பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குற்றங்கள், அபராதங்கள், வழக்கு மற்றும் காம்பெளண்டிங்

குற்றங்கள், அபராதங்கள், வழக்கு மற்றும் காம்பெளண்டிங் சார்ந்த கேள்வி பதில்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

கேள்வி 1: CGST/SGST சட்டப்படி எவையெல்லாம் குற்றங்கள் என்று கருதப்படும்?

பதில்: CGSTSGST சட்டப்படி இத்துறை தொடர்பான குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் அத்தியாமம் XX இல் காணப்படுகிறது. இதில் சட்டப் பிரிவு 122-ன் படி 21 வகையான குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.இதைத் தவிர சட்டப் பிரிவு 10-இன்படி வரிவிதிப்பிற்கு உட்பட்ட நபர், அவருக்கு உரிமையில்லாத கூடுதல் சலுகை பெற்றால் அதுவும் குற்றம்தான். குற்றங்களின் பட்டியல் வருமாறு:

1. முறையான விற்பனை விலை விவரச் சீட்டு இல்லாமல் / தவறான விற்பனை விலை விவரச் சீட்டின் அடிப்படையில் பொருள் வழங்கல்.

2. பொருட்களை வழங்காமல் விற்பனை விவரச் சீட்டு அளிப்பது

3. வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட வரியை மூன்று மாதங்களுக்கு மேலாக துறையில் செலுத்தாமல் இருப்பது

4. CGST/SGST சட்டத்தை மீறி திரட்டிய வரியை, மூன்று மாதங்களுக்கு மேல் செலுத்தாமல் இருப்பது.

5. செலவின ஆரம்ப நிலையில் வரி பிடித்தம் செய்யாது இருத்தல், அல்லது குறைவாக வரிப் பிடித்தம் செய்தல் அல்லது சட்டப் பிரிவு 51ன் படி பிடித்த வரித்தொகையை, துறைக்குச் செலுத்தாது இருத்தல்.

6. சட்டப் பிரிவு 52-இன்படி பிடித்தம் செய்ய வேண்டிய வரியைப் பிடித்தம் செய்யாமல் இருப்பது, குறைவாகப் பிடித்தம் செய்வது மற்றும் பிடித்தம் செய்த தொகையை துறையில் செலுத்தாமல் இருப்பது.

7. உண்மையிலேயே சரக்குகளைப் பெறாமலும், அல்லது சேவையைப்

பெறாமலும், உள்ளிட்டு வரிக் கடனைப் பெறுவது அல்லது பயன்படுத்துவது.

8. மோசடியான முறையில் கூடுதல் தொகை என்று பெறுவது

9. உள்ளிட்டு வரிக்கடனை பெறுவதுஅதை உள்ளிட்டு சேவை விநியோகஸ்தர் மூலம் செய்வது. இது, சட்டப் பிரிவு 20க்கு எதிரானது.

10. வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்துடன், தவறானத் தகவல்கள் தருவது,

பொய்யான நிதிநிலை ஆவணங்களைத் தயார் செய்வது.

11. வரி செலுத்த வேண்டியவராக இருந்தாலும், அதற்கான பதிவை செய்யாமல் இருப்பது.

12. பதிவு செய்யும்போது, அதற்கான விண்ணப்ப நிலையில் தவறான தகவல்களைத் தருவது. அல்லது அதற்கு அடுத்துவரும் பதிவின்போது இவ்வாறு செய்வது.

13 வரித்துறை அதிகாரி தனது கடமையை செய்யவிடாமல் தடுப்பது

14 தேவையான ஆவணங்கள் இன்றி சரக்குப் போக்குவரத்து மேற்கொள்வது.

15. ஒட்டுமொத்த வருவாயைக் குறைத்துச் சொல்வது, மறைப்பது, அதன் மூலம் வரி செலுத்துவதைத் தவிர்ப்பது.

16. சட்டத்தில் உள்ளபடி கணக்கை பராமரிக்காமல் இருப்பதுஆவணங்களை முறையாக உருவாக்காதது/சட்டத்தில் கண்டுள்ளபடியான காலகட்டத்தில், கணக்கை, ஆவணங்களை வைத்திருக்காமல் எடுப்பது.

17 வரித் துறை தொடர்பான நடவடிக்கைகளின் போது, சம்பந்தப்பட்ட அதிகாரி கேட்கும் தகவல்கள் ஆவணங்கள் போன்றவற்றை தவறான தகவல்கள் / ஆவணங்களைத் தருவது.

18. பறிமுதல் செய்யப்படக் கூடிய சரக்குகளை, சேமித்து வைப்பது / வழங்குவது / வாகனங்கள் மூலம் கொண்டுசெல்வது.

19. மற்றொரு நபருடைய GSTIN எண்ணைப் பயன்படுத்தி விற்பனை விலை விவரச்சீட்டு அல்லது ஆவணங்களை அளிப்பது,

20. பொருள் சார்ந்த ஆதாரங்களைச் சேதப்படுத்துவது/மாற்றுவது/அழிப்பது.

21. தடுத்து நிறுத்தப்பட்ட பறிமுதலானசட்டத்தின்படி நிறுத்தி வைக்கப்பட்ட சரக்குகளை சேதப்படுத்துவது / விற்றுவிடுவது

கேள்வி 2: அபராதம் என்ற பதத்தின் பொருள் என்ன?

பதில்: CGST/SGST சட்டத்தில் அபராதம் என்ற சொல் விளக்கப்படவில்லை. ஆனால் தீர்ப்புகள், அறிவிப்புகள் ஆகியன மூலம் அபராதம் என்பதற்கான விளக்கம் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளளது.

1. குறிப்பிட்ட குற்றத்தை செய்வதற்காக தாற்காலிக தண்டனை வழங்கப்படல் அல்லது,

2. சட்டத்தின்படி குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படல்

3. ஒப்பந்தப்படி குறிப்பிட்ட பணியை செய்யாததற்காக விதிக்கப்படும் சட்டபூர்வமான அபராதம்.

கேள்வி 3: அபராதங்கள் விதிக்கப்படுமபோது கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான கட்டுப்பாட்டு நெறிகள் எவை?

பதில்: அபராதம் விதிப்பது அரசு சார்ந்த சில கட்டுப்பாடு நெறியறைகளுடன்தான் இருக்க வேண்டும். இது நீதிமன்ற ஆணைகள்/கருத்துக்கள், இயற்கை நீதிக் கோட்பாடுகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் ஒப்பந்தங்களை ஆளுமை செய்யும் கோட்பாடுகள், போன்றவை அடங்கும், இவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டம் 126 பிரிவில் காணப்படும் அம்சங்களாவன:

1.யாருக்கு எதிராக குற்றச்சாட்டகள் எழுந்துள்ளதோ, அவருக்கு அதற்கான விளக்கக் காரணம் கோரி நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு முறையாக விசாரணை நடத்தி, அதன் மூலம் அவருக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுப்பதற்கு முன்பு அபாராதம் எதையும் விதிக்கக் கூடாது.

2.அபராதத் தொகை, வழக்கின் தழ்நிலைகள், மற்றும் உண்மைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

3.மீறப்பட்ட விதிமுறைகள், சட்டப் பிரிவுகளை மீதியிருக்கும் தன்மை, அளவு, நிலை ஆகியவற்றைப் பொறுத்து அபராதம் முடிவு செய்யப்படும்.

4.அபராதத் தொகையை அறிவிக்கும் உத்தரவில், எந்தச் சட்டத்தை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப்படும்.

எந்தச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படுகிறது என்பதம் அவருக்கத் தெரிவிக்கப்பட வேண்டும்.

