பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / நிதி மேலாண்மை விழிப்புணர்வு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நிதி மேலாண்மை விழிப்புணர்வு

இந்திய மேம்பாட்டு நுழைவு வாயிலின் முன்னோடி முயற்சிகள் பற்றிய விவரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய மேம்பாட்டு நுழைவு வாயிலின் முன்னோடி முயற்சிகள்

இன்றைய நிதி மேலாண்மை முறைகள், முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது அதிக சிக்கலானது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூரிலுள்ள ஒரு வங்கியில் சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பது மற்றும் இதர நிதி நிறுவனங்களில் சேமிப்பு வைத்திருப்பது மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால் தற்பொழுது ஊரகப் பகுதியிலிருக்கும் வாடிக்கையாளர்கள், பல்வேறு விதமான நிதி மேலாண்மை திட்டங்கள், சேவைகள், மற்றும் இந்த வசதிகளை வழங்கும் நிறுவனங்களையும் வேறுபடுத்தி அறிந்து கொள்வது அவசியமாக உள்ளது. கடன் அதிகம் பெறாத முந்தைய தலைமுறையினருக்கு, கூட்டு வட்டியின் முக்கியத்துவம், கடன் கணக்குகளை தவறாக உபயோகப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் போன்றவைத் தவிர்த்த, கடன் திட்டங்களை பற்றிய பரந்த அறிவு தேவைப்படவில்லை.

நிதி மேலாண்மைக்கல்வியின் தேவை பற்றிய வாடிக்கையாளரின் விழிப்புணர்வும் அதை எங்கு பெறவேண்டும் என்பதும் மிக முக்கியமான விசயமாகும். இது, முதலீட்டாளர்களுக்கு மட்டுமன்றி, குழந்தைகளின் படிப்பு செலவிற்காகவும், பெற்றோர்களின் ஓய்வூதியத்திற்காகவும் சேமிக்க விரும்பும் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திற்கும் முக்கியமாகும். வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் அவர்களுக்கு தேவைப்படக்கூடிய நிதிமேலாண்மை அறிவு பற்றி நன்கு அறிந்து, அதன் அடிப்படையில் நிதி மேலாண்மை கல்வி முறையை வடிவமைப்பது அவசியமாகும்.

இந்திய மேம்பாட்டு நுழைவு வாயில், நிதி மேலாண்மை பற்றிய கல்விப்பாடத்தினை வடிவமைத்து அதனை தன் இணையதளம் மூலமாகவும், பலதரப்பட்ட ஊடகங்கள் வாயிலாகவும், குறுந்தகடுகள் மற்றும் இதர சேனல்கள் வாயிலாகவும் வெளியிட்டுள்ளது

தொடர்புடைய வளங்கள்

அரசு ஊழியர் மற்றும் பொது மக்களுக்கான அஞ்சலக ஆயுள் காப்பீடு

இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார கல்விக்கான தொடக்கம்

3.13043478261
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top