பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இன்புட் வரிக்கடன்

இன்புட் வரிக்கடன் தொடர்பான கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1. இன்புட் வரி என்றால் என்ன?

பதில்: பதிவு பெற்ற ஒருவருக்கு சப்ளை செய்யப்படும் சரக்குகள் அல்லது/மற்றும் சேவைகளின் மீது விதிக்கப்படும் மத்திய வரி (CGST), மாநில வரி (SGST) ஒருங்கிணைந்த வரி (GST) அல்லது யூனியன் பிரதேச வரியே (UTGST) இன்புட் எனப்படும். இதில் தலைகீழ் கட்டண முறையில் செலுத்தப்படும் வரி, ஒருங்கிணப்பு வரிச் சரக்கு இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் மீதான சேவை வரி ஆகியவை அடங்கும். தொகுப்பு வரியில் செலுத்தப்பட்ட வரி இதில்  அடங்காது.

கேள்வி 2. தலைகீழ் கட்டண முறையில் செலுத்தப்படும் GST இன்புட் வரியாகக் கருதப்படுமா?

பதில்: ஆம். இன்புட் வரி பற்றி  வரையறுக்கும்போது தலைகீழ் கட்டணமாகச்  செலுத்தப்பட்ட வரியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

கேள்வி 3. இன்புட் வரியில் இன்புட் சரக்குகள், இன்புட் சேவைகள் மற்றும் கேபிடல் சரக்குகளின் மீது செலுத்திய வரி (cGST/IGST/SGST) அடங்குமா?

பதில்: ஆம்; இதில் இன்புட் சரக்குகள், இன்புட் சேவைகள் மற்றும் கேபிடல் சரக்குகளின் மீது செலுத்திய வரி அடங்கும். கேபிடல் சரக்குகளின் மீது செலுத்தப்பட்ட வரிக்கடனை ஒரே தவணையில் செலுத்த அனுமதி உண்டு.

கேள்வி 4.  சரக்குகள்/சேவைகள் சப்ளைக்காக செலுத்தப்படும் அனைத்து இன்புட் வரிக்கான கடனும் GST-யில் அனுமதிக்கப்படுகிறதா?

பதில்: சரக்குகள் அல்லது/மற்றும் சேவைகள் மீது சுமத்தப்படும் இன்புட் வரி மீதான கடனை எடுத்துக் கொள்ள பதிவு செய்த ஒருவருக்கு உரிமை உண்டு சில நிபந்தனைகள்/கட்டுப்பாடுகளின் பேரில் தொழில் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தப்படும் (அ) அதற்கெனப் பயன்படுத்தும் நோக்கம் வெளிப்படும்.

கேள்வி 5.  ITC பெறுவதற்குத் தேவையான நிபந்தனைகள் என்னென்ன?

பதில்: ITC பெறுவதற்குப் பதிவுபெற்ற வரி செலுத்தும் நபர் பின்வரும் நான்கு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்: (அ) வரி விலைப்பட்டி

(அ) கடன் விவரம் (அல்லது) வேறு ஏதாவது வரி செலுத்திய ஆவணங்கள் (குறிப்பிடப்பட்டுள்ளது போல்) அவரிடம் இருக்க வேண்டும்;

(ஆ) சரக்குகள் அல்லது/மற்றும் சேவைகளை அவர் பெற்றிருக்க வேண்டும்;

(இ) அரசுக்கு சப்ளை செய்த சரக்கின் மீதான வரியை சப்ளையர் செலுத்தி இருக்க வேண்டும்;

(ஈ) பிரிவு 39-ன் கீழ் ரிடர்ன்களை அவர் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

கேள்வி 6. விலைப்பட்டிக்கு எதிரான சரக்குகள் மொத்தமாக அல்லது தவணைகளில் பெறப்பட்டால் பதிவுபெற்ற நபர் ITC பெற எவ்வாறு தகுதி பெறுவார்?

பதில்: கடைசி தவணை சரக்கு வந்த பின்புதான் பதிவு செய்த நபர் கடன் பெறும் தகுதி பெறுவார்.

கேள்வி 7.  இன்புட் வரிக்கடனை சப்ளைக்கான வரியை சப்ளையருக்குச் செலுத்தாமல் யாராலாவது பெற முடியுமா?

பதில்: ஆம், அவர் ITC-ஐப் பெறலாம்; ஆனால் விலைப்பட்டி வெளியிடப்பட்ட 180 நாட்களுக்குள் மீதத்தை வரியுடன் அவர் செலுத்தியாக வேண்டும். தலைகீழ் கட்டண அடிப்படையில் வரி செலுத்தப்படும்போது இந்நிபந்தனை பொருந்தாது.

கேள்வி 8.  விலைப்பட்டி வெளியிடப்பட்ட 180 நாட்களுக்குள் மீதத்தை வரியுடன் அவர் செலுத்தாமல் TC-ஐ பெற்றுக்கொண்டால் என்ன நிகழும்?

பதில்: ITC தொகை அந்நபரின் அவுட்புட் வரி மீதத்துடன் சேர்க்கப்பட்டு விடும். அத்துடன் வட்டியையும் அவர் செலுத்தியாக வேண்டும். ஆயினும், மீதத்தை வரியுடன் செலுத்திய பின் அவர் TC-ஐப் பெற்றுக் கொள்ளலாம்.

கேள்வி 9. வரி செலுத்தும் நபரைத் தவிர வேறொருவருக்கு சரக்குகள் டெலிவரி செய்யப்பட்டால் ITC யாருக்குக் கிடைக்கும்?

பதில்: வரி செலுத்தும் நபர் கேட்டுக் கொண்டதன் பேரில் வேறொருவருக்கு சரக்குகள் டெலிவரி செய்யப்பட்டாலும் பதிவு செய்துள்ள நபர் பெற்றதாகவே பொருள் கொள்ளப்படும். எனவே, யாருடைய கோரிக்கையின் பேரில் 3-வது  பார்ட்டிக்கு சரக்கு டெலிவரி செய்யப்பட்டதோ அவருக்கே ITC கிடைக்கும்.

கேள்வி 10. ITC-ஐப் பெற்றுக் கொள்ள இருக்கும் கால அளவு என்ன; அதற்கான காரணங்கள் யாவை?

பதில்: சரக்குகள்/சேவைகளை சப்ளை செய்ததற்கான விலைப்பட்டி (அ) கடன் குறிப்பிற்கெதிராக பிரிவு 39-ன் கீழ் அதற்கான தேதி முடிந்த பின் ரிடர்னை நிதியாண்டு முடிந்த பின் வரும் செப்டம்பரில் சமர்ப்பித்தாலும் (கடன் குறிப்புடன் தொடர்புடைய விலைப்பட்டி இருந்தாலும்) பதிவு செய்த நபரால் TC-ஐப் பெறமுடியாது; எனவே, அடுத்த நிதியாண்டின் அக்டோபர் 20 அல்லது வருடாந்திர ரிடர்னை சமர்ப்பிக்கும் தேதி (இரண்டில் எது முன் வருகிறதோ) ITC-ஐப் பெற இறுதிநாள் ஆகும்.

இக்கட்டுப்பாட்டுக்குப் பின்னணியில் இருக்கும் கட்டுப்பாடு என்னவென்றால் சமர்ப்பிக்கப்பட்ட ரிடர்னை அடுத்த நிதியாண்டு செப்டம்பருக்குப் பின் மாற்ற முடியாது. வருடாந்தர ரிடர்னை செப்டம்பருக்கு முன் சமர்ப்பித்திருந்தால், அவ்வாறு சமர்ப்பித்த பின் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

கேள்வி 11. பதிவு செய்த வரி செலுத்தும் நபர் கேபிடல் சரக்குகளின் செலவுக்கான வரி அம்சத்தைத் தேய்மானமாக வருமான வரிச்சட்டம் 1961-ன் கீழ் காட்டினால், அப்போது அவருக்கு ITC கிடைக்குமா?

பதில்: தேய்மானம் காட்டப்படும் மேற்சொன்ன வரி அம்சத்துக்கு இன்புட் கடன்   வசதி தரப்பட மாட்டாது.

கேள்வி 12. வரி செலுத்தும் சரக்கு அல்லதுமற்றும் சேவை சப்ளைக்காகப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு இன்புட் மீதும் GST-யின் கீழ் வரிக்கடன் செலுத்தியாக வேண்டுமா?

பதில்: ஆம்; ஆனால் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறு விலக்கப்பட்டியலில் உள்ள பொருட்களைத் தவிர, அனைத்துப் பொருட்களுக்கும் கடன் வசதி உண்டு. அந்தரங்கப் பயன்பாடு தொடர்புடைய பல பொருட்கள் பட்டியலில் உள்ளன; அவற்றின் இன்புட் பயன்பாடு (ஆலை, இயந்திரம் தவிர), தகவல் தொடர்பு கோபுரங்கள், தொழிற்சாலைகளுக்கு வெளியே அதையொட்டிச் செல்லும் பைப்லைன்கள் போன்ற புதிய அசையா சொத்தை உருவாக்க உதவுகிறது. வரி ஏய்ப்பில் பிடிபட்டு பின்னர் செலுத்தப்பட்ட வரிகளும் இதில் அடங்கும்.

கேள்வி 13. தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கும் வரி செலுத்தும் ஒரு நபர் நிர்வாக இயக்குநர்களின் பயன்பாட்டுக்காக மோட்டார் வாகனம் வாங்குகிறார். அவ்வாகனம் வாங்கும்போது GST-க்குப் பதிலாக TC-யைச் செலுத்த முடியுமா?

பதில்: முடியாது. பயணிகள் பயணிக்கும்/சரக்குகள் பரிமாறும் (அ) மோட்டார் வாகனப் பயிற்சி தரும் போக்குவரத்துத் துறையில் இருந்தால் மட்டுமே ஒருவரால் மோட்டார் வாகனத்தின் மீது ITC-ஐப் பெற முடியும்.

கேள்வி 14. சில  சமயம் பல்வேறு காரணங்களால் சரக்குகள் அழிந்து, தொலைந்து விடுகின்றன. அவ்வாறு நிகழ்ந்தால் அச்சரக்குகளின் மீது ITC கிடைக்குமா?

பதில்: கிடைக்காது; தொலைந்த, திருடப்பட்ட அழிந்து போன அல்லது தள்ளுபடியான சரக்குகளின் மீது ஒருவருக்கு ITC கிடைக்காது. கூடுதலாக, பரிசாக   (அ) இலவச சாம்பிளாகத் தரப்படும் சரக்குகளுக்கும் TC கிடைக்காது.

கேள்வி 15. பதிவு செய்துள்ள நபர் தொழில் நடத்தச் செய்யும் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்படும் சரக்குகள்சேவைகள் மீது ITC கிடைக்குமா?

பதில்: அசையாச் சொத்துக்களைக் கட்டுவதற்கு (ஆலை, இயந்திரம் தவிர) ITC கிடைக்காது. ஆலைஇயந்திரம் ஆகியவை பூமியுடன் அல்லது கட்டமைப்புடன் பொருத்தப்பட்ட கருவிகள்/உபகரணங்கள் (அ) இயந்திரங்கள் மட்டும் இதில்   அடங்கும். இவற்றில் நிலமும் கட்டிடமும் அடங்காது.

கேள்வி 16.   ITCல் புதிதாகப் பதிவு செய்ய ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

பதில்: பதிவுக்கு விண்ணப்பிக்கும் நபர் ஸ்டாக், இன்புட் வடிவத்தில் பாதி/முழுதும் முடிந்த நிலையில் இருக்கும் ஸ்டாக்குகள் மீது இன்புட் வரிக்கடனைப் பெறலாம்; இவ்விண்ணப்பம் பதிவு கிடைக்கப் பெறும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே தரப்பட வேண்டும். பதிவு பெறும் நபர் அந்தக் குறிப்பிட்ட நாளிலிருந்து 30 நாட்கள் வரை பதிவுக்கு விண்ணப்பித்திருந்தால், ஸ்டாக்இன்புட் முடிந்த/முடியாத நிலையில் இருக்கும் சரக்குகளின் வடிவில் வைத்திருக்கும் இன்புட் வரிக்கடனைப் பதிவு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே பெற்றுக் கொள்ளலாம்.

கேள்வி 17. ஒரு நபர் 01 ஆகஸ்டு, 2017 அன்று வரி செலுத்தியாக வேண்டும்; அவர் பதிவை 15 ஆகஸ்ட் 2017 அன்று பெற்றிருந்தால் அவர் ஸ்டாக் வடிவில் இருக்கும் இன்புட் வரிக்கடனைப் பெறத் தகுதியானவராக ஆவார்:

(அ) 01 ஆகஸ்டு, 2017 முதல்

(ஆ) 31 ஜூலை, 2017 முதல்

(இ) 15 ஆகஸ்டு, 2017 முதல்

(ஈ) கடந்த காலத்தின் அடிப்படையில் அவர் கடன் பெற முடியாது

பதில்: 31 ஜூலை 2017 முதல்

கேள்வி 18. தானகவே விருப்பத்துடன் முன்வந்து பதிவு செய்யும் நபரின் ஸ்டாக்கில் இருக்கும் இன்புட்டுகள் மீதான இன்புட் வரிக்கடனுக்கு என்ன தகுதி தேவை?

