பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சப்ளை நேரம்

சப்ளை நேரம் குறித்த கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1: சப்ளை செய்யப்பட வேண்டிய நேரம் எது?

பதில்: சப்ளை செய்யப்படும் நேரமானது சப்ளைக்கான ஜிஎஸ்டி வரி செலுத்தப்படும்போது செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் ஜிஎஸ்டி வரிச் சட்டம் எப்போது சப்ளை செய்யப்பட வேண்டும் என்பதையும் குறிக்கிறது. சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டம் பொருட்கள் மற்றும் சேவைகள் சப்ளை செய்யப்பட வேண்டிய நேரங்களைத் தனித்தனியாக விளக்குகிறது.

கேள்வி 2 பொருட்கள் மற்றும் சேவைகள் சப்ளை செய்யப்படும் நேரம் மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய நேரம் எது?

பதில் : சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 12, 13 பொருட்கள் சப்ளை செய்ய வேண்டிய நேரத்தை கூறுகிறது. பொருட்கள் சப்ளை செய்ய வேண்டிய நேரம் பின்வருவனவற்றிற்கு முன் நடைபெறும்.

(i) சப்ளையர் இன்வாய்ஸ் வழங்கிய தேதி அல்லது பிரிவு 31ன் கீழ் சப்ளைக்கான இன்வாய்ஸ் கொடுக்க அவருக்கு விதிக்கப்பட்டுள்ள கடைசி தேதி;

(ii) சப்ளைக்கான பணத்தைப் பெறும் தேதி

கேள்வி 3: பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வவுச்சர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் சப்ளை செய்ய வேண்டிய நேரம் எது?

பதில்: பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வவுச்சர்கள் கொடுக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் சப்ளை செய்ய வேண்டிய நேரமானது,

அ) வவுச்சர் வழங்கப்பட்ட தேதி, சப்ளை அந்தச் சமயத்தில் நடக்க முடிந்தால் சப்ளை செய்யலாம். அல்லது,

ஆ) மற்ற எல்லாச் சமயங்களிலும் வவுச்சர் பெறப்படும் தேதி.

கேள்வி 4: சப்ளை நேரத்தை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலைகளான சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 12 அல்லது 13ன் துணைப்பிரிவு 2, 3, 4 ஆகியவற்றின் போது சப்ளை நேரத்தை எப்படி முடிவு செய்வது?

பதில்: பிரிவு 12(5) மற்றும் 13 (5) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அந்த பிரியாடிக்கல் தாக்கலுக்கான தேதி சப்ளைக்கான நேரமாக இருக்கும். மற்ற சமயங்களில் CGST/SGST/IGST போன்ற வரிகள் செலுத்தப்படும் தேதியாக இருக்கும்.

கேள்வி 5: ‘பணம் செலுத்துதல் சீட்டு தேதி’ என்பது என்ன?

பதில்: பணம் செலுத்தலை சப்ளையரின் கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்வதற்கு முந்தைய தேதி அல்லது பணம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் தேதி ஆகும்.

கேள்வி 6: ஒருவேளை, பகுதியளவு முன்பணம் தரப்பட்டிருந்தால் அல்லது பகுதி பணத்துக்கான இன்வாய்ஸ் தரப்பட்டிருந்தால் சப்ளை செய்யப்படும் நேரத்தில் முழுமையாக சப்ளை செய்யப்படுமா?

பதில்: இல்லை. இன்வாய்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது பெறப்பட்ட பகுதியளவு பணத்தின் அளவுக்கு மட்டுமே சப்ளை இருக்கும்.

கேள்வி 7: செலுத்தப்பட்ட்ட வரியைத் திரும்ப பெறும் நிகழ்வுகளில் பொருட்களின் சப்ளை நேரம் என்ன?

பதில்: சப்ளை நேரங்கள் பின்வரும் தேதிகளுக்கு முன் இருக்கும்:

அ) பொருட்களின் சீட்டில் உள்ள தேதி

ஆ) பணம் செலுத்தப்பட்ட தேதி

இ) சப்ளையர் வழங்கிய இன்வாய்ஸ் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்

கேள்வி 8: செலுத்தப்பட்ட வரியைத் திரும்பப் பெறும் நிகழ்வுகளில் சேவைகளின் சப்ளை நேரம் என்ன?

பதில்: சப்ளை நேரங்கள் பின்வரும் தேதிகளுக்கு முன் இருக்கும்

அ) பணம் செலுத்தப்பட்ட தேதி

ஆ) சப்ளையர் வழங்கிய இன்வாய்ஸ் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள்

கேள்வி 9: ஒருவேளை சப்ளையருக்குச் செலுத்த வேண்டிய தொகையில் வட்டி தாமதக் கட்டணம் அல்லது அபராதம் அல்லது தவறவிட்ட முந்தைய கட்டணங்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டிருக்கும்பட்சத்தில் சப்ளையின் நேரம் என்பது என்னவாக இருக்கும்?

