பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாவட்ட சிறுதொழில் மையம் (SIDCO)

மாவட்ட சிறுதொழில் மையம் (சிட்கோ) நிறுவனம் மூலம் யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சம் 5 லட்சம், சேவை தொழிலுக்கு 3 லட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.

வங்கிகள்

 • வணிக வங்கிகள்,
 • அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,
 • தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள்

கல்வித்தகுதி

குறைந்த பட்சம் 8ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தியான தனி நபர் விண்ணப்பிக்கலாம். வயது தகுதி - பொதுப்பிரிவினர் 35; சிறப்பு பிரிவு, எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் படை வீரர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் மற்றும் மானியம்

ஆண்டு வருவாய் 1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பில் 10 சதவீதம், சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் பங்களிப்பு செலுத்த வேண்டும். கடன் தொகையில் தமிழக அரசு 15 சதவீதம் மானியம் வழங்குகிறது.

கடன் திட்டத்துக்கான விண்ணப்பம், ஆவண இணைப்பு மற்றும் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள தொழில் திட்டங்களை, மாவட்ட தொழில் மைய வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.

தொழில்கள்

ரெடிமேடு ஆடை, பாக்கு மட்டை, டிஜிட்டல் பிரின்டிங், காலணி உற்பத்தி, ஹாலோ பிளாக் உற்பத்தி, லேத் பட்டறை, லேபிள் பிரின்டிங், கோன் வைண்டிங், நெட் சென்டர், விசைத்தறி, போட்டோ பிரேம் கடை, போட்டோ ஸ்டுடியோ, அழகு நிலையம், பர்னிச்சர் மற்றும் வாடகை பாத்திர கடை, டாக்ஸி, ஜெராக்ஸ், மொபைல் போன் சர்வீஸ், மளிகை கடை

விண்ணப்பங்கள்

அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அவற்றை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள்

 1. பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் நகல்,
 2. சுயதொழில் தொடங்குவதற்காக வாங்கப்படும் இயந்திரங்கள்,
 3. தளவாடங்களுக்கான விலை மதிப்பீடு (கொட்டேஷன்), சாதிச்சான்றிதழ் நகல்,
 4. திட்ட அறிக்கை (புராஜக்ட் ரிப்போர்ட்),
 5. குடும்ப அட்டை நகல்,
 6. குடும்ப அட்டை இல்லையென்றால் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்று,
 7. முன்னாள் ராணுவத்தினர் அல்லது மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்று,
 8. பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படங்கள்,
 9. உறுதி மொழிப் பத்திரம்

ஆதாரம் : மாவட்ட சிறுதொழில் மையம் (சிட்கோ)

3.16408668731
அசோக்குமார் Jun 24, 2020 12:05 PM

விசைத்தறி பயிற்சி மையம் எங்கு இருக்கு

Suresh Jun 04, 2020 02:12 PM

அகற்பத்தி தொழில் பற்றி தகவல் கூறுங்கள்

K sekar May 13, 2020 12:24 PM

ஐயா நான் நாமக்கல் மாவட்டம் இங்கு என்னா தொழில் செய்யலாம் அதற்கு பயிற்ச்சி ஆரசு மானியம் தெரிய வேண்டும் ஐயா

Vijayakumar erode dt 9659541312 Mar 26, 2020 10:37 AM

அகர்பத்தி கற்பூரம் சோப்பு சோப்புத்தூள் லிகுய்ட் detergent etc இது போன்ற தொழில் பயிற்சிகள் மாவட்ட தொழில் பயற்சி மையத்தில் உண்டா, ஆம் எனில் அதற்கான மையம் எங்கு உள்ளது, உதவி செய்யக -96*****12

மகேந்திரன் Feb 03, 2020 01:10 PM

இதற்கு வட்டி விகிதம்?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top