பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / தொழில் கடனுதவி நிறுவனங்கள் / வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை - நுண் கடன் திட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை - நுண் கடன் திட்டங்கள்

வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறையில் வழங்கப்படும் நுண் கடன் திட்டங்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நுண் கடன் உதவித் திட்டங்கள், ஏழை எளிய மக்களுக்கும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கும் மற்றும் அவர்கள் சிறு தொழில்கள் தொடங்குவதற்கும் உதவுகின்றன.

நுண் கடன் உதவித் திட்டத்தைப் பெறுவதற்கான வழிகள்

  • கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவுகள்
  • அரசு சாரா நிறுவனங்கள்
  • மற்ற நிதி உதவி செய்யும் நிறுவனங்கள்

கடந்த இருபது வருடங்களாக, நுண் கடன் திட்டங்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இதற்கு வளர்ந்து கொண்டிருக்கும் மற்றும் வளர்ந்த நாடுகளும், அரசு சாரா நிறுவனங்களும், தனியார் வங்கிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நுண் கடன் திட்டத்திற்கான முக்கியக் காரணங்கள்

நுண் கடன் திட்டங்கள் ஏழை எளிய மக்களின் வளர்ச்சியிலும், ஏழ்மை நிலையைக் குறைப்பதிலும், ஏழைகளின் சேமிப்பு, கடன் மற்றும் காப்பீடுகளிலும், கிராமப்புறப் பெண்களின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நுண்கடன் திட்டங்கள் அவர்களின் கால வரையற்றவளர்ச்சிக்கு வித்திடுகின்றன. நுண் கடன் திட்டங்கள் அனைத்து நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி வர்த்தகங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் அனைத்து வகையிலும் நிதி நிலைமையை சரி செய்கின்றன.

நுண் கடன் திட்ட சேவையின் தேவைகள்

ஒரு தொகுதியிலுள்ள ஏழை, எளிய மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்கள் மற்றும் அவர்களின் சிறுதொழில்கள் ஆகியவை பலதரப்பட்ட வகையைச் சார்ந்தவை. நுண்கடன் திட்டத்தில் உள்ள பலதரப்பட்ட சேவைகளும் அவர்களின் தேவைகளை பிரதிபலிக்கின்றன. அந்த மக்களின் நிதிக்கான தேவைகள் அதிக அளவில் உள்ளது. மேலும் அத் தேவைகள் குடும்பத்திற்குக் குடும்பம் மாறுபட்டவையாகவும் மற்றும் நேரத்திற்கு நேரம் மாறுபவையாகவும் உள்ளன. ஏழை, எளிய மக்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் அந்தத் தொகுதியில் சிறுதொழில்களைத் தொடங்க, பாதுகாப்பான சேவைகள் மற்றும் சேமிப்புகள் தேவைப்படுகின்றன. நுண்கடன் திட்ட சேவையின் மூலமாக அவர்களின் வேறுபட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

நுண்கடன் திட்டத்தின் முக்கிய சாதனைகள்

நுண் கடன் திட்ட சேவைகளை வழங்கும் நிதி நிறுவனத்தின் தேவைகள் பத்தாயிரம் வாடிக்கையாளர்களைக் கொண்டு 1970- ல் தொடங்கப்பட்டது. ஆனால் அவற்றின் தேவைகள் இப்பொழுது அதிக அளவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. நுண்கடன் திட்டத்தின் வளர்ச்சி, அந்தத் தொகுதியிலுள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நுண்கடன் திட்டங்கள், வெற்றிகரமான முறையில் ஏழை எளிய மக்களிடம் செயல்பட்டு வருகிறது. ஏழை மக்கள் (குறிப்பாக கிராமப் பெண்கள்) அதிக நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். எனவே, நுண்கடன் திட்டங்களும் அவர்களிடையே இலாபகரமான முறையில் இயங்கி வருகிறது. குறைந்த அளவில், அனைத்து மக்களுக்கும் நிதி உதவி கிடைக்கிறது. இத்திட்டத்தை முறையாகப் பயன்படுத்தினால், மிகவும் பயனுள்ள திட்டமாக அமையும். கிராமப்புற மக்களின் நிதி நிலைமையை உயர்த்துவதில் இவை அதிக அளவில் பங்கு பெறுகின்றன. நுண்கடன் திட்ட சேவைகள், சமூக மற்றும் மனித வள மேம்பாட்டை (குறிப்பாக வீட்டிலுள்ள பெண்கள்) உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நுண்கடன் திட்ட சேவையின் எதிர்ப்புகளும், பிரச்சனைகளும்

