பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கோரிக்கைகள் மற்றும் மீட்பு

கோரிக்கைகள் மற்றும் மீட்பு குறித்து அடிக்கடி கேடக்ப்படும் கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1: குறைவாக செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்படாத வரி அல்லது தவறாக திருப்பி கொடுக்கப்பட்ட தொகை அல்லது கொள்முதல் வரிக்கான கடனை தவறாகப் பெற்றது அல்லது பயன்படுத்திக்கொண்டது தொடர்பான நடவடிக்கைகளுக்கான சட்டப் பிரிவுகள் எவை?

பதில்: மோசடியில் ஈடுபடுதல், தகவல்களை மறைத்து வைத்தல், தவறான அறிக்கை கொடுத்தல் ஆகியவற்றுக்கு இடமளிக்காதபட்சத்தில் சட்டப் பிரிவு 73இன்படி நடவடிக்கை எடுக்கலாம்.

மோசடியில் ஈடுபடுதல், தகவல்களை மறைத்து வைத்தல், தவறான அறிக்கை கொடுத்தல் ஆகிய குற்றங்களை ஈடுபட்டிருக்கும்பட்சத்தில் சட்டப் பிரிவு 74இன்படி நடவடிக்கை எடுக்கலாம்.

கேள்வி 2: வரிவிதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர், சட்டப் பிரிவு 73இன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுவதற்கு முன்னரே வட்டியுடன் சேர்த்து பணம் செலுத்தியிருந்தால் என்ன நடக்கும்?

பதில்: இந்த மாதிரியான சூழலில் உரிய அதிகாரி நோட்டீஸ் அனுப்ப மாட்டார். சட்டப் பிரிவு 73 உட்பிரிவு 6.

கேள்வி 3: சட்டப் பிரிவு 73இன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதன் பிறகு இந்த நோட்டீசைப் பெற்றவர் உரிய வட்டியுடன் பணம் செலுத்தி இருந்தால், இது தொடர்பாக, தீர்ப்பு வழங்க வேண்டிய தேவை உள்ளதா?

பதில்: நோட்டீஸ் அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் வட்டியுடன் சேர்த்து வரி செலுத்தியிருந்தால், எந்த அபராதமும் கட்ட வேண்டியதில்லை மேலும் அந்த நோட்டீஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிட்டன என்று கருதப்படும். (சட்டப் பிரிவு 73 உட்பிரிவு 8)

கேள்வி 4: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கான உரிய தேதி எது?

பதில்: (1) சட்டப் பிரிவு 73-ஐப் பயன்படுத்தக்கூடிய நிலையில், (மோசடி, உண்மைகளை மறைத்தல், வேண்டுமென்றே தவறான வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடாத தழலில்), சம்பந்தப்பட்ட நிதியாண்டுக்கான வருடாந்திர வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கெடு தேதியிலிருந்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கான தேதி கணக்கிடப்படும்.

விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தொடர்பான தீர்ப்பு வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்வதற்கான கெடு தேதியிலிருந்து மூன்று வருட காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும். தீர்ப்பு வழங்குவதற்கான கால வரையறைக்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். (சட்டப் பிரிவு 73 உட்பிரிவு 2 & 10)

(i) சட்டப் பிரிவு 74-ஐ பயன்படுத்தக்கூடிய நிலையில், (மோசடி, உண்மைகளை மறைத்தல், வேண்டுமென்றே தவறான வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தழலில்), சம்பந்தப்பட்ட நிதியாண்டுக்கான வருடாந்திர வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கெடு தேதியிலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கான தேதி கணக்கிடப்படும். விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தொடர்பான தீர்ப்பு, வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்வதற்கான கெடு தேதியிலிருந்து ஐந்து வருட காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும். தீர்ப்பு வழங்குவதற்கான கால வரையறைக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்னதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். (சட்டப் பிரிவு 74 உட்பிரிவு 2 & 10)

கேள்வி 5: தீர்ப்பு வழங்குவதற்கு ஏதாவது கால வரையறை உள்ளதா?

