பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆய்வு, சோதனை, கையகப்படுத்தல் மற்றும் கைது

ஆய்வு, சோதனை, கையகப்படுத்தல் மற்றும் கைது தொடர்பான கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1: சோதனை என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

பதில்: சட்ட அகராதியில் உள்ளபடியும், பல்வேறு நீதிமன்றத் தீர்ப்பு அறிவிப்புகளின்படியும், சோதனை என்பதற்கு எளிமையான பொருள், ஒரு குற்றச் செயலை, மறைப்பதற்காக ஒளித்து வைக்கப்படும் சாட்சி, ஆதாரத்தைக் கண்டுபிடிக்க அரசாங்க இயந்திரத்தால் பகுதி, வட்டாரம், நபர் போன்வற்றை கவனமாக சோதித்து அறிவது. இதன் தெடர்பான நபர், அவரது வாகனங்கள், விடு அலுவலகம் ஆகியவற்றையும் சோதித்து அறிவது. தகுந்த சட்ட அங்கீகாரம் பெற்ற அதிகாரிதான் இதைச் செய்ய வேண்டும்.

கேள்வி 2: ஆய்வு என்ற பதத்திற்கான பொருள் என்ன?

பதில்: சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ஷரத்து. இது சோதனையை விட கடுமை குறைவான நடவடிக்கை. இதன் மூலம், அதிகாரிகள், வரிவிதிப்புக்கு உட்பட்ட நபரின் தொழில் செய்யும் இடம், அல்லது பொருள் சேமிப்பு கிடங்குகள், சரக்குகளை வைக்கும் கிடங்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய முடியும்.

கேள்வி 3: "ஆய்வு செய்யலாம் என்பதை யார்,எந்த தழ்நிலையில் உத்தரவிட முடியும்?

பதில்: சிஜிஎஸ்டிஎஸ்ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 67ன் படி அதன் அதிகாரி ஆய்வை மேற்கொள்ளலாம் என்பதற்கு எழுத்து மூலம் அதிகாரமும், உத்தரவும் அளிப்பதற்கு, இத்துறையின் இணை ஆணையர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிக்குத்தான் உரிமை உள்ளது.

எந்த இடத்தில் யாரைக் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சரியான காரணங்கள் உள்ளன என்று அவர் நம்பினால், இந்த உத்தரவைப் பிறப்பிக்கலாம். அதற்கான காரணங்களாவன:

1. பொருள் வழங்கல் பரிமாற்றத்தில் விவரங்களை வேண்டுமென்றே மறைத்தல்

2. சரக்குக் கையிருப்பைப் பற்றிய விவரங்களை மறைத்தல்

3. மிக அதிகமான உள்ளிட்டு வரிக் கடனைக் கோரிப் பெற்றிருப்பது

4. வரி செலுத்தாமல் தப்பிக்க, அல்லது தவிர்க்க, சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டத்திலுள்ள ஷரத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பது.

5. சரக்குப் போக்குவரத்தை தொழிலாக மேற்கொண்டிருப்பவர், அல்லது சேமிப்பு கிடங்குகளின் உரிமையாளர், வரி செலுத்தாத சரக்குகளை வைத்திருத்தல் அல்லது வரி கொடுப்பதைத் தவிர்க்கும்படியான கணக்கைக் காட்டுவது, அல்லது சரக்குகளை மறைப்பது ஆகியன.

கேள்வி 4: இத்துறையில் முறையான அதிகாரம் பெற்ற அதிகாரி, இந்த சட்டப் பிரிவின் கீழ் சந்தேகத்துக்குள்ளாகும் நபரின், எல்லா வித சொத்துக்கள்/உரிமையுள்ள இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய அதிகாரம் அளிக்க முடியுமா?

பதில்: 1. வரிவிதிக்கத் தக்க நபரின் தொழில்/வர்த்தம் செய்யும் எல்லா இடங்களும்

2. சரக்குப் போக்குவரத்துத் தொழிலை செய்து வரும், நபரின் தொழில்/வர்த்தகம், வரி விதிக்கத்தக்க நபராக இருந்தாலும், பதிவு செய்யாவிட்டாலும், அவரது தொழில்/வர்த்தகப் பணியிடங்கள்,

3. பொருள் சேமிப்புக் கிடங்குகள், சரக்கு சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை சொந்தமாக வைத்திருப்பவர் அல்லது அந்த இடத்தை நிர்வகிப்பவரின் ஆகியோரின் தொழில்/வர்த்தகம் நடைபெறும் அனைத்து இடங்கள் போன்ற அனைத்து இடங்களையும் ஆய்வு செய்யலம்.

கேள்வி 5: சிஜிஎஸ்டி சட்டத்தின் ஷரத்துக்களின்படி சோதனை செய்வது, பறிமுதல் செய்வது ஆகியவற்றை நடத்துமாறு யார் உத்தரவிட முடியும்?

பதில்: இணை ஆணையர் அல்லது அதற்கும் மேல் பதவியில் உள்ள அதிகாரிதான், சோதனை செய்யவும், சரக்குகள், ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள் அல்லது தொடர்புடைய பொருட்கள் ஆகியனவற்றை பறிமுதல் செய்யவதற்கும் எழுத்துபூர்வ உத்தரவை அளிக்கலாம். அவர், இவ்வாறு செய்வதற்குத் தகுந்த ஆதாரங்கள், காரணங்கள் ஆகியன இருக்கின்றன என்று நம்பினால் அவற்றைச் சோதனை செய்து தேடிக் கண்டறிந்து பறிமுதல் செய்ய உத்தரவிட அதிகாரம் உள்ளது.

கேள்வி 6: ‘நம்புதற்கான காரணங்கள்’ என்றால் என்ன?

பதில்: நம்புவதற்கான காரணங்கள் என்றால், குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்திருப்பதுதான். இது நேரடியாகத் தெரிந்தவை இல்லையென்றாலும், சாதாரண காரண அறிவுள்ள எந்த மனிதரும் அதைப் பற்றி ஒரே விதமான முடிவுக்குத்தான் வருவார்கள்.

IPC சட்டப் பிரிவு 26 ன் படி, ஒருவர் குறிப்பிட்ட விஷயத்தை நம்பக் காரணம், அவரிடம் அதைப் பற்றி வேறு விதமாக நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லாதிருப்பததான். நம்புவதற்கான காரணம் எதைக் குறிக்கிறது என்றால் அறிவுபூர்வமான அக்கறையுடன், குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி, மிகக் கவனமான மதிப்பீடு செய்து, நோக்கத்தின் அடிப்படையிலான உறுதிப்பாட்டு நிலைக்கு வருவதுதான். இதை நேர்மையான, மற்றும் நியாயமான மனிதனுடைய முடிவாக, இது தொடர்பான தழ்நிலைகள் மற்றும் பொருட்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

கேள்வி 7: சோதனை மற்றும் பரிமுதல் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவதற்குமுன், அதற்கான நம்பத்தகுந்த காரணங்கள் இருக்கின்றனவா என்பதை அதற்குரிய அதிகாரி எழுத்துமூலம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமா?

பதில்: இது போன்ற நம்பிக்கை குறித்தான காரணங்களை, அதிகாரி எழுதி பதிவு செய்த பின்னர்தான், ஆய்வு சோதனை மற்றும் பறிமுதலுக்கு ஆணை வழங்கப்படும் என்பதில்லை என்றாலும், அந்த அதிகாரி எதை வைத்து அவ்வாறு நம்புகிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வழக்கிலும் இதுபோல நம்புவதற்கான காரணங்களை பதிவு செய்யத் தேவையில்லை. ஆனாலும்கூட பொருட்கள்தகவல்கள் போன்றவை குறித்து பதிவு செய்த பின் சோதனைக்கான ஆணை வழங்குவது நல்லது.

கேள்வி 8: சோதனை செயலாணை என்றால் என்ன? அதில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

பதில்: சோதனை நடத்த அதிகாரம் அளித்து வெளியிடப்படும் எழுத்து பூர்வ ஆவணம்தான் சோதனை செயலாணை. இதை அளிப்பதற்கு இணை ஆணையர் மற்றும் அவருக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. சோதனை செயலாணையில், அவ்வாறு சோதனை நடத்துவதற்குத் தேவையான காரணங்கள் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். சோதனைச் செயலாணையில்,

பின்வரும் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

1. மீறப்பட்ட சட்டத்தின் குறிப்பு பிரிவு ஆகிய விவரங்கள்.

2. சோதனைசெய்ய வேண்டிய இட விவரம்

3. இந்த சோதனை நடத்த அதிகாரம் உள்ள நபரின் பெயர் மற்றும் பதவி விவரங்கள்

4. இந்த சோதனைச் செயலாணையை வழங்கிய அதிகாரியின் பெயர் மற்றும் அவரது பதவியின் முழுவிவரம். இதனுடன் அவருக்கான அதிகார வட்ட முத்திரை.

5. ஆணை வழங்கப்பட்ட தேதியும் இடமும்

6. சோதனைச் செயலாணையின் தொடர் எண்

7. அந்த ஆணை செல்லுபடியாகும் தேதி, காலம் பற்றிய விவரம் (உ.ம்) ஒன்று அல்லது இரண்டு நாள் போன்ற விவரம்.

கேள்வி 9: சிஜிஎஸ்டிஎஸ்ஜிஎஸ்டி சட்டத்தின்படி பொருட்களை எந்தச் தழ்நிலையில் பறிமுதல் செய்ய முடியும்?

பதில்: SGST/CGST சட்டத்தின் 130ஆவது பிரிவின்படி, பின்வரும் காரியங்களை / செயல்களை யாராவது செய்தால், பொருட்கள்/சரக்குகள் பறிமுதல் செய்யப்படும்.

1. வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சட்டத்தின் ஷரத்துக்களை மீறி சரக்குகளை வழங்குவதோ அல்லது பெறுவது போன்றவற்றைச் செய்தால், பறிமுதல் நடவடிக்கை இருக்கும்.

2. சரக்குகளுக்கு, இச்சட்டத்தின்படி செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இருப்பது

3. எந்த சரக்காக இருந்தாலும், அதற்கான பதிவுகள் எதையும் செய்யாமல் பிறருக்கு வழங்குவது அதன் மூலம் வரிகட்டாமல் இருப்பது 4. CGST/ISGST சட்டத்தின் அல்லது அதன் பிரிவுகள் மற்றும் விதிமுறைகளுக்கு எதிராக நடந்துகொண்டு அதன் மூலம் வரியைச் செலுத்தாமல் இருப்பது.

கேள்வி 10: ஒரு முறையான சோதனையின்போது, அதை அமல்படுத்தும் அதிகாரி என்ன அதிகாரங்களைப் பயன்படுத்தலாம்?

பதில்: சோதனையை நடத்தும் அதிகாரி பறிமுதல் செய்ய வேண்டிய சரக்கை, ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள் அல்லது இது தொடர்பான பிற பொருட்கள் ஆகியவற்றைத் தேடிப் பறிமுதல் செய்யலாம். தேடலின்போது, குறிப்பிட்ட இடத்தில் நுழைவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டால், அதை உடைக்க அதிகாரம் உண்டு. அதுபோல, சோதனைக்குள்ளாகும் இடத்தில் பூட்டப்பட்ட அலமாரி பீரோக்கள், பெட்டிகள் போன்றவற்றைத் திறக்கச் சொல்லி, மறுக்கப்படும் பட்சத்தில், அவற்றை உடைத்துத் திறக்கவும், அந்த இடத்தை மூடி, தடைக்காப்பு செய்யவும் அவருக்கு அதிகாரம் இருக்கிறது.

