பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜிஎஸ்டி மதிப்பிடுதல்

ஜிஎஸ்டி மதிப்பிடுதல் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கே 1. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரி விதிக்கப்படும் பொருளின் மதிப்பு என்னவாக இருக்கும்?

பதில்: வழக்கமாக, வரி விதிக்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு அதாவது அந்தப் பொருளுக்கான விலை, பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுடைய தொடர்பில்லாமல், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் அதன் விலை மட்டுமே அதன் மதிப்பு ஆகும். சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 15 பரிவர்த்தனை மதிப்புகளின் வரையறைக்குள் வரும் விஷயங்களையும், விதிவிலக்குகளையும் பற்றி மேலும் விரிவாகச் சொல்கிறது. உதாரணத்துக்கு, பரிவர்த்தனை மதிப்பு வரையறைக்குள் திருப்பி அளிக்கப்படும் கணக்குகள், பொருட்கள் சப்ளை செய்யப்படும்போது அல்லது அதற்கு முன்பு சில நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்படும் கழிவுகள் ஆகியவை சேர்க்கப்பட மாட்டாது.

கே 2. பரிவர்த்தனை மதிப்பு என்றால் என்ன?

பதில்: பரிவர்த்தனை மதிப்பு என்பது வழங்கப்படும் பொருள் அல்லது சேவைக்கு வழங்கப்படும் விலை அல்லது வழங்கப்பட வேண்டிய விலை ஆகும். இதில் விற்பவர் மற்றும் வாங்குபவர் ஆகிய இருவரின் தொடர்பு எதுவும் இருக்காது. வழங்கப்படும் பொருளுக்கான விலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதில் சப்ளையர் வழங்க வேண்டிய தொகையும் சேர்க்கப்படும். ஆனால் அதுவும் சப்ளை செய்ததற்காக வாங்கியவர் கொடுத்ததில் சேர்ந்ததாக மட்டுமே இருக்கும்.

கே 3. சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மதிப்பீடு வசதிகள் இருக்கிறதா?

பதில்: இல்லை, பிரிவு 15 இந்த மூன்று வகை வரிகளுக்கும், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் பொதுவானதே.

கே 4. கான்ட்ராக்ட் விலை சப்ளை செய்யப்படும் பொருளுக்கான மதிப்பைத் தீர்மானிப்பதற்கு போதுமானதாக இருக்கிறதா?

பதில்: கான்ட்ராக்ட் விலையானது மிகக் குறிப்பாக “பரிவர்த்தனை மதிப்பு’’ என்றே குறிப்பிடப்படுகிறது. மேலும் வரியைக் கணக்கிடுவதற்கு இதுவே அடிப்படையாகவும் உள்ளது. ஆனாலும், பொருளின் விலையானது, பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களின் தலையீடுகளால் அல்லது குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் விலையில்லாத சப்ளை நடக்கும்போது தாக்கத்துக்குட்பட்டால் அதற்கான மதிப்பானது ஜிஎஸ்டி மதிப்பிடுதல் விதிகளின்படி நிர்ணயிக்கப்படும்.

கே 5. ஜிஎஸ்டி மதிப்பிடுதல் விதிகள் எல்லாச் சமயங்களிலும் தேவைப்படுமா?

பதில்: இல்லை, பிரிவு 15ன் துணை பிரிவு (1)ன் கீழ் மதிப்பு கண்டறிய முடியாத சமயங்களில் மட்டுமே ஜிஎஸ்டி மதிப்பிடுதல் விதிகள் தேவைப்படும்.

கே 6. பிரிவு 15-ன் துணைப் பிரிவு (1)இன் கீழ் நிர்ணயிக்கப்படும் பரிவர்த்தனை மதிப்பு ஏற்றுக்கொள்ளத் தக்கதா?

பதில்: ஆம், ஆனால் பிரிவு 152இல் உள்ள வரையறைகளைச் சரிபார்த்த பின்பே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், வழங்குபவர் மற்றும் பெறுபவர் இருவரும் பரிவர்த்தனை மதிப்பில் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்களுடைய தலையீடு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தாத பட்சத்தில் அந்தப் பரிவர்த்தனை மதிப்பும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே.

கே 7. சப்ளைக்குப் பிறகான கழிவுகள் அல்லது ஊக்கச் சலுகைகள் பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்படுமா?

பதில்: ஆம். ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் சப்ளைக்குப் பிறகான கழிவுகள் சப்ளையின்போதோ அல்லது சப்ளைக்கு முன்போ அறியப்பட்டு அந்தக் கழிவுகள் சம்பந்தப்பட்ட இன்வாய்ஸில் சேர்க்கப்படும். பொருளைப் பெறுபவர் அந்தக் கழிவுகளுக்கான வரியைச் செலுத்தினால் இந்த கழிவுகள் ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 15ன் கீழ் விலக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

கே 8. சப்ளையின் போதோ அல்லது அதற்கு முன்பாகவோ வழங்கப்படும் சப்ளைக்கு முந்தைய கழிவுகள் பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்படுமா?

பதில்: இல்லை, வழக்கமான வர்த்தக முறைகளின்படி இந்தக் கழிவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இன்வாய்ஸில் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

கே 9. எப்போதெல்லாம் மதிப்பிடுதல் விதிகள் பயன்படுத்தப்படுகின்றன?

பதில்: (i) முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பணத்தின் வரையறைகளில் இல்லாமல் இருந்தால், (ii) பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள் தலையீடு இருந்தால் அல்லது குறிப்பிட்ட வகை சப்ளையரின் சப்ளையாக இருந்தால்; மற்றும் (iii) நிர்ணயிக்கப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு நம்பகமானதாக இல்லாமல் இருந்தால் மதிப்பிடுதல் விதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கே 10. பிரிவு 15(2) ல் குறிப்பிடப்பட்டுள்ள, பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்படுவதற்கான வரையறைகள் என்னென்ன?

பதில் பிரிவு 15(2) ல் குறிப்பிடப்பட்டுள்ள, பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்படுவதற்கான வரையறைகள்:

அ) பொருளை வாங்குபவரிடம் சப்ளையர் வாங்கும், எஸ்ஜிஎஸ்டி / சிஜிஎஸ்டி சட்டம் மற்றும் ஜிஎஸ்டி (மாநிலங்களின் வருவாய் இழப்புக்கான ஈட்டுத்தொகை) சட்டம் அல்லாத பிற சட்டங்களின் கீழ் விதிக்கப்படும் எந்தவொரு வரி, கலால் வரி, செஸ், மற்றும் கட்டணங்கள்.

ஆ) குறிப்பிட்ட பொருளின் சப்ளைக்கு, சப்ளையர் தர வேண்டிய எந்த ஒரு தொகையும் இதில் அடங்கும். ஆனால் இவை பொருளை வாங்கியவரிடம் தான் பெறப்படும்

இ) தற்செயல் செலவுகள், அதாவது பொருளை வாங்குபவரிடம் சப்ளையர், பொருட்கள் அல்லது சேவையை வழங்கும்போதோ அல்லது வழங்குவதற்கு முன்னரோ பெரும் கமிஷன் மற்றும் பேக்கிங் செலவு போன்ற எந்தவொரு தொகையும்.

ஈ) எந்த ஒரு சப்ளைக்கும் தாமதப்படுத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் வட்டி அல்லது தாமத கட்டணம் அல்லது அபராதம் ஆகியவை.

உ) மத்திய மற்றும் மாநில அரசுகள் தரும் மானியங்கள் தவிர்த்து, நேரடியாக  விலையுடன் தொடர்புடைய பிற மானியங்கள்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

Filed under:
2.86956521739
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top