பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம் / பணியாளர் நிர்வாகத்தில் முக்கிய அம்சங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பணியாளர் நிர்வாகத்தில் முக்கிய அம்சங்கள்

பணியாளர் நிர்வாகத்தின் முக்கிய அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பணியாளர்கள் பணிநிலைத்திறன்

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை அவற்றின் இலாப / நட்ட அடிப்படையில் நான்கு வகுப்புகளாக (ஏ, பி, சி மற்றும் டி) வகை செய்து அரசு ஆணை (நிலை) எண் 189 கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (சி.என்) துறை நாள் 17:112009 இல் அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் 31.03.2012 ல் உள்ள உறுப்பினர் அளவில் உள்ள கடன் நிலுவை அடிப்படையில் மேற்சொன்ன அரசாணையில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பணிநிலைத்திறன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் தங்களுடைய சங்கம் எந்த பிரிவினைச் சேர்ந்தது என்பதை முதலில் தாங்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும். பணிநிலைத்திறன் உச்ச அளவுதான். உச்ச அளவு முழுமைக்கும் பணியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதாக தாங்கள் கருதக் கூடாது. சங்கத்தின் வரவு செலவு, பணிப்பளு, சங்கத்தின் இலாபம், சங்கத்தின் நிதி நிலைமை ஆகியவைகளைக் கருத்திற் கொண்டு பணியாளர்களின் தேவையை உச்ச அளவிற்குட்பட்டு நிர்ணயம் செய்யலாம். பணிநிலைத் திறனுக்கும் அதிகமாகப் பணியாளர்கள் இருப்பின், பணி ஓய்வு /பணி விலகல் / பணிமாற்றம் போன்ற காரணங்களால் ஏற்படும் காலிப்பணியிடங்களை மேற்படி பணிநிலைத்திறன் எய்தும் வரை எக்காரணம் கொண்டும் நிரப்பக்கூடாது.

பணியாளர்கள் நியமனம்

  • அ. பணிநியமனம் கூட்டுறவுச் சங்க விதிகளின் விதி 1504) இன்படியும் அரசாணை (நிலை) எண்.135. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (சிஜேதுறை, நாள் 25.10.2012இன்படியும் கூட்டுறவுச் சங்கப் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்களிலும் (மாணவர் கூட்டுறவு பண்டகசாலைகள் நீங்கலாக) இளநிலை எழுத்தர் மற்றும் அதற்கு உயர் பணியிடங்களில் காலி இடங்கள் ஏற்பட்டால் அதனை மாநில ஆள் சேர்ப்பு நிலையம் ( State Recruitment Bureau) மூலம் தான் நிரப்ப வேண்டும். எனவே அவ்வாறு ஏற்படும் காலி இடத்தின் பெயர், சங்கப் பணியாளர்கள் சிறப்புத் துணைவிதிகளின்படி அப்பதவிக்கான கல்வி மற்றும் வயது தகுதி, அப்பதவிக்கான சம்பள விகிதம் மற்றும் படிகள் முதலிய விவரங்களுடன் மாநில ஆள் சேர்ப்பு நிலையத்திற்கு, அக்காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யக் கோரி கருத்துரு அனுப்ப வேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் தலைவரோ அல்லது நிர்வாகக்குழுவோ அக்காலிப் பணியிடங்களுக்கு தன்னிச்சையாகப் பணியாளர்களை தேர்வு செய்யக்கூடாது.
  • அதே போன்று விதி 1505)இன்படியும் அரசாணைநிலை) எண்.362. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நாள் 24.4.1990இன்படியும் சங்கம் நடத்தி வரும் நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடத்தில் ஏதேனும் காலியிடம் ஏற்பட்டால் அதனை மாவட்ட ஆள் சேர்ப்புநிலையம் (District Recruitment Bureau) மூலம் தான் நிரப்ப வேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் தலைவரோ அல்லது சங்க நிர்வாகக் குழுவோ அப்பணியிடங்களுக்கு தன்னிச்சையாகப் பணியாளர்களை தேர்வு செய்யக்கூடாது.
  • சங்கப் பணியாளர்கள் சிறப்புத் துணை விதிகளில் இளநிலை எழுத்தர் பணியிடத்திற்கும் கீழ் நிலையில் உள்ள பணியிடங்களில், விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் நீங்கலாக, ஏதேனும் பணியிடம் காலியிருப்பின் அப்பணியிடம் அரசு ஒப்புதலளித்துள்ள பணிநிலைத்திறனுக்கு உட்பட்டிருந்தால், சிறப்புத் துணை விதிகளின்படி தலைவர் அல்லது நிர்வாகக்குழு அப்பணியிடத்திற்கு பணியாளர்களை நியமனம் செய்யலாம்.
  • ஆனால் அவ்வாறு செய்யப்படும் நியமனம் பணியாளர் சிறப்புத் துணை விதிகளில் குறிப்பிட்டுள்ள கல்வி, வயது மற்றும் இதர தகுதிகளுக்குட்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல் பெற்று, அரசுப்பணியில் கடைப்பிடித்து வரும் இட ஒதுக்கீட்டின்படி, நேர்முகத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தான் செய்யவேண்டும்.
  • முறையற்றவகையில் பணிநியமனம் மேற்கொண்டால் நிர்வாகக்குழு மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கநேரிடும்.

எவ்வகைப் பதவிக்கும் தற்காலிக அடிப்படையில் தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்கள் பணியமர்த்தம் செய்யக் கூடாது.

பணியாளர் சம்பள விகிதம்

அரசாணை (நிலை) எண் 189, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (சி.என்) துறை நாள் 1712009 இல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் ஏ, பி, சி மற்றும் டி என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சங்கங்களின் வகைகளுக்கு தகுந்தாற்போல் ஒவ்வொருவகை பணியாளருக்கும் சம்பள விகிதங்கள் மற்றும் இதர படிகள் மேற்சொன்ன அரசாணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன அரசாணையின் அடிப்படையில் தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 12(3) ன் கீழ் ஒப்பந்தம் ஏற்படுத்தி அது 01.04.2008 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதே போன்று பணியாளர்களுக்கான விடுப்புச் சலுகைகள் மற்றும் ஓய்வூதிய நிதிப் பயன்கள் வழங்குவதற்கு பணியாளர்களுக்கான சிறப்புத் துணை விதிகள் (Special by-laws relating to service conditions) பதிவாளரது கடிதம் நக. எண். 744871 2012 / தொவேச-1, நாள் 27.8.2012-இல் தொடர்புறுத்தப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதை மீறி எந்தவொரு சலுகையும் அனுமதிக்கக் கூடாது. (iv) பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளித்தல் விதி 149()இன்படி சங்கத்திலுள்ள ஒவ்வொரு பதவிக்கான சம்பள விகிதம் மற்றும் படிகள் அச்சங்கப் பணியாளர்கள் சிறப்புத் துணை விதிகளில் குறிப்பிட்டபடி இருக்கும். தொடக்ச வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு பணியாளர்களின் சம்பளம், படி ஆகியவற்றை நிர்ணயித்து வழங்கப்பட்டுள்ள அரசாணை (நிலை) எண் 189 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோ பாதுகாப்பு (சி.என்) துறை நாள் 17:112009 மற்றும் அரசாணை (நிலை) எண்.31, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நாள் 29.06.2012இன்படி பணியாளர்கள் சம்பளம் மற்றும் படிகள் பெற்று வருகின்றனர். ஊதிய ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வகைப்பாடு சங்கத்தின் இலாபத்தின் அடிப்படையில் மாறும்போது ஊதிய விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யக்கூடாது. எனவே சங்கத் தலைவர் நிர்வாகக்குழுவானது பணியாளர் சிறப்புத் துணை விதிகளுக்கு பதிவாளரின் முன் அனுமதி பெற்று திருத்தம் செய்த பின்னரே பணியாளர்களின் சம்பள விகிதம், படி முதலியவற்றை உயர்த்திக் கொடுக்க வேண்டும். சங்கத்தலைவர் அல்லது நிர்வாகக்குழு தாமாகவே தொழில் தகராறு சட்டம் பிரிவு 123)இன்படி உடன்படிக்கை (Agreement) ஏற்படுத்தியோ அல்லது தொழில் தகராறு சட்டம் பிரிவு 18() இன் கீழ் ஒப்பந்தம் (Settlement) ஏற்படுத்தியோ சங்கப் பணியாளர்களுக்கு சம்பள விகிதம் மற்றும் படிகளை உயர்த்தி வழங்கக்கூடாது. அதற்கு கூட்டுறவுச் சட்டம் மற்றும் விதிகள் அனுமதிக்கவில்லை. அவ்வாறு வழங்கினால் அதனால் ஏற்படும் நிதியிழப்புக்கு, தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டப் பிரிவு 87 இல் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் பொறுப்பாக்கப்பட்டு, அத்தொகை அவர்களிடமிருந்து வசூலிக்க வகைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களை நிர்வாகக்குழுவிலிருந்து நீக்கிடவும், அவர்களை எந்த கூட்டுறவுச் சங்கத்திலும் இனி மேல் நிரந்தரமாக எந்த பதவியும் வகிக்க முடியாதபடி தகுதியற்றவராக்கவும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டப்பிரிவு 36 இல் வகைசெய்யப்பட்டுள்ளது.