கேள்வி 11: சோதனை நடத்தும் வழிமுறைகள் என்ன?

பதில் : CGST/SGST சட்டப்பிரிவு 67(10)ன்படி சோதனைகள், 1975ஆம் ஆண்டைய சட்டப்பிரிவு 100ன் படி, குற்றவியல் நடைமுறை வழிகாட்டு நெறிகளின்படி நடத்தப்பட வேண்டும்.

கேள்வி 12: சோதனை நடவடிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை முறைமைகள் என்ன?

பதில்: சோதனைகளின்போது, பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முறையான சோதனைச் செயலாணை இல்லாமல் எந்த இடத்தையும் சோதனை செய்யக் கூடாது.

வீடுகளில் சோதனை செய்யும்போது, சோதனைக் குழுவில் ஒரு பெண் அதிகாரியாவது உடன் செல்ல வேண்டும்.

சோதனை ஆரம்பிக்கும் முன்னர், அதற்காகச் செல்லும் இடத்தில், சம்பந்தப்பட்டவருக்குத் தங்களது அடையாள அட்டைகளைக் காண்பிக்க வேண்டும்.

சோதனை துவங்கும் முன்னதாக, அந்த இடத்தின் உரிமையாளர் அல்லது நிர்வாகி ஆகியோரிடம் சோதனை செயலாணையைக் காண்பித்து அதை அவர் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக, அவரது கையொப்பத்தைப் பெற வேண்டும். அதனுடன் கூட இரண்டு சாட்சிகளின் கையெழுத்தையும் பெற வேண்டும்.

சோதனையை, தனிப்பட்ட இருவரது முன்னிலையில் செய்யப்பட வேண்டும். அந்த நபர்கள், அந்தப் பகுதியை சேர்ந்தவராக இருப்பது நல்லது. ஒருவேளை அப்படிப்பட்ட நபர்கள் கிடைக்கவில்லையாரும் முன்வரவில்லை/விருப்பமில்லை என்ற தழ்நிலை இருந்தால், அதே இடத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பகுதியில் இருந்து நபர்களை அழைத்து வந்து சோதனைக்கு சாட்சிகளாக வைத்துக் கொள்ளலாம். யாராக இருந்தாலும், அவர்களிடம் சோதனைக்கான காரணத்தை சுருக்கமாகச் சொல்லிப் புரிய வைப்பது அவசியமானது.

சோதனைக்கு முன்பாக அதற்காக செல்லும் அதிகாரிகள் மற்றும் சாட்சிகள் ஆகியோர் அந்த இடத்தின் உரிமையாளர், நிர்வாகி, தங்களை சோதனை செய்ய அனுமதிக்க வேண்டும். அதுபோல, சோதனை முடிந்த பின்னரும், அதே போன்ற சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

சோதனை எப்படி நடைபெறப் போகிறது என்ற திட்ட ஆவணம், அந்த இடத்தில் தயாரிக்கப்பட வேண்டியது அவசியமானது. அது போல, சோதனை முடிந்ததும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் / பொருட்கள் / சரக்குகள் ஆகியன பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பட்டியலில், அந்த இடத்தின் உரிமையாளர்/பொறுப்பாளர், பட்டியலில் உள்ளவற்றை தனித்தனியாக சோதித்து அறிந்து "ஆம்" என்ற ஒப்புகையுடன் கையெழுத்திட வேண்டும். இதை சோதனை அதிகாரியின் முன் செய்ய வேண்டும்.

சோதனை முடிந்தவுடன் சோதனைச் செயலாணையை வெளியிட்ட அதிகாரிக்கு அந்த ஆணையின் அசல் பிரதியை, சோதனையின் விளைவு விவரம் ஆகியவற்றின் விளக்க அறிக்கையையும் உடன் வைத்து, அவரிடம் வழங்க வேண்டும். இந்த அறிக்கையில் சோதனையில் பங்கு பெற்ற அதிகாரிகளின் பெயர் விவரங்களை சோனைச் செயலாணையின் பின்புறத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

சோதனைச் செயலாணையை வழங்கும் அதிகாரி, அவரால் வழங்கப்பட்ட செயலாணைகளைப் பற்றிய விவரப் பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.

சோதனை நடத்தப்பட்ட விதம் குறித்த மகஜர் மற்றும் அதன் இணைப்பு ஆவணங்களை இடத்தின் உரிமையாளர்பொறுப்பாளர் ஆகியோரிடம் ஒப்புகைச் சீட்டுடன் வழங்கப்பட வேண்டும்.

கேள்வி 13: CGST/SGST அதிகாரி வேறு எந்த தழ்நிலைகளிலாவது குறிப்பிட்ட தொழிலகம்/அலுவலகத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியுமா?

பதில்: ஆமாம். CGST/SGST சட்டப்பிரிவு 65 ன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி குறிப்பிட்ட இடத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும். இந்த சட்டத்தின் ஷரத்துப்படி CGST/SGST அல்லது C&AG அல்லது தகுதி பெற்ற செலவு கணக்காளர், அல்லது பட்டயக் கணக்காளர் ஆகியோர் அடங்கிய தணிக்கைக் குழுவை CGST/SGST சட்டத்தின் பிரிவு 66-ன்படி குறிப்பிட்ட தொழில்/வர்த்தக வளாகத்தைத் தங்களது உரிமையில் எடுத்துக்கொள்ள முடியும். இவர்கள் அந்த நிறுவனத்தில் வரவு செலவு கணக்குகள், ஆய்வுகள், சரிபார்த்தல் போன்றவற்றைச் செய்து, துறைக்கு வருவாய் வருவதை உறுதி செய்வது, மற்றும் பாதுகாப்பது போன்றவற்றைச் செய்கின்றனர். ஆனால் இதைச் செய்வதற்கு CGST/SGST யின் ஆணையர் அந்தஸ்தில் உள்ளவர் உத்தரவை வழங்க வேண்டும். இதன் மூலமாகத்தான், வரிவிதிப்பிற்கு உள்ளான நபரின் தொழில் மற்றும் வர்த்தகம் செய்யும் இடத்தில், அந்த இடத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். அது மட்டுமின்றி அவரது கணக்கு ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள், கணிணிகள் போன்றவற்றைத் தங்களது உரிமையில் எடுத்துக்கொள்ள முடியும்.

கேள்வி 14: பறிமுதல் செய்தல் என்றால் என்ன?

பதில்: GST மாதிரிச் சட்டத்தில், பறிமுதல் குறித்து, தனியாக விளக்கப்படவில்லை. சட்ட லெக்ஸிகன் அகராதியில், இந்தப் பதத்திற்கு பொருள் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. சட்ட நடைமுறையின்படி, குறிப்பிட்ட சொத்து, சரக்கு ஆகியன, அவரது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதுதான். இதை இப்படிக் கொண்டு வருவது, சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் பலவந்தமாக எடுத்துக் கொள்ளல் என்றும் கூறலாம். இதுதான் பறிமுதல் என்று குறிப்பிடப்படுகிறது.

கேள்வி 15: ஜிஎஸ்டி சட்டங்களின்படி சரக்குகளையோ, போக்குவரத்து வாகனங்களையோ, பிடித்து வைக்க முடியுமா?

பதில்: ஆம். CGST/SGST சட்டப்பிரிவு 129-ன் படி ஒரு அதிகாரிக்கு சரக்குகளையும், அவற்றை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களையும், நிறுத்தித் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அதிகாரம் இருக்கிறது. மேற்படி சரக்குகள், வண்டிகள் ஆகியன, CGST/SGSTயின் சட்டங்களை மீறி சரக்குகள் இருப்புகள் ஆகியனவற்றை, கணக்கு எதுவும் காட்டாமல் சேமிப்பது, பதுக்குவது போன்றவற்றைக் கண்டறிந்தால், அத்தகைய சரக்குகளையும், அவற்றைக் கொண்டு செல்லப் பயன்படும் வாகனங்களையும் நிறுத்தித் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும்.

கேள்வி 16: தடுத்து நிறுத்தல் மற்றும் பறிமுதல் ஆகிய இரண்டிற்கும் உள்ள சட்டரீதியிலான வேறுபாடுகள் என்ன?

பதில்: தடுத்து நிறுத்தல் என்றால், குறிப்பிட்ட நபர் சொத்து, சரக்கு, வாகனங்கள் ஆகியவற்றை உரிமையாளரின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு தடுத்து நிறுத்திக்கொள்வதாகும். இதற்கான சட்டபூர்வ தாக்கீது அனுப்பிய பின் அதற்கான உரிமையுள்ள அதிகாரி இந்தப் பணியை மேற்கொள்வார். பறிமுதல் என்றால் துறை சார்ந்த அதிகாரிகள், சொத்துக்களைத் தங்களது கட்டுப்பாட்டில் நேரடியாகக் கொண்டு வருவதுதான். தடுத்து நிறுத்தல் என்பது பறிமுதல் செய்ய வேண்டிய நிலையில் உள்ள பொருட்களைத் தடுத்து நிறுத்தித் தங்களது பொறுப்பில் எடுத்துக்கொள்வது பறிமுதல் என்றால், முறையான விசாரணைக்குப் பிறகு தவறு செய்திருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்ட பின்பு பொருட்களை, சரக்கு, வாகனங்களைக் கையகப்படுத்துவதுதான் பறிமுதல்.

கேள்வி 17: GST சட்டங்களின்படி சோதனை மற்றும் பறிமுதலுக்கு நடவடிக்கைகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

பதில்: CGSTISGST சட்டத்தில், சோதனை அல்லது பறிமுதல் தொடர்பான அதிகாரத்தில் உள்ள கட்டுப்பாடுகளாவன;

1. பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகள் அல்லது ஆவணங்கள் ஆகியனவற்றை சோதனை செய்ய வேண்டிய கால அளவுக்கு பின் நிறுத்தி வைத்திருக்கக் கூடாது.

2. பறிமுதல் செய்யப்படும் ஆவணங்களை, அவரது உரிமையாளர் நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

3. பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகள் குறித்தான நோட்டீஸ் அவற்றின் உரிமையாளருக்கு அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு அனுப்பாவிட்டால், பறிமுதல் செய்த சரக்குகள், ஆவணங்கள் போன்ற அனைத்தும் திருப்பி அளிக்கப்பட வேண்டும். இந்த கால நேரம், நியாயமான காரணங்கள் இருந்தால், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கலாம்

4. பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகள் முறையாகப் பட்டியலிடப்பட வேண்டும்.

5. GST சட்டங்களின்படி பறிமுதல் செய்யப்பட்ட சில வகைப்பட்ட சரக்குகளை (அழுகிப் போகக் கூடியன, மனிதருக்கு, சுற்றுச் சூழலுக்கு கேடு உண்டாகக்கூடியன) உடனடியாக அழித்துவிடலாம்.

6. சோதனை மற்றும் பறிமுதல் செய்வதற்கான முறைமை, 1973-ம் ஆண்டைய குற்றவியல் சட்ட நடைமுறை விதிகளின் படி பின்பற்றப்படும். ஆனால் இந்தச் சட்ட நடைமுறைப்படுத்தலில் மாற்றம் இருக்கும். குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின் 165 பிரிவின் துணைப்பிரிவு (5)இன்படி சோதனையின் போது கைப்பற்றியப் பொருட்களைப் பற்றிய பட்டியலை அருகிலிருக்கும் மாஜிஸ்டிரேட்டிடம் அனுப்பப் பட வேண்டும். ஆனால் CGST/SGST துறையைப் பொறுத்தவரை கைப்பற்றபட்ட, பறிமுதல் துறை சார்ந்த முதன்மை ஆணையர் அல்லது ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பட வேண்டும்.

கேள்வி 18: வரி செலுத்தப்பட வேண்டிய சரக்குகளை எடுத்துச் செல்லும்போது, அதனுடன் இருக்க வேண்டிய சிறப்பு ஆவணம் உள்ளதா?

பதில்: CGST/SGST யின் 68வது சட்டப்பிரிவின்படி, குறிப்பிட்ட மதிப்புக்கு அதிகமாக உள்ள சரக்குகளை எடுத்துச் செல்லும்போது அதற்கான ஆவணங்களை எடுத்துச் செல்வது அவசியமானது.

கேள்வி 19: கைது என்ற பதத்திற்கான பொருள் என்ன?

பதில்: CGST/SGST சட்டப் பிரிவுகளில் கைது என்றால் என்ன என்பதற்கான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில், நீதிமன்ற தீர்ப்புகளின்படி கைது என்றால் சட்டபூர்வமான அதிகாரத்தின் கீழ் ஒரு நபரைக் கொண்டு வருவதுதான். வேறு விதமாய் சொல்வதென்றால், சட்டபூர்வமான அதிகார அமைப்பின் மூலம், அல்லது சட்டப்பூர்வமான பிடியாணை மூலம் ஒரு நபரின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது என்றால் அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று பொருள்.

கேள்வி 20: CGST/SGST சட்டத்தின்படி உரிய அதிகாரி குறிப்பிட்ட நபரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்க முடியுமா?

பதில்: CGST/SGST யின் ஆணையர் ஒரு CGST/SGST அதிகாரிக்கு, குறிப்பிட்ட நபரைக் கைது செய்ய அதிகாரம் அளிக்க முடியும். அந்த நபர் CGST/SGST சட்டப் பிரிவு 132(1) (a), (b), (c), (d) அல்லது 132 (2) ஆகியவற்றின் படி தவறு செய்திருந்தால் அவரைக் கைது செய்ய ஆணையிட முடியும். இவ்வாறு கைது செய்யப்பட அந்த நபர் ரூ. 2 கோடிகளுக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருக்க வேண்டும் அல்லது ஏற்கெனவே CGST சட்டங்களின்படி குற்றவாளி என்று நிரூபணம் ஆகியிருக்க வேண்டும்.

கேள்வி 21: CGSTISGST சட்டத்தினபடி கைது செய்யப்பட்டவருக்கு உள்ள பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

பதில்: இந்த அம்சங்கள் சட்டப் பிரிவு 69இன் கீழ் இருக்கின்றன அவையாவன:

1. கைது செய்யப்பட வேண்டிய குற்றத்திற்காக, கைது செய்யப்படுகிறார் என்றால், அதற்கான காரணங்கள் அவருக்கு எழுத்துபூர்வமாக அளிக்கப்பட வேண்டும். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவரை மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

2. கைது செய்யப்பட்டாக வேண்டும் என்கிற அளவுக்கு குற்றம் செய்யாத அதே சமயம், கைது செய்வது அந்த சமயத்தில் தேவையானது என்ற நிலையில் கைது செய்யப்படும் நபரை CGST/SGST -யின் துணை ஆணையரே ஜாமினில் விடுதலை செய்ய முடியும். 1973 குற்றவியல் நடைமுறை செயல்பாட்டு விதிமுறைச் சட்டத்தின்படி (436) காவல்துறை அதிகாரிக்கும் இருக்கும் அதே அதிகாரம் CGST/SGST இணைதுணை ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

3. அனைத்து கைது நடவடிக்கைகளும் 1973ஆம் ஆண்டைய குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின்படி இருக்க வேண்டும்.

கேள்வி 22: கைது நடவடிக்கையின்போத கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைச் செயல்பாடுகள் என்ன?

பதில்: குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 (1974ன் 2வது பிரிவு) விதிமுறைகளின்படி, சில நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இதன்படி, CGST/SGST யின் அனைத்துக் கள அதிகாரிகளும் மேற்படி சட்டத்தைப் பற்றி மிக நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

இதில் இருக்கும் மிக முக்கியமான ஷரத்தான, பிரிவு 57இன் படி, யாராவது ஒருவரைப் பிடியாணை இல்லாமல் கைது செய்தால் நியாயமான காரணங்கள் இன்றி அதிக காலத்திற்குக் காவலில் வைக்கக் கூடாது. அப்படியே காரணங்கள் இருந்தாலும், 24 மணி நேரத்திற்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (கைது செய்யப்பட்ட நபரை அந்த இடத்திலிருநத அலுவலகத்திற்கு அழைத்து வரும் பயண நேரம் அதிகமாதல் தவிர) சட்டப் பிரிவு 56இன்படி கைது நடவடிக்கையை எடுத்த அதிகாரி, கைது செய்யப்பட்டவரை மாஜிஸ்டிரேட்டிம் அழைத்துச் செல்ல வேண்டும். DK பாஸ் எதிர் மேற்கு வங்காள அரசாங்கம் இடையே நடந்த வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பு வழங்கப்பட்டத. இந்த வழக்கில் 1997(1) SCC 416ன் படி, மாட்சிமை தங்கிய உச்ச நீதிமன்றம் கைது நடவடிக்கைகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு காவல்துறை தொடர்புடையதுதான் என்றாலும், கைது செய்ய அதிகாரம் உள்ள அனைத்துத் துறைகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என்பது அவசியமாகிறது. வழிகாட்டு நெறிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள், தங்களது அடையாளம், பெயர் தெளிவாகத் தெரிகிறார் போல அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை விசாரணை செய்யும் அதிகாரிகள் பெயர், அதற்கான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

2. கைது செய்யப்படும் நேரத்தில் அது பற்றிய விவரக் குறிப்பை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி தயாரிக்க வேண்டும். அதை கைது செய்ப்படுபவரின் குடும்ப உறுப்பினர் அல்லது அநதப் பகுதியில் உள்ள மரியாதைக் குரிய நபர் ஒருவரின் சாட்சிக் கையெழுத்து பெறப்பட வேண்டும். இந்த விவரக் குறிப்பில் கைது செய்யப்படும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடபட வேண்டும்.

3. கைது செய்யப்பட்ட நபர், விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவுடன், அவரை எங்கு வைத்து விசாரணை செய்ய இருக்கிறீர்கள் என்பதை அவரது நண்பர். குடும்ப உறுப்பினர், நலம் விரும்பி, அல்லது கைது செய்யப்பட்டபோது, அந்த விவரக் குறிப்பில் சாட்சி ஒப்பமிட்டவர் போன்றவர்களில் யாரிடமாவது விவரம் தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட நேரம், இடம் குறித்து, அவரது நண்பர், குடும்ப உறுப்பினர் ஆகியோர் வெளி மாவட்டங்களில் இருந்தால் அவருக்குக் கைது பற்றிய தகவலை அந்த மாவட்ட சட்ட உதவி அமைப்பின் மூலம் தெரிவிக்க வேண்டும். கைது செய்ப்பட்டவரது ஊரில் உள்ள காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த தகவல், கைதான 8-12 மணி நேரங்களுக்குள்ளாகத் தெரிவிக்க வேண்டும்.

5. கைது செய்யப்படும் இடத்தில், காவல்துறை டைரியில் அது பற்றி விவரம், அதைப் பற்றி தெரிவிக்கப்பட்ட நபரின் பெயர், யாருடைய பொறுப்பில் கைது செய்யப்பட்டு இருப்பர் என்பது போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

6. கைது செய்யப்படுபவர் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில், அவர் மருத்துவ ரீதியாகப் பரிசோதிக்கப்பட வேண்டும். அவரது உடலில் சிறிய, பெரிய காயங்கள் இருந்தால், அவை, ஆய்வுக் குறிப்பில் பதிவு செய்ய வேண்டும். இதில் கைது செய்யப்பட்டவரின் ஒப்பம், கைது செய்யும் அதிகாரியின் ஒப்பம் ஆகியன இருக்க வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவருக்கு 48 மணி நேரங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். தகுதி வாய்ந்த மருத்துவர் குழுவை, அந்தந்த மாநில அல்லது மத்திய சுகாதாரத் துறை செயலர் நியமிப்பார்.

8. கைது செய்ததைப் பற்றிய அனைத்து ஆவணங்களும், மாஜிஸ்டிரேட்டிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

9. விசாரணையின்போது, கைது செய்யப்படுபவர், தனது வழக்கறிஞரைப் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். அதே சமயம் விசாரணை நடக்கும்போதெல்லாம் முழு நேரமும் இவ்வாறு சந்திக்க அனுமதிக்கத் தேவையில்லை.

10. கைது செய்ததும், அதைப் பற்றி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அதில் கைத செய்யப்பட்டவர் விவரம், அவர் எங்கே வைத்து விசாரிக்கப்படுவார் போன்ற விவரத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரி, தெரிவிக்க வேண்டும். அங்கே, இந்த விவரங்கள் அனைவரும் அறியுமாறு அறிவிப்புப் பலகையில் காண்பிக்கப்பட வேண்டும்.

கேள்வி 23: CBEC-யில் கைது செய்யப் பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?

பதில்: கைது செய்யப்பட வேண்டுமா என்ற முடிவு பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் எட்டப்படுகிறது. குற்றத்தின் தன்மை, வரி ஏய்ப்பு எந்த அளவுக்கு நடந்திருக்கிறது, வரிக்கடன், தவறான முறையில் எவ்வளவு பெற்றிருகிறார், ஆதாரங்களின் நம்பகத்தன்மை, மற்றும் தரம், ஆதாரங்களை மாற்ற, அழிக்க முடியுமா என்பது பற்றிய புரிதல் இதற்கான சாட்சியை சம்பந்தப்பட்ட நபர், தாக்கம் ஏற்படுத்த முடியுமா? அவர் நடைபெறம் விசாரணைக்கு ஒத்துழைப்பாரா? போன்ற பல அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்து அதன் பின்னர், கைது நடவடிக்கை முடிவு செய்யப்படும். இவை தவிர,

1. குற்றத்தைப் பற்றி முறையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யவும்

2. சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாவதைத் தடுக்கவும்

3. முறைப்படுத்தப்பட்ட வகையில் சரக்குகளைக் கடத்துவது தொடர்பான வழக்குகள், பொருட்களைசரக்குகளை மறைப்பதன் மூலம் சுங்க வரிகளைக் கட்டாமல் இருப்பது,

4. போலியான பெயர்களில், நபர்கள் மூலமாக, பினாமிகள் வழியாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகங்களில் ஈடுபடும் தத்திரதாரிகளின் அல்லது மிக முக்கிய நபர்கள்

5. சாட்சிகளை கலைக்கும், தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளைத் தடுப்பதற்கு.

6. சாட்சியங்களை பயமுறுத்துவது, பிற வழிகளில் கட்டுப்படச் செய்வது மற்றும் ஒரு கோடிக்கு அதிகமான சுங்கவரி அல்லது சேவை வரியைக் கட்டாமல் இருப்பது. போன்ற காரணங்களும், தழ்நிலைகளும், கைது நடவடிக்கை பற்றி தீர்மானிக்கும்.

கேள்வி 24: கைது செய்தலுக்குரிய குற்றம் என்றால் என்ன?

பதில்: பொதுவாக, குற்றவியல் சட்ட விதிமுறைகளின்படி கைது செய்தலுகுரிய குற்றம் என்றால், கடுமையான குற்றங்களைச் சார்ந்த சட்டவிரோதச் செயலாகும். இவ்வாறு குற்றம் செய்த நபரை காவல்துறை அதிகாரி பிடியாணை இல்லாமல் கைது செய்யவும், நீதிமன்ற அனுமதியின்றி விசாரணை தொடங்கவும் அதிகாரம் உண்டு. அதே சமயத்தில் ஜிஎஸ்டி என்பது சிறப்புச்சட்டம் என்பதால், இது போன்ற நடவடிக்கையை இதற்கான அதிகாரம் பெற்ற அதிகாரிகள் தாம் மேற்கொள்ள முடியும்.

கேள்வி 25: கைது செய்யப்படத் தேவையில்லாத குற்றம் என்பது என்ன?

பதில்: கைது நடவடிக்கை தேவையில்லா குற்றம் என்றால், பிடியாணை இல்லாமல், காவல்துறை அதிகாரியால் கைது செய்ய முடியாது. அது போல விசாரணையும் நீதிமன்ற உத்தரவின்றித் துவக்க முடியாது. இதற்கான சிறப்புச் சட்டம் இருக்கம் பட்சத்தில் மட்டும் கைது நடவடிக்கையையும், விசாரணையும் அனுமதியின்றி சாத்தியப்படும்.

கேள்வி 26: CGST சட்டப்படி கைது செய்ய வேண்டிய குற்றம், கைது செய்யத் தேவையில்லாத குற்றம் எவை?

பதில்: CGST/SGST சட்டப்பிரிவு 132-ன் படி வரிவிதிப்புக்கு உள்ளான சரக்குகள், பொருள்கள் அல்லது சேவைகள் ஆகியவற்றில் வரி ஏய்ப்பு அல்லது உள்ளிட்டு வரிக்கடன் தவறாகப் பெற்றது அல்லது திரும்பப் பெறும் தொகை ஆகியன ரூ.5 கோடிக்கும் அதிகமானால் அது கைது செய்யப்பட வேண்டிய, ஜாமீன் பெற முடியாத குற்றம். இதைத்தவிர பிற குற்றங்கள், கைது செய்யத் தேவையில்லாதவை. ஒரு வேளை கைது செய்யப்பட்டாலும், ஜாமீன் வழங்கப்படக் கூடிய குற்றம்.

கேள்வி 27: CGST சட்டத்திபடி துறை அதிகாரி எப்போது குறிப்பிட்ட நபரை, அழைப்பாணை அனுப்பலாம்?

பதில் : CGST/SGST சட்டப்பிரிவு 70-ன்படி இந்தத் துறையில் அதிகாரம் பெற்ற அதிகாரி, குறிப்பிட்ட நபரை தான் விசாரிக்கும் விஷயம், பிரச்சினை, குற்றம் பற்றி சாட்சி சொல்லவோ, குறிப்பிட்ட ஆவணத்தைக் கொண்டு வரும்படியோ அல்லது வேறு எதற்காகவும், அவருக்கு அழைப்பாணை அனுப்பலாம். அந்த நபரிடம் இருக்கும், ஆவணங்கள், குறிப்பிட்ட அடையாளம் மற்றும் விவரம் கொண்ட பொருள் ஆகியவற்றை எடுத்து வருமாறு அழைப்பாணை அனுப்பலாம்.

கேள்வி 28. இவ்வாறு அழைப்பாணை பெற்றவரின் பொறுப்புகள் யாவை?

பதில்: அழைப்பாணை பெற்றவர். அதை ஏற்றுக்கொள்ள் சட்டப்பூர்வமான கடமையுள்ளவராக ஆகிறார். அவரோ அல்லது அவரது ஒப்புதல் பெற்ற பிரதிநிதியோ அழைப்பாணை அனுப்பிய அதிகாரியை சந்தித்தேயாக வேண்டும். அவர் எடுத்து வரச் சொன்ன ஆவணம் அல்லது பொருள் போன்றவற்றை நிச்சயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

கேள்வி 29: அழைப்பாணையை ஏற்க மறுத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?

பதில்: அழைப்பாணை அனுப்பிய அதிகாரியின் முன் நிகழும் செயல்முறைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் முழுவதும் உண்டு. இவ்வாறு அழைப்பாணை பெறப்பட்ட பின்னர், முறையான காரணங்கள் இன்றி, அங்கே செல்லாமல் இருந்துவிட்டால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 177ன் கீழ் அவர் மேல் வழக்குத் தொடர முடியும். அழைப்பாணையைப் பெறாமல் தவிர்த்துவிட்டால், IPC 172இன்படி வழக்குத் தொடரப்படும். அழைப்பாணை ஏற்று வந்து கேட்கப்பட்ட ஆவணங்கள், பொருட்கள், மின்னணுப் பிரிவுகளை கொடுக்காவிட்டால் IPC 175இன்படி வழக்குத் தொடரப்படும். அவர் தவறான சாட்சியம், வேண்டுமென்று மறைத்துப் போன்றவற்றை செய்தால் IPC 193இன்படி வழக்குத் தொடரப்படும். இவை தவிர CGSTSGST அதிகாரியின் அழைப்பாணைப்படி வராவிட்டால் CGST/SGST சட்டம்பிரிவு 122(3)ன் கீழ் ரூ. 25,000 அபராதம் செலுத்த நேரிடும்.

