பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நிதி அடிப்படைகள்

நிதி சார்ந்த திட்டங்கள், நிறுவனங்கள் போன்ற அடிப்படை தகவல் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

குறைந்த வருவாயினர் மற்றும் நலிவுற்றோர்களுக்கு குறைந்த செலவில், அமைப்பு ரீதியான நிதி நிறுவனங்கள் மூலம் நிதி சேவைகள் வழங்குவது, அனைத்து தரப்பினருக்கும் நிதிச் சேவை அளிக்கும் முறை என கூறப்படுகிறது.

இந்தியாவில் நிலவும் நிதி நிர்வாக முறைகள்

இந்தியாவில் உள்ள நிதி அமைப்புகள்

 1. இந்தியாவில் உள்ள நிதி அமைப்பு பொதுவாக மூன்று முக்கிய அம்சங்களை கொண்டது:
 2. நிதி நிறுவனங்கள்: வங்கிகள், பரஸ்பர நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள் நிதிச் சந்தைகள்: பண சந்தைகள், கடன் சந்தை, மூலதன சந்தை, அன்னிய செலாவணி சந்தை
 3. நிதி சார்ந்த சேவைகள்: கடன், சேமிப்புகள், பிணையங்கள், நேர்மை நிதியங்கள்

இந்தியாவில் நிதித்துறையை கட்டுபடுத்தும் அமைப்புகள்

கட்டுப்பாட்டு அமைப்புகள்

இந்திய ரிசர்வ் வங்கி

(RBI)

பங்கு வர்த்தக கட்டுப்பாட்டு ஆணையம்

(SEBI)

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும்

மேம்பாட்டு ஆணையம்

(IRDA)

வங்கிகள்

மூலதன சந்தைகள் /

பரஸ்பர நிதியங்கள்

காப்பீட்டு நிறுவனங்கள்

பங்கு வர்த்தக கட்டுப்பாட்டு ஆணையம் (செபி)

பங்கு வர்த்தக கட்டுப்பாட்டு ஆணையம் ஏப்ரல் 12, 1988 அன்று உருவாக்கப்பட்டு, அதற்கு சட்ட அதிகாரங்கள் மார்ச் 1992 ல் வழங்கப்பட்டன. முதலீட்டாளர்களை பாதுகாப்பது, பங்குச் சந்தை மற்றும் பாதுகாப்புச் சந்தைகளில் நடக்கும் வர்த்தகங்களை கண்காணிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது, பங்குத் தரகர்கள், வங்கி சந்தையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வங்கியாளர்கள் போன்ற இடைநிலை நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது ஆகிய பணிகளை பங்கு வர்த்தக கட்டுப்பாட்டு ஆணையம் செயல்படுத்துகிறது.

பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு

பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு AMFI (ஏஎம்ஃப்ஐ) என்பது, இலாப நோக்கில்லாத நிறுவனமாகும். பரஸ்பர நிதியங்கள் சார்பாக, அவற்றின் வளமான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்காக (ஏஎம்ஃப்ஐ) பாடுபடுகிறது. தனது பயிற்சிகளின் ஒரு பகுதியாக, நுண்கடன் அதிகாரிகளுக்கு தேர்வுகளையும் இக்கூட்டமைப்பு நடத்துகிறது.

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ)

ஐஆர்டிஏ IRDA என்பது, இந்தியாவில் காப்பீட்டை ஒழுங்குமுறை மற்றும் மேம்படுத்தும் ஆணையமாகும். இது 2000 ஆண்டில் உருவாக்கப்பட்டது. முததாலீட்டாளர்களை காக்கும் பொருட்டு, காப்பீட்டு/மறுகாப்பீட்டுத் துறை மற்றும் காப்பீட்டுத் தொழிலை ஒழுங்குபடுத்துவது மற்றும் அதன் சீரான வளர்ச்சியை உறுதிப்படுத்துவது ஆகியவை ஐஆர்டிஏ இன் பணிகளாகும்.

இந்தியாவில் வங்கி நடைமுறைகள்

 • வங்கிகளுக்கான சட்ட வரையறை
  • வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம், 1949
  • இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934

இந்தியாவில் வங்கி நடைமுறைகள், வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம்-1949 மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்-1934 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது. வங்கி நடைமுறைகள் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அரசால் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.எந்த வகை வங்கி (குழுமம், கம்பெனி அல்லது கூட்டுறவு சங்கம்) என்பதைப் பொறுத்து இக்கட்டுப்பாடுகள் மாறுபடும்.

வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் வங்கி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது. சில மாற்றங்களுடன் கூட்டுறவு வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறது.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், நில வள வங்கிகள் ஆகியவற்றை இச்சட்டம் கட்டுப்படுத்தாது. வங்கிகளுக்கு லைசன்ஸ் வழங்கும் அதிகாரத்தை இந்திய ரிசர்வ் வங்கிக்கு இச்சட்டம் (பிரிவு 22) அளிக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தில், அவ்வப்போது தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியை நிறுவுதல், அதன் அதிகாரங்கள் மற்றும் பணிகளை வரையறை செய்தல் ஆகியவற்றை இச்சட்டம் கையாளுகிறது. நிறுவுதல், மூலதன நிர்வாகம், வங்கி செயல்பாடுகள், மத்திய வங்கிக்கானபணிகள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்தல், அந்நிய செலவாணி கையிருப்பை நிர்வகித்தல், வங்கி விகிதங்கள், அவற்றின் தணிக்கை மற்றும் அக்கவுண்ட் முறைகளை கட்டுப்படுத்துதல் குறைபாடுகளுக்கு அபராதம் விதித்தல் ஆகியவற்றை இச்சட்டம் விவரிக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 (RBI Act), இயற்றப்பட்டவுடன் 1935ல் இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது. இதன் பிறகு, 1949ல் இயற்றப்பட்ட வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் (Banking Regulation Act, 1949 - BR Act) மூலம், புதிய வங்கிகள் உருவாக்கம், வங்கிகள் இணைப்பு, புதிய வங்கிக்கிளைகள் துவக்குதல் மற்றும் அவற்றை ஒழுங்குமுறைபடுத்தவும், மேற்பார்வையிடவும், இந்தியாவில் வங்கித் தொழில்முறைகளை மேம்படுத்தவும், ரிசர்வ் வங்கிக்கு இச்சட்டம் அதிகாரங்களை வழங்கியுள்ளது.

இந்திய மூலதன சந்தை

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய மூலதன சந்தை முக்கிய பங்காற்றுகிறது. சந்தையில் முதலீடு செய்வதற்கும் இலாபம் ஈட்டவும் முதலீட்டாளர்களுக்கு இது உதவுகிறது. இதன் மூலம், பல்வேறு துறைகளுக்க்கு நிதி ஆதாரமாகவும் இது விளங்குகிறது. தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பாய் பங்குச் சந்தை (BSE) ஆகிய இரண்டும் இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைகளாகும்.

காப்பீட்டுத் துறை

இந்தியவில் காப்பீடு முறைகளை ஆயுள் காப்பீடு மற்றும் பொது காப்பீடு என இரு பிரிவுகளாக வகைபடுத்தலாம்

இடைநிலை நிதியங்கள்

பரஸ்பர நிதியங்கள்: பங்குசந்தை அல்லது பிணைய சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிற நிதியைத் திரட்டவும் மற்றும் சேமிப்பை ஊக்குவிக்கவும் இத்தகைய இடைநிலை நிதியங்கள் உதவுகின்றன. பொதுமக்கள் தொழில்களில் அல்லது வர்த்தகத்துறையில் முதலீடு செய்ய உதவுகின்றன. மூலதன சந்தையில் முதலீடு செய்ய உதவுவதன் மூலம் மக்கள் தங்கள் முதலீட்டின் மதிப்பை அதிகரிக்க வகை செய்கிறார்கள். பங்கு வர்த்தக கட்டுப்பாட்டு ஆணையத்தால் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, வளர்ச்சி நிதி, வருமான நிதி, இரண்டையும் கலந்து அளிக்கும் நிதி, துறை சார்ந்த நிதிகள், ஆகிய வகைகளில் பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.

