பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குறுநிதி

இப்பகுதியில் குறுநிதி பற்றிய அம்சங்களும், அதன் பயனிப்பாளர் பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறுநிதி என்றால் என்ன?

வறுமையில் வாடும் குடும்பங்கள், உபயோகமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தங்களுடைய சிறுதொழில்களை வளர்த்துக் கொள்ளவும், மிகச்சிறிய தொகையினை கடனாக வழங்குவதே குறுநிதி என பலரும் கருதுகிறார்கள். காலப்போக்கில், சேமிப்பு, கடன் மற்றும் காப்பீடு போன்ற நிதி தொடர்பான பல தேவைகள் இருந்தும், முறைப்படுத்தப்பட்ட நிதியுதவி நிறுவனங்களை நாட இயலாத ஏழை மக்களுக்கு, பல சேவைகள் வழங்கும் வகையில் குறுங்கடன் திட்டம் விரிவடைந்து விட்டது.

குறுநிதி திட்டம் முப்பது வருடங்களுக்கு முன்பே வங்காளதேசம், பிரேசில் மற்றும் இதர நாடுகளில் பரிசோதனை செய்யப்பட்டிருந்தாலும், 1980களில் தான் அது முக்கியமான திட்டமாக முன்னிலைப்படுத்தப்பட்டது. முந்தையக் கட்ட இலக்கு சார்ந்த முன்னேற்றக் கடன் திட்டங்கள் போலல்லாமல், திருப்பி செலுத்துதல், நிர்வாக செலவுகளை பெறும் வகையில் வட்டி வசூலித்தல், தொழில்முறையல்லாத வழிகளில் கடன் பெற்று வந்த இலக்கு மக்களின் பல தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றை வலியுறுத்துவதன் மூலம், பல குறைகள் இதில் நீக்கப்பட்டதே இதன் சிறப்பாகும். குறிப்பிட்ட துறைகளை செயற்கையாக தூக்கி நிறுத்தும் வகையில் விரைவாக மானியங்களுடன் கடன் வழங்கி வந்த முறையிலிருந்து, ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நிலையான நிநிறுவன அமைப்புகளை உண்டாக்கும் முறைக்கு தற்போது முக்கியத்துவம் மாறியுள்ளது. குறுநிதித் திட்டங்கள் பெரும்பாலும், லாபம் மற்றும் அரசியல் நோக்கில்லாத தனியார் நிறுவனங்களால் துவங்கப்படுவதால், மற்ற முன்னேற்ற கடன் திட்டங்களை விட நன்கு செயல்படுகின்றன.

பொதுவாக, குறுநிதித் திட்டங்கள், வாடிக்கையான கடன் வகைகளை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. மற்ற மக்களைப் போலவே, ஏழைகளுக்கும் அன்றாடத் தேவைகளுக்கும், சொத்துகளை உருவாக்கவும், எதிர்பாராத இடர்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பல்வேறு விதமான கடன் திட்டங்கள் தேவைப்படுகின்றன. எனவே குறுநிதி திட்டங்களின் வீச்சு பரவலாவதை காண்கிறோம்: பல்வேறு சேவைகளை சிறப்பாகவும் நம்பகமாகவும் வழங்குவதே தற்போதைய சவாலாக உள்ளது.

குறுங்கடன் என்றால் என்ன?

கிராமங்கள், புறநகர் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு, அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திக்கொள்ளவும், அவர்களின் வருமானத்தினை பெருக்கிக்கொள்ளவும் மிகச்சிறிய தொகையினை கடனாக அல்லது இதர நிதியுதவி சேவையாக வழங்குவதே குறுங்கடன் எனப்படும். இத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், குறுங்கடன் நிறுவனங்கள் எனப்படுகின்றன.

குறுங்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்ன ?

