பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம் / கூட்டுறவுச் சங்க நடைமுறைகளும் செயல்பாடுகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கூட்டுறவுச் சங்க நடைமுறைகளும் செயல்பாடுகளும்

கூட்டுறவுச் சங்க நடைமுறைகளும் செயல்பாடுகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கூட்டுறவுச் சங்க நடைமுறை என்பது கூட்டுறவுச் சங்கத் துணை விதிகளில் குறிப்பிட்டுள்ள சங்கத்தின் நோக்கங்களை ஒட்டியே அமையும். எனவே, எந்தவொரு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடும் துணை விதிகளில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கக்கூடாது. பதிவாளர், நிதியுதவி வங்கி / தலைமைச் சங்கம் அவ்வப்போது வழங்கிவரும் அறிவுரைகளுக்கு ஏற்ப சங்கங்களின் செயல்பாடுகள் அமையும். பொதுவாக எல்லா வகை சங்கங்களின் துணை விதி 2-இல் அச்சங்கங்களின் நோக்கங்கள் விவரிக்கப்பட்டிருக்கும்.

சங்க நடைமுறையை கவனித்தல்

சங்க நிர்வாகத்தில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து நேரடியாகப் பங்கு கொள்ள வேண்டும். சங்கத்திலுள்ள சம்பளம் பெறும் தலை நிர்வாகியை சங்க செயல்பாடு பற்றி சங்கத் தலைவருக்கும் நிர்வாகக்குழுவுக்கும் ஒரு சிலவற்றை நாள்தோறும், ஒருசிலவற்றை பருவம்தோறும், ஒரு சிலவற்றை மாதம் தோறும் எனப் பாகுபடுத்தி எழுத்து மூலமாக குறிப்பிட்ட படிவங்களில் அறிக்கை தரச் செய்யலாம். உதாரணமாக, கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களில் வாரந்தோறும் கடன் வழங்குவதிலும், வசூல் செய்வதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும், பண்டக சாலையில் மாதாந்திர விற்பனை, இருப்புக் குறைவு போன்றவைகளை பற்றியும் அறிக்கை தரச் செய்யலாம். இதனால் சங்கத்தின் வளர்ச்சி பற்றி சங்கத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் அவ்வப்போது அறிய வாய்ப்பு ஏற்படுகிறது.

ஒளிவுமறைவு இல்லாத நிர்வாகம்

சங்கத்திற்கு துறை அலுவலர்கள் சட்டரீதியாக வழங்கும் குறியீடுகள், திட்ட இலக்கு ஆகியவை பற்றி தலைவர் இதர நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். அதை அடைய என்னென்ன வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன அல்லது என்னென்ன வழிவகை தேவைப்படும் என்பதையும் குறிப்பிட்டு தலைவர் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும். அவசரமான நேர்வுகளில் அதனை தலைவர் செயல்படுத்தலாம். பின்னர் அடுத்து நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதனை ஒரு பொருளாக வைத்து சங்கத்தின் செயல்பாட்டிற்கு நிர்வாகக்குழுவின் அங்கீகாரம் பெற வேண்டும். இவ்வாறு செய்வதால் சங்கம் செயல்படுத்தியுள்ள பணியும் அனைவரும் அறிய வாய்ப்பு கிடைக்கும். செயல்பாடுகள் அனைவரும் அறியக் கூடிய வகையில் எந்த விதமான ஒளிவு மறைவின்றி இருப்பதோடு, சங்கத்தின் செயல்பாடு நிச்சயமாக ஒருங்கிணைந்து இருக்கும்.

அவ்வப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சங்க உறுப்பினர்கள் நலன் கருதியும், அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் அனைத்துத் திட்டங்களையும், செயல்பாடுகளையும், அதை அடையக் கூடிய வழிமுறைகள் பற்றி சங்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவுகள் ஆகியவை குறித்து சங்க அறிவிப்புப் பலகையில் தலைவரின் ஒப்புதலுடன் ஒட்டப்படவேண்டும். இவ்வாறு செய்வதால் சங்கத்தின் செயல்பாடு மிகச் சிறந்ததாகவும் அனைவரும் தெரிந்து கொள்ள தக்க வாய்ப்புகள் ஏற்படும். மேலும் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி அனைவருக்கும் ஒரு நம்பிக்கையும் ஏற்படும். அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சேவை ஒவ்வொரு கூட்டுறவு அமைப்பும் அதன் உறுப்பினர்களின் பங்கிற்கு ஏற்ப பொருளாதாரப் பொருப்பினை அளிக்கக் கூடியதாக செயல்பட வேண்டும். சங்கத்தின் சேவை அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் வகையில் இருத்தல் வேண்டும். இதனை உறுதி செய்து கொள்ளும் வகையில் சங்கத்தின் சேவை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் அல்லது உறுப்பினர்களுக்குக் கிடைக்காமல் போனால் அதனைத் தொடர்புடைய உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் சங்க நிர்வாகத்திற்குத் தெரிவித்தால் அவ்வாறு தெரிவிக்கப்பட்ட உறுப்பினர்களின் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படவேண்டும். ஒரு குழுக் கூட்டத்திற்கும் இன்னொரு குழுக் கூட்டத்திற்கும் இடையே இவ்வாறு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, இவற்றில் தீர்வு காணப்பட்டது, தீர்வு காணப்படாதது என்று பிரித்து காரணங்களை விவாதித்தும் தலைவர் குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும் இவ்வாறு செய்வதால் சங்கங்களின் செயல்பாடு உறுப்பினர்களுக்கு நலன் பயக்கும் வகையில் இருக்கும். சங்க நிதி நிலையை உணர்ந்து, தெரிந்து, சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு கொள்முதல், உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றை வெளிப்பபடுத்துதல் மிகவும் அவசியம்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் கடன் சங்கத்தின் நோக்கங்கள்

