பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / பொருளாதாரம் / போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு

போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

போக்குரத்து நிலம், நீர், வான்வழி, குழாய் போன்ற வகைகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு போக்குவரத்தும் எடுத்துச் செல்லக்கூடிய பொருள், சேவைகள், கட்டணம், கிடைக்கக்கூடியவற்றைப் பொருத்து முக்கியத்துவம் பெறுகிறது. (எ.கா.) அதிக பொருளாதார மதிப்பு வாய்ந்த பொருட்களை நீர் வழிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. சாலைப் போக்குவரத்து குறைவான தூரத்திற்கு பொருட்களை வேகமாக எடுத்து செல்வதற்கு சிறந்த போக்குவரத்தாகும். மேலும் வீட்டிற்கே சென்று கொடுக்கின்றனர். இரயில் போக்குவரத்து அதிகளவு பொருட்களை நீண்ட தூரத்திற்கு அதாவது கண்டம் விட்டு கண்டம் எடுத்துச் செல்ல உதவுகிறது. வான்வழிப் போக்குவரத்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த மெல்லிய பொருட்கள், எளிதில் அழுகக்கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. இந்த அனைத்து போக்குவரத்துக்களையும் ஒரு நாட்டில் ஒன்றுடன் ஒன்று சரியாக தொடர்புபடுத்துவதில் பெரிய சிக்கல் உள்ளது.

நிலவழிப் போக்குவரத்து

நிலப்போக்குவரத்து பழங்காலத்திலிருந்து மிக முக்கியமாக போக்குவரத்தாகும். இதன்மூலம் மனிதர்கள் வளர்ந்த வீட்டு விலங்கான குதிரை, காளை மாடுகள், கழுதை, போன்ற விலங்குகளை பொதி சுமக்க பயன்படுத்தினர். மோட்டார் வாகனங்கள் கண்டுபிடித்த பிறகு சுமைகளை வேகமாக சாலைகளில் எடுத்துச் செல்ல பயன்படுத்தினர். நீராவி என்ஜின் இரயில்வே போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்றது. 1830ம் ஆண்டு ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு ஒர் இடத்தை விரைவாக அடைவதற்கும், தொடர்புபடுத்துவதற்கும் அதிகரித்தது. இதனால் நாட்டின் உள் பகுதியில் சுரங்கம் மற்றும் விவசாயம் உற்பத்தி போன்ற வாணிபங்கள் நடைபெற்றது.

கயிறு வழிப்பாதை, கம்பிவிசைக்கல், குழாய் வழிப்பாதை தற்பொழுது சாலைப் போக்குவரத்தில் முக்கியமான வளர்ச்சியாகும். கயிறு வழிப்பாதை, கம்பி விசைக்கல்பாதை போன்றவைகளால் மலைப்பகுதிகளில் போக்குவரத்து நடைபெறுகிறது. குழாய் வழியாக எண்ணெய் மற்றும் நீரை நிலப்பகுதிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது.

சாலை மற்றும் நெடுஞ்சாலைகள்

நிலப் பகுதியில் குறைவான தூரத்தை பொருளாதார சிக்கனமாக அடைவதற்கு சாலைப் போக்குவரத்து சிறந்த பாதையாகும். பல வளர்ந்த நாடுகள் தரமான சாலைகள் மூலம் பல இடங்களை இணைக்கிறது. ஆனால் வளரும் நாடுகளில் சாலைகளை சரியாகப் பராமரிப்பதில்லை. வளரும் நாடுகளில் சில காலங்களாக சாலை போக்குவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் 60மீ அகலத்தில் தூரப் பகுதிகளை இணைக்கிறது. இதனுள், பல விளைவுகள், பாலங்கள், மேம்பாலங்கள் போன்றவைகள் நெரிசல் இல்லாமல் செல்கின்றது.

வளர்ந்த நாடுகளில் நெடுஞ்சாலைகளை திறம்பட பராமரிக்கின்றனர். ஐரோப்பாவில் ஒவ்வொரு கப்பல் துறைமுக நகரங்களும் நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில், மாஸ்கோ நகரத்தை கிழக்கே உள்ள விலாடிவாஸ்டாக் நகரத்துடன் நெடுஞ்சாலை  இணைக்கிறது. சாலைகள் வட அமெரிக்காவில் கிழக்கு கடற்கரை நகரங்களையும் மேற்கு கடற்கரை நகரங்களையும் கனடாவிற்கு வடக்கே உள்ள நகரங்களையும் தெற்கே உள்ள மெக்ஸிகோவையும் இணைக்கிறது. மேற்கு கரையிலுள்ள பிரிட்டிஷ்; கொலாம்பியாவின் வான்கூரை கிழக்கு கரையிலுள்ள நியுபவுன்லாந்தின் செயின்ட் ஜான் நகரத்தை இணைக்கும்.

இரயில்வே போக்குவரத்து

இரயில் போக்குவரத்து அதிக பொருட்களை நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்வதற்கு சாலைப் போக்குவரத்தை விட மலிவானது. நீராவி என்ஜின் கண்டுபிடித்த பிறகு தொழிற்சாலையும் இரயில்வே போக்குவரத்தும் வளர்ச்சி பெற்றது. இப்போக்குவரத்து இன்றும் அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கிலாந்து, மற்றும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களை நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றோர் பகுதிக்கு குறைந்த நேரத்தில் அழைத்துச் செல்கின்றது.

உலக இரயில் போக்குவரத்து அமைப்பு:

இரயில் போக்குவரத்து நாட்டின் முக்கியமான போக்குவரத்து சேவையாக உள்ளதால் இதனை பல நாடுகளில் அரசாங்கமே இயக்குகிறது. டீசல் மற்றும் மின்சார இரயில்களினால் வேகம் அதிகரிக்கப்பட்டு பயணியரின் நலனுக்காக குளிர் சாதன அறை, இண்டர்நெட், உணவு விடுதி மற்றும் பல வதசிகளை அரசாங்கள் ஏற்படுத்திக் கொடுத்து மேலும் பொருட்களை ஏற்றும் கொள்ளளவை அதிகரித்தால் அதிக பெட்டிகள் இணைக்கப்பட்டு அழுகக்கூடிய பொருட்கள் சுமைதாங்கிகள் மற்றும் பெட்டக பெட்டிகளை ஏற்றி இறக்குகின்றது.

