பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / மத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும்

மத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வரையறை

பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் உதவியாக இருக்கக்கூடிய இரண்டு பேரளவுப் பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாக அரசு நிதிக் கொள்கை இருக்கின்றது. மற்றொரு கொள்கை பணக்கொள்கை ஆகும். இந்த இரண்டு கொள்கைகளின் பங்கு மற்றும் வாய்ப்பு ஆகியவற்றை தெளிவாகப் பிரித்தறிவதற்காக இந்த ஒவ்வொன்றைப் பற்றியும் வரையறை செய்து கொள்வது அவசியமானதாகும். அரசின் வருவாய் மற்றும் செலவுகளை நேரடியாகப் பாதிக்கக் கூடிய கொள்கை எதுவும் அரசுநிதிக் கொள்கை என எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு மாறாக அமைப்பின் செலாவணிக்கான அளவு மற்றும் செலவினத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடிய கொள்கை எதுவும் பணக்கொள்கையாக எடுத்துக் கொள்ளப்படும். நம்மைப் போன்ற ஐக்கிய குடியரசில் அரசாங்கத்தின் அனைத்து மூன்று அடுக்குகளிலும் தொடர்புடையதாக அரசுநிதிக் கொள்கை இருக்கின்றது.

எனவே இக்கொள்கையை அதன் முழு அளவில் கணக்கில் எடுத்துக் கொள்வது என்பது மிகவும் சிக்கலானதாகும். வரலாற்று ரீதியில் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றை மொத்தமாக எடுத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவில் மத்திய அரசின் பங்கு என்பது மேலாதிக்கமானதாகவே உள்ளது. உதாரணமாக, செலவினங்கள் என்பதை எடுத்துக் கொள்வோம். நாட்டில் மொத்த அரசு செலவினங்களில் மத்திய அரசு சுமார் 55 முதல் 60 சதவிகிதம் வரை செலவழிக்கின்றது. இதேபோல் வருவாய் நிலையில் பார்த்தால், மத்திய அரசின் பங்கு சுமார் 55 சதவிகிதம் ஆகும். அண்மைக்காலத்தில் மாநிலங்களின் பங்கும் அதிகரித்து வருகின்றது. அடுத்தடுத்து மத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும் & -ரவீந்திர ஹெச்.தோலக்கியா அமைக்கப்பட்ட நிதி ஆணையங்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப மத்திய வரிகளில் மாநிலங்களின் பங்கு அதிகரித்து வந்துள்ளது இதற்கு முதன்மையான காரணமாகும்.

இரண்டாவது காரணம் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் முறையாகவும் தர்க்கரீதியாகவும் மத்திய அரசால் மாநிலங்களுக்கு மாற்றித் தரப்பட்டுள்ளன. பதினான்காவது நிதி ஆணையம் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு மூலவளங்கள் மாற்றித்தரப்படுவது குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இருந்தபோதிலும், அரசுநிதிக் கொள்கையில் மத்திய அரசின் பொருத்தப்பாடும் முக்கியத்துவமும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது மையமாகவே இருப்பது தெரிகின்றது. ஏனெனில், முக்கியமான மத்திய வரிகள் மூலமான மொத்த வருமானம் இப்பொழுதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதன் விளைவாக மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் பற்றிய முடிவுகள் நாட்டின் நிதிக் கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளாகவே உள்ளன. எனவே வருடாந்திர மத்திய பட்ஜெட் சமர்ப்பிப்பு என்பது நமது பொருளாதாரத்தில் மிக முக்கிய நிகழ்வாகவே உள்ளது. ஏனெனில் இந்த பட்ஜெட் நாட்டின் அரசுநிதிக் கொள்கை பற்றி ஒரே ஒரு முறை எடுத்துரைக்கப்படும் விரிவான அறிக்கையாக உள்ளது.

குறிக்கோள்கள்

பகுதிக் கூறுபாடு சார்ந்த கொள்கைகள் அல்லது பணக்கொள்கை என்பது ஒரே ஒரு நோக்கத்தை அல்லது ஒரு சில தொடர்புடைய குறிக்கோள்களை மட்டுமே கொண்டிருக்கும். அவ்வாறு இல்லாமல் அரசு நிதிக்கொள்கையானது அதன் இயல்பிலேயே வெவ்வேறான பல குறிக்கோள்களைக்  கொண்டுள்ளது. அரசாங்கத்தின் வருமானங்கள் மற்றும் செலவினங்கள் குறுகியகால மற்றும் நீண்டகால அம்சங்கள் இரண்டையும் ஒரு சேரப் பெற்றுள்ளன. ஆகையால் அரசு நிதிக் கொள்கைகள் முறையே குறுகிய கால மற்றும் நீண்டகால குறிக்கோள்களைக் கொண்டுள்ளன.

வெளி உலக பாதகமான மற்றும் சாதகமான தாக்கத்துக்கு எதிராகச் செயல்படுதல், அத்தகைய தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுத்துக் கொள்ளுதல் ஆகியச் செயல்பாடுகள் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் செயல்திறனை நிலைப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்கள் குறுகிய கால நோக்கங்களில் அடங்கும்.

மேலும் சமநிலை இலக்குகளை அடைய பொருளாதாரத்தில் வருமானத்தையும் செல்வத்தையும் மறுவிநியோகம் செய்தல் என்பதும் இதில் அடங்கும். ஏழைகளின் நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பிரிவினரை மேம்படுத்துதல் ஆகியவற்றை அனைவருக்கும் கிடைத்தல் என்ற செயல்பாட்டின் மூலமும் பல்வேறு பொதுவிநியோக மற்றும் விற்பனைப் பொருட்களைப் பெறுவதற்கான அவர்களது தகுதிநிலையை பாதுகாப்பதன் மூலமும் உறுதி செய்தல் என்பதும் இந்த நோக்கத்தில் உள்ளடங்கும்.

இது அரசாங்கத்தின் கடமை என்ற முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசுநிதிக் கொள்கையின் நீண்டகால குறிக்கோள்கள் என்பவை சமநிலைத் தன்மையுடன் கூடிய அதிக அளவு நிலைத்தன்மை கொண்ட பொருளாதார வளர்ச்சியை அடைதல், வாழ்க்கைத் தரத்தின் பௌதீக அம்சங்களை மேம்படுத்துவதன் மூலம் அனைத்துப் பிரிவினரின் நலவாழ்வை அதிகரித்தல் ஆகியனவாகும்.

இத்தகைய குறிக்கோள்களை நிறைவு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் சேமிப்பு மற்றும் முதலீடுகள் ஆகிய இரண்டின் பெருக்கத்தை அரசு நிதிக்கொள்கை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படையான அம்சமாகும். பட்ஜெட் மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, முன்வைக்கப்பட்டு, ஏற்றுக் கொள்வதற்கு முன்பு பரவலாக விவாதிக்கப்படுகின்றது.

இது அரசாங்கத்தின் வரவு-செலவுகளைப் பேசுகின்றது என்பதால், இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம் ஆகின்றது. எனவே இது நிதி மசோதாவாக இயற்றப்படுகின்றது. இதன் விளைவாக, நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு (அல்லது ஒரு மசோதா தாக்கல் செய்வதற்கு) என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப்படுமோ அந்த நடைமுறைகள் அனைத்தும் பட்ஜெட் சமர்ப்பித்தலுக்கும் கடைபிடிக்கப்படுகின்றது.

இந்த நடைமுறைகளில் முறைப்படியாக சமர்ப்பித்தல், பிரசுரம் செய்தல், பொதுமக்களுக்கு பரவலாக விநியோகித்தல், கருத்துக்கள், விவாதங்களை வரவேற்றல், அவை பற்றி முடிவெடுத்தல் ஆகியன அடங்கும். இறுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நாடாளுமன்ற அமர்வில் அது அங்கீகரிக்கப்பட்டாக வேண்டும் என்பதும் நடைமுறையாகும். மத்திய பட்ஜெட் என்பது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போதே அது மத்திய அரசின் நிதிக்கொள்கை பற்றிய விரிவான அறிக்கை என எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

ஆனால் அனைத்து விதமான திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தால் அது அங்கீகரிக்கப்படும்போதுதான் அவ்வாறு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இதுவரையிலான விவாதத்தில் இருந்து இந்தியா போன்ற ஐக்கிய குடியரசில் பட்ஜெட் உருவாக்குதல் செயலில் வெளிப்படும் எந்த நிலையிலான அரசாங்கத்தின் நிதிக் கொள்கையும் நெடிய செயல் முறைக்குப் பின்பு நீண்ட காலம் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகும்.

