பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சரக்கு மற்றும் சேவை வரிப் பற்றிய கண்ணோட்டம் (GST)

சரக்கு மற்றும் சேவை வரிப் பற்றிய அடிப்படை கேள்வி பதில்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

கேள்வி 1. சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன (GST)?

பதில் : சரக்கு மற்றும் சேவைகளை நுகர்வோர் மீது விதிக்கப்படும் ஒரு இலக்கின் அடிப்படையிலான வரியாகும். முன்பு இருந்த நிலைக்கு முரணாக செலுத்தப்பட்ட வரியின் மதிப்புடன், உற்பத்தியாவதிலிருந்து இறுதி நுகர்வு வரை அனைத்து நிலைகளிலும் வரி விதிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், ஒரே மதிப்பு கூட்டு வரியே விதிக்கப்படும். மேலும், இந்த வரிச்சுமை இறுதியாக நுகர்வோர் மீதே சுமத்தப்படும்.

கேள்வி 2. நுகர்வோர் மீதான இலக்கு அடிப்படையிலான வரி என்பதன் சரியான கருத்து என்ன?

பதில் : வரி வசூல் செய்யும் அதிகாரம் நுகர்வோர் இடத்தின் வரி அதிகார வரம்புக்கு உட்படவேண்டும் என்று வழங்கல் இடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி 3. தற்போதுள்ள எந்தெந்த வரிகள் GSTக்குள் ஐக்கியமாகிறது?

பதில் : GSTல் மாற்றம் பெறப்போகின்ற வரிகள் பின்வருமாறு:

(அ) மத்திய அரசு தற்போது வரி விதிக்கின்றது. வசூலும் செய்கின்றது

க). மத்திய கலால் வரி

ங). கலால் வரிகள் (மருத்துவம் மற்றும் கழிப்பறை ஏற்பாடுகள்)

ச). கூடுதல் கலால் வரிகள் (சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த சரக்குகள்)

ஞ). கூடுதல் கலால் வரிகள் (ஜவுளிகள் மற்றும் ஜவுளி பொருட்கள்)

ட). கூடுதல் கலால் வரிகள் (ஈடுசெய் வரி CVD என்று பொதுவாக அறியப்பட்டது)

ண). சிறப்புக் கூடுதல் கலால் வரிகள் (SAD)

த). சேவை வரி

ந). இது வரை சரக்கு மற்றும் சேவைகள் வழங்கலில் தொடர்புடைய மத்திய மிகை வரிகள் மற்றும் மேல்வரிகள்

(ஆ). GSTக்குள் ஐக்கியமாகும் மாநில வரிகள்.

க). மாநில மதிப்புக் கூட்டு வரி

ங). மத்திய விற்பனை வரி

ச). ஆடம்பர வரி

ஞ). நுழைவு வரி (அனைத்து வடிவங்களிலும்)

ட) பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை வரி (உள்ளுர் வரி நீங்கலாக)

ண). விளம்பரங்களின் மீதான வரி

த). கொள்முதல் வரி

ந). குலுக்கல் சீட்டு (லாட்டரி), பந்தயம் மற்றும் சூதாட்டம் மீதான வரி

ப). இது வரை சரக்கு மற்றும் சேவைகள் வழங்கலில் தொடர்புடைய மாநிலத்தின் மிகை வரிகள் மற்றும் மேல்வரிகள்.

மத்திய அரசால் விதிக்கப்பட்ட வரிகள், மேல்வரி மற்றும் மிகைவரி பற்றி யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு GST கவுன்சில் பரிந்துரைக்க வேண்டும். இதில் மாநில மற்றும் உள்ளுர் அமைப்புகளின் வரிகள் GSTக்குள் ஐக்கியமாகி விடும்.

கேள்வி 4 மேலே குறிப்பிட்ட வரிகளை GSTக்குள் ஐக்கியப்படுத்துவதற்கு என்ன கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன?

பதில்: GSTக்குள் ஐக்கியப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அடையாளம் கண்டறிய, மத்திய, மாநில மற்றும் உள்ளுர் வரிகள் பரிசோதிக்கப்பட்டது. அப்படி அடையாளம் கண்டறியப்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:

அ). சரக்கு வழங்கல் அல்லது சேவைகள் வழங்கலில் முன்பு மறைமுக வரிகளாக வசூலிக்கப்பட்டவைகள், இப்போது GST வரி அல்லது வரி விதிப்புகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஆ). இறக்குமதி, பொருட்கள் உற்பத்தி, அல்லது சேவைகள் வழங்குதல் ஒரு முனையிலும், சரக்கும் மற்றும் சேவைகள் வழங்கல் நுகர்வு மறுமுனையையும் பரிமாற்ற சங்கிலியின் பகுதிகளாக வரி அல்லது வரி விதிப்புகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இ). ஐக்கியப்படுத்தப்பட்டதன் விளைவாக மாநிலத்திற்குள்ளும், மாநிலங்கள் அளவிலும் வரி விலக்கு சுமுகமாக நடைபெறவேண்டும். சரக்கு மற்றும் சேவைகளில் குறிப்பாக தொடர்பற்ற வரி மற்றும் கட்டணங்களை, GSTன் கீழ் மாற்றியமைக்க கூடாது.

ஈ) யூனியன் மற்றும் மாநிலங்களுக்கான நேர்மையான வருவாய்க்கு தாங்களே தனித்தனியாக முயற்சி செய்ய வேண்டும்.

கேள்வி 5. எந்தெந்தப் பொருட்களை வெளியிலிருந்து கண்காணிக்க வேண்டும் என்று GST முடிவெடுத்துள்ளது?

பதில் : 101வது அரசியலமைப்பு திருத்தம் 2016 படி திருத்தியமைக்கப்பட்ட 366(12A) அரசியலமைப்பு பிரிவு சரக்கு மற்றும் சேவைகள் பற்றி விளக்குகின்றது. அதன்படி, மனிதன் உட்கொள்ளும் மது விநியோகம் நீங்கலாக, சரக்கு அல்லது சேவைகள் வழங்கல் அல்லது இரண்டிற்கும் மீதான வரி என்று விளக்குகின்றது. எனவே, அரசியலைப்பிலுள்ள GSTன் விளக்கத்தின்படி மனிதன் உட்கொள்ளும் மதுவை GSTயிலிருந்து வெளியேற்றிவிட்டது. கச்சா பெட்ரோல், மோட்டார் எரிபொருள் (பெட்ரோல்), அதி வேக டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகிய ஐந்து பெட்ரோலியப் பொருட்களை GSTக்கு வெளியில் தற்காலிகமாக வைத்துள்ளது. எந்த தேதியிலிருந்து அவை GSTக்குள் சேர்க்க வேண்டும் என்பதை GST கவுன்சில் முடிவு செய்யும். மேலும், மின்சாரமும் GSTயிலிருந்து வெளியேற்றி விட்டது.

கேள்வி 6. GST அறிமுகமான பின் மேலே குறிப்பிட்ட பொருட்களின் மீதானவரி விதிப்பின் நிலை என்னவாகும்?

பதில் : தற்போதைய மதிப்பு கூட்டு வரி மற்றும் மத்திய சுங்க வரி விதிப்பு முறையையே மேலே குறிப்பிட்ட பொருட்களின் மீது தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

கேள்வி 7. புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களின் மீதான GSTன் நிலைப்பாடு என்ன?

பதில் : புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் GSTக்கு உட்பட்டது. இந்த பொருட்களின் மீது மத்திய சுங்க வரியை கூடுதலாக விதிக்க மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.

கேள்வி 8. என்ன வகையான GSTஐ அமல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது?

பதில் : பொதுவான வரி விதிகளின் அடிப்படையில் மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து இரட்டை GSTஐ ஒரே சமயத்தில் விதிக்கப் போகின்றது. உள் மாநில சரக்குகள் வழங்கல் மீது மத்திய அரசால் சரக்கு மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படும் மற்றும் சேவைகள் மத்திய GST என்றும் அழைக்கப்படும். மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தினால் விதிக்கப்படும் வரிகள் மாநில சரக்கு மற்றும் சேவை வரி SGST / UTGST என்றும் வழங்கப்படும். அதே போல், ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (IGST) விதிக்கப்படும் மற்றும் ஒவ்வொரு மாநிலங்களுக்கிடையேயும் நடைபெறும் சரக்கு மற்றும் சேவைகள் வழங்கலை மத்திய அரசு நிர்வகிக்கின்றது

கேள்வி 9. இரட்டை GSTன் அவசியம் என்ன?

பதில் : இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு ஆகும். சட்டப்படி வரி விதித்து, அந்த வரியை வதுல் செய்வதற்கு மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசியலைப்பின் பரிந்துரையின்படி அதிகாரங்களை பிரித்துக் கொண்டதன் அடிப்படையில் இரு அரசாங்கங்களுக்கும் நிறைவேற்ற வேண்டிய தனிப்பட்ட பொறுப்புகள் உள்ளன. அதற்கான ஆதாரங்களை பெருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. நிதி கூட்டாட்சியின் அரசியலமைப்பின் தேவைக்கேற்ப, ஒரு இரட்டை GST இருக்கும்.

கேள்வி 10. வரி விதிப்பதற்கும், GSTஐ நிர்வகிப்பதற்கும் எதற்கு அதிகாரம் உள்ளது?

பதில் : மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் வரிவிதித்து, SGST UTGST நிர்வகித்தாலும், மத்திய அரசு வரி விதித்து, CGST  மற்றும் IGSTயையும் நிர்வகிக்கும்.

கேள்வி 11. இந்திய அரசியலமைப்பு சமீபத்தில் GST அமைப்பில் திருத்தம் செய்தது ஏன்?

பதில்: தற்போது மத்திய மாநிலத்திற்கிடையேயான நிதி வலிமை அரசியலைப்பில் ஜனநாயகத்தின்படி மிகவும் தெளிவாக உள்ளது. இதில், அவரவர் இடத்தில் எந்த அத்துமீறல்களில்லை. மனிதன் உட்கொள்ளும் மது, அபின், போதைப் பொருள் நீங்கலாக மற்ற உற்பத்திப் பொருள்களின் மீது வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கும் நிலையில் விற்பனை வரியை விதிப்பதற்கு மாநிலத்திற்கு அதிகாரம் உண்டு. மாநிலங்களுக்கிடையேயான விற்பனைகளில், மத்திய விற்பனை வரியை (CST) விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருந்தாலும், அந்த வரியை வதலித்து, தானே வைத்துக் கொள்ளும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது. சேவைகளை பொருத்தவரையில், சேவை வரி விதிப்பது மத்திய அரசின் தனிப்பட்ட அதிகாரம் ஆகும்.

