திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும் வள்ளுவரும் 'எண்ணித் துணிக கருமம்' என்று கூறியுள்ளார் சுற்றுலாத் துறையைப் பொறுத்துவரை எக்காரியத்தையும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். திட்டமிடாமல் செய்யும் காரியங்கள் தோல்வியடையும் வளர்ந்து வரும் நாடுகள் சுற்றுலாவின் மேன்மையை அறிந்து, சுற்றுலாத் துறையை வளர்க்க முனைந்துள்ளன.
உலகச் சுற்றுலா மாநாடு
1963-ம் ஆண்டு உரோமம் நகரில் ஐ.நா சபையின் உலகச் சுற்றுலா மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பல்வேறு தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டன:
மலையேறுதல், குளிர்கால விளையாட்டுகள், மீன்பிடித்தல், வேட்டையாடுதல், கடற்கரைகள், மருத்துவக் குணமுள்ள நீறுற்றுகள், தேசியப் பூங்காக்கள், விளையாட்டுகள், பறவை விலங்குகளின் சரணாலயங்கள், தேசிய நினைவுச் சின்னங்கள், அந்நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள், நாகரிகம், பண்பாட்டுச் சின்னங்கள், புனிதப் பயணம் மேற்கொள்ளல், திருவிழாக்கள், போட்டி விளையாட்டுகள் போன்றவற்றை மிகுதிப்படுத்தவேண்டும்.
முன்னேற்பாடுகளுடன் செய்யப்படும் திட்டங்கள் வெற்றி பெறுகின்றன. அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் திட்டமிட்டுச் சுற்றுலாத் துறையில் மேம்பாடு அடைந்துவரும் நாடுகளும், மேம்பாடு அடைந்த நாடுகளும் சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுலாத்துறை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுகிறது. எனவே சுற்றுலாத் துறையைப் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து அமைக்க வேண்டும். சுற்றுலா வளர்ச்சிக்காகத் திட்டமிடுவதும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்காகத் திட்டமிடுவதும் ஒருங்கிணைந்து ஒத்துச் செல்ல வேண்டும். அனைத்துத் துறைகளும் ஒன்று சேர்ந்து சுற்றுலாவை வளர்க்க வேண்டும்.
அண்மைக் காலம் வரை சுற்றுலா முன்னேறிய நாடுகளுக்குரியது என வரையறுக்கப்பட்டது. முன்னேறும் நாடுகளும் சுற்றுலாவின் சிறப்பை அறிந்து சுற்றுலாவை விரிவுபடுத்த விரும்பின. சில நாடுகள் சுற்றுலாவின் தொழில் நுணுக்கம் அறியாமல் அத்துறையில் இறங்கிவிட்டன. சூரிய வெளிச்சமும் கடற்கரையுமே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என நினைத்து ஏமாந்தன. அச்சமயத்தில் பொருளாதார வளம் குன்றிய நாடுகளுக்கு உதவ முன்வந்தன. சில நாடுகள் சுற்றுலா வசதிகளைப் பெற்றிருந்தும், அவற்றை மேம்படுத்த முடியாத நிலையில் இருந்தன. பணக்கார நாடுகளுக்குத் தொலைவில் உள்ள நாடுகளும், இயற்கைக் காட்சிகள் அற்ற நாடுகளும், இயற்கைக் காட்சிகள் அற்ற நாடுகளும், நல்ல தட்பவெப்பம் இல்லாத நாடுகளும் சுற்றுலாவை வளர்க்க முடியாது. உலகில் மெக்சிகோவும், துனிசியாவும் சுற்றுலாவினால் பல நன்மைகளைப் பெற்றுள்ளன.
திட்டமிடுதல் என்பது கொடுக்க கூடிய பொருள்களையும், மூலங்களையும் மதிப்பீடு செய்து அவற்றின்மீது ஏற்படும் தேவையை அறிதலாகும். சுற்றுலாத் துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபடுவதால், அவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிலுள்ள தேசிய சுற்றுலாக் கழகத்தின் வழியாகச் சுற்றுலாவை மேம்படுத்துகின்றது. தங்கள் நாட்டின் புவியியல் நிலைக்கேற்பவும், தங்கள் நாட்டின் வரவு செலவுத் திட்டத்திற்கேற்பவும், தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்பவும் திட்டமிட வேண்டும். பிரான்சு நாடு லாங்கோடிக்-ரவுசிலியன் திட்டத்தில் அம்முறையைக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளது. ஓரிடத்தை மேம்படுத்த அம்மாநில அரசின் ஒத்துழைப்பு, முதலீடு, புதியன புனையும் திறன் போன்றவை தேவை. வளர்ந்து வரும் நாடுகளில் மாநில அரசின் ஒத்துழைப்பே சுற்றுலா வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணியாக அமையும்.
ஒரு சுற்றுலா மையத்தைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் சேகரிக்க வேண்டும். மேலும் அச்சுற்றுலா மையத்தின் வளர்ச்சிக்குரிய வழிவகைகளை ஆராயவேண்டும். சுற்றுலாத்துறை பின்தங்கியிருப்பதற்கான காரணம், அதைப் பற்றிய முழுமையான செய்திகள் கிடைக்காமையே ஆகும். செய்திகளைச் சேகரிப்பதும், புள்ளி விவரங்களைக் கணக்கிடுவதும் முக்கியமான வேலையாகும். ஒவ்வொரு நாளும் சேகரிக்கும் புள்ளி விவரங்கள் சுற்றுலா வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். தேவை, வழங்கல், திட்டமிடுவதற்கு முன்னோடியாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கு ஒரு நாடு மேற்கொண்டுள்ள அனைத்து முயற்சிகளையும் விளம்பரப்படுத்தவேண்டும். சுற்றுலாத் துறையை விரிவாக்க முடியாது.
பீட்டரின் விதிமுறைகள்
சுற்றுலாத்துறையை மதிப்பீடு செய்து வளர்ப்பதற்கு பீட்டர் என்பவர் சில விதிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார்.
மிகக் குறைந்த முதலீடு செய்தும் அவ்விடங்களை மேம்படுத்த வேண்டும். ஒரே மாதிரியான சுற்றுலா மையங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தாமல், வெவ்வேறு வகையான சுற்றுலா மையங்களை உருவாக்க வேண்டும். ஒரே நேரத்தில் எல்லாச் சுற்றுலா மையங்களையும் மேம்படுத்த முடியாது. சுற்றுலா மையங்கள் பயணிகளுக்கு இன்பமளிக்கும் முறையில் அமைய வேண்டுமேயல்லாமல், திட்டமிடுபவர்களுக்காகச் சுற்றலா மையங்களை உருவாக்கப்பட்டது.
திட்டமிடுபவர்கள் மன நிறைவுக்காக ஒரு சுற்றுலா மையத்தை உருவாக்கினால், அது தோல்வி அடையக்கூடும். ஒரு சுற்றுலா மையத்தின் சிறப்புகளைப் பயணிகளே அனுபவித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் புதிய காட்சிகளைக் காண விரும்புகின்றனர்: புதிய அனுபவங்களைப் பெற விரும்புகின்றனர்: வீர சாகசங்களைச் செய்ய விரும்புகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தை அறிந்து, அவர்களது தேவையை நிறைவு செய்தால் மிகுதியான சுற்றுலாப் பயணிகளைக் கவரலாம்.
உள்நாட்டுப் பயணிகளையும், வெளிநாட்டுப் பயணிகளையும் கவரும்படி சுற்றுலா மையங்கள் அமைய வேண்டும். உள்நாட்டுப் பயணிகளையும், வெளிநாட்டுப் பயணிகளையும் தடுக்கும் தடைக் கற்களை நீக்கவேண்டும்.
போன்றவற்றை மதிப்பீடு செய்து நோக்கங்களை வரையறுக்க வேண்டும். அதன்பின் விரிவான திட்டமிடும் பொழுதும் முழுமையாக முடிக்க முடியாத பொழுதும் பகுதி பகுதியாக முடிக்கலாம். சுற்றுலா இடங்களை மேம்படுத்துதல், அவ்விடத்திற்குச் செல்கின்ற சாலை வசதினளை மேம்படுத்துதல், மக்கள் வசதியாகத் தங்குவதற்குரிய கட்டிடங்களைக் கட்டுதல் போன்றவற்றில் மிகுதியான கவனம் செலுத்தவேண்டும்.
ஒரு நாட்டின் பல்வேறு முனைகளிலும் சுற்றுலா மையங்களை உருவாக்குவது நல்லது. நாட்டின் பொருளாதார வளம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நாட்டின் பண்பாடு, நாகரிகம் போன்றவை வளரும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். சுற்றுலா மையங்களில் பெரும் தொழிற்சாலைகளை இல்லாமல் இருத்தல் நலம் பயக்கும். மிகுதியான மக்கள் வாழும் இடங்களையும் சுற்றுலா மையங்களாக்காமல் இருத்தல் நலம்.
ஒரு சுற்றுலா மையத்தை மேம்படுத்துவதற்கும், நன்முறையில் செயல்படுத்துவதற்கும், சுற்றுலாவின் அகத்துறைக்கும், புறத்துறைக்கும் பணம் செலவழிக்க வேண்டும். ஒரு திட்டத்தினால் ஏற்படும் நன்மைகளை மனத்திற்கொண்டு, அதற்கு ஆகும் செலவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். இடமும், செயலாக்கப் பயன்படுத்தும் உத்திகளும் மனித சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். எவ்வகை மூலக்கூறுகளுக்கு முதலிடம் தர வேண்டும்? எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும்? செலவழிக்கும் திறன் போன்றவற்றை மனத்திற் கொண்டு திட்டமிட வேண்டும். சுற்றுலாத்துறையில் வளர்ந்த நாடுகள் சுற்றுலாவிற்காக மேலும் பணம் செலவழிப்பது எளிது. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் சுற்றுலாவிற்காக மிகுதியான பணம் செலவழிப்பது கடினம். ருஷ்யா, போலந்து, யுகோசு லேவியா, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகளில் அரசும் தனியார் நிறுவனங்களும் சுற்றுலாவின் வளர்ச்சிக்கு முதலீடு செய்துள்ளன. பொதுவுடைமை நாடுகளைத் தவிரப் பிற நாடுகளில் அரசு முதலில் முதலீடு செய்யும். அதன் பின் தனியார் நிறுவனங்கள் துணை முதலீடு செய்ய விரும்பும்.
ஒரு நாடு தனியார் நிறுவனங்களைச் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யத் தூண்ட வேண்டுமானால்
போன்ற சலுகைகளை வழங்கவேண்டும். சில சமயங்களில் வெளிநாட்டு நிறுவனங்களும் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யவிரும்பும். அதற்கு ஏற்றாற் போல் சட்டதிட்டங்களைத் திருத்தவேண்டும். பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளே வெளிநாட்டுப் பணத்தை விரும்பும்.
சுற்றுலாத்துறை வெற்றிபெறத் தொழில் நுணுக்கமும் திறமையும் வாய்ந்த அலுவலர்கள் தேவை. ஆரம்ப காலத்தில் சுற்றுலாத்துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் இருக்கவேண்டும். சுற்றுலாத் துறையில் பல்வேறு வகையான தொழில்கள் உள்ளன. அந்தந்தத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களையே அந்தந்தப் பணிகளில் அமர்த்த வேண்டும். சுற்றுலாத்துறை வளரும் பொழுது அதற்கு ஏற்றாற்போல் பயிற்சி பெற்ற நிபுணர்களும் மிகுதியாக இருக்கவேண்டும்.
யார் யாருக்கு எவ்வகைப் பயிற்சி அளிக்கவேண்டுமோ, அவர்களுக்கு அவ்வகைப் பயிற்சியை அளிக்கவேண்டும். பயிற்சியாளருக்குச் சுற்றுலாத் துறையில் மிகுதியான பற்ற ஏற்படும்படியாகப் பயிற்சி அமையவேண்டும். தொழிலில் ஆர்வமும், தொழில் நுணுக்கத்தில் ஆழ்ந்த புலமையும் பெற்றிருக்க வேண்டும். பெருமை, நெகிழும் தன்மை, மற்றவர்களுடன் ஒத்துப்போதல், எதையும் நடுநிலையில் இருந்து ஆராய்தல் போன்றவை சுற்றுலா ஆர்வத்தினால் உண்டாகக் கூடியவையாகும். ஒரு துறையை நடத்துதல்,நிருவகித்தல், நிதி நிலையைச் சமாளித்தல், உணவு, பானங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், பகிர்ந்தளித்தல், பணியாளர்களை மேற்பாவையிடல், பொது நிருவாகம், திட்டமிடல், புள்ளி விவரங்களை ஆராய்தல் போன்றவை தொழிற்திறமையின் பாற்படும்.
சுற்றுலாத் துறைக்கு எத்தனை பேர் தேவை? என்பதை முதலில் புள்ளி விவரம் சேகரிக்க வேண்டும். அதற்கு முதலில் என்னென்ன வேலைகள் உள்ளன? அவ்வேலைகளைச் செய்வதற்குரிய பணியாட்களின் தகுதி என்ன? ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட பணியில் மட்டும் ஈடுபடுத்த வேண்டுமா? பிற பணிகளிலும் ஈடுபடுத்தலாமா? என்பன போன்ற திட்டங்கள் தீட்ட வேண்டும். சான்றாகச் சமையற்காரரை உணவு பரிமாறச் சொல்லலாமா? ஊர்தி ஓட்டுநரைத் தோட்டவேலை செய்யச் சொல்லலாமா? என்பன போன்றவற்றைத் தீர்மானிக்க வேண்டும். எதிர் காலத்தில் என்னென்ன பணிகளுக்கெல்லாம் ஆட்கள் தேவைப்படும்? என்பதற்கும் திட்டம் போடவேண்டும். பணிகளைச் சிறப்புறச் செய்வதற்குப் பணியாளர்களுக்குத் தேவையான கல்வியும், பயிற்சியும் அளிக்கவேண்டும். அப்பயிற்சியை உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ அளிக்கலாம். பணியாளர்களுக்கு எளிய பயிற்சியை உள்நாட்டிலும், சிறப்புப் பயிற்சிகளைத் திறமைமிகு வெளிநாடுகளிலும் பயிற்சியையும் தீர்மானிக்க வேண்டியது அத்துறை வல்லுநர்கள் ஆவர். வெளிநாட்டு வல்லுநர்களையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியாவில் பணியாற்றச் சொல்லலாம்.
ஒரு துறை முன்னேற அதன் நிருவாக அமைப்பு திறமையாகச் செயல்பட வேண்டும். சுற்றுலாத் துறை வளர்வதற்கு அதன் நிருவாக அமைப்புகள் செம்மையாகச் செயல்பட வேண்டும். நிருவாகம் பல்வேறு பணிகளையும் திட்டமிட்டுச் செய்யவேண்டும். பலநாடுகளில் சுற்றுலாத் துறையை நிருவாகம் செய்யத் தனி அலுவலகங்கள் உள்ளன. ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் அமைப்பிற்கேற்பச் சுற்றுலாத்துறை அரசிடம் இருக்கலாம் அல்லது தனிக் கழகமாகச் செயல்படலாம். அரசின் அனுமதியுடனும், ஆதரவுடனும், பண உதவியுடனும் தனியார் நிறுவனங்களும் அதனை நடத்தலாம். சுற்றுலாத்துறை பற்றிய விதிமுறைகளைத் தீர்மானிக்கச் சட்டத்துறையின் உதவியும் தேவைப்படும். சுற்றுலாத் துறையில் திட்டமிடல், வணிகச் சந்தை, ஆராய்ச்சி, பயிற்சியளித்தல், சட்டம், பொதுநிருவாகம் போன்ற பல துறைகள் உள்ளன.
மாற்றியமைக்க வழிகள்
எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. போட்ட திட்டத்தை முறையாகச் செயல்படுத்தவேண்டும். அத்திட்டத்தில் குறைகள் இருப்பின் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அறிவியல் வளர்ச்சிக்கேற்பத் திட்டங்களை மாற்றி அமைக்கவேண்டும். சில திட்டங்களைப் புதுப்பிக்க வேண்டும். திட்டங்கள் நிலையாக இல்லாமல் மாற்றக் கூடியதாக இருக்கவேண்டும். சமுதாயத்தின் மாற்றத்திற்கேற்பவும், சூழ்நிலைக் கேற்பவும் திட்டங்கள் மாறக் கூடியதாக இருக்க வேண்டும்.
திட்டமிடும் முறை
திட்டமிடல் என்பது நிகழ்காலத்தை மதிப்பீடு செய்து எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாகும். பெரிய நிறுவனங்கள் தங்கள் முதலீட்டிற்கு ஏற்பத் திட்டமிடும். அதனுடைய நோக்கம் நிகழ்காலத்தில் செல்வாக்குப் பெற்று எதிர்காலத்திற்குத் தன்னைத் தயார் செய்து கொள்வதாகும். நிகழ்காலத்தில் ஏற்படும் தடங்கல்களையும் தாண்டி எதிர் காலத்திற்குத் திட்டமிடும். திட்டமிடும் பொழுது கீழ்க்காணும் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்தாலும் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியிருக்கவேண்டும். திட்டமிடல் மிக முக்கியமானது. எதிர்காலத்தில் நடக்கக் கூடியதைத் திட்டவட்டமாக முன் விபத்துகளையும் இடர்களையும் தவிர்ப்பதாகும் அல்லது குறைப்பதாகும் இடர்கள் வருமாயின் திட்டத்தைப் புதிய சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ளவேண்டும்.
சந்தையின் நடப்பை அறிந்து அதற்கேற்பக் குறிக்கோளை வரையறுத்துத் திட்டமிட வேண்டும். சந்தை, நுகர்வோர்குழு, வணிக இடைத்தரகர்கள் போன்றவற்றின் மீது மிகுதியான கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட விளம்பரம், விற்பனையின் பக்க வலிமை, மக்கள் தொடர்பு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மேம்படுத்துவதற்கான வரவு செலவுத் திட்டங்கள், செயல்களின் வகைகள், நோக்கத்தை நிறைவேற்றும் குழுக்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். திட்டங்களைக் கட்டுப்படுத்தக் கூடியதும், மதிப்பீடு செய்யக் கூடியதுமான வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். திட்டமானது நிறுவனத்தின் குறிக்கோளை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும்; மற்ற வணிகச் செயல்களுடன் ஒத்துப்போகக் கூடியதாக இருக்க வேண்டும். கிடைக்கும் மூலங்களைத் திறமையாகப் பயன்படுத்தி மேம்படுத்த வேண்டும். மிகுதியான இலாபத்தைத் தரும் செயலைச் செய்ய வேண்டும்.
மேம்பாட்டுத் திட்டத்தில் ஒவ்வொன்றிற்கும் மாற்றுத் திட்டம் இருக்கவேண்டும். பல மாற்றுத் திட்டங்கள் இருக்குமாயின் சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.மேம்பாட்டுத்திட்டத்தின் அனைத்து விளம்பர வகைகளையும் ஒன்றாக இணைத்துச் செயல்பட வைக்க வேண்டும்.
நுகர்வோருக்குத் தேவையான செய்திகள் யாவை?,
மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தேவையான பொதுவிதிகள், கொள்கைகள் என்ன?,
மேம்பாட்டுத் திட்டத்தில் பல வகைகள் இருப்பினும் நம்பகமானது, சிக்கனமானது, எளிதில் காரியத்தை முடிக்கக் கூடியது எது?
என்னும் வினாக்களுக்கு விடை கண்டுபிடித்து அத்திட்டத்தை மேற்கொள்ளவேண்டும்.
நால்வகைத் திட்டங்கள்
என நான்கு வகைத் திட்டங்கள் உள்ளன.
அனுபவத்தால் அறிந்த திட்டம்
அனுபவத்தால் அறிந்ததையும், அனுபவத்தையே முழுமையமாக நம்புகின்றதையும் அனுபவத்தால் அறிந்த திட்டம் என்பர். அக எண்ணங்களின் தீர்ப்பையும், மரபு வகையையும், சந்தை ஆராய்ச்சியில் கிடைத்த புள்ளி விவரங்களையும் அத்திட்டத்தில் பயன்படுத்துவர். அத்திட்டத்தை எளிதாகவும், விரைவாகவும் செயல்படுத்தலாம். அத்திட்டம் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளதால், இன்று பலராலும் பயன்படுத்தப்படுகிறது.
நலம் சார்ந்த திட்டம்
ஒரு திட்டம் தீட்டும் பொழுது அதற்கு மாற்றுத் திட்டத்தையும், அத்திட்டத்தினால் ஏற்படும் எதிர்விளைவுகளையும் மனத்தில் கொள்ள வேண்டும்.
உற்பத்தி, தேவை, தேவையான காலம், மேம்பாட்டினால் ஏற்படும் பயன்கள் போன்றவற்றை மனத்தில் கொண்டு திட்டம் தீட்டவேண்டும். அறிவுப் பூர்வமான, பகட்டான அத்திட்டத்தில் சில தொய்வுகள் உள.
அத்திட்டம் தீட்டுவதற்கு மிகுதியான செய்திகள் தேவை. அத்திட்டத்தைச் செயல்படுத்த மிகுதியான செலவாகும். எனவே செலவே அத்திட்டத்தை நடைபெறாமல் தடுத்துவிடும்.
அத்திட்டத்தினால் விளையும் பயன்கள் தரமான மூலங்களினால் விளைவன அல்ல. எனவே அனைத்து மூலங்களும் தேவையில்லாமல் போகும். அத்திட்டம் பற்றி டி.தும்மல் என்பவர் பின்வரும் முடிவுகளைக கூறுகிறார்:
தாமே கண்டுணரும் திட்டம்
அத்திட்டம் முறையானதாகும். அதில் படிப்படியான முன்னேற்றங்கள் காணப்பெறும். அது பொதுத்திட்டத்திலிருந்து சிறப்புத் திட்டத்திற்கும், தந்திரத்திலிருந்து நடைமுறைக்கும், மேலான கொள்கைகளிலிருந்து சிறப்பு நடவடிக்கைக்கும் இழுத்துச் சென்று சிக்கனமான முறையில் செயல்படுவதற்கு வழிவகுக்கும். அத்திட்டத்தில் செயல்கள் முறையாக, படிப்படியாக நடைபெறும். ஒவ்வொரு தடவையும் மேற்கொள்ளும் முடிவுகள் பொருளடக்கம், காலம், விலை, செயல்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். குறிக்கோள் - - - - > பொதுக்கொள்கை ----> விரிவான திட்டம் -----> புதிய தந்திர உத்தி----> மேம்பாட்டுத் திட்டத்திற்குரிய மூலங்கள்----- > செயலாக்கத் திட்டம்---> முடிவுகளை மதிப்பீடு செய்தல் போன்றவை படிக்கட்டுப்போல் அமைந்திருக்கும்.