வங்கிகள், பொதுவான விதிமுறைகளைப் பொறுத்து, தங்கள் கடன் திட்டங்களை வடிவமைத்துக்கொள்ள சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கடன் மற்றும் சேமிப்புத் திட்டங்களையும் மற்றும் அவை தொடர்பான கடன் அளவு, முதிர்வு காலம், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் கடன் செலுத்த அளிக்கப்படும் கூடுதல் கால அவகாசம் போன்றவற்றை வடிவமைக்கும்படி வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய கடன் திட்டங்கள் பண்ணை சார்ந்த மற்றும் சாராத, வறிய மக்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு திட்டங்களுக்கு மட்டுமன்றி, மற்றும் அவர்களின் பிற கடன் தேவைகளான வீடு கட்டுதல், வீட்டினை மாற்றியமைத்தல் போன்றவற்றுக்கு கடன் அளிப்பதையும் உள்ளடக்கியதாகும்.

குறுநிதிக்கும் குறுங்கடனுக்கும் என்ன வித்தியாசம்?

குறுநிதி என்பது குறைந்த வருமானமுள்ள மக்களுக்காக அளிக்கப்படும் கடன், சேமிப்பு, காப்பீடு, மற்றும் நிதி தொடர்பான திட்டங்களை உள்ளடக்கியது. குறுங்கடன் என்பது வங்கிகளின் மூலமாகவோ அல்லது இதர நிறுவனங்கள் மூலமாகவோ ஒரு நுகர்வோருக்கு சிறிய தொகையினை கடனாகக் கொடுப்பதாகும். குறுங்கடன், பெரும்பாலும் உத்திரவாதங்கள் இன்றி தனிநபருக்கோ அல்லது ஒரு குழுவின் மூலமாகவோ வழங்கப்படலாம்.

குறுநிதியின் பயனாளிகள் யார்?

முறைப்படுத்தப்பட்ட நிதியுதவி அளிக்கும் நிறுவனங்களை நாட இயலாத வருமானம் குறைவாக உள்ள நபர்களே பொதுவாக குறுநிதித் திட்டத்தின் பயனாளி ஆவார்கள். குறுநிதி நுகர்வோர், பெரும்பாலும், சுய தொழில் புரிபவர் அல்லது குடிசைத்தொழில் முனைவோராக உள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள குறு விவசாயிகள் அல்லது உணவுப்பொருள் தயாரிப்போர், சிறுதொழில் செய்வோர் அல்லது சிறு கடை வைத்திருப்போர் இத்திட்டத்தின் முக்கிய பயனாளிகள் ஆவர். நகர்ப்புறங்களில் கடைவைத்திருப்போர், சேவைத்தொழில் செய்பவர்கள், வீதியில் பொருட்களை விற்கும் விற்பனையாளர்கள் அல்லது இதர கைவினைஞர்கள் ஆகியவர்களை உள்ளடக்கி, இது பரவலாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, நிலையான வருமானமுடைய ஏழைகள் அல்லது ஏழைகளாக இல்லாவிட்டாலும், பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகக்கூடியவர்களே குறுநிதித் திட்டங்களின் நுகர்வோராக உள்ளனர்.

முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களை அணுகி கடன் பெறுவது நேரடியாக வருமானத்துடன் தொடர்புடையது. எனவே நிலையான வருமானமற்ற ஏழை மக்கள் இந்நிறுவனங்களை அணுகுவது கடினமாக உள்ளது. எனவே வறுமையில் இருக்கும் மக்கள் முறைப்படுத்தப்படாத நிதி ஆதாரங்களை தங்களது பணத்தேவைகளுக்காக நாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் இவ்வாறு முறைப்படுத்தப்படாத நிதி நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் கடனுதவி ஏழை மக்களின் சில நிதித்தேவைகளுக்கு பயன்படுவதில்லை அல்லது ஏதாவது வகையில் பலரும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வாறு புறக்கணிக்கப்படும் மக்களை கொண்ட மிகப்பெறிய சந்தை, குறுநிதித் திட்டங்களால் பயனடைகின்றது.

குறுநிதித் திட்டங்களின் மூலம் அளிக்கப்படும் சேவைகளை விரிவுபடுத்தும்போது அத்தகைய சேவைகளை உபயோகிக்கும் நுகர்வோர்களின் சந்தையும் விரிவடைகிறது. எடுத்துக்காட்டாக குறுங்கடன் திட்டத்தின் விரிவுபடுத்தப்பட்ட சேவைகளின் மூலம் பலவிதமான சேமிப்புத்திட்டங்கள், பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தப்படுகிறது. உதாரணமாக மிகவும் வறிய விவசாயிகள் கடன் வாங்குவதை விரும்பாவிட்டாலும், அவர்கள் பயிர் அறுவடை செய்யும் போது கிடைக்கும் வருமானத்தினை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேமித்து பின்பு தங்கள் தினசரி வாழ்க்கைக்காக செலவழிக்க விரும்புவர்.

குறுநிதித் திட்டங்கள் எவ்வாறு ஏழை மக்களுக்கு உதவுகின்றன?

குறுநிதித் திட்டங்கள் ஏழை மக்களுக்கு அவர்களை வருமானத்தினை பெருக்கவும், ஒரு இலாபகரமான வியாபாரத்தினை உருவாக்கவும், எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது என்பது, அனுபவங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வறுமையிலுள்ள மக்களை முக்கியமாக பெண்களை சுயமுன்னேற்றப்படுத்தி பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்துகிறது.

வறுமை பலவித பரிமாணங்களைக் கொண்டது. நிதியுதவி சேவைகளை ஏழை மக்களுக்கு அளிப்பதன் மூலம், இத்திட்டங்கள் பல்வேறு வழிகளில் வறுமைக்கு எதிரான போரட்டத்தில் உதவுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு வியாபரத்தின் மூலம் மக்களின் வருமானம் அதிகரிக்கும்போது, அது அவர்களின் குடும்பவருமானத்தினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அக்குடும்பத்தின் உணவுப்பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. பல்வேறு வகைகளில் பொது வாழ்விலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களை நிதி சேவைகளுக்காக அணுகும் போது அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கவும், முன்னேற்றத்திற்கும் குறுநிதித் திட்டங்கள் உதவுகின்றன.

சமீபத்திய ஆராய்ச்சிகளின் மூலம் வறுமைக்கோட்டிற்கு அருகிலுள்ள மக்கள், சம்பாதிக்கும் நபரின் உடல்நலக் குறைவு, பருவநிலை மாற்றங்கள், திருடு போதல் மற்றும் இதர எதிர்பாராத அதிர்ச்சிகளால் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு எதிர்பாராத நிகழ்வுகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுடைய குடும்பத்தின் நிதி ஆதாரங்களின் மீது அதிக சுமை ஏற்படுவதால், போதுமான நிதியுதவி சேவைகள் இல்லாத நிலையில் அந்தக் குடும்பம், மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆகின்றது.

சுயஉதவிக்குழு என்றால் என்ன?

சுய விருப்ப அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக இணைந்த 15 முதல் 20 வரையான, ஒரே மாதிரியான விருப்பங்களையுடைய உறுப்பினர்களைக் கொண்ட குழு சுய உதவிக்குழுவாகும். மேலும் இக்குழுவிலுள்ள உறுப்பினர்கள் தங்களின் சேமிப்பு, கடன் மற்றும் சமுதாய பங்கேற்பின் மூலம் தங்களை முன்னேற்றிக் கொள்ளவும் முடிகிறது.

சுயஉதவிக்குழு சேவைகள்

கூட்டுறவு சிக்கன கடன் திட்டம்
பங்கேற்பின் மூலம் குழுவை கண்காணித்தல்
குழு அளவில் வறுமை குறைப்புத்திட்டங்கள்

சுயஉதவிக்குழுக்களின் மூலம் நிதியுதவி செய்வதிலுள்ள நன்மைகள் என்ன?