GST அறிமுகத்தை அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால், ஒரே சமயத்தில் வரியை விதித்து, வசூல் செய்யும் அதிகாரத்தை மத்திய, மாநில அரசுகள் பெற வேண்டும். இந்த நோக்கத்திற்காக 101வது அரசியலமைப்பு சட்டம் 2016 திருத்தத்தின் படி, இந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டது. , GST வரிகளை விதித்து, அதை வசூலிப்பதற்கான அதிகாரத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு அரசியலமைப்பு 246A பிரிவு வழங்குகின்றது.

கேள்வி 12. குறிப்பிட்ட சரக்கு மற்றும் சேவைகள் பரிவர்த்தனையில் எப்படி ஒரே சமயம் மத்திய GST(CGST), மற்றும் மாநில GST (SGST)ந் கீழ் வரி விதிக்க முடியும்?

பதில்: பரிந்துரைக்கப்பட்ட தொடக்க வரம்புக்கு கீழ் நடக்கும் பரிவர்த்தனைகள், GSTயால் வெளியிலிருந்து கண்காணிக்கப்படும் சரக்குகள், விலக்களிக்கப்பட்ட சரக்கு மற்று சேவைகள் நீங்கலாக, மற்ற சரக்கு மற்றும் சேவைகள் வழங்கலின் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் CGST மற்றும் SGSTயால் ஒரே சமயத்தில் வரி விதிக்கமுடியும். மேலும், சரக்குகளின் மீது விதிக்கப்பட்ட மத்திய மதிப்பு கூட்டு வரி உட்பட மாநில கூட்டு வரி போலல்லாமல், இருவரும் அதே விலைக்கு அல்லது மதிப்புக்கு வரி விதிக்க வேண்டும். விற்பவர், வாங்குபவர் இருப்பிடம் நாட்டிற்குள் இருக்கும்போது மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) முக்கியமானதல்ல. ஆனால் விற்பவர், வாங்குபவர் இருப்பிடம் மாநிலத்திற்குள் இருக்கும்போது மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) விதிக்கப்படும்.

வரைபடம் 1, CGSTன் விகிதம் 10% எனவும், SGSTன் விகிதம் 10% எனவும் கற்பனையாக வைத்துக் கொள்வோம். உத்தரப்பிரதேசத்திலுள்ள மொத்த விற்பனையாளர் ஒருவர் இரும்பு கட்டிகள் மற்றும் கம்பிகளை அதே மாநிலத்திலுள்ள ஒரு கட்டுமான கம்பெனிக்கு ரூ.100க்கு விற்பனை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த விற்பனையாளர் ரூ.10 CGSTக்காகவும், ரூ.10 SGSTக்காகவும் பொருட்களின் அடிப்படை விலையிலிருந்து கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார். CGSTஐ மத்திய அரசிடம் செலுத்திவிட்டு SGSTன் பகுதியை மாநிலத்தின் கணக்கில் பெறலாம். நிச்சயமாக, ஏனெனில், வாங்கும் போதே CGST மற்றும் SGST செலுத்திவிட்டதால், அவர் ரொக்கமாக ரூ.20ஐ செலுத்த வேண்டிய அவசியமில்லை (உள்ளிடு என்று கூறலாம்). CGST செலுத்துவதால் CGSTக்கான சலுகையை மட்டுமே பெற அனுமதியுண்டு. அதேசமயம் SGSTக்கான சலுகையை மாநில GSTயிடம் தனியாக பெற வேண்டும். வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், பொதுவாக, CGST கடனுக்காக செலுத்தப்படும் தொகையை SGSTக்காக பயன்படுத்த முடியாது. அதேபோல், SGST கடனுக்காக செலுத்தப்படும் தொகையை CGSTக்காக பயன்படுத்த முடியாது.

வரைபடம் 2. CGSTன் விகிதம் 10% எனவும், SGSTன் விகிதம் 10% எனவும் மீண்டும் கற்பனையாக வைத்துக் கொள்வோம். மும்பையிலுள்ள ஒரு விளம்பர கம்பெனி, மஹாராஷ்டிராவிக்குள்ளே இருக்கின்ற ஒரு சோப்பு கம்பெனிக்கு விளம்பர சேவையை ரூ. 100க்கு வழங்குகிறார். அந்த விளம்பர கம்பெனி, ரூ. 10 CGSTக்காகவும், ரூ. 10 SGSTக்காகவும் சேவை கட்டணத்தின் அடிப்படை விலையிலிருந்து கூடுதலாக கட்டணம் வதலிக்கின்றது. CGSTஐ மத்திய அரசிடம் செலுத்திவிட்டு SGSTன் பகுதியை மாநிலத்தின் கணக்கில் பெறலாம். நிச்சயமாக, ஏனெனில், வாங்கும் போதே CGST மற்றும் SGST செலுத்திவிட்டதால், அவர் ரொக்கமாக ரூ.20ஐ செலுத்த வேண்டிய அவசியமில்லை (காகிதம் மற்றும் எழுதுபொருள்கள், அலுவலக உபகரணங்கள், கலை சேவைகள் போன்றவைகள் உள்ளிடு என்று கூறலாம்). CGST  செலுத்துவதால் CGSTக்கான சலுகையை மட்டுமே பெற அனுமதியுண்டு. அதேசமயம் SGSTக்கான சலுகையை மாநில GSTயிடம் தனியாக பெற வேண்டும். வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், பொதுவாக, CGST கடனுக்காக செலுத்தப்படும் தொகையை SGSTக்காக பயன்படுத்த முடியாது. அதேபோல், SGST கடனுக்காக செலுத்தப்படும் தொகையை CGSTக்காக பயன்படுத்த முடியாது.

கேள்வி 13. GSTயினால் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் என்ன?