பெருவணிக வங்கிகள் - என்ற மற்றொரு வகை இடை நிலை நிதி நிறுவனம், புதிய பங்குகளை வெளியிடுதல் மற்றும் நிர்வகித்தல், வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிதியை திரட்ட ஆலோசனை வழங்குதல், கடன் ஒருங்கிணைப்பு, ஆகிய பணிகளை, பங்கு வர்த்தக கட்டுப்பாட்டு ஆணையம் (SEBI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அகியவற்றின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு செயல்படுத்துகின்றன. வர்த்தக வங்கிகளின் உப நிறுவனங்களாக இயங்கும் பெருவணிக வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது..

வங்கிகளின் வகைகள்

 • மத்திய வங்கி
 • பொதுத்துறை வங்கிகள்
 • புதிய தனியார்த்துறை வங்கிகள்
 • பழைய தனியார்த்துறை வங்கிகள்
 • அயல்நாட்டு வங்கிகள்
 • கூட்டுறவு வங்கிகள்
 • பிராந்திய ஊரக வங்கிகள்

பொதுத்துறை வங்கிகள் = பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் தோழமை வங்கிகள்+ நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் தனியார்த்துரை வங்கிகள் = இந்திய தனியார்த்துறை வங்கிகள் (புதிய மற்றும் பழையவை), இந்தியாவில் இயங்கும் அயல்நாட்டு வங்கிகள் பிற வங்கிகள் = பிராந்திய ஊரக வங்கிகள்

வர்த்தக வங்கிகளின் இட்டு வைப்பு சேவைகள்

 • நடப்பு வைப்புகள்
 • சேமிப்பு வைப்புகள்
 • குறிப்பிட்ட காலத்திற்கான இட்டு வைப்புகள்
 • தொடர் வைப்புகள
 • மாற்றிக்கொள்ளக்கூடிய வைப்புகள்
 • சான்று வைப்புகள்

நிதி சார்ந்த கடன் சேவைகள்

 • சேமிப்பு அடிப்படையிலான கடன்
 • சேமிப்புக்கு மேற்பட்ட கடன்
 • சில்லறைக் கடன்
 • குறிப்பிட்ட காலத்திற்கான கடன்
 • இரசீதுகள் அடிப்படையிலான கடன்

நிதி சாராத கடன் சேவைகள்

 • கடன் பத்திரங்கள்
 • வங்கி பிணையம்
 • இரசீதுகள் அடிப்படையிலான கூட்டுக் கடன்

உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் நெறிமுறைகள், அனைத்து வகையான வர்த்தக ரீதியான வங்கிக் கணக்குகளுக்கும் பொருந்தும். வாடிக்கையாளரை அடையாளம் காண மட்டுமன்றி, அவருடைய நடவடிக்கைகளை அறிந்துகொள்ளுதல் மற்றும் அவருடைய கணக்கில் நடைபெறும் பரிமாற்றங்கள் நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கும் உதவுகின்றன. இவற்றை கடைபிடிப்பது பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. போதைப்பொருள் கடத்தல், நிதி மோசடிகள், தீவிரவாத நடவடிக்கைகள், ஆயுத வணிகம் ஆகியவை பெருகி வரும் சூழலில், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளருடனான தொடர்புகளில் கவனமாக இருப்பது அவசியமாகிறது.