பதில்: தானாகவே முன்வந்து பதிவு செய்யும் நபரின் ஸ்டாக்கில் இருக்கும் இன்புட்டுகள் மீதும் பாதி முடிக்கப்பட்டமுடிக்கப்பட்ட சரக்குகளுக்கும் பதிவு செய்வதற்கு முந்தைய தினம் இன்புட் வரிக்கடனுக்குத்  தகுதியுள்ளவர்தான்.

கேள்வி 19. பதிவு செய்த நபரின் கட்டமைப்பில் ஏதாவ்து மாற்றமிருந்தால் அப்போது இன்புட் வரித் தகுதி எப்படி நிர்ணயிக்கப்படும்?

பதில்: இழப்பை இடமாற்றம் செய்ய சிறப்பு வசதி இருக்கும் பட்சத்தில் பதிவு செய்த நபரால் தன் மின்னணு கடன் லெட்ஜரில் மீதமிருக்கும் இன்புட் வரிக்கடனைப் புதிய கணக்குக்கு மாற்ற முடியும்.

கேள்வி 20. வரி கட்டும் நபர் சரக்குகள் அல்லதுமற்றும் சேவைகளை வரிகட்டும், வரிகட்டாத சப்ளைக்காகப் பெறும்போது பதிவு பெற்ற வரிகட்டும் நபருக்கு இன்புட் வரிக்கடன் கிடைக்குமா?

பதில்: வரி இருக்கும் சப்ளைகளுக்கான சரக்கு அல்லது/மற்றும் சேவைக்கான இன்புட் வரிக்கடன் பதிவு செய்த நபருக்குக் கிடைக்கும். அவருக்குரிய கடன் வசதி விதிமுறைப்படி கணக்கிட்டு முடிவு செய்யப்படும்.

கேள்வி 21. வரி இருக்கும் சப்ளைகளுக்கான சரக்கு அல்லது  மற்றும் சேவைகளுக்கு மட்டும் இன்புட் கடன் வசதி தரப்பட்டால், ஏற்றுமதி செய்யப்படும் சப்ளைகள் மீது விலக்கு தரப்பட்டு அதனால் பெரும் இன்புட் கடன் வசதி இழப்பு ஏற்படாதா?

பதில்: இன்புட் கடன் வசதியை அனுமதிக்க ஜீரோ தர சப்ளைகள் வரி இருக்கும் சப்ளைகளுக்குள் வரும்படி அமைக்கப்பட்டுள்ளன. ஜீரோ தர சப்ளையின் வீச்சு பற்றிய விவரம் ஒருங்கிணந்த GST சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சப்ளைகளின் விவரங்களுடன் சேர்த்துத் தரப்பட்டுள்ளது.

கேள்வி 22. கடன் வசதியைப் பெற வரி இருக்கும் சப்ளைகளுக்கான கணக்கிடுதலில் பின்வரும் எவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்?

(அ) ஜிரோதர சப்ளைகள்

(ஆ) விலக்கு சப்ளைகள்

(இ) இரண்டும்

பதில்: ஜிரோதர சப்ளைகள்

கேள்வி 23. பதிவு பெற்ற ஒரு நபரால் பெறப்படும் சரக்குகள்சேவைகள் ஒரு பகுதி தொழிலுக்காகவும் மீதம் வேறு நோக்கத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டால், அந்நபருக்கு இன்புட் வரிக் கடன் கிடைக்குமா?

பதில்: பதிவு செய்த நபர் சரக்கு அல்லது/மற்றும் சேவையின் இன்புட் வரிக் கடனைப் பெறத் தகுதியானவர். அவருக்குரிய கடன் வசதி விதிமுறைப்படி கணக்கிட்டு முடிவு செய்யப்படும்.

கேள்வி 24. தொகுப்பு வரியல்லாத நிலையில் வரி செலுத்தும் ஒரு நபர் ஆரம்பகால நிலையைத் தாண்டி இயல்பான வரிசெலுத்தும் நபராகிறார். அவருக்கு ITC கிடைக்குமா, அப்படியானால் எந்தத் தேதியிலிருந்து கிடைக்கும்?