பதில் : இந்தியாவின் மறைமுக வரி துறை சீர்திருத்தத்தில் ஒரு மிக முக்கியமான படியாக இந்த GST அறிமுகம் இருக்கும். இந்த மாற்றத்தால் அதிக எண்ணிக்கையில் மத்திய மற்றும் மாநில வரிகள், ஒரே வரியாக மாற்றம் பெறும். முன்கூட்டியே வரிகளை செலுத்த அனுமதிக்கப்படும். இது விழப்போகும் மோசமான விளைவை தடுப்பதோடு, பொதுவான தேசியச் சந்தைக்கான வழியை வகுக்கும். தற்போது 25-30 மதிப்பீடு செய்யப்பட்ட பொருட்களின் மீதான ஒட்டுமொத்த வரிச் சுமையை குறைக்கும் என்பதால் நுகர்வோர்க்கு இது மிகப் பெரிய லாபமாகும். GST அறிமுகத்தால், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தையில் நம்முடைய பொருட்களுக்கு மிகப் பெரிய போட்டி ஏற்படும். இது உடனடி பொருளாதார வளர்ச்சிக்கான தூண்டுகோலாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வரித் தளத்தை விரிவுபடுத்துதல், வர்த்தக அளவை பெருக்கியது, மற்றும் வரிக்கு கீழ்படிதல் போன்றவற்றினால், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு வருவாய் ஆதாயம் உள்ளது. கடைசியாக ஆனால் குறைந்தவை அல்ல, இந்த வரியின் வெளிப்படைத் தன்மை, நிர்வகிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

கேள்வி 14. GST என்றால் என்ன?

பதில் : GSTன் ஆளுமையின் கீழ், ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட GSTஐ(IGST) சரக்கு மற்றும் சேவைகள் வழங்கல் மீது மத்திய அரசால் விதிக்கப்பட்டு அதை வதலிக்கும். அரசியலமைப்பு 269A பிரிவின்படி, மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் வணிக வழங்கலின் மீது மத்திய அரசு வரி விதித்து அதை வசூலிக்க வேண்டும். அந்தமாதிரி வரிகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையில் பகிரந்தளிக்கும் வகையில், சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சிலின் பரிந்துரையின் மீது பாராளுமன்றசட்டப்படி வழங்கப்படலாம்.

கேள்வி 15. GSTன் வரி விகிதத்தை முடிவு செய்வது யார்?

பதில் : மத்திய மாநில அரசாங்கங்கள் இணைந்து CGST மற்றும் SGST வரி விகதங்களை முடிவு செய்கின்றன. இந்த விகிதங்கள் GSTன் பரிந்துரைகளில் தெரிவிக்கப்படும்.

கேள்வி 16. GST கவுன்சிலின் பங்கு என்ன?

பதில் : GST கவுன்சில் மத்திய நிதி அமைச்சர் (கவுன்சிலின் தலைவர்) மாநில அமைச்சர் (வருவாய்), மற்றும் மாநில நித மற்றும் வரி விதிப்பு அமைச்சர்கள் ஆகியோரை கொண்ட அமைப்பாகும். இந்த அமைச்சர்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பரிந்துரைகளை கொண்டு செல்வார்கள்.

அ) வரிகள், மேல்வரி மற்றும் மிகைவரிகள் மத்திய அரசால் விதிக்கப்படும் இதில் மாநில மற்றும் உள்ளுர் அமைப்புகளின் வரிகள் GSTக்குள் ஐக்கியமாகி விடும்.

ஆ).GSTயிலிருந்து சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கலாம் அல்லது விலக்களிக்கலாம்.

இ). கச்சா பெட்ரோல், மோட்டார் எரிபொருள் (பெட்ரோல்), அதி வேக டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகிய பொருட்கள். GST தேதி அறிவித்த நாளிலிருந்து வரி விதிக்கப்படும்.

ஈ) GST மாதிரி சட்டம், வரிக் கொள்கைகள், IGSTஐ பகிர்ந்தளித்தல், மற்றும் வழங்கல் இடத்தை நிர்வகித்தல்.

உ) வருடாந்திர விற்பனை அளவு தொடக்கநிலை வரம்புக்கு கீழே இருந்தால் சரக்கு மற்றும் சேவைகளுக்கு GSTயிலிருந்து விலக்களிக்கப்படும்.

ஊ) GSTன் அடிப்படை வரி விகிதத்துக்கு உட்பட வரி விகிதம்.

(எ) ஏதாவது சிறப்பு விகிதம் அல்லது இயற்கை சீற்றம் அல்லது பேரழிவு போன்ற சமயத்தில் கூடுதல் ஆதாயங்களை அதிகரிக்க குறிப்பிட்ட காலத்திற்கு விகிதம்

ஏ) வடகிழக்கு மாநிலங்கள். ஜம்மு & காஷ்மீர், இமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் முதலியவற்றுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

(ஐ) GST சம்பந்தப்பட்ட வேறு ஏதாவது விஷயங்களை GST கவுன்சில் தீர்மானிக்கும்.

கேள்வி 17. GST கவுன்சிலின் வழிகாட்டுக் கொள்கை என்ன?

பதில் : மத்திய மாநிலங்களிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் உள்ள பல்விதமான அம்சங்களில் இணக்கமான சூழ்நிலை ஏற்படுவதற்கு GST கவுன்சில் உறுதியளிக்க வேண்டும். நூற்றொன்றாம் அரசியல் திருத்தசட்டம், 2016ன் படி GSTன்ஒரு இணக்கமான கட்டமைப்பிற்கு அவசியமான வழிகாட்டுதல் வழங்கவும், மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு ஒரு இணக்கமான தேசிய சந்தை மேம்படுத்துதல் போன்ற தன்னுடைய பல்வேறு செயல்பாடுகளில் GST கவுன்சில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கேள்வி 18. GST அமைப்பால் எவ்வாறு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன?