 • வாடிக்கையாளர் ஒப்புதல் கொள்கை
 • வாடிக்கையாளர் அடையாளம் காணும் வழிமுறைகள்
 • பரிமாற்றங்களை கண்காணித்தல்
 • இடர் மேலாண்மை

ஆவணப்படுத்துதல்

முதன்மை மற்றும் இரண்டாம் கட்ட ஆவணங்கள் என்று, கடன் தொடர்பான ஆவணங்கள் இரண்டு வகைபடுகின்றன. கடன் வகை, வாடிக்கையாளர் விபரம், அளிக்கப்பட்ட பிணையம் ஆகியவற்றை பொறுத்து ஆவணங்கள் பெறப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் ஆவணங்கள், முழு உரிமை பெற்றவையாகவும், சட்டப்படி நீதிமன்றங்களில் செல்லத்தக்கதாகவும் இருக்க வேண்டும். தேவைப்படும் போது, போதுமான அளவு கட்டண வில்லைகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். முழுவதும் நிரப்பப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் ஒப்புகை கையெழுத்திடப்பட்டிருக்க வேண்டும்.

சான்றுகள் சட்டம், பிரிவு 61-படி, சான்றாக அளிக்கத் தகுந்த ஆவணங்கள்: முதன்மை ஆவணங்கள்: நீதிமன்ற பரிசீலனைக்காக, அனைத்து மூல ஆவணங்களும் அளிக்கப்பட வேண்டும் இரண்டாம் கட்ட ஆவணங்கள்: சான்றளிக்கப்பட்ட நகல்கள், மூல ஆவணத்துடன் ஒப்பிடக்கூடிய நகல்கள்

மின்னணு வங்கியியல் -
 • கடன் அட்டைகள்
 • இணையவழி வங்கியியல்
 • வங்கிகளிடையே வலைத்தொடர்பு

