பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜி.எஸ்.டி.என். மற்றும் ஃப்ரண்ட் எண்ட் (FRONTEND) தொழில்

ஜி.எஸ்.டி.என். மற்றும் ஃப்ரண்ட் எண்ட் (FRONTEND) தொழில் தொடர்பான கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1: ஜி.எஸ்.டி.என். என்றால் என்ன?

பதில்: சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வலைத்தொடர்பமைப்பு (Goods and services tax network) என்பது, லாபநோக்கின்றி, மத்திய மற்றும் மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட, அரசு சாரா நிறுவனம். இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி செலுத்துவோர் மற்றும், பயனுரிமையாளர்களுக்குச் சேவை அளிக்க உருவாக்கப்பட்டது தான் இது. இதில் முன்தளச் சேவைகள், பதிவுகள், திருப்புதல்கள் (Returns) கட்டணங்கள் செலுத்தல், போன்றவை வழங்கப்படும். இந்த வலைதளம், அரசுக்கும், வரி செலுத்துவோருக்கும் இடையே தொடர்புமையமாக இருக்கும்.

கேள்வி 2: ஜி.எஸ்.டி.என். உருவாக்குவதற்கான தேவை என்ன?

பதில்: ஜி.எஸ்.டி.என். முறைமைத்திட்டம் என்பது தனித்துவம் பெற்ற சிக்கலான தகவல் தொழில்நுட்ப முன் முயற்சி. இதைத் தனித்தன்மை பெற்றது என்று குறிப்பிடக் காரணம், வரி செலுத்துவோர், மத்திய மற்றும் மாநில அரசு ஆகியோர் கூட்டாகப் பயன்படுத்தப்படும் தகவல் தொழில் நுட்பக் கட்டமைப்பு இது.

தற்போது மத்திய, மாநில மறைமுக வரி நிர்வாகங்கள் தனித்தனிச் சட்டங்களின் கீழ் இயங்குகின்றன. அதனால் அவற்றிற்கான தகவல் தொழில் நுட்ப வலைதளங்களும் தனித்தனியாகவே இருக்கின்றன.

இவற்றை ஜி.எஸ்.டி அமல்படுத்தலுக்காக ஒன்றிணைப்பது மிகச்சிக்கலான விஷயமாகவே இருக்கும். ஏனென்றால் ஒட்டு மொத்த மறைமுக வரி விதிப்பு முறையை ஒருங்கிணைப்பதன் மூலம், வெவ்வேறு வரி நிர்வாக அமைப்புகளை (மத்திய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள்) ஒரே மாதிரியான தரத்தில் தகவல் தொழில் நுட்ப முறைமைகளாக மாற்றி, ஒரே விதமான வடிவமைப்புடன், வரி செலுத்துவோர், மற்றுமிருக்கும் வெளி பயனுரிமையாளர்கள் போன்றவர்கள் தொடர்பு கொள்ளத்தக்க தளம் அமைக்கப்பட்ட வேண்டும். இதைத் தவிர, ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் அடிப்படையில், அதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் முறையாதலால் மாநிலங்கள் இடையிலான சரக்கு மற்றும் சேவைகள் ஆகியவற்றின் வணிகம், வர்த்தகம் போன்றவற்றுக்கு, செயல்படத்தக்க துடிப்புள்ள தீர்வுகளுக்கான வழி முறைகாணும் முறைமை அவசியமானது.

இது எப்போது சாத்தியமாகும் என்றால், வலுவான தகவல் தொடர்புக் கட்டமைப்பு மற்றும் இந்த விஷயத்தின் பயனுரிமையாளர்களிடையே தகவல் பரிமாற்றம், அதை சரி பார்ப்பது, ஆய்வு செய்வது போன்றவற்றைச் சாத்தியமாக்கும் முதுகெலும்பு போன்ற சேவை மிக முக்கியம். இதில் பயனாளியாக, வரி செலுத்துவோர் மாநிலங்கள், மத்திய அரசு, வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியன இதில் அடங்கும். இந்த நோக்கங்களை அடைவதற்குத் தான் ஜி.எஸ்.டி.என். உருவாக்கப்பட்டது.

கேள்வி 3; ஜி.எஸ்.டி.என். எப்படி உதயமானது?

பதில்: 21.7.2010இல் நடந்த மாநிலங்களின் நிதியமைச்சர்களின் உயர் அதிகாரக் கமிட்டியின் (EC) 4 - ஆவது கூட்டத்தில் மிக வலுவான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு தேவை என்பது விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. க்கு வலுவான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்க உயர்நிலை அதிகாரக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக டாக்டர் நந்தன் நீல்கேனி, கூடுதல் செயலாளர் (வருவாய்த்துறை) மற்றும் உறுப்பினர்களாக (B&C) CBEC, DG (முறைமைகள்) CEEC எஃப்எ மத்தியநிதித்துறை ECயின் செயலர் மற்றும் ஐந்து மாநிலங்கள் வர்த்தக வரித்துறையின் ஆணையர்கள் (மஹாராஷ்டிரா, அஸ்ஸாம், கர்நாடகா, மேற்குவங்காளம், குஜராத்) ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுமம் தான், தேசியத் தகவல் பயன்பாடு (NCSPV) என்ற மையம் உருவாக்கத் தேவையான வழி முறைகள், செயல்முறைகள் ஆகியவற்றை பரிந்துரைக்க வேண்டும். இதைவைத்து, ஜி.எஸ்.டி. வலைதளம் (ஜி.எஸ்.டி.என்.) என்ற பொதுவான, பொது நுழைவாயில் உருவாக்கவேண்டும் என்பது தான் நோக்கம். தேசியத் தகவல் பயன்பாட்டு மையம், அதன் அமைப்பு செயல்படும் வழிமுறைகள் ஆகியவை அடங்கிய விளக்கமான அமல்படுத்தும் திட்ட வரையரையைப் பரிந்துரை செய்யவேண்டும். இதை எப்படி உருவாக்குவது என்பதற்கான செயல்வரையறைத் திட்டமும் உருவாக்குவது மட்டுமின்றி இது தொடர்பான பயிற்சியளிப்பு மற்றவர்களை அணுகுவது போன்றவற்றைப் பற்றியும் விவரமாக இந்தக்குழு பரிந்துரைகள் செய்யவேண்டும்.

2010 மார்ச் மாதம் 10ஆம் தேதி, நிதியமைச்சகம் TAGUP-ஐ உருவாக்கியது. தேசியத்தகவல் பயன்பாட்டுமையங்கள், தனியார் நிறுவனங்கள் போல உருவாக்கப்பட வேண்டும். இதன் பொதுவான நோக்கமும், ஜி.எஸ்.டி உள்ளிட்ட பெரிய சிக்கலான தகவல் தொழில்நுட்பத் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தவேண்டும் என்பதுதான். TAGUP-க்குக் கொடுக்கப்பட்டபணி, ஜி.எஸ்.டி. TIN, NPS போன்ற தகவல் தொழில்நுட்பத்திட்டங்கள் தொடர்புடைய தொழில்நுட்பச்சிக்கல்களை ஆய்வு செய்து, தீர்வைக் கண்டறிவதுதான்.

