பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கனிம வளம்

கனிம வளம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

செப்பு

செப்பு, நாகரீக காலம் தோன்றியதில் இருந்து பயன்படுத்தக்கூடிய பொதுவான கனிமம் ஆகும். இது வளைந்து நெளிந்து கொடுப்பதாலும், அரிக்கமுடியாததாலும், மின்சாரத்தை வேகமாக கடத்துவதாலும் இதனை மின் உற்பத்தி தொழிற்சாலைகளில் பயன்படுத்துகின்றனர். செப்பை தகரத்துடன் கலந்து வெண்கலத்தையும், துத்தநாகத்துடன் கலந்து பித்தளையையும் தயாரிக்கப்படுகிறது.

அதிகளவு செப்பு படிவுகள் சிலி, பெரு, மெக்ஸிக்கோ, அமெரிக்கா, கனடா, போலந்து, ஜாம்பியா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆகிய நாடுகளில் அதிகளவு கிடைக்கிறது உலகளவில் இந்தியா காப்பர் மற்றும் செப்பு உற்பத்தியில் பின்தங்கியுள்ளது.

பாக்சைட்

பாக்சைட் என்பது அலுமினியத்தின் தாதுவாகும். இதனை மின் தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்காக பிரித்தெடுக்கப்படுகிறது. ஆதலால் இதனை பிரித்தெடுப்பதற்கு உலகம் முழுவதும் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ ஆற்றில் உள்ள துவார் அணைக்கட்டும், கானடாவில் உள்ள அகோசோம்போ அணைகள் மின்சாரத்தை  தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

பாக்சைட்டை பயன்படுத்தி அதிகமான இயந்திர உபகரணங்கள், பாத்திரங்கள், விமானங்கள், மின் பொருட்கள் கட்டுமானத்தை பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதிகஅளவு பாக்சைட் படிவு வெப்பமண்டல பகுதிகளான ஆஸ்திரேலியா, சுரிநாம், ஜமைக்கா, வெனிசூலா, ஹவானா, மலேசியா, இந்தோனேஷியா மற்றும் இந்தியாவில் காணப்படுகிறது. மேலும் சைனா, யுகோஸ்லோவியா, அமெரிக்கா, கிரீஸ் மற்றும் ஹங்கேரி நாட்டிலும் கிடைக்கிறது.

நிலக்கரி

எரிசக்தி மற்றும் எரி பொருளுக்காக அதிகமாக கிடைக்கக்கூடிய மூலப்பொருளாகும். இதன் படிவு அதிகமாக கார் பானி பெரோஸ் காலத்து படிவு பாறைகளில் காணப்படுகிறது. இதனுடைய தரம் இதனுடன் உள்ள கார்பன் அளவைப் பொறுத்து உள்ளது. கார்பனின் அளவு நிலக்கரியில் அதிகரித்தால் ஈரப்பதம் குறைந்திருக்கும். தற்காலத்தில் திடமான நிலக்கரியில் குறைவான அளவு நிலக்கரி உள்ளது. அதனடிப்படையில் நிலக்கரிகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

ஆந்த்ரசைட்

இதனுள் 90 சதவீதம் கார்பன் உள்ளதால் மிகவும் சுத்தமான நிலக்கரியாகும். இது எரியும் பொழுது புகையாது கடினமான பளபளப்பு தன்மை கொண்டது. இவ்வகை நிலக்கரி படிவு குறைவாக காணப்படுகிறது.

பிடுமினஸ்

இதனுள் 70 முதல் 80 சதவீதம் வரை கார்பன் கொண்டது. அதனால் கடினமாக பளப்பளப்பான தன்மை கொண்டது. இது எரியும் மிதமான புகையையும், சாம்பலையும் கொடுக்கக்கூடியது இந்த வகை படிவுகள் சற்று அதிகமாக உள்ளது.

லிக்னைட் அல்லது பழுப்பு நிலக்கரி

இதனுள் கார்பன் 40 முதல் 50 சதவீதம் வரை உள்ளது. இதனுள் கார்பன் அளவு ஒப்பாக ஆந்த்ரசைட், பிடுமினஸ் நிலக்கரியை விட குறைவாக இருப்பதால் எரியும் பொழுது புகை வெளியிடப்படுகிறது. இது குறைவான தரமுடையது. இதன் படிவுகள் அதிக அளவில் அமெரிக்கா, சைனா ஆகிய நாடுகளில் உலக உற்பத்தியில் 60 சதவீதம் உள்ளது. மேலும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், போலந்து, உக்ரைன், கஜகிஸ்தான், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா இந்தியாவிலும் உள்ளது.

கனிம எண்ணெய்கள்

ஓர் அலகு நிலக்கரியை உற்பத்தி செய்யும் செலவிற்கு கனிம எண்ணெய்களை உற்பத்தி செய்தால் மிகவும் பயனுள்ளது. இதன் படிவு அதிகளவு குமிழ் வடிவ படிவுப்பாறைகளின் இயற்கை வாயுவுடன் இணைந்தே உள்ளது. ஆனால் அனைத்து படிவுப் பாறைகளிலும் கனிம எண்ணெய்கள் கிடைப்பதில்லை குறிப்பிட்ட பகுதி படிவு பாறைகளில் மட்டுமே கிடைக்கின்றது.

இக்கனிம எண்ணெய் படிவுகளை ஈராக், சௌதி அரேபியா, குவைத், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட், கத்தார் மற்றும் பக்ரைன் நாட்டில் அதிகம் கிடைக்கின்றது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள அமெரிக்கா, வெனிசூலா, மெக்சிக்கோ, ஜார்ஜியா, ஆர்மேனியா, அஜர்பைஜான் மற்றும் வடகடல், சைனா, இந்தியாவில் அதிகளவு படிவுகள் உள்ளது. சவுதி அரேபியா அதிகளவு உற்பத்தி செய்கிறது அதனனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் ரஷ்யாவிடம் உள்ளது.

சுரங்கங்களின் வகைகள்

சுரங்கங்கள் கனிமங்கள் கிடைக்கும் இடத்தைப் பொறுத்து மேல் பகுதி சுரங்கம், நிலத்தடி சுரங்கம் என பிரிக்கப்படுகிறது. 99 சதவீதம் கனிமங்கள் மேற்பரப்பு சுரங்கம் மூலம் எடுக்கப்படுகிறது. அதனாலேயே அதனை திறந்த வெளி சுரங்கம் என அழைக்கப்படுகிறது. தாதுக்களை எடுக்கும் முறைகளை தாதுக்கள் காணப்படும் வகை தீர்மானிக்கிறது. படிவுகள் அல்லது தாதுப்படுகைகள் புவி மேற்பரப்பிற்கு அருகிலேயே உள்ளதை திறந்தவெளி சுரங்கள் எனப்படுகிறது.

நிலத்தடி சுரங்கம் என்பது குகை போன்று தோன்றி உள்ளே சென்று தாதுக்களை எடுப்பதாகும். அப்படி எடுக்கப்படும் போது விஷவாயுக்கள், தீ, வெள்ளம், போன்றவைகள் ஏற்பட்டு ஆபத்தான பாதிப்புகள் தொழிலாளர்களுக்கு ஏற்படும். இது மேற்பரப்பு சுரங்கத்தைப் போல் இல்லாதது. இந்த சுரங்கங்களில் தரைத்தளத்தில் உள்ள பொருட்களை மேல் பகுதிக்கு அனுப்புவதற்கு குழாய்கள் மற்றும் சுரங்கங்கள் செங்குத்தாகவும் கிடையாகவும் அமைக்கப்படுகிறது. கனிமங்கள் உள்ள பாறையை மேல்பகுதிக்கு எடுத்துச் செல்ல பாதைகள் போடப்படுகிறது. இதற்கு சிறப்பு வாய்ந்த மின்தூக்கிகள், குடைவுகள், சுமை ஏற்றிகள், காற்றோட்ட அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மற்றும் பொருட்கள் செல்வதற்கு சிறந்த வசதியாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.17857142857
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
நெவிகடிஒன்
Back to top