வங்கியியலில் கணக்கு

வங்கியியலில் கணக்கு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது

 • வைப்புகள் மற்றும் முன்பணம் மீதான வட்டியை கணக்கிட
 • வங்கிகள், அதிகளவு முதலீடு செய்யும் பிணையங்கள் மீதான வருமானத்தை கணக்கிட
 • தேய்மானத்தை கணக்கிட
 • அயல்நாட்டு நாணயங்களின் வாங்கும் அல்லது விற்கும் விலைகளை நிர்ணயிக்க
 • வங்கிக்கு தேவைப்படும் குறைந்தளவு மூலதனத்தைக் கணக்கிட
 • கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்க
எந்தளவு கணக்கு தெரிந்திருக்க வேண்டும்
 • வங்கிகளில், மிக அதிக அளவு கணக்கு தேவைப்படுவதில்லை
 • கீழ்கண்ட அடிப்படை கணக்கு வழிமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்
 • கூட்டல் – எடுத்துக்காட்டு: 24+33+9+56=122
 • கழித்தல் - எடுத்துக்காட்டு: 138-41-72=25
 • பெருக்கல் - எடுத்துக்காட்டு:. 1.1*1.1=(1.1)2 =1.21
 • வகுத்தல் - எடுத்துக்காட்டு: 1/12=0.0833
நேர் வட்டி
 • முக்கிய குறியீடுகள்: P = ஆரம்பத்தில் முதலீடு செய்யப்படும் தொகை (முதலீடு)
 • r = வட்டி விகிதம். ஆண்டுக்கு 12% வட்டி விகிதம் என்றால், ரூ. 100 செலுத்தினால், ஒரு ஆண்டு முடிவில் ரூ. 12 வட்டியாக கிடைக்கும். வங்கி கணக்கீடுகளில், r = 12/100=0.12 ஆண்டு வீதம் என்று எடுத்துக்கொள்ளப்படும். .
 • T= மூதலீடு செய்யப்படும் கால அளவு
 • I= வரவேண்டிய மொத்த வட்டி - I=P*r*T
 • A = வரவேண்டிய தொகை - A=P+I=P+(P*r*T)=P(1+rT)
கூட்டு வட்டி
 • 12% வட்டி வீதத்தில், ரூ. 100 முதலீடு செய்தால், ஒரு ஆண்டு முடிவில் ரூ. 112 கிடைக்கப்பெறும். அதுவே, அடுத்த ஆண்டு முடிவில் ரூ. 112 முதலீட்டுக்கு, அதாவது 112*12/100=13.44 வட்டியாக கிடைக்க வேண்டும். இதுவே கூட்டு வட்டி என அழைக்கப்படுகிறது. நேர் வட்டியில், இரண்டாம் ஆண்டு முடிவிலும் ரூ. 12 மட்டுமே உங்களுக்கு வட்டியாக கிடைக்கும்.
 • மேலே கூறிய உதாரணப்படி, கூட்டு வட்டி ஆண்டு, மாதம், காலாண்டு, அரையாண்டுக்கொருமுறை என்ற அளவுகளில் கணக்கிடப்படுகிறது. சிறிய இடைவெளியில், அடிக்கடி செய்யப்படும் கூட்டு வட்டி மூலம் அதிக வருவாய் கிடைக்கும்.
 • ஆண்டு கூட்டு வட்டியில், முதலாம் ஆண்டு வருவாய் A=P(1+r) எனவும், இரண்டாமாண்டில் P(1+r)2 மற்றும் இதே போல் அதற்கு மேலான காலத்திற்கும் கணக்கிடப்படுகிறது. T ஆண்டுகளுக்கு வருவாய், A=P(1+r)T என்று கணக்கிடப்படுகிறது.
 • ஒரு ஆண்டில், n முறைகள் கூட்டு வட்டி கணக்கிடப்பட்டால், வருவாய் A=P(1+r/n)nT என்று கணக்கிடப்படும்.
 • ஆணை 72 அடிப்படையில், முதலீடு இரட்டிப்பாகும் காலம் கணக்கிடப்படும்.
தள்ளுபடி காரணி
 • முதலீடு (P), T கால இடைவெளியில், ரூ. P(1+r)T தொகையாக வளரும் என்று பார்த்தோம். எனவே, T ஆண்டுகள் முடிவில், ஒருவர் உங்களுக்கு ரூ. P(1+r)T தருவதாக உறுதியளித்தால், அதன் தற்போதைய மதிப்பு ரூ. P மட்டுமே என்பதை அறிய வேண்டும்.
 • எதிர்காலத்தில் பெறக்கூடிய ஒரு தொகையை, ஒன்றுக்கு குறைவான ஒரு எண்ணால் பெருக்கினால், அத்தொகையின் தற்போதைய மதிப்பைக் கணக்கிடலாம்
 • மேற்கண்ட உதாரணத்தில், P(1+r)T என்ற தொகையை, 1/(1+r)T என்ற எண்ணால் பெருக்கினால், தற்போதைய மதிப்பான P யை கணக்கிடலாம். எனவே, 1/(1+r)T என்ற எண், தள்ளுபடி காரணி எனப்படும். .
 • உதாரணம்: ஆண்டு வட்டி 10% எனில் r=0.10. எனவே, முதல் ஆண்டில் தள்ளுபடி காரணி 1/1.10, இரண்டாம் ஆண்டில் 1/1.21 மற்றும் இதே போல் மேலும் ஆண்டுகளுக்கு கணக்கிட வேண்டும்.
பணத்தின் தற்போதைய மதிப்பு
 • தற்போதைய மதிப்பு PV= எதிர்காலத் தொகை * தள்ளுபடி காரணி
 • தள்ளுபடி காரணி DF = 1/(1+r)T
 • உதாரணம்: ஆண்டு வட்டி 10% எனில் r=0.10. எனவே, முதல் ஆண்டில் தள்ளுபடி காரணி 1/1.10, இரண்டாம் ஆண்டில் 1/(1.10)2 =1/1.21 மற்றும் இதே போல் மேலும் ஆண்டுகளுக்கு கணக்கிட வேண்டும்.
 • மேலே கண்ட உதாரணத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக் கூடிய ரூ. 100 ன் தற்போதைய மதிப்பு, 100*1/(1.10)2 =100/1.21=Rs 82.64 என்று கணக்கிடப்படுகிறது. அதே போல, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக் கூடிய ரூ. 100 ன் தற்போதைய மதிப்பு, 100*1/(1.10)5 என்று கணக்கிடப்படுகிறது.
பணத்தின் எதிர்கால மதிப்பு
 • வட்டி வீதத்தை பொறுத்து, எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய தொகை (A), தற்போதைய முதலீடான P ஐ விட அதிகமாக இருக்கும்.
 • கூட்டு வட்டி ஆண்டுதோறும் கணக்கிடப்பட்டால், A=P(1+r)T
 • எனவே, எதிர்கால மதிப்பு (FV) = தற்போதைய தொகை * (1+r) T. இதில், (1+r)T என்பது கூட்டு வட்டி காரணி (compounding factor) என அழைக்கப்படும்.
 • உதாரணம்: ஆண்டு வட்டி 10% எனில் r=0.10. எனவே, முதல் ஆண்டில் கூட்டு வட்டி காரணி 1/1.10, இரண்டாம் ஆண்டில் 1/(1.10)2 = 1.21 மற்றும் இதே போல் மேலும் ஆண்டுகளுக்கு கணக்கிட வேண்டும்.
 • மேலே கண்ட உதாரணத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக் கூடிய ரூ. 100 ன் எதிர்கால மதிப்பு, 100*(1.10)2 =100*1.21=Rs 121 என்று கணக்கிடப்படுகிறது. அதே போல, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக் கூடிய ரூ. 100 ன் தற்போதைய மதிப்பு, 100*(1.10)5 என்று கணக்கிடப்படுகிறது.