பதில்: (1) சட்டப் பிரிவு 73-ஐ பயன்படுத்தக்கூடிய நிலையில், (மோசடி, உண்மைகளை மறைத்தல், வேண்டுமென்றே தவறான வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தல் ஆகியவற்றுக்கு இடம்கொடுக்காத தழலில்), தீர்ப்பு வழங்குவதற்கான கால வரையறை, சம்பந்தப்பட்ட நிதியாண்டுக்கான வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான கெடு தேதியிலிருந்து அல்லது தவறாக LI600Iլի திருப்பி அளிக்கப்பட்ட தேதியிலிருந்துகொள்முதல் வரிக்கான கடனை தவறாகப் பயன்படுத்திக்கொண்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் ஆகும். (சட்டப் பிரிவு 73; உட்பிரிவு 10)

(2) சட்டப் பிரிவு 74-ஐப் பயன்படுத்தக்கூடிய நிலையில், (மோசடி, உண்மைகளை மறைத்தல், வேண்டுமென்றே தவறான வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தழலில்), தீர்ப்பு வழங்குவதற்கான கால வரையறை, சம்பந்தப்பட்ட நிதியாண்டுக்கான வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான கெடு தேதியிலிருந்து அல்லது தவறாகப் பணம் திருப்பி அளிக்கப்பட்ட தேதியிலிருந்துகொள்முதல் வரிக்கான கடனை தவறாகப் பயன்படுத்திக்கொண்ட தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் ஆகும். (சட்டப் பிரிவு 74, உட்பிரிவு 10)

கேள்வி 6: வரிவிதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர், மோசடி, உண்மைகளை மறைத்தல், வேண்டுமென்றே தவறான வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தழலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாக உரிய வட்டியுடன் பணம் செலுத்தியிருந்தால் அவருக்கு ஏதாவது விலக்கு அளிக்கப்படுமா?

பதில்: அளிக்கப்படும். வரி விதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர், தான் செலுத்த வேண்டிய தொகையை வட்டி மற்றும் தானாகவே அல்லது உரிய அதிகாரியால் தீர்மானிக்கப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரித் தொகையின் 15% அபராதத் தொகையையும் சேர்த்துக் கட்டலாம் என்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு தொகை செலுத்தப்பட்ட பிறகு அவ்வாறு செலுத்தப்பட்ட வரி தொடர்பாக எந்த நோட்டீசும் வழங்கப்பட மாட்டாது. (சட்டப் பிரிவு 74 உட்பிரிவு 6).

கேள்வி 7: சட்டப் பிரிவு 74இன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதன் பிறகு இந்த நோட்டீசைப் பெற்றவர் உரிய வட்டியுடன் பணம் செலுத்தி இருந்தால், இது தொடர்பாக, தீர்ப்பு வழங்க வேண்டிய தேவை உள்ளதா?

பதில்: சட்டப் பிரிவு 74இன் உட்பிரிவு 1இன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் வட்டியுடன் சேர்த்து அந்த வரித் தொகையின் 25% சமமான அபராதத் தொகையுடன் வரி செலுத்தியிருந்தால், அந்த நோட்டீஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிட்டன என்று கருதப்படும். (சட்டப் பிரிவு 73 உட்பிரிவு 8)

கேள்வி 8: சட்டப் பிரிவு 74இன்படி நோட்டீஸ் தொடர்பான வழங்கப்பட்ட தீர்ப்பில் வரித்தொகை மற்றும் அபராதம் உறுதிசெய்யப்பட்டால், நோட்டீஸ் பெற்றவருக்கு அபராதம் குறைக்கப்படுவதற்கான ஏதாவது வாய்ப்பு உள்ளதா?

பதில்: உள்ளது. உத்தரவில் தீர்மானிக்கப்பட்ட வரித் தொகையை, வட்டி மற்றும் அத்தகைய வரித் தொகையின் 50% சமமான அபராதத் தொகையுடன் சேர்த்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அந்த நபர் செலுத்திவிட்டால், அந்த நோட்டீஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிட்டன என்று கருதப்படும். (சட்டப் பிரிவு 74 உட்பிரிவு 11)

கேள்வி 9: சட்டப் பிரிவுகள் 73 மற்றும் 74-ல் நோட்டீஸ் வழங்கப்பட்டு, தீர்ப்புக்காக குறிப்பிட்டுள்ள நேரப்படி உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றால் என்ன ஆகும்?

பதில்: இந்த சட்டப் பிரிவுகளின்படி குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றால், சட்டப் பிரிவு 75இன் உட்பிரிவு 10ன்படி தீர்ப்பு நடவடிக்கைகள் முடிந்துவிட்டன என்று கருதப்படும்.

கேள்வி 10: ஒரு நபர் வேறொரு நபரிடமிருந்து வரி வதலிக்கிறார். ஆனால், வதலித்த தொகையை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்: இந்தச் சட்டத்தின்படி வரியாக வதலிக்கப்பட்ட தொகை அரசுக்குக் கட்டாயமாக செலுத்தப்பட வேண்டும். இத்தகைய தொகை செலுத்தப்படாமல் இருந்தால் உரிய அதிகாரி, அந்தத் தொகையை அவரிடமிருந்து பெறவும் அதே தொகைக்கு சமமான அபராதத் தொகைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் (எஸ்.சி.என்.) அனுப்புவார். (சட்டப் பிரிவு 74 உட்பிரிவு 1 மற்றும் 2)

கேள்வி 11: சட்டப் பிரிவு 76இன் உட்பிரிவை மீறும்வகையில் வதலிக்கப்பட்டத் தொகை டெபாசிட் செய்யப்படவில்லை என்றால், எடுக்கப்பட வேண்டிய உரிய நடவடிக்கை என்ன?

பதில்: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும், அவ்வாறு அனுப்பப்பட்டால், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஓராண்டுக்குள் இயற்கை நிதி கோட்பாட்டைப் பின்பற்றி உத்தரவு பிறப்பிக்கப்படும். (சட்டப் பிரிவு 74 உட்பிரிவு 2 முதல் 6 வரை)

கேள்வி 12: சட்டப்பிரிவு 76இன்படி, வரி வதலிக்கப்பட்டுள்ளது ஆனால், அரசுக்கு செலுத்தப்படவில்லை என்ற நிலையில் நோட்டீஸ் அனுப்புவதற்கான கால வரையறை என்ன?

பதில்: இதற்கு எந்தக் கால வரையறையும் இல்லை. இப்படிப்பட்ட விஷயம் நடைபெற்றது கண்டறியப்பட்ட உடன் எந்த கால வரையறையும் இல்லாமல் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.

கேள்வி 13: வரித்தொகையைப் பெறுவதற்காக உரிய அதிகாரியிடம் உள்ள வழிமுறைகள் என்னென்ன?

பதில்: வர வேண்டிய பாக்கியைப் பின்வரும் முறையில் உரிய அதிகாரி திரும்பிப் பெறுவார்:

(அ) அத்தகைய நபருக்குத் தருவதற்காக, வரி அதிகாரிகள் பிடித்தம் செய்து வைத்திருக்கும் தொகையிலிருந்து இந்த நிலிவைத் தொகை பிடித்துக்கொள்ளப்படும்.

ஆ) அப்படிப்பட்ட நபருக்குச் சொந்தமான பொருள்களை நிறுத்திவைத்துக்கொள்தல் அல்லது விற்பனைசெய்தல் மூலமாக திரும்பிப் பெறுதல்;

(இ) யாரிடமிருந்து நிலுவைத் தொகை வர வேண்டியுள்ளதோ அல்லது இனிமேல் நிலுவையாக இருக்குமோ அந்த நபர் அல்லது யார் பணத்தை வைத்திருக்கிறாரோ அவரிடமிருந்து, அவருக்கான பணத்தை அல்லது கணக்கை வைத்திருப்பவருப்பவர் மூலம் மத்திய அல்லது மாநில அரசுக்கு உரிய கடன் தொகையைப் பெற்றுத்தர வேண்டும்.

(ஈ) இப்படிப்பட்ட நபருக்குச் சொந்தமான அசையும் அல்லது அசையா சொத்துகளை அந்தத் தொகை திரும்பச் செலுத்தப்படும்வரை நிறுத்தி வைத்துக்கொள்ளுதல். 30 நாட்களுக்குள் நிலுவைத் தொகை திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், இந்தச் சொத்துகள் விற்கப்படும். இந்த விற்பனை நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவு மற்றும் அவர் செலுத்த வேண்டிய தொகை இந்த விற்பனை மூலம் திரும்பப் பெறப்படும்.

(உ) இத்தகைய நபர் சொந்தமாக சொத்து வைத்திருக்கும் அல்லது குடியிருக்கும் அல்லது வியாபாரம் நடத்தும் இடத்தின் மாவட்ட ஆட்சியாளர் மூலமாக, இந்தத் தொகை நில வருமான நிலுவை போல.

(ஊ) உரிய மாஜிடிரேட்டுக்கு விண்ணப்பிப்பதன் மூலம், அவர் தான் விதித்த அபராதம் போலவே இதைக் கருதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுப்பார்.

