பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சரக்குகள் வழங்கல் இடம் மற்றும் சேவை

சரக்குகள் வழங்கல் இடம் மற்றும் சேவை தொடர்பாக கேட்கப்படும் கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1: GST. யின் கீழ் சரக்குகள் வழங்கல் இடம் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் தேவை என்ன?

பதில்: GST - யின் அடிப்படைக் கோட்பாடு என்னவெனில் வழங்கப்படும் பொருட்கள் எங்கே நுகரப்படுகிறதோ அந்த இடத்தில் வரிவிதிப்பு நடக்க வேண்டும் என்பதுதான். வழங்கப்படும் இடம்தான் அந்தப் பொருட்களின் வரிவிதிப்பிற்குரிய சட்ட வரம்பெல்லை. பொருள் வழங்கும் இடம்தான், அந்தப் பரிமாற்றம் மாநிலத்திற்குள்ள அல்லது மாநிலங்களுக்கு இடையிலா என்பதை உறுதி செய்கிறது. வேறு விதமாய் சொல்வதானால், பொருள் வழங்கல் இடத்தை உறுதி செய்வதன் மூலம்தான் அந்தப் பொருள் SGST மற்றும் CGST வரி விதிப்பிற்குள் வருமா என்பதை முடிவு செய்ய முடியும். இந்த வழங்கல் மாநிலங்களுக்கு இடையே என்றால், அது IGSTயின் கீழ் வரும்.

கேள்வி 2: வழங்கல் தொடர்பான சட்ட ஷரத்துக்கள் சரக்குகள் மற்றும் சேவைகள்  ஆகியனவற்றில் வேறுபாடுகள் இருப்பது ஏன்?

பதில்: சரக்குகள் என்றால் எளிதில் கண்டறிய முடியக்கூடியவை என்பதால் அவை எங்கே பயன்படுத்தப்படுகின்றன என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம். ஆனால்  சேவைகள் எளிதில் அறியப்பட முடியாதவை. அதற்கான காரணங்கள் யாவன:

1. சேவையை அளிக்கும் விதத்தை மிக எளிதாக மாற்ற முடியும். உதாரணமாக, தகவல் தொழில்நுட்பம் பொறுத்தவரை பெரும்பாலான தொடர்புகள் சேவைக்குப் பின் (Post paid) கட்டணம் என்பதிலிருந்து பெரும்பாலான தொடர்புகள், சேவைக்கு முன் (Prepaid) என்று மாறிவிட முடியும். கட்டண விலாசங்களை எளிதில் மாற்றலாம். கட்டணம் வசூலிப்பவர்களின் விலாசங்களையும் எளிதில் மாற்றலாம். மென்பொருள் பழுது பார்த்தல் அல்லத பராமரிப்பு சேவைகள் பயனாளிகளின் இடத்திற்குச் செல்வதற்கு பதிலாக, கணிணியின் மூலமாக செய்ய முடியும். வங்கிச் சேவைகள் சில வருடங்களுக்கு முன்பு வரை, வாடிக்கையாளர் வங்கிக்குச்  செல்ல வேண்டிய தேவை இருந்தது இன்றைய காலகட்டத்தில் வாடிக்கையாளர் எல்லா சேவைகளையும் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடிகிறது.

2. சேவையை அளிப்பவர் சேவையைப் பெறுபவர் அளிக்கப்படும் சேவை ஆகிய எதுவுமே உறுதிசெய்யப்பட முடியாத நிலை எழுந்திருக்கிறது. இவற்றைக் கண்டறிவது கடினம். ஏனென்றால் கண்டறியும் விதத்தில் வழித்தடம் பொருள்  என்று எதுவும் இல்லை.

3. சேவையை அளிப்பவர்க்கு நிலையான இடம் எதுவும் தேவையில்லை. அது போல, சேவையைப் பெறுபவரும் ஓரிடத்தில் இருக்கத் தேவையில்லை. அது போல சேவைக் கட்டண இடத்தையும் இரவோடு இரவாக மாற்ற முடியும்.

4. ஒரே அம்சம், பணி, சேவை ஆகியவை பல இடங்களுக்கும் பரவலாம். உதாரணமாக, ரயில் பாதை கட்டுமானம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு மாநிலத்திலிருந்து துவங்கி, மறு மாநிலத்தில முடியலாம். அது போல ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால், அதை வெளியிடுவதற்கான காப்புரிமையைப் பல மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுமானால், அதை ஒரே ஒரு வணிக உடன்பாடு அல்லது ஒரு விளம்பரம் அல்லது ஓரிடத்தில் அதற்கான நிகழ்ச்சியை நடத்தி, அதை ஒளிபரப்புவது போன்றவை மூலம் செய்ய முடியும். விமான நிறுவனம் சீஸன் டிக்கெட்டுகளை விற்பனை செய்யலாம்.அதில் 10 பயணிச்சீட்டுகள் இருக்கலாம். அதை நாட்டில் எந்த இரு இடங்களுக்கிடையே வேண்டுமானாலம் பயணம் செய்யப் பயன்படுத்த முடியும் அதே போல டெல்லி மெட்ரோ வழங்கும் பயண அட்டையை வைத்துக்கொண்டு நோய்டா, டெல்லி, பரிதாபாத் ஆகிய இடங்களில், எங்கிருந்து வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும். டெல்லி மெட்ரோவிற்கு, அந்த அட்டைக்கான பணத்தை பெறும்போது, பிரயாணி, பயணம் இடங்கள் பற்றி பிரித்தறிய முடியாது.

5. புதிதாகப் பல சேவைகள் உருவாகிவருகின்றன என்பதால் புதுப்புது சவால்களும் உருவாகிக்கொண்டேயிருக்கும். உதாரணமாக 15-20 வருடங்களுக்கு முன்னால்,  DTH, வலைதளம் மூலமாகத் தகவல் டிக்கெட்டுகள் பதிவுசெய்தல், வங்கிப் பணி செல்பேசி மூலமாக தகவல் தொடர்புகள் ஆகியனவற்றை எண்ணிப் பார்த்திருக்க முடியாது.

கேள்வி 4: எந்த ஒரு வணிக/வர்த்தச் சேவை பரிமாற்றத்திலும், என்ன விதமான பதிலிகள் அல்லது அனுமானங்களைப் பயன்படுததிப் பொருள் வழங்கும்  இடத்தைத் தீர்மானிக்கலாம்?

பதில்: சேவைகள் தொடர்பான வணிகப் பரிமாற்றத்தில் உள்ள பல அம்சங்கள் பதிலிகளாகக் கருதி அதன் மூலம் பொருள் வழங்கலின் இடத்தைக் கண்டறியலாம்.

அனுமானம், பதிலி ஆகியன மிகப் பொருத்தமான முடிவை அளிக்கும். அதன் மூலம் பொருள் வழங்கும் இடத்தை உறுதி செய்ய முடியும். அவையாவன:

1. சேவை அளிப்பவர் இருக்கும் இடம்

2. சேவையைப் பெறுபவர் இருக்கும் இடம்

3. குறிப்பிட்ட செயல்பாடு நிகழ்வு நிகழ்ச்சி நடந்த இடம்.

4. பயன்படுத்தப்பட்ட இடம், மற்றும்

5. எந்த இடத்தில் யாருக்கு உண்மையான பலன் சென்றது

கேள்வி 4: B 2 B (பதிவு செய்த நபர்களுக்கு பொருள் வழங்கல்) மற்றும் B 2 C (பதிவு செய்யாத நபர்களுக்க பொருள் வழங்கல்) ஆகியவற்றிற்கு பொருள் வழங்கும் இடம் குறித்துத் தனித்தனியான விதிமுறைகள் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

பதில்: B 2 B வணிகப் பரிவர்த்தனைபோது, அதைப் பெறுபவர், அதற்கான வரியை கடனாகப் பெறுவதால், அது போன்ற வணிக பரிமாற்றங்கள் இயல்பாகக் கடந்துபோகும். B 2 B வழங்கல்களில் வசூலிக்கப்படும் CGST உண்மையில், அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பை உருவாக்குகிறது. இது பொருள்களைப் பெறுபவர்களுக்கு சொத்துபோல. ஏனெனில் பொருளை/சேவையைப் பெறுபவர், எதிர்காலக் கடன்களைப் பெறுவதற்கு உள்ளிட்டுக் கடனைப் பயன்படுத்த முடியும். ஏனென்றால் B 2 B பரிமாற்றத்தின்போது, அதைப் பெறுபவரது இடம், எல்லா தழ்நிலைகளையும் கவனித்துக் கொள்ளும். ஏனென்றால் அடுத்து வரும் கடன்களை, பொருட்களைப் பெறுபவர் தனது பொறுப்பில் ஏற்பார். பொதுவாக, இது போல பொருட்களைப் பெறுபவர், அதை மற்றொரு வாடிக்கையாளருக்கு வழங்குவார். ஆகவே வழங்கப்பட்ட பொருள், B 2 B பரிமாற்றத்திலிருந்து B 2 C பரிமாற்றமாக மாற்றப்பட்டவுடன்தான், அந்தப் பொருள் பயன்படுத்தப்படும். B 2 C பரிமாற்றத்தின்போதுதான், பயன்படுத்தப்பட்டு அதற்கான வரிகள் அரசாங்கத்திற்கு வந்து சேரும்.

கேள்வி 5:  சரக்குகள் எடுக்கப்பட்ட பின், பொருள் வழங்கல் இடம் எதுவாக இருக்கும்?

பதில்: பொருட்கள் வழங்கப்பட்ட இடம் என்பது, அதைப் பெறுபவருக்காகக் குறிப்பிட்ட இடத்தில், நேரத்தில், அந்தப் பொருட்களின் பெயர்வு, பயணம் முடிவுக்கு வரும். அந்த இடம்தான் பொருட்கள் வழங்கப்பட்ட இடம் என்று கருதப்படும்.

கேள்வி 6: பொருட்களை வழங்குபவர், மூன்றாவது நபரின் வழிகாட்டலின்படி, குறிப்பிட்ட நபருக்குக் கொண்டு சேர்க்கிறார் என்ற நிலையில், பொருள் வழங்கல் இடம் எது?

பதில்: இந்த தழலில், மூன்றாவது நபர்தான் பொருட்களைப் பெற்றதாகவும், பொருட்கள் வழங்கப்பட்ட இடம்தான், அவரது தொழில் நடக்கும் இடமாகவும் கருதப்படும்.

கேள்வி 7: வழங்கப்படும் பொருட்கள், பயணத்தில் இருக்கும் வாகனங்களில், கப்பலாக, விமானமாக ரயிலாக அல்லது மோட்டார் வாகனமாக இருந்தால்  பொருள் வழங்கப்பட்ட இடம் எது?

பதில்: இப்படிப்பட்ட சூழலில், எந்த இடத்தில் பொருட்கள்/சரக்குகள் பெறப்பட்டதோ, அந்த இடம்தான் பொருட்கள் வழங்கப்பட்ட இடம்(IGST சட்டத்தின் 10வது பிரிவு) அதே சமயத்தில், சேவைகளைப் பொறுத்தமட்டில், பயணிக்கும் வாகனத்தின் ஆரம்பப் பகுதிதான் (இடம்) பொருள் வழங்கப்பட்ட இடம் என்று  கருதப்படும் (IGST சட்டத்தின் 12 மற்றம் 13 பிரிவுகள்)

கேள்வி 8: B 2 B பரிமாற்றத்தின் போது பொருள் வழங்கல் இடம் இதுவாகத்தான் இருக்கும் என்று இயல்பான அனுமானம் எது?

பதில்: IGST சட்டத்தின்படி பயன்படுத்தப்படும் பதங்கள், பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் பதிவு செய்யப்படாத வரி செலுத்தவோர். பதிவு செய்யப்பட்ட நபருக்கு பொருட்கள் வழங்கப்படும்போது, அவர் இருக்கும் இடம்தான், பொருள் வாங்கல் இடமாகக் கொள்ளப்படும். ஏனென்றால், அவர் பதிவு செய்த வரி செலுத்துபவராக இருப்பதால், அவரது முழு விவரமும், பதிவாகியிருக்கும். அதையேகூட அவரது பதவி விலாசமாகவும்  எடுத்துக்கொள்ளலாம்.

கேள்வி 9: பதிவு செய்யப்படாதவர்களுக்குப் பொருள் வழங்கலின்போது என்ன  விதமாக அனுமானம் இருக்கும்?

பதில்: பதிவு செய்யப்படாதவர்களுக்குப் பொருள் பெறப்பட்ட இடம்தான் பொருள் வழங்கும் இடமாகக் கருதப்படும்.ஆனால் பல சமயங்களில் பொருளைப் பெறும் நபரின் விலாசகம் இல்லையென்றால், பொருளை வழங்கியவரின் / சேவைகள்  அளித்தவரின் இடம்தான், பொருள் வழங்கு இடத்திற்கு பதிலியாகக் கருதப்படும்.

கேள்வி 10: பொதுவாக அசையாச் சொத்துள்ள இடம்தான் பொருள் வழங்கு இடமாகக் கருதப்படும். உதாரணமாக டில்லியிலிருந்த மும்பை வரை நெடுஞ்சாலை போடப்படுகிறது. வழியில் பல மாநிலங்களைக் கடக்கிறது. இப்படி இருக்கும்போது, பொருள் வழங்கல் இடம் எது?

பதில்: அசையாச் சொத்து ஒரு மாநிலத்திற்கும் கூடுதலாகப் பரவியிருக்கும் பட்சத்தில், சேவை வழங்கல் என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெற்ற பணி, அதற்கான ஒப்பந்தம், ஆகியனவற்றை வைத்து அந்தந்த மாநிலத்தில் அளிக்கப்பட்ட சேவை என்று தனித்தனியாகக் கருதப்பட்டு பொருள் வழங்கல்  இடம் எது என்று தீர்மானிக்கப்படும். அது போல, ஒப்பந்தம் இல்லாதிருந்தால் IGST உள்ளூர் வழங்கல்கள் சட்டப் பிரிவு 12(3) - ன்படி தீர்மானம் செய்யப்படும்.

கேள்வி 11: IPL கிரிக்கெட் போட்டிகளைப் போல ஒரு நிகழ்ச்சி பல மாநிலங்களில்  நடத்தப்படும்போது, சேவைகள் வழங்கும் இடமாக எது கருதப்படும்?

பதில்: எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அந்த சேவையைப் பெறுபவர் பதிவு செய்தவராக இருந்தால் இவ்வகையான சேவைகளை அளிக்கும் நபர் எங்கிருக்கிறாரோ, அவர் இருக்கும் இடம்தான் சேவை வழங்கல் இடமாகக் கருதப்படும்

அதே சமயம், சேவையைப் பெறுபவர் பதிவுசெய்திராவிட்டால், அந்த நிகழ்வு நடக்கும் இடம்தாம், சேவை வழங்கல் இடமாகக் கருதப்படும். இந்த நிகழ்வு பல மாநிலங்களில் நடைபெறுவதால், அது நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் சேவையின் அளவிற்கு ஏற்றபடி, மதிப்பிடப்படும். இது பற்றிய விரிவான விளக்கம்  IGST சட்டம் 12(7) குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி 12: பொருள்களைப் போக்குவரத்தின் மூலமாகக் கொண்டு செல்லும் சேவைகள், (இதில் கடிதப் போக்குவரத்து மற்றும் கூரியரும் அடங்கும்) இருந்தால்  பொருள் வழங்கல் இடமாக எதைக் கருதுவது?

பதில்: உள்ளுர் வழங்கல் என்ற பட்சத்தில், அதைப் பெறுபவர் பதிவு செய்திருந்தால் அந்த நபரின் இடம்தான் பொருள் வழங்கும் இடமாகக் கருதப்படும். அவர் பதிவு செய்யாமலிருந்தால், பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு, எங்கே கொடுக்கப்படுகிறதோ அல்லது சேகரிக்கப்படுகிறதோ அந்த இடம்தான் பொருள்  வழங்கல் இடமாகக் கருதப்படும். (IGST சட்டம் 12 பிரிவு)

சர்வதேச வழங்கல்கள். போக்குவரத்து சேவை வழங்கல் இடங்கள் கொரியர்  சேவைகளைத் தவிர மற்றவை, அந்த பொருள் போய்ச் சேரும் இடமாக இருக்கும். கூரியரைப் பொறுத்தமட்டில், சேவைகள் வழங்கும் இடம் என்றால் பொருட்கள், கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் இடம்தான் பொருள் வழங்கல் இடம். அதே சமயம், இப்படிக் கொடுக்கும்போது, அது சேர வேண்டிய இடம், சிறு அளவில் இந்தியாவில் இருந்தாலும் வழங்கல் இந்தியாவில் நடந்ததாகக் கருதப்படும். (IGST சட்டப் பிரிவு 13(3) 13(6) மற்றும் 13(9) ஆகியன.

கேள்வி 13: ஒரு நபர் மும்பையிலிருந்து டெல்லி, மறுபடியும் மும்பை என்றவாறு பயணம் செய்தால், எந்த இடம், பிரயாணிக்கான போக்குவரத்துச் சேவை  வழங்கலாகக் கருத முடியும்?

பதில்: அந்த நபர் பதிவு செய்திருந்தால், சேவை வழங்கல் இடம் சேவையைப் பெறுபவரது இடம்தான். அவர் பதிவு செய்யாவிட்டால், மேல் நோக்கிச் செல்லும் பயணம் எங்கிருந்து துவங்குகிறதோ அதுதான் சேவை வழங்கல் இடம். உதாரணமாக, மும்பை டெல்லி மார்க்கத்தில் டெல்லிதான் சேவை வழங்கல்  இடம்.

அதே சமயம் திரும்பி வரும் பயணத்தில் வழங்கு இடம் என்றால் டில்லியாகவே இருக்கும். இதைத் தனிப் பயணமாகவே கருத வேண்டும். (IGST சட்டம், 12(9)  பிரிவிற்கான விவரக் குறிப்பு)

கேள்வி 14: ஏர் இந்தியா நிறுவனம் குறிப்பிட்ட ஒரு நபருக்கு இந்தியா முழுவதும் செல்லக்கூடிய அனுமதிச் சீட்டுபயணச் சீட்டு வழங்குகிறது என்று வைத்துக் கொள்வோம், இதில் வழங்கலின் இடம் எதுவாக இருக்கும்?

பதில்: இந்த விஷயத்தைப் பொறுத்தவரை விற்பனை விலைச்சீட்டு அளிக்கப்படும்போது, எங்கிருந்து பயணம் தொடங்குவது என்பதைப் பற்றிய விவரம் கிடைக்காது. ஏனென்றால் பிரயாணத்திற்கான அதன் வழிகளுக்கான அனுமதி எதிர்கால பயன்பாட்டுக்குத்தான். ஆகவே, வழங்கல் இடம் புறப்படும் இடமாக இருக்க முடியாது இது போன்ற சந்தர்ப்பங்களில் ஏற்கெனவே இருக்கும் சட்ட விதிமுறை (IGST-யின் 129) பிரிவு) பொருந்தும்.

கேள்வி 15: செல்பேசி இணைப்புகளுக்கான வழங்கல் இடம் என்னவாக இருக்க  முடியும்? பொருள் வழங்குபவரின் இடமாக இது இருக்க முடியுமா?

பதில்: உள்நாட்டு வழங்கல்களைப் பொறுத்தவரை, பொருள் வழங்குபவரின் இடமாக இருக்க முடியாது.ஏனென்றால் செல்பேசி நிறுவனங்கள் பல மாநிலங்களில், இந்த சேவைகளை வழங்கிவருகிறது. இதில் பல சேவைகள், மாநிலங்களுக்கிடையில் இருக்கிறது. பொருள் வழங்குபவர்களின் இடம்தான், வழங்கல் இடம் என்று எடுத்துக்கொண்டால் நுகர்வுக் கேட்பாடு வலுவிழந்து விடம். ஏனென்றால், எல்லா வருவாயும், பொருள் வழங்குவோர் இருக்கும் சில  மாநிலங்களுக்கு மட்டும் சென்றுவிடும்.

ஆகவே செல்பேசி இணைப்பு வழங்கல் இடம் என்பது, அந்த இணைப்பு சேவைக்கு முன் கட்டணம் சேவைக்குப் பின் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானமாகும். சேவைக்குப் பின் கட்டணம் (Post paid) இணைப்பாக இருந்தால், அது குறித்த கட்டணச் சீட்டில் இருக்கும விலாசம் எந்தப்பகுதியில் இருக்கிறதோ, அதுதான் சேவை வழங்கல் இடமாகக் கருதப்படும். சேவைக்கு முன் கட்டணம் (Pre paid) இணைப்பு என்றால், இந்தக் கட்டணம் எந்த இடத்தில் பெறப்படுகிறதோ, அதுதான் சேவை வழங்கல் இடமாகக் கருதப்படும். அதே சமயம், சேவை புதுப்பித்தல் (Recharge) வலைதளம் வழியாக நடந்தால் அதைப் பெறுபவர் இருக்கும்  இடம்தான், சேவை வழங்கல் இடமாக இருக்கும். சர்வதேச பொருள் வழங்குவோர். இந்தச் சேவைகளைப் பெறுபவர் இருக்கும்  இடங்கள்தாம், சேவை வழங்கும் இடமாகக் கருதப்படும்.

கேள்வி 16: கோவாவில் இருக்கும் ஒருவர், டில்லியில் இருக்கும் ஒரு பங்குத்தரகரின் மூலம் மும்பையில் இருக்கும் NSE-யின் பங்குகளை வாங்குகிறார்.  வழங்கல் இடம் என்னவாக இருக்கும்?

பதில்: இந்த சேவைகளை வழங்கும் நபர்கள்நிறுவனங்களின் கட்டணச் சீட்டுகளில், வழங்கல் இடம், அதைப் பெறுபவரின் விலாசமாகத்தான் இருக்கும் என்பதால் அதுதான் வழங்கல் இடம். ஆகவே கோவாதான் வழங்கல் இடமாக இருக்கும்.

கேள்வி 17: ஒருவர் மும்பையிலிருந்த குல்லு-மனாலிக்குச் செல்கிறார். அங்கிருக்கும் ICICI வங்கியின் சேவைகள் சிலவற்றைப் பெறுகிறார். வழங்கல்  இடம் என்னவாக இருக்கும்?

பதில்: அந்த நபர் பெறும் சேவை, அவரது வங்கிக் கணக்குத் தொடர்பானது இல்லையென்றால், வழங்குபவரின் இடம். அதே சமயம் அந்த நபர் பெறம் சேவை, அவரது வங்கிக் கணக்குகடன் சம்பந்தப்பட்டு இருந்தால், சேவை வழங்கும் இடம் மும்பையாகக் கருதப்படும். ஏனென்றால் வழங்குபவரின் ஆவணப் பதிவுகளில் அந்த சேவையைப் பெற்றவரது விலாசம்தான் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

கேள்வி 18: குர்கான் (Gurgaon) பகுதியில் வசிக்கும் ஒரு நபர், ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பையிலிருந்து டெல்லிக்குச் செல்கிறார். அவருக்கான பயணக் காப்பீடு மும்பையில் செய்துகொள்கிறார் இதில் வழங்கல் இடம் எதுவாக  இருக்கும்?

பதில்: பொருள் சேவை வழங்குபவரின் சேவைப் பதிவு ஆவணங்களில், அதைப் பெற்றவரது விலாசம்தான் குறிப்பிடப்பட்டு இருக்கும் என்பதால், அதுதான் வழங்கல் இடமாகக் கருதப்படும் (IGST சட்டப் பிரிவின் ஷரத்து 12(13).

ஆதாரம் : http://www.cbec.gov.in

2.6875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top