பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழிற்சாலைகளின் வகைகள்

தொழிற்சாலைகளின் வகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகளை அதன் உற்பத்தி அளவு, உற்பத்தி பொருள், மூலப்பொருட்கள் மற்றும் உரிமையாளர்களை அடிப்படையாக வைத்து பிரிக்கப்படுகிறது.

உற்பத்தியின் அளவு அடிப்படையில் வகைப்படுத்துதல்:

தொழிற் சாலைகளின் உற்பத்தி அளவை கீழே உள்ள காரணிகள் தீர்மானிக்கின்றன.

  • உற்பத்தி பொருட்களுக்காக முதலீடு செய்யப்படும் தொகையின் அளவு.
  • அத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை
  • உற்பத்தியின் அளவு.

மேலும் இத்தொழிற் சாலைகளை குடிசைத் தொழில் அல்லது வீட்டு உபயோக தொழிற்சாலை, சிறு தொழில் தொழிற்சாலை, பெரிய அளவு தொழிற்சாலை என வகைப்படுத்தப்படுகிறது.

குடிசைத் தொழில் என்பது சுற்று வட்டத்தில் கிடைக்கக்கூடிய மூலப் பொருட்களை சிறிய உபகரணங்கள் கொண்டு குடும்ப நபர்களால் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களாகும். இது மிகவும் சிறிய அளவு தொழிற்சாலையாகும். கைவினை உற்பத்தி தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படும். இந்த வகை உற்பத்திக்கு சிறிய உபகரங்களை பயன்படுத்தி சிறிய அளவில் உற்பத்தி செய்து சுற்றியுள்ள பகுதியில் விற்பனை செய்வார்கள். இதனை முக்கிய தொழிலாக ஆசியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் செய்கின்றனர்.

சிறுதொழில் தொழிற்சாலை

சிறுதொழில் தொழிற் சாலைகள் நவீன மின் இயந்திரங்கள் மற்றும் வேலையாட்களை பயன்படுத்தி சுற்றுப் பகுதியில் கிடைக்கக்கூடிய மூலப் பொருள் அல்லது வெளிப்பகுதியில் இருந்து பெறப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி பொருட்களை வியாபாரிகள் மூலம் விற்பனை செய்கின்றனர். வளரும் நாடுகளில் அதிக மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை அளிக்கிறது. இந்தியா, சைனா, போன்ற நாடுகளில் துணி, பொம்மை, போன்ற பொருட்களை இத்தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்கின்றனர்.

பெரிய அளவு தொழிற்சாலை

இத்தொழிற்சாலையில் பெரிய அளவு முதலீடு, கனரக இயந்திரங்கள், அதிக அளவு பணியாட்களைக் கொண்டு அதிக அளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு பெரிய அளவு சந்தை உள்ளது. இத்தொழிற்சாலை உற்பத்திக்கு மூலப்பொருட்களை பல பகுதிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் தரம் பிரிக்கப்படுகிறது. பொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்வதால் சந்தைக்காக பலபகுதிக்கும் பல கண்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இவ்வகை தொழிற்சாலையில் இரும்பு, எஃகு மற்றும் பெட்ரோல் தொழிற்சாலை, ஜவுளித் தொழிற்சாலைகள் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அடங்கும்.

தொழிற்சாலைகளை மேலும் கனரக தொழிற்சாலைகள் மற்றும் குறைவாக உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை என அத்தொழிற்சாலைகளின் உற்பத்தி அளவு அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. கனரக தொழிற்சாலைகள், மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்தில் அமைக்கப்பட்டு அதிக பொருட்களை உற்பத்தி செய்கிறது. எ.கா: இரும்பு, எஃகு தொழிற்சாலை. சிறிய பொருட்களை உற்பத்தி செய்கிறது. எ.கா. மின்    அலை பொருட்கள் தொழிற்சாலை.

உற்பத்திப் பொருட்களின் வெளியீட்டைப் பொருத்து வகைப்படுத்துதல்

இந்த தொழிற்சாலைகளை அடிப்படை மற்றும் அடிப்படை அற்ற தொழிற்சாலை என வகைப்படுத்துகிறது. அடிப்படை உற்பத்தி தொழிற்சாலை என்பது இப்பொருளை பயன்படுத்தி மற்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. எ.கா. இரும்பு, எஃகு தொழிற்சாலை, அடிப்படை இல்லாத தொழிற்சாலை என்பது இப்பொருட்களை நேரடியாக உபயோகப்படுத்துவதாகும். எ.கா. தேநீர், பிரட், சோப், தொலைக்காட்சி தொழிற்சாலைகள்.

உற்பத்திக்கு தேவையான உள்ளீடுகளை பொறுத்து வகைப்படுத்துதல்

இத்தொழிற் சாலைகளை மூலப் பொருட்கள் காடு, விவசாயம், கனிமம், ரசாயனம் மூலம் பெறப்படுவதன் வழியாக வகைப்படுத்தப்படுகிறது. விவசாயத் துறை தொழிற்சாலைக்குத் தேவையான பருத்தி துணி, தேநீர், கரும்பு, காய்கறி போன்றவற்றை உற்பத்தி செய்கிறது.

வன அடிப்படையிலான தொழிற்சாலைகள்

காடுகளிலிருந்து காகிதம் மற்றும் பர்னிச்சர்கள் தயாரிக்க மூலப் பொருட்கள் பெறப்படுகிறது.

கனிம அடிப்படையிலான தொழிற்சாலைகள்

கனிமங்களை அடிப்படையாக கொண்டு தொழிற்சாலைகளை வகைப்படுத்தப்படுகிறது. இத்தொழிற்சாலைகளை மேலும் இரும்புத் தாது அற்ற தொழிற்சாலை என வகைப்படுத்தப்படுகிறது. இத்தொழிற்சாலைகள் இரும்புத்தாதுடன் அல்லது இரும்புத்தாது அற்ற தொழிற்சாலையாக உள்ளது. எ.கா. இரும்பு, எஃகு, தொழிற்சாலை இரும்புத்தாதைக் கொண்டுள்ள தொழிற்சாலையாகும், செப்பு, அலு மினிய தொழிற்சாலைகள் இரும்புத்தாது அற்ற தொழிற்சாலையாகளாகும்.

ரசாயன அடிப்படையிலான தொழிற்சாலைகள்

இத்தொழிற்சாலைகள் இரசாயனத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது. எ.கா: பெட்ரோல், பிளாஸ்டிக், செயற்கை நார் மற்றும் மருந்து தொழிற்சாலைகள். சில தொழிற்சாலைகள் எண்ணெய், உப்பு, கந்தகம், பொட்டா~; மற்றும் காய்கறி போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு இயக்கப்படுகிறது. மற்ற இரசாயண தொழிற்சாலைகள் மற்ற தொழிற்சாலைகளுக்கு துணை பொருளாக உள்ளது.

உரிமையாளர்கள் வைத்து வகைப்படுத்துதல்

தொழிற்சாலைகளை உரிமையாளர்கள் அடிப்படையில் பொதுத்துறை, தனியார் துறை எனவும், இரண்டு தனி நபர்கள் இணைந்து முதலீடு செய்து நிர்வகிக்கப்படும் தொழிற்சாலையை கூட்டுத்துறை தொழிற்சாலை என வகைப்படுத்தப்படுகிறது. தனியார் துறையை முதலாளிகளும், பொதுத்துறையை அரசாங்கமும், இரண்டு தனி நபர்கள் இணைந்து நிர்வகிப்பது பொதுத் துறை நிர்வாகமாகும். சில தொழிற்சாலைகள் முன்பே இலக்கு மற்றும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக வெளியிடப்பட்ட பங்குகளைக் கொண்டு தொழிற்சாலை தொடங்கப்;படுகிறது.

தொழிற்சாலைகள் அமைவிடம்

தொழிற்சாலை அமைவிடத்தை புவியியல் மற்றும் புவியியலற்ற காரணிகள் தீர்மானிக்கின்றன. புவியில் கார ணிகளான முகடு, கால நிலை, மூலப்பொருட்கள், எரிசக்தி ஆதாரங்கள், அதிக வேலையாட்கள் மற்றும் போக்குவரத்தாகும். புவியிலற்ற காரணிகளான அரசின் கொள்கைகள், மூலதனம், சந்தை மற்றும் நிர்வாகம் ஆகும். ஆனால் தொழிற்சாலை அமைவிடத்தை சரியான பொருளில் விளக்க இயலாது. தற்பொழுது அதனை அதனுடன் இணைந்துள்ள தொழிற்சாலைகள், செயல்பாடு காணப்படும் இடம், அரசின் கொள்கைகள், சுற்றுச்சூழல், தொழிற்சாலையின் நிலை மற்றும் மனித காரணிகளை வைத்து கூறப்படுகிறது. இந்த காரணிகள் தனித்தனியாக செயல்பட முடியாது. இணைந்தே செயல்படும். தொழிற்சாலை அமைவிடத்துடன் மேலும்      குறிப்பிடத்தக்க தொடர்புடைய காரணிகளான நேரம், இடம், தொழிற்சாலை வகைகள், மற்றும் பொருளாதாரமாகும். எனினும் அனைத்து காரணிகளும் ஒரே இடத்தில் சாதகமாகவும், பாதகமாகவும் இருப்பதில்லை. ஆதலால் தொழிற்சாலை அமைவிடத்தை தேர்ந்தெடுக்கும் போது சாதகமாக மற்றும் பாதகமான காரணிகளை கவனத்தில் வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொழிற்சாலை அமையக்கூடிய காரணிகள்:

தொழிற்சாலை அமைவதற்கு கூட்டு, செயல்பாடு, பண்டங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் பங்களிப்பு போன்ற எண்ணற்ற காரணிகள் அடிப்படையாக உள்ளது.

தொழிற்சாலை அமைவதற்கான தூரம்

தூரம் என்பது முக்கியமான காரணியாகும். ஏனென்றால் உற்பத்தி செய்த செய்ய, செய்து முடித்தப் பொருட்களை நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு எடுத்துச் செல்ல தூரம் மிக முக்கிய காரணியாகும். மேலும் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்களின் பொருளாதார மதிப்புகளை காட்டுகிறது. குறைவான பொருளாதார மதிப்புக் கொண்ட தூரத்தையே தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள்.

மூலப்பொருள்கள்

மூலப் பொருட்கள் மலிவாக கிடைப்பது தொழிற்சாலை அமைவிடத்திற்கு முக்கிய காரணியாகும். ஏனென்றால் தொழிற்சாலைகள் பழங்காலத்திலிருந்து மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு இருந்துள்ளது. அருகில் உள்ளது. ஆனால் போக்குவரத்து வளர்ச்சியினால் மற்றும் கையாளக்கூடிய வசதியினால் மூலப்பொருட்களை எடுத்துச் செல்வது எளிதாகிறது. சில தொழிற்சாலைகளின் மூலப்பொருட்கள் எளிதில் அழுகிவிடுதல், போன்ற காரணங்களால் அத்தொழிற்சாலைகள் அந்த மூலப்பொருட்களின் உற்பத்தி இடத்திற்கு அருகில் உள்ளது.

எரிசக்தி ஆதாரம்

மின் இரசாயன மற்றும் மின் உருக்காலைகள், போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் தொழிற்சாலைகள் மின் உற்பத்தி ஆலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. ஆனால் மின்சாரப் பகிர்வு மற்றும் குழாய் வழியாக இயற்கை வாயு செலுத்தப்படுவதால் எரிசக்தி காரணங்கள் முக்கியத்துவம் குறைந்தது.

நீர்

நீரைப் பயன்படுத்தி தொழிற்சாலையினல் வெப்பத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக இரும்பு, எஃகு தொழிற்சாலைகளுக்கு அதிக நீரும், மாற்றாக மின் தொழிற்சாலைகளுக்கு குறைவான நீரும் தேவைப்படுகிறது. ஆதலால் நீர் கிடைப்பது என்பது தொழிற்சாலை அமைவதை தீர்மானிக்கும் முக்கிய கார ணியாகும்.

அதிக பணியாட்கள் கிடைக்கக்கூடிய இடம்

பல்வேறு தொழிற்சாலைகளில் பல்வேறு வகையான வேலையாட்கள் தேவைப்படுகின்றனர். உதாரணமாக வைரத்தை வெட்டி, பளப்பளப்பு செய்ய நன்கு தரமான திறமையான ஆட்கள் தேவைப்படுகின்றனர், மற்ற தொழிற்சாலைகளில் தரமான தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆதலால் பணியாட்கள் உள்ள பகுதி தொழிற்சாலை அமைவதை தீர்மானிக்கும் ஓர் காரணியாக உள்ளது.

திறமையான நிர்வாகம்

திறமையான தொழிற்சாலை இடங்கள் திறமையான நிர்வாகிகளை கவர்ந்து இழுக்கும். மேலும் இக்காரணி தொழிற்சாலை அமைவிடத்தை நிர்ணயிக்கும் மற்றொரு முக்கிய காரணியாகும்.

முதலீடு

கிடைக்கக்கூடிய முதலீடு செய்ததற்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய தொழிற்சாலை அமைந்துள்ள இடம் தொழிற்சாலை அமைவதற்கு முக்கியமான மற்றொரு கார ணியாகும். நாட்டில் வங்கி வசதி உள்ள இடத்தில் முதலீடு எளிதாக கிடைக்கின்றது.

அரசின் திட்டங்கள்

ஒரு நாட்டின் அரசாங்கம் வளங்களை அளிப்பதற்கு, பொருளாதார வாய்ப்புகளை நல்ல திட்டங்கள் மூலம் மேம்படுத்துகிறது. அதாவது சாதகமான அரசின் திட்டங்கள், அரசுகள், நிலையான போன்றவை தொழிற்சாலை அமைவிடத்தை தீர்மானிக்கும் காரணிகளாகும் பல நாடுகளில் குறிப்பிட்ட பகுதி முக்கியத்துவம் மற்றும் முக்கியத்தவமற்ற பகுதி என பாகுபடுத்தப்பட்டு தொழிற்துறை வளராமல் உள்ளது. ஆகவே மண்டல  வேறுபாடு தொழிற்சாலை அமைவிடத்தில் முக்கிய பகுதியை வகிக்கிறது.

சுற்றுச்சூழல்

நல்ல நிலையான வாழிடம், சாதகமாக வானிலை, மற்றும் ஓர் நிலப்பரப்பு பின் உள்ள இயற்கை கவர்வு போன்ற முக்கியமான சுற்றுச்சூழல் தொழிற்சாலை அமை    விடத்தில் முக்கிய பங்காற்றுகிறது. எ.கா. அமெரிக்க ஐக்  கிய நாட்டில் உள்ள வானுர்தி தொழிற்சாலைகள். காலநிலை நலன் கருதி நாட்டின் தென் மேற்குப் பகுதியில் அமைத்துள்ளனர்.

தொழிற் சாலைகளின் நிலை

தொழிற் சாலைகளுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை வசதிகளாக போக்குவரத்து மற்றும் சேவைகள் நிலையான முதலீடுகளான புதிய கட்டிடங்கள் தொழிற்சாலை அமை விடத்தை கவர்ந்திழுக்கும் காரணியாகும். சில தொழிற்சாலைகள் மற்ற தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருள் அல்லது சில  உதிரிபாகங்களை அளிக்கிறது. ஆதலால் அப்பகுதி தொழிற்சாலை அமைவிடத்தில் முக்கியமாக உள்ளது.

மனித காரணிகள்

ஓர் மனிதனின் தனி விருப்பம், முன்னுரிமை போன்ற காரணிகள் தொழிற்சாலை அமைவிடத்தை தீர்மானிக்கும், கடைசிநலை காரணியாக உள்ளது.

உலகில் உள்ள முக்கியமான சில தொழிற்சாலைகள்

உற்பத்தி உலக பொருளாதாரத்தில் குறிப்பிட்ட ப ங்களிப்பை அளிக்கிறது. மேலும் உலகின் மொத்த உற்பத்தி பொருட்களில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் 50 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி செய்கிறது. உலகில் அதிகமாக உற்பத்தி தொழிற்சாலைகளில் இரும்பு, எஃகு தொழிற்சாலை, துணித் தொழிற்சாலை, மோட்டார் வாகன தொழிற்சாலை, பெட்ரோல் தொழிற்சாலை, மின்னனு தொழிற்சாலைகள் போன்ற முக் கியமான தொழிற்சாலைகள் உள்ளது.