உயர்மட்ட அதிகாரக்குழுமம் (EG) ஆகஸ்ட் 2010இலிருந்து 2011 ஆகஸ்ட் வரையில் சில கூட்டங்கள் நடந்தன. நீண்ட நெடிய ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின்னர் ஜி.எஸ்.டி. முறைமைத்திட்டத்தை அமல்படுத்த சிறப்பு நோக்க அமைப்பை உருவாக்கப் பரிந்துரை செய்தது. ஏற்கெனவே அதிக எதிர்ப்புகள் உள்ள தழ்நிலையில் திறமையான, நம்பத்தகுந்த சேவைகள் அளிக்கப்படுவதை உறுதி செய்ய புதிய அரசுசாரா அமைப்பு ஒன்றை ஜி.எஸ்.டி.என். SPV க்காகவே EG உருவாக்க வேண்டும். அதில் 49% பங்குகள் (மத்தியஅரசு 24.5. மாநிலங்கள் 24.5%) என்றவிதத்தில் அரசாங்கம் வைத்திருக்க வேண்டும். இந்த முடிவுக்கு வருவதற்கு முன்பாக, சுதந்திரமான நிர்வாகம், முக்கிய அம்சங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு, நெகழ்வுத்தன்மையுடனான இயக்க அமைப்பு முடிவு செய்வதில் வேகமான செயல்பாடுகள், திறமையான மனிதவள ஆற்றலை வேலைக்கு அமர்த்துவது, அவர்களைத் தொடர்ந்து வேலையில் இருக்கும்படி செய்வது ஆகியனபற்றியும் EG விளக்கமான பரிந்துரைகளை அளித்திருந்தது.

ஜி.எஸ்.டி.என். அமைப்பின் மிக முக்கியமான பங்கு, அதனுள் சேரக்கூடிய மிக முக்கியமான தகவல்கள் ஆகியனவற்றால், அரசாங்கம் இதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் விரும்பியது. SPV மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடு, அதற்கான நிர்வாகமன்ற உருவாக்கம், சிறப்புத் தீர்மானங்கள் உரிமை, பங்குதாரர்களின் ஒப்பந்த முறைமைகளைக் கட்டுப்படுத்தல், அரசாங்கத்தின் சார்பில் அதிகாரிகள் இருப்பது, மற்றும் ஜி.எஸ்.டி.என். SPV மற்றும் அரசுக்கிடையே ஒப்பந்தங்கள் பங்கு உரிமையே, மத்திய அரசிற்கு 24.5% என்றும் அனைத்து மாநிலங்களின் கூட்டுப்பங்கு 24.5 என்று இருக்கும். இரண்டும் சேர்ந்தால் பேச எந்த தனியார் நிறுவனத்தைக் காட்டிலும், மிக அதிகமாக இருக்கும்.

இந்த நிறுவனத்தைத் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மிகச் சீராக நடத்த வேண்டும், அப்போது தான் 100% எதிர்பார்ப்பது நடக்கும் என்ற அடிப்படையில் செயல்பட்டு EG இதற்கான தொழில் நடைமுறை அறிவுத்திறன் இந்திய அரசு மற்றும் மாநிலங்களின் அதிகாரிகளிடம் இருந்தது. ஆனாலும் கூட தகவல் தொழில்நுட்பத்தை முழுவதும் பயன்படுத்துவதால் தொழில்முறை சார்ந்தவர்கள் இந்த நிறுவனத்தை நடத்த வேண்டும். உதாரணமாக இதே போன்ற ஒரு நிறுவனமான NSDC சுதந்திரமான முறையில் இயங்குவது மட்டுமின்றி, தொழில்முறைத்திறன் படைத்தவர்கள் தாம் இதை நிர்வகிக்கின்றனர். அரசு சாராநிறுவனமாக இருந்தால், சுதந்திரமாகச் செயல்படமுடியும் என்று EG பரிந்துரைத்தது.

இந்தப்பரிந்துரைகள், 2011 ஆகஸ்டு மாதம் 19ஆம் தேதியில் நடந்த மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் அடங்கிய உயர்அதிகாரக்குழு, 3 ஆவது கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது. இது தவிர 2011 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 14ஆம் தேதி நடந்த 4ஆவது EC கூட்டத்தில் இப்பரிந்துரைகள் மறுபடியும் விவாதிக்கப்பட்டன.

ஜி.எஸ்.டி.என். தொடர்பான ஜி.எஸ்.டி.க்குத் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புடன் லாபமில்லா நோக்குடன் சட்டப்பிரிவு 25இன் அடிப்படையில் நிறுவனத்தை உருவாக்குவது, அதனுடைய அடிப்படை உரிமைக்கட்டுப்பாடு அரசிடமே இருக்க வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை மாநிலநிதி அமைச்சர்களின் உயர் அதிகாரகமிட்டி ஏற்றுக்கொண்டது. இதற்கான கூட்டம் 14.10.11 அன்று நடந்தது.

வருவாய்த்துறை, சிறப்பு நோக்குவணிகம் (SPV) ஒன்றை உருவாக்கி அதை சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவலையிணைப்பு என்பது பற்றிய (ஜி.எஸ்.டி.என். - SPV) குறிப்பை மத்திய மந்திரிசபையின் பரிசீலனைக்கு வைக்கப்பட்ட இதை அமைச்சரவை 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி அங்கீகாரம் அளித்து ஏற்றுக் கொண்டது. இதைத்தவிர மத்திய அமைச்சரவை பின்வரும் ஷரத்துக்களையும் ஏற்றுக்கொண்டது.

1. ஜி.எஸ்.டி.என். - SPV யில் முதலீடு செய்ய பொருத்தமான, விருப்பமுள்ள அரசுசாரா நிறுவனங்களை நிதி அமைச்சகம் அடையாளம் கண்டு ஆய்வு செய்து முடிவுசெய்யும்.

2. SPVயில் மீதான அரசின் கட்டுப்பாடு, அதன் இயக்குனர்குழும உருவாக்கம், சிறப்புத் தீர்மானங்கள் கொண்டுவரும் முறைமைகளைத் தீர்மானித்தல், மற்றும் பங்குதாரர்கள் ஒப்பந்தம், அரசு அதிகாரிகளை மாற்றுப்பணியாக அமர்த்துவது மற்றும் ஜி.எஸ்.டி.என். / SPV மற்றும் அரசுகளிடையே ஒப்பந்தங்கள்.