ஆகவே இத்தகைய பட்ஜெட் வகுத்தல் என்பது சாதாரண சூழல்களின் போது வருடத்திற்கு ஒரு முறை என கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஓராண்டில் அனைத்து அரசு வருமானங்கள் மற்றும் செலவுகளைப் பாதிக்கக்கூடிய நிதிக் கொள்கையில் அடிக்கடி மாற்றங்கள் மேற்கொள்வது என்பது கோட்பாட்டு ரீதியில் சரி என்றாலும் கூட விரும்பத்தக்கதும் அல்ல; நல்லதும் அல்ல. இதன் விளைவாக, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் செயல் திறன்களை நிலைப்படுத்துதல் என்பது பட்ஜெட்டால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே எதிர்கொள்ளப்படுகின்றது. இத்தகைய நோக்கங்களுக்கு பணக்கொள்கை முக்கியமான பங்கை ஆற்ற முடியும்.

சேமிப்பு, முதலீடு, வளர்ச்சி, விலை நிலைத்திருத்தல் ஆகியவற்றுக்கான அடிப்படை சட்டகத்தை மட்டுமே பட்ஜெட் வகுத்தளிக்க முடியும். மேலும் அடிப்படையான பிரச்சனை அல்லது தூண்டுதல் என்பது கொள்கை மாற்றத்தைக் கோருவதாக இருந்தால் அது நிலையான இயல்பில் இல்லாமல் தற்காலிக இயல்பிலேயே இருக்கின்றது என்பதே பொருளாகும்.

ஓராண்டு நீடிக்கும் அரசு நிதிக்கொள்கை மாற்றம் என்பது நிலைத்தன்மையை தருவதை விட நிலைகுலைவையே அதிகமாக உருவாக்கச் செய்யும். நிலையான அல்லது நீண்ட காலம் நீடித்து நிற்கும் பிரச்சனைக்கு மட்டுமே அரசு நிதிக்கொள்கை மாற்றம் தேவைப்படும். விரும்பப்படும் பேரளவு பொருளாதாரக் கூட்டுத் தொகுதிகளில் எந்தவொரு நிதிக்கொள்கை சார்ந்த மாற்றத்தின் தாக்கமும் காலம் செல்லச் செல்ல உணரப்படும்.

மேற்கொள்ளப்படும் முன்னேற்பாட்டுச் செயல்கள்

இந்தியாவில் மத்திய பட்ஜெட் தயாரிப்பதில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாட்டுச் செயல்கள் ஏறத்தாழ நான்கு மாத கால அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றது. பட்ஜெட் தயாரிப்புக்கான முன்னேற்பாடு என்பது நிதி அமைச்சகம் நவம்பர் மாதத்தில் அறிவிப்பு அனுப்புவதில் இருந்து தொடங்குகின்றது. மூலதன வருவாய் மற்றும் செலவினங்கள், வருவாய் பற்றிய விரிவான அறிக்கை, மூலதன வரவு ஆகியன பற்றி முறையான விரிவான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஏனைய அமைச்சகங்கள், துறைகள், இந்திய அரசின் கீழ் உள்ள முறையான அமைப்புகளுக்கு நிதியமைச்சகம் அறிவிப்பு அனுப்பும். அமைச்சகங்களும் துறைகளும் தங்களது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர்வதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகிய இரண்டின் தேவைகள் பற்றி தீவிரமாக மதிப்பீடு செய்யும். எதிர்வரும் நிதியாண்டில் புதிய செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான மதிப்பீடும் செய்யப்படும். தற்போதைய நிலையில், முன்பே நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றைத் தொடர அல்லது அப்படியே பராமரிக்கத் தேவைப்படும் மனித வளம் மற்றும் நிதி ஆதாரங்கள் பற்றி நியாயப்படுத்த அமைச்சகங்கள் மற்றும் துறைகள் எந்தவிதமான கூடுதல் முயற்சியையும் எடுக்கத் தேவையில்லை. ஏனெனில் அவை திட்டம் சாராத செலவினங்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருவதால் எந்தவிதமான கூடுதல் முயற்சியையும் எடுக்கத் தேவையில்லை.

எந்த ஒரு புதிய செயல்பாடு, திட்டம் மற்றும் ஏற்கனவே இருப்பவற்றை விரிவாக்குதல் உள்ளிட்ட செயல்திட்டங்கள் ஆகியவற்றுக்காக அமைச்சகங்களும் துறைகளும் தங்களது முன்மொழிவில் முழுமையாக நியாயப்படுத்தி இருக்க வேண்டும். இந்த முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவை வருவாய் மற்றும் மூலதன செலவு ஆகிய இரண்டும் பற்றிய கடப்பாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்தகைய முன்மொழிவுகளுக்கான நியாயப்படுத்துதல் என்பது பொது விநியோகம் மற்றும் விற்பனைப் பொருட்களை வழங்குவதில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் எடுத்துரைத்துள்ள இலக்குகள், குறிக்கோள்களை நிறைவு செய்வதில் அத்தகைய செலவினங்கள் பங்கு என்ன என்பதன் அடிப்படையில் அமைய வேண்டும். இத்தகைய முன்மொழிவுகள் பெரும்பாலும் திட்டம் சார்ந்த செலவின வகைப்பாட்டைச் சேர்ந்ததாகும். நாடு முழுவதும் அரசு நிறுவனங்கள் பரந்து விரிந்துள்ள அளவையும் விரிவாக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய முயற்சி என்பது தெரியவரும். மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்களின் கீழ் செயல்படும் கள அலுவலகங்களில் இருந்து அத்தகைய முன்மொழிவுகளைப் பெற்றாக வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த நிறுவனமும் தன் விருப்பம் போல் செயல்படுவதாகவும் நடைமுறையில் மைய அதிகாரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அல்லது மையத்துக்கும் விளிம்பு நிலைக்கும் இடையில் மிகுந்த திறன்மிக்க, 58 திட்டம், பயன்மிக்க துடிப்புள்ள தொடர்பியல் வழிகள் இருந்தாக வேண்டும். நமது அரசாங்க நிறுவனங்கள் அதிக அளவு மையஅதிகாரம் கொண்ட சூழலில் அதாவது மேலிருந்து கீழாக அதிகாரப் பரவல் உள்ள நிறுவனங்கள் என்று பொதுவாக நம்பப்படுகின்றது.

என்றாலும், அரசாங்கப் படிமுறையில் பல்வேறு நிலைகளில் அதிக அளவு நெகிழ்வுத் தன்மையும் சுதந்திரமும் தனித்தியங்கும் நிலையும் உள்ளன. இதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் முன்மொழிவுகள் குறிப்பிட்ட காலக்கெடுவுடன் மேல் மட்டத்தில் இருந்து கீழுள்ளவர்களிடம் கேட்கப்பட வேண்டும்.

மத்திய அமைச்சகம் அல்லது துறைக்கு மேல்மட்டத்துக்கு அளிக்கப்படும் முன்னர் பல்வேறு மட்டங்களில் பொருத்தமான முறையில் முன்மொழிவுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். கட்டணம், அபராதம், வரிகள், தீர்வை முதலான வருவாய்கள் தொடர்ச்சியாக கிடைக்கும் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் வருவாய் தொடர்பாகவும் அத்தகைய முன்மொழிவுகளை திருத்தங்கள் ஏதும் இருந்தால் அவற்றுக்கான பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த ஒட்டுமொத்த நடைமுறைகளும் குறிப்பிட்ட கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால் இந்த அளவு கால அவகாசம் என்பது மைய-அதிகாரம் இல்லாத ஜனநாயக அமைப்பில் தவிர்க்க இயலாதது ஆகும். பல்வேறு நிலைகள் மற்றும் மட்டங்களில், அரசு நிறுவனம் பட்ஜெட் தயாரிப்பில் மக்களின் திறன்மிக்க பங்கேற்பைச் செய்ய முடியும். ஆனால் தற்போதைய நிலையில் நாட்டில் வருடாந்திர பட்ஜெட் தயாரிப்பில் மக்கள் பங்கேற்பு என்பது மிக மேலோட்டமானதாகவே இருக்கின்றது. அதுவும்கூட பலதுறைகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களிடம் ஆலோசனை, பரிந்துரை, குறிப்பிட்ட உள்ளீடு கோருதல் என்பதாகவே இருக்கின்றது.

அதேபோல் பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள், கூட்டமைப்புகள், போன்றவற்றின் பிரதிநிதிகளிடம் இவ்வாறு கோருவதாக உள்ளது. நமது பட்ஜெட் தயாரிப்பு நடைமுறை என்பது அடிமட்ட அளவில் இருந்து சமுதாயத்தினர் மற்றும் பங்குதாரர்களின் திறன்மிக்க பங்கேற்பை அனுமதிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. கீழ்மட்ட அளவில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமையாலும் இது உண்மையில் நடப்பதில்லை. மேல்மட்டத்தில் இருந்து கிடைக்கப்படும் தாமதமான தகவல்தொடர்பே இதற்கு முக்கிய காரணமாகும். நிதி அமைச்சகத்தில் அந்தந்த மட்டத்தில் இத்தகைய அனைத்து முன்மொழிவுகளும் கீழிருந்து சேகரிக்கப்பட்டு, இணைக்கப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. பட்ஜெட் கணக்கீட்டில் ஒட்டுமொத்த சீர்மை இருக்க வேண்டும் என்பதற்காக தனியாக இத்தகைய நடைமுறையும் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நிலையில், பட்ஜெட் வகுத்தல் என்பது செலவினம் மற்றும் வருவாய் ஆகிய இரண்டு பக்கங்களிலும் உள்ள பல்வேறு தடைகளை புரிந்து கொண்டதாக வேண்டும். வருவாய் பற்றாக்குறை, முதன்மை பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை மற்றும் ஒட்டுமொத்த பொதுக்கடன் ஆகியவற்றின் அளவுகள் அடிப்படையில் நிதி பொறுப்புடைமையும் பட்ஜெட் நிர்வாகமும் எஃப்.ஆர்.பி.எம் என்ற சட்டம் சுமத்தும் தடைகளையும் பட்ஜெட் வகுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். வருவாய் தரப்பில் பல்வேறு வகையான வரி மற்றும் வரி அல்லாத பற்றுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் கருதுகோள்களை முன்வைத்து தடைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்தக் கருதுகோள்கள் பேரளவு பொருளாதாரச் சூழல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

பேரளவு ஒருங்கிணைப்புகளின் துல்லியமான கணக்கீடுகளின் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தில் நிலவுகின்ற அல்லது அத்தகைய பொருளாதாரத்திற்கு ஏதுவான சூழல்கள் இவையாகும். அதாவது உண்மையான வருமானம் அல்லது துறை, இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரின் வெளியீடு, விலையில் மாற்றங்கள், பரிமாற்ற விகிதம், நிறுவன லாபம், பரிமாற்றத்தின் அளவு மற்றும் இதுபோன்ற பேரளவு ஒருங்கிணைப்புகள் பற்றிய கணக்கீட்டுச் சூழல் முக்கியமானதாகின்றது. இந்த அனைத்துவிதமான கணக்கீடுகளும் உண்மையான வருமான வளர்ச்சி (நிலையான விலையில் உள்நாட்டு மொத்த உற்பத்தி) மற்றும் வரும் ஆண்டில் நிலவக்கூடிய பணவீக்க விகிதம் ஆகிய இரண்டு அடிப்படை கருதுகோள்களுக்கு ஏற்ப அமையும். இவைதாம் பட்ஜெட்டுக்கு பின் நிற்கும் கருதுகோள்கள் ஆகும் அல்லது பட்ஜெட் வகுப்பதில் அடிப்படையாக உள்ள இலக்குகள் திட்டம் ஆகும். இந்த இரண்டு இலக்குகளிலும் ஏற்படும் எந்த ஒரு விலகலும் வருவாய் மற்றும் எஃப். ஆர்.பி.எம் இலக்குகள் பற்றிய பட்ஜெட் கணக்கீடுகளை பொருத்தமில்லாததாக செய்து விடும். மேலும் பட்ஜெட் வகுக்கும் நடைமுறையின் தகுதிறனையே கேள்விக்கு உள்ளாக்கிவிடும். எனவே இடைக்கால சரிபார்ப்புகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக வெளியுலக சக்திமிக்க மாற்றங்கள் அடிப்படையிலான கருதுகோள்கள் மற்றும் பட்ஜெட் இலக்குகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தரும்போது இந்த சரிபார்ப்புகள் அவசியமானவை ஆகும். செலவினத் தரப்பில், ஒருங்கிணைந்த நிலையில் தடைகள் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட செலவுகள் சார்ந்ததாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் கூட்டுமொத்த பொதுக் கடன்களுக்கான வட்டி பட்டுவாடா இதில் கட்டாயம் இடம் பெறும். அதேபோல், மத்திய அரசாங்கத்தின் ஓய்வூதிய கடப்பாடும் நிறைவு செய்யப்பட்டாக வேண்டும்.

