பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / ஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்

ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் ஐப்பான் பன்னாட்டு கூட்டுறவு மையத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, திறன் வளர்ப்பு மற்றும் இத்திட்டம் தொடர்பான பயிற்சியினை மேற்கொள்ள உள்ளது. இந்த பயிற்சியானது ஒகேனக்கல் குடிநீர் மற்றும் புளோரோஸிஸ் அபாயத்தை குறைக்கும் திட்டத்தின் கீழ் வருகிறது.

ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பயிற்சிகளை மறு சீரமைத்தல்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தெளிவான மூன்றடுக்குப் பிரிவுகளைக் கொண்டதாகும். மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் தினக்கூலி வேலைகளை வழங்குவதுடன், மக்களின் அடிப்படைத் தேவைகளான வீட்டு வசதி, சாலைவசதிகள், குடிநீர், தெருவிளக்கு சுகாதாரம் ஆகியவற்றை கொடுப்பதற்கான உரிய முயற்சிகள் எடுப்பதே இந்தத் துறையின் கட்டாயக் கடமையாகும். கிராம, வட்டார, மாவட்ட ஊராட்சி என்ற மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நல்ல உள்ளாட்சி நிர்வாகத்தை கொடுக்க இத்துறை உதவுகிறது. மேலும் இத்துறையில் வாழ்வாதாரத்தை மையமாக வைத்துச் செயல்படும் பிரிவுகளாக தமிழ்நாடு புதுவாழ்வு திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தைச் செயல்படுத்தும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், பன்னாட்டு விவசாய வளர்ச்சி நிதியுதவியுடன் செயல்படும் சுனாமிக்குப் பிந்தைய நிலைத்த வாழ்வாதாரத் திட்டம் ஆகியன உள்ளன. இப்பிரிவுகளின் மூலம் சமுதாயத்தின் பல்வேறு வகையான பிரிவினரும் இலக்காக நிர்ணயிக்கப்படுவதுடன் அவர்களின் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான நிறுவன கட்டமைப்பு, நிதி உள்ளாக்கம் போன்றவைகளை முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு செயல்பாடுகளிலும் செயல்பாட்டுத் திறன் மேம்பாடு என்பது ஒரு அங்கமாக உள்ளது.

ஊரகப் பகுதிகள் குறைந்து வருதல்,  நகரமயமாக்குதல்,  ஊரக வளர்ச்சியின் நோக்கத்தில் மாறுபாடு போன்றவற்றின் அடிப்படையில் திறன் வளர்ப்பு பயிற்சி நடவடிக்கைளிலும் ஒரு மாறுதல் தேவைப்படுகிறது. மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தை சீர்மிகு மையமாக மாற்றவும், பலப்படுத்தவும் நடடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது.

