பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அமைப்பின் நோக்கம்

தமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் நோக்கம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023, தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மார்ச் 2012ல் நிறுவப்பட்டது. பொருளாதார மற்றும் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்பு நாடுவோர்க்கும், பின்தங்கிய மற்றும் ஆதரவற்றவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குதல் மூலம் தமிழ்நாடு அபரிதமான வளர்ச்சி விகிதத்தை கொண்ட வறுமையற்ற மாநிலமாக திகழச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பலவித பரிமானங்கள் (ம) பாதிப்புகளான நகர்புறங்களின் வறுமை நிலையை எதிர் கொள்ள வேண்டி உள்ளது. தொழில், குடியிருப்புகள் மற்றும் சமூக தேவைகளினாலும் பாதிக்கப்படக் கூடிய குழுக்களுக்காக ஜவஷர்லால் நேரு நகர்புர திட்டம் மற்றும் ராஜீவ் அவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல வாய்ப்புகளை உருவாக்கி சமூகம் தங்களது தொழில் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் முயற்சிகள் மேற்கொள்கிறது.

தமிழ் நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், அனைத்து நகர்புரங்களான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் 5 வருடங்களுக்கு மேலாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ளவர்களுக்கும் பயன் அளிக்கும். இத்திட்டத்தின் மூலம் பெண்கள், குழந்தைகள், ஆதரவற்றோர், நடைபாதைவாசிகள், தெருவோர குழந்தைகளின் (ம) புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மேல் தனிக்கவனம் செலுத்தப்படும்.

இவ்வியக்கத்திற்கு மாநில அரசின் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய நகர்புர வாழ்வாதார திட்டம் தமிழ் நாட்டில் தமிழ் நாடு வாழ்வாதார திட்டம் என செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு நிலையான அடிப்படையிடல் நகர்புர வறுமைக் கோட்டில் வசிப்பவர்கள் சுய வேலை வாய்ப்பு திட்டம் மூலமும் திறமையான ஊதிய வேலை வாய்ப்புகளை அனுக முடிகிறது. இதன் மூலம் வறுமையை ஒழிக்க முடிகிறது.

தமிழ் நாடு நகர்ப்புர வாழ்வாதாரம் இயக்கத்தின் நோக்கம்

அபிவிருத்தி (ம) கடன் வசதிகளை எளிதாக அணுகவும், திறன் பயிற்சிகள் வழங்கவும், சந்தைப்படுத்த கூடிய வேலைகள் (ம) சுய வேலை வாய்ப்புகள் எளிதாக பெறுவதுமே இதன் நோக்கம் ஆகும். அரசு தலையீடு இல்லாமால் வறுமை ஒழிக்க இத்திட்டம் உதவுகிறது. நகர்புரங்களில் உற்பத்தி சங்கிலியின் பொருளாதார வளர்ச்சி ஏற்பட முக்கிய இடம் வகிக்கிறது.

தமிழ் நாடு நகர்ப்புர வாழ்வாதாரம் இயக்கம் மூலம் திறன்களை ஊக்குவிக்க அரசு துறை திறன், வாழ்வாதாரம், தொழில் முனைவோர்க்கான வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, உதவி தொகை ஆகியன வழங்குகின்றன. அனைத்து துறைகளிலும் திறனை வளர்த்து கொள்ள தேவையான பயிற்சிகளை ஊக்குவித்து நகர்புர ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு இடையே பாலமாக உள்ளது.

தமிழ் நாடு நகர்ப்புர வாழ்வாதாரம் இயக்கம் தனியார் துறையுடன் இணைத்து திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் நகர்புர ஏழைகளுள் வீடு இல்லாதவர்களுக்கு, தங்குமிம், வழங்குகிறது. நகர்புர ஏழை தொழில் முனைவோர்க்கு சுய வேலை வாய்ப்பு (ம) அவர்களின் சிறு வியாபாரத்திற்கு தேவையான தொழில் நுட்பம் (ம) சந்தைபடுத்துதல் ஆகியவற்றில் உதவி புரிகிறது.

வீயூகம்

  1. நகர்புர ஏழைகளின் திறன்களை மேம்படுத்த உதவுகிறது.
  2. தற்போதைய வாழ்வாதார விருப்பங்களை விரிவுபடுத்தவும் அதிகபடுத்தவும் உதவுகிறது.
  3. வேலைவாய்ப்புக்கேற்றவாறு திறனை மேம்படுத்த உதவுகிறது
  4. நகர்ப்புர ஏழை மற்றும் சுய உதவி குழுக்களுக்கு குறு நிறுவனம் ஆரம்பிக்க பயிற்சி (ம) அளித்தல்.
  5. நகர்ப்புர ஏழைகளுக்கு, அடிப்படை வசதிகளுடன் குடிநீர் வசதி, தங்குமிடம், சுகாதாரம் ஆகியன 24 மணி நேரமும் வழங்குதல்
  6. நகர்புரங்களில் வீடற்ற ஆதரவற்ற குழந்தை, முதியோர், மாற்றுதிறனாளிகள், மனநிலை பாதிப்புகுள்ளானோர், நோய்வாய்பட்டவக்களுக்கு சிறப்பு பிரிவுகள் மூலம் சிறப்பு சேவை அளிக்கப்படுகிறது.
  7. உணவு, சுகாதாரம் கல்வி மற்றும் நகர்ப்புர வீடற்றோர்களுக்கு சமூக பாதுகாப்பு, ஒய்வூதியம் வழங்குதல் மற்றும் உரிமங்களான குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம்,, ஒழுங்கிணைந்த வளர்ச்சி திட்டம், ஊட்டச்சத்து, உணவு திட்டம், குடிநீர் சுகாதாரம், அடையாள அட்டை, பள்ளி சேர்க்கை ஆகியன வழங்குதல்.

ஆதாரம் : தமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம்

2.91666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top