3. ஜி.எஸ்.டி.என். SPVயின் இயக்குனர் குழுமத்தில் 14 இயக்குனர்கள் இருப்பார்கள். இதில் மத்திய அரசிலிருந்து 3 இயக்குனர்களும், 3 மாநிலங்களில் இருந்தும், 3 இயக்குனர்கள் தனியார் பங்குதாரர்களிடமிருந்தும், 3 இயக்குர்கள் பெருமதிப்பிற்குரிய சமுகப் பெரியோர்கள், இவர்களைத் தவிர குழுமத்திய்தலைவராக, மத்திய, மாநில அரசுகள் இணைந்த ஒரு முறைமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். ஜி.எஸ்.டி.என். SPV ன் CEO வெளிப்படையான தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

4 அரசு அதிகாரிகள் மாற்றுப்பணியாக இங்கே பணியாற்ற ஏதுவாக சி.ஜி.எஸ்.டி. SPVஇன் விதிமுறைகள் தளர்த்தப்படும். இதன்மூலம், அந்த அமைப்பைக் கட்டுப்படுத்தமுடியும். இதைத் தவிர இந்ததுறையைப் பற்றிக் கற்றுணர்ந்து கொள்ளமுடியும்.

5. ஜி.எஸ்.டி.என். / SPV தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளும் அளவுக்கு வருமானத்தை உருவாக்கும்படியான கட்டமைப்பைக் கொண்டது. வரி செலுத்துவோரிடமிருந்து பயனாளிக்கட்டணம், மற்றும் இந்த அமைப்பிலிருந்து சேவையைப்பெறும் வரித்துறை ஆணையம், மையங்களிலிருந்து கட்டணம் வசூலிப்பது மூலமாக வருமானத்தை ஈட்டும்.

6. ஜி.எஸ்.டி.என். SPV அமைப்பு தான், ஒருங்கிணைக்கப்பட்டவரிகள் தொடர்பான சேவைகளை வழங்கும் தனி உரிமை பெற்ற தேசிய முகமையாகும். வேறு யாராவது இது போன்ற சேவையை வழங்க முன்வந்தால், அவர்கள் இந்த அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியமானது.

7. இந்த SPV உருவாக்கப்பட்ட பின்னர், அது இயங்குவதற்கு ஒரு முறை சுழற்சி இல்லாத மான்யத் தொகையாக ரூ.315 கோடி வழங்கப்படும். இது மூன்று வருடகால செயல்பாட்டிற்கானது.

கேள்வி 4: ஜி.எஸ்.டி.என்.ன் விகிதப்பங்கு அமைப்பு மற்றும் வருவாய் கட்டமைப்பு என்றால் என்ன?

பதில்: விதிதப்பங்கு அமைப்பு மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்றாற்போல, ஜி.எஸ்.டி. வலையமைப்பு லாப நோக்கில்லை அரசு சாரா தனியார் லிமிடெட் நிறுவனமாக, கம்பெனிகள் சட்டம் 8இன்படி (1956 ஆண்டு) பின்வரும் விகிதப்பங்குகள் அமைப்புடன் இயங்குகிறது.

மத்திய அரசாங்கம் - 24.5%

மாநில அரசுகள் - 24.8%

HDFC - 10%

HDFC வங்கி - 10%

ICICI வங்கி - 10%

NSE அடிப்படைத்திட்ட முதலீட்டு நிறுவனம் - 10%

LIC வீட்டு வசதி நிதியமைப்பு லிமிடெட் - 10%

ஜி.எஸ்.டி.என்.இன் தற்போதைய அமைப்பு, நீண்ட நெடுங்காலம், பல கட்ட விவாதங்களுக்குப்பின், மாநில அரசுகளின் நிதியமைச்சகர்கள், மத்திய அரசின் நிதியமைச்சர் ஒப்புதலைப் பெற்றுத்தான் உருவாக்கப்பட்டது.

வருவாய் மாதிரி 2013ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி.என். SPV உருவாக்கிச் செயல்பட மத்திய அரசு மான்யமாக ரூ.315 கோடிகள் தருவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தத்தொகை 313.2015 லிருந்து 313.2015 வரையிலான செலவினங்களுக்கானது.

முதல்கட்டமாக ரூ. 14396 கோடிகள் வழங்கப்பட்டது. இதில் மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் 62.11 கோடிகள் மட்டுமே செலவழிக்கப்பட்டது. மீதித் தொகை அரசாங்கத்திற்கு திருப்பியளிக்கப்பட்டது. 2017-17 நிதியாண்டின் போது, ஜி.எஸ்.டி.என். CVP ஒரு வணிக வங்கியிலிருந்து தனக்கான நிதியைப் பெற்றது. இதைவைத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுக்கு சேவைகள் அளிப்பதற்குத் தகவல் தொழில்நுட்பதளம் ஒன்றை அமைத்தது. இதில் ஜி.எஸ்.டி. வலைதள நுழைவாயில் மூலம் இச்சேவைகள் அளிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனுடன், 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வைத்தது. ஜி.எஸ்.டி.என்.இன் வருவாய் மாதிரியை மத்திய, மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள் அடங்கிய உயர் அதிகார மட்டக்கமிட்டி அங்கீகாரம் செய்தது. இதன்படி ஜி.எஸ்.டி. வலைதளத்திலிருந்து சேவைகளைப் பெறும் 6) If செலுத்துவோர். மற்று முள்ள உரிமைப்பங்காளிப்பாளர்கள் பயன்படுத்துவதற்கு அவர்கள் சார்பாக மத்திய மாநில யூனியன் பிரதேச அரசுகள் சமமான அளவில் கட்டணத்தை அளிக்கும். மாநிலங்களுக்கான பயனாளிகள் கட்டணத்தைச் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள். இது பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கையைப் பொறுத்து இருக்கும்.

கேள்வி 5: ஜி.எஸ்.டி.என். வலைதளம் எந்த விதமான சேவைகளை அளிக்கும்?

பதில்: ஜி.எஸ்.டி.என். கீழே குறிப்பிட்ட சேவைகளை ஜி.எஸ்.டி. வலைதளம் மூலமாக அளிக்கும்.

1. பதிவு செய்வது (இப்போதுள்ள இடம் பெயர்ந்திருக்கும் வரி செலுத்தவோ, பதிவு செய்யலாம். இந்த முறைமை, 2015 நவம்பர் 8இலிருந்து துவங்கியது.

2. கட்டண நிர்வாகம், இதில் பல்வேறு மின்னணு பணப்பரிமாற்றங்கள் மூலமும் வங்கிச் சேவைகளோடு ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதன் வழியாகவும் சாத்தியமாக்குதல்

3. ரிடர்ன் தாக்கல் செய்தலும் அதன் செயல் முறைகளும்,

4. வரி செலுத்துபவர் நிர்வாகம் இதில் கணக்கு நிர்வாகம், அறிவிக்கைகள் அனுப்புதல் / வெளியிடுதல், தகவல் மற்றும் நிலைபற்றி தொடர்தகவல் பெறுவது.

5. வரித்துறை ஆணையத்தில் கணக்கு மற்றும் லெட்ஜர் நிர்வாகம்.

6. மத்திய, மாநில அரசுகளிடையே கட்டணங்கள் / பங்களிப்பு போன்றவைகுறித்து (ஜி.எஸ்.டி.என் உடன்பாடு உட்பட) முடிவான உருவாக்குதல் ஜி.எஸ்.டி. க்கான அனைத்தையும் முறைப்படுத்துவது.

7. பொருள்கள் / சேவைகள் இறக்குமதி முறைமைகள், மற்றும் சமரசத்திட்டங்களை உருவாக்க மற்றும் சுங்கத்துறையின் ED முறைமைகளோடு ஒருங்கிணைப்பது.

8. MISஐச் சாத்தியமாக்குவது தேவைகளின் அடிப்படையில் தகவல்கள் மற்றும் தொழில் / வர்த்தகம் குறித்த ஏற்றுமதி தகவல்கள் அளிப்பது.

9. பொதுவான ஜி.எஸ்.டி போர்டல் மற்றும் வரி நிர்வாக முறைமைகளிடையே கருத்துப் பரிமாற்றத்தைப் பரிமாறுவது.

10. பயனுரிமையாளர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பது.

11. வரித்துறை அதிகாரிகளுக்கு தொழில் வர்த்தக நிலை குறித்து ஆய்வுத் தகவல்களையும் ஒற்றுத் தகவல்களையும் அளிப்பது.

12. பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் சிறந்த நடைமுறைகளைக் குறித்து ஆய்வு செய்வது.

கேள்வி 6: ஜி.எஸ்.டி.என். / மாநிலங்கள் / CBEC ஆகியோருக்கிடையே உள்ள ஒருங்கிணைப்பு முறைமை என்ன?

பதில்: ஜி.எஸ்.டி. நிர்வாக முறையின் கீழ் வரி செலுத்துபவருக்கு தேவைப்படும் மிக முக்கியமான சேவைகளான, பதிவு செய்வதற்கு விண்ணப்பிப்பது, விற்பனை விலைச்சீட்டுகளை (Invoices) தரவேற்றம் செய்வது, ரிடர்ன் தாக்கல் செய்வது, வரிக் கட்டணங்களை செலுத்துதல் ஆகியனவற்றை ஜி.எஸ்.டியின் தளத்தில் செய்து கொள்ளலாம். எல்லா விதமான சட்டரீதியிலான செயல்பாடுகள் (பதிவுகளை அங்கீகாரம் செய்வது, தாக்கல் செய்யப்பட்ட ரிடர்ன் கணக்கை மதிப்பீடு செய்வது, தேவையான விசாரணைகளை மேற்கொள்வது மற்றும் கணக்கீடு போன்றவை) மத்திய, மாநில அரசுகளைச் சார்ந்த வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். இதன் மூலம் ஆரம்பகட்டப்பணிகள் (ஜி.எஸ்.டி) வலைதளவாயில் மூலமான சேவைகள்) சேவைகளை ஜி.எஸ்.டி.என். வழங்கும் பின்னுள்ள பணிகளுக்கான செய்முறைக் கட்டமைப்பை மாநிலங்களும், மத்திய அரசும், தாங்களாகவே உருவாக்கிக்கொள்ளும். அதே சமயத்தில் 27 மாநிலங்கள் (இவற்றை மாதிரி 2 மாநிலங்கள் என்று குறிப்பிடுவார்கள். தங்களுக்கான பின்கட்டப்பணிகளுக்கான செய்முறைக் கட்டமைப்பை ஜி.எஸ்.டி.என். உருவாக்கித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். BEC மற்று முள்ள 9 மாநிலங்கள் (மாதிரி - 1) ஆகியன. தங்களுக்குத் தேவையான முறைமையைத் தாங்களே உருவாக்கி கொள்வதற்காக அறிவித்தன. மாதிரி 1 மாநிலங்கள் / CEEC யின் வசம் உள்ள (பதிவுகள், ரிடர்ன்கள் செலுத்தப்பட்ட கட்டணங்கள்) வரி செலுத்துவோரால் சமர்ப்பிக்கப்பட்ட முழுவிவரங்கள் தேவையின் அடிப்படையில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படும். இது தகவலுக்காகவும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும் இருக்கலாம்.

கேள்வி 7: பதிவு செய்வதில் ஜி.எஸ்.டி.என்.இன் பங்களிப்பு என்ன?

பதில்: பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவம். ஜி.எஸ்.டி. போர்டலில், ஆன்லைன் சேவையாகப் பெறலாம். முக்கியத் தகவல்களான பான் எண், தொழில், வர்த்தக விவரங்கள், ஆதார், CINDIN ஆகியன (தேவையின் அடிப்படையில்) அந்தந்த முகமைகளின் தகவல் ஒருங்கிணைப்பு மூலம் ஜி.எஸ்.டி. போர்டல் சரி பார்க்கும். (அதாவது CBDT, UD, MCA போன்றவை) இதன் மூலம் குறைந்த பட்ச ஆவணங்கள் மட்டுமே அளித்தலை உறுதி செய்யும். விண்ணப்பவிவரம் அதற்கு ஆதாரங்களாக வைக்கப்படும் ஸ்கேன் செய்த ஆவணங்கள் ஆகியன. ஜி.எஸ்.டி.என். மூலம், மாநிலங்கள் / மத்திய அரசு ஆகியனவற்றிற்கு அனுப்பப்படும் இவற்றை ஆய்வு செய்தபின் தேவையான விளக்கங்கள் கோரியோ, அல்லது பெறப்பட்ட விவரங்களை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது, போன்றவற்றையும் இதைப்பற்றிய தகவல்களை மின்னணு மூலமான அதிகாரக் கையொப்பத்துடன் ஜி.எஸ்.டி.என்.-க்கு அனுப்பிவைக்கப்படும். வரி செலுத்துவோர், இதைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கேள்வி 8: ஜி.எஸ்.டிஎன்இல் இன்ஃபோஸிஸ் நிறுவனத்திற்கு பங்கு என்ன?

பதில்: இன்ஃபோஸிஸ் நிறுவனத்தைத்தான் ஒற்றை நிர்வாகச் சேவை அளிக்கும் அமைப்பாக (MSP) பணியமைர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி.என். முறைமையை வடிவமைத்து உருவாக்கி, பயன்பாட்டிற்கு ஏற்றவாறு செய்வது இதன் பணி. இதில் எல்லாவிதமான விண்ணப்பங்கள் மென்பொருள் உருவாக்கம், உபகரணங்கள் மற்றும் அடிப்படைக்கட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்கி, இந்த ஒட்டு மொத்த முறைமையையும், நேரலை வடிவத்தில் பயன்பாடு ஆரம்பித்த நாளிலிருந்து 5 வருடங்கள் பராமரிப்பதும் இந்நிறுவனத்தின் பொறுப்பாகும்.

கேள்வி 9: ஜி.எஸ்.டி. பொது வலைதளகத்தின் அடிப்படை அம்சங்கள் என்ன?

