பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வரி அமைப்பு

வரி அமைப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

அரசாங்கம் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களிடமிருந்து கட்டாயமாக வசூலிக்கும் தொகை வரி எனப்படுகிறது. வரி நாட்டின் வருவாய்க்கு முக்கிய பங்களிப்பை அளிக்கிறது. மேலும் அரசு தனிநபர் வருமானம், நிறுவனங்களின் இலாபம், பொருட்கள், சேவைகள் மற்றும் பரிவர்த்தனை போன்றவைகளுக்கு வரி விதிக்கின்றது. இந்தியாவின் வரிமுறை அமைப்பு நன்கு திட்டமிட்டது மற்றும் வளர்ச்சியடைந்தது. இந்தியா ஜனநாயக நாடாக இருப்பதால் வரி விதிப்பது மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையில் பிரித்துக் கொள்ளப்படுகின்றது.

மத்திய அரசு வருமானம் (வேளாண்மை வருமானம் தவிர, இது மாநில அரசால் விதிக்கப்படுகின்றது) சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி போன்ற வரிகளை விதிக்கின்றது. மாநில அரசு மதிப்புக் கூட்டுவரி, முத்திரைத்தாள் வரி, மாநில ஆயத்தீர்வை வரி, நில வருவாய் மற்றும் சேவை வரி போன்றவைகளை விதிக்கின்றது.

வரியின் வகைபாடுகள்

வரி என்பதை இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நேரடிவரி மற்றும் மறைமுக வரி என்பதாகும்.

நேரடிவரி என்பது வருமானம் அல்லது இலாபத்திற்கு தனிநபரோ அல்லது நிறுவனமோ கட்டுவதாகும். அரசு இவர்களுக்கு நேரடியாக வரிவிதிக்கிறது.

மறைமுகவரி என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்திக்கும் விற்பனைக்கும் விதிக்கப்படும் வரியாகும். இதை மறைமுகவரி என்று குறிப்பிடக்காரணம் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை தயாரிப்பவர் செலுத்திவிடுவார். பிறகு அதை வாங்கும் நுகர்வோர்களிடமிருந்து பெற்றுவிடுவார். வருமானம் மற்றும் செலவு மீதான வரி, பொருட்கள் மீதான வரி, சொத்து மீதான வரி என்றும் வரியை பிரிக்கலாம்.

வருமானவரி, நிறுவனவரி, விற்பனை வரி ஆகியவைகள் அனைத்தும் வருமானம் மற்றும் செலவுகள் மீதான வரியின் கீழ்வரும். சுங்கவரி, கலால்வரி ஆகிய வரிகள் சரக்குகள் மீதான வரியாகும். செல்வவரி, தீர்வை வரி போன்றவைகள் சொத்து அல்லது சொத்து பரிமாற்றங்களின் மீதான வரியாகும்.

வரி அடிப்படை

யார், எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்று சட்டப்படி விளக்கம் தருவது. எ.கா: தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் வருமான வரி வசூலிக்கப்படுகிறது.

வரி மிதப்பு

வரி அடிப்படை உயர்வதால் வரிவருமானம் அதிகரிக்கும். எ.கா: மக்களின் வருமானம் உயர்வதால் வரிவருவாயும் உயர்கிறது.

வரி நெகிழ்ச்சி

இதன் பாதுகாப்பு அதிகமாதலாலும், விகிதங்கள் மாறுவதாலும் வரிவருவாய் உயர்கிறது. பாதுகாப்பு என்பது புது உறுப்புகளை வரியில் சேர்ப்பதால் வரி நெகிழ்ச்சி உயரும்.

வரி விதிப்பு முறைகள்

விகித வரிவிதிப்பு முறை

விகித வரிவிதிப்பு முறையில் வரியின் அடிப்படை தளம் அதிகரித்தாலும் குறைந்தாலும் வரிவிதிப்பின் சதவீதமும் அதன் விகிதமும் மாறாது. இதில் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சமமான முறையில் வரி செலுத்த வேண்டும். அனைத்து வருவாய் உற்பத்தி நிலையிலும் இந்த வரி நிலையானதாக அமையும்.

வரி நிகழ்வு

வரி விதிக்கப்படுபவர்களை இது குறிக்கிறது. வரியை பிறர் மீது மாற்ற இயலாமல் வரியை சுமக்கும் இறுதி பொருளாதார அலகு ஆகும்.

வளர்விகித வரிவிதிப்பு முறை

வளர்வீத வரிவிதிப்பு முறையில் வரியின் அடிப்படை தளம் அதிகரிக்கும்போது இதன் சதவீதமும் அதன் விகிதமும் அதிகரிக்கும். குறைந்த வருமானம் பெறுபவர் குறைவான வட்டியும் அதிக வருமானம் பெறுபவர் அதிக வரி கட்டவேண்டும். இதனால் பொருளாதார சமநிலை உண்டாகும்.

தேய்வீத வரிவிதிப்பு முறை

வருமானம் உயரும்போது செலுத்தவேண்டிய வட்டிவிகிதம் குறைவது தேய்வீத வரிவிதிப்பு முறை ஆகும். இது வளர்வீத வரிவிதிப்பு முறைக்கு நேர் எதிர்மறையாகும்.

நேரடி வரிகள்

நேரடி வரிகளானது கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது.

 • வருமான வரி(தனி நபர் வருமான வரி) : தனி நபர் வருமான வரியை விதிப்பது மத்திய அரசாங்கம், இவற்றை நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நேரடி வரி ஆணையம் நிர்வகிக்கிறது.
 • நிறுத்தி வைப்பு வரி : அரசாங்க ஊழியர்களின் வருவாயிலிருந்து செலுத்த வேண்டிய வரியை பிடித்தம் செய்வது நிறுத்தி வைப்பு வரி எனப்படுகிறது. பொதுவாக ஊதியத்தை வழங்கும் பொழுது வரியை பிடித்தம் செய்வது என்றும் அறியப்படுகிறது.
 • பெரு நிறுவன வரி : பெரு நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை பொருத்து செலுத்த வேண்டிய வரி.
 • குறைந்தபட்ச மாற்று வரி : வருமான வரி சட்டத்தின் படி பெரு நிறுவனங்கள் தங்களது லாப கணக்கீட்டு பின்பு செலுத்த வேண்டிய வரி. இவற்றை செலுத்தாத நிலையில் அவற்றை வசூலிக்க அரசு இவ்வரிமுறையை கொண்டு வந்துள்ளது
 • விளிம்பு நன்மை வரி : ஊதியமட்டுமல்லாது இதர சலுகைகளை தனது ஊழியர்களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கு அவற்றின் செலவினங்களின் மீது விதிக்கப்படும் வரி.
 • ஈவுத் தொகை பகிர்வு வரி : பங்கு பத்திரத்தின் மீது நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தை பங்குதாரர்களுக்கு ஈவுத் தொகையாக வழங்கும் பொழுது விதிக்கும் வரி.
 • பங்கு பரிவர்த்தன வரி : வரி வதிக்கக்கூடிய பங்கு பத்திரங்களின் வர்த்தகங்களின் மீது விதிக்கப்படும் வரி.
 • சொத்து வரி : சொத்துக்களினால் கிடைக்கப்பெறும் நன்மைக்காக விதிக்கப்படும் வரி. இவ்வரியானது அச்சொத்தின் மீது ஒவ்வொரு வருடமும் விதிக்கப்படும்.
 • முதலீட்டின் மீதான லாப வரி : முதலீட்டை விற்கும் பொழுது கிடைக்கும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி.
 • விற்பனை வரி : பொருட்களின் விற்பனையின் பொழுது அவற்றின் மீது விதிக்கப்படும் வரி
 • மதிப்பு கூட்டு வரி : ஒவ்வொரு நிலையிலும் பொருளின் மதிப்பு அதிகரிக்கும் பொழுது அதன் மீது விதிக்கப்படும் வரியாகும். இதனால் வரி ஏய்ப்பு குறைக்கப்படும்.
 • கலால் வரி : இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி.
 • சுங்க வரி: இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி.
 • சேவை வரி: 1994யில் சேவை வரி மத்திய அரசால் விதிக்கப்பட்டது. சேவை செய்பவர்களால் வசூலிக்கப்பட்டு அரசிடம் செலுத்தப்படும்.
 • மதிப்பு வரி : பொருட்களின் மதிப்பிற்கு தகுந்தவாறு பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி.
 • நுழைவு வரி : உள்ளுர் சந்தைக்கு வரும் பொருட்களின் நுழைவின் பொழுது அதன் மீது விதிக்கப்படும் வரி
 • செஸ் வரியின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரி: இது குறிப்பிட்ட ஒரு நலத்திட்டத்திற்காக விதிக்கப்படுகிறது.
 • கூடுதல் கட்டணம்: இது செஸ் போன்றது. ஆனால் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக வசூலிக்கப்படுவதல்ல.
 • டோபின் வரி : உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பணபரிவர்த்தனை மீது விதிக்கப்படும் வரி.
 • எதிர்சமக் கலால் வரி: உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது கூடுதலாக விதிக்கப்படும் வரி.
 • குவித்தலுக்கு எதிரான வரி: இயல்பான விலைக்கு மாறாக குறைந்த விலைக்கு விற்கப்படும் பொதுவாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி.

சரக்கு மற்றும் சேவை வரியின் கூறுகள்

இந்த வரி அமைப்பு நாடுமுழுவதற்கும் ஒரே மாதிரியானது. இதனுள் உற்பத்தியாளர், விற்பனை பொருட்கள், வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் அடங்கும். நடப்பு வரி அமைப்பிற்கு எதிரானது.

பொருட்களின் மீது மத்திய அரசு வரிகள் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவைவரி எனவும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி எனவும் அழைக்கப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை மனிதர்கள் பயன்பாட்டிற்குரிய ஆல்கஹால் இல்லாமல் பெட்ரோலிய கச்சா எண்ணெய், மோட்டார் எரிபொருள், அதிவேகமாக இயங்கக்கூடிய டீசல் இயற்கை எரிவாயு, வானுர்திக்கான எரிபொருள் போன்ற பொருட்களின் மீது இவ்வரி விதிக்கப்படுவதில்லை. சரக்கு மற்றும் சேவை வரி, மத்திய அரசு விதித்து வசூலிக்கப்படக்கூடிய வரிகளை தற்பொழுது நீக்கியுள்ளது.

மத்திய அரசு விதிக்கக்கூடிய கலால்வரி

 • மருந்து மற்றும் கழிவறை சுத்தம் செய்யக்கூடிய பொருள்கள் மீதான கலால் வரி.
 • சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் மீதான கூடுதல் கலால் வரி.
 • துணி மற்றும் துணிகள் உற்பத்திக்கான கூடுதல் கலால் வரி, சேவை வரி, பொருட்கள் மற்றும் சேவைகளின் அளிப்பு மீது விதிக்கப்ப்ட்ட மத்திய அரசின் கூடுதல் வரி, மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவை வரி,
 • மாநில மதிப்புக்கூட்டு வரி, மத்திய விற்பனை வரி, ஆடம்பர வரி
 • நுழைவு வரி, கிராம பஞ்சாயத்து வரி, பொழுது போக்கு மற்றும் கேளிக்கை வரிகள், விளம்பரத்திற்கான வரி, பொருட்களை வாங்குவதற்கான வரி, லாட்டாரி, சூதுவிளையாட்டு, சீட்டுகட்டு போன்ற விளையாட்டுக்கான வரி, சரக்குகள் மற்றும் சேவைகள் அளிப்பு மீது விதிக்கப்படும் வரிகள்.

சரக்கு மற்றும் சேவை வரியின் பயன்கள்

சரக்கு மற்றும் சேவைவரியின் காரணமாக நாடுமுழுவதும் சிறப்பான சூழல் காணப்படுகிறது. அதாவது, நாட்டின் தொழிற்சாலை பங்குதாரர்கள், நுகர்வோர்கள் அனைவரும் பயன்பெறுகிறார்கள். பொருளின் விலை குறைவாக கிடைப்பதால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து உலக வர்த்தகத்திற்கு இணையாக செயல்பட முடியும். நாட்டில் ஒருங்கிணைந்த வரிவிதிப்பிற்கு இருந்த தடைகள் அனைத்தும் இந்த வரி மூலம் நீக்கப்பட்டது. பெரும்பாலான மத்திய மற்றும் மாநில அரசின் வரிகள் ஓரே வரியாக வருகின்றது. இதனால் வியாபாரத்தின் அனைத்து நிலையிலும் நடைபெறுவதால் வியாபாரம் பெருகுவது மட்டுமல்லாமல் நீர்மைச் சொத்துகளும் அதிகரிக்கினறது. பல வழிகளில் இந்த வரியை வசூல் செய்கிறது. ஒருநிலையில் வசூலிக்கப்படுகின்ற வரி மறுநிலைக்குச் செல்லுவதால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சரக்கு மற்றும் சேவை முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்தது. இதனால் எளிதில் ஒரு முடிவை எட்டமுடியும்.

சரக்கு மற்றும் சேவை வரி முழுவதும் அனைத்துப் பொருட்களையும் இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக்கிறது. இதனால் இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்வதனால் நாட்டுக்குள்ளேயும், நாட்டுக்கு வெளியிலும் போட்டியை ஏற்படுத்த முடியும். இறக்குமதி பொருட்களுக்கு ஒருங்கிணைந்த வரியை விதிப்பதால் உள்நாட்டு பொருட்களுக்கு அதே அளவு வரியே விதிக்கப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியின் காரணமாக ஏற்றுமதியான தரம் பூஜ்ஜியமாக இருக்கும். அதாவது ஏதாவது ஒரு வரி திரும்ப கிடைத்தால் அதனை தற்பொழுது உள்ள அமைப்பு இல்லாமல் மத்திய மாநில அரசுக்கு செல்லாமல் நேரடியாக 90சதவீதம் ஏற்றுமதியாளர் கணக்கில் ஒரு வாரத்திற்குள் சேர்ந்துவிடும். இதனால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து அந்நிய செலவானி அதிகரிக்கும்.

சரக்கு மற்றும் சேவை வரி நாட்டின் வரிசெலுத்துபவரின் எண்ணிக்கையை உயர்த்த வழிசெய்கிறது. மேலும், நாட்டில் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை தரக்குறியீட்டை அதிகரிக்கிறது. இதன்மதிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 1.5 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவைவரி மறைமுக வரியில் உண்மையை வெளிப்படுத்துகிறது. எப்படியென்றால் உற்பத்திலிருந்து ஒவ்வொரு நிலையிலும் வரி விதிக்கப்படுவதால் பொருளாதரத்தின் நிலை மற்றும் வரி விதிக்கபட்டுள்ளதா என்பதை எளிதில் அடையாளம் காணமுடியும். இதனால் உற்பத்தியாளர்கள் கடன்பெறவும், அரசு வரி செலுத்தி உள்ளோமோ என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

வரிசெலுத்தியவர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மறைமுக வரி சட்டத்தின்படி பழைய வரிகளுக்கு கோப்புகளை பாதுகாக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, மாநில மற்றும் யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி சட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டால் போதும்.

ஆதாரம் – அறம் ஐ.ஏ.எ அகடாமி

Filed under:
2.83333333333
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Kirthi Jul 18, 2019 12:32 PM

Tq Vikaspedia

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top