பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / பி.எம்.இந்தியா / திட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

திட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு

திட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

திட்டக் கண்காணிப்புக் குழுவானது 2013ஆம் ஆண்டில் அமைச்சரவை செயலகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இது பொதுத்துறை, தனியார் துறை, பொது-தனியார் கூட்டுத் துறை ஆகியவற்றில் பெரும் திட்டங்களை உருவாக்கவும், அவற்றை விரைவாக செயல்படுத்துவதற்கும் தேவையான ஒப்புதல்களை தொடர்ந்து கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நிறுவனரீதியான ஓர் அமைப்பாகும். இந்தக் குழுவானது 14.09.2015 முதல் பிரதமரின் அலுவலகத்தின் பகுதியாக தற்போது செயல்பட்டு வருகிறது:

 • தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே
 • விமான சேவைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து
 • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
 • ரசாயணம் மற்றும் உரங்கள்
 • சிமென்ட், கட்டுமானம் மற்றும் எஃகு

சிக்கல்களை தீர்ப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் பிரச்சினைகள் \ ஒப்புதல்கள்

மத்திய அமைச்சரகங்கள்

 • சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் வனவிலங்குகள் தொடர்பான ஒப்புதல்கள்
 • தீவிர சுற்றுச்சூழல் பகுதிக்கான ஒப்புதல்கள்
 • மரம் வெட்டுவதற்கான ஒப்புதல்கள்
 • வனத்துறையால் வழங்கப்படும் வேலைக்கான அனுமதி
 • தனியார் மூலம் இணை இருப்புப் பாதைகளை கட்டுவதற்கான ஒப்புதல்
 • தொழிற்சாலை இயக்கத்திற்கான அனுமதி
 • சாலைகளின் குறுக்கே குழாய்கள், மின்கடத்தி வசதிகளை செய்தல்
 • ஒரு குறிப்பிட்ட வழியாக செல்வதற்கான உரிமை வழங்குதல்
 • பயன்பாட்டிற்கான பொருட்களை இடம் மாற்றுதல்

மாநில அரசுகள்

 • அரசு அறிவிக்கைகள் / இழப்பீடு வழங்கல், நில உரிமை மாற்றம், நிலத்தை ஒப்புவிப்பது போன்ற நிலம் கையகப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகள்
 • அத்துமீறி குடியேறியவர்களை அகற்றுவது
 • நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள்
 • வன உரிமைகள் சட்டத்தின் கீழ் சான்றிதழ் வழங்குதல்
 • மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் ஏற்பாடுகள்
 • திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான ஒப்புதலை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெறுதல்
 • சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள்
 • ஒரு குறிப்பிட்ட வழியாக செல்வதற்கான ஒப்புதல் வழங்கல்

திட்டக் கண்காணிப்புக் குழுவின் செயல்முறை

 • உள்நாட்டு முதலீட்டைப் பொறுத்தவரையில் ரூ. 1000 கோடி ( சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவிற்கும், நேரடி அந்நிய முதலீட்டைப் பொறுத்தவரையில் ரூ. 500 கோடி முதலீடு (75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவில் ஒரு திட்டத்தை முன்வைப்பவர்கள் அத்திட்டத்தை செயல்படுத்த முனைகின்றபோது அரசு அமைப்புகளிடமிருந்து ஒப்புதல்களை பெறுவதில் சந்திக்கும் இடையூறுகள் அல்லது தாமதம் ஏற்படுவதாகக் கருதுவது மற்றும் கொள்கைரீதியான தலையீடு தேவைப்படுவதாக உணர்வது போன்ற பிரச்சினைகள் உட்பட்ட எந்தவொரு விஷயத்தையும் திட்டக் கண்காணிப்புக் குழுவின் ஈ-சுவிதா இணைய தளத்தில் (http://esuvidha.gov.in) சென்று பதிவு செய்து விவரங்களைத் தெரிவிக்கலாம்.
 • மேற்கூறிய வரம்புக்குக் குறைவான முதலீடு கொண்ட திட்டங்கள் குறித்த புகார்களை எந்த மாநிலத்தில் அத்திட்டம் செயல்படவிருக்கிறதோ அந்த மாநில அரசின் திட்டக் கண்காணிப்புக் குழுவிற்கான இணைய தளத்தில் பதிவேற்றலாம்.
 • பிரச்சினைகளை தீர்க்கக் கோரியும், உதவி கோரியும் ஒரு முதலீட்டாளர் பதிவேற்றியதும், சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்பு கொண்டு அவற்றைத் தீர்த்து வைக்க திட்டக் கண்காணிப்புக் குழு நடவடிக்கை மேற்கொள்ளும்,.
 • பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கும் வகையில் திட்டத்தை முன்வைத்தவர், திட்டக் கண்காணிப்புக் குழுவின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு கூட்டங்கள் நடத்தப்படும். இக்கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளை திட்டத்தை முன்வைத்தவருக்கும் இத்திட்டம் குறித்த இறுதிமுடிவை தெரிவிக்கும் வரை தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்
 • பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயல்முறையின்போது பொதுவான பிரச்சினைகள் கண்டறியப்பட்டு தேவையான கொள்கைரீதியான மாறுதல்களுக்காகவோ அல்லது அரசு மட்டத்தில் சீர்திருத்தங்களுக்காகவோ தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 • திட்டக் கண்காணிப்புக் குழுவின் செயல்முறைகள் அனைத்துமே இணைய வழியானவை என்பதால் செயல்திறன் அதிகரிப்பு, அதிகப்படியான வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மூலம் முதலீட்டாளர், அரசு ஆகியோருக்கிடையே இந்த ஒப்புதல் தொடர்பான செயல்பாடுகள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் ஆகியவற்றை வேகப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நேரடி அந்நிய முதலீட்டை கவனமாகக் கையாளுதல்

இந்தியாவில் அந்நிய முதலீட்டை வளர்த்தெடுக்கவென்றே உருவாக்கப்பட்டுள்ள ‘இந்தியாவில் முதலீடு செய்வீர்’ (இன்வெஸ்ட் இந்தியா) என்ற அமைப்போடு இணைந்து திட்டக் கண்காணிப்புக் குழுவானது அனுமதிகள், ஒப்புதல்கள் ஆகியவற்றுக்கு விரைவாக ஏற்பாடு செய்வது, திட்டத்தை நிறைவேற்றும்போது தேவையான உதவிகளை செய்வது போன்றவற்றின் மூலம் இந்தியாவில் பெருமளவிற்கு முதலீட்டை கொண்டு வரும் வகையில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு உதவி செய்கிறது.

ஒப்புதல்/அனுமதி ஆகியவற்றை கண்காணிப்பது

முதலீட்டை வளர்த்தெடுக்கவும், எளிமைப்படுத்தவும் தேவைப்படும் அளவில் இத்தகைய செயல்முறையினை மறு ஒழுங்கு செய்வது உட்பட மத்திய, மாநில அரசுகள் அளவிலான ஒப்புதல் செயல்முறைகளை மின்னணு மயமாக்குவதையும் திட்டக் கண்காணிப்புக் குழு கண்காணித்து வருகிறது.

ஆதாரம் : http://www.pmindia.gov.in/ta/

3.17647058824
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top