பதில்: ஜி.எஸ்.டி. வலைதளம் (WWW.GST.GOV.IN) இணைய தளத் தொடர்பு மூலமாக (வரி செலுத்துவோர் மற்றும் அவர்களது (சி.ஏ.க்கள் / வரி விவகாரங்கள் தொடர்பான வழக்கறிஞர்கள்) வரித்துறை அதிகாரிகள் போன்றவர்கள். இந்த வலைதளகம் தான் ஜி.எஸ்.டி. சேவைகள் தொடர்பான அனைத்துத் தொடர்புகளுக்கும் ஒரே நுழைவு வலைதளம் என்று கூறலாம். இத்தகைய சேவைகள் வருமாறு:

1. வரி செலுத்துவோர் பதிவு (புதியவை, ஒப்புடைப்புகள், ரத்துகள், திருத்தங்கள் போன்றவை)

2. விற்பனை விலைச்சீட்டு (invoice) தரவேற்றம் செய்வது, பொருள் வாங்குபவரது பதிவுக்கு குறிப்பைத் தயாரிப்பது, ஒவ்வொரு வகையான ரிடர்னுக்கும் ஏற்ற வாறு ரிடர்ன் தாக்கல் செய்வது. (ஜி.எஸ்.டி. (1,2,3,5,6, மற்றும் 9.)

3. வரி செலுத்துவதற்கான சலானை (Chalan) உருவாக்குவது மற்றும் முகமை வங்கிகளுடன் ஒருங்கிணைப்பு

4. ITC மற்றும் பணப்பரிமாற்ற லெட்ஜர் மற்றும் பொறுப்புப் பதிவேடு

5. வரி செலுத்துவோர் வரித்துறை அதிகாரிகள் மற்றும் பங்கீட்டாளர்கள் போன்றோருக்கு MS அறிக்கையைத் தெரிவிப்பது அனுப்புவது

6. B1 வரித்துறை அதிகாரிகளுக்கான ஆய்வறிக்கைகள்

கேள்வி 10: ஜி.எஸ்.டி. முழுமைத் தொடர்பு (Eco-system) முறை என்றால் என்ன?

பதில்: பொதுவான ஜி.எஸ்.டி முறைமையின்படி அனைத்து மாநில யூனியன் பிரதேச வணிகவரித்துறைப் பிரிவுகள், மத்திய வரித்துறை அதிகாரிகள், வரி செலுத்துவோர், வங்கிகள் மற்றும் பிற பங்கீட்டாளர்கள் ஆகியோருக்கு இணைப்புகள் வழங்கும். முழுமைத் தொடர்புமுறைமை என்றால் வரி செலுத்துவோரில் இருந்து வரி தொடர்பான தொழல்துறை வல்லுனர்கள், வரித்துறை அதிகாரிகள் ஜி.எஸ்.டி. வலைதளம், வங்கிகள், கணக்கீட்டு ஆணையங்கள், அதிகாரிகள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியது.

கேள்வி 11: ஜி.எஸ்.பி (ஜி.எஸ்.டி. சுவிதாஅளிப்பாளர்கள்) என்றால் என்ன?

பதில்: ஜி.எஸ்.டி முறைமை, ஜி.எஸ்.டி. வலைதளயகத்தை வரி செலுத்துவோர் ஜி.எஸ்.டி. மூலம் நடக்கக்கூடிய எல்லா விதமான காரியங்களையும் செய்து கொள்ள அதன் வலைதளத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆனால் பல்வேறு விதமான வரி செலுத்துவோர் இருப்பார்கள். SME பெரு நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள், மற்றும் பிற வகையறா) இவர்களுக்கு வெவ்வேறு விதமான வசதிகள் தேவைப்படும். உதாரணமாக அவர்களது பொருட்கள் வாங்கியது / விற்பனை பதிவுத் தகவல்களை ஜி.எஸ்.டிக்கு ஒத்துப் போகிறார் போல முறைமையை, மாற்றுவது, அவர்களது கணக்கீட்டு முறையுடன் ஜி.எஸ்.டி. முறைமையோடு ஒருங்கிணைத்தல் போன்றவை.

இதுதவிர, பல்வேறு வகையான பொருந்தும் பொருத்தமற்ற ITC உரிமைக் கோரல்கள், வரிப் பொறுப்புகள், தாக்கல் செய்யும் நிலைப்படிகள், போன்றவற்றைப் பார்த்தறிவது. விற்பனை விலைச்சீட்டின் நிலையைப் பற்றிய தாக்கல் செய்வது தேவையானது என்பதால் பெரு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. முறைமையோடு தன்னியக்கமான முறையில் தொடர்பு கொள்ள முடிவது அவசியமாகும். ஏனென்றால் அவர்களுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான விற்பனை விலைச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களை ஒரு வலைதளவாயிலின் மூலம் தரவேற்றம் செய்ய முடியாது. அதனால்தான் முழுமைத்தொடர்பு முறைமை (Ecosystem) தேவைப்படுகிறது. இதன் மூலம் அதைப் போன்ற வரி செலுத்துவோர் ஜி.எஸ்.டி விதிமுறைகளின் படி நடந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். ஜி.எஸ்டியின் வெற்றி, வரி செலுத்து வோருக்கு இணக்கமான வசதிகள் உருவாக்குவதில் தனன் அடங்கியிருக்கிறது. இது போன்ற முழுமையத் தொடர்பு முறைமை, வரி செலுத்துவோருக்கு மூன்றாவது நபர் விண்ணப்பங்களைப் பயன்படுத்தத் தெரிவுகளை வழங்குகிறது. இதன் மூலம் மேசைக் கணிணி / செல்பேசி ஆகியவற்றின் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு ஜி.எஸ்.டி. விதிமுறைகளுக்கு இணக்கமாக செயல்பட ஏதுவாக இருக்கும்.

மேற் குறிப்பிட்ட காரணங்களினால் மூன்றாம் நபர் சேவை அளிப்பவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் ஜி.எஸ்.டி. பயன்பாட்டு உரிமையுடன் முழுமைத் தொடர்பு முறைமையைப் பயன்படுத்தி பயன்பாட்டு முறைகளை உருவாக்கும் திறனுடன் மற்றவர்களுக்கு இது போன்ற சேவைகளை அளிப்பார்கள். இது போன்ற சேவை அளிப்பவர்களுக்கு ஜி.எஸ்.டி. சுவிதா அளிப்பாளர்கள் அல்லது GSP என்று பெயர்.

கேள்வி 12: ஜி.எஸ்.டி. சுவிதா அளிப்பாளர்களுடைய (GSP) பங்கு என்ன?