இந்தியா 9300கி.மீ நீளமுள்ள இரயில் பாதையைக் கொண்டுள்ளது. இது 6300 கி.மீ தூரத்தை 7000 நிறுத்தங்களுடன் கொண்ட ஆசியாவிலேயே பெரிய ரயில்வே பாதையாகும். ஜப்பான் ரயில் போக்குவரத்து 28000கி.மீ தூரம் செல்கிறது. சைனா 35000கி.மீ தூரத்திற்கும் மேல் ரயில்பாதை செல்கிறது. ஆசியாவிலேயே உள்ள மற்ற நாடுகளில் ரயில் போக்குவரத்து மிகக்குறைந்த தூரமே உள்ளது. மேற்காசியாவில் அதிகளவு பாலைவனம் மற்றும் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் ரயில் போக்குவரத்து மிகக் குறைவாக உள்ளது.

தென் அமெரிக்காவில் இரயில் போக்குவரத்து வலை குறிப்பாக அர்ஜென்டினாவில் உள்ள பாம்பாஸ் பகுதியிலும் பிரேசிலில் காபி விளையக்கூடிய பகுதிகளில் நெருக்கமான ரயில்வே போக்குவரத்து உள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள கண்டம் விட்டு செல்லக்கூடிய ரயில்பாதை அர்ஜென்டினாவில் உள்ள பியுனோஸ் எயர்ஸ் நாட்டிலுள்ள கணவாயை கடந்து கடல் மட்டத்திலிருந்து 3960 மீட்டர் உள்ள வால்பரைஸோவை இணைக்கிறது. ஆன்டிஸின் மாநிலத்தில் உள்ள மற்ற ரயில்வே போக்குவரத்து பாதைகள். எ.கா. பெரு, பொலிவியா, ஈக்வடார், கொலம்பியா மற்றும் வெனிசூலா இவைகள் சிறிய தூரத்திற்கு துறைமுகத்திலிருந்து நாட்டின் உள்பகுதிக்கு செல்ல செல்ல ஒரே பாதை செல்கிறது. இடையில் எந்த பாதையும் இணைவதில்லை

ஆஸ்திரேவியாவில் 40,000 கி.மீ ரயில்வே பாதை உள்ளது, இதனுள் 4ல் 1 பங்கு நியு சவுத் வேல்ஸில் உள்ளது. இதனுள் ஒரு பாதை கண்டம் விட்டு செல்லக்கூடியது இது பெர்த்திலிருந்து கல்துர்லி, அடிலெய்டு, கான்பெர்ரா மற்றும் மெல்பேர்ன் வழியாக சிட்னி நகரை இணைக்கிறது. தெற்குப் பாதை அடிலெய்ட் மற்றும் அலைஸ் ஸ்பிரிங்கை இணைக்கிறது. ஆனால் இப்பாதை இதுவரை டார்வினிலிருந்து பேர்டூன் வரை செல்லக்கூடிய பாதையை இணைக்கவில்லை.

ஆப்ரிக்கா 40,000கி.மீ தூரம் இரயில் பாதை கொண்ட இரண்டாவது பெரிய கண்டமாகும். இதனுள் சில முக்கியமான இரயில் பாதைகள், இதனுள் பெண்டுலா இரயில்பாதை அங்கோலாவிலிருந்து கடாங்கள், ஜாம்பியா காப்பர் மண்டலத்திலிருந்து டார் எஸ் சலாம் மற்றும் போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வேயிலிருந்து மைய ஆப்ரிக்க நாடுகள் வழியாக தென் ஆப்ரிக்க ரயில் பாதையை இணைக்கிறது. அல்ஜிரியா, சென்கல், நைஜீரியா, கென்யா, எத்தியோபியா, ரயில்பாதை கடற்கரை துறைமுகத்திலிருந்து தீவின் மையப்பகுதி வரை செல்கிறது. ஆனால் மற்ற நாட்டுடன் இணைக்கக்கூடியதுடன் தொடர்பற்றது. தென் ஆப்ரிக்காவில் தங்கம், செப்பு, வைரம் போன்ற சுரங்க தொழிலால் 18000 கி.மீ தூரத்திற்கு நெருக்கமான ரயில்பாதையை கொண்டுள்ளது.

வடஅமெரிக்காவில் உலகில் மொத்த ரயில் பாதையில் 40 சதவீதம் கொண்டுள்ளது. இது பெரிய ரயில்வே வலை அமைப்பாகும். நெருக்கமான ரயில்வே அமைப்பு அமெரிக்க ஐக்கிய நாட்டில் கிழக்கு மையப்பகுதி மற்றும் கனடாவின் தெற்கு பகுதி, பெரிய ஏரிக்கு தென்பகுதி அட்லாண்டிக் கடற்கரைக்குக் மேற்குப் பகுதி ரயில் பாதைகள் நாட்டின் பல பகுதிகளை இணைக்கிறது.