சட்டப் பிரிவு 126, இதைப் பற்றி இன்னும் தெளிவாக விளக்கியுள்ளது. குறிப்பாக எதற்கெல்லாம் மிக அதிகமான அபராம் விதிக்கப்படாது என்பது தெரிவிக்கப்பட்டள்ளது. அவையாவன:

1. குறைவான சட்ட மீறல் (அதாவது ரூ.5000-க்கும் குறைவாக வரி ஏய்ப்புப் பிரச்சினை) இருநதால், அல்லது

2. சட்டபூர்வமான தேவை அல்லது

3. சரிசெய்யப்படக் கூடிய தவறு. ஆவணங்களில் விவரம் விடுபட்டுப் போகுதல் (இதை வெளிப்படையாகத் தெரியும் தவறு என்று சட்டம் கூறுகிறது) இவற்றை மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யாமல் கவனப் பிசகால் நடப்பது.

4. அதுவுமின்றி CGST/SGST சட்டத்தில் குறிப்பிட்ட விதி மீறல்களுக்கு, குறிப்பிட்ட அபராதம் என்றிருப்பது அப்படியே பின்பற்றப்படும்.

கேள்வி 4: CGST/SGST சட்டத்தில் குறிப்பிடப்பட்ட அபராதத் தொகையின் அளவு என்ன?

பதில்: சட்டப் பிரிவு 122(1)-ல் 122 சட்டப் பிரிவின்படி தவறுகுற்றம் செய்தால், பின்ரும் தொகைகளை விட அதிகமான அபராதத் தொகை இருக்கும்.

கட்டாமல் தவிர்த்த வரித்தொகைமோசடியான வழிகளில் பெறப்பட்ட கூடுதல் தொகை/வரிக்கடனாகப் பெற்ற தொகைபிடித்தம் செய்யாத வசூலிக்காத குறைவாகப் பிடித்தம் செய்த/குறைவாக வசூலிக்ககப்பட்ட தொகை அல்லது ரூ. 10,000. இதைத் தவிர, சட்டப் பிரிவு 122(2) இன்படி வரி செலுத்துபவர் என்று பதிவுசெய்யப்பட்ட நபர் வரி செலுத்தாமல் போனால், அல்லது குறைவாக வரி செலத்தினால் அல்லது வழங்கலுக்கான வரியில், குறைவாகச் செலுத்துவது ஆகியனவற்றில் அபராதத் தொகை பின்வரும் நிலையிலிருந்து அதிகமாக இருக்கும்.

வரி செலுத்தாமல் விட்ட அல்லது குறைவாகச் செலுத்தியதில் 10% ரூ. 10,000/-

கேள்வி 5: வரி விதிப்புக்குள்ளான நபரைத் தவிர மற்றவர்களுக்கு அபராதத் தொகை குறிப்பிடப்பட்டுள்ளதா?

பதில்: ஆமாம்! சட்டப் பிரிவு 122(3)இன்படி ரூ. 25,000/-திற்கும் மேலாக அபராதம் விதிக்கப்படும் நபர், முன் குறிப்பிட்ட 21 குற்றங்களுக்குத் தூண்டிவிடுதல் மற்றும் துணை போவது. பறிமுதல் செய்யப்படக் கூடிய சரக்குகளைபொருட்கள் சார்ந்து எந்த விதத்திலாவது (பெறுவது, வழங்குவது, சேமித்து வைப்பது அல்லது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்க மாற்றுவது) தொடர்பு வைத்திருத்தல் சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் சேவைகளை வழங்குவது அல்லது அதில் தொடர்பு இருப்பது அழைப்பாணை வந்தும் அதை அலட்சியம் செய்து, ஆஜராகாமல் இருப்பது தனது கணக்குப் பராமரிப்பில் விற்பனை, விலைச் சீட்டு வழங்காமல் இருத்தல் அல்லது அவ்வாறு வழங்கப்பட்டதை கணக்கில் காட்டாமல் இருப்பது.

