অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

விவசாயம்

விவசாயம்

உணவுப் பயிர்கள்

பூமியில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் அரிசி, கோதுமை, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கு நிலையான உணவாக உள்ளது. இப்பொருட்கள் ஓர் குறிப்பிட்ட நிலத்தில் அதிகளவு விளைவதாலும் அதிக உணவுக்கு பயன்படுத்துவதாலும், தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை உடையதாலும் இதனை அதிக மக்கள் நிரந்தர உணவாக பின்பற்றுகின்றனர். இந்த நெற்பயிர்களின் உற்பத்தி ஒவ்வொரு காலநிலைக்கு தேவைப்படும் அளவிற்கு மாறுகிறது. வளர்ந்த நாடுகளில் பூச்சிக்கொல்லி, இரசாயன உரம், மேம்படுத்தப்பட்ட விதை இயந்திரங்கள் போன்ற தொழில் நுட்ப வளர்ச்சியினால் அதிகளவு மகசூல் பெறுகின்றனர்.

இந்த 5 முக்கியமான நெற்பயிர்களைத் தவிர திணை வகைகளான வார்க் கோதுமை, பருப்புகள், உளுந்து, காராமனி பயிறு, சோயா பீன்ஸ், போன்றவைகளையும் மற்றும் சமையல் எண்ணெய் எடுக்கக்கூடிய எள்ளு, கடுகு, நிலக்கடலை, தேங்காய், சூரியக்காந்தி, ஆலிவ் மற்றும் மக்காச் சோளம் போன்றவைகளையும் கரும்பு மற்றும் பானங்களான டீ மற்றும் காபி, காய்கறிகள், பழங்கள் போன்றவைகள் உணவுப் பயிர்களாக பயிரிடப்படுகிறது.

நெல்

தொல் பொருள் ஆராய்ச்சி நிலை தகவலின் படி நெல் 6000ம் வருடத்திற்கு முன் இமயமலையின் அடிவாரமான வடகிழக்கு இந்தியா, இந்தோ-சைனா எல்லைப்பகுதி, தென் மேற்கு சைனாப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது. இவை முதலில் ஈர நிலங்களிலும் சதுப்பு நிலங்களிலும், பயிரிடப்பட்டன. பின்பு நல்ல காலநிலை, மழைப் பொழிவு, மண் வகை போன்ற சூழல் நிலையிலும் பயிரிடப்பட்டது. உலகில் மொத்தம் நெல் பல்வேறு கால நிலைகளில் 65000 வகைகளாக பயிரிடப்படுகிறது.

ஆசியாவில் வெப்ப மற்றும் ஈரப்பதமான பருவக்காற்று வானிலை கொண்டுள்ளதால் நெல் சாகுபடி முதன்மையாக உள்ளது. இது பரம்பரை பரம்பரையாக நன்கு தண்ணீர் வசதியுள்ள ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், வடி நிலங்களிலும், நீர்பாசன வசதியுடன் மேட்டு மற்றும் வறட்சி நிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. நெல் விளைவதற்கு வெப்பநிலை 27 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரைக்கும், மழைவீழ்ச்சி 100 செ.மீ அளவிலும் தேவைப்படுகிறது. இந்த பயிர் வளர்வதற்கு வளர்ச்சி பருவத்தில் தண்ணீர் நிலத்தில் இருக்க வேண்டும். பொதுவாக நெல் வயலில் 10 முதல் 25 செ.மீ வரை தண்ணீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இப்பயிர் சமதளத்திலும், மலைச் சரிவுகளிலும் பயிர் செய்யப்படுகிறது. களிமண் அதிக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வதால் இப்பயிர் செய்வதற்கு சிறந்த மண்ணாக உள்ளது.

மேலும் இதனை விதை விதைத்து நடவு செய்து களை எடுத்து உரமிட்டு அறுவடை செய்து நெல்லை வீட்டுக்கு எடுத்த வர வேலை ஆட்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். நெல்லின் மேற்பகுதியில் முக்கியமான உயிர்ச்சத்து உள்பகுதியை விட அதிகம் கொண்டுள்ளது. உலகின் மொத்த நெல் உற்பத்தியை கிழக்கு மற்றும் தெற்காசியா செய்கிறது. இப்பயிர் உலகில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு நிரந்தர உணவாக உள்ளது.

கோதுமை

இது ஓர் மித வெப்ப மண்டல பயிராகும். இது திணை வகையைச் சார்ந்தது. இதனுள் அதிகளவு நார்ச் சத்து, புரோட்டின், கார்போஹைட்ரேட் உள்ளதால் உலகில் அதிக மக்களுக்கு நிரந்தர உணவாக உள்ளது. இது அதிக வெப்பமுள்ள பகுதியில் விளையாது. இதற்கு போதுமான அளவிற்கு குளிர்ந்த வானிலையுடன் போதுமான அளவு ஈரப்பதமுள்ள மண் தேவைப்படுகிறது. இது கடினவகை   பயிரைச் சார்ந்தது. இப்பயிர் வளர்வதற்கு வெப்ப நிலை 16 டிகிரி செல்சியஸ்; தெளிவான வானமும் வளரும் பருவத்தில் தேவைப்படுகிறது. மழைப் பொழிவு 40 முதல் 75 செ.மீ தேவைப்படுகிறது. இப்பயிர் வளர்வதற்கு செர்னோசம் மண் சிறப்பானது.

கோதுமை வளரும் கால நிலையைப் பொறுத்து வசந்த கால கோதுமை, குளிர்க்கால கோதுமை என பிரிக்கப்படுகிறது. மிருதுவான கோதுமை ஈரப்பகுதியிலும், கடினவகை கோதுமை வறட்சி பருவத்திலும் விளைகின்றது. கோதுமை அதிகமாக மைய அட்சத்தில் உள்ள ஈரமண்டலம் மற்றும் வறண்ட மித வறண்ட மண்டலத்தில் பயிர் செய்யப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள பெரிய சமவெளிகள், கனடா, ஸ்டெப்பி காலநிலை உள்ள சுதந்திர நாடுகள், வடக்கு சைனா சமவெளிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. அதிக வியாபாரம் செய்யக்கூடிய கோதுமை ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா வின் பாம்பாஸ் காலநிலை பகுதியில் பயிரிடப்படுகிறது. கோதுமையை தீவிரமாகவும் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது.

மக்காச் சோளம்

இது ஓர் முக்கியமான உணவுப் பயிராகும் முதன் முதலில் மைய அமெரிக்காவில் பயிரிடப்பட்டது அதனைத் தொடர்ந்து உலகில் பல பகுதிகளில் பயிர் செய்யப்பட்டது. அதிக மகசூல் கிடைக்கக்கூடிய வகையை கோடை மற்றும் வெப்ப, ஈரப்பத காலநிலைகளில் பயிர் செய்யப்படுகிறது. இது குறைவான புரோட்டின் சத்தைக் கொண்டது. இது நிரந்தர உணவாக மைய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ளது. உலகில் 50 சதவீத உற்பத்தியை வட அமெரிக்கா உற்பத்தி செய்கிறது. ஆனால் அதிகம் கால்நடைகளுக்கு தீவனமாகவும் சோள எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். மனித உபயோகத்திற்கு பயன்படுத்துவதில்லை.

உருளைக்கிழங்கு

இது ஓர் முக்கியமான உணவுப் பயிர் ஆகும். இது மைய அட்சத்தில் மற்றும் ஈரக்காலநிலையில் வளரக் கூடியது. இதனை கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற மொத்த நாடுகளையும் சேர்த்து உலகின் மொத்த உற்பத்தியில் 50 சதவீதத்தை பயிரிடுகின்றனர். அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஐக்கிய நாடு, பெரு, சைனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் உற்பத்தி செய்கிறது.

மரவள்ளிக் கிழங்கு

இது முதன் முதலாக தென் அமெரிக்காவில் பயிரிடப்பட்டது. அதிகமாக வெப்பமண்டல பகுதியில் பயிரிடப்படுகிறது. இதனுள் புரோட்டினும் உயிர்ச்சத்துக்களும் குறைவு. இப்பயிர் பல்வேறு வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடியது கடினமானது. இது நீண்ட நாள் மண்ணுக்கடியில் இருக்க வேண்டியுள்ளதால் பல பூச்சிக் கொல்லிகளினால் பாதுகாக்கப்படுகிறது. இதனை பொடியாக்க வளர்க்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசியா, மைய ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது.

கரும்பு

இது வெப்பமண்டல பயிராகும். இது சர்க்கரை தயாரிக்க முக்கியமான பொருளாகும். இது வளர்வதற்கு 20 முதல் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், 70 முதல் 120 செ.மீ வரை மழைப் பொழிவும் தேவைப்படுகின்றது. இது முதிர்வடையும் போது வறட்சி வானிலை தேவைப்படுகிறது. ஏனென்றால் கரும்பில் உள்ள சுக்ரோஸ் அதிகரிக்கிறது இப்பயிர் மூன்று வருடத்திற்கு ஒரு முறை சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிர் நன்கு வளர்வதற்கு மண்ணை நன்கு நயப்படுத்தி, களிமண், வண்டல்மண், படிவு மண், கரிசல் மண் போன்றவற்றில் ரசாயன உரம் பயன்படுத்தி அதிகமாக மகசூல் பெற முடியும்.