வரும் ஆண்டுகளில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்காதவரை தற்போது இருக்கும் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் வழங்க வேண்டிய பொறுப்புடைமையும் இருக்கிறது. மானியங்கள் என்ற பெயரில் மிகப் பெரும் அளவில் பொதுநிதி செலவினங்களுடன் அண்மையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன.

உதாரணமாக உணவு பாதுகாப்புச் சட்டம், அனைவருக்கும் கல்வி உறுதிச் சட்டம் முதலானவை ஆகும். மேலும் மக்களுக்கு மானியம் அளிக்கும் பிற திட்டங்களும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய செலவினங்களும் மற்றும் பாதுகாப்பு செலவினங்களும் எந்த ஒரு பொருளாதாரத்திலும் ஏற்கப்பட்ட செலவினமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இது அரசியல் ரீதியிலும் நடைமுறை சார்ந்தும் உணர்வு ரீதியிலான செயலாக உள்ளது. அரசால் இது சார்புநிலை ஏற்கத்தக்க செலவினமாகக் கருதிக் கொள்ளப்படலாம். மேலே கூறிய ஏற்கத்தக்க செலவினங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்டாக வேண்டும். இத்தகைய செலவினங்களை அரசாங்கம் நீக்குவதும் மறு ஒதுக்கீடு செய்வதும் ஏறத்தாழ இயலாத ஒன்றாகும்.

இந்தச் சூழ்நிலையில் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேலே கூறிய ஏற்கப்பட்ட செலவினங்களின் அளவு கீழே தரப்பட்டுள்ளவாறு இருந்தது:

  • வட்டி பட்டுவாடாக்களுக்காக 3.3 சதவிகிதம்;
  • சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு 2.3 சதவிகிதம்;
  • முக்கியமான மானியங்களுக்கான 2.2 சதவிகிதம்;
  • பாதுகாப்பு செலவினங்களுக்கு 1.1 சதவிகிதம் ஆகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவை எல்லாம் சேர்ந்து மொத்தமாக 8.9 சதவிகிதமாக உள்ளன. ஆச்சரியமான வகையில் மத்திய அரசின் மொத்த வருவாய் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9 சதவிகிதமாக இருந்தது. எனவே அனைத்து வருவாய்களும் ஏற்கப்பட்ட செலவினங்களுக்காகவே நேர் செய்யப்பட்டு விட்டது. புதிதாக எந்த ஒரு செலவினம் அல்லது புதிய செயல்திட்டங்களும் கடன்-சாராத மூலதன வரவில் இருந்துதான் எதிர்கொள்ளப்பட வேண்டும். அதாவது முதலீட்டில் இருந்து நிதி விடுவித்தல் மற்றும் புதியதாக பொதுக்கடன் பெறுதல் ஆகியவற்றின் மூலம் சமாளிக்கப்படலாம்.

ஆனால் இச்செயல்கள் அரசின் கடன் சுமையை அதிகரித்துவிடும். மத்திய பட்ஜெட் தயாரிக்கும் செயல்முறையில் கடைசி நிலை எதுவென்றால் மேலே விவாதித்த பேரளவு பொருளாதாரத் தடைகளைக் கவனத்தில் கொண்டு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இருந்து பெறப்பட்ட செலவினம், -வருவாய் குறித்த அனைத்து முன்மொழிவுகளையும் நிதி அமைச்சகத்தின் உயர்மட்ட அளவில் ஒருங்கிணைப்பு செய்வதுதான். பட்ஜெட் தயாரிப்பில் இருக்கின்ற சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மை என்பது அந்த வருடப் பட்ஜெட்டுக்கு பின்னணியில் உள்ள செயல்திட்டங்கள் மற்றும் பெருந்திட்டங்களை மறுகுழுவாக்கல் அல்லது மறுவடிவம் கொடுத்தல் என்பதாகவே உள்ளது.