பதில்: சப்ளையருக்குச் செலுத்த வேண்டிய தொகையில் வட்டி தாமதக் கட்டணம் அல்லது அபராதம் அல்லது தவறவிட்ட முந்தைய கட்டணங்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டிருக்கும்பட்சத்தில் சப்ளை நேரம் என்பது சப்ளையர் அந்தக் கூடுதல் கட்டணங்களைப் பெறும் தேதியில் இருக்கும்.

கேள்வி 10: வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்போ பின்போ சப்ளை நடந்திருந்தால், அந்த சப்ளையின் நேரத்தில் மாற்றம் இருக்குமா?

பதில்: ஆம். அந்தச் சமயங்களில் பிரிவு 14ன் விதிமுறை செயல்படுத்தப்படும்.

கேள்வி 11: வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்போ பின்போ சப்ளை நடந்திருந்தால், அந்த சப்ளையின் நேரம் என்னவாக இருக்கும்?

பதில்: இது போன்ற சமயங்களில் சப்ளையானது,

(1) வரி விகிதங்களில் மாற்ற செய்யப்பட்ட பிறகு சப்ளைக்கான இன்வாய்ஸ் வழங்கப்பட்டு அதற்கான பணமும் பெறப்பட்டிருந்தால், பணம் பெறப்பட்டதற்கான சீட்டின் தேதி அல்லது இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதி இரண்டில் முன்னதாக வரும் தேதி.

(2) வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன் இன்வாய்ஸ் வழங்கப்பட்டு ஆனால் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு பணம் பெறப்பட்டிருந்தால் சப்ளையானது, இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதியில் நடக்கும்.

(3) வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன் பணம் பெறப்பட்டு ஆனால் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு இன்வாய்ஸ் வழங்கப்பட்டிருந்தால் சப்ளையானது, பணம் பெறப்பட்ட சீட்டில் உள்ள தேதியில் நடக்கும்.

கேள்வி 12: வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு சப்ளை செய்யப்பட்டிருந்தால், சப்ளை நேரம் என்ன?

பதில்: இது போன்ற சமயங்களில் சப்ளையானது,

(i) வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு பின் பணம் பெறப்பட்டு ஆனால் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன் இன்வாய்ஸ் வழங்கப்பட்டிருந்தால் சப்ளையானது, பணம் பெறப்பட்ட சீட்டில் உள்ள தேதியில் நடக்கும்.

(ii) வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன் இன்வாய்ஸ் வழங்கப்பட்டு, பணமும் பெறப்பட்டிருந்தால் சப்ளை தேதியானது, பணம் பெறப்பட்ட சீட்டில் உள்ள தேதி அல்லது இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதி இரண்டில் முன்னதாக உள்ள தேதி.

(iii) வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்ட பின் இன்வாய்ஸ் வழங்கப்பட்டு, ஆனால் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன் பணம் பெறப்பட்டிருந்தால் சப்ளை தேதியானது, இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதி ஆகும்.

கேள்வி 13: வரி விகிதமானது 18 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக 1.6.2017 தேதியிலிருந்து உயர்த்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த மாற்றம் நடப்பதற்கு முன் ஏப்ரல் 2017ல் சேவை வழங்கப்பட்டு அதற்கான இன்வாய்ஸும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான பணம் ஜூன் 2017இல் வரிவிகிதத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு பெறப்படுகிறது என்றால் எந்த வரி விகிதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்?

பதில்: 1.6.2017க்கு முன்பு வழங்கப்பட்ட சேவைகள் என்பதால் பழைய வரி விகிதமான 18 சதவிகிதம் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கேள்வி 14: வரி விகிதமானது 18 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக 1.6.2017 தேதியிலிருந்து உயர்த்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு ஜூன் 2017இல் சப்ளை செய்யப்பட்டு இன்வாய்ஸும் வழங்கப்பட்ட பொருட்களுக்கான முழுப் பணமும் முன்பணமாக ஏப்ரல் 2017இலேயே பெறப்பட்டிருந்தால் என்ன வரி விகிதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்?

பதில்: பொருட்களும், இன்வாய்ஸ்ஸும் 1.6.2017 தேதிக்குப் பின்னரே வழங்கப்பட்டிருப்பதால் புதிய வரி விகிதமான 20 சதவீதம்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கேள்வி 15: சப்ளை செய்யப்படும் பொருட்களுக்கான இன்வாய்ஸ் வழங்குவதற்கான கால அளவு என்ன?

