பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / பிரதமரின் மக்கள் நிதிதிட்டம்
பகிருங்கள்

பிரதமரின் மக்கள் நிதிதிட்டம்

பிரதமரின் மக்கள் நிதி திட்டம் (பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பரம ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு வசதிகளைத் தருவதற்கான அனைவரையும் உள்ளடக்கிய தேசிய நிதிச் சேவை இயக்கமே பிரதமரின் மக்கள் நிதிதிட்டம் என்று அழைக்கப்படுகிறது.

மக்கள் நிதித்திட்டத்தின் சிறப்புக்கூறுகள்

 1. நாடெங்கிலும் உள்ள, கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பத்தினர் அனைவரும் இந்தத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள். இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத சுமார் 15 கோடி பேருக்குக் கணக்குகள் தொடங்கப்படும்.
 2. இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படுகிற, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்குகள் யாவும் ஆறு மாத காலத்திற்குத் திருப்திகரமாக வரவு செலவு செய்தால் ரூ. 5000 அதிகப்பற்று கடனாக வழங்கப்படும்.
 3. தனிநபர் விபத்துக்காப்பீட்டுத் தொகையாக ரூ. ஒரு லட்சரூபாயும் (HDFC ENGO வழங்குவது) ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ. 30,000மும் (LIC வழங்குவது) பெறக்கூடிய ரூபே கடன் அட்டை, வங்கிக்கணக்குத் தொடங்கியவர்களுக்கு தரப்படும்.
 4. வங்கிக்கிளைகள் இயலாத இடங்களில், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கிக்கிளைக்கும் இணைப்பு பாலமாக செயல்படக்கூடிய வாணிகக் தொடர்பாளர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியமாக குறைந்த பட்சம் ரூ. 5000 வழங்கப்படும்.

மக்கள் நிதித் திட்டம் செயல்படும் முறை

இரண்டு கட்டங்களாகச் செயல்படும் இந்ததிட்டத்தின் முதல் கட்டம் 2014 ஆகஸ்ட் முதல் 2015 ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட்டது.

 1. நாடெங்கிலும் உள்ள குடும்பங்களுக்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு வங்கிக்கிளை மூலமாக அல்லது வாணிகத் தொடர்பாளர் மூலமாக வங்கிச் சேவைகள் கிடைக்கும் வசதி
 2. ஒரு லட்ச ரூபாய் விபத்துக் காப்பீடு வசதியுள்ள ரூபே கடன் அட்டையுடன் எல்லாக் குடும்பங்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு வங்கிக் கணக்கு வசதி.
 3. நிதி சம்பந்தமான அறிவினை கிராமப்புறங்களில் பரப்புதல்
 4. பல்வேறு அரசுத்திட்டங்களின் மூலம் கிடைக்கும் பணப்பலன்களை நேரிடையாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் திட்டத்தை விரிவாக்குதல்.
 5. கிஸான் கடன் அட்டை வழங்குதல்

2015 ஆகஸ்ட் 15 முதல் 2018 ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரையிலான இரண்டாவது கட்டத்தில்

 1. மக்கள் அனைவரும் சிறு காப்பீடு வழங்குதல்
 2. அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு வாணிகத் தொடர்பாளர்கள் மூலமாக ஓய்வூதியம் (ஸ்வாவலம்பன்) வழங்குதல்

இரண்டு புகைப்படங்கள் மட்டும் கொடுத்து மக்கள் நிதிக் கணக்கு ஆரம்பிக்கலாம்

வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்குத் தேவையான ஆவணங்கள் இல்லை என்றாலும், ஆதார் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் கூட, இரண்டு புகைப்படங்களில் கையெழுத்திட்டு வங்கிக்கணக்கில் கொடுத்தாலேயே புதிய கணக்கு ஆரம்பித்துக்கொள்ளலாம். 2014 ஆகஸ்ட் 26 ஆம் தேதி இதற்கான வழிகாட்டு நெறியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அவ்வாறு தொடங்கப்படும் கணக்குகள் சிறிய கணக்குகள் என்று வகைப்படுத்தப்படும் 12 மாதங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் அந்தப் பன்னிரண்டு மாதங்களுக்குள் முறையான ஆவணங்கள் வேண்டிய விண்ணப்பித்துள்ள விவரங்களை வங்கியில் காட்டினால், அதுபோன்ற சிறிய கணக்குகளில் 12 மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்து வரவு – செலவு செய்யலாம். எனினும் இந்தச் சிறிய கணக்குகளில், எந்த ஒரு சமயத்திலும் ரூ. 50,000 மேல் இருப்பு வைக்க முடியாது. ஒரு வருடத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்கில் பணம் செலுத்த முடியாது. ஒரு மாதத்திற்கு ரூ. 10, 000க்கு மேல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது.