கேள்வி 6: CGST/SGST சட்டத்தில் தனியாகக் காணப்படாத விதிமீறல்களுக்கு என்ன அபராதம் விதிக்கப்படும்?

பதில்: CGST/SGST சட்டப்பிதிவு 125-ன் படி இச்சட்டத்தை மீறுகிற நபர்களுக்கு குறிப்பிட்ட அபராதத் தொகை எதுவும் குறிப்பிடப்படாவிட்டாலும், விதிமீறல் என்பது நிரூபணம் ஆனால் அவருக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

கேள்வி 7: செல்லத்தக்க ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் செல்லப்படும் சரக்குகள் அல்லது முறையான பதிவேடுகளில் குறிக்காமல் கொண்டு செல்ல முயற்சித்ததற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

பதில்: சட்டப்படி (விலை விவரச் சீட்டு மற்றும் (அல்லது) பொறுப்பேற்று அறிக்கை) ஆகியன இல்லாமல் யாராவது எந்த சரக்கையாவது எடுத்துச் சென்றாலோ, அல்லது பயணத்தின்போது, எந்த ஆவணமோ, கணக்கோ இல்லாமல், இடைச் சேகரம் செய்தாலோ அந்த வகையான சரக்குகள் அவை கொண்டு செல்லப்படும் வாகனத்தோடு தடுத்து நிறுத்தப்பட்டு துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

சரக்கு வாகனங்களின் உரியைமையாளர் முன்வருதல்: இது போன்ற சரக்குகள், அவற்றுக்கென விதிக்கப்படும் வரியையும், அதைப்போல 100% அபராதமாகவும் கட்டிவிட்டு அல்லது அதற்க இணையாக, காப்புப் பத்திரங்களைக் கொடுத்தால், அந்தச் சரக்கு வாகனம் ஆகியன விடுவிக்கப்படும் விலக்கு அளிக்கப்பட்ட சரக்குகள் பொருட்கள் என்றால் அவற்றின் மதிப்பில் 2% அல்லது ரூ.25000 ஆகியவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை அபராதமாக வதலிக்கப்படும். உரிமையளர் முன்வராதபோது: இது போன்ற சரக்குகள் அவற்றின் மதிப்பில் 50% மற்றும் அதற்கான வரி ஆகியனவற்றை அல்லது அவற்றுக்கு இணைப்பான காப்பீடு பத்திரங்களை அளித்தால் மட்டுமே, சரக்குகள் விடுவிக்கப்படும். விலக்கு அளிக்கப்பட்ட சரக்குகள் என்றால் சரக்கின் மதிப்பில் 5% அல்லது ரூ.25,000 (எது குறைவோ அது) அபராதம் செலுத்திய பின் சரக்கு விடுவிக்கப்படும்.

கேள்வி 8: தொகுப்பு வரித் திட்டத்தில் (Composition) அதற்கான தகுதியின்றி சேரும் நபருக்கு என்ன அபராதம்?

பதில்: சட்டப் பிரிவு 10(5)இன்படி எந்த ஒரு நபரும், தொகுப்பு வரித் திட்டத்தில் சேரத் தகுதியில்லாமல், அந்த சலுகையை அனுபவிக்க முயற்சித்தால்,அவர் சாதாரணமாக செலுத்த வேண்டிய வரித் தொகை, அதைத் தவிர இதே தொகைக்கு சமமான அபராதம் ஆகியவற்றை அவர் செலுத்த வேண்டும்.

கேள்வி 9: கையகப்படுத்தல் என்றால் என்ன?

