பதில்: சி.ஜி.எஸ்.டி / எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 54 பிரிவில் பணம் திரும்பப் பெறுதல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. "பணம் திரும்பப் பெறுதலில்" பின்வருவன உள்ளடங்கியுள்ளன:
(அ) மின்னணு பண பேரேட்டில் மீதமிருப்பதாக வரவு செலவு அறிக்கையில் உரிமை கோரப்பட்ட எந்தத் தொகை,
(ஆ) பின்வரும் நிலையில் பயன்படுத்தப்படாத, விதை, உரம் மற்றும் பண்ணை சாதனங்களுக்கான வரிச் சலுகை (1) வரி விதிக்கப்படாத பொருள்கள் விற்பனையில் செலுத்தப்படாத வரி, அல்லது (2) உற்பத்திப் பொருள்களுக்கான (வரி விதிக்கப்படாத அல்லது முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் அல்லாத) வரி விகிதத்தைவிட கொள்முதல் பொருள்களுக்கான வரிவிகிதம் அதிகமாக இருப்பதால், கடன் மொத்தமாக சேர்ந்திருத்தல்,
(இ) எந்த மாதிரியான கொள்முதலுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அந்தஸ்து பெற்ற அமைப்பு, அல்லது ஐக்கிய நாடுகள் சபை (பிரிவிலேஜஸ் மற்றும் இம்யூனிட்டீஸ்) சட்டம் 1947-ன்படி பட்டியலிடப்பட்ட பல்வேறு நாடுகளின் அரசு நிதி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், வெளிநாடுகளின் இணை தூதரகம், அல்லது தூதரகம் வரி செலுத்தியிருத்தல்.
பதில்: பயன்டுத்தப்படாத கொள்முதல் வரிக்கான கடன் தொகையைப் பின்வரும் தழ்நிலைகளில் சட்டப் பிரிவு 54-ன் துணைப் பிரிவு (3)-ன் விதிகளின்படி திரும்பப் பெறுவதற்கு அனுமதிக்கப்படும்:-
(1) வரி செலுத்தாமல், வரி விதிக்கப்படாத பொருள்களை விற்பனை செய்யும்போது:
(2) உற்பத்திப் பொருள்களுக்கான (வரி விதிக்கப்படாத அல்லது முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் அல்லாத) வரி விகிதத்தைவிட கொள்முதல் பொருள்களுக்கான வரிவிகிதம் அதிகமாக இருப்பதால், கடன் மொத்தமாக சேர்ந்திருக்கும்போது,
ஆனால், ஏற்றுமதி வரிக்கு உட்பட்ட பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போதும், சேவை அல்லது பொருள் வழங்குநர் அல்லது இரண்டையும் வழங்குபவர் தனது சேவை அல்லது பொருளுக்காக மத்திய வரியைத் திரும்பப் பெற்றாலோ, அத்தகைய பொருள் / சேவைக்காகச் செலுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வரியைத் திரும்பப் பெறும்போதோ பயன்படுத்தப்படாத கொள்முதல் வரிக்கான கடனை திரும்பப் பெற முடியாது.
பதில்: சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 54-வது பிரிவு, 3-வது உட்பிரிவின்படி ஏற்றுமதி தீர்வை உட்பட்ட பொருள்களை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது பயன்படுத்தப்படாத கொள்முதல் வரிக்கான கடன் தொகையைத் திரும்பப் பெற முடியாது.
பதில்: இப்படிப்பட்ட பயன்படுத்தப்படாத கொள்முதல் வரிக்கடன் தொகையை நிதியாண்டின் முடிவில் திரும்பப் பெறும் விதிமுறை எதுவும் ஜி.எஸ்.டி விதியில் இல்லை. அது அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும்.
பதில்: வரி செலுத்த வேண்டிய ஒரு நபர் சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி.எஸ்.டி அல்லது தவறாக செலுத்தப்பட்ட ஐ.ஜி.எஸ்.டி அல்லது சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி.எஸ்.டி தொகையில் சமன் செய்துகொள்ள முடