பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இயக்கத்தின் கூறுகள்

தமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் கூறுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சமூக அணிதிரட்டல் மற்றும் திறன் வளர்த்தல்

தமிழ் நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் 5% க்கு மிகாமல் ஒரு அளவு சமூக அணிதிரட்டல் செய்தி, கல்வி, தகவல் தொடர்பு போன்ற செயல்பாடுகளுக்கு அதிகாரக் குழுவின் ஒப்புதலோடு ஆண்டு செயல்திட்டத்தில் உள்ளபடி செயல்படுத்தப்படும்.

நகர்ப்புர ஏழை குடும்பங்கள் அணி திரட்டல் மூலம் சுய தொழில் அமைக்க வறுமை ஒழிப்புத் திட்டம் ஒரு பயனுள்ள, நிலையான மற்றும் முக்கியமான முதலீடாகும். தமிழ் நாடு நகர்ப்புர வாழ்வாதார திட்டமானது நகர்ப்புர ஏழைகள் (சுய உதவி குழுக்கள்) உலகளாவிய சமூக சுய உதவி குழுக்களின் அணி திரட்டல் மற்றும் அவர்களின் கூட்டமைப்புகள் உருவாக்க காரணமாக உள்ளது. குறைந்தப்பட்சம் ஒரு உறுப்பினராவது முன்னுரிமை அடிப்படையில் பெண் உறுப்பினர் நகர்ப்புர ஏழை குடும்பங்களிலிருந்து சுய உதவி குழுக்களின் வளையங்களுக்குள் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கொண்டு வரப்படவேண்டும். இக்குழுவானது ஏழைகளின் தேவைகளை பொருளாதார மற்றும் சமூக தேவைகளை நிறைவேற்ற பாடுபடும். பொதுவாக பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் எனினும் ஆண்களுக்கான சுய உதவிக் குழுக்கள் மாற்று திறனாளிகளுக்கு மட்டுமே உருவாக்க அனுமதிக்கப்படும். தமிழ் நாடு நகர்ப்புர வாழ்வாதார திட்டம் என்பது பாதிக்கப்பட்ட பிரிவினராகிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்களை தலைவராக கொண்ட குடும்பங்கள், மாற்றுதிறனாளிகள், விதவைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறிப்பாக தெருவோர வியாபாரிகள், கந்தல் துணியுடன் உடையவர்கள், வீட்டு வேலைக்காரர்கள், பிச்சைகாரர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகியவர்களை அணிதிரட்டுவதாகும். சுயஉதவிக் குழுக்களின் குடிசைகள் அளவிலான / வார்டு அளவிலான அமைப்பானது பகுதி அளவிலான அமைப்பாக மாறும். பகுதிகளின் அளவிலான அமைப்பானது நகர அளவு அமைப்பாக மாறும். பொன்விழா ஆண்டு நகர்ப்புர வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பகுதி வாரியான அமைப்புகள் அண்டைப்பகுதி குழு, அண்டைப்பகுதி கமிட்டி மற்றும் சமூக வளர்ச்சி குழு ஆகியவை தகுதிக்கேற்றவாறு சுயஉதவிக்குழுக்களின் கட்டமைப்புகளுக்கு மாற்றி அமைக்கப்படும். பகுதி அளவிலான அமைப்பு மற்றும் நகர அளவிலான அமைப்புகள் பதிவுப் பெற்ற அமைப்புகளாக பதிவுச் செய்யப்படும்.

வருவாய் உற்பத்தி மற்றும் பொருளாதார முன்னேற்ற செயல்பாடுகள்

அ) கூலி வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சி

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் சேவை துறைக்கென பெருமளவு திறமையான மற்றும் அளவான திறமையுள்ள நபர்கள் குறிப்பாக ஒட்டுநர், குழாய் பொருத்துனர், செவிலியர், மின்பணியாளர், ஆகியோரின் தேவை பெருமளவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இத்துறையில் திறமையுள்ள / அளவான திறமை கொண்ட நபர்கள் மற்றும் இதற்கு ஒப்பான பணியில் பயிற்சி பெற்றவர்கள் பட்டியலிடப்பட்டு சமுதாயத்திற்கு நம்பிக்கையான சேவைகள் செய்ய குழுவினராக ஒருங்கிணைத்து ஒரு நிறுவன அமைப்பாக செயல்படும். ஒரு பயிற்சிக்கு ஒரு நபருக்கு ரூ. 10000/- ஒதுக்கப்பட்டு அதில் பயிற்சிக்கான பொருட்கள், பயிற்சி கட்டனம், உபகரணம் ஆகியவையும் அடங்கும். திறன் மற்றும் திறன் வளர்ச்சிக்கான இப்பயிற்சி காலம் 6 மாதம் அல்லது 300 மணி நேரத்திற்குள் வழங்க அனுமதிக்கப்படும்.

ஆ) சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் திட்டம்

சுயவேலைவாய்ப்பு அல்லது தொழில் செய்ய முனையும் தகுதியுள்ள நபர்களுக்கு அதற்கான பயிற்சி மற்றும் நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி பல்வேறு சுயவேலைவாய்ப்பு செயல்பாடுகள் அடங்கிய குறுந்தொழிலை தனியாகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து ஆரம்பிக்க இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்படும். மேலும் இத்திட்டத்தில் தனி நபர் தொழில் செய்வோருக்கு திட்ட நிதியாக தொகை ரூ. 2.00 இலட்சத்திற்கு மிகாமலும் அதிகபட்ச மான்யமாக 25ரூ மற்றும் பயனீட்டாளர் பங்கு தொகையாக 5ரூ வழங்கப்படும். மகளிர் குழு தொழில் முனைவோருக்கு திட்டத் தொகையாக ரூ. 6 இலட்சமும் அதில் 35 ரூ மான்யம் மற்றும் 5ரூ பயணீட்டாளரின் பங்கீடாக உதவி தொகை வழங்கப்படுகிறது .குறைந்த அளவு 75ரூ வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் உறுப்பினர்களைக் கொண்ட சுய உதவி குழுக்குளுக்கு சுழல் நிதி வழங்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சுழல் நிதி அந்தந்த குழுக்களின் சேமிப்பிற்கு ஏற்ப அதிக பட்சமாக ஒரு உறுப்பினருக்கு ரூ. 2000/-க்கு மிகாமல் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தில் ஆர்வமுள்ள சுயஉதவி குழுக்களுக்கு வங்கிகள் மூலம் ரூ. 80,000/- கடன் தொகை வழங்க வழி வகை செய்யப்படும். பெரும்பாலான நகர்புர குடும்பங்கள் வேலையின்மை காரணமாகவோ அல்லது நிரந்தர வருமானம் இல்லாத காரணத்தினாலே மட்டும் வறுமையில் சிக்குவதில்லை, மாறாக அக்குடும்பங்கள் தங்கள் மகள்களின் திருமணத்திற்காகவோ, உடல்  நலம் பேனுதல் காரணமாகவோ வட்டிக்கு பணம் தருபவர்களை சார்ந்து வாழ வேண்டியுள்ளது. எனவே பொருளாதார நிதியுதவி நாடுவோர்க்கு இந்த உட்கூறின் கீழ், சமுதாய வளர்ச்சி சங்கங்களை பலப்படுத்தும் பொருட்டு, ஒரு சமுதாய முதலீட்டு நிதி (ஊஐகு) ஏற்படுத்தி அதில் ரூ. 5.00 லட்சம் வரை உதவித் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும்  இக்குழுக்களின் சீரிய நடைமுறைகளை பொறுத்து சமுதாய உத்திரவாத நிதியாக மேலும் ரூ. 5.00 இலட்சம் வரை வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு / கல்வி மற்றும் சுகாதார வசதிகள்

சமுதாய முன்னேற்ற சங்கம் ஒரு முகமை முனையாக இருந்து சுயஉதவிக் குழுக்கள் / அண்டை வீட்டு குழுக்களுக்கு சுகாதாரம், கல்வி, மக்கள் நலவாழ்வு பணிகளில் ஒருங்கிணைந்த விழிப்புணர்வை கொண்டு வர உதவியாக இருக்கும். பல்வேறு பகுதி சமுதாய தொழில் பண்பாட்டாளர்களுக்கு அவர்களுடைய திறமைகளை பயிற்சிகள் மூலம் மேம்படுத்தி சேவை புரியவும், சமுதாய உட்கட்டமைப்பு, வசதிகளான துப்புரவு வளாகங்கள் / வணிக வளாகங்கள், தனிபோதனை மற்றும் ஆலோசனை மையங்களில் சேவை செய்ய அமர்த்தப்படுவர்.

தமிழ் நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சமுதாய பொது மற்றும் பள்ளி கழிப்பறைகள் கட்டுவதற்கு உட்கட்டமைப்பு வசதி மற்றும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி செயல்பாடுகள் பொன்விழா ஆண்டு நகர்ப்புர வேலை வாய்ப்பு திட்டம் சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு மற்றும் குடிசைப்பகுதி மக்களின் பட்டியலின்படி உள்ள நகர்ப்புர குடும்பங்கள் இவ்வியக்கத்தின் இலக்காகும். இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும். இவ்வியக்கம் முழு குடிசைப்பகுதிகளை மையமாகக் கொண்டு அங்கு சுகாதாரம், கல்வி, பாதிப்பு மற்றும் பல மனித வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் குறியீடுகளை கண்காணிக்கும். இதற்கான கொள்கை உருவாக்கவும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு சமுதாய நடவடிக்கைகளை கண்காணிக்கவும், வளர்ச்சிக்கான கூறுகள் மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்களை ஒருங்கிணைத்து எளிதாக்க  பல்வேறு சமூகத்தினரின் மேற்பார்வையிடல், வழிகாட்டல் மற்றும் ஆதரவுகளைப் பெற இவ்வியக்கத்தில் வழிவகை செய்யப்படும். பாலினம் உணர்திறன் மற்றும் சமத்துவம் ஆகியவை பொது நடைமுறையில் கொணர முக்கிய வெளியீடாக அமையும். சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை தரத்தை பெறுவதற்கான சமூக அமைப்புக்களின் ஆழ்ந்த ஈடுபாடு இப்பிரிவின் ஒரு முக்கிய வெளியீடாக அமைக்கப்படும். அதே போல் ஏழைகள் மத்தியில் சமூக கட்டமைப்புகள் மற்றும் குழுக்கள் வலுப்படுத்த முக்கிய வெளியீடாக அமையும்.

வீட்டு வசதி

ஒருங்கிணைந்த திட்ட நிதியாக ராஜீவ் ஆவாஸ் யோஜனா மற்றும் ஜவஹர்லால் நேரு தேசிய புணரமைப்புத் திட்டங்களில் நகர்ப்புர ஏழைகளுக்கு குறைந்த பட்ச குடிமை வசதிகளான வீட்டு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உட்கூறிகள் அதிகாரமிக்க குழு ஒப்புதலோடு ஆண்டு திட்டத்தின் படி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும். இவற்றிக்கான ஆண்டு திட்டம் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் ஒப்புதலோடு செய்யப்படும். இவ்வியக்கத்தின் வழிவகைகளின் மூலம் அடிப்படை தேவைகளான உள்கட்டுமானங்கள் ஒதுக்கீடு மற்றும் குடிசை மேம்படுத்துதல் போன்றவைக்காக நகர்ப்புர வறுமை ஒழிப்பு தேசிய குழுவுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகள்

தெரு விளக்குகள், குடிநீர் மற்றும் சுகாதாரம் பேணவும் குறைந்தபட்ச பாதுகாப்பான குடிநீர், சுத்தமான கழிப்பறை, கழிவுநீர், மழை நீர் வடிகால் மற்றும் திட கழிவு மேலாண்மை போன்றவை நகர்ப்புர மக்கள் அனைவருக்கும் வழங்கப்படும். இவ்வியக்கத்தின் செயல்பாடுகள் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்பு 1992  ஆம் ஆண்டு 74வது திருத்திய சட்டத்தின் படி அடிப்படை வசதிகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பல சேவைகளை வழங்குவதாகும்.

நகர்ப்புர ஏழைகளுக்கான சேவைகளின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட குழுக்களான தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர்க்கும் சாலையோர வியாபாரிகளுக்கு, குறுந்தொழில் வளர்ச்சி, கடன் பெற்று தருதல், சுயசார்பு நகர்ப்புர திட்டமிடல்  வழங்கி சமூகபாதுகாப்பு அளிக்கப்படும்.

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் சாலையோர வியாபாரிக் குறித்து கால சமூக பொருளாதார கணக்கெடுப்பு எடுத்து, பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும். மேலும் இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். சாலையோர வியாபாரிகளின் வளர்ச்சிக்கான தகவல்கள் ஒவ்வொரு நகரத்திலும் பராமரிக்க வேண்டும்.

நகர்ப்புரங்களில் உள்ள வறுமை மட்டும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சாலையோர வியாபாரிகளுக்கு தமிழ் நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திறன் பயிற்சி மற்றும் குறுந்தொழில் நிறுவன வளர்ச்சிக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் வளர்ச்சி அடைய உதவுகிறது.

சாலையோர வியாபாரிகள் அடிப்படை வங்கி சேவைகளை அணுக ஊக்கவிக்கப்பட வேண்டும்.  கூடுதலாக சாலையோர வியாபாரிகளுக்கு மூலதன மற்றும் மற்ற நோக்கங்களுக்காக கடன் அட்டை மூலம் பயன் பெற வழி வகை செய்யப்படுகிறது.

வியாபாரிகளின் வளர்ச்சிக்காக சந்தை / வழங்கும் மண்டலங்கள் / அபிவிருத்தி சந்தை ஆகியவைகளுக்கு உட்கட்டமைப்பு நீர் வழங்கல், திடக் கழிவு அகற்றும் வசதி, மின் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை ஏற்படுத்தி தரப்படும்

சமூக பாதுகாப்பு

நகர்ப்புர ஏழை மக்களுக்கிடையே ஆதரவற்றோர், பாதிக்கப்படக்கூடிய முதியோர், தெரு குழந்தைகள், புலம் பெயரும் தொழிலாளர்கள் மற்றும் மனநலம் குன்றியோர் சமூக ஆபத்துக்குள்ளடங்கும் குற்றம் மற்றும் வன்முறைகளில் மற்றவர்களை விட அதிக பாதிப்புள்ளாகின்றனர். இவ்வகை மக்களுக்கான அணுகுமுறைகளை கீழ்கண்ட உட்கூறுகள் மூலம் செயல்படுத்த இவ்வியக்கம் உத்தேசித்துள்ளது.

  • சமூக பாதுகாப்பு ஒய்வூதியம்
  • மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு இல்லங்கள்
  • இரவு இல்லங்கள்
  • சிறார் இல்லங்கள்
  • முதியோர் இல்லங்கள்
  • ஆலோசனை மையங்கள்
  • வாழ்வாதார உதவி மையம்

சமூக பாதுகாப்பு ஒய்வூதியம் தவிர மற்ற செயல்பாடுகளை அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சிறப்பு நிதியின் கீழ் ஆண்டு திட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு வழங்க வழிவகை செய்து தரப்படும்.

நகர்ப்புர சமூகங்களில் வீடற்ற ஏழைகளுக்கு தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவது இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கமாகும். நகர்ப்புர ஏழைகளுக்கு உரைவிட திட்டத்தின் கீழ் உறைவிடத்தில் நிரந்தரமாக இருக்க வழி வகை செய்து இதில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்த பட்சம் 100 நபர்கள் தங்கும் அளவிற்கு முகாம்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்படும். உள்ளூர் நிலைமைகளை பொறுத்து 50 முதல் 100 உறைவிடமற்றோர்க்கு தங்கும் வசதி கொண்ட முகாம்கள் ஏற்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் ஒரு நபருக்கு 50 சதுர அடியோ 4.645 சதுர மீட்டரோ அல்லது குறைந்தபட்ச 5 சதுர மீட்டர் இடைவெளி வழங்கி முகாம்கள் ஏற்படுத்த திட்டமிட வழிவகுத்துள்ளது.

மனித வாழ்க்கைக்கு தேவையான நீர், சுகாதாரம், மின் வசதி, சமைக்கும் இடம், பொதுவான வசதிகள் ஆகியவை வழங்கவும் இதனுடன் அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார குழந்தை பராமரிப்பு மற்றும் பிற சமூக உதவி திட்டங்கள் ஆகியவற்றை இணைக்கவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம்

3.09090909091
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top