பதில் : சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 31ன் படி பதிவு செய்யப்பட்ட வரிச் செலுத்துபவர் பொருட்கள், அளவு, மற்றும் பொருட்களின் மதிப்பு செலுத்த வேண்டிய வரி மற்றும் பிற விவரங்கள் படி பின்வரும் சமயங்களில் இன்வாய்ஸ் வழங்க வேண்டும்:

(அ) பொருட்கள் அனுப்பப்படுவதற்காக எடுக்கப்படும்போது, அதாவது பொருட்கள் சப்ளைக்காக அனுப்பப்படும்போது,

(ஆ) பொருட்கள் டெலிவரி செய்யப்படும் போது அல்லது பிற சமயங்களில் பெறுபவருக்கு பொருட்கள் கிடைக்கும்போது.

கேள்வி 16: சப்ளை செய்யப்படும் சேவைகளுக்கான இன்வாய்ஸ் வழங்குவதற்கான கால அளவு என்ன?

பதில் : சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 31ன் படி பதிவு செய்யப்பட்ட வரிச் செலுத்துபவர் சர்விஸ் வழங்குவதற்கு முன் அல்லது பின், ஆனால் இதில் குறிப்பிடப்பட்ட கால அளவுக்குள் இன்வாய்ஸ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இன்வாய்ஸ் ஆனது சேவைகள் குறித்த விவரங்கள், அவற்றின் மதிப்பு, செலுத்த வேண்டிய வரி மற்றும் குறிப்பிட்ட பிற விவரங்களுடன் வழங்கப்பட வேண்டும்.

கேள்வி 17: பொருட்கள் தொடர்ச்சியாக சப்ளை செய்யப்பட்டுவரும் பட்சத்தில் இன்வாய்ஸ் வழங்குவதற்கான கால அளவு என்ன?

பதில்: பொருட்கள் தொடர்ச்சியாக சப்ளை செய்யப்பட்டு வரும் பட்சத்தில், அவற்றுக்கான கணக்கு அறிக்கைகள் அல்லது பெறப்பட வேண்டிய பணம் ஆகியவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்தி இருந்தால், அவற்றுக்கான இன்வாய்ஸ் ஒவ்வொரு சப்ளைக்குமான கணக்கு அறிக்கை செயல்படுத்தும்போது அல்லது பணம் பெறப்படும்போது அல்லது அவற்றுக்கு முன்போ வழங்கப்பட வேண்டும்.

கேள்வி 18: சேவைகள் தொடர்ச்சியாக சப்ளை செய்யப்பட்டு வரும் பட்சத்தில் இன்வாய்ஸ் வழங்குவதற்கான கால அளவு என்ன?

பதில் : சேவைகள் தொடர்ச்சியாக சப்ளை செய்யப்பட்டு வரும் பட்சத்தில்,

(அ) காண்ட்ராக்ட்டில் பணம் பெறுவதற்கான கெடு தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்தில் சேவையைப் பெறுபவர் தர வேண்டிய பணத்தை தரும் தேதிக்கு முன் அல்லது பின் இன்வாய்ஸ் வழங்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் சர்வீஸ் சப்ளை செய்தவர் தனக்கு பணம் வருகிறதோ இல்லையோ இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளியில் இன்வாய்ஸ் வழங்கப்பட வேண்டும்.

(ஆ) காண்ட்ராக்ட்டில் பணம் பெறுவதற்கான கெடு தேதி குறிப்பிடாத பட்சத்தில் ஒவ்வொரு முறை சப்ளை செய்யப்பட்ட சேவைகளுக்கான பணம் பெறப்படுவதற்கு முன் அல்லது பின் வழங்கலாம் ஆனால் இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளியில் வழங்கப்பட வேண்டும்.

(இ) செலுத்தப்பட்ட பணம் நிறைவுபெற்ற சப்ளையோடு தொடர்புடையதாக இருந்தால், அதற்கான இன்வாய்ஸ் சப்ளை நிறைவு பெறுவதற்கு முன் அல்லது பின் வழங்கலாம். ஆனால் இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளியில் இன்வாய்ஸ் வழங்கப்பட வேண்டும்.

கேள்வி 19: இன்வாய்ஸ் வழங்குவதற்கும் பொருட்கள் அனுப்பப்படுவதற்கு அல்லது விற்பனைக்கான அனுமதி கிடைப்பதற்குமான கால அளவு என்ன?

பதில்: சப்ளைக்கு அனுப்பப்பட்ட அல்லது விற்பனைக்கான அனுமதி பெற்ற அல்லது திரும்ப எடுத்துக்கொள்ளப்படும் சப்ளையின் போது அல்லது சப்ளைக்கு முன்பு அல்லது அனுமதி செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குள் இருக்கும்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

Filed under:
3.27272727273
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top