இப்பயிர் கியுபா, மெக்ஸிக்கோ, இந்தியா, பாகிஸ்தான், சைனா, தாய்லாந்து, இந்தோனேஷியா,  ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

தேநீர்

தேநீர் என்பது மனிதர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு வகை பானமாகும். இது மலைகளில் உள்ள பசுமை மாறா ஒருவகை புதர் செடிகளின் நுனி இழையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மித வெப்பம் மற்றும் ஈரக் கால நிலை கொண்ட, வேரின் அடிப்பகுதியில் தண்ணீர் நிற்காத பகுதிகளில் நன்கு வளர்கிறது. இப்பயிர் 27 டிகிரி தெற்கு மற்றும் 43 டிகிரி வடக்கு அட்சத்திற்கு உட்பட்ட மலைச்சரிவு பகுதிகளில் 125 முதல் 170 செ.மீ வரை மழைப்பொழியக் கூடிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் அதிக இலைக்கு மற்றும் செழிப்பான மண்ணில் நைட்ரஜன் அதிகமாக தேவைப்படுவதால் மண்ணின் வளம் பாதுகாக்கப்பட்டு நன்கு வளர்கிறது.

இது ஒரு தோட்டப் பயிர் பெயரில் பயிர் செய்யப்படுகிறது. இதன் உயரம் 40 முதல் 50 செ.மீ உயரம். இதைத் தாண்டி வளர்வதில்லை. அதே போல் அதன் வாழ்நாள் 40 முதல் 50 வருடத்தை தாண்டுவதில்லை. இதன் இலைகளை கையால் பறிக்க வேண்டி உள்ளதால் மலிவான கூலியில் அதிக ஆட்கள் தேவைப்படுகின்றனர். இந்தியா, சைனா, ஸ்ரீலங்கா, பங்ளாதேஷ், ஜப்பான், இந்தோனேஷியா, அர்ஜென்டினா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

குளம்பி

இப்பயிர் வெப்பமண்டல உயர்நிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 500 முதல் 1500 மீ உயரத்திற்கிடையில் வளரக்கூடியது. இது மூடுபணி பாதிப்பை ஏற்படுத்தும். இது மரநிழல்களில் வளரக்கூடியது. இது சிறப்பாக அதிக ஈரப்பத மண் அதனுடன் 160 முதல் 250 செ.மீ வரை மழைப்பொழிவையும் ஆழமான பொளபொளப்பு உடைய மண்ணில் தண்ணீரை தேக்கிவைத்துக் கொண்டு அதிக ஈரமுடையதால் நன்கு வளர்கிறது. அதிகமாக பிரேசில்,  கொலம்பியா, வெனிசூலா, குவாட்டமாலா, ஹைட்டி, ஜமைக்கா, எத்தியோபியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் இப்பயிரை கர்நாடகா அதிகளவில் சாகுபடி செய்கிறது.

உணவு இல்லாத பயிர்கள்

இப்பயிர்களில் அதிகமாக நார்வகை பயிர்களான பருத்தி, சணல், ரப்பர் மற்றும் புகையிலை போன்ற பயிர்கள் உள்ளது. பருத்தியும், சணலும் வெப்ப மண்டல பயிர்கள் இப்பயிர்கள் வேறுபட்ட கலநிலைகளில் சாகுபடி செய்யப்படுகிறது. ரப்பர் அதிகமாக அமேசான் மற்றும் காங்கோ நிலத்திலும் தோட்டப்பயிர்களான தென்கிழக்கு ஆசியா, இந்தியா, சைனா, ஸ்ரீலங்கா, கென்யாவில் சாகுபடி செய்யப்படுகிறது.

பருத்தி

இது ஓர் சிறப்பான நார் வகைப் பயிராகும். இது வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடியது. அதிக வெப்பநிலை தேவை உடைய பயிராகும் வளரும் பருவத்தில் மட்டும் 21 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையும் மேலும் மழைப்பொழிவு 50 செ.மீ அளவும் இருக்க வேண்டும். மேலும் முதிர்வு பருவத்தில் மேகமூட்டமில்லாத வானம் மற்றும் அதனுடன் எரிமலை, கரிசல் மற்றும் வண்டல் இருக்க வேண்டும். பருத்தியின் தரத்தை நீளம் மற்றும் அதன் உறுதித் தன்மையை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. மேலும் 5 செ.மீக்கு நீளமான பருத்தி தரமானதாகும். இந்த வகையான பருத்தியை அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென்கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கிந்திய தீவுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. நடுநிலை ரகம் 3.75 செ.மீ முதல் 5 செ.மீ வரை உள்ள பருத்தி வகையாகும். இதனை நைல் ஆற்று வடிநிலம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மைய ஆசிய குடியரசுப் பகுதியான டஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் சாகுபடி செய்கின்றது. குறைவான தரம் உடைய பருத்தி 2.5 செ.மீக்கு குறைவாக உள்ளதாகும். இதனை பிரேசில், சைனா, பாகிஸ்தான், சூடான், துருக்கி ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate