exhibitions / B2B Meet ) நடத்துகிறது .
 4. குறு, சிறு தொழில் நிறுவனங்கள் MSME-DI யில் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்து MSME / SSI Registration certificate-ஐ பெறலாம்
 5. வாய்ப்புகளை தேடித் தருவதிலும், அரசு தரும் உதவிகளான அரசு நிதியுதவி, மானியங்கள், கடன் வாய்ப்புகள், சலுகைகள், போன்றவைகளை பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை உதவி முதல் தொடரும் தொழில் வளர்ச்சியின் மேம்பாட்டிற்கான ஒவ்வொரு அம்சத்திலும் MSME-DI யை தொழில் முனைவோருக்கு நல்ல தோழனைப் போல உதவி செய்கிறது.
 6. குழும நிறுவனங்களின் ( MSE Clusters) உருவாக்கத்திற்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.
 7. உற்பத்தி (Productivity) திறன் மேம்பாடு, பொருட்களை சந்தைப்படுத்துதல் (Marketing), ஆய்வுக் கூடங்கள் (Laboratories) அமைத்தல், சிறந்த கட்டமைப்புகளை (Infrastructure) உருவாக்குதல், புதிய படைப்பு, பரிசோதனை கூடங்கள் அமைத்தல், மூலப்பொருட்கள் கிட்டங்கி (Raw material Warehouse) அமைத்தல், பன் நோக்கு அணுகுமுறை, கூட்டுச் செயல்பாடு ,பொது விநியோகம், எளிதாக கூட்டு முயற்சியில் பொருட்களை சந்தைபடுத்துதல், வர்த்தக அமைப்புகளுக்கென பொது குறியீடுகள், போட்டிகளை சமாளிக்கும் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Research And Development) போன்றவைகளை செயல்படுத்துவதற்கான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறது. மேலும் இவற்றை செயல்படுத்துவதற்கான மானியங்கள் மற்றும் நிதியுதவியை பெற்று தருகிறது.
 8. தொழில் முனைவோர் தங்கள் உற்பத்தி பொருட்களை தேர்வுசெய்வதற்கும் (Selection of Products), மற்றும் தொழில் அமைப்பதற்கான இடத்தினை (Location) தேர்வுச் செய்வதற்கும் வழிகாட்டுகிறது.
 9. உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கிடையே சந்திப்புகளை (Buyer And Seller Meet) நடத்துகிறது இதன் மூலம் சிறு மற்றும் குறு நிறுவன உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களின் வாடிக்கையாளரை கண்டறிவதற்கு MSME-DI உதவுகிறது . சிறு, பெரு மற்றும் குறு நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்புகளை MSME-DI வழங்குகிறது.
 10. பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு (Marketing Assistance) உதவுகிறது.
 11. உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்வதற்கும், தங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் (Raw Material) மற்றும் இயந்திரங்களை (Machinery) இறக்குமதி (Import) செய்வதற்கும் வழிகாட்டுகிறது.

MSME-DI,Chennai நடத்தும் தொழில்நுட்ப பயிற்சிகள்

தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி என்று 100 வகை சுய தொழில் பயிற்சிகளைக் குறைந்த கட்டணத்தில் MSME-DI பயிற்சிகளை நடத்துகிறது .

 • இரசயானம் (Chemical), உணவுப் பொருட்கள் (Food Products), இயந்திரவியல் (Mechanical), மின்சாரம் மற்றும்

மின்னணுப் (Electrical & Electronics) சார்ந்த பயிற்சிகள்.

 • தோல் (Leather) சார்ந்த பொருட்கள், மண்பாண்டம் (Ceramics) மற்றும் கண்ணாடி (Glass) பொருட்கள், சூரிய ஒளி மின்சாரம் (Solar Power) சார்ந்த பயிற்சிகளையும் மேலும் பல பயிற்சிகளையும் வழங்குகிறது.

MSME-DI,Chennai யின் கிளைகள்(Branch)

 1. கோயம்முத்தூர் (Coimbatore),
 2. தூத்துக்குடி (Tuticorin) ,
 3. திருநெல்வேலி (Tirunelveli)

MSME-DI,Chennai யின் முகவரி :-

MSME Devlopement Institute,

Govt. of India, Ministry of MSME,

65/1, G.S.T. Road, Guindy,

Chennai-600 032.

Tamil Nadu.India.

Phone     : 044-2250 1011/12/13

Fax         : 044-2250 1014

Email      : dcdi-chennai@dcmsme.gov.in

Web Site : http://www.msmedi-chennai.gov.in/

3.19594594595
Barveen Aug 03, 2020 10:25 PM

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்

V kuppabai Jul 29, 2020 10:34 AM

ஐயா நாங்கள் விரள் மஞ்சள் ஏற்றுமதி பண்ண விறுப்பம் அதற்கு எங்களுக்கு எந்த வசதியும் தகவலும் தெரியவில்லை

Joyal Jun 15, 2020 09:09 AM

பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு நாங்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் யாரை தொடர்பு கொள்வது

மணிவேல் Jun 04, 2020 01:31 PM

நான் msme சான்று இருக்க நான் எம்பராடிங்க மிசின் போட்டுருக்கன் இப்ப எனக்கு லோன் உதவி தேவை படுகிறது யாரிடம் அணுகுணும்ணு தெரியவில்லை

ராஜாராம் Apr 22, 2020 05:28 PM

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள நாங்கள் எங்கே விண்ணப்பிக்க வேண்டும் ஐயா ...... 80*****33

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top