பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / திருநங்கை நலவாரியம் / திருநங்கை நலத்திட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திருநங்கை நலத்திட்டங்கள்

திருநங்கை நலத்திட்டங்களைப் பற்றிய குறிப்புகள்

ஆண், பெண் இருபாலரைத் தவிர மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரை மாற்றுப்பாலினத்தோர் என அரசு வகைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.

  • திருநங்கைகள் சுயதொழில் துவங்க ரூ.20 ஆயிரம்  வரை கடனுதவி,
  • தையல் இயந்திரங்கள் வழங்குதல்,
  • சிகிச்சை மற்றும் பாலின அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் திருநங்கைகள்  தங்குவதற்கென தற்காலிக விடுதி,
  • அடையாள அட்டை
  • இலவச பட்டா வழங்குதல்,
  • வீடு  வழங்கும் திட்டம்,
  • சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல்,
  • ரேஷன் கார்டு  வழங்குதல்

இந்த வாரியமானது கடந்த 2012 முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களை இனம் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மேலும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு என அடையாள அட்டைகளையும் வழங்கி வருகிறது.

மேலும், திருநங்கைகள் சமூகத்தில் சக மனிதர்களைப் போல் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்குகிறது.

அடையாள அட்டை

தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் சமூகநலம், சத்துணவு திட்டத் துறை சார்பில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில், பிறப்பு பெயர், அரவாணி பெயர், தற்போதைய, நிரந்தர முகவரி, உறுப்பினர் எண், உறுப்பினர், மாவட்ட சமூக நல அலுவலரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்

40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

திருநங்கைகள் சுய உதவிக்குழு

இதில், பெட்டிக்கடை, மளிகைக்கடை, உணவகம், துணி வியாபாரம், பால் வியாபாரம், வேளாண் பொருள்கள் விற்பனை, அழகு நிலையம், சோப்பு வியாபாரம், செங்கல் சூளை அமைத்தல் உள்ளிட்ட சுய தொழில்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு திட்டங்கள்

3.21686746988
சிவஹரிணி Jul 09, 2018 02:34 PM

ஆன் லைனில் திருநங்கைகள் நலவாரியம் அடையாள அட்டை விண்ணப்பிக்க முடியுமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top