பொருளாதார ரீதியாக பின் தங்கிய நபர், குழுவில் உறுப்பினராக இருக்கும் போது வலிமை பெறுகிறார். இதுமட்டுமன்றி, சுய உதவிக்குழுவின் மூலம் நிதியுதவி அளிக்கும்போது கடன் கொடுப்பவர் மற்றும் கடன் பெறுபவர் ஆகிய இருவருக்கும், பரிமாற்றக் கட்டணங்கள் குறைகின்றன. கடன் கொடுப்பவர் பல தனிநபர் கணக்குகளுக்கு பதில், ஒரு சுய உதவிக்குழுவிற்கான கணக்கினை மட்டும் கையாளுவதன் மூலம் அதற்கான அலுவலக வேலை குறைகிறது. இது மட்டுமன்றி கடன் அளிப்பதற்காக தனிப்பட்ட மக்களை சந்திப்பதால் ஏற்படும் போக்குவரத்துச் செலவு மற்றும் வேலைநாட்கள் இழப்பும் குறைகின்றன.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் சுய உதவிக்குழு - வங்கி இணைப்பு திட்டம் என்றால் என்ன ?

இத்திட்டம் சுய உதவிக்குழுக்களுக்கு குறுங்கடனை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஏற்படுத்திய வங்கிகளின் மூலம் வழங்கி, இலகுவான மற்றும் அர்த்தமுள்ள வங்கிச் சேவைகளை ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, 1991-92ஆம் ஆண்டு இந்த முன்னோடித் திட்டத்தைத் துவக்கியது.

இந்திய ரிசர்வ் வங்கி, வணிகரீதியில் செயல்படும் வங்கிகளை இத்திட்டத்தில் முழுமையாக பங்கேற்க அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டம் ஊரக வட்டார வங்கிகளுக்கும், கூட்டுறவு வங்கிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சுய உதவிக்குழு கூட்டமைப்பு என்றால் என்ன ?

‘ஒரு குறிப்பிட்ட பயன்களுக்காக தனியாக செயல்படும் அமைப்புகளின் சங்கம்’, என கூட்டமைப்புக்கான அகராதி அர்த்தத்தை FWWB, 1998 வரையறுத்துள்ளது. கூட்டமைப்பு என்பது முதல்நிலை அமைப்புகளின் சங்கமாகும். முதல் நிலை அமைப்புகள், பொருளாதார அளவிலான வியாபாரத்திற்காகவும், பொது நோக்கத்தினை அடைய தங்கள் பலத்தை அதிகரித்துக்கொள்ளவும், ஒரு கூட்டமைப்பினை தோற்றுவிக்கின்றன. கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பிற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. (Nair 2002).

ஒரு வட்டாரக் கூட்டமைப்பு எனப்படுவது, பல்வேறு சுய உதவிக்குழுக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்த, அனைத்து குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாகும். இக்கூட்டமைப்புகளின் முக்கிய நோக்கம் சக சுய உதவிக்குழுக்களுக்கிடையில் ஒத்துழைப்பினை ஏற்படுத்தி அதன்மூலம் குழுவிலுள்ள பெண்களின் திறமையினை அதிகரித்து அவர்களின் பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதாகும். (TNCDW, 1999)

வேறு விதமாக கூறுவதென்றால், சுய உதவிக்குழுக்களின் ஒட்டுமொத்த முயற்சியின் மூலம் சுய உதவிக்குழுவிலுள்ள மகளிர் உறுப்பினர்களின் பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதாகும். ஒரு தனிப்பட்ட சுய உதவிக்குழுவின் மூலம் பெற முடியாக ஒரு தேவையினை. ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள சில சுய உதவிக்குழுக்களை, அதற்காக ஒருங்கிணைத்து செயல்படவைப்பதாகும். சுருக்கமாக சொல்வதென்றால் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு, சுய உதவிக்குழுக்களாலான, சுய உதவிக்குழுக்களால் தோற்றுவிக்கப்பட்ட, சுய உதவிக்குழுக்களுக்கான அமைப்பாகும்.

சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பின் முக்கிய நோக்கங்களும் அவற்றின் செயல்பாடுகளும்

 • சட்ட திட்டங்களை உருவாக்கும் அமைப்புகளை அரசியல் முன்னேற்றத்தின் மூலமும், சமுதாய முன்னேற்றத்தின் மூலமும் அணுகுதல்
 • வங்கிகள், அரசாங்க நிறுவனங்கள், உள்ளூர் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சுய உதவிக்குழுக்களின் தொடர்பினை ஏற்படுத்துதல்
 • சந்தை தொடர்புகள், முக்கிய முன்னேற்ற நிலவரங்கள் போன்றவற்றை எளிதில் அறிந்துகொள்ளவும், அவற்றை அணுகவும்
 • சுயஉதவிக்குழுக்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள
 • சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் செயல்பாட்டின் முன்னேற்ற சுயஉதவிக்குழுக்களின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்த
 • சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் திறமைகளை, ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் (நூல்கள் பராமரிப்பு, கணக்கியல், சந்தைப்படுத்துதல், நிதிமேலாண்மை, ஆலோசனை, வங்கி இணைப்பு, அரசாங்கத் திட்டங்களை அணுகுதல்) பயிற்சிகள், தகவல் பரிமாற்றம், கள உதவி போன்றவற்றின் மூலம் அதிகரித்தல்
 • பலவகை கடன் அளித்தல்
 • விருப்ப சேமிப்பு வசதிகளை அதிகரித்தல்
 • சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துதல்
 • ஆயுள் காப்பீடு, கடன் காப்பீடு போன்ற திட்டங்களை அளித்தல்
 • சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நிர்வாக சேவையளித்தல்
 • சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கணக்கினை எழுதி அவற்றை தணிக்கை செய்ய
 • சுய உதவிக்குழு உறுப்பினர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட, முறைப்படுத்த, ஆய்வு செய்ய
 • புதிய சுய உதவிக்குழுக்களை உருவாக்க
 • பெண்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்வதற்கு அவர்களுக்கு அரசியல் மற்றும் சமுதாய ரீதியான வசதிகளை உருவாக்குதல்
 • வெளியுலகத்தினை அணுகும் வாசலாக இருத்தல்
 • உருவாக்கிய நிறுவனங்கள், வெளியேறிய பின், அவற்றின் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள

தர ஆய்வு என்றால் என்ன?

தர ஆய்வு எனப்படுவது, ஒரு நிறுவனத்தின் சேவை அளிக்கும் செயல்பாடுகளைப் மதிப்பிடுவதாகும். குறுங்கடன் சேவைகளை பொறுத்தமட்டில், சுய நிர்வாக குறுங்கடன் நிறுவனங்களின் வடிவமைப்பு, அமைப்பு, செயல்படும் திறன் ஆகியவற்றின் தரத்தினை ஆய்வு செய்வதே, தர ஆய்வாகும்

முழுவளர்ச்சி அடையாத அல்லது சிறிய குறுங்கடன் நிறுவனங்களுக்கும் தர ஆய்வு தேவையா?

மேற்கூறிய நிறுவனங்களுக்கு விரைவான தர ஆய்வு அதாவது SWOT ஆய்வு எனப்படும் தர ஆய்வு தேவை. ஆனால் மிக விரிவான ஆய்வு தேவையில்லை. விரைவான தர ஆய்வின் மூலம் திட்ட செயலாக்கம், அவற்றின் செயல்படுத்தப்பட்ட விதம் மற்றும் திறமையினை ஊக்குவிக்கும் தன்மையில் ஏற்பட்ட குறைபாடு ஆகியவற்றை கண்டறியவும், பயிற்சிகளுக்கான தேவைகளை அடயாளம் காணவும் முடியும்.

ஏன் தர ஆய்வு தேவை?

தர ஆய்வு கீழ்க்கண்ட காரணங்களுக்காக செய்யப்படுகிறது

1. கடன் தகுதியை மதிப்பிட
2. தற்போதுள்ள பலம் மற்றும் முன்னேற்ற வேண்டிய அம்சங்களை கண்டறிய
3. பயிற்சிகளுக்கான தேவைகளை கண்டறிய
4. தர விழிப்புணர்வினை அதிகரிக்க மற்றும் தரத்திற்கான அளவுகோள்களை நிர்ணயம் செய்ய
5. குறுங்கடன் நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த ஆந்திரப்பிரதேசத்தில் தர ஆய்வு உதவியது. தர ஆய்வு, சுய திறமைகளை அதிகப்படுத்தி அதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க உதவும் ஒரு பயிற்சியாகவும் அமைகிறது.

தர ஆய்வினை உபயோகிப்பவர் யார்?

ஆந்திர மாநில அரசு, வங்கிகள், சுய உதவிகுழுக்களை உருவாக்கும் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்புகள்

தர ஆய்வின் போது நடக்கும் செயல்பாடுகள் என்ன?

நிறுவனங்களின் தர ஆய்வின் போது, அந்நிறுவனத்தைப் பற்றிய தகவல்களை அந்நிறுவனத்திற்குள்ளேயும், வெளியேயும் சேகரிக்க வேண்டும். இத் தகவல்களை ஊக்குவிக்கும் நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதியிடமும், அந்நிறுவனத்திலுள்ள அடிப்படை அமைப்புகளிடமும், அந்நிறுவனத்தினால் பராமரிக்கப்படும் பதிவேடு மற்றும் இதர புத்தகங்கள் மூலம் சேகரிக்க வேண்டும். தரத்தினை ஆய்வு செய்யும்போது, அந்நிறுவனத்தினரும் பங்கேற்க வேண்டும். சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பின் முதல் நிலை நிவாகிகளுடன் சுமுக தன்மையை உண்டாக்குவது, மேலாண்மை உறுப்பினர்கள், அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கிடையே சிறிய குழு விவாதம் நடத்தப்படும். கள ஆய்வுப்பணியின் கடைசி நாளன்று கூட்டமைப்பின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு தர ஆய்வின் கண்டுபிடிப்புகள் பற்றி சுருக்கமாக விளக்குவதற்காக ஒரு கூட்டம் கூட்டப்படவேண்டும். எங்கெல்லாம் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு 3 அடுக்காக உள்ளதோ, அங்கு கூட்டமைப்பினை ஆய்வு செய்வதோடு மட்டுமன்றி, இதர கிராம அமைப்புகள் அல்லது இரண்டு குழுமங்களும் ஆய்வு செய்யப்படவேண்டும்.

ஓ.எஸ்.எஸ் என்றால் என்ன?

ஒரு அமைப்பு செயல்படுவதற்காகவும், கடன் கொடுப்பதன் மூலம் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யவும், இதர நிதித்தேவைகளுக்காகவும், ஏற்படும் செலவுகளை அவ்வமைப்பே திரட்டிக்கொள்ளும் திறன், அந்நிறுவனத்தின ஓ.எஸ்.எஸ் எனப்படும். ஒரு கூட்டமைப்பினை தர ஆய்வு செய்யும் குழு , அக்கூட்டமைப்பு நடத்த தேவைப்படும் செலவினங்களை அதாவது அலுவலர்களின் சம்பளம், பயணச்செலவு, நிர்வாக செலவு, மதிப்பிறக்கம், வட்டி செலுத்துதல், கடன் கொடுப்பதால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றைக்கொண்ட நிதி அறிக்கையினை, தர ஆய்வுக்குண்டான காலகட்டத்தில் மறுநிர்ணயம் செய்ய வேண்டும். கூட்டமைப்பின் செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தினை கூட்டமைப்பு செயல்படுவதற்கான செலவினங்களால் வகுக்கும் போது ஓ.எஸ்.எஸ் மதிப்பு கிடைக்கும்

எப்.எஸ்.எஸ் என்றால் என்ன?

ஒருகூட்டமைப்பிற்கு தேவைப்படும் மொத்த நிதிக்கான சந்தை வட்டி விகிதம் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும் சந்தர்ப்ப செலவீனங்களை உள்ளடக்கி எப்.எஸ்.எஸ் கணக்கிடப்படுகிறது. கூட்டமைப்பின் செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தினை மொத்த ஒழுங்காக்கப்பட்ட செயல்பாடுகளுக்கான செலவினங்களால் வகுக்கும் போது கிடைக்கும் மதிப்பே எப்.எஸ்.எஸ் ஆகும். ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டின் விலையினை கணக்கிடுவதற்கு, அக்கூட்டமைப்பிடமுள்ள பணம் மற்றும் இதர சொத்துகளை முந்திய வருடத்திற்கான பணவீக்க விகிதத்திற்கேற்பவும், கடனாகப் பெற்ற தொகையினை சந்தையிலுள்ள வட்டி விகிதத்திற்கேற்பவும் கணக்கீடு செய்யவேண்டும்

ஓ.சி.ஆர் என்றால் என்ன?