பதில் : நூற்றொன்றாம் அரசியல் திருத்தசட்டம், 2016ல் குறிப்பிட்டுள்ளபடி கூட்டத்திற்கு 3/4க்குக் குறையாத அளவில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். உறுப்பினர்கள் அளித்த பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தான் GST கவுன்சில் ஒவ்வொரு தீர்மானத்தையும் எடுக்க வேண்டும். பதிவான வாக்குகளில் 1/3 வாக்குகள் மத்திய அரசாங்கத்துக்கும், அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 2/3 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. GST கவுன்சில் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கு மேல் பங்கேற்றால் தான் கூட்டத்தை நடத்தமுடியும்.

கேள்வி 19. GST ஆளுமையின் கீழ் GST  செலுத்த வேண்டியவர்கள் யார்?

பதில் : சரக்கு மற்றும் / அல்லது சேவைகள் வழங்கல் மீது வரி செலுத்த வேண்டிய நபர் GST ஆளுமையின் கீழ் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்த வேண்டிய நபரின் வருடாந்திர விற்பனை அளவு வரம்பான ரூபாய் 20 லட்சத்தை கடக்கும் போது வரி செலுத்த வேண்டும் (வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்கு ரூபாய் 10 இலட்சம்), சில குறிப்பிட்ட அம்சங்களில் வரி செலுத்த வேண்டிய நபர், தன்விற்பனையின் அளவு வரம்பை கடக்கா விட்டாலும் GST  செலுத்த வேண்டும். மாநிலங்களுக்குள்ளேயே நடக்கும் அனைத்து சரக்கு மற்றும் 1 அல்லது சேவைகள் வழங்கல் மீது CGST/SGST செலுத்த வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும்/அல்லது சேவைகள் மீது IGST  செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட சட்ட பட்டியல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதப்படி CGST/SGST மற்றும் IGST செலுத்தப்பட வேண்டும்.

கேள்வி 20. GSTன் ஆளுமையின் கீழ் சிறிய அளவு வரி செலுத்துபவர்களுக்கான ஆதாயங்கள் என்ன?

பதில் : ஒரு நிதியாண்டின் ஒட்டுமொத்த விற்றுமுதல் ரூபாய் 20 லட்சம் வரை (வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்கு ரூபாய் 10 இலட்சம்) உள்ளவர்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஒரு நபரின் முந்தைய நிதியாண்டின் விற்றுமுதல் ரூபாய் 50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், எளிமைப்படுத்தப்பட்ட தொகுப்புத் திட்டத்தை தேர்ந்தெடுத்து, விற்றுமுதலின் மீது ஒரு மாநிலத்திலுள்ள சலுகை விகிதத்தில் வரியை செலுத்த வேண்டும். (வரி விதிப்புக்குரிய அனைத்து வழங்கலின் ஒட்டுமொத்த மதிப்பு, வழங்கல் மற்றும் பொருட்கள் ஏற்றுமதி மற்றும்/அல்லது சேவைகளில் விலக்கு, மற்றும் GSTயிலிருந்து விலக்கு போன்ற அனைத்தும் ஒட்டுமொத்த விற்றுமுதலில் அடங்கும்). ஒட்டுமொத்த விற்றுமுதல் அகில இந்திய அடிப்படையில் கணக்கிடப்படும். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு அந்தஸ்துள்ள மாநிலங்களுக்கு தொடக்க நிலை வரம்பில் ரூபாய் 10 இலட்சம் விலக்களிக்கப்பட்டுள்ளது), உள்ளீட்டு வரி வரவுடன் (ITC) சேர்த்து வரி செலுத்தும் முறையை தெரிவு செய்தால் வரி செலுத்தும் அனைவரும் இந்த தொடக்க நிலை வரம்பு விலக்கைப் பெற தகுதியுடையவர்களாவார்கள். வரி செலுத்துபவர்கள், மாநிலுங்களிடையில் வழங்கல் செய்பவர், அல்லது நேர்மாறான வரி விதிப்பு அடிப்படையில் வரி செலுத்துபவர்களுக்கு இந்த தொடக்கநிலை வரம்பு விலக்கு பெறத் தகுதி இல்லை.

கேள்வி 21. GST ஆளுமையின் சரக்கு மற்றும் சேவைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

பதில் : GST ஆளுமையின் சரக்கு கீழுள்ள சரக்குகள் HSN (இசைவான பெயரிடும் முறை) குறியீடு எண்ணைப் பயன்படுத்தி வகைப்படுத்தப்படுகின்றன. வரி செலுத்துபவரின் விற்றுமுதல் ரூபாய் 1.5 கோடிக்கு அதிகமாகவும், ரூபாய் 5 கோடிக்குக் குறைவாகவும் இருந்தால், அவர் 2 இலக்க அடையாள குறியீடு எண்ணை பயன்படுத்த வேண்டும். வரி செலுத்துபவர்கள் விற்றுமுதல் விற்பனை ரூபாய் 5 கோடி அல்லது அதற்கு அதிகமாக உள்ளவர்கள் 4 இலக்க அடையாள குறியீடு எண்ணை பயன்படுத்த வேண்டும். வருடாந்தர விற்பனை 1.5 கோடிக்குக் கீழ் உள்ளவர்கள் அவர்களுடைய விலைப்பட்டியில் HSN அடையாள எண்ணைக் குறிப்பிடத் தேவையில்லை. சேவைகள் கணக்கீடு அடையாள குறியீடு எண்ணின்படி (SAC) சேவைகள் வகைப்படுத்தப்படுகின்றன.

கேள்வி 22. GSTன் கீழ் இறக்குமதிகளுக்கு எப்படி வரி விதிக்கப்படுகின்றது?

பதில் : சரக்கு மற்றும் சேவைகளின் இறக்குமதிகள் மாநிலங்களுக்கிடையிலான வழங்கலாகவே கருதப்படும் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் மீது IGST விதிக்கப்படும். வரியின் நிலைப்பாடு இலக்கு கோட்பாட்டை பின்பற்ற வேண்டும். சரக்கு மற்றும் சேவைகள் நுகரப்படும் போது, SGST மூலம் வரி வருவாய் மாநிலத்திற்கு வந்து சேரும் சரக்குகள் மற்றும் சேவைகளின் இறக்குமதிகள் மீது GST  செலுத்தப்பட்டது முழுவதுமாகவும் மற்றும் முற்றிலுமாகவும் கிடைக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

கேள்வி 23. GSTன் கீழ் ஏற்றுமதிகள் எப்படி நடத்தப்படுகின்றது?

பதில் : பூஜ்ய விகித வழங்கல்களின் அடிப்படையில் ஏற்றுமதிகள் செய்யப்படுகின்றன. ஏற்றுமதி செய்யப்படும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி செலுத்த அவசியமில்லை. இருப்பினும் உள்ளிட்டு வரி வரவு சலுகை உள்ளது. அதையே ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பிக் கொடுக்கும்படியாகவும் அமையப பெற்றுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகளை தெரிவு செய்யும் வாய்ப்புள்ளது. அதாவது வெளியீடுகளின் மீதான வரியை செலுத்திவிட்டு பின்னர் அதை IGST யாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது வரியை செலுத்தாமல் ஒப்பந்த பத்திரத்தின் கீழ் ஏற்றுமதி செய்துவிட்டு, உள்ளிட்டு வரி வரவாக (ITC) அதை திருப்பிதரக் கோரலாம்

கேள்வி 24. GSTன் கீழ் தொகுப்பு வரி நோக்கம் என்ன?

பதில் : சிறிய அளவு வரி செலுத்துபவர்களின் ஒட்டுமொத்த விற்றுமுதல் கடந்த நிதியாண்டில் ரூபாய் 50 இலட்சம் வரை இருந்தால், அவர்கள் தொகுப்பு வரித் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ், ஒரு வரி செலுத்துபவர் ஒரு மாநிலத்தில் தன்னுடைய ஒட்டுமொத்த விற்றுமுதலில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ITC சலுகையின்றி வரி செலுத்தலாம்.உற்பத்தியாளர்களுக்கு CGST மற்றும் SGST/UTGSTக்கு வரி விகிதம் 1%க்கு. மற்றவைகளுக்கு 0.5%குறைவாக இருக்காது. மக்கள் நுகரக்கூடிய உணவு வழங்கல் அல்லது வேறு ஏதாவது பொருட்கள் போன்ற குறிப்பிட்ட சேவைகளுக்கு, பட்டியல் II பகுதி 6(b)ல் குறிப்பிட்டுள்ளபடி 25% ஆகும். ஒரு வரி செலுத்துபவர் தொகுப்பு வரியை தெரிவு செய்தால், அதை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க முடியாது. GST பரிந்துரைகளின்படி ஐம்பது லட்சம் என்ற வரம்பை ஒரு கோடியாக அரசாங்கம் உயர்த்த வாய்ப்புள்ளது.

மாநிலங்களுக்கிடையில் வழங்கல் அல்லது மின்னணு வர்த்தகம் இயக்குபவர் மூலம் வழங்கலை செய்யும் வரி செலுத்துபவர் வசூல் செய்யும் வரி ஆதாரம், தொகுப்பு வரி திட்டத்திற்கு தகுதி பெற முடியாது.

கேள்வி 25. தொகுப்பு வரி திட்டம் கட்டாயமா அல்லது விருப்பமா?

பதில் : விருப்பத் தெரிவாகும்.

கேள்வி 26. GSTN என்றால் என்ன? GSTல் அதன் பங்கு என்ன?

பதில் : GSTN என்றால் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் என்று அர்த்தம். GSTன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டதுதான், ஒரு சிறப்பு குறிக்கோள் நிறுவனம் என அழைக்கப்படும் GSTN என்பதாகும். ஒரு தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஒரு பங்களிப்பும், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் சேவைகள், வரி செலுத்துபவர்கள் மற்றும் வேறு பங்குதாரர்களுக்கு GSTஐ அமல்படுத்துவதில் GSTN பெரும் பங்கு வகிக்கின்றது.

ஒன்றுக்கொன்று தொடர்புடையவற்றை உள்ளடக்கிய GSTNன் செயல்பாடுகள்:

அ) பதிவு செய்ய வசதி செய்தல்;

ஆ) வருமான வரி தாக்கலின் விவரங்கள் மத்திய மற்றும் மாநில ஆணையங்களுக்கு அனுப்புதல்;

இ) IGSTன் கணக்கீடு மற்றும் தீர்வு காணுதல்;

ஈ) வங்கி நெட்வொர்க்குடன் செலுத்தப்பட்ட வரி விவரங்களை சரிபார்த்தல்;

உ) வரி செலுத்துபவரின் வருவான வரி தாக்கலின் தகவல் அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு மேலாண்மை தகவல் நிறுவன (MIS) அறிக்கைகளைத் வழங்குதல்;

ஊ) வரி செலுத்துபவர்களின் சுயவிவர ஆய்வுகளை வழங்குதல் மற்றும்

எ) பரிசோதனை இயக்கத்தை சரியாக வழி நடத்துதல், நேர்மாறான மற்றும் உள்ளிடு வரி வரவை மீண்டும் திரும்ப பெற கோருதல்;

GSTN ஒரு பொதுவான GST  வலைவாயில் மற்றும் பதிவு அப்ளிகேஷன்ஸ், பணம் செலுத்துதல், வருமானவரி தாக்கல், MIS / அறிக்கைகள் முதலியனவற்றை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. தற்போதுள்ள வரி நிர்வாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை GSTN பொதுவான வலைவாயிலுடன் ஒருங்கிணைத்து வரி செலுத்துவோருக்கு இடைமுகங்களை உருவாக்குகின்றது. மேலும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு (மாதிரி II மாநிலங்கள்) மதிப்பீடுகள் தணிக்கை, திருப்பித் தருதல், மேல்முறையீடு முதலிய பின்முனை மாதிரிகளை GSTN உருவாக்குகின்றது. CBEC மற்றும் மாதிரி I மாநிலங்களில் (15 மாநிலங்கள்) அவர்களே தங்களுடைய GSTஐ பின்முணை அமைப்புகளை மேம்படுத்திக் கொள்கின்றனர். ஒருங்கிணைக்கப்பட்ட GSTன் முன்முணை அமைப்புடன் பின்முணை அமைப்புகள் பூர்த்தி செய்யப்பட்டு முன்கூட்டியே பரிசோதிக்கப்பட வேண்டும்.

கேள்வி 27. GST ஆளுமையின் கீழ் எவ்வாறு பிரச்னைகள் தீர்க்கப்படப் போகின்றன?

பதில் : சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் ஒரு பிரச்னைக்கு தீர்வுகாண எந்த முறையையும் கையாளுவதற்கு அரசியலமைப்பு நூற்றொன்றாம் சட்ட திருத்தம், 2016 வழிவகுக்கிறது

அ), இந்திய அரசாங்கம் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் இடையில்; அல்லது

ஆ) இந்திய அரசாங்கம் மற்றும் ஏதாவது ஒரு மாநிலம் அல்லது மாநிலங்கள் ஒருபுறமும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் மறுபுறமும்; அல்லது

இ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையில் கவுன்சிலின் சிபாரிசுகளினால் எழுகின்ற அல்லது அமல்படுத்தும்போது உருவாகும் பிரச்னைகள்

கேள்வி 28. இணக்கமான மதிப்பீடு செயல்முறையின் அவசியம் என்ன?

பதில் : CGST/SGST சட்டம் 149வது பிரிவின்படி, ஒரு குறிப்பிட்ட அளவீடுகளை பொருத்து இணக்கப் பதிவு அடிப்படையில் ஒவ்வொரு பதிவு செய்த நபருக்கும் இணக்கப் மதிப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மதிப்பீடுகள் பொதுவெளியில் வெளியிடப்படுகின்றது. இது ஒரு வருங்கால வாடிக்கையாளருக்கு அந்த விநியோகஸ்தர் பற்றிய இணக்க மதிப்பீடு பார்த்து தெரிந்து கொள்ள முடியும். பிறகு அந்த குறிப்பிட்ட விநியோகஸ்தருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ள முடியும். வரி செலுத்துவோர் மத்தியில் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்.

கேள்வி 29. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய உரிமைக் கோரல் GSTக்கு உட்படுமா?

பதில் : CGST/SGST சட்டம் 2(52)வது பிரிவின்படி, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய உரிமைக் கோரல் அனைத்தும் சரக்குகள் என்றே கருதப்படும். CGST/SGST சட்டம் 7வது பிரிவுடன் பட்டியல் III படிக்கும்போது, சரக்கு வழங்கலாகவோ அல்லது சேவை வழங்கலாகவோ கருதப்படாத செயல்பாடுகள் அல்லது பரிமாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பட்டியலிடப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய உரிமைக் கோரல்கள் லாட்டரி, பந்தயம், மற்றும் சூதாட்டம் தவிர வேறு ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடுதலாகும். எனவே தான் லாட்டரி, பந்தயம், மற்றும் சூதாட்டம் போன்றவைகளை GSTன் கீழ் வழங்கலாக கருதப்படுகின்றது. மற்ற நடவடிக்கை எடுக்கக்கூடிய உரிமை கோரல்கள் அனைத்தும் வழங்கலாக கருதப்படவில்லை.

கேள்வி 30. பாதுகாப்பு பத்திர பரிமாற்றங்கள் GSTல் வரி செலுத்த வேண்டுமா?

பதில் : சரக்கு மற்றும் சேவைகளின் விளக்கத்திலிருந்து பாதுகாப்பு பத்திர பரிமாற்றங்கள் குறிப்பாகவே உட்படுத்தப்படவில்லை. எனவே, பாதுகாப்பு பத்திர பரிமாற்றங்கள் GSTக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

கேள்வி 31, வருமானவரி தகவலின் கருத்து என்ன?