பதில்: வரி செலுத்துவோர். ரிடர்ன் தாக்கல் செய்தல், ஜி.எஸ்.டி. விதிமுறைகளுக்கு இணக்கமான செயல்பாடுகள் ഉ_ബണങ്ങIബT என்று கண்காணிப்பது இதைத் தவிர, பல்வேறு விதமான ஜி.எஸ்.டி. தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக உதாரணமாக விற்பனை விலைச்சீட்டுகளைத் தரவேற்றம் செய்தல், ரிடர்ன் ஸ்தாக்கல் செய்தல் போன்றவைகளை பயன்படுத்துபவர்களுக்கான தனித்தனியாக உரிமை பெறுவதை சாத்தியமாக்குவது. வரித்துறையில் தொழில் முறையில் ஆலோசகராக இருப்பவர்கள், தங்களின் வாடிக்கையாளர் சேவை செய்ய அவர்களது ஜி.எஸ்.டி. செயல்பாடுகளுக்கு இணக்கமாக இருக்கும்படி நிர்வகிப்பது, ஏற்கெனவே, இருக்கும் கணக்கீட்டு முறைகள் / ERP ஆகியனவற்றை ஜி.எஸ்.டி. முறைமையோடு இணைப்பது ஆகியன.

கேள்வி 13: GSPகளைப் பயன்படுத்துவதால் வரி செலுத்துவோருக்கு என்ன லாபங்கள் அனுகூலங்கள் என்ன?

பதில்: வரி செலுத்தும் நபர் ஜி.எஸ்.டி மூலமாகச் செய்யக்கூடிய செயல்பாடுகளை ஜி.எஸ்.டி. வலைதளத்திலேயே செய்து கொள்ள முடியும் என்பதைக் குறிப்பிடுவது அவசியமானது. GSP என்பது குறிப்பிட்ட சில செயல்களைச் செய்வதற்கு இருக்கும் கூடுதல் வழித்தடம் என்று கூறலாம். அவர்களது சேவைகளைப் பெறுவது, தனிப்பட்ட நபரின் விருப்பத்தைப் பொறுத்தது. வரி செலுத்துவோர். GSP க்கள் மூலமாக ஜி.எஸ்.டி.யின் சேவைகளைப் பெறும் அளவிற்குத் தங்களது செயல்பாடுகளை எப்படி மாற்றிக் கொள்வது என்பதற்கான தீர்வை GSPக்கள் மூலம் பெறலாம். அவற்றில் சில சேவைகள் குறித்து இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

1. இப்போது இருக்கும் கணக்கீடடு மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட விற்பனை விலைச்சீட்டு அமைப்பை, அது CSV, PDF, WORD, EXCEL, WORD FORMAT போன்றவற்றிலிருந்து ஜி.எஸ்.டி. ஏற்றக்கொள்ளும்படியான வடிவத்திற்கு மாற்றலாம்

2. பல்வேறு கிளைகளை உடைய பெரிய நிறுவனம், தங்களத கிளைவாரியாக விற்பனை விலைச்சீட்டுகளை தரவேற்றம் செய்யவேண்டும். ஜி.எஸ்.டி. முறையின் படி ஒரு பயனாளிக்கு ஒரு பயனாளி அடையாளம் / கடவுச்சொல் ஆகியவற்றை அளிக்கும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும், அதனது செயல் தேவைக்கு ஏற்றபடிதான் உரிமை கிடைக்கும் என்பதால், வெவ்வேறு கிளைகளுக்கு வெவ்வேறு வகையான செயல் தேவை நோக்கம் ஆகியன இருக்க வேண்டும்.

3. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் பதிவு செய்திருக்கும் நிறுவனத்திற்கு, அதன் செயல்பாடுகளை ஒன்றாகப் பார்த்தறிதல் மிகத் தேவையான ஒன்றாகும்.

4. ஜி.எஸ்.டி. தொழில் வல்லுனர்கள், வரி செலுத்தும் தங்களது வாடிக்கையாளருக்குத் தேவையான விதத்தில் விண்ணப்பங்கள் தேவையாக இருக்கும். அப்போது தான் ஜி.எஸ்.டி. சேவையைப் பயன்படுத்தவதற்கு ஏற்றாற்போல மாற்ற முடியும். மேற்குறிப்பிட்டவை சில அம்சங்கள் தாம். வெவ்வேறு வகையான வரி செலுத்துவோருக்கு, வெவ்வேறு வகையான தேவைகளாக இருக்கும். இவற்றை GSPக்களால் நிறைவேற்ற முடியும்.

கேள்வி 14: வரி செலுத்துவோருக்காக, ஜி.எஸ்.டி.என்.ஆல் உருவாக்கி, பராமரிக்கப்படும் ஜி.எஸ்.டி வலைதளத்தில் வரி செலுத்துவோரால் என்னென்ன செயல்களைச் செய்ய முடியும்?

பதில்: ஜி.எஸ்.டி. பொது வலைதளம், வரி செலுத்துவோருக்குத் தேவையான அனைத்தையும் பெறவும், செய்து கொள்ளவும், முடியும். ஜி.எஸ்.டி.என். மூலமாக நிர்வகிக்கப்படும் ஜி.எஸ்.டி. வலைதளத்தின் மூலம் வரி செலுத்துவோர் செய்து கொள்ளக்கூடிய பணிகளின் சிறு தொகுப்பு இங்கே அளிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்வதற்கான விண்ணப்பம், ஏற்கெனவே பூர்த்தி செய்ததில் மாற்றங்கள் செய்வது, பதிவை ரத்து செய்வது, ஒட்டு மொத்த கணக்கை நிர்வகிப்பது. வரி செலுத்துவது, இதில் அபராதங்கள், கூடுதல் தொகை, வட்டி போன்றவற்றையும் செலுத்த முடிவது. (செலான் வழியாக கட்டணம் செலுத்த, அதை வங்கியின் வலைதளம் வாயிலாக அதைப் பற்றி அறிந்து, உருவாக்குவது போன்றவை) வரி செலுத்துவோரின் நிலை, கூடுதல் என்பதிலிருந்து சாதாரணமான நிலை அது போல சாதாரண நிலையிலிருந்து கூட்டு என்ற நிலைக்கு மாற்றுவது.

விற்பனை விலைச்சீட்டு விவரத்தரவுகள் பல்வேறு சட்டபூர்வமான ரிடர்ன்கள் மற்றும் ஆண்டு அறிவிக்கைகள் ஆகியவற்றைத் தரவேற்றம் செய்தல்

ரிடர்ன் / வரி லெட்ஜர் / பணப்பரிமாற்ற லெட்ஜர் / போன்ற பலவற்றை ஜி.எஸ்.டி. போர்ட்டல் மூலம், தனித்தன்மை வாய்ந்த விண்ணப்ப குறியீட்டு எண் (ARN) மூலம் கண்காணிப்பது

கூடுதல் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வது ரிடர்ன்கள் / வரி லெட்ஜர் பணப் பரிமாற்ற லெட்ஜர் ஆகியவற்றின் நிலைபற்றிய மீள் பார்வை.

கேள்வி 15: ஜி.எஸ்.டி.என். மூலமாக உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி. முறைமையில் மாநில, மத்திய அரசுகளின் வரித் துறை அதிகாரிகளின் பங்களிப்பு / நிலை என்ன?