ஏற்கனவே ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் மக்கள் நிதி திட்டத்தின் பயன்களைப் பெற புதிதாகக் கணக்கு ஆரம்பிக்க வேண்டியது இல்லை. அவர்கள் ரூபே கடன் அட்டையை மட்டும் பெற்று அதன் மூலமாக காப்பீட்டுத் திட்டப் பயன்களைப் பெறலாம். கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையில் விண்ணப்பித்து ரூபே கடன் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் தம்முடைய வங்கிக் கணக்கில் ஒழுங்காகப் பற்று வரவு செய்து வந்தால் ரூ. 5000 அதிகப்பற்றுக்கடனும் பெற்றுக் கொள்ளலாம்.

வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான ஒரு பக்க விண்ணப்பத்தை www.financialservices.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சந்தேகங்களும், விளக்கங்களும்

 1. கேள்வி : பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின் கீழ் இரண்டு பேர் சேர்ந்து கூட்டாகக் கணக்குத் தொடங்க முடியுமா? பதில் : முடியும் , கூட்டுக்கணக்கு (Joint Account) ஆரம்பிக்கலாம்
 2. ரூபே கடன் அட்டை என்றால் என்ன? : ரூபே கடன் அட்டை என்பது, இந்திய தேசிய பணம் வழங்கு கழகத்தால் தரப்படும் உள்நாட்டு கடன் அட்டையாகும். எல்லா தானியங்கிப்பணப்பட்டுவாடா எந்திரங்களிரலும் (ATM) இதன் மூலம் பணம் எடுக்கலாம். பொருள்களை வாங்கும்போது அவற்றுக்கான பணத்தையும் இந்த அட்டை மூலம் செலுத்தலாம்.
 3. கேள்வி : கணவனும் மனைவியும் தனித்தனியாக மக்கள் நிதித் திட்டத்தின் படி வங்கிக் கணக்குகளைத் தொடங்கினால், இருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடும், முப்பதாயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடும், ஐயாயிரம் ரூபாய் அதிகப் பற்றுக் கடனும் கிடைக்குமா? பதில் : வங்கி கணக்கு வைத்துள்ள எல்லாருக்கும் விபத்துக்காப்பீடும் ஆயுள் காப்பீடும் கிடைக்கும் ஆனால் அதிகப்பற்று கடன் வசதி யாரேனும் ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் (மனைவிக்கு முன்னுரிமை)
 4. பிரதமரின் மக்கள் நிதிதிட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குத் தொடங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
  • ஆதார் அட்டையும் எண்ணும் இருந்தால் வேறு எந்த ஆவணமும் தேவையில்லை. முகவரி மாற்றிருந்தால், தற்போதைய முகவரி பற்றி சுய சான்று அளித்தால் போதும்.
  • ஆதார் அடடை இல்லையென்றால், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்திர கணக்கு அட்டை (PAN CARD), பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை, ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று போதுமானது. புகைப்படத்தோடு முகவரியும் இருந்தால், அதுவே அடையாளச் சான்றாகவும், முகவரிச்சான்றாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • அதிகாரப்பூர்வாக ஏற்றுக்கொள்ளப்படும் இந்த ஆவணங்கள் எதுவுமே ஒருவரிடம் இல்லை என்றால், மத்திய / மாநில துறைகள் அல்லது சட்டப்படியான / ஒழுங்காற்று ஆணைக்குழுக்கள் / பொதுத்துறை நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், பட்டிலிடப்பட்ட வாணிக வங்கிகள் போன்றவை வழங்கியுள்ள புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையைக் காட்டி புதிய கணக்கைகத் தொடங்கலாம். அல்லது புகைப்படம் ஒட்டி, அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் வழங்கும் கடிதத்தைக் காட்டிக் கணக்குத் தொடங்க முடியும்.
 5. மக்கள் நிதிக் கணக்குகளுக்கு காசோலை உண்டா?
 6. இத்திட்டத்தின் கீழ், ஆரம்பத்தில் ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் கணக்குகள் தொடங்கப்படுகின்றன. எனினும் காசோலை வசதி வேண்டும் என்றால், அதற்கு என வங்கிகள் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளலாம்.

  பத்து வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் இத்திட்டத்தின் கீழ் வங்கிகணக்கு தொடங்கலாம்.

 7. மக்கள் நிதித் திட்டக்கணக்கை வேறு நகரத்திற்கு / மாநிலத்திற்கு இடம் மாறிச் சென்றால் அந்த ஊருக்கு மாற்றிக்கொள்ளமுடியுமா?
 8. மக்கள் நிதிக் கணக்கைத் தொடங்கும் வங்கிகள் யாவும் இணையத் தொடர்புகொண்டவை (CBS). எனவே ஒரு ஊரிலிருந்து வேறு ஒரு ஊருக்கு மிக எளிதாகக் கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.

ஆதாரம் : http://financialservices.gov.in/

3.17948717949
வீரதேவன் Sep 04, 2017 11:12 AM

மக்கள் நிதி திட்ட கணக்கில் யார்யாரெல்லாம் சேரலாம்?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top