கண்டங்கள் விட்டு கண்டம் செல்லக்கூடிய இரயில்பாதை:

இந்த இரயில் பாதை இரண்டு முனைகளிலும் இரண்டு கண்டங்களை இணைக்கிறது. இது அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்திற்காக அமைக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகவும் முக்கியமான இரயில் பாதை கண்டம் விட்டு செல்லக்கூடிய ஆசிய இருப்புப் பாதையாகும். இப்பாதை மேற்கே உள்ள செயின் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து கிழக்கே விலாடிவோர்ஸ்டக் (ஏடயனiஎழளவழம) வரை செல்கிறது. இது 9322கி.மீ தூரம் கொண்ட இரண்டு வழி பாதையாகும். இப்பாதைச் செல்லக்கூடிய பாதையில் மாஸ்கோ, உபா, நோவேரிசபர்ஸ்க், இர்க்குட்ஸ்க், சிட்டா, கபரோவஸ்க் ஆகிய முக்கியமான நிறுத்தங்கள் உள்ளன. இப்பாதை தெற்கிலிருந்து உக்ரைனில் உள்ள ஒடீசா, கருங்கடலில் உள்ள பாகு, உஸ்பெஸ் கிஸ்தானில் உள்ள தாஷ்கண்ட், மங்கோலியாவில் உள்ள உலன்பாதர், மஞ்சூரியாவில் உள்ள சென்யாங் மற்றும் சைனாவில் உள்ள பெய்ஜிங்கை இணைக்கிறது. கனடியன் பசிபிக்  ரயில்பாதை மேற்கு கடற்கரையில் உள்ள ஹாலிபாக்கையும், வடஅமெரிக்காவின் கிழக்கு கடற்கரையையும் இணைக்கிறது. இதன் இணைப்பு வின்னிபெக்கிலிருந்து தண்டர்பே இது சுப்பீரியர் ஏரியின் வடக்கு கரையில் இருந்து செல்கிறது. இது உலகிலேயே மிக முக்கியமானது. ஒரு நீர்ப்பகுதியை இணைக்கிறது. இந்த நீர் வழி மூலம் பிரைரி பகுதியிலிருந்து கோதுமையை எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த இரயில் பாதை கனடாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆஸ்திரேலியாவின் கண்டம் விட்டு செல்லக்கூடிய ரயில் பாதை கிழக்கு கடற்கரையில் உள்ள சிட்னியிலிருந்து மேற்கு கடற்கரையில் உள்ள பெர்த் வரை செல்கிறது. இது கண்டத்தின் தெற்கு பகுதியில் செல்கிறது. இந்த பாதையில் ஃப்ரோக்கன், கில், ஆகுஸ்டா துறைமுகம், கல்துரில் போன்ற முக்கியமான நிறுத்தங்கள் உள்ளது. ஆசியாவின் கண்டம் விட்டு செல்லக்கூடிய இருப்புப் பாதை துருக்கியில் உள்ள கான்ஸ்டான்டி நோபிள் இருப்புப் பாதையை ஈரான், பாகிஸ்தான், இந்தியா, சௌதி அரேபியா, பங்காதே~;, மியான்மார் வழியாக தாய்லாந்தில் உள்ள பங்காங் வரை இணைப்பதற்காக கோரிக்கை உள்ளது.

நீர் வழிப் போக்குவரத்து

நீர்வழிப் போக்குவரத்தை பழங்காலத்திலிருந்து பயன்படுத்துகின்றனர் இதற்கென தனி பாதைகள் அமைக்க தேவையில்லை. இப்பாதையில் இரு முனைகளிலும் கப்பல் மற்றும் நிறுத்தவதற்கான வசதிகள் மட்டுமே உருவாக்க வேண்டும். வான்வழியில் காற்றின் உராய்வு அதிகம் உள்ளதால் எரிபொருள் தேவைப்படுகிறது. மாறாக நீர்வழிப் போக்குவரத்தில் உராய்வு குறைவாக உள்ளதால் எரிபொருள் குறைவாக தேவைப்படுகிறது. நீர் வழிப் போக்குவரத்தை உள்நாட்டு நீர்வழி, கடல்வழி பாதை என பிரிக்கப்படுகிறது.

உள்நாட்டு நீர்வழி

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தில் ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், கடற்கரையோர நிலங்கள் போன்ற நீர் நிலைகள் அடங்கும். இதனுள் படகு மற்றும் ஓடங்களை பயன்படுத்தி பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்கிறது. மிகவும் கனரக சரக்குகளான நிலக்கரி, சிமெண்ட், மரம், தனிமரத்தாதுகள், போன்றவைகள் நீர்வழி மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தியாவில் ஆற்றுப் போக்குவரத்து இரயில் போக்குவரத்து அதிகரித்ததும் ஆறுகளில் உள்ள தண்ணீர் கால்வாய்களில் சென்றுவிடுவதாலும் மேலும் உள்நாட்டு நீர்வழி சரியாகப் பராமரிக்கப்படாததாலும் இதன் தேவை குறைந்தது.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து வளர்ச்சி, ஆறு கொண்டுள்ள நீரின் ஆழம் அகலம் மற்றும் தொடர்ந்து ஆற்றில் ஓடக்கூடிய நீர் மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை பொறுத்து உள்ளது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து உலகின் பிற்காலத்தில்  வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் நீர்வழிப் போக்குவரத்து, போக்குவரத்தை பெருமளவு மாற்றியமைத்துள்ளது. ஆறுகளில் அணைகள் மற்றும் தடுப்புகள் ஏற்படுத்தி நீரின் ஓட்டத்தையும் தடைகளையும் சரி செய்யப்படுகிறது. எ.கா. ஆறு மற்றும் ஆறு படுகைகளில் உள்ள மண் படிவுகளை எடுப்பதனால் ஆற்றின் நிலையான ஆழத்தையும் உள்நாட்டு நீர்வழப் போக்குவரத்தில் உள்ள பிரச்சினைகள் சரி செய்யப்படுகிறது. கால்வாய்கள் மற்றும் ஆறுகள் அடிக்கடி தனது போக்கை மாற்றிக் கொள்வதால் ஆற்றுக்கரைகள் நிலையாக இருப்பதில்லை. இதனால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகிறது. சில முக்கியமான உள்நாட்டு நீர்வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு அமெரிக்காவில் உள்ள இரண்டு முக்கிய நீர்வழிகள். பெரிய ஏரி – ஜெயின்ட் லாரன்ஸ் நீர்வழி மற்றும் மிஸ்ஸிசிபி நீர்வழி ஆகும்.

பெரிய ஏரி – செயின்ட் லாரன்ஸ் நீர்வழி

இந்த நீர்வழி வட அமெரிக்காவின் வட பகுதியில் உள்ள சிறப்பான நீர் வழிப் போக்குவரத்தாகும். இந்த நீர் வழி மூலம் அதிகளவு சரக்குகளை கண்டத்தின் உள்பகுதியில் அதாவது 3700கி.மீ தூரம் வரை எடுத்துச் செல்கிறது. இம்மண்டலத்தில் இவ்வழி இம்மண்டல தொழிற்சாலை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஓகியோ நீர்வீழ்ச்சி

இந்த நீர்வழிப் பாதை அமெரிக்க ஐக்கிய நாட்டின் உள் பகுதியையும் தெற்கே உள்ள மெக்ஸிக்கோ வளைகுடாவையும் இணைக்கிறது. பெரிய படகுகள் மூலம் மின்னபோலிஸ் வரை செல்கிறது. அதிகளவு போக்குவரத்து உடைய ஆறுகள், கால்வாய்கள், ஐரோப்பாவின் மையப்பகுதியிலும், ரஷ்யாவின் மேற்குப் பகுதியிலும் உள்ளது. உலகிலேயே நெருக்கமான உள்நாட்டு நீர் வழிப்பாதையை பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் ஓடக்கூடிய ஆறுகளை செயன், ரைன் மற்றும் எஸ்ப் ஆறுகள் கொண்டுள்ளது. இது வடகடலுடன் இணைகிறது. அதிகமான ஆறுகள் கால்வாய்களுடன் இடையிடையே இணைகின்றது. இந்த ஆறுகள் மத்திய தரைக் கடலிலிருந்து வடகடலை நோக்கி ஓடுகின்றது.

ரைன் நீர்வழிப் போக்குவரத்து

இப்பகுதியில் மிக முக்கியமான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தாகும். இந்த நீர்வழி உலகிலேயே மிக நெருக்கடியான நீர்வழியாகும். ரோட்டர்டம் அணை நெதர்லாந்தின் வடிநில முகத்துவாரத்தில் உள்ளது. இதன் வடிநிலம் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து வரை உள்ளது.

வோல்கா நீர்வழிப் பாதை:

ரஷ்யாவில் மிக முக்கியமான நீர் வழிப்பாதையாகும். வோல்கா நீர்வழிப்பாதை கருங்கடலும் இணைகிறது. இதனுள் 11200 கி.மீ நீளத்திற்கு நீர்வழிப் போக்குவரத்து செல்கிறது. மாஸ்கோ பகுதியில் வோல்கா ஆறும் மாஸ்கோ ஆறும் இணைகிறது. இந்த நீர்வழி வோல்காடவுன் கால்வாய் வழியாக கருங்கடலை இணைக்கிறது. பல தென் கிழக்காசிய நாடுகளில் பொருட்கள் மற்றும் மக்களை சுமந்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கிழக்கு சைனா மற்றும் இந்தியாவில் நீர்வழிப் போக்குவரத்தின் அளவு மிக குறைவாக உள்ளது.

சைனாவில் பல பெரிய ஆறுகளான ஷிவாங், சேங்ஜியாங் மற்றும் ஜை ஆறுகள் நீர்வழிப் போக்குவரத்தில் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. சின்சுயான் பகுதியில் அதிகளவு மக்கள் உள்ளதால் சின்சியாங் வடிநில கால்வாய் நீர்வழிப் போக்குவரத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த நீர்வழி மூலம் கடல் பொருட்கள் ஹான்கோவரை வருகின்றது.

இந்தியாவில் கங்கை ஆறு நீர்வழிப் போக்குவரத்து பாட்னா வரை செல்கின்றது. சுந்தர்பன் வழியாக இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் தொடர்ந்து படகு செல்கிறது. கேரளா, காயல்கள் மூலம் நீர்வழிப் போக்குவரத்து உடைய மற்றொரு மாநிலமாகும். இந்தியா நீளமான கடற்கரை போக்குவரத்து மூலம் பயணிகள் மற்றும் பொருட்களை பல படகுகள் மூலம் கொண்டு செல்கிறது. தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் ஆறு உலகிலேயே பெரியது. ஆனால் மக்கள் இதனுள் காணப்படுவதால் பொருளாதார வளர்ச்சியற்ற பகுதியாக உள்ளது.

பரானா – பராகுவே நீர்வழி:

இது தென் அமெரிக்காவில் முக்கியமான நீர்வழியாகும். இந்த ஆறு நீர் ரியோ-டி-லா பிளாட்டா வழியாக அட்லாண்டிக் கடலை கலக்கிறது. இதனுள் போக்குவரத்து கடற்கரையிலிருந்து 240 கி.மீ தூரம் கொண்ட சாண்டாஃபீ வரை செல்கிறது. பராகுவே ஆறு அசன்சியான் வரை போக்குவரத்து அளிக்கிறது. இந்த நீர்வழி நாட்டின் உள்பகுதியிலிருந்து அட்லாண்டிக் கடற்கரை வரை செல்கிறது.

கடற்கரை போக்குவரத்து

இப்போக்குவரத்து நிலம் மற்றும் வான் வழிப் போக்குவரத்தைக் காட்டிலும் மலிவான போக்குவரத்தாகும். கடலில் கப்பல்கள் அதிக பொருட்களை எடுத்துச் செல்கிறது மேலும் குளிர்சாதன பகுதி மற்றும் சுமைத்தாங்கிகள் அறிமுகப்படுத்தியதால் அழுக்கக்கூடிய பொருட்களையும் எண்ணெய்களையும் எடுத்துச் செல்வதால் இப் போக்குவரத்துப் பெருமளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. நவீன பயணியர் மற்றும் சரக்கு எடுத்துச் செல்லும் கப்பல்களில் ரேடார், தந்தியில்லாக் கருவி, மேலும் பல போக்குவரத்து வசதி கருவிகள் பொருத்தப்பட்டதால் புயல், மோசமான வானிலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் குறிப்பிட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்திற்கு அடைவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

சில முக்கியமான கடல்வழி பாதைகள்: -- வட அட்லாண்டிக் பாதை:

இந்த பாதை இரண்டு முனைகளிலும் உள்ள பெரிய பகுதியை இணைக்கிறது. அதாவது கனடாவின் கிழக்குப் பகுதி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டையும் மேற்கு ஐரோப்பாவுடன் இணைக்கிறது. ஆதலால் இப்பாதை மிகவும் பரப்பரப்பான பாதையாகும். இருமுனை கடற்கரைகளும் சிறந்த கப்பல்துறை வசதியை பெற்றுள்ளது. இப்பாதையின் வழியாக ஐரோப்பா விவசாய வாணிப, தொழிற்சாலை மண்டலங்களிலிருந்து அதிகளவு பருத்தி துணி, ரசாயணம், இயந்திரம், உரம், இரும்பு மற்றும் எஃகு போன்றவைகளை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் கனடாவிற்கும் அனுப்புகிறது. அதே போல் கோதுமை, மரக்கூழ், செம்பு, இரும்பு, எஃகு போக்குவரத்து உபகரணங்கள் போன்றவைகளை அமெரிக்காவிலிருந்து மேற்கு ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுகிறது.

மத்திய தரைக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் நீர்வழி

இந்த நீர்வழி தொழிற்சாலைகளில் முன்னேறிய ஐரோப்பிய நாடுகள், அதனுடன் கிழக்கு ஆப்ரிக்கா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை மத்திய தரைக்கடல் செங்கடல் வழியாக இந்திய பெருங்கடல் நீர்வழி இணைக்கிறது. அனைத்து கப்பல்களும் அதாவது ஐரோப்பாவிலிருந்து ஆப்ரிக்கா, ஆசியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்வதால் இந்த பாதை எப்பொழுதும் பரபரப்பாக உள்ளது.

இந்தக் கடல்களின் கிழக்குப் பகுதியில் அதிகமாக இயந்திரம் மற்றும் தொழிற்சாலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேற்கு பகுதியில் கனிம எண்ணெய் மற்றும் விவசாய பொருட்களான பருத்தி, ரப்பர், டீ, காபி, கரும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த கப்பல் செல்லும் பாதையில் போர்ட்செட், ஏடன், மும்பை கொச்சி, கொழும்பு மற்றும் சிங்கப்பூர் போன்ற முக்கியமான துறைமுகமாக உள்ளது.

சூயஸ் கால்வாய்

இக்கால்வாய் மத்திய தரைக்கடலை செங்கடலுடன் இணைப்பதற்காக செயற்கையாக செய்யப்பட்ட கால்வாயாகும். இந்தக் கால்வாயில் கடல் மட்டத்தில் தடுப்புகள் இல்லை. இந்த கால்வாய் திறந்த பிறகு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடைப்பட்ட தூரம் பாதியாக குறைந்தது. இக்கால்வாய் 1869ம் ஆண்டு திறக்கப்பட்டது. இக்கால்வாய் திறந்ததன் காரணமான வடக்கு பகுதியில் செட் துறைமுகம், ஃபாடு துறைமுகமும் தென் பகுதியில் சூயஸ் துறைமுகம் உருவாகியது.

நன்னம்பிக்கை முனை பாதை

இந்த பாதை மேற்கு ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகள், தென் ஆப்ரிக்க, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகளை இணைக்கிறது. நன்னம்பிக்கை முனையை நோக்கி ஐரோப்பாவின் கப்பல்கள் நேராக வருகின்றது. சமீபத்தில் விடுதலைபெற்ற ஆப்ரிக்க நாடுகளாலும் அதிகளவு எடுக்கக்கூடிய தங்கம், பருத்தி, எண்ணெய், கடலை, காபி, பழங்கள் போன்ற இயற்கை வளங்களை எடுப்பதனால் பொருளாதார மேம்பாடு ஏற்பட்டு நன்னம்பிக்கை முனையை சுற்றியும் ஆப்ரிக்காவில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள துறைமுகங்கள் மிகவும் நெருக்கடியாக உள்ளது.

பிரேசில் நாட்டிலிருந்து காபி கொக்கோயாவும், அர்ஜென்டினாவிலிருந்து கோதுமை, கம்பளி மற்றும் மென் அயன சணல் தொழிற்சாலை நாடுகளான வடஅமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாட்டிற்கும் அங்கிருந்து பாதி வேலை முடிந்த பொருட்களை இறக்குமதி செய்கிறது.

வடபிசிபிக் நீர்வழிப் பாதை

இந்த நீர்வழிப் பாதை வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளான வான்கூவர், சியாட்டில், சான் பிரான்சிஸ்கோ, லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற துறைமுகங்களுடன் ஆசியாவில் உள்ள யோகோ கோமா, மணிலா, சிங்கப்பூர் போன்ற துறைமுகங்களை இணைக்கிறது. வட பசிபிக் பெருங்கடலில் நடக்கக்கூடிய அனைத்து வாணிபமும் பல வழிகளில் நடைபெறுகிறது ஆனால் அனைத்தும் கோனோ லூலூ துறைமுகம் வழியாக நடைபெறுகிறது. இக்கடலின் வட பகுதியில் வான்கூவரிலிருந்து யோகோகாமா வரை உள்ள பாதை போக்குவரத்து தூரத்தை 2480கி.மீ. அதாவது பாதியாக குறைக்கிறது. இப்பாதையின் வழியாக கோதுமை, மரம், காகிதம் மற்றும் காகிதகூழ், மீன் பால்; பொருட்கள், போன்றவை வட அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆசியாவிலிருந்து உற்பத்தி பொருட்களான பருத்தி துணி, மின் உபகரணங்கள், ஜப்பானிலிருந்தும், ஷிங்காங், தென் கொரியா, தைவான் நாடுகளிலிருந்து வெப்ப மண்டல பொருட்களை ரப்பர் கொப்பரை தேங்காய், பனை எண்ணெய், தேநீர் மற்றும் தகரம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தெற்கு பசிபிக் கடல்வழி பாதை:

இப்பாதை மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் ஆங்காங்கே காணப்படும் பசிபிக் தீவுகளை பனாமா கால்வாய் வழியாக இணைக்கிறது. இந்த பாதை மேலும் ஹாங்காங், பிலிப்பைன்ஸ், இந்தோனனேஷியாவையும் இணைக்கிறது. இப்பாதை வழியாக அதிகமாக கோதுமை, மாமிசம், கம்பளி, பழங்கள், பால் பொருட்கள், மற்றும் உற்பத்திப் பொருட்கள் வியாபாரம் செய்யப்படுகிறது. பனாமா கால்வாயுக்கும் சிட்னி துறைமுகத்திற்கும் 12000கி.மீ தூரம் உள்ளது. இப்பாதையில் உள்ள முக்கியமான துறைமுகம் கோனோலூலூ ஆகும்.

பனாமா கால்வாய்

இக்கால்வாய் அட்லான்டிக் கடலின் கிழக்குப் பகுதியையும் பசிபிக் கடலின் மேற்கு பகுதியையும் இணைக்கிறது. பனாமா கால்வாய் ஈஸ்த்மஸ் மேல் கட்டப்பட்டுள்ளது. மேலும் வட அமெரிக்க நிலப்பகுதியை தென் அமெரிக்க நிலப்பகுதியிலிருந்து பிரிக்கிறது. குறிப்பிட்ட அளவிற்கு வட அமெரிக்க கடற்கரைக்கும் தென்அமெரிக்க கடற்கரைக்கும் இடையே உள்ள தூரத்தை குறைக்கிறது. மேலும் ஒரு முனையில் தூரக்கிழக்கு நாடுகளுக்கும், தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கும் மறுமுனையில் மேற்கு ஐரோப்பிய நாட்டிற்கும் உள்ள தூரத்தை குறைக்கின்றது. பனாமா கால்வாய் தடுப்பு அமைப்பு கொண்டது. கப்பல்கள் பனாமா வளைகுடாவை அடைவதற்குமுன் பல்வேறு அளவில் மூன்று தடைகளை தாண்டி அடைகின்றது. இக்கால்வாய் பொருளாதார நோக்கத்தில் சூயஸ் கால்வாயை விட முக்கியத்துவம் குறைவானது.

வான்வழிப் போக்குவரத்து

வான்வழிப் போக்குவரத்து அதிக செலவுடைய வேகமான போக்குவரத்து என்பதால் அதிக மதிப்புடைய பொருட்களையும் அதிக கட்டணம் கொண்ட பயணிகளை ஏற்றிச் செல்கிறது. மோசமான வானிலை காரணமாக இதன் சேவை ஒருவேலை நிறுத்தப்படலாம். இதன் வழியாக கண்டம் விட்டு கண்டமும் கடினமான நிலப்பரப்பிற்கும் பயணம் செய்யப்படுகிறது.

வான்வழிப் போக்குவரத்து அதிக நெருக்கடியாகவுள்ள பகுதிகளான மேறகு ஐரோப்பா, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்குப் பகுதி, தென் கிழக்கு ஆசியா சில முக்கியமான பகுதயிலிருந்து வான்வழிப் போக்குவரத்து இணைத்து அல்லது அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கப்படுகிறது. எ.கா. லண்டன், பாரீஸ், ரோம், பாங்காங், சிங்கப்பூர், டோக்கியோ, சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சிக்காககோ, நியூயார்க், ரியோடிஜெனிரோ போன்ற இடங்களாகும்.

குழாய்வழிப் பாதைகள்

குழாய்வழிப் பாதைகளை நீர்ம பொருட்களான நீர், கனிம எண்ணெய், இயற்கைவாயுக்களை தடையின்றி பயனுள்ள வகையில் ஓடச் செய்வதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சில நாடுகளில் சமையல் வாயு அல்லது நீர்ம பெட்ரோலிய வாயுவை குழாய் வழியாக அனுப்புகின்றனர். சிறப்பு வாய்ந்த அதிக அங்களமுடைய குழாய் வழிகள் வட அமெரிக்காவில் மெக்ஸிக்கோ வளைகுடா எண்ணெய் கிணற்றிலிருந்து நாட்டின் வடகிழக்கு பகுதிக்கு எண்ணையை எடுத்துச் செல்கிறது. ஐரோப்பா, மேற்காசியா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் எண்ணெய் கிணற்றிலிருந்து சுத்தகரிப்பு நிலையம் அல்லது உள்நாட்டு சந்தைக்கு எண்ணெய்களை எடுத்துச் செல்வதற்கு உபயோகப்படுத்துகின்றனர். இந்த பாதை 4800 கி.மீ தூரம் கொண்டது. கிழக்கு ஐரோப்பாவில் வோல்கா மற்றும் யுரல் பகுதியில் நீண்ட தூரத்திற்கு எண்ணெய் கிணற்றை இணைக்கிறது.

தொடர்பு

மனித நாகரீகம் தொடங்கிய காலத்திலிருந்து நீண்ட தூரத்திற்கு வேகமான எளிதாக சிறிய அசைவின் மூலம் தகவல்களை அனுப்புவதற்கு பல வகைகளை பின்பற்றினர். தொலைதொடர்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டவுடன் தொலைபேசி வாயிலாக தொலைத் தொடர்பு வேகமாக வளர்ச்சி பெற்றது.

ரேடியோ, தொலைக்காட்சி, மின்நகல், மற்றும் இண்டர்நெட் போன்றவைகள் மூலம் உலகை ஓர் பகுதியாக மாற்றியது. சமகால சமூக பொருளாதார சூழுல் நவீன தொடர்பு அமைப்புடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. 20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால் தொலைதொடர்புகள் இண்டர் நெட் மூலம் கணினியுடன் நிலையாக இணைக்கப்பட்டது.

செயற்கை கோள் தொடர்பு

வானவியல் தொழில்நுட்பத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா முன்னோடி நாடுகளாகும், செயற்கை கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் நிறுத்தியதால் தொடர்பு துறையில் புரட்சி ஏற்பட்டு தொடர்புக்கான அடக்கவிலை பெரிய அளவில் குறைந்தது.

இந்தியா வானவியல் ஆராய்ச்சியில் எண்ணற்ற செயல்களை புரிந்துள்ளது. இந்தியாவின் ஆர்யபட்டா ரஷ்யாவின் உள்நாட்டு ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. பாஸ்கரா 1, 1979ம் ஆண்டு ஜூன் 7ம் தேதியும், ரோகிணி 1980ம் ஆண்டு ஜூலை 18ம் நாள் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. தொலை நுண்ணுணர்வு செயற்கை கோளான பாஸ்கரா2 1981ம் வருடம் நவம்பர் 20ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இன்சாட்1A 1982ம் ஆண்டு ஏப்ரல் 10ம்தேதி ஏவப்பட்டது எனினும் அதே வருடம் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டது. இன்சாட் 1 1983ம் வருடம் ஆகஸ்ட் 30ம் தேதி வானில் ஏவப்பட்டது. இன்சாட் 1 ரேடியோ, தொலைக்காட்சி, நீண்ட தூர தொடர்பை சிறப்பாக செயல்படுத்தியது.

தொலைதூர நுண்ணுனர்வு அமைப்பு:

இதன் மூலம் பூமியைச் சுற்றியுள்ள மூலக்கூறுகள், பொருட்கள் மற்றும் அதன் பண்புகளை தெரிந்து கொள்ள உதவுகிறது. சில பொருட்களை நேரடியாகவோ கூர்மையாக கண் கொண்டு காண முடியும். சிலவற்றை தொலை நுண்ணுனர்வு மூலம் கண்டறிய முடியும்.

தொலை நுண்ணுனர்வு என்னும் வார்த்தையை வானவியல் ஆய்வாளர்கள் பரவலாக பயன்படுத்தினர். இதனை ஓர் வார்த்தையாக 1960ம் ஆண்டு உபபோகப்படுத்தினர் தொலை தூர நுண்ணுனர்வு மூலம் பூமியின் கூறுகளை நேரடியாகப் பார்க்காமல் புகைப்படக் கருவி போன்றவைகள் மூலம் தகவல் பெற்று பின்பு விளக்கினர். தொலைதூர நுண்ணறிவு தகவல்கள் பல்வேறு வகைகளிலிருந்து பெறப்படுகிறது. செயற்கை கோளை நுண்ணுணர்வுடன் பொறுத்தி, வானூர்தியில் புகைப்படக் கருவியை பொறுத்தி, பலூன், உயரமான கட்டிடம் போன்ற வகைகளில் தொலைதூர நுண்ணுனர்வு நிகழ்வுகளை நிகழ்த்தினர். பொதுவாக தொலை நுண்ணுனர்வு இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

அவைகள்:

வான்வெளி தொலை நுண்ணுணர்வு.

செயற்கைகோள் தொலை நுண்ணுணர்வு.

வான்வெளி தொலை நுண்ணுணர்வு

1902ம் ஆண்டு விமானம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 1909ம் ஆண்டிலிருந்து புகைப்படக் கருவியை பொறுத்தி பூமியை சாய்கோணத்தில் படமெடுத்தனர். வான்வழி புகைப்படங்களை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்திக் கொண்டனர். வான்வெளி புகைப்படங்களை முதல் உலகப் போருக்கு பின் காடுகளை உருவாக்கவும் நாட்டை அரசாங்கம் நிர்வாகிக்கவும் பயன்படுத்திக் கொண்டது.

பொதுவாக வான்வழிப் புகைப்படம் மூலம் ஆராய்ந்து வளங்களை மேம்படுத்தவும் மற்றும் மாவட்டம் அல்லது ஆற்று வழிநிலைகளையும், நகரப் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பயன்படுத்திக் கொண்டனர். ஓர் இடத்தில் தெளிவான விபரம் தெரிந்து கொள்ள விமானம் குறைவான தூரத்தில் பறக்கும் போது எடுக்கப்படும் படம் விளக்கத்தை கொடுக்கின்றது. நகருக்கு திட்டமிடல், பயிர்செய்ய திட்டமிடுதல் மற்றும் பாதுகாக்க வேண்டி சிறப்பு புகைப்படங்கள் 1:20000 அல்லது 1:10000 என்ற அளவில் வான்வெளியில் இருந்து எடுக்கப்படுகிறது.

நிலப் பயன்பாடு, மண்வகைகள், காடுகள், ஒரு மாவட்டத்தின் நீர்வளம் போன்ற தகவல்களை ஆய்வு செய்ய கருப்பு வெள்ளை அல்லது கலர் புகைப்படம் வானில் அதிக தூரத்திலிருந்து 1.50.000 அல்லது 1:63000 என்ற அளவில் எடுக்கப்படுகிறது.

செயற்கைகோள் தொலை நுண்ணுணர்வு

செயற்கைகோளின் இயற்கையான தொலை நுண்ணுனர்வு அடிப்படையில் மேலே உள்ள தொலை நுண்ணுணர்வு மூன்று பெரிய வகைகளாக பிரிக்கப்படுகிறது.

புவிசார் நிலையான செயற்கை கோள்

சூரியனுடன் செல்லக்கூடிய செயற்கை கோள்.

உளவு செயற்கைக் கோள்

புவி சார்ந்து நிலையாக உள்ள செயற்கை கோள்:

இந்த செயற்கைகோள் மூலம் பூமியின் அதிக மேல் பரப்பில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தகவல்களை பெற முடியும். இந்த செயற்கை கோள் புவியின் மேற்பரப்பிலிருந்து சராசரியாக 36000 கி.மீ பூமத்திய ரேகைக்கு மேல் பகுதியில் பறக்க விடப்படுகிறது. இது பூமி சுழலும் திசை, வேகத்தைக் காட்டிலும் முன்சென்று பூமியின் இரு பக்கத்தையும் படம் பிடிக்கிறது. எ.கா. இந்தியாவின் வானிலையை கண்காணிக்கவும் நிலையை அறிந்து கொள்ளவும் முடியும்.

சூரியனுடன் செல்லக்கூடிய செயற்கைகோள்:

இந்த செயற்கைகோள் புவியின் மேற்பரப்பிலிருந்து 600 முதல் 900 கி.மீ உயரத்தில் வானில் பறக்கவிடப்படுகிறது. பூமியின் மேல் பகுதியில் வடக்கு தெற்காக நகர்ந்து நிலப்பகுதிக்காக தகவலை சேமிக்கிறது. இந்த செயற்கை கோள் வட துருவத்திலிருந்து தென் துருவத்தை அடைய 50 நிமிடம் எடுத்துக்கொள்கின்றது. இது சூரியன் பூமத்திய ரேகையை கடக்கும் பகல் பொழுதில் மட்டும் தகவல்களை சேமிப்பதால் இதற்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வகை செயற்கை கோளை அமெரிக்கா முதல் முதலாக 1972ம் ஆண்டு ஏவியது. பிற்காலத்தில் இது நிலப்பரப்பு செயற்கை கோள் என்று அழைக்கப்பட்டது. மேலும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து 6 செயற்கை கோள்கள் ஏவப்பட்டது. அதேபோல் பிரஞ்ச் அரசாங்கம் 1986ம் ஆண்டு ஸ்பாட்1 செயற்கைகோளை 109ல் அனுப்பியது. மேலும் ஸ்பாட்2, ஸ்பாட்3 என்ற செயற்கைகோள்களையும் அனுப்பியது.

இந்த செயற்கைகோள்களிலிருந்து வரும் புகைப்படங்கள் புவியின் நில வரைப்படம் போல் தெளிவாக உள்ளது. இதன்மூலம் நமக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிற நிலம், நீர்வளம், சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தெரிவிக்கிறது.

உளவு செயற்கைகோள்:

இந்த செயற்கைகோள் மற்றொரு நாட்டின் இராணுவ நடமாட்டம், அணுஉலை, போன்றவற்றை அறிந்து கொள்ள சிறப்பு வகை தொழில் நுட்பத்துடன் இயங்கக்கூடியது. இந்த செயற்கைகோளை உருவாக்குவது அதிக செலவும் சிக்கலும் கொண்டது. எனினும் இந்த செயற்கைகோள் குறுகிய காலம் மட்டுமே செயல்படக்கூடியது. சில நாடுகள் மட்டுமே இச்செயற்கை கோள்களை கொண்டுள்ளது. இஸ்ரேல் இந்த வகை செயற்கைகோளை உருவாக்குவதில் சிறப்பு வாய்ந்தது.

தொலை நுண்ணுனர்வின் பயன்கள்

தொலை நுண்ணுனர்வு பரந்து விரிந்த பூமியில் உள்ள நீர் மற்றும் நிலங்களின் நிலையை விரைவாகவும், துல்லியமாகவும் அறிந்து கொள்ள உதவுகிறது. தொலை நுண்ணுணர்வு தொழில் நுட்பத்தின் பயன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிலவியல் பயன்பாடு

பூமியில் உள்ள பாறைகளின் வகைகள் பிளவு பகுதிகள், நிலச்சரிவு போன்றவைகளை அறிந்து கொள்ள தொலை நுண்ணுணர்வு உபயோகப்படுகிறது.

காலநிலை ஆராய்ச்சி

தொலை நுண்ணுணர்வு மூலம் மேகமூட்டம் உள்ள பகுதிகள், தீவிரமான மாறக்கூடிய வானிலை உடைய பகுதிகள், உலக காலநிலை மாற்றம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

கடலின் பயன்கள்:

தொலை நுண்ணுணர்வு தொழில்நுட்பம் மூலம் புவிமேற்பரப்பு வெப்பநிலை, கடல் நீரோட்டங்கள், கடல் அரிப்பு, காற்று அமைப்பு, கடற்கரை வளங்களை அறிந்து கொள்ள முடியும்.

நீர் மற்றும் நில வளங்களை அறிந்து கொள்ளல்:

தொலை நுண்ணுணர்வு தொழில்நுட்பம் மூலம் ஏரி, குளம், ஆறு போன்றவைகளின் நீளம் மற்றும் தரத்தை தெரிந்து கொள்ளவும், பனி உருகுதல், மண் அரிப்பு, மேற்பரப்பு நீரோட்டம், நீர்ப்பாசனம், நிலத்தின் சாகுபடிக்கு ஏற்ற தன்மை, மண் வகைகள் மற்றும் மண்ணில் உள்ள ஈரப்பதத்தை தெரிந்து கொள்ள உதவுகிறது.

பேரழிவுகளை தடுத்தல்

மனிதன் மற்றும் இயற்கை பேரழிவுகளான புயல், நிலச்சரிவு, வெள்ளம், மாசுபடுத்துதல் போன்ற பேரழிவுகளிலிருந்து இத்தொழில்நுட்பம் பாதுகாக்கப்படுவதாகும்.

நில அளவை மற்றும் நில வரைபடம்

வான்வெளியிலிருந்து எடுக்கப்படும் புகைபடம் மூலம் வரைபடத்தை புதுப்பிக்கவும் விரிவாக்கவும் உயரங்களை அளக்கவும் முடியும். வான்வெளி புகைபடமும், செயற்கைகோள் தகவலும் முன்பு உள்ள போக்குவரத்து வழிகளையும், திட்டங்களையும் புதுப்பிக்க உபயோகப்படுத்தப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.03846153846
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top