பதில்: அதிகாரிகள், இவற்றிலிருந்து கிடைக்கும் வரி செலுத்துவோரின் தகவல்கள் / விண்ணப்பங்கள் ஆகியவற்றைப் பின்வரும் சட்டபூர்வமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை ஏற்பது / நிராகரிப்பது / வரி செலுத்துவோரின் பதிவை ஏற்பது மறுப்பது.

வரி நிர்வாகம் (மதிப்பீடு செய்தல் / ஆடிட் / கூடுதல் தொகையைத் திரும்பக்கோரும் விண்ணப்பத்தை ஆய்வு செய்தல்) வேண்டுகோள் புலனாய்வு.

வரி நிர்வாகம் (மதிப்பீடு செய்தல் / ஆடிட் / கூடுதல் தொகையைத் திரும்பக்கோரும் விண்ணப்பத்தை ஆய்வு செய்தல்) வேண்டுகோள் புலனாய்வு.

தொழில் / வர்த்தகநிலை, பற்றிய ஆய்வு, MS மற்றுமுள்ள சட்டரீதியிலான செயல்பாடுகள்.

கேள்வி 16: ஒவ்வொரு விற்பனைவிலைச் சீட்டுவரிசைக்கும் ஜி.எஸ்.டி.என். முறைமையில் தனித்தனியான தனித்துவம் மிக்க அடையாளத்தை உருவாக்குமா?

பதில்: இல்லை. ஜி.எஸ்.டி.என். புதிய அடையாளத்தை உருவாக்காது. வழங்கல் தொழிலில் இருக்கும் நபரின் ஜி.எஸ்.டி.என். எண், விற்பனை விலைச்சீட்டு எண் மற்றும் நிதியாண்டு ஆகியன சேர்ந்து ஒவ்வொரு விற்பனை விலைச்சீட்டையும் தனித்துவமுடையதாக மாற்றிவிடும்.

கேள்வி 17: விற்பனை விலைச்சீட்டின் (Invoice) விவரங்களை தினசரி தரவேற்றம் செய்ய முடியுமா?

பதில்: ஆம். ஜி.எஸ்.டி வலைதளத்தில் விற்பனை விலைச்சீட்டின் விவரங்களை எப்போது வேண்டுமானாலும் தரவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. எந்த அளவுக்கு விரைவாக, வழங்கல் பொறுப்பை மேற்கொள்ளும் வரி செலுத்தும் வர்த்தகர் / வணிகன் / சேவையளிப்பவர் தனது விற்பனை விலைச்சீட்டைத் தரவேற்றம் செய்கிறாரோ, இவற்றைப் பெறும் வரி செலுத்தும் வாடிக்கையாளர், விற்பனை வரிச் சீட்டின் விவரங்களை வைத்து விரைவாக முடிவு செய்யப்படும். இதன் மூலம், பொருள் வழங்கும் வரி செலுத்தும் நபர் அதற்கேற்றாற்போல அதற்குப் பொறுப்பேற்க முடியும். இதனால் பொருள் வழங்குபவர், ரிடர்ன்களை ஜி.எஸ்.டி.யில் தரவேற்றம் செய்ய வேண்டி நெருக்கடிக்கு உள்ளாக மாட்டார்.

கேள்வி 18: விற்பனை விலைச்சீட்டை ஜி.எஸ்.டி. வலைதளத்தில் தரவேற்றம் செய்யத் தேவையான உபகரணங்களை அளிக்குமா?

பதில்: ஆம். வரி செலுத்துவோருக்க ஜி.எஸ்.டி.என். ஸ்பிரெட் ஷிட் போன்றவற்றையும் (மைக்ரோ சாஃப்ட் எக்ஸெல்) இலவசமாக அளிக்கும் இதன் மூலம், விற்பனை விலைச்சீட்டு விவரங்களைத் திரட்டவும், அதன் பின், அவற்றை ஜி.எஸ்.டி. வலைதளத்தில் தரவேற்றம் செய்யவும், முடியும். இது இணையம் தொடர்பில்லாத உபகரணம், இதில் விற்பனை விலைச்சீட்டு விவரங்களை உள்ளிடு தரவு போன்றவற்றை இணையதளத் தொடர்பின்றியே, வேண்டிய விவரங்களைச் சேர்த்து இறுதிக் கோப்பைத் தயார் செய்து, ஜி.எஸ்.டி வளைதளத்திற்குள் தரவேவற்றம் செய்யும்முறைக்கு மாற்றம் செய்ய முடியும்.

கேள்வி 19: ஜி.எஸ்.டி.என். லெட்ஜர் களையும், மற்ற கணக்கீடுகளையும் செல் பேசி பயன்பாடுகள் (Mobile Apps) மூலம் காண்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுமா?

பதில்: ஆமாம். ஜி.எஸ்.டி வலைதளம் நவீன நுண்ணறி செல் பேசியின் மூலம் பார்த்து அறய முடிகிறார் போலத்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பண லெட்ஜர், பொறுப்பு லெட்ஜர், ITட லெட்ஜர் போன்ற லெட்ஜர்களைப் பார்வையிடலாம்.

கேள்வி 20: தொழில் முறையில் ஜி.எஸ்.டி. சார்ந்த தொழில் முனைவோராக இருந்து, தனது வாடிக்கையாளருக்கு அவர்களின் சார்பில் பணிபுரிய அவரது சொந்த அடையாளச் சொல் மற்றும் கடவுச்சொல்லைக் கேட்காமல் புதிய பயனாளி அடையாளம் மற்றும் கடவுச்சொல்லை வழங்குமா?

பதில்: ஆம். ஜி.எஸ்.டி. சேவையை தொழில் முறையில் செய்து வருவோருக்கு அவரது அடையாளம் மற்றும் கடவுச்சொற்கள் கேட்காமல், புதிய பயனாளி அடையாளத்தையும் கடவுச்சொல்லையும் ஜி.எஸ்.டி.என். அளிக்கும். இது ஜி.எஸ்.டி. சட்டம் அனுமதிக்கிறது.

கேள்வி 21: இது போல ஒருமுறை தேர்வு செய்த ஜி.எஸ்.டி. சேவை வழங்கும் தொழில் முனைவோரை வரி சுமத்துவோர் மாற்ற முடியுமா?

பதில்: ஆம். வரி செலுத்துவோர். அவருக்கு விருப்பமானால் வேறொரு ஜி.எஸ்.டி. தொழில் முனைவோரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி 22: இப்போதிருக்கும் மத்திய சுங்க வரிஅல்லது சேவை வரிஅல்லது மாநில வாட் ஆகியவற்றின் கீழ் வரும் வரி செலுத்துவோர். ஜி.எஸ்.டி.யின் கீழ் மறுபடியும் பதிவு செய்ய வேண்டுமா?