(எ) இந்தச் சட்டத்தின்படி சி.ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை எஸ். ஜி.எஸ்.டி நிலுவையைப் போல திரும்பப் பெற முடியும், அதே போல எஸ். ஜி.எஸ்டி நிலுவை தொகையை ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை போல திரும்பப் பெற முடியும். (சட்டப் பிரிவு 79 உட்பிரிவு 1,2,3,4)

கேள்வி 14: செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கியைத் தவணைகளில் செலுத்தலாமா?

பதில்: இத்தகைய கோரிக்கை பார்வைக்கு வரும்போது, பணம் செலுத்துவதற்கான கால அளவை நீட்டிப்பதும் குறிப்பிட்ட நபரால் சுய மதிப்பீடு செய்யப்பட்டு ரிடர்னில் காட்டப்பட்டுள்ள இழப்பிற்கெதிரான தொகையை சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 24 மாதத் தவணைகளில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்த அனுமதிப்பதும் (பிரிவு 50இன் கீழுள்ள வரையறைகள் / நிபந்தனைகளுக்கேற்ப கணக்கிடப்பட்ட வட்டியுடன் சேர்த்து) ஆணையாளர் (அ) முதன்மை ஆணையாளரின் விருப்பமாகும். ஆயினும், குறிப்பிட்ட தேதி வரை ஏதாவது ஒரு தவணைத் தொகையைச் செலுத்த முடியாமல் போனாலும் அத்தேதியில் இன்னும் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையும் முன்னறிவிப்பு ஏதுமின்றி பிடித்தம் செய்யப்பட்டு விடும். (பிரிவு 80).

கேள்வி 15: உறுதி செய்யப்பட்ட வரித் தொகை மேல் முறையீட்டில் / ரிவிஷன் நடவடிக்கைகளில் அதிகமானால் அதை வதலிப்பதற்கான நடைமுறை என்ன?

பதில்: டிமாண்டுக்கான நோட்டீஸ் நிலுவையில் உள்ள தொகைக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகை ஏற்கெனவே மேல்முறையீடு ரிவிஷன் பைசல் செய்யப்படுவதற்கு முன்பாகவே உறுதிசெய்யப்பட்டு விடுவதால், பணம் திரும்பப்பெறும் நடவடிக்கைகள் அந்த மேல்முறையீடுரிவிஷன் பைசல் செய்யப்படுவதற்கு முன்பாக தொடரலாம். (சட்டப் பிரிவு 84 (அ)

கேள்வி 16: வரி விதிப்புக்கு உள்ளாகும் ஒரு நபர், வரி பாக்கியுடன் அவரது தொழிலை இன்னொருவருக்கு மாற்றிக்கொடுத்தால், வரி பாக்கியின் நிலவரம் என்ன?

பதில்: இந்த நிலுவைத் தொகை இத்தகைய மாற்றத்திற்கு முன்பாகத் தீர்மானிக்கப்பட்டு செலுத்தப்படாமல் இருக்கறதா அல்லது மாற்றத்திற்குப் பிறகு தீர்மானிக்கப்பட்டதாக இருந்தாலும், யாருக்கு அந்தத் தொழில் மாற்றப்பட்டுள்ளதோ அந்த நபருக்கு, கூட்டாகவும் தனியாகவும் வரியைச் செலுத்தும் பொறுப்பு உள்ளது, வரி, வட்டி அல்லது அபராத நிலுவையை வரி செலுத்த வேண்டிய நபர் தனது தொழிலை மற்றவருக்கு மாற்றிக்கொடுக்கும் வரையிலான காலத்திற்குச் செலுத்த வேண்டும். (சட்டப் பிரிவு 85இன் உட்பிரிவு 1)

கேள்வி 17: நிறுவனம் (வரி விதிக்கப்பட வேண்டிய நபர்) திவாலாகிவிட்டால், வரி நிலுவை என்னவாகும்?

பதில்: ஏதாவது 69 (5 நிறுவனம் மூடப்படும்போது, சொத்துக்களை பராமரிப்பதற்காக நியமிக்கப்படும் அதிகாரியான ரிசீவர் (லிக்விடேட்டர்) தனது நியமனம் குறித்து ஆணையருக்கு 30 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றதும் ஆணையர் செலுத்தப்பட வேண்டிய வரிநிலுவைத் தொகை எவ்வளவு என்பதை லிக்விடேட்டருக்கு மூன்று மாதங்களுக்குள் அறிவிக்கக்கூடும். (சட்டப் பிரிவு 88இன் உட்பிரிவு 1,2)

கேள்வி 18: திவாலாகும்போது, நிறுவனத்தின் (வரி விதிக்கப்பட வேண்டிய நபர்) இயக்குநர்களுக்கு உள்ள பொறுப்பு என்ன?