செயல் முறைக் கொள்கைகள் நிறைந்த சூழல்

பொதுவாக நிதித் திட்டத்தின் செயல்முறைக் கொள்கைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சூழலில் பல நாடுகளின் நுண் கடன் திட்டங்களுக்கான செயல்முறைக் கொள்கைகள் வளராமல் சாதகமற்ற நிலையிலேயே உள்ளது.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை என்பதும் நுண் கடன் திட்டத்தில் ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. நிதிக் கட்டமைப்பு என்பது சட்டம் சார்ந்த, தகவல் மற்றும் ஒழுங்கு படுத்துதல் மற்றும் மேற்பார்வை ஆகியவற்றை உள்ளடக்கியது. நிதி மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவை நுண்கடன் திட்டத்தில் பின் தங்கியே உள்ளது.

வியாபார நோக்குடன் கூடிய நிறுவனங்களின் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்

இன்றைய காலகட்டங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் வியாபார நோக்கத்துடன் செயல்படுகின்றன. அவ்வாறு உள்ள நிலையில் அந்நிறுவனங்கள் நிறைந்த இலாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், நுண்கடன் திட்டங்களில் பெரும்பாலும் சிறு சிறு கடன் தொகைகளாகவே வழங்கப்படுவதால் கடன்களின் எண்ணிக்கையில் காணப்படும் ஏற்றம் கடன் தொகைகளில் காணப்படுவதில்லை. மேலும் நிர்வாக செலவுகளில் அதிக ஏற்றம் காணப்படுகிறது. இக்காரணங்களால் நிறுவனங்கள், நுண்கடன் திட்டத்தின் மூலம் அதிகப்படியான கடன் வழங்குவதில் அக்கறை காட்டுவதில்லை . எனவே, இந்நிறுவனங்கள் நுண்கடன் திட்டங்களுக்கு அதிகப்படியான வரையரைகளை வகுத்துள்ளன.

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு முதலீட்டில் பற்றாக்குறை

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளான நீர்பாசனம், சாலைகள், மின்சாரம், சந்தை சார்ந்த சேவைகள், வர்த்தக மேம்பாடு மற்றும் விரிவாக்கம் போன்றவற்றில் செய்யப்படும் முதலீட்டில் பற்றாக்குறைகள் இருப்பதாலும், நுண்கடன் திட்டத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருவதால் அதிகப்படியான செலவுகள் செய்ய நேரிடுகிறது. இப்பிரச்சனைகள் குறிப்பாக நுண் கடன் திட்டங்களில் தனியார் முதலீட்டை பெரிதும் பாதிக்கின்றன. வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் முறைகளால் உருவாக்கப்படும் பொருளாதார வாய்ப்புகள் இல்லாத ஒரு சூழலில் நுண் கடன் திட்டமானது வறுமை ஒழிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது ஒரு கேள்விக்குறியாகிறது.

நுண்கடன் உதவித் திட்டம் நமக்கு சில முக்கியப் பாடங்களை கற்பிக்கிறது. மேற்கண்ட பிரச்சனைகளும், எதிர்ப்புகளும் இத்திட்டதில் இருந்த போதிலும், ஏழை எளிய மக்களிடையே குறிப்பாக வீட்டிலிருந்தே தொழில் தொடங்க விருப்பமுள்ள கிராமப்புற பெண்களிடம் இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர இத்திட்டம் அதிக அளவில் வழிவகை செய்கிறது. நுண்கடன் திட்ட நிறுவனங்கள், பொருளாதார ஒழுக்கம் மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கானத் தேவைகளை மிக எளிய முறையில் வழியுறுத்தி வருவதால், இத்திட்டம் அதிக பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கிடையேயும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

ஆதாரம் : வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003

3.13636363636
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top