சில குறைகள்
அமைப்பு முறைத் திட்டம்
ஒரு நிறுவனம் என்பது பல துறைகளைக் கொண்ட ஓர் அமைப்பாகும். ஒவ்வொரு துறையும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும். உற்பத்தி, சந்தைப்படுத்துதல், நிதி, நிருவாகம் போன்றவற்றைத் தனித்துறைகளாகக் கருதுவர். ஒவ்வொரு துறையும் பிற துறைகளுடன் ஒத்துழைத்து அந்நிறுவனம் மேம்பாடு அடையப் பாடுபடும்.
ஒரு நாட்டின் எல்லா இடங்களையும் சுற்றுலாவிற்காக மேம்படுத்த முடியாது. சரியான சந்தையைத் தேர்ந்தெடுக்காவிட்டால் திறமையாகச் செயல்பட முடியாது. அமெரிக்க நாட்டுச் சுற்றுலாக் கழகம் ஏறத்தாழ நாற்பது நாடுகளில் சுற்றுலா அலுவலகங்களைத் திறந்து அமெரிக்க நாட்டுச் சுற்றுலாவின் சிறப்பை வலியுறுத்தியது. அதனால் கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து 87% பயணிகள் அமெரிக்காவிற்கு வந்தனர். அவர்களிடமிருந்து 74% அந்நியச் செலவாணி கிடைத்தது. எனவே சந்தையைத் தேர்ந்தெடுத்தல் என்பது ஒரு முக்கியமான செலவாகும். உலகின் எந்தப் பகுதியிலிருந்து மிகுதியான பயணிகள் வருகின்றனர். எந்த இடைத்தரகர்கள் மிகுதியான நோக்க வேண்டும்.
எனவே
இவ்வளவு காலத்திற்குள் இவ்வளவு விற்க வேண்டும் என்று திட்டமிட்டும், புதிய மாற்றங்களை மக்களிடம் அறிவித்தும், புதுப் பொருள்களை அல்லது இடங்களை மக்களிடம் தெரிவித்தும், மேம்பாட்டுக் குறிக்கோளை அடைய வேண்டும். நிதி, மனித சக்தி போன்றவை மேம்பாட்டுத் திட்டத்திற்குப் பயன்படும் வகையைத் தீர்மானிக்க வேண்டும். உள்ளமைப்புக்கும் நடைமுறைக்கும் உறவு இருக்கவேண்டும். நுகர்வோரையும் இடைத்தரகர்களையும் மேம்பாட்டுத் திட்டத்திற்குள் அடக்கவேண்டும்.
சில நிறுவனங்கள் மரபுவழியில் சென்று திட்டமிடுகின்றன. அவை புதிய முறைகளைப் புகுத்துவதும் இல்லை. புதிய முறைகளை நாடுவதும் இல்லை. நுகர்வோரின் மன நிலையைப் புரிந்து புதுமை செய்வதும் இல்லை. நிறுவனத்தின் மேம்பாட்டுத் திட்டம் அதன் குறிக்கோளை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும். ஒரு நிறுவனம் தான் பிடித்து வைத்துள்ள சந்தையைப் பாழ்படுத்தி விடக்கூடாது. நுகர்வோரின் நல்லெண்ணத்தை இழந்துவிடக்கூடாது. திட்டமான நெகிழும் தன்மையை உடையதாகவும், புதிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலதிகாரிகள், நிருவாகிகள் போன்றோரின் ஒத்துழைப்பு கையாளாத திட்டம், நிலையற்ற சந்தை, சந்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், அண்மையில் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தை அறியாமை, அறிய விரும்பாமை, மற்றவர்களின் அறிவுரையைக் கேளாமை, திட்டம் வெற்றிபெறுவதற்குரிய காலம் தாராமை, திட்டமிடுவதில் அனுபவம் இன்மை, திட்டமிடுபவர்களுக்கும், திட்டத்தைச் செயல்படுத்துவர்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை போன்றவை மேம்பாட்டுத் திட்டத்தைக் கெடுக்ககும்.