கேள்வி 30: அழைப்பாணை அனுப்புவதற்கான வழிகாட்டு நெறிகள் என்ன?

பதில்: மத்திய கலால் மற்றும் சுங்கவரித் துறை (CBEC) நிதி அமைச்சகத்தின், வருவாய்த்துறை அழைப்பாணைகள் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது எனபதை உறுதி செய்ய, அவ்வப்போது, வழிகாட்டு நெறிமுறைகளைச் சுற்றுக்கு அனுப்புவம். முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு.

1. அழைப்பாணையைக் கடைசி நடவடிக்கையாக மட்டமே இருக்க வேண்டும்.யார் ஒத்துழைக்க மறுக்கிறார்களே அவர்களுக்கு மட்டும்தான் அனுப்ப வேண்டும்.அழைப்பாணையை உயர் நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பக்கூடாது.

2. அழைப்பாணையில் பயன்படும் மொழி கடுமையாகவோ, சட்ட ஷரத்துக்கள் அதிகம் சேர்ந்தோ இருக்கக் கூடாது. இதனால், அதைப் பெறுபவருக்கு மன உளைச்சல், அவமான உணர்வு ஆகியன உண்டாகக் கூடாது.

3. அழைப்பாணையை அனுப்பும் கண்காணிப்பாளர், அதற்கான உத்தரவை துணை ஆணையர் நிலையில் உள்ள அதிகாரியிடம் எழுத்து பூர்வ அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அனுப்புவதற்கான காரணங்களை எழுத்து பூர்வமாக பதிவு செய்ய வேண்டும்.

4.அவ்வாறு எழுத்துப்பு பூர்வ அனுமதி பெற முடியாத சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தொலைபேசி வாயிலா நிலைமையை விளக்கி அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு முடிந்த அளவுக்கு விரைவாக, எழுத்துபூர்வமாக அனுமதி கேட்டு பெற வேண்டும்.

5. அழைப்பாணை அனுப்பப்படும் எல்லா வழக்குகளிலும், அவற்றை அனுப்பும் அதிகாரி, அதைப்பற்றிய அறிக்கைஅல்லது நடவடிக்கை பற்றி சிறு விவரக்குறிப்பை வழக்கு ஆவணத்தில் குறிப்பிட வேண்டும். இதை, அழைப்பாணை வழங்க ஒப்புதல் அளித்த உயரதிகாரியிடம் வழங்க வேண்டும்.

6. மேல்மட்ட நிர்வாக அதிகாரிகளான CEO, CFO பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனத்தின் பொது மேலாளர்கள் ஆகியோருக்கு எடுத்தவுடன் அழைப்பாணை அனுப்பக் கூடாது. வரி வருவாய் நஷ்டமானதற்குக் காரணமாக இருந்த முடிவெடுக்கும் நடை முறைகளில், அவர்களது பங்களிப்பு, தொடர்பு இருக்கிறது என்பது உறுதியான பின்னர்தான், அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும்.

கேள்வி 31: அழைப்பாணை அனுப்புவதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிககை நடவடிக்கைகள் என்ன?

பதில்: யாருக்காவது அழைப்பாணை அனுப்பும் முன்னர், கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாவன:

1. அழைப்பாணையை அனுப்ப நியாயமான காரணங்கள் இருக்க வேண்டியது அவசியமானது. குறிப்பிட்ட நபரைப் பற்றி விசாரணை நடக்கிறது, அவரது இருப்பு மிக அவசியமானது என்பது உறுதியான பின்னர்தான் அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும்.

2. அழைப்பாணை அனுப்பப்பட்டவர் வந்தவுடன், அவரது நேரம் மதிக்கப்பட வேண்டாம். சமய வரையில் விரைவாக அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். அவரைக் காக்க வைப்பது என்பது விசாரணையின் உபாயமாக இருந்தால் காக்க வைப்பதில் தவறில்லை.

4. பொதுவாக அழைப்பாணை ஏற்று வருபவரது வாக்குமூலத்தை, அலுவலக நேரத்திலேயே பதிவு செய்ய வேண்டும். அதே சமயம், வழக்கின் தன்மையால், வாக்குமூலத்தைப் பெறும் நேரமும், இடமும் மாறுவதில் தவறில்ல.

கேள்வி 32. CGST/SGST அதிகாரிகளுக்கு உதவ வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்களா?

பதில்: CGST/SGST சட்டப் பிரிவு 72இன்படி பின்வரும் துறைசார்ந்த அதிகாரிகள், உதவி செய்ய அதிகாரம் பெற்றவர்கள் மட்டுமின்றி, உதவி செய்யக் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது.

அந்தத் துறைகள்:

1. காவல் துறை

2. ரயில்வே துறை

3. சுங்கத் துறை

4. GST வசூல் செய்யும் மாநில யூனியன் பிரதேச மற்றும் மத்திய அரசு அதிகாரிகள்

5. நில ஆயத் தீர்வை வசூலிக்கும் மாநில / யூனியன் பிரதேசம் மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள்

6. அனைத்து கிராம அதிகாரிகள்

7. மாநில / மத்திய அரசுகளால் கோரும் அனைத்துத் துறை அதிகாரிகள்

ஆதாரம் : http://www.cbec.gov.in

3.16666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top