பதில்: கையகப்படுத்துதல் என்ற வார்த்தைக்கு சட்டத்தில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. இந்தக் கருத்தியல் ரோம் நாட்டுச் சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஒருவருடைய பொருள் சக்ரவர்த்தியால் கையகப்படுத்தப்பட்டு, அது ராஜ்யத்தின் கருவூலத்தில் சேர்க்கப்படும். கையகப்படுத்தல் என்ற வார்த்தைக்கு ஐயர் அவர்களின் சட்ட அகராதியில் இதற்கான பொருள், தனி நபருக்கு சொந்தமான சொத்துக்களை அபராதத்தின் மூலமாக கருவூலத்தில் சேர்ப்பது, அதை அரசாங்க உரிமையாகக் கொள்வது சுருக்கமாக சொல்வதென்றால் சரக்கின் உரிமையை அரசாங்கத்திற்கு மாற்றுவதுதான்.

கேள்வி 10: CGST/SGST சட்டப்படி எந்த தழ்நிலைகளின்போது சரக்குகளைக் கையகப்படுத்தலாம்?

பதில்: CGST/SGST சட்டம் 130-இன்படி யாராவது ஒருவர் பின்வரும் செயல்களில் ஈடுபட்டால், அவரது சரக்குகள் கையகப்படுத்தப்படும்.

இத்துறையில் எந்த ஒரு சட்டத்திற்குப் புறம்பாக, எதிராக, சரக்குகளை வழங்கல், பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றை செய்வது இதனால் அதற்கான வரியை செலுத்தாமல் இருப்பது (அல்லது)

சட்டத்தின்படி சரக்குகள் பற்றி விவரக்கணக்கு பராமரிக்காமல் இருப்பது, (அல்லது) பதிவுக்காக விண்ணப்பிக்காமல் இருந்து, அதே சமயம் வரிவிதிப்புக்கு உள்ளன பொருட்களை/சரக்குகளை வழங்குவது (அல்லது)

CGST/SGST சட்டத்திலுள்ள விதிமுறைகளுக்கு எதிராக குறிப்பிட்ட சரக்குகளை அதற்கான வாகனங்களில் முறையாக எடுத்துப் போகாமல், பிற வாகனங்களில் எடுத்துச் செல்வது (இதனுடன் கூட வாகனத்தின் உரிமையாளருக்குத் தெரியாமல் எடுத்துச்சென்றால்) (அல்லது)

சட்டத்தின்படி செலுத்த வேண்டிய வரியைக் கட்டாமல் தவிர்க்கும் நோக்கத்தில் செயல்படுவது ஆகியன சந்தர்ப்பங்கள் செயல்பாடுகள் இருந்தால் அந்தப் பொருள் / சரக்கு / வாகனம் கையகப்படுத்தப்படும்.

கேள்வி 11: முறையான அதிகாரம் பெற்ற அதிகாரியால் கையகப்படுத்தப்பட்ட சரக்குகளின் நிலை என்ன?

பதில்: கையகப்படுத்தப்பட்ட சரக்குகளின் உரிமைகள், அரசாங்கத்திடம் இருக்கும். வரித்துறை அதிகாரியின் வேண்டுகோளிஇன்படி, எந்த ஒரு காவல்துறை அதிகாரியும், அந்த சரக்கை அரசாங்கத்தின் உரிமைப்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ள உதவுவார்.

கேள்வி 12: கையகப்படுத்திய பிறகு சம்பந்தப்பட்ட நபர் அதை மீட்டுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுவது அவசியமா?

பதில்: ஆம். சட்டப் பிரிவு 130(2)-இன்படி அந்த பொருள்/சரக்கிற்கு உரிமையாளர் அல்லது பொறுப்பாளர் ஆகியோர் அந்தப் பொருட்களின் மதிப்பு அளவிற்கு அபராதம் செலுத்தி மீட்டுச் செல்லலாம் என்ற தெரிவு அளிக்கப்பட வேண்டும். இந்தத் தொகையுடன் அந்த சரக்கிற்கு செலுத்தப்பட வேண்டிய வரித்தொகை மற்ற கட்டணங்கள் ஆகியவற்றையும் சேர்த்து அபராதமாகச் செலுத்த வேண்டும்.