பதில்: தேவையில்லை. இப்போதைய வரி செலுத்துவோர். அதுவும் ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டுவரப்பட இருக்கும் வரி வடைகளில் ஏற்கெனவே பங்கு பெற்றிருக்கும் நபர், அதுவும் அவரது PAN எண், CBDT தகவல்திரட்டின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, ஜி.எஸ்.டி.க்குப் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களுக்கு ஜி.எஸ்.டி.என். தாற்காலிகமாக ஜி.எஸ்.டி. வலைதளம் மூலம் வழங்கப்படும். இது ஆறுமாதங்களுக்குச் செல்லுபடியாகும்.

இதுபோன்ற வரி செலுத்துவோர். ஜி.எஸ்.டியில் சேர்வதற்கான தேவையான விவரங்களை வழங்க வேண்டும். இதுபோன்ற விவரங்களைத் தாக்கல் செய்த பிறகு, வரி செலுத்துபவரின் நிலை இடப் பெயர்வு முடிக்கப்பட்டது. (Migrated) என்ற மாற்றம் பெறும். இவ்வாறு மாறிய பின்பு அவர் வரிகளைச் செலுத்துவதற்கும் ரிடர்ன்கள் தாக்கல் செய்வதற்கும் ஜி.எஸ்.டி.என். இது போன்ற தாற்காலிக அடையாளங்கள் மற்றும் கடவுச்சொற்கள் வழங்கிய வரி செலுத்துவோர் பற்றி, வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்துவிடும். அங்கிருந்து தான் சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோருக்குத் தகவல் செல்லும். 2016 நவம்பர் 8ஆம் தேதி, ஜி.எஸ்.டி. வலைதளத்தில் சேர்ந்த வரி செலுத்துவோர்களுக்கு 2017 மார்ச் மாதம் இறுதியில் பெரும்பாலோருக்கு தாற்காலிக அடையாளம் அளிக்கப்பட்டு இடம் பெயரும் செயல்பாட்டை முடித்துவிட்டனர். மேலும் விவரங்களுக்கு https://www.gst.gov.in/help என்ற வலைதளத்தில் பெறலாம்.

கேள்வி 23: வரிகட்டுவோரின் வசதிக்காக, ஜி.எஸ்.டி. வலைதளத்தில் பணி செய்ய ஜி.எஸ்.டி.என். எந்த விதமான பயன்படுபொருள்களைத் தரும்?

பதில்: ஜி.எஸ்.டி.என். கணிணி அடிப்படையிலான பயிற்சி உபகரணங்களைத் (CBTS) தரும். இவற்றில், ஜி.எஸ்.டி. வலைதளத்தில் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயல்பாடுகளைப் பற்றியும் வீடியோப் படங்கள் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவை ஜி.எஸ்.டி. வலைதளத்தில் இருப்பது மட்டுமின்றி, அவற்றை நடைமுறையில் விளக்கும் வகையில் இருக்கும். இவை எல்லா வரி விதிப்பு ஆணையங்களிலும், அவற்றை வலைதளங்களிலும் காணும் படியாக வைத்திருப்பார்கள். CBTS தவிர பல்வேறு விதமான பயனாளிகள் வழிகாட்டி, எப்போதும் கேட்கப்படும் கேள்விகள், போன்றவை உள்ளிட்டவை, வரி செலுத்துவோர்க்கு பல விஷயங்களைக் கற்றுத்தர பல விவரங்கள் ஜி.எஸ்.டி. வலைதளத்தில் சேர்க்கப்படும். இவை தவிர வரி செலுத்துவோருக்கு உதவும் இடம் உருவாக்கப்பட்டு அங்கே அவர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை மெயில் மூலம் (helpdesk@gst.gov.in) அல்லது தொலைபேசி எண் (012-4688999) ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கின்றன. CBT FAQ மற்றும் பயனாளிகளுக்கான உதவிக் கையேடு ஆகியன. ஜி.எஸ்.டி. யில் சேர்வதற்கு உதவி செய்யத் தேவையான நடைமுறை செயல்பாடுகளை உள்ளடக்கியது. இதை https://www.gst.gov.in/help என்ற வலைதள முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி 24: ஜி.எஸ்.டி. பொதுவலைதளத்தில் வரி செலுத்துவோரால் அளிக்கப்பட்ட ரிடர்ன் மற்றும் பதவி விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுமா?

பதில்: ஆமாம். ஜி.எஸ்.டி. பொதுவலைதளத்தில் வரி செலுத்துவோரின் தனிப்பட்ட மற்றும் தொழில் பற்றிய தகவல்கள், ரகசியமாக வைக்கப்படும் நிலையின் அடிப்படையில் உரிமைபெறும் கட்டுப்பாடு (RABC) மூலமும் வரி செலுத்துவோரின் முக்கியமான விவரங்கள் மாறும் போதும், சேமிப்பிலும் சுருக்கப்பட்ட வடிவத்தில் விவரங்கள் இருக்கும். உரிய அதிகாரம் பெற்ற வரித்துறை அதிகாரிகள் தான் அவற்றைப் பார்க்கவும் படிக்கவும் முடியும்.

கேள்வி 25: ஜி.எஸ்.டி. முறைமையில் பாதுகாப்பு அம்சத்தை உறுதி செய்ய ஜி.எஸ்.டி.என்-ஆல் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

பதில்: ஜி.எஸ்.டி. முறைமைத் திட்டம், அதில் சேர்க்கப்படும், விவரங்கள் மற்றம் சேவைகள் ஆகியவற்றை அதி நவீன பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்திருக்கிறது. கணிணியில் மிகப் பாதுகாப்பான தடுப்பான்கள், ரகசியமாய் நுழைய முயற்சிப்பதைக் கண்டறிவது, தரவேற்றம் செயச்த விவரங்களை சங்கேதவடிவில் சுருக்குவது, அவற்றை சாதா நிலையிலும் பயன்பாட்டு நிலையிலும் இதே வடிவில் இருப்பது யாரும் மாற்ற சேதப்படுத்த முடியாத அளவுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றுடன் OS, host heardering சங்கேத வார்த்தைகள் தொடர்ந்து மாற்றுதல் ஆகியன செயல் படுத்தப்படுகின்றன. இவை தவிர ஜி.எஸ்.டி.என். அடிப்படை மற்றம் இரண்டாம் கட்டப் பாதுகாப்பு செயல்பாடுகள் செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இவற்றின் மூலம் எப்போதும் இந்த வலைதளத்தில், அனுமதி பெறாத யாராவது புக முயற்சித்தால், அதை எதிர்க்கவும், தகவல்களைக் காப்பாற்றவும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறது. இவையெல்லாம் தவிர, குறியீட்ட மைவுகளைப் பாதுகாக்க இவற்றின் ஆதாரக் குறியீட்டமைவைத் தொடர்ந்து ஸ்கேன் செய்வது (lIBRARIES) லைப்ரரிகளைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி.யின் பயன்படுத்தல் மூலம் பொதுவாகத் தெரிந்த மற்றும் தெரிந்திராத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இயங்கிப் பாதுகாப்பு அளிப்பது உறுதி செய்யப்படுகிறது.

ஆதாரம் : http://www.cbec.gov.in

2.92307692308
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top