ஒரு கூட்டமைப்பின் ஓ.சி.ஆர் எனப்படுவது அக்கூட்டமைப்பின் செயல்திறனை மதிப்பீடு செய்ய உதவும் மதிப்பீடு. அதிகமான ஓ.சி.ஆர் மதிப்பு கொண்ட கூட்டமைப்புகள் அதிக செலவு செய்பவையாக இருப்பதால், அவற்றால் போதுமான அளவில் கூட்டமைப்பின் முதலீட்டினை விரிவு செய்யமுடியாது. குறைவான ஓ.சி.ஆர் மதிப்பு கொண்ட கூட்டமைப்புகள் அதிகமான அளவு வியாபாரத்தினை குறைந்த செலவிலேயே செயல்படுத்துகின்றவையாகும். ஒரு கூட்டமைப்பின் ஓ.சி.ஆர் மதிப்பு 5-10% க்குள்ளும் இந்த அளவுக்கு மிகாமலும் இருக்கவேண்டும். கூட்டமைப்பு செயல்படுவதற்குத் தேவையான செலவினங்களான சம்பளம், தரகு, மதிப்பிறக்கம், பயணச்செலவு, அலுவலக செலவுகள், காப்பீடு, தணிக்கை ஊதியம் போன்றவை அக்கூட்டமைப்பின் நிர்வாக செலவுகளில் அடங்கும். நிதிச்செலவுகளான வட்டி செலுத்துதல், கடன் கொடுப்பதால் ஏற்படும் இழப்பு ஆகியவை இந்த நிர்வாக செலவுகளில் அடங்காது. கடந்த ஒருவருடத்திற்கான மொத்த செயல்பாட்டு செலவினங்களை சராசரி கடன் முதலீட்டுடன் வகுக்கும் போது ஓ.சி.ஆர் மதிப்பு கிடைக்கும்.

பி.ஏ.ஆர் என்றால் என்ன?

பி.ஏ.ஆர் எனப்படுவது ஒரு கூட்டமைப்பின் மொத்த முதலீட்டிற்கு ஏற்படும் எதிர்பாராத இழப்புகளை கணக்கிடுவது ஆகும். அதிகமான பி.ஏ.ஆர் கொண்ட கூட்டமைப்புகளின் முதலீடு அளவு குறைவாகவும், அவற்றின் எதிர்பாராத இடர்பாடுகள் அதிகமாகவும் இருக்கும். ஒரு கூட்டமைப்பு 90 நாட்களுக்கு மேல் வைத்திருக்கும் கடன் நிலுவை அளவிற்கே பி.ஏ.ஆர் மதிப்பு கணக்கிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் மொத்த முதலீட்டு மதிப்பு அந்நிறுவனம் கொடுத்திருந்த அல்லது அது கொடுத்திருக்கும் மொத்தக்கடன் அளவாகும். இம்முதலீட்டு மதிப்பு அக்கூட்டமைப்பின் சொத்தின் பெரிய பகுதியாகும். 90 நாட்களுக்கான பி.ஏ.ஆர் மதிப்பு, ஒரு நிறுவனத்திற்கு மொத்தமாக வரவேண்டிய கடன் நிலுவை, அந்நிறுவனம் 90 நாட்களுக்கு மேல் செலுத்தாமல் வைத்துள்ள கடன் தொகையுடன் வகுக்கும்போது கிடைக்கிறது

சி.ஏ.ஆர் என்றால் என்ன?

சி.ஏ.ஆர் எனப்படுவது, ஒரு கூட்டமைப்பு அதன் சொந்த முதலீட்டிலிருந்து, அதிக இழப்பு வாய்ப்புள்ள சேவைகளுக்கு நிதி ஏற்பாடு செய்யும் திறனைக் குறிக்கும்

3.04395604396
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top