கேள்வி 13: முறையான ஆவணங்கள் இன்றி சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களைக் கையகப்படுத்த முடியுமா?

பதில்: ஆம். முறையான ஆவணங்கள், அறிவிக்கைகள், ஆதாரங்கள் ஏதுமின்றி இருக்கும் சரக்குகளை எடுத்துச் செல்ல வாகனமும் கையகப்படுத்த சட்டப் பிரிவு 130-இன்படி வரித்துறைக்கு உரிமையுண்டு. அதே சமயத்தில் இது போலநடப்பது தனக்கோ, அல்லது தன்னால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிக்கோ தெரியாமல், வாகனம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அவர் நிரூபித்தால் வாகனம் கையகப்படுத்தப்படாது.

கேள்வி 14: குற்ற வழக்குத் தொடர்தல் என்றால் என்ன?

பதில்: குற்ற வழக்குத் தொடர்தல் என்றால், சட்ட நடவடிக்கைகளைத் துவங்குவதல், குற்றம் புரிந்தவர்க்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளை சட்டபூர்வமாக வெளிப்படுத்தல், குற்றவியல் நடைமுறை விதிமுறைகள் பிரிவு 198-இன்படி, குற்ற வழக்குத் தெடர்தல் என்றால், குறிப்பிட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் துவங்குதல் என்ற விவரிக்கிறது.

கேள்வி 15: CGST/SGST சட்டத்தின்படி எந்தெந்த குற்றங்களுக்காக வழக்குத் தொடரலாம்?

பதில்: CGST/SGST சட்டப் பிரிவு 132-ன் படி 12 வகையான குற்றங்கள், வழக்குத் தெடர வேண்டிய அளவுக்கு பெரிய குற்றங்கள் என்று விதிமுறைகள் கூறுகின்றன. அவையாவன:

1. பொருள் விற்பனை விவர விலை சீட்டு இல்லாமல் பொருள் வழங்கல், அல்லது போலியானதவறான விற்பனை விலை விவரச் சீட்டுக்கு பொருள் வழங்கல்.

2. பொருள் வழங்கல் இல்லாமல் விற்பனை விலை விவர சீட்டு தருவது

3. வசூலித்த வரியை 3 மாதங்களுக்கு மேல் கட்டாமல் இருப்பது

4. உண்மையில் சரக்குகளைப் பெறாமல்/சேவைகளைப் பெறாமல் உள்ளிட்டு வரிக்கடன் வசதியைப் பெறுவது அல்லது பயன்படுத்துவது. 5. மோசடியான முறையில் கூடுதல் வரியைத் திரும்பப் பெறுதல்

6. வரி ஏய்ப்பு, மோசடியான முறையில் ITC-ஐப் பெறுவது அல்லது 1 லிருந்து 5 வரை குறிப்பிட்டுள்ள குற்ற அம்சங்கள் தவிர வேறு முறையில் கூடுதல் தொகையைப் பெறுவது

7. வரி கட்டாமல் இருக்க தவறான தகவல் வேண்டுமென்றே போலியாக தயாரிக்கப்பட்ட நிதி நிலை ஆவணங்கள்போலியான கணக்கு விவரங்கள் வரி ஏற்ப்பதற்கென்ற உருவாக்கப்பட்ட ஆவணங்கள்

8. வரித் துறை அதிகாரியைத் தனது கடமையை செய்ய விடாது தடுத்தல்/மறித்தல்

9. பறிமுதல் செய்யப்படக் கூடிய சரக்குகளைக் கையாளுதல், அதாவது அவற்றைப் பெறுவது, வழங்குவது, சேர்த்து வைப்பது மற்றும் இடம மாற வாகனங்கள் மூலம் உதவுவது

10. சட்டத்திற்குப் புறம்பாக சேவைகளைப் பெறுவது/அந்தச் சேவைகளை வழங்குவதில் தொடர்பிருப்பது

11. சாட்சி/ஆதாரமாக இருக்கக்கூடிய பொருள்களை அழிப்பது அல்லது சேதப்படுத்துவது

12. சட்டத்தின்படி துறைக்கு தெரியப்படுத்த வேண்டிய தகவலை அளிக்காமல் மறைப்பதுதவறான தகவலைத் தருவது

13. மேற்குறிப்பிட்ட குற்றங்களை நேரடியாக செய்வது அல்லது செய்வதற்குத் துணை போவது, தூண்டுவது.

கேள்வி 16: CGST/SGST சட்டப்படி எவையெல்லாம் உடனடியாக கைது செய்யப்பட வேண்டிய குற்றங்கள், உடனடியாக கைது செய்யத் தேவையில்லாத குற்றங்கள்?

பதில்: CGST/SGST சட்டப் பிரிவு 1324) மற்றும் 1324)-இன்படி, ரூ.5 கோடிகளுக்குக் குறைவாக வரி ஏய்ப்பு செய்தால் அது உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டிய குற்றம் அல்ல. அப்படியே கைது செய்தாலும், ஜாமீன் பெறக்கூடியது ரூ.5 கோடிகளுக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யும் அனைத்து விதமான குற்றங்களும், உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டியவை. இதற்கு ஜாமீன் கிடையாது.

கேள்வி 17: வழக்குத் தொடரும் முன்பாக, அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதி பெறுவது அவசியமா?

பதில்: ஆமாம். இதற்காகவே அதிகாரம் பெற்றிருக்கும், தகுந்த அதிகாரியும், அனுமதி பெற்ற பின்னர்தான் வழக்குத் தொடரும் பணி துவக்கப்பட வேண்டும்.

கேள்வி 18: CGST/SGST சட்டத்தின்படி,அதன் சட்டத்தில் மென்ஸ்ரியா என்று குறிப்பிடப்படும் குற்றம் செய்யும் மனநிலை அல்லது குற்றம்புரிவதற்கான நோக்கம் இருந்தால்தான் வழக்குத் தொடரலாம் என்று இருக்கிறதா?

பதில்: ஆமாம். அதே நேரத்தில் சட்டப் பிரிவு 135 கருதுவது என்னவென்றால், குற்றம் செய்யும் மனநிலை இல்லாவிட்டால், அந்தக் குற்றத்தைச் செய்ய முடியாது என்பதுதான்.

கேள்வி 19: குற்றம் புரியும் மனநிலை என்றால் என்ன?

பதில்: குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது குற்றம் செய்யும் மனநிலை' என்பது குறிப்பிட்ட மனநிலையில் இருப்பது. உதாரணமாக, செய்யும் செயல் வேண்டுமென்று நோக்கத்தோடு செய்யப்படுகிறது.

அந்தச் செயலும், அதன் விளைவுகளும், புரிந்துகொள்ளப்படுவது மற்றும் கட்டுப்படுத்துவது. செயலைச் செய்பவர், யாருடைய வலியுறுத்தலும் இன்றிச் செய்வது மட்டுமின்றி, அந்த செயலைச் செய்வதற்கான தடைகளை முறியடித்து, நினைத்ததைச் செய்வது. தான் செய்யும் செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்பது தெரிந்திருப்பது அல்லது தெரிந்திருக்கக் காரணங்கள் இருப்பது.

கேள்வி 20: CGST/SGST சட்டத்தின்படி நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர முடியுமா?

பதில்: ஆம். CGST/SGST சட்டப் பிரிவு 137-இன்படி யார் ஒருவர், குறிப்பிட்ட நிறுவனத்தின் தொழில் நடக்கும் விதத்திற்குப் பொறுப்பாக இருக்கிறாரோ, அவர் தாம் அந்த நிறுவனம் செய்த தவறு குற்றத்திற்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும். ஏனென்றால், நிறுவனம் ஏதாவது தவறு செய்திருந்தால், அது - அவரது ஒப்புதல் அல்லது ஒத்துழைப்புடன்தான் நடந்திருக்கும் அல்லது அவரது அலட்சியம்தான் காரணம் என்றால், அதுவும் ஒரு குற்றமாகவே கருதப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான தண்டனை வழங்கப்படும்.

கேள்வி 21: குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுதல் என்றால் என்ன?

பதில்: இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 320-ல் ‘கண்டுகொள்ளாமல் விட்டுவிடுதல் என்பது வெறெந்தக் காரணத்துக்காகவோ (அ) பிரத்தியேகக் காரணத்தினாலோ குற்றம் புரிபவரைத் தண்டிக்காமல் விட்டு விடுவதைக் குறிக்கிறது.

கேள்வி 22: CGST/SGST சட்டத்தின் கீழ் குற்றம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடப்படலாமா?

பதில்: ஆம். CGST/SGST சட்டப் பிரிவு 138-ன் கீழ் பின்வருபவை தவிர மீதமுள்ள குற்றங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை செலுத்தப்பட்டபின் கண்டுகொள்ளாமல் விட்டுவிடப்படுதல் நீதிமன்ற நடவடிக்கைக்கு முன்பு அல்லது பின்பு அனுமதிக்கப்படுகிறது:

* பெருங் குற்றங்களான 12இல் (கேள்வி 16-ல் சொல்லப்பட்டவை) 1 முதல் 6 வரையுள்ள குற்றங்கள் (குற்றம் சாட்டப்பட்டவர் மேற்சொன்ன குற்றங்கள் ஏதாவது ஒன்றிற்காக முன்பே இவ்வாறு விடப்பட்டிருந்தால்"); இருக்கும் 12 பெருங்குற்றங்களில் 1 முதல் 6 வரையுள்ள குற்றங்கள் நிகழ உதவுதல் (குற்றம் சாட்டப்பட்டவர் மேற்சொன்ன குற்றங்கள் ஏதாவது ஒன்றிற்காக முன்பே இவ்வாறு விடப்பட்டிருந்தால்;

* SGST/IGST சட்டத்தில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சப்ளை செய்தது தொடர்பாக மேற்சொன்னவை தவிர வேறு குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மேற்சொன்ன குற்றங்கள் ஏதாவது ஒன்றிற்காக முன்பே இவ்வாறு விடப்பட்டிருந்தால்;

NDPSA (அ) FEMA (அ) CGST/SGST சட்டம் தவிர வேறெந்த சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும் அனைத்துக் குற்றங்களும்;

விடப்படுதல் என்பது வரி வட்டிஅபராதத்தை முழுவதுமாகச் செலுத்திய பின்னர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்; வேறெந்த சட்டத்தின் கீழ் நிலுவையிலிருக்கும் எவ்வித நடவடிக்கையும் இதனால் பாதிக்கப்படாது.

கேள்வி 23: குற்றத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதற்கு நிதி தொடர்பான எல்லைகள் ஏதாவது வரையறுக்கப்பட்டுள்ளனவா?

பதில்: ஆம். பின்வருவனவற்றில் எது அதிகமோ அது இதற்கான குறைந்தபட்ச எல்லையாகக் கருதப்படும்: * வரிப்பணத்தில் 50% அல்லது (D5.10,000/- பின்வருவனவற்றில் அதிகமானது அதிகபட்ச எல்லையாகக் கருதப்படும்: * வரிப்பணத்தில் 150% அல்லது * (5.30,000/-)

கேள்வி 24: CGST/SGST சட்டத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுதலின் விளைவுகள் என்னவாக இருக்கும்?

பதில்: பிரிவு 138 உட்பிரிவு (3)-ன் கீழ் விட்டுவிடுவதற்கான தொகையைச் செலுத்திய பின்னர் இச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபர் மீது வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது; இதற்கு முன் அவருக்கெதிராக நிலுவையில் இருக்கும் குற்றவியல் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

2.9375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top