பதில்: அவருக்கு ஸ்டாக்கில் இருக்கும் இன்புட்டுகள்/பாதி முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட இன்புட்டுகள் மற்றும் கேபிடல் சரக்குகளின் அடிப்படையில் (பரிந்துரைக்கப்பட்ட சதவீதப் புள்ளிகளால் குறைக்கப்பட்ட) தொகுப்பு வரிக்கு அவர் தகுதி இழக்கும் தேதிக்கு ஒரு நாள் முன்பு வரை ITC வசதி கிடைக்கும். அவருக்குரிய கடன் வசதி விதிமுறைப்படி கணக்கிட்டு முடிவு செய்யப்படும்.

கேள்வி 25. வங்கிகளுக்கு ஏதேனும் சிறப்பான பிரிவுகள் இருக்கின்றனவா?

பதில்: வங்கி அல்லது குறிப்பிட்ட சிறப்பான சேவைகளை சப்ளை செய்யும் வங்கியில்லாத நிதி நிறுவனத்திற்கு விகிதாசார கடன் வசதி அல்லது அதன் தகுதிக்கேற்ற இன்புட் வரிக்கடனில் 50% கிடைக்கும்.

கேள்வி 26. பதிவு செய்த திரு 'அ' தொகுப்பு வரியை 30.07.2017 வரை செலுத்திவந்தார். ஆனால் 1.07.2017 முதல் முறையான திட்டத்தில் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு வந்து விட்டார். அவருக்கு ITC கிடைக்குமா?

பதில்: திரு 'அ' ஸ்டாக்கிலுள்ள இன்புட்டுக்ளின் இன்புட் வரிக்கடனுக்கும் பாதி முடிக்கப்பட்டமுடிக்கப்பட்ட சரக்குகளுக்கும் கேபிடல் சரக்குகளின் அடிப்படையில் (பரிந்துரைக்கப்பட்ட சதவீதப் புள்ளிகளால் குறைக்கப்பட்ட) தொகுப்பு வரிக்கும் 30.07.2017 அன்று முழுத் தகுதியுள்ளவராவார்

கேள்வி 27. திரு ‘ஆ’ தாமாகவே முன்வந்து விண்ணப்பப் படிவத்தை 05.06.2017 அன்று பூர்த்தி செய்து பதிவை 2206.2017 அன்று பெற்றுவிடுகிறார். திரு ‘ஆ’ ஸ்டாக்கிலிருக்கும் இன்புட் வரிக்கடனைப் பெற _ அன்று தகுதி பெறுவார்.

பதில்: திரு ‘ஆ’ ஸ்டாக்கிலிருக்கும் இன்புட்டுகள் மீதும் பாதி முடித்தமுத்த இன்புட்டுகளின் மீதுமான வரிக்கடனைப் பெற 21.06.2017 முதல் தகுதி பெற்றாவராவார். ஆனால் கேபிடல் சரக்குகளின் மீதான இன்புட் வரிக்கடன் அவருக்குக் கிடைக்காது.

கேள்வி 28. பதிவு செய்துள்ள ஒருவரால் சப்ளை செய்யப்படும் சரக்குள் மற்றும்/அல்லது சேவைகள் விலக்குப் பெற்றவையாக இருந்து அவர் தொகுப்புவரித் திட்டத்தை நாடினால் இன்புட் வரிக்கடன் என்ன ஆகும்?

பதில்: பதிவு செய்தவர் தான் விருப்பம் தெரிவிக்கும் நாளுக்கு முந்தைய நாள் தன்னிடமிருக்கும் ஸ்டாக்குகளின் அடைபடையில் (அ) விலக்கு பெறும் நாளுக்கு முந்தைய நாள் அடிப்படையில் இன்புட் வரிக்கடனுக்கு நிகரான தொகையைச் செலுத்த வேண்டும். கேபிடல் சரக்குகளைப் பொறுத்தவரை செலுத்த வேண்டிய தொகை சதவீதப் புள்ளியைக் கழித்துக் கணக்கிடப்படும். கடன் லெட்ஜரின் கணிசமான தொகை மீதமிருந்தால் மின்னணு கடன் லெட்ஜரிலிருந்தும்/கேஷ் லெட்ஜரிலிருந்தும் தொகையைப் பிடித்தம் செய்து கொள்ளலாம். கிரெடிட் லெட்ஜரில் இருக்கும் மீதித்தொகை காலாவதியாகிவிடும்.

கேள்வி 29. ITC-ஐப் பெற ஏதாவது குறிப்பிட்ட கால அளவு இருக்கிறதா?