சுற்றுலாவின் தேவையை அங்கு வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கையைக் கொண்டு அறியலாம். சுற்றுலா மையத்தை விரிவுபடுத்தி, நுகர்வோரின் நல்லெண்ணத்தைப் பெறவேண்டும். சான்றாக இந்தியச் சுற்றுலாக் கழகம் இந்தியச் சுற்றுலா மையங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்ட நாடுகளிடையே விளம்பரம் செய்கிறது. சுற்றுலாத் துறையில் பயணமுகவர்கள், சுற்றுலா நடத்துநர்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் சந்தையை அடைய வேண்டும். விலை, எதிர்பார்க்கும் இலாபம், போட்டியின் அளவு, சந்தைத் திருப்பங்கள் போன்றவற்றைக் கவனித்துச் சந்தையைப் பிடிக்க வேண்டும். மிகுதியான நுகர்வோரைக் கவர்தல், பங்குத் தொகையைக் கூட்டுதல், பயணிகளை நீண்ட நாட்கள் தங்கும்படி செய்தல், கடனில் சுற்றுலாச் செல்ல அனுமதித்தல், வாழக்கையாளருக்குச் சலுகைகள் போன்றவை சந்தையை விரிவுபடுத்த உதவும்.
பருவகால வேறுபாட்டிற்கேற்ற தேவைகளை நிறைவு செய்தல், குறிப்பிட்ட நுகர்வோரைக் கவனித்தல், பெரும் பணக்காரர்களையும், நீண்ட காலம் தங்குபவர்களையும், மாநாடு, கூட்டம் நடத்துநர்களையும் சுற்றுலாச் செல்லத் தூண்டுதல், குடும்பத்துடன் சுற்றுலாச் செல்லத் தூண்டுதல், விலைச் சலுகை, குழுப்பயணத்தை ஊக்குவித்தல், ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்பதிவு முறையைப் பின்பற்றுதல் போன்றவை விற்பனையின் திறமையை மிகுதிப்படுத்தும்.
மேம்பாட்டுத் திட்டத்தில் சந்தை ஆராய்ச்சியின் பங்கு
சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்திற்கு அன்றைய நாள்வரை தேவைப்படும் செய்திகள் வருமாறு:
எனவே ஒவ்வொரு நாடும் வெவ்வேறான உத்திகளைக் கையாண்டு சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். விளம்பர உத்திகளும் வேறுபட வேண்டும். சான்றாக இந்தியா, இங்கிலாந்து நாட்டுக்கு ஓர் உத்தியையும், பிரான்சு நாட்டுக்கு இன்னொரு உத்தியையும், அமெரிக்க நாட்டிற்கு மற்றொரு உத்தியையும் பின்பற்றி விளம்பரம் செய்யவேண்டும்.
வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்குள் வரும்பொழுது, அவர்கள் வந்திறங்கும் இடங்களில் அவர்களை வரவேற்கின்ற வாசகங்கள் இடம்பெற வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்குச் சுற்றுலா பற்றிய அமைத்துத் தகவல்களும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும். தேசியச் சுற்றுலாக் கழகங்கள், மாநில மத்திய சுற்றுலாக் கழகங்கள் போன்றவை செய்திகளை வழங்கவேண்டும். தேசியச் சுற்றுலாக் கழகத்தின் வழியாகச் சுற்றுலாத்துறை மேம்பட்டு வருவதைப் பயணிகளுக்கு உணர்த்த வேண்டும், புகார்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டுப் பயணிகளின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கவனம் -----> அக்கறை-----> ஆர்வம் -----> செயல்படுத்துதல் என்ற முறையில் செயல்கள் நடைபெற வேண்டும்.
தேசியச் சுற்றுலா அலுவலகங்கள், வட்டாரச் சுற்றுலா அலுவலகங்கள் %அல்லது ஃபங்கு பணத்தை மேம்பாட்டுத் திட்டத்திற்காகச் செலவழிக்கின்றன. அந்தந்த இடங்களில் உள்ள சுற்றுலா அலுவலகங்கள் பயணிகளிடம் வரி வசூலித்து, அவற்றில் 40% பணத்தை மேம்பாட்டிற்காகச் செலவழிக்கின்றன என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
வரவு செலவுத் திட்டம்
ஆண்டுக்கொரு முறையே மேம்பாட்டுத் திட்டங்கள் போடுவர். புதிய சந்தையை அறிவதற்கும், புதிய சுற்றுலாத் திட்டங்கள் வழங்குவதற்கும், பழைய இடங்களைப் புதுப்பிப்பதற்கும் ஓராண்டுக்காலம் ஆகும். சில நிறுவனங்கள் பல நிறுவனங்கள் நீண்டகாலத் திட்டங்கள், குறுகியகாலத் திட்டங்கள் என இருவகைத் திட்டங்களை வைத்துள்ளன.