இரும்பு எஃகு தொழிற்சாலை

பூமியில் அதிகளவு இரும்புகனிம தாதுக்கள் கிடைக்கின்றது அதனுடன் காந்தத்தாது உள்ளதால் அடர்த்தியாக உள்ளது. இரும்புத் தாதை சுண்ணாம்புக்கல் மற்றும் கார்பன் வெடிப்பு குழாயில் உருக்கி எடுக்கப்படுகிறது. தாதுக்களை பிரித்த பிறகு உருக்கிய தாதை குளிரவைத்து அல்லது உருக்கி தேனிரும்பு அல்லது உற்பத்திக்கு தேவையான இரும்பாக உபயோகப்படுத்தப்படுகிறது. சிறிய அளவு கார்பன் இணை கலந்து இரும்பு தயாரிக்கப்படுகிறது. மேலும் திறன் வாய்ந்த நிக்கல் அல்லது மாங்கனீஸ் கலக்கப்படுகிறது. இரும்பு உறுதியாகவும் வளையக் கூடியதாகவும் உள்ளதால் உலக உற்பத்தி தொழிற்சாலைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இது அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அடிப்படை தொழிற்சாலையாக உள்ளது. அதிகளவு மூலப்பொருட்களை பயன்படுத்தி அதிகஅளவு உற்பத்தி செய்வதால் இதனை கனரக தொழிற்சாலை என வகைப்படுத்தப்படு கிறது. தொழிற் புரட்சியில் இரும்பு எஃகு தொழிற்சாலை முக்கிய பங்காற்றியது. ஏனென்றால் இது தொழிற் சாலைகள் மூலப்பொருள் கிடைக்கக்கூடிய இடத்திற்கு அருகில் அல்லது அதிகளவு மூலப்பொருட்களை எளிதாக எடுத்து வரக்கூடிய இடத்திற்கருகில் அமைந்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள அட்லாண்டிக்கடற்கரையில் உள்ள பெரிய ஏரி மண்டலம் இங்கிலாந்தின் வடக்கு வடகிழக்கு மற்றும் மையப் பகுதி பிரான்ஸ், பெல்ஜியம், பெக்ரைன், லக்~ம்பர்க், சர் மற்றும் ரூர் பகுதிளான மேற்கு ஐரோப்பா, உக்ரைன், ர~;யாவிலுள்ள யூரல் மலைத்தொடர் பகுதி, இந்தியாவில் உள்ள சோடா நாக்பூர் பீடபூமி, போன்ற பகுதிகள் உலகிலேயே அதிகளவு இரும்பு எஃகு பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளாகும். இப்பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைவிடத்தை தீர்மானிப்பதில் கனிம வள இருப்பு முதன்மையாக உள்ளது.

பெட்ரோல் ரசாயன தொழிற்சாலைகள்

அதிக தொழிற்சாலைகள் பெட்;ரோலியத்தை நம் பியுள்ளனர் அதனால் இத்துறை முக்கியமான துறையாக உள்ளது. இத்தொழிற்சாலைகள் பெட்ரோலிய சுத்தகரிப்பு கட்டுமானம் உள்ள பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது சுத்திகரிப்பு ஆலைகள் துறைமுகம் அல்லது சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. ரசாயன உரத் தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், செயற்கை நார், ரேயான் போன்ற தொழிற்சாலைகள் சுத்தகரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலைகளாகும்.

பெட்ரோல் இரசாயண தொழிற்சாலைகள் இரண்டாம் உலக போருக்குப் பின் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வளர்ந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இத்தொழிற்சாலைகள் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. ஏனென்றால் அமெரிக்கா மற்றும் மேற்காசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு பகுதிகளுக்கு குழாய் வழியாகவும், எண்ணெய் கிடங்கு வழியாகவும் அனுப்பப்படுகிறது. சிக்காகோ, டோல்டோ, பிலடெல்பியா, டௌhவேர், லாஸ்ஏஞ்சல்ஸ்;, அதிகளவு பெட்ரோல், ரசாயன தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்களாகும்.

ஐரோப்பாவில் இத்தொழிற்சாலைகள் சந்தைகளுக்கு அருகில் உள்ளது. அதிகமாக இத்தொழிற்சாலைகள் வடகடலின் தெற்கு கடற்கரை, ஆங்கில கால்வாய், ஜெர்மனியில் உள்ள ரூர்மண்டலம், பிரான்ஸில் உள்ள லீ கார்வி-ரோவன்-மார்செயல்ஸ் மண்டலம் உள்ளது. ஆசிய மைய நாடுகளான ர~;யா, மேற்கு ஆசியாவில் உள்ள அபதான், சவுதி அரேபியாவில் உள்ள ரானுவரம், குவைத்தில் மினி-அல்-அக்மடியிலும், இந்தியாவில் ட்ராம்பே, வடோதோரா, பொன்கைகான் ஆகிய இடங்களில் உள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.11904761905
G.கார்த்திகேயன் May 28, 2020 06:33 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழில் மண்டலங்கள் மற்றும் அம்மண்டலங்களில் அடங்கியுள்ள நகரங்கள் பட்டியலை வெளியிடவும். குறிப்பாக ஆவடி எந்த தொழில் மண்டலத்தில் அமைந்துள்ளது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top