ஆண்டுத் தொகை

 • தொடர்ச்சியான, குறிப்பிட்ட அளவுகளில், குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யப்படும் செலுத்துகள் அல்லது வரவுகள் ஆண்டுத்தொகை எனப்படும்
 • உதாரணம்: எல்ஐசி நிறுவன பாலிஸிக்கு, ஆண்டுதோறும் ரூ. 1000, அடுத்த 20 ஆண்டுகளுக்கு செலுத்துதல், வங்கியில் தொடர் வைப்பாக ரூ. 100, அடுத்த 5 ஆண்டுகளுக்கு செலுத்துதல், போன்றவை
 • ஆண்டுத்தொகை 2 வகைப்படும்: தொகையை காலம் முடிந்து செலுத்தினால் ஆண்டுத்தோகை எனவும், தொகையை காலம் முடியும் முன் செலுத்தினால் அது பற்று ஆண்டுத்தொகை எனவும் வழங்கப்படுகிறது.

ஆண்டுத்தொகையின் தற்போதைய மற்றும் எதிர்கால மதிப்பு

 • ஆண்டுத்தொகையின் தற்போதைய மதிப்பை கணக்கிட, ஒவ்வொரு செலுத்துகளின் தற்போதைய மதிப்பை கணக்கிட்டு அவற்றை கூட்டிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு, ஆண்டு முடிவில் ரூ. 100 செலுத்தி வந்தால், பத்து முறை செலுத்திய ஒவ்வொரு ரூ. 100 ன் தற்போதைய மதிப்பை கணக்கிட்டு, அவற்றின் மதிப்புகளை கூட்டிக்கொள்ள வேண்டும்.
 • அதே போல, ஆண்டுத்தொகையின் எதிர்கால மதிப்பை கணக்கிட, ஒவ்வொரு செலுத்துகளின் எதிர்கால மதிப்பை கணக்கிட்டு அவற்றை கூட்டிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு, ஆண்டு முடிவில் ரூ. 100 செலுத்தி வந்தால், பத்து முறை செலுத்திய ஒவ்வொரு ரூ. 100 ன் எதிர்கால மதிப்பை கணக்கிட்டு, அவற்றின் மதிப்புகளை கூட்டிக்கொள்ள வேண்டும்.

தற்போதைய மற்றும் எதிர்கால மதிப்புகளை கணக்கிடும் போது கவனிக்க வேண்டியவை

 • கணக்கீட்டில், வட்டி விகித அளவை (r) சரியாக கணக்கிட வேண்டும். உதாரணமாக, ஆண்டு வட்டி 12% மற்றும் வட்டி ஆண்டுக்கொருமுறை கணக்கிடப்பட்டால், r=12/100=0.12. அதுவே, மாதந்தோறும் கணக்கிடப்பட்டால் 12/100*12=0.01, காலாண்டுக்கொரு முறை கணக்கிடப்பட்டால் 0.03 மற்றும் அரையாண்டுக்கொரு முறை கணக்கிடப்பட்டால் 0.06 என கொள்ள வேண்டும்.

மூழ்கும் நிதி

 • ஆண்டுத்தொகை போலவே கொள்கையுடையது
 • உதாரணமாக, 5 ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு குறிப்பிட்ட தொகை A கிடைப்பதற்காக, C என்ற தொகையை வங்கியில் செலுத்தி வருகிறீகள் என்று வைத்துக்கொள்வோம். இது 5 ஆண்டுகளில், A தொகை ஆகி, ஏதாவது கடன் தீர்க்கவோ அல்லது பிற தேவைகளுக்கோ பயன்படும். வட்டி வீதம் மற்றும் எதிர்கால மதிப்பு ஆகியவை தெரிந்திருப்பதால், நாம் C யை மதிப்பிட முடியும்.
கடன் பத்திரங்கள்
 • கடன் பத்திரம் வெளியிடுபவர் பெறும் ஒரு வகை கடன், பிணையம் கடன் பத்திரம் எனப்படும்
 • கடன் பத்திரம் வெளியிடுபவர், அப்பத்திரத்தை வாங்குபவருக்கு, அவரின் மூலதனத்தை பயன்படுத்துவதற்காக வட்டி வழங்குகிறார்.
 • பத்திரங்களோடு தொடர்புடைய சொற்கள்: முக மதிப்பு, கூப்பன் மதிப்பு, முதிர்ச்சியடைதல், பணமாக்கும்போது உள்ள மதிப்பு, சந்தை மதிப்பு
 • முக மதிப்பு மற்றும் பணமாக்கும் மதிப்பு ஆகியவை வேறுபடலாம்: ஆனால், இவை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, முதலீட்டாளர் அறிந்துள்ளவை
 • பத்திரத்திதின் சந்தை மதிப்பு, முக மதிப்பிலிருந்து வேறுபடலாம் மற்றும் மாறிக்கொண்டே இருக்கலாம்.

