பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜிஎஸ்டியில் முறையீடுகள், மறுஆய்வு மற்றும் சீராய்வு

ஜிஎஸ்டியில் முறையீடுகள், மறுஆய்வு மற்றும் சீராய்வு தொடர்பாக கேட்கப்படும் கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1: தனக்கெதிரான உத்தரவு அல்லது முடிவினால் பாதிக்கப்பட்டவர் அதை எதிர்த்து முறையீடு செய்ய உரிமை உள்ளதா?

பதில்: ஆம். ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவு அல்லது முடிவினால் பாதிக்கப்பட்டால், அவர் சட்டப் பிரிவு 107இன்படி அதை எதிர்த்து முறையிட உரிமை உண்டு மேற்படி உத்தரவு அல்லது முடிவு, "சட்டபூர்வ உரிமை படைத்த அதிகாரியால்" அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதே சமயத்தில், சில முடிவுகள் மற்றும் உத்தரவுகள் (சட்டம் 121ன் தொடர்புடைய) முறையீடு செய்யப்பட முடியாதவை.

கேள்வி 2: மேல் முறையீடு ஆணையத்தில் முறையீடு செய்வதற்கான கால வரையறை என்ன?

பதில்: பாதிக்கப்பட்டவர், அதற்கான முடிவு அல்லது உத்தரவு கிடைக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும். வருவாய்த் துறைக்குக் கால வரையறை, 6 மாதங்கள். இதற்குள்ளாக மறு ஆய்வு நடைமுறைகள் முடிக்கப்பட்டு, மேல் முறையீட்டு ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

கேள்வி 3: மேல் முறையீட்டு ஆணையர், மேல் முறையீட்டு தாமத்தை அனுமதிக்க அதிகாரம் பெற்றிருக்கிறாரா?

பதில்: ஆம். சட்டம் 1074)இல் குறிப்பிடப்பட்டுள்ள சரியான காரணிகளின் அடிப்படையில் மேல் முறையீட்டுக்கான காரணங்கள் இருந்தால் ஆணையர், மேல் முறையீடு செய்ய வேண்டிய காலவரையறையின் கடைசித் தேதியிலிருந்து 1 மாதம் வரை அதாவது (3+16+1) தாமதத்தை அனுமதிக்கலாம்.

கேள்வி 4: மேல் முறையீட்டு மனுவில் கொடுக்கப்படாத கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய அனுமதிக்க மேல் முறையீட்டு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதா?

பதில்: ஆம். கூடுதல் விவரங்கள் மனுவில் சேர்க்கப்படாததற்கு சரியான காரணம் இருக்கிறது என்பதைப் பற்றி அவர் திருப்தியடையும் பட்சத்தில் அவற்றை அனுமதிக்க அதிகாரம் உண்டு.

கேள்வி 5: மேல் முறையீட்டு ஆணையரின் உத்தரவு யாருக்கு தெரியப்படுத்தபட வேண்டும்?

பதில்: மேல் முறையீட்டு ஆணையத்தின் உத்தரவின் நகல்களை மேல் முறையீடு செய்தவர், எதிர்த் தரப்பாளர், மற்றும தீர்ப்பாயத்தின் அதிகாரி ஆகியோருக்கும் ஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி யுடிஜிஎஸ்டியின் நீதிபரிபாலன ஆணையருக்கும் அளிக்கப்பட வேண்டும்.

கேள்வி 6: ஒவ்வொரு முறை மேல் முறையீடு செய்யும் போதும், முன்வைப்புத் தொகையாக ஆணையத்திடம் அளிக்க வேண்டிய தொகை எவ்வளவு?

பதில்: எந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறாரோ அதில் அறிவிக்கப்பட்ட அபராதம், முழு வரி, அதற்கான வட்டி, அபராதத் தொகை, கட்டணங்கள் ஆகியவற்றுடன், அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்ட வரித் தொகையில் 10% சேர்த்து, முன்வைப்புத் தொகையாக மேல் முறையீட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும்.

கேள்வி 7: முன்வைப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மேல் முறையீட்டு ஆணையத்திடம் (AA) வரித் துறை முறையீடுசெய்ய முடியுமா?

பதில்: இல்லை. முடியாது.

கேள்வி 8: மீதியிருக்கும் தொகையை எப்படி மீட்டெடுப்பது?

பதில்: மேலே குறிப்பிட்டபடி முன்வைப்புத் தொகை அளிக்கப்பட்ட பின்னர், மீதியிருக்கும் தொகையை மீட்டெடுப்பது சட்டப் பிரிவு 107 (7)இன்படி தடை செய்யப்பட்டதாகக் கருதப்படும்.

கேள்வி 9: மேல் முறையீட்டின்போது, AA ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உத்தரவில் காணப்பட்ட வரி / அபராதம் / தண்டனை மற்றும் திருப்தியளிக்கும் தொகை / ITC - யைக் குறைப்பது ஆகியனவற்றிற்கு அதிகாரம் உள்ளதா?