பதில் : வருமானவரி தகவலின் அடிப்படைச் சிந்தனையே தனிப்பட்ட மூன்றாம் நபரிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல் மூலமாக பதிவு செய்த நபரின் இணக்க அளவை பரிசோதிப்பதாகும். CGST/SGST சட்டம் 150வது பிரிவின்படி, பதிவு செய்யப்பட்ட பதிவேடுகள், கணக்கு விவரப்பட்டி, அல்லது ஏதாவது குறிப்பிட்ட கால இடைவெளி வருமான வரி தாக்கல் அல்லது வரி செலுத்தப்பட்ட தகவல்கள் அடங்கிய ஆவணங்களை பராமரிக்க வேண்டியது பல அதிகாரிகளின் பொறுப்பாகும். மேலும், சரக்கு மற்றும் சேவைகள் பரிமாற்றங்களின் மற்ற விவரங்கள், அல்லது இரண்டும், அல்லது வங்கி கணக்குகள் தொடர்பான பரிமாற்றங்கள், அல்லது மின் நுகர்வு, அல்லது கொள்முதல் பரிமாற்றம், விற்பனை அல்லது சரக்கு பரிமாற்றங்கள் அல்லது சொத்துகள் அல்லது உரிமைகள் அல்லது தற்போது நடைமுறையில் இருக்கும் எந்தவொரு சட்டத்தின் கீழுள்ள சொத்தினால் கிடைக்கும் வட்டி ஆகிய அனைத்து தகவல்களையும் வருமான வரி தாக்கலின் போது கட்டாயமாக இணைக்க வேண்டும். அதே தகவல்களை குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட நேரத்திற்குள், அதே படிவத்தில் மற்றும் முறையிலும், அந்த அதிகாரியிடம் அல்லது முகவரிடம் பரித்துரைக்கப்பட்டப்படி கொடுக்கப்பட வேண்டும். அப்படி கொடுக்கத் தவறினால், பிரிவு 123ன் படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

கேள்வி 32. வெவ்வேறான கம்பெனிகள், வெவ்வேறான வகையான மென்பொருள் கணக்குத் தொகுப்பை வைத்துள்ளன. ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் பதிவேற்றம் செய்து வைப்பது கட்டாயமாக்கப்படவில்லை. இந்த மாதிரி சிக்கலான மென்பொருளை துறை எப்படி கையாளும் / படிக்கும்?

பதில் : CGST/SGST சட்டம் 153வது பிரிவின்படி, இந்த விஷயத்தின் இயல்பு சிக்கல் மற்றும் வருவாயின் மீதுள்ள ஈடுபாட்டால், துறை ஏதாவது மீளாய்வு, விசாரித்தல், ஆய்வு அல்லது வேறு ஏதாவது நடைமுறைகள் போன்றவற்றை நிபுணர்களின் உதவியை துறை பெறும்.

கேள்வி 33. பெறுநர் திருப்பியனுப்பிய சரக்குகளுக்கான வரி நடவடிக்கை GSTல் உள்ளதா?

பதில் : ஆமாம் உள்ளது. இந்த சூழ்நிலையை பிரிவு 34 விசாரிக்கின்றது. வழங்கப்பட்ட சரக்கை திருப்பியனுப்பிய பெறுநருக்கு சரக்கு அனுப்பிய பதிவு செய்த நபர், விவரங்கள் அடங்கிய கடன் குறிப்பை (credit note)வழங்க வேண்டும். செப்டம்பர் மாதத்தைத் தொடர்ந்து வரும் வருடக் கடைசியிலல்லாமல், எப்பொழுது வழங்கப்பட்டதோ அல்லது தொடர்பான வருடாந்திர வருமானவரி தாக்கல் செய்த தேதியிலோ, முற்பட்டது எதுவாக இருந்தாலும், கடன் குறிப்பை (credit note) வழங்கியமாதத்தில் வருமான வரி தாக்கலில் கடன் குறிப்பு (credit note) விவரங்களை அனுப்புநர் வெளியிட வேண்டும். பெறுநர் தன்னுடைய சரியான வரி தாக்கல் அதே வரி செலுத்தும் காலத்தில், உள்ளிடு வரி வரவை (ITC) திரும்பப் பெறுவதற்கான குறைப்பு தொடர்புடையவற்றுடன் இந்த கடன் குறிப்பு (credit note) விவரங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் அல்லது அடுத்தடுத்து வரக்கூடிய வரி செலுத்தம் காலம் மற்றும் அனுப்புநரின் வெளியீடு வரி செலுத்தலின் குறைப்பை திரும்பப் பெறும் உரிமைகோருதலுடன் பெறுநரின் ITC திரும்பப் பெறும் உரிமைகோரிலில் தொடர்புடைய குறைப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இறுதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட தகவலை இரு தரப்பினருக்கும் தெரிவிக்கப்படும்.

கேள்வி 34. எதிர் லாபமீட்டு நடவடிக்கை என்றால் என்ன?

பதில்: CGST/SGST சட்டம் 149வது பிரிவின்படி, சரக்கு மற்றும் சேவைகள் வழங்கலில் மீது ஏதாவது குறைப்பு வரி விகிதம் அல்லது ITC சலுகையை, விலையை தேவையான அளவு குறைப்பதன் மூலம் பெறுநருக்கு வழங்கப்படும். ITCஐ வேறு பதிவு செய்த நபரால் பெறப்பட்டுள்ளதா அல்லது வரி விகிதத்தின் குறைப்பு உண்மையிலேயே, சரக்கு மற்றும் சேவைகளின் விலையில் தேவையான அளவு குறைக்கப்பட்டுள்ளதா அல்லது இரண்டும் அவரால் அனுப்பப்பட்டதா என்று பரிசோதிக்க அரசாங்கத்தால் ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top