நோக்கங்கள் - நடவடிக்கைகள்

 1. ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பயிற்சிகளையும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளாக சீரமைத்து குறிப்பாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் மற்றும் மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நிறுவனங்களில் மேற்கொள்ளும் பயிற்சிகளை ஐதராபாத்தில் இயங்கிவரும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனம் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 2. கள அளவில் உள்ள அலுவலர்கள் பணியாளர்கள், மக்கள் பிரதிநிகள் மற்றும் இதர பங்கேற்பாளர்களுடன் பல்வேறு நிலைகளில் கலந்தாய்வு செய்த அனுபவத்தின் அடிப்படையில் பயிற்சிகளின் தேவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
 3. உயர் நிலை கல்வி நிறுவனங்கள் மற்றும் அனுபவமிக்க வள ஆதார அமைப்புகள் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்துடன் இணைந்து ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் பங்கேற்பாளர்களின் திறனை மேம்படுத்தவும், அந்நிறுவனங்களின் பணியின் தரத்தை ஊரகப் பகுதிகளில் மேம்படுத்தவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
 4. ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறையில் உள்ள பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் தற்போது நடத்தும் பயிற்சிகள், பயிற்சி பாடத் திட்டங்கள், பயிற்சி முறைகள், உரிமைக் கட்டண பயிற்சிகள் பயிற்றுனர்களின் திறன் வளர்ப்பு ஆகியவற்றை ஆராய்ந்து, மேம்படுத்தி, மாற்றங்களை கொண்டு வர தேவையான ஆலோசனைகளை வழங்க துறை சார்ந்த ஒரு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 5. இவ்வாறு துறை அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்படும் குழுவானது மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனங்களை பார்வையிட்டு நிறுவனத்தின் எல்லைக்குட்பட்ட மாவட்டங்கள், பங்கேற்பாளர்கள், தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகள், சொந்த வருவாய் தன்மை உள்ள வழிவகைகள், நிலம் மற்றும் பண்ணை போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தவதற்கான வழிமுறைகள் மற்றும் பயிற்சி பாடத்திட்டங்கள் ஆகியவற்றை ஆய்ந்து அறிக்கையினை சமர்ப்பிக்கும்.
 6. மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனங்களை வலுப்படுத்த மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தை உயர்நிலை திறன் வளர்ப்பு மையமாக உருவாக்குவதன் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் அடுத்த உயர்நிலைக்கு கொண்டு செல்லப்படும். இதற்காக ஒரு தனிப்பிரிவு ஊரக வளர்ச்சி இயக்ககத்தில் உருவாக்கப்பட்டு அதன் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தை உயர்நிலை திறன் வளர்ப்பு மையமாக்கவும் மற்றும் மண்டல ஊராட்சி நிறுவனங்களை வலுப்படுத்துதவும் அரசு உத்திரவுகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 7. கண்காட்சி மற்றும் பொது அறிவை பரப்புவதற்கான மையம் ஒன்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் நிறுவி அதனை உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கான வள மற்றும் ஆலோசனை மையமாக செயல்பட வைப்பதற்கு தேவையான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும்.
 8. ஊரக வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்களுக்கு ஊரக திட்டப் பணிகளை நிறைவேற்ற தேவையான தொழில் நுட்ப பயிற்சி மையம் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் தோற்றுவிக்கப்படும். வழங்கப்பட உள்ள வழக்கமான பயிற்சிகள் மற்றும் கணினி பயிற்சிகள் தவிர கீழ்க்காணும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
 9. இதில் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் பயிற்றுநர் பயிற்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி, கிராம் அளவில் திட்டங்களை ஒருங்கிணைக்கும் பயிற்சி, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தில் பயிற்சியின் தேவைகள் குறித்த ஆய்வு, முழு சுகாதார திட்டத்தில் வெளி வளாகப்பயிற்சி, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கான ஊராட்சி நிர்வாகம் பற்றிய பயிற்சி, பெண் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாகம் பற்றிய பயிற்சி, சமூகத் தணிக்கை சான்றிதழ் பயிற்சி, புதுவாழ்வுத் திட்டத்தில் திறன் வளர்த்தல் பயிற்சி மற்றும் ஆறு மாவட்டங்களில் பணமில்லா பரிவர்த்தனை பற்றிய பயிற்சி ஆகிய பயிற்சிகள் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்திலும், அனைத்து ஐந்து மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனங்களிலும், மேற்கொள்ளப்படும்.
 10. மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தை மேலும் மேம்படுத்தி, வலுவான அமைப்பாக மாற்றி, பயிற்சிகளை செம்மைப்படுத்தி அகில இந்திய அளவில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி முகமை – கையேடு

2.83333333333
சி. விஜயகுமார் May 01, 2020 05:20 PM

நாகபட்டினம் மாவட்டம் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி கையேடு கிடைக்க யாரை அணுகுவது

க கார்த்திகேயன் Mar 07, 2020 07:04 PM

தமிழ் நாடு ஊரக வளர்ச்சி கையேடு நாகப்பட்டினம் பயிற்சியின் போது கிடைக்கவில்லை அதை எப்படி பேறுவது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top