எஃப்.ஆர்.பி.எம் சட்டம்

  • எஃப்.ஆர்.பி.எம் சட்டத்துக்குப் பிறகு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிதிக் காரணிகளைக் கணக்கில் கொண்டுதான் கொடுக்கப்பட்ட ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தயாரித்தாக வேண்டும். 60 திட்டம், மார்ச் - 2015 மற்றும் குறிப்பிட்ட இலக்குகள் ஆகியவற்றைத் தெரிவிக்கின்ற நிதிசார் உத்தியை அறிவிப்பதன் வாயிலாக இத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது. இந்த அனைத்து ஆவணங்களும் மத்திய பட்ஜெட்டின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளன. இவை பொது விவாதத்துக்கும் பரிசீலனைக்கும் கிடைக்கின்றன. பொருளாதார ஆய்வறிக்கையின் பங்கு மத்திய பட்ஜெட்டை வகுக்கும் முழு செயல்முறையில், இதற்கு இணையான ஒரு தனிப்பட்ட ஆய்வும் மேற்கொள்ளப்படுகின்றது.
  • நிதி அமைச்சகத்திலேயே இருக்கும் முதன்மை பொருளாதார ஆலோசகர் தலைமையில் இயங்கும் தொழில்முறை பொருளாதார நிபுணர்கள் குழு இந்த ஆய்வைச் செய்கின்றனர். இவர்களுக்கு மத்திய புள்ளியியல் அலுவலகம் உதவுகின்றது. கடந்த காலத்தில், குறிப்பாக முந்தைய ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் செயல்திறன் எப்படி இருந்தது என இவர்கள் விமர்சன ரீதியில் ஆராய்ந்து கூறுவார்கள்.
  • இந்தியப் பொருளாதாரம் எதிர்கொண்ட வலிமை, பலவீனம், வாய்ப்பு, சவால் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வாக இது இருக்கும். இதன் மூலம் எதிர்காலச் செயல்பாடு எப்படி அதிகச் செயல்திறன் கொண்டதாக உருவாக்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்படுகின்றது.
  • மேலும் கிடைக்கின்ற மூலவளங்களை எப்படிச் சரியான அளவில் பயன்படுத்துவது என்பதும் நிர்ணயம் செய்யப்படுகின்றது. பொருளாதாரம் தற்போது எதிர்கொண்டுள்ள சிக்கல்களையும் இது தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இந்தச் சிக்கல்களை சமர்ப்பிக்கப்பட இருக்கும் பட்ஜெட் எதிர்கொள்ளும். பொருளாதார ஆய்வறிக்கை என்ற சட்டகத்துக்குள் பட்ஜெட்டை மதிப்பீடு செய்வது என்பது சரியானதாக இருக்கும். கொள்கை மாற்றங்களுக்கான குறிப்பிட்ட பாதையை இது வழங்குகின்றது.
  • அரசாங்கம் கடைபிடிக்க வேண்டிய புத்தாக்க நடவடிக்கைகளை முன்மொழிகின்றது. நிதிக் கொள்கையில் எங்கெங்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்த விரும்புகிறதோ அத்தகைய பிரிவுகள் மற்றும் அம்சங்களை இது உள்ளடக்கியதாக உள்ளது. சுருக்கமாகக் கூறுவதென்றால், இடைப்பட்ட தூரத்தில் இருந்து நெடுந்தூரத்துக்கு மத்திய அரசு நினைக்கும் நிதிக்கொள்கை மாற்றங்களைச் செய்வதற்கு ஏற்ற தெளிவான பாதையை பொருளாதார ஆய்வறிக்கைத் தருகின்றது. பொருளாதார ஆய்வறிக்கையில் தரப்பட்டுள்ள நிதிக் கொள்கை பற்றிய குறிப்பிட்ட பரிந்துரை அல்லது பாதையில் இருந்து நிதி அமைச்சர் விலகிச் செல்கின்றார் என்றால் அதுபற்றி அவர் வெளிப்படையாகப் பட்ஜெட்டில் குறிப்பிடுகிறார். இதில் ஒரு சில விதிவிலக்குகளும் இருக்கின்றன. தற்காலிகமாக தான் ஏன் விலகிச் செல்கிறேன் என அவர் விரிவான நியாயங்களையும் எடுத்துரைப்பார்.

