பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம் / கூட்டுறவுக் கடன் சங்கங்களை கணிணிமயமாக்கல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கூட்டுறவுக் கடன் சங்கங்களை கணிணிமயமாக்கல்

கூட்டுறவுக் கடன் சங்கங்களை கணிணிமயமாக்கல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பொது சேவை மையங்கள்

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மின்னஞ்சல், ஒளி நகல் எடுத்தல், நிலவுடமை ஆவணங்களின் நகல் வழங்குதல், இணைய தளம் மூலம் பயணச்சீட்டு பெறுதல் போன்ற பல்வேறு வகையான மின்னணு சேவைகளை அளிக்கும் நோக்கத்துடன் 1538 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன்சங்கங்களில் பொதுச் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட பொதுச் சேவை மையங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தும்பட்சத்தில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்பாக அமைவதுடன் சங்கத்தின் அருகிலுள்ள அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் சேவைகளை பெற ஏதுவாக அமையும். எனவே, தங்கள் சங்கத்தில் இத்தகைய மையம் அமைக்கப்பட்டிருப்பின், அதன் செயல்பாடுகள் சீராக இருப்பதை கண்காணித்து வர வேண்டும்.

பாதுகாப்பு அறை கட்டுதல்

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தற்போது அதிக அளவில் நகைக் கடன்கள் வழங்கி வருகின்றன. இங்கணம் நகைக் கடன்களுக்கு ஈடாகப் பெறப்படும் நகைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து சங்கங்களுக்கும் பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளன. எனினும், தங்கள் சங்கத்தில் இத்தகைய வசதிகள் இல்லாவிடில், இதனை விதிமுறைகளுக்குட்பட்டு ஏற்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கான கட்டுமானப் பணிகள் பதிவாளர் தெரிவிக்கும் வழிமுறைகளுக்குட்பட்டு இருப்பதை தாங்கள் கண்காணிக்க வேண்டும்.

நகை பாதுகாப்பு நடவடிக்கைகள்

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கு விவசாயம் & பொது ஈடாக பெறப்படும் நகைகளின் பாதுகாப்பு தொடர்பாக பின்வரும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அ) இரும்புக் கதவுடன்கூடிய பாதுகாப்பு அறை கட்டப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு அறை இல்லையெனில் கட்டுவதற்கு துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆ) இரட்டைச் சாவி முறை மூலமாக நகைப்பெட்டகம் பராமரிக்கப்பட வேண்டும்.

இ) இரட்டைச் சாவி வைத்திருக்கும் பணியாளர்களுக்கு நகைக்கடன் பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்படவேண்டும்.

ஈ) பாதுகாப்பு அறை மற்றும் இரும்புப் பெட்டக மாற்றுச் சாவிகள் சம்மந்தப்பட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளில் பேணப்படுவதை சங்க நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உ) அபாயமணி செயல்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். அபாயமணியில் பழுது ஏற்படின் அன்றை யதினமே சரிசெய்யப்படவேண்டும்.

ஊ) சங்கத்தின் சொத்துக்கள் மற்றும் நகைக் கடன்களுக்கு ஈடாகப் பெறப்பட்ட நகைகளுக்கு அவற்றின் மதிப்பிற்கு குறையாமல் உரிய காப்பீடு செய்யப்பட்டுள்ளதையும் காப்பீட்டு நிறுவனத்திற்கு உரிய தேதியில் பிரிமியம் செலுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும் சங்க நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.

எ) இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான நபர்கள் யாரேனும் சங்க வளாகத்திற்கு அருகில் வருவதை அறியப்படின் உடன் தொடர்புடைய காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

ஏ) சங்கக் கட்டடத்தைச் சுற்றி போதிய மின் விளக்கு வசதிகள் கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை கணினிமயமாக்கல்

Data creation, data porting, Looph voucher entry  போன்ற நடவடிக்கை மற்றும் அவை கண்காணிக்கப்பட வேண்டிய விதம் குறித்து விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

புள்ளி விவரங்கள்

புள்ளி விவரங்கள் (Data) என்றால், சங்கத்தின் நிதிசார்ந்த மற்றும் நிதிசாராத விபரங்களை அன்றுள்ளபடி (Tally) ஒத்திசைவு செய்து Excel-Sheet-ல் பதிவு செய்தல் - இதற்குத் தேவையான புள்ளிவிவரங்களைச் சங்கம் தயாரித்து அளிக்க வேண்டும். ஒத்திசைவு செய்யப்பட்ட சரியான புள்ளி விவரங்களை சங்கம் அளித்தால் மட்டுமே, அப்புள்ளி விவரங்கள் மென்பொருளில் ஏற்றப்பட்டு, சங்கம் கணினிமயமாக்கப்பட்ட நிலையை அடையும்.

நிதி சாரா விவரங்கள்: (உ-ம்)

 1. உறுப்பினர் பெயர்,
 2. தந்தை பெயர்,
 3. உறுப்பினர் எண்,
 4. விலாசம்,
 5. KYC Norms

நிதி சார்ந்த விவரங்கள். (உ-ம்)

 1. உறுப்பினர் பங்குத்தொகை, சங்கத்தின் பங்கு முதலீடு
 2. உறுப்பினர் வைப்புத் தொகை (சிறு சேமிப்பு SB, இட்டு வைப்பு FDRD)
 3. சங்கம் முதலீடு செய்துள்ள சிறுசேமிப்பு, இட்டுவைப்பு
 4. ஒவ்வொரு உறுப்பினரும் சங்கத்திற்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவை
 5. சங்கம் மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவை
 6. மேற்கண்ட வைப்புகள் மற்றும் கடன்களுக்கு வசூலிக்க வேண்டிய வட்டி அல்லது சங்கம் செலுத்த வேண்டிய வட்டி ஆகியவையாகும்.

புள்ளிவிவரங்கள் உருவாக்குதல் - (Data Creation)

பதிவாளரால் தொடர்புறுத்தப்பட்ட படிவத்தில் கையால் நிரப்பலாம் அல்லது கணினியில் Excel sheet-இல் பதிவு செய்ய வேண்டும். இப்புள்ளி விவரங்கள் வருடத்தின் தனி பேரேடு (Individual Ledger) களின் கூட்டுத் தொகைக்கும் அந்தந்த தலைப்பிலான பொதுப்பேரேடு (General Ledger) கூட்டுத் தொகைக்கும் ஒத்திசைவாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒத்திசைவாக இல்லாத நிலையில் உள்ள கணக்குகளை கணினியில் ஏற்றவும் செய்யக் கூடாது. எனவே கணக்குகள் சங்கத்தால் நேர் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

புள்ளிவிவரங்கள் ஏற்பு செய்தல் - Data Vaidation

புள்ளி விவரங்கள் உருவாக்குதல் (Data Creation) படி ஒத்திசைவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டு பதியப்பட்ட விவரங்கள் கணினியில் ஏற்றம் செய்யப்பட்டுள்ள பொது பயன்பாட்டுடைய மென்பொருளில் (CAS)பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு ஏற்கெனவே கையால் எழுதப்பட்ட பதிவேடுகளில் உள்ள பதிவுகளும், கணினி ஒத்திசைவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்ட மென்பொருளில் ஏற்றம் செய்யப்படவுள்ள பதிவுகளும் ஒத்திருக்க வேண்டும். அங்கணம் ஒத்திருந்தால் மட்டுமே CAS -இல் பதிவு செய்வது சரியானதாக அமையும் இவற்றில் பிழைகள் ஏதேனுமிருப்பின், முகவர்கள் பதிவுகளை சங்கங்களுக்கு திருப்பி அனுப்பி, பிழையில்லா புள்ளி விவரங்களை அனுப்பக் கோருவர். எனவே கணினிமயமாக்க ஒவ்வொரு கணக்கிற்கும் அசல், கொடுக்கபடவேண்டிய வட்டி மற்றும் வர வேண்டிய வட்டி இனங்களை தவறில்லாமல் சங்கம் தயாரிக்க வேண்டும்.

புள்ளிவிவரங்கள் ஏற்றம் செய்தல் - Data Porting

மேற்கூறிய வகையில் ஒத்திசைவு (Vaidate) செய்யப்பட்ட புள்ளி விவரங்களை FMS vendors களால், Excel Sheets பதிவுகளிலிருந்து பயன்பாட்டு மென்பொருளில் ஏற்றம் செய்து அதன் மூலம் உரிய விவரங்களைப் பெறுவது Data Porting ஆகும்.

வரவுச் சீட்டுகள் பதிவு செய்தல் - Voucher Entry

மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட தேதியின்படி மட்டுமே இருக்கும். அனைத்தையும் நடப்பு தேதி வரைக்குமான தினசரி வரவு செலவுகளை, வரவுச் சீட்டு (Voucher) வாரியாக கணினியில் பதிவு செய்யவேண்டும். இதனை பணி நாளுக்கும் (Each Working Day-க்கும்) பதிவு செய்து, கணினியில் அன்றைய கணக்கை முடிக்கச் (Day end) செய்ய வேண்டும். அப்போதுதான் அன்றைய தினத்துக்கான தனிப்பேரேடு மற்றும் பொதுப்பேரேடு நிலுவை விவரங்கள் கிடைக்கும்.

இங்கணம் நிலுவையில் இருக்கும் தினசரி வரவு செலவுகள் அனைத்தையும் சரிபார்த்து கணக்கு விவரங்கள் சரியாக இருந்தால், அடுத்த நாள் முதல் சங்கத்தில் உறுப்பினர்களின் அன்றாட வரவு செலவுகளை கணினி மூலமே பரிவர்த்தனை செய்யலாம். மேலும் அன்றாட கணக்குகளை ஏற்றம் செய்து அன்றைய தின கணக்குகளை முடித்து (Day lend செய்து) அன்றைய தின கணக்குகளின் பட்டியல்களை பொதுப் பேரேடு, நாள் வழிப்பதிவேடு ஆகியவற்றை கணினி மூலம் தட்டச்சுப் பிரதியாக எடுக்கலாம்.

தனியாக கைப்பிரதிகள் ஏதும் எடுக்க தேவையில்லை. இந்நிலையை அடைந்த சங்கங்கள் மையம் முழுமையாகி வியாபார பரிவர்த்தனைக்கு தயார் (Online) என்று கருதப்படும்.

புள்ளி விவரத் தொகுப்பு (Backup)

அன்றாட வரவு செலவுகள் கணினியில் ஏற்றப்பட்டு அன்றைய கணக்கு முடிக்கப்பட்டபின் (Dayend) அன்றைய தின சங்க வரவு செலவு நடவடிக்கை முடிவுற்றவுடன் கணினி ஒவ்வொரு கணக்கிற்குமான அசல் மற்றும் வட்டி நிலுவைகளை சேமித்துக்கொள்ளும். அவ்வாறு சேமிக்கப்பட்ட கணக்கு விவரங்களை பாதுகாப்பிற்காக தனியாக பென்டிரைவ் (Pen Drive) அல்லது குறுந்தகட்டில் (CD) பதிவு செய்து பாதுகாப்பாக வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், கணினியில் பழுது ஏற்பட்டாள் இவ்வாறு சேமிக்கப்பட்ட புள்ளி விவர தொகுப்பிலிருந்து சங்கம் வாடிக்கையாளர் சேவைகளை தொடர்ந்து செய்யலாம். எனவே அன்றன்று வங்கி கணக்குகள் Back Up எடுக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உடனிருந்து பழக்குதல் (Hand Holding Support)

உறுப்பினர் பரிவர்த்தனைகளை கணினி மூலம் செய்ய ஆரம்பித்த நாள்முதல் வேலை நாட்களுக்கு கணினி வசதி நிர்வாக சேவை (Facility Management Service) அளிக்கும் நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் சங்கப் பணியாளர்களுடன் உடனிருந்து கணினியை இயக்குவதில் சங்கப் பணியாளர்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்த் வைப்பார். அதன்பின் 78 வேலை நாட்களுக்கு சங்கத்தின் அழைப்பின் பேரில் சங்கத்துக்கு வந்து கணினியை இயக்குவதில் பணியாளர்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்த்து வைப்பார்.

கணினிப் பயிற்சி

சங்கத்தில் கடைநிலை ஊழியரைத் தவிர்த்து அனைத்துப் பணியாளர்களுக்கும் பொதுக் கணக்கு மென்பொருளை கணினியில் எவ்வாறு இயக்குவது என்ற பயிற்றுவிக்கப்படும். தங்கள் சங்கத்தில் இதுவரை பயிற்சி பெறாத பணியாளர்கள் இருந்தால் மண்டல இணைப்பதிவாளர்/சரகத் துணைப்பதிவாளரை தொடர்பு கொண்டு சங்கப் பணியாளர்கள் அனைவரும் கணினி மற்றும் பொதுக் கணக்கு மென்பொருளை இயக்குவது பற்றிய பயிற்சி பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சங்கப் பரிவர்த்தனைகளை கணினி மயமாக்குவதில் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்

 1. சங்கத்தில் கணினி மயமாக்கல் பணி என்ன நிலையில் உள்ளது என்பது பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
 2. கணினிமயமாக்கல் பணி ஆரம்ப நிலையிலேயே அதாவது சங்கப் புள்ளி விவரங்களை தயாரிக்கும் நிலையிலிருந்தால் முன்னர் குறிப்பிட்டவாறு சங்கத்தின் அனைத்து கணக்குகளும் ஒத்திசைவு செய்யப்பட்டு கணினி வசதி நிர்வாக சேவை நிறுவனத்திடம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
 3. ஏற்கனவே சங்கப் புள்ளி விவரங்கள் கணினி வசதி நிர்வாக சேவை நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டிருந்தால் அக்கணக்குகள் கணினி மென்பொருளில் ஏற்றம் செய்வதைவும் பிந்தைய தினசரி பற்று மற்றும் வரவு சீட்டுகளை கணினியில் உள்ள மென்பொருளில் தொய்வில்லாமல் ஏற்றம் செய்வதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 4. அன்றைய தேதி வரையிலான பற்று மற்றும் வரவு சீட்டுகளை மென்பொருளில் ஏற்றம் செய்து தினசரி பரிவர்த்தனை கணினியில் நடைபெற (On line) வழிவகை செய்ய வேண்டும்.
 5. ஒவ்வொரு தின பரிவர்த்தனைகள் முடிவுற்றவுடன் அனைத்து பற்று மற்றும் செலவுகள் கணினியில் ஏற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து அன்றைய கணக்கீட்டுப் பணி முடிக்கப்பட்டு (Day End) அன்றைய வரவு செலவுக்கான கணக்கு பட்டியல் அந்தந்த தலைப்பிலான பேரேடுகளின் பட்டியல் அச்சுப் பிரதியாக எடுக்கப்பட்டு சங்கத்தில் செயலர் மற்றும் தொடர்புடைய கணக்கு பிரிவு எழுத்தர்கள் இதர அலுவலர்கள் சான்று செய்து ஒப்பமிட்ட அச்சுப் பிரதிகளை அன்றைய தேதியைக்குறிப்பிட்டு சங்கத்தில் பாதுகாப்பாக வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 6. அன்றைய கணக்கீட்டுப் பணி முடிவுற்றதும் புள்ளி விவரத் தொகுப்பை Pen Drive அல்லது சிடியில் ஏற்றம் செய்து சங்கத்தின் கணக்குகள் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 7. சங்கத்தின் அனைத்துப் பணியாளர்களுக்கும் கணினி மற்றும் பொதுக்கணக்கு மென்பொருளை கையாளுவதில் பயிற்சி அளிக்கப்பட்டதை அல்லது பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 8. உடனிருந்து பழக்குதல் பணியை கணினி வசதி நிர்வாக சேவை நிறுவனம் முன்னர் குறிப்பிட்டுள்ளபடி செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கணினி மயமாக்கலின் நன்மைகள்

 • மாறிவரும் சூழலுக்கேற்ப பிற நிதி நிறுவனங்களுடன் போட்டியிட்டு சங்கத்தின் லாபத்தை அதிகரித்து வாழ்திறன் உள்ள சங்கமாக மாறவும், வாழ்திறன் நிலையை மேம்படுத்தவும் சுருக்கமாக சங்கத்தின் வளர்ச்சிக்கு, கணினி மயமாக்கல் அவசியமாகும்.
 • வாடிக்கையாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான சேவையை துரிதப்படுத்த உதவும்.
 • சங்கத்தின் அன்றாட வரவு செலவுகள் கணினியில் பதியப்பட்டு சங்கத்தின் நிதி நிலை அறிக்கைகளை, லாப நட்ட கணக்குகளை தினமும் அறிய உதவும். இதன் மூலம் வங்கியின் வளர்ச்சி திட்டம் மற்றும் வருங்கால செயல் திட்டங்களை உருவாக்க முடியும்.
 • கணினி மயமாக்கி தொலைதொடர்பு வசதியும் ஏற்பாடு செய்தால் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சங்கத்தின் மூலம் பட்டுவாடா செய்ய இயலும். இதன் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்வதோடு அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் ஒர் உன்னத அமைப்பாக சங்கம் மாறும்.
 • அத்தகைய அமைப்புகளின் நிர்வாகக்குழு உறுப்பினராக உள்ள தங்களுக்கும் சமுதாயத்தில் மதிப்பு உயரும்.
 • பிற நிதி நிறுவனங்களுக்கு இணையான வாடிக்கையாளர் சேவையை பன்முகப்படுத்த இயலும்.
 • சங்கத்தின் நிதி நிலையை உடனுக்குடன் நிர்வாகக்குழு அறிய இயலும்,
 • பணியாளர்களின் எழுத்துப் பணிச்சுமை குறையும். எனவே பணியாளர்களை வங்கியின் வசூல் பணி மற்றும் வளர்ச்சிப் பணியில் ஈடுபடுத்தலாம்.
 • நபார்டு வங்கி, மத்திய வங்கி மற்றும் இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர் ஆகியோருக்கு அறிக்கைகள் உடனுக்குடன் அனுப்ப ஏதுவாகும்.
 • சங்கத்தின் நிதி தொடர்பான (கடன் மற்றும் முதலீடுகள்) நிர்வாகம் தவிர, உரம், அத்தியாவசிய பொருட்கள், மற்றும் நுகர்வோருக்கான பொருட்கள் ஆகியவற்றின் கொள்முதல், விற்பனை, இருப்பு மற்றும் விற்பனைத்தொகை இருசால் ஆகியவற்றை சிறந்த முறையில் நிர்வகிக்க இயலும்.

நுண்காப்பீட்டு வணிகம் (Micro Insurance)

 • குறைந்த வருவாய் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கும் காப்பீட்டு வசதிகள் கிடைக்கும் வண்ணம், குறைந்த தவணைக் கட்டணத்தில் ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு வசதிகளை வழங்குவதே நுண் காப்பீட்டுத் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் 5 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், 2 பொதுக் காப்பீட்டுநிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அதன் விவரம் பின்வருமாறு.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்

 1. பூரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
 2. ஐஎன்ஜி (ING) ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
 3. அவிவா (Aviva) ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
 4. எச்டிஎஃப்சி (HDFC) ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
 5. ஸ்டார் யூனியன் டாய்ச்சி (Star Union Daich) ஆயுள் காப்பீட்டு நிறுவனம்.

பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள்

 • இஃப்கோ டோக்கியோ பொதுக் காப்பீட்டு நிறுவனம்
 • சோழமண்டலம் எம்எஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம்
 • ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

ஆதாரம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை

3.05084745763
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top