பதில்: பறிமுதல் செய்வதற்குப் பதிலாக விதிக்கப்படும் தண்டனை கட்டணம் ! அபராதம் ஆகியனவற்றை உயர்த்துவதற்கும் அல்லது திருப்பி அளிக்க வேண்டிய தொகையைக் குறைப்பதற்கும், அல்லது அளிக்கப்பட்ட வரிக்கடன் தொகையைக் குறைப்பதற்கும் AA-விற்கு அதிகாரம் உண்டு. இதற்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பாணைக்கு எதிராக மனுதாரர் தகுந்த காரணங்களை அளித்திருக்க வேண்டும். (சட்டப் பரிவு 107 (11)இன்படி)

கேள்வி 10: எந்தக் காரணத்திற்காகவாவது, தன்னிடம் முறையீடு செய்யப்பட்ட வழக்கை மறுபடியும், தீர்ப்பாணையத்திற்கு அனுப்ப AA விற்கு அதிகாரம் உள்ளதா?

பதில்: இல்லை சட்டப் பிரிவு 107(11)இன்படி AA தான் விசாரித்த பின்பு சரியானது, நீதி வரம்பிற்கு உட்பட்டது. முறையானது என்று தான் கருதும் தீர்ப்பை வழங்க வேண்டும். ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தோ திருத்தியோ அல்லது ரததுசெய்தோ எப்படியும் தீர்ப்பையும் வழங்கலாம்.ஆனால், வழக்கை ஏற்கெனவே தீர்ப்பு வழங்கிய ஆணையத்திற்குத் திருப்பி அனுப்பக் கூடாது.

கேள்வி 11: சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி அதிகாரி இந்தச் சட்டத்தின்படி ஏற்கெனவே அவரது கீழ் நிலை அதிகாரிகள் அறிவிந்த உத்தரவை மாற்ற முடியுமா?

பதில்: சட்டப் பிரிவு 2 (99)இன்படி நியமனம் செய்யப்பட்ட மறுஆய்வு அதிகாரி, சட்டப் பிரிவு 108இன்படி இந்த அதிகாரத்தைப் பெறுகிறார். சட்டப் பிரிவு 108இன்படி, இந்த அதிகாரி, தனது கீழ்நிலை அதிகாரிகளால் அளிக்கப்பட்ட உத்தரவுகள், முடிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கோ, தவறு என்ற முடிவெடுப்பதற்கோ அதிகாரம் படைத்தவர். இது வரி வருவாய்க்கு இடையூறு விளைவிப்பது சட்டத்திற்குப் புறம்பானது, முறையற்றது. குறிப்பிட்ட உண்மைத் தகவல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாதிருந்து இவை, உத்தரவு வெளியிடப்பட்ட சமயத்தில் தெரிய வந்தாலும், இல்லாவிட்டாலும், இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கண்டறி பதிவின் அடிப்படையில் விளைவாக இருந்தாலும், இவ்வாறான காரணங்களால், தேவையானால், சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் தர அனுமதித்த பிறகு, ஏற்கெனவே அளிக்கப்பட்ட உத்தரவை மாற்றலாம்.

கேள்வி 12: மறு ஆய்வு அதிகாரி தனது கீழ்நிலை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட உத்தரவு நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஆணை பிறப்பிக்க முடியுமா?

பதில்: ஆம், முடியும்.

கேள்வி 13: ஜிஎஸ்டி யின் படி மறுஆய்வு அதிகாரி தனது கீழ்நிலை அதிகாரிகளின் ஆணையை மாற்றும் அதிகாரத்திற்குத் தடைபோட ஷரத்துக்கள் உள்ளனவா?

பதில்: ஆம். மறுஆய்வு அதிகாரியினால், ஏற்கெனவே

(a) வெளியிடப்பட்ட தீர்ப்பாணை, சட்டப் பிரிவு 107இன் கீழ்,அல்லது 112ன் கீழ் அல்லது 117ன் கீழ் அல்லது 118ன் கீழ் வெளியிடப்பட்டால், மறு ஆய்வு அதிகாரி தலையிட முடியாது.

(b) 107(2) சட்டத்தில் குறிப்பிட்டுள்ள கால அவகாசம், முடிவுக்கு வராத நிலை, அல்லது தீர்ப்பானை வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்றாண்டுகள் கடந்த நிலை ஆகியன இருந்தாலும், மறு ஆய்வு அதிகாரி தலையிட முடியாது.

(c) இந்த உத்தரவு, இந்தச் சட்டப் பிரிவின் கீழ் ஏற்கெனவே மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தாலும், மறுஆய்வு அதிகாரியால் தலையிட முடியாது.

கேள்வி 14: முறையீட்டு மனுவை ஏற்க மறுக்க, தீர்ப்பாயத்திற்கு எப்போது அல்லது எந்த சமயங்களில் அதிகாரம் உள்ளது?