பணியாளர்களின் கடமைகளும், பொறுப்புகளும்

பணியாளர்களிடமிருந்து போதிய பணித்திறனை எதிர்பார்ப்பதும், அதனை செயலாக்குவதும் தங்களுடைய கடமையாகும். பணியாளர்களின் பணித்திறன் முழுமையாக பயன்படுத்தினால்தான் உறுப்பினர்களுக்கு சங்கம் முழு சேவையை செய்வதற்கும், சட்ட விதி மற்றும் சங்கத் துணைவிதிகளில் சொல்லப்பட்டு இருக்கும் காரியங்களை முறையாக நிறைவேற்றுவதற்கும் பதிவாளர் மற்றும் அரசின் எதிப்பார்ப்பினை ஈடு செய்வதற்கும் ஏதுவாகும்.

கூட்டுறவுச் சங்க விதிகளில் விதி 149()இன்படி ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும், அச்சங்கத்திலுள்ள ஒவ்வொரு பதவிக்கும் உரிய கடமைகளும் பொறுப்புக்களும் பணியாளர்கள் சிறப்புத் துணை விதிகளில் நிர்ணயிக்க வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பதவிக்கும் கடமைகளும் பொறுப்புக்களும் சங்கப் பணியாளர்கள் சிறப்புத் துணை விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை சங்கத் தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். சில சங்கங்களில் சிறப்புத் துணை விதிகளில் நிர்ணயிக்கப்படாமல், ஒழுங்கு முறை விதிகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறெனில் அதனை சரிபார்த்து அதில் மாற்றம் ஏதேனும் செய்ய வேண்டுமென தலைவர் அல்லது நிர்வாகக்குழு கருதினால் அதற்குரிய முன்மொழிவினை சம்பந்தப்பட்ட சரக துணைப்பதிவாளருக்கு அனுப்பி அவருடைய ஒப்புதலைப் பெற்று மாற்றி அமைத்துகொள்ளலாம்.

ஒவ்வொரு பணியாளருக்கும், பணியாளர்கள் சிறப்புத் துணைவிதி அல்லது ஒழுங்குமுறை விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள பணியாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், தக்க அலுவலக ஆணை மூலமாக தொடர்புறுத்தி அதனை பணியாளர்களுக்கு சார்வு செய்து ஒப்புதல் பெற்று ஆணையின் நகலினை சங்கத்தின் இருப்புக் கோப்பில் வைக்க வேண்டும். கடமைகளையும், பொறுப்புக்களையும் கூடுமானவரை பணியாளர்களுக்கு வாய்மொழி மூலமாக வழங்குவதை தவிர்க்கவேண்டும். நிர்வாக ஆணைகள் எப்போதுமே உரிய பயனை அளிக்கக்கூடியவையாகும். அப்போது தான் சம்பந்தப்பட்ட பணியாளர்களை அவர்தம் கடமையைச் செய்ய தூண்டவும், பணியாளர் கடமை தவறும் பட்சத்தில் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஏதுவாகும்.

ஒரு பணியாளர் விடுப்பில் சென்றால் அந்த இடத்திற்கு மற்ற பணியாளரை கூடுதல் பொறுப்பில் நியமிக்கும்போது வழங்கப்படுகிற நியமன உத்திரவிலேயே, கூடுதல் பொறுப்பு பணிக்கான கடமைகளையும் பொறுப்புக்களையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். கீழ்நிலை பணியாளர்களுக்கு உயர்நிலை பொறுப்புகளை வழங்குவது கட்டாயம் தவிர்க்க வேண்டும். சங்கப் பணியாளர்களில் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சங்கத்தின் வரவு, செலவு பொறுப்புகளும் நகைப் பொறுப்புகளும் இருப்பதால், பிற்காலத்தில் ஏற்படும் ஒழுங்கீனங்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஏதுவாக, சிறப்பு துணை விதிகளின் கீழ் சொல்லப்பட்டு இருக்கும் சில சரத்துகளும் மற்றும் அலுவலக ஆணைகளுமே உறுதுணையாகும். எனவே பணியாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிர்ணயம் செய்யும் போதோ அல்லது மாற்றம் செய்யும் போதோ தங்களின் கூரிய கவனம் தேவை என்பதை தாங்கள் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்.

துறை அலுவலர்களின் ஆய்வின் போதோ அல்லது தங்களின் நிர்வாகத்தின் போதோ காணப்படும் குறைகளுக்கு பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் பணியாளர்கள் சிறப்புத்துணை விதிகளுக்குட்பட்டு முறையான குற்றச்சாட்டு குறிப்பாணை பிறப்பித்து, விளக்கம் பெற்று பரிசீலித்து, பின் உள்விசாரணை அலுவலரை நியமித்து உள்விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஒழுங்கு நடவடிக்கைக்குண்டான அனைத்து விதிமுறைகளையும் கையாண்டு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். அங்ங்ணம் வழங்கப்பட்ட தண்டனைகளுக்கு மேல்முறையீட்டு அதிகாரம், தண்டனைக்கு தகுந்தவாறு இன்னாருக்கு உண்டு என்ற விவரம் தங்களுடைய சங்கப் பணியாளர் சிறப்பு துணைவிதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது ஒழுங்கு நடவடிக்கைகளின் மீதான மேல்முறையீடுகளில் நீதிமன்றங்களிலிருந்து நுண்ணிய தீர்ப்புகள் வெளிவருகின்றன. எனவே கூட்டுறவு சார்பதிவாளர்களஅலுவலர் அல்லது துணைப்பதிவாளரை அணுகி தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தெளிவு பெற்று ஒழுங்கு நடவடிக்கைகளை முறையாக முடிவு செய்து தக்க ஆணைகள் வழங்கலாம். இதில் தவறு நேரும் போது சில சமயங்களில் சங்கம் பெருத்த நிதி இழப்பிற்கு ஆளாக ஏதுவாகும். நியாய விலைக்கடை பணியாளர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கையைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய தவறுக்கு தக்கவாறு தண்டனை அளிப்பது வெகு முக்கியமாகும். அப்போது தான் பொது விநியோகத்திட்டம் நுகர்வோரின் முழு பயன்பாட்டிற்காகச் செயல்பட இயலும், பணியாளர்களின் பணியினை வாரம் ஒரு முறையேனும், அவரவருக்கு இடப்பட்ட குறியீடுகள், இலக்குகள் ஆகியவற்றை அடையுமாறு கண்காணிப்பதும், கணக்கு புத்தகங்களை பராமரித்தல் மற்றும் இருப்பு, பொறுப்பு போன்றவற்றை கண்காணிப்பதும் அவர் தம் பணித்திறனை உயர்த்துவதற்கு ஏதுவான பணி நடைமுறைகளாகும். இத்தகைய திறனாய்வினை உரிய கோப்பு பராமரித்தும் அல்லது பேரேட்டில் குறிப்பு செய்வதும் தங்களுடைய நிர்வாகத்தை மேன்மை அடையச்செய்ய சிறந்த வழியாகும்.

நிதி நிர்வாகம்

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் நிர்வாகத்தில், முதன்மையானதும், முக்கியமானதும் நிதி நிர்வாகம் ஆகும். நிதி நிர்வாகத்தை சங்க நலனுக்கும் சங்க உறுப்பினர்களின் நலனுக்கும் உகந்தவாறு சட்டம், விதி மற்றும் பதிவாளரின் அறிவுரைகளுக்குப்பட்டு அமுல்படுத்தாவிட்டால், சங்கத்தின் நிதி நிலைமை சீர்கேடு அடையவும், சங்கம் துணை விதிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறிக்கோள்களை அடைய இயலாமலும் போகலாம். எனவே கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றி நிர்வாகம் மேம்பாடு அடைய ஒத்துழைக்க வேண்டும். சங்கத்திற்குண்டான நிதி 3 வழிகளில் திரட்டப்படுகிறது. (1) சங்க உறுப்பினர்களிடமிருந்து பங்குத் தொகை மற்றும் இட்டு வைப்புகள் திரட்டுவதன் (i) மாநில அரசின் பங்கு முதலீடு, திட்ட மானியங்கள், கடன்கள் மற்றும் பிரத்தியேக நிதி உதவிகள் மூலமாக, (i) மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் மற்றும் நிதியுதவிகள் ஆகியவை இதில் அடங்கும். மேற்சொன்ன வழிகளில் பெறப்படும் நிதியினை அதனதன் தன்மைக்கு ஏற்றவாறு அதிக இலாபம் கிட்டும் வகையில் பயன்படுத்துவது தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினுடைய முழுப் பொறுப்பு ஆகும். உறுப்பினர் பங்கு மூலதனம் மற்றும் இட்டு வைப்புகள் உறுப்பினர் பங்கு மூலதனம் வசூல் செய்வதற்கு ஒரு பங்கின் மதிப்பு எவ்வளவு என தங்களின் சங்க துணை விதிகளில் நிர்ணயிக்கப்பட்டு, சரகத் துணைப்பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் அவர் கோரும் பங்குகளுக்கான தொகையை நுழைவுக்கட்டணம் உட்பட வசூலிக்க வேண்டும். கடன் பெறும் உறுப்பினர்கள் பெறும் கடனுக்கு உகந்தவாறு, குறிப்பிட்ட சதவீதம் பங்குத்தொகை பெற்றிருக்க வேண்டும் என்று தங்களின் சங்க துணை விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனைக் கடைபிடிக்கும் பொழுது மொத்த பங்கு மூலதன ஒதுக்கீட்டிற்கு மேல் பங்கு மூலதனம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டால், பேரவையின் ஒப்புதலோடு துணைவிதியில் தெரிவிக்கப்பட்டிருக்கும் உச்சபட்ச பங்கு மூலதன அளவை தேவையான அளவிற்கு உயர்த்தி துணைவிதி திருத்தம் செய்து துணைப்பதிவாளரின் ஒப்புதல் பெற்று அமுல் செய்யலாம்.