சுற்றுலாத் துறையில் சந்தை இயலின் முக்கியமான பணி என்ன வென்றால் சந்தைப் பகுதிகளில் உள்ள நுகர்வோர்களின் மனதில் பொருளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும். இதனை மேம்பாட்டின் மூலமே செய்ய முடியும். சுற்றுலா மேம்பாடு என்பது சந்தை இயல் கலவையின் முக்கியமான கூறும், சந்தைப்படுத்துதலில் முக்கியமான கருவியுமாகும். மேம்பாட்டின் அடிப்படை நோக்கம் என்னவென்றால் செய்தி தொடர்பின் மூலம் நுகர்வோரையும், இடைத்தரகர்களையும் ஒரு குறிப்பிட்ட வகையில் நினைக்கவும், செயல்படவும் தகவல் தெரிவித்தல் அல்லது ஊக்கப்படுத்துதல் ஆகும்.
மற்ற துறைகளைப் போலவே சுற்றுலாவில் வெற்றிகரமான சந்தைப்படுத்துதல் என்பது சரியான பொருள், சந்தை தொடர்புடைய விலைக் கொள்கை, திறமையான, நம்பிக்கையான பகிர்வு செயல்பாட்டு முறை ஆகியவற்றால் மட்டும் அமைவதில்லை. வாடிக்கையாளர்களுடனும், இடைத்தரகர்களுடனும் முறையான தொடர்பு கொண்டு அதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதும் மிகவும் அவசியமாகும். எனவே சுற்றுலா மேம்பாட்டின் அடிப்படை பணி என்னவென்றால் நுகர்வோருடன் சக்திவாய்ந்த தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுதலே ஆகும்.
வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் மூன்று சந்தை இயல் கருவிகள் பின்வருமாறு:
ஆகியவை ஆகும்.
விளம்பரம்
"சந்தைப் படுத்தப்பட்ட பொருள்கள் சேவைகள் ஆகியவற்றின் விற்பனை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்திகளைப் பரப்பும் நடவடிக்கைகளுக்கு விளம்பரம் என்று பெயர்”.
இன்று உலகில் எந்தப்பொருளை விற்க வேண்டுமென்றாலும் விளம்பரம் தேவைப்படுகிறது. விளம்பரம் இல்லாமல் விற்பனையும் இல்லை என்ற நிலை உள்ளது.
எனவே சுற்றுலா பொருளையும் விற்பதற்கு விளம்பரம் அவசியம் தேவைப்படுகிறது. பொதுவாக விளம்பரம் என்பதற்கு ஒரு பொருளை அல்லது சேவையை மக்களுக்குத் தெரியப்படுத்துதல் என்று பெயர். இன்று விளம்பரமானது மனித சமுதாய வாழ்வில் ஒரு அங்கமாகவே இடம் பெற்றுள்ளது. விளம்பரம் என்பதற்கான மேலும் ஒரு விளக்கத்தைக் காணலாம்.
"ஒரு குறிப்பிட்ட அரசோ, உற்பத்தியாளர்களோ, விற்பனையாளர்களோ பணம் செலவிட்டு தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள கையாளப்படும் முறைதான் விளம்பரம் ஆகும்”.
சுற்றுலாவில் விளம்பரப்படுத்தவேண்டிய பொருள் சுற்றுலாப் பயணி செல்லும் இடத்தையே குறிக்கிறது. எனவே சுற்றுலாவில் சுற்றுலா இடங்களைப் பற்றிய செய்திகளை மக்களிடையே பரப்புகின்ற முறைக்குத்தான் விளம்பரம் என்று பெயர் ஆகிறது.
விளம்பரத்தின் நன்மைகள்
விளம்பரம் என்பது பொருள்களின் விற்பனையை அதிகரிக்க உதவும் முக்கியமான சாதனமாகும். பொருள்களை உற்பத்தி செய்வோர் தங்கள் பொருள்களை விற்பதற்கு விளம்பரத்தைப் பயன்படுத்துகின்றனர். விளம்பரம் பொருள்களை வாங்கத் தூண்டுவதால் வாணிகம் பெருகுகிறது. மக்கள் மிகுதியான பண்டங்களை வாங்குவதால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது.
செய்திகளைப் பரப்ப பின்பற்றப்படும் எல்லா நுட்பமான முறைகளிலும் செலவு குறைவானது விளம்பரமேயாகும்.
ஆதாரம் : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்