பதில்: எந்த தனியார் நிறுவனமும் மூடப்படும்போது ஏதாவது வரியோ அல்லது வேறு நிலுவைகளே நிறுவனம் திவாலாவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ முடிவு செய்யப்பட்டு, அவை வசூலிக்கப்படாமல் இருந்தால், வரி செலுத்தப்படாத காலத்தில் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ஒவ்வொரு நபருக்கும் கூட்டாகவோ அல்லது தனியாகவோ நிலுவையை செலுத்தும் பொறுப்பு உள்ளது. ஆனால், நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் இருந்ததற்கு, கம்பெனி நடவடிக்கைகளில் எந்த விதமான கவனக் குறைவோ, கடமை தவறிய செயலோ அல்லது தங்கள் தரப்பில் இல்லை என்பதை ஆணையருக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நிரூபித்தால், இந்த நிலுவையைச் செலுத்த வேண்டியதில்லை.

கேள்வி 19: செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கியைச் செலுத்துவதில் பார்ட்னர்ஷிப் (partnership) நிறுவனத்தின் வரி செலுத்தும் பார்ட்னர்களது இழப்பு என்னவாக இருக்கும்?

பதில்: எந்த ஒரு கூட்டணி நிறுவனத்தின் கூட்டாளிகளாக (partners) இருந்தாலும் வரிபாக்கி, வட்டி (அ) அபராதத் தொகையைச் அனைவரும் சேர்ந்தே செலுத்தியாக வேண்டும்.

ஏதாவது ஒரு கூட்டாளியும் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது அது குறித்து ஆணையாளருக்கு ஒரு அறிவிக்கை மூலம் தெரிவிக்க வேண்டியது நிறுவனம் (அ) கூட்டாளிகளின் கடமை ஆகும்.

பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒரு கூட்டாளி aந்தத் தேதி வரை கட்டப்பட வேண்டிய வரிபாக்கி, வட்டி (அ) அபராதத் தொகையைச் (ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டாலோ அல்லது பிறகு நிர்ணயிக்கப்பட்டாலோ) செலுத்தக் கடமைப்பட்டவராவார்.

பணி ஓய்வு பெற்று ஒரு மாதத்துக்குள் இதுகுறித்த விவரம் எதுவும் அவருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றால், ஆணையாளருக்கு இவ்விவரங்கள் தெரிவிக்கப்படும்வரை அத்தொகையை அவர் செலுத்தக் கடமைப்பட்டவர் என்று அர்த்தம். (பிரிவு 90).

கேள்வி 20: ஒருவரின் தொழிலைக் காப்பாளர் (guardan) அல்லது டிரஸ்டீ அல்லது அவர் மைனராக இருக்கும் பட்சத்தில் வேறொரு முகவர் (agent) எடுத்து நடத்தினால் செலுத்த வேண்டிய வரி எப்படி செலுத்தப்படும்?

பதில்: வரி பாக்கி இருக்கும் தொழிலை எடுத்து நடத்தும் காப்பாளர் (அ) டிரஸ்டீ (அ) மைனரின் முகவர் அல்லது இயங்க முடியாத நிலையில் இருக்கும் ஒருவரின் சார்பில் தொழில் புரிபவர் வரிஅபராதத் தொகையைச் செலுத்தக் கடமைப்பட்டவராவார்; செலுத்தாவிட்டால் அத்தொகையானது அவரிடமிருந்து மீட்கப்பட்டாக வேண்டும். (பிரிவு 91)

கேள்வி 21: தொழில் புரியும் ஒருவரின் தொழில் வளாகம் நீதிமன்றக் கட்டுப்பாட்டில் இருந்தால் என்ன ஆகும்?

பதில்: வரி பாக்கிவட்டிஅபராதம் செலுத்த வேண்டிய, தொழில் புரிபவரின் தொழில் வளாகம் நீதிமன்றம்நிர்வாக அலுவலர் / அதிகாரபூர்வ டிரஸ்டீ நீதிமன்ற ஆணையால் நியமிக்கப்பட்ட மேலாளரின் கட்டுப்பாட்டில் இருந்தால், இயல்பாக வரி செலுத்தும் ஒருவருக்கு நிர்ணயிக்கப்படுவது போல் அவரிடமிருந்து வரிவட்டி/அபராதம் வசூலிக்கப்படும். (பிரிவு 92).

ஆதாரம் : http://www.cbec.gov.in

Filed under:
2.63636363636
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top