பதில்: முறையீட்டு மனு, வரித்தொகை, அல்லது உள்ளிடடு வரிக்கடன், அல்லது வரிவிதிப்பில் வித்தியாசம், அல்லது உள்ளிட்டு வரிக்கடனில் உள்ள வித்தியாசம், இந்த உத்தரவு தொடர்பான கட்டணம், அபராதம், இது போன்ற வழக்குகளில் வழக்கமாக முடிவாகும் தண்டனை அபராதத் தொகை ரூ. 50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த நிலை இருந்தால்தான், சட்டப் பிரிவு 112(2)இன்படி தீர்ப்பாயம், வழக்கை விசரிக்க மறுக்கலாம்.

கேள்வி 15: தீர்ப்பாயத்திற்கு முன்பு முறையீடு செய்வதற்கான கால வரையறை என்ன?

பதில்: மனுதாரர் எந்த உத்தரவுக்கு எதிராக முறையீடு செய்கிறாரோ, அந்த உத்தரவு பெறப்பட்ட தேதியிலிருந்து, மூன்று மாதங்களக்குள் முறையீடு செய்ய வேண்டும். துறையைப் பொறுத்த மட்டில் மறுஆய்வு மூலம் பெறப்பட்ட உத்தரவை பரிசீலனை செய்த பின்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதத்திற்குள் முறையீடு செய்ய வேண்டும்.

கேள்வி 16: சட்டத்திற்க உட்பட்ட 36 மாதங்களுக்கு மேல் மேல் முறையீடு செய்தால், அந்த முறையீட்டை மன்னித்து ஏற்கத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இருக்கிறதா?

பதில்: ஆம். குறிப்பிட்ட 36 மாதங்களைக் கடந்து அடுத்த மூன்ற மாதங்கள் வரை தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் முறையீட்டிற்கு தகுந்த காரணங்கள் இருந்தால், அதை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணை நடத்தத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இருக்கிறது.

கேள்வி 17: தீர்ப்பாயத்தின் முன், குறுக்கு விசாரணை ஆட்சேபங்கள் அடங்கிய குறிப்பாணையை தாக்கல் செய்ய காலவரையறை என்ன?

பதில்: முறையீடு குறித்தான ஒப்புகைக் குறிப்பு பெற்ற தேதியில் இருந்து 45 நாட்கள்.

கேள்வி 18: திருப்பி அளிக்கப்படும் கூடுதல் தொகை மற்றும் முன் வைப்புத் தொகை ஆகியவற்றிற்கு வட்டி அளிக்கப்பட வேண்டுமா?

பதில்: ஆம். சட்டப் பிரிவு 115இன்படி, மனுதாரரால் 107இன் துணைப் பிரிவு (6) மற்றும் 112இன் துணைப் பிரிவு (8) ஆகியவற்றின் கீழ் வைப்பாக அளிக்கப்படும் தொகை, மற்றும மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின், மேல் முறையீட்டு ஆணையத்தால் வழங்கப்படும், தீர்ப்பினால், கொடுக்கப்பட வேண்டிய தொகைக்கு சட்டப் பிரிவு 56 இல் குறிப்பிட்டபடி வட்டி விகிதத்துடன் அளிக்கப்பட வேண்டும். இந்தத் தொகை எப்போது பெறப்பட்டதோ அதிலிருந்து திரும்பி அளிக்கும் நாள் வரை கணக்கிட்டு அளிக்கப்பட வேண்டும்.

கேள்வி 19: தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து எந்த அமைப்பின் முன், முறையீடு செய்யலாம்?

பதில்: வட்டார தீர்ப்பாயத்தின் மாநில அமர்வு அல்லது அமர்வு மன்றங்கள், உயர் நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றத்தின் கீழ் வரும் அதாவது, இம்மன்றங்களின் தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டில் தீர்க்கப்பட வேண்டிய சட்டச் சிக்கல் அடங்கியுள்ளது என்று கருதினால், (சட்டப் பிரிவு 117(1) அந்த முறையீட்டை விசாரணைக்கு ஏற்கலாம். ஆனால் தேசிய அமர்வு மன்றம், மற்றும் பிராந்திய அமர்வு மன்றங்கள், உயர்நீதி மன்றத்தின் விசாரணை வரம்பின் கீழ் வராது. இம் மன்றங்கள் அளிக்கும் தீர்ப்பானையை எதிர்த்து முறையீடு செய்ய வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தில்தான் செய்ய முடியும். (சட்டப் பிரிவு 1095)இன்படி வழங்கலின் இடம் குறித்தான பிரச்சினைகளில் உருவாகும் மேல் முறையீடுகளை தேசிய அமர்வு மற்றும் பிராந்திய அமர்வு மன்றங்களிலும் தீர்மானம் செய்ய முடியும்)

கேள்வி 20: உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான கால வரையறை என்ன?

பதில்: எந்த உததரவை எதிர்த்து முறையீடு செய்கிறாரோ அது தொடர்பான உத்தரவைப் பெற்ற நாளிலிருந்து 180 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

2.89473684211
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top