பிணையங்களை மதிப்பிடல்

 • கடன் பத்திரத்தை வாங்குபவர், தொடர்ந்து வட்டியையும், முதிர்வின் போது பணமாக்கும் தொகையையும் பெறுவார்.
 • கூப்பன் மதிப்பு அல்ல்து வட்டி, நிலையானது மற்றும் வெளியிடும் போதே அறிவிக்கப்படும். ஆனால், சந்தையில் வட்டி வீதம் மாறிக்கொண்டே இருப்பதால், கடன் பத்திரத்தின் சந்தை மதிப்பும் மாறும்.
 • குறிப்பிட்ட காலத்தில், கூப்பன் மதிப்பு சந்தை வட்டியிலிருந்து மாறுபட்டிருந்தால், கடன் பத்திரத்தின் சந்தை மதிப்பு அதன் முக மதிப்பை விட மாறுபட்டிருக்கும்.
 • சந்தை மதிப்பில், கூப்பன் விலைகள் மற்றும் தள்ளுபடிக்குட்பட்ட பணமாக்கும் மதிப்பு ஆகியவற்றின் தற்போதைய மதிப்பை ஒத்திருக்கும்
கடன் பத்திரங்களிலிருந்து பெறப்படும் வருவாய்
 • தற்போதைய வருவாய் = கூப்பன் வட்டி வருவாய்/தற்போதைய சந்தை விலை
 • உதாரணம்: ஒரு பிணையத்தின் முக மதிப்பு ரூ. 50, ஆண்டு கூப்பன் மதிப்பு 8% மற்றும் சந்தை விலை ரூ. 40 என்றால், தற்போதைய வருவாய் = 4/40=0.1 or 10%
 • அனைத்து எதிர்கால பணப்புழக்கமும், தற்போதைய சந்தை மதிப்பை ஒத்து இருக்கும்படி அமையும் தள்ளுபடி வீதம், முதிர்வின் போது கிடைக்கும் வருவாய் (Yield to Maturity -YTM) எனப்படும்
பிணையங்களை மதிப்பிட பயன்படும் கணக்கீடுகள்
 • சந்தை வட்டி வீதத்தில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் விளைவு
 • முதிர்வு காலத்தால் உண்டாகும் விளைவு
 • பிணையத்தின் விலை, முதிர்வின் போது கிடைக்கும் வருவாயை ஒத்து (Yield to Maturity -YTM) நேரிடையாக மாறக்கூடியது
 • வட்டி வீத நெகிழ்வுத்தன்மை = விலை மாற்ற சதவீதம்/முதிர்வின் போது கிடைக்கும் வருவாய் சதவீதம்
மூலதன வரவு செலவு
 • பல்வேறு திட்டங்களை ஒப்பிட்டு தேர்ந்தெடுக்க உதவும்
 • மூலதன திட்டம் என்பது, திட்ட காலம் முழுவதும், முதலீடு (investment) மற்றும் நிகர இலாபம் (net profit) ஆகியவற்றை உள்ளடக்கியது
 • அனைத்து வருவாய்களின் தற்போதைய மதிப்பு நேரிடையாகவும் (+ve) அனைத்து முதலீடுகளின் தற்போதைய மதிப்பு எதிரிடையாகவும் (negative) இருக்கும். தற்போதைய மதிப்பு, தள்ளுபடி வீதத்தை (முதலீட்டின் விலை) ஒத்து இருக்கும்
 • அனைத்து வருவாய்களின் மற்றும் அனைத்து முதலீடுகளின் தற்போதைய மதிப்புகளின் கூடுதல், நிகர தற்போதைய மதிப்பு (Net Present Value - NPV) எனப்படும்
 • ஒரு திட்டத்தின் நிகர தற்போதைய மதிப்பு (NPV) பூஜ்ஜியமாக இருக்கும் போது உள்ள தள்ளுபடி வீதம் IRR எனப்படும்
 • முதலீடு திரும்பக் கிடைக்கும் காலம் (pay-back period) என்ற முறையை கடைபிடித்தும் மூலதன வரவு செலவை கணக்கிடலாம்.

தேய்மானம்

 • தேய்மானக் கொள்கை
 • நேரடி முறை (விலை நிலைத்திருக்கும் மதிப்பு - எதிர்பார்க்கப்படும் உபயோகமுள்ள திட்ட காலம்
 • கடைசி விலை முறை அல்லது குறைந்துகொண்டே வரும் மீத ) முறை: சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது

அந்நியச் செலவாணி கணக்கு

 • முன்னதாக, ரிசர்வ் வங்கி ஏற்றுமதி இறக்குமதியின் வாங்கும் மற்றும் விற்கும் விலைகளை நிர்ணயித்து வந்தது. தற்போது LERMS (liberalised exchange rate management system) என்ற தாராளமயமாக்கப்பட்ட மாற்று விகித மேம்பாட்டு முறை பயன்படுத்தப்படுகிறது.
 • நேரடி மற்றும் மறைமுக விலைப்புள்ளிகள (Direct and indirect quotations): 02.08.1993 முதல், நேரடி விலைப்புள்ளிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
 • கிராஸ் ரேட் / சங்கிலி முறை (Cross rate/chain rule): உதாரணம் – ஒரு US$= ரூ 48 மற்றும் ஒரு யூரோவின் மதிப்பு = US$1.25 என்றால், 1 யூரோ= ரூ 1.25*48
 • மதிப்பின் தேதி: பணம், TOM, ஸ்பாட், முன்னே
 • பிரீமியம் மற்றும் தள்ளுபடி
 • பிரீமியம் மற்றும் தள்ளுபடி ஆகியவற்றை பாதிக்கும் காரணிகள
3.03797468354
thirupathi Jun 02, 2018 12:44 PM

பதிவுகள் படித்து பயன்பெற்றேன் மிகவும் நன்றி , பதிவுகள் அனைத்தும் அருமை , பதிவுகளை அப்டேட் செய்யவும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top