நம் நாட்டில் 1991 சீர்திருத்தங்களுக்குப் பிறகு இது குறிப்பிடத்தக்க போக்காக மரி உள்ளது. இது பொருளாதார ஆய்வறிக்கையை நம்பத்தகுந்த ஆவணமாக மாற்றி உள்ளது. அரசு கடைபிடிக்க விரும்பும் நிதிக்கொள்கை பாதையை தருவதாக இந்த ஆவணம் உள்ளது. எதிர்கால நிதிக்கொள்கை மாற்றங்கள் பற்றிய தேவையற்ற ஊகங்களைக் குறைக்க இது உதவுகின்றது. நீண்டகால உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை குறைக்க உதவும் சூழ்நிலையை இது உருவாக்கித் தருகின்றது. சீர்திருத்தத்துக்கான செயல்திட்டம் நீண்ட கால இலக்குகள் மற்றும் பேரளவு பொருளாதார சூழலில் உள்ள நிரந்தர பிரச்சனைகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் விதமாக நிதிக்கொள்கை இருக்க வேண்டும் என்பதை பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இந்தியா போன்ற ஐக்கிய குடியரசு நாடுகளில், அதிலும் இந்திய ரிசர்வ் வங்கி ஓரளவு தன்னாட்சி பெற்றிருக்கும் நிலையில் நிதிசார்ந்த பிரச்சனைகளை மதிநுட்பமாக அணுகுவதை அரசியல் சார்புத்தன்மை மேலாதிக்கம் செய்து விடுகின்றது. எனவே, அரசுகளை நெறிப்படுத்த சில கடுமையான நிதிசார்ந்த விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற தேவை உணரப்பட்டு வருகின்றது. நிதிசார்ந்த மதிநுட்ப நெறிகளை மிகச் சரியாக ஏற்றுக்கொண்டு நடப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த விதிகள் இருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகின்றது.

இதனை நோக்கிய ஒரு முயற்சியே எஃப்.ஆர்.பி.எம் சட்டம் ஆகும். ஆனாலும்கூட, அதில் வரையறுத்துள்ள விதிகள், அதாவது ஜீரோ வருவாய் பற்றாக்குறை, அல்லது நிதிப் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 3 திட்டம், சதவிகிதத்துக்கு அதிகமாகக் கூடாது போன்ற விதிகள் பொருளாதாரத்தில் ஏற்படும் சுழல்வட்ட ஏற்றத்தாழ்வுகளின் கீழ் நிதிக் கொள்கையில் தர்க்கரீதியாக மாற்றங்கள் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு போதுமானதாக இல்லை. முதலில் எதிர்ச்சுழல் நிதிக்கொள்கை விதிகள் ஒத்துக்கொள்ளப்பட வேண்டும். பின்பு அது பட்ஜெட் வகுக்கும் செயல் முறையில் சேர்க்கப்பட வேண்டும். தேவைப்படும் மற்றொரு சீர்திருத்தம் எதுவென்றால் நாட்டிற்கான அரசுநிதிக் கொள்கையை தயாரிப்பதற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய பொருளாதார நிபுணர்கள் மற்றும் பேரளவு பொருளாதார மேலாளர்கள் அடங்கிய உயர் அதிகாரக் குழுவை உருவாக்க வேண்டும் என்பதுதான். இது ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள நாணயக் கொள்கை போன்றதுதான். இவ்வாறு நிபுணர் குழுவை அமைப்பதால் தொழில்நிபுணத்துவம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஆகியன ஒட்டுமொத்த செயல்முறையிலும் உறுதிப்படுத்தப்படும். இதனால் முதலீட்டாளர்களும் உற்பத்தியாளர்களும் பட்ஜெட் உருவாக்கும் ஒட்டுமொத்த நடைமுறை மீது அதிக நம்பிக்கை அடைவார்கள். இந்த நம்பிக்கை அவர்களை பிரச்சனைகள் குறைந்த சூழல் என்ற உணர்வைப் பெற வைப்பதோடு நிச்சயமற்ற தன்மையை நிர்வகிக்கவும் உதவும். இறுதியாக, மேலே விவரிக்கப்பட்ட பட்ஜெட் செயல்முறைகள் பல்வேறு நிலைகளில் மக்கள் மற்றம் சமுதாயத்தினரை திறம்பட பங்கேற்கச் செய்வதற்கு பயன்படுத்தப்படலாம்.

முடிவுரை

பல நிலைகள் கொண்ட பட்ஜெட் வகுக்கும் செயல்முறையில் முடிவு எடுத்தல் என்பது மையப்படுத்தப்படாமல் பரவலாக்கப்படும் வகையில் இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தோடு இது ஒத்துப் போகின்றது. அதிக அளவு நிதி சுதந்திரத்தை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வரும் நிலையில், மையத்துக்கு முக்கியத்துவம் தரும் அமைப்புகளில் இருந்து குறைந்த நிலை அரசு உறுப்புகளின் பொறுப்புடைமையும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பங்கேற்பை உள்ளடக்கும் வகையில் தற்போதைய செயல்முறைகளை சீரமைப்பது ஒன்றே தர்க்கரீதியில் சரியானதாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.31428571429
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top