பதில்: புதிய பதிவைப் பொறுத்தவரை தொகுப்பு வரியிலிருந்து சாதாரண திட்டத்துக்கு மாறினால் - விலக்கு பெற்றதிலிருந்து வரி செலுத்தும் சப்ளைக்கு மாறினால், சம்பந்தப்பட்ட நபர் அந்த சப்ளைக்கான வரி விலைப்பட்டி வெளியான   தேதியிலிருந்து ஓராண்டு முடிந்த பின்தான் ITC-ஐப் பெற முடியும்.

கேள்வி 30. பெறுபவர் சமர்ப்பிக்கும் உட்புற சப்ளை விவரங்கள் சப்ளையர் சமர்ப்பிக்கும் ரிடர்னில் உள்ள வெளிப்புற சப்ளை விவரங்களுடன் ஒத்துப்போகாத பட்சத்தில் என்ன ஆகும்?

பதில்: அவ்வாறு நிகழ்ந்தால் இரு பார்ட்டிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். ஒத்துப்போகாத பிரச்சினை சரிசெய்யப்படாவிட்டால், அவ்வாறு பிரசினை தெரிவக்கப்பட்ட மாதத்தின் அடுத்த மாதம் அவர் சமர்ப்பிக்கும் ரிடர்னில்   பெறுபவர் கணக்கில் அதற்கான தொகை சேர்க்கப்பட்டுவிடும்.

கேள்வி 31. ஒத்துப்போனபின் இன்புட் கடன் வசதி தரப்படுமா?

பதில்: மாட்டாது. இன்புட் கடன் வசதி தற்காலிகமாக 2 மாதங்களுக்குத்தான் தரப்படும். சப்ளை விவரங்களைக் கட்டமைப்பே சோதித்து குறைபாடுகள் பற்றி சப்ளையருக்கும் பெறுபவருக்கும் தெரிவித்துவிடும். குறைபாடுகள் அதன் பின்னும்  தொடர்ந்தால், தரப்பட்ட ITC தானாகவே திரும்பப் பெறப்படும்.

கேள்வி 32. தற்காலிகமாகத் தரப்பட்ட TC-ஐ எல்லாக் கடனையும் அடைக்கப் பயன்படுத்தலாமா?

பதில்: கூடாது. சமர்ப்பிக்கப்படும் ரிடர்னில் சுய மதிப்பீடு செய்யப்பட்ட அவுட்புட்   வரியைச் செலுத்த மட்டுமே தற்காலிக TC-யைப் பயன்படுத்தலாம்.

கேள்வி 33. ITC பெறப்பட்ட கேபிடல் சரக்குகள் வரிசெலுத்தும் நபரால் சப்ளை செய்யப்படும்போது வரியின் தாக்கம் எப்படி இருக்கும்?

பதில்: இன்புட் கடன் வசதி கேபிடல் சரக்குகள் அல்லது ஆலைஇயந்திரம் மீது பெறப்பட்டால் பதிவு செய்தவர் கேபிடல் சரக்குகள் (அ) ஆலைஇயந்திரம் மீதான இன்புட் கடன் வசதிக்கு நிகரான சதவீதப் புள்ளி அடைப்படையில் குறைக்கப்பட்ட தொகையையோ அல்லது கேபிடல் சரக்குகள் பரிமாற்றத்தின் மீதான வரியையோ  எது அதிகமோ அதை செலுத்துவார்.

கேள்வி 34. கேபிடல் சரக்குகள் மீது ITC பெற்ற பதிவு செய்தவர் கேபிடல் சரக்குகளை சப்ளை செய்தால் வரியின் தாக்கம் என்னவாக இருக்கும்?

பதில்: பதிவு செய்தவர் TC-க்கு நிகரான சதவீதப் புள்ளி அடைப்படையில் குறைக்கப்பட்ட தொகையையோ அல்லது கேபிடல் சரக்குகள் பரிமாற்றத்தின் மீதான வரியையோ (எது அதிகமோ அதை) செலுத்துவார்; ஆனால் பலன் தராத செங்கற்கள், மோல்டுகள்சாயங்கள், கருவிகள்/உபகரணங்களைப் பொறுத்தவரை, அவை ஸ்கிராப்பாக சப்ளை செய்யப்பட்டால் அந்நபர் பரிமாற்ற மதிப்பிற்கான வரியைச் செலுத்த வேண்டும்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top