(அ) முக்கிய நோக்கங்கள்

சங்கத்தின் முக்கிய நோக்கம் உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன்கள் வழங்குதல்

விவசாயம் சார்ந்த தொழில், சிறுதொழில், குடிசைத் தொழில், கைவினைத் தொழில், கிராமத்தொழில் ஆகியவற்றிற்கும் மற்றும் நிதியுதவியால் வரையறுக்கப்பட்ட இதர காரியங்களுக்கும் வழங்குதல்.

சங்கத்திலிருந்து வழங்கப்படும் கடன்களாவன:

 • பயிர்க்கடன்
 • கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு கடன்
 • தானிய ஈட்டுக் கடன்
 • வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த முதலீட்டுக்கடன்
 • சிறு வணிகக்கடன்
 • சுய உதவி குழுக்களுக்கு கடன்
 • மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்
 • நுகர்வோர் கடன்
 • நகைக் கடன்

(ஆ) இதர நோக்கங்கள்

 • இடுபொருள்விற்பனை வேளாண் சேவை மையம் (Agro Service Centre),
 • வேளாண் பயிர் பாதுகாப்பு (Agri Clinic),
 • (Common Service Centre) அமைத்து உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் சேவை செய்தல்.

இ) நுண்காப்பீடு

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து ஆயுள் மற்றும் பொது காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் காப்பீட்டு பிரிமியத் தொகை வசூலிக்கவும், இழப்பீட்டுக் கோரிக்கைகளை சங்கங்கள் மூலம் தீர்வு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி தங்களுடைய சங்க எல்லையில் வசிக்கும் மக்களுக்கு சேவை புரியவும், சங்கம் ஊக்கத் தொகை ஈட்டவும் தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களைப் புத்துயிரூட்டுதல்

சிறப்பு பணிக்குழுவின் (Task Force) பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, குறுகியகாலக் கூட்டுறவு நிறுவனங்களில் சீரமைப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசிடமிருந்து நிதியுதவி பெற்று தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அவற்றின் செயல்பாடுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளன.

இத்திட்டத்தின் கீழ் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்காக தயாரிக்கப்பட்ட வியாபார வளர்ச்சி திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி தங்களுடைய சங்கம் வாழ்திறன் உள்ள சங்கமாக வளர்ச்சியடைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தின்படி பணியாளரமைப்பு மற்றும் சில்லறைச் செலவுகள் மற்றும் மோசடியில் ஏற்பட்ட இழப்புகள் போன்றவற்றிற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எந்த நிதியுதவியும் இல்லை. அத்தகைய இழப்புகளுக்கு தொடக்க கூட்டுறவுக்கடன் சங்கத்தின் பங்கு 100 விழுக்காடு ஆகும். இதனை நன்குணர்ந்து தங்களுடைய சங்கத்தில் செலவினங்களைக் குறைக்கவும், மோசடிகள், நிதி ஒழுங்கீனங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

கணினிமயமாக்குதல்

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி பரிந்துரைத்த மேலாண்மை தகவல் (Management information System) முறையின்படி (Common Accounting System) பராமரிக்கப்பட வேண்டிய 26 பதிவேடுகளும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கென பொதுப்பயன்பாட்டுடைய மென்பொருளில் அறிக்கைகளாக கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தங்களுடைய சங்கத்திலும் செயல்படுத்த தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

நிர்வாக நடைமுறை

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க நிர்வாகம் குறித்த நடைமுறைகள் கீழ்க்கண்டவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.

பொது நிர்வாகம், பணியாளர் நிர்வாகம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில், அரசு மற்றும் மத்திய வங்கியின் திட்டங்கள் செயல்படுத்துவதில் பணியாளர்களுடைய ஈடுபாடு முக்கியமான ஒன்றாகும். எனவே பணியாளர்களின் பணித்திறனை முழுமையாகப் பயன்படுத்த, அவர்களின் கடமைப் பொறுப்புகளை நிர்ணயிப்பது உங்களுடைய தலையாய கடமையாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் - கையேடு

3.03389830508
சரவணக்குமார் Jan 14, 2019 08:26 AM

உறுப்பினர் ஆவது எப்படி தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்க படுகிறார்கள்

பரசுராமன் Dec 09, 2018 11:50 AM

உறுப்பினர் ஆவது எவ்வாறு?
தலைவருக்கு உண்டான அதிகாரங்கள் யாவை?

*****@gmail.com க்கு தெரிய படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

ம்.Tamilselvan Sep 01, 2018 11:05 AM

ஜியோ டெக்ஸ்ஸில் வாழை மட்டையில் இருந்து நூல் தயாரிப்பது சங்கங்களில் செயல்படுத்த முடியுமா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top