பங்கு மூலதனத்தைக் காட்டிலும் சங்கத்திற்கு அதிக நிதி வருவாய் தரக்கூடிய இனம் தனி நபர் இட்டு வைப்புகள் ஆகும். கூட்டுறவு சங்கங்கள் பிற அமைப்புகளைக் காட்டிலும் முதலீடுகள் அதிகம் பெறுவதற்கு ஏதுவாக தனி நபர் இட்டு வைப்புகள் மீதான வட்டி பிற நிதி நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதலாகக் கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இட்டு வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் மாநில அளவிலான வட்டி நிர்ணயக் குழு நிர்ணயித்த வட்டி விகிதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. எனவே இச்சலுகையைப் பயன்படுத்தி தலைவரும் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் உள்ள செல்வாக்கினை அடிப்படையாகக் கொண்டு அதிக இட்டுவைப்புகள் நிதி திரட்டி அதனைக் கொண்டு உயரிய வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி, அதனை முழுமையாக வசூலித்தால் சங்கம் கூடுதலாக இலாபம் அடைய ஏதுவாகும். ஏனெனில், இட்டு வைப்புகள் மூலம் பெறப்படும் நிதிக்கு குறைந்த அளவே சங்கத்திற்கு செலவு ஏற்படும். உதாரணமாக உறுப்பினர்களுக்குண்டான விளம்பர நோட்டீஸ்கள் மூலமாகவும், நேரடித் தொடர்புகள் மூலமாகவும் இந்நிதியைப் பெருக்கலாம். இட்டு வைப்புகளுக்கான வட்டி விகிதம் மாநில அளவிலான வட்டி நிர்ணயக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பதிவாளாரால் அல்லது மத்திய கூட்டுறவு வங்கியால் அவ்வப்போது தொடர்புறுத்தப்படுகிறது. அதனை வழுவாது கடைபிடிக்க வேண்டும். இந்த வகையில் பெறப்படும் நிதியினை பெறப்பட்ட இட்டு வைப்பின் வட்டி விகிதத்தை விட அதிக வட்டி கிடைக்கும் கடன்களை வழங்குவதில் அதிக கவனமும், அக்கறையும் தங்களுக்கு வேண்டும். நிரந்தர இட்டு வைப்பாக இருந்தால் இட்டு வைப்பு ரசீதுகள் வழங்குவதை உன்னிப்பாக கவனித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பெறப்படும் தொகைகள் சம்பந்தப்பட்ட கணக்குகளில் கணக்குப் பேரேடுகளில் வரவு செலவு செய்யப்படுவதையும் காசோலைக்கு பணம் வழங்கும் முன்னர் சங்க நடைமுறை விதிகளையும் கவனித்து செயல்படுவதும் அத்தியாவசியம் ஆகும். இதன் மூலம் பெறப்படும் நிதிகளை நகைக்கடன் வழங்குவதில் ஈடுபடுத்தினால் தக்க இலாபம் பெறலாம். இந்த இட்டு வைப்புகளை, சங்கம் பெற்றுள்ள குறுகிய கால அல்லது மத்திய கால கடன்களை திருப்பிச் செலுத்த பயன்படுத்தினால் மற்றும் சிப்பந்தி மற்றும் சாதல்வார் செலவினத்திற்கு பயன்படுத்தினால் சங்கம் நட்டம் அடைய ஏதுவாகும்.

அத்தகைய செயல்களை கட்டாயம் தாங்கள் தவிர்க்கவேண்டும். மேலும் நிலுவையிலுள்ள வைப்புகளின் 25% க்கு குறையாமல் நீர்ம ஆதாரமாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதோடு வைப்புத் தொகையில் 0.15 சதவீதம் வைப்புத் தொகை உத்தரவாத நிதிக்குச் (Deposit Guarantee Fund) செலுத்த வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் - கையேடு

3.04347826087
ஆர் சுப்பிரமணி Jul 14, 2020 07:53 AM

நான் 20 2 1 998 கருணை அடிப்படையில் இரவு காவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டேன் என்னை நிர்வாகம் இரு ரெகுலர் அதாவது முறையற்ற பணி நியமனம் என்று சொல்கிறார்கள் இரெகுளர் என்பதால் பதவி உயர்வு கொடுக்க நிர்வாகம் மறுக்கிறதுரெகுலர் என்பதால் பகுதி நேர கூட்டுறவு பட்டய பயிற்சி படிப்பதற்கும் நிர்வாகம் மறுத்து வருகிறது தயவுகூர்ந்து இதுக்கு பதிவாளரின் சுற்றறிக்கையை ஏதாவது உண்டா இருந்தால் எனக்கு கொடுத்து உதவுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

விஜய் Jul 10, 2020 12:24 PM

சங்கத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பவைத்திருக்கலாமா? இவர்களுக்ககு பதவி உயர்வு கிடைக்குமா?

K. கோவிந்தராஜ் Jul 02, 2020 04:08 AM

வாரிசு வேலை தகவல் தெரிய யாரிடம்
தொடர்பு கொள்வது

ஜெகதீஸ் May 11, 2020 12:59 PM

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு வருடத்திற்கு மொத்தம் எத்தனைநாள் லீவு?

E. திகேஷ் May 01, 2020 10:18 PM

சங்க விதிகளின் படி ஒரு விற்பனையாளர் சங்கத்தில் காலியாக உள்ள எழுத்தர் பணிக்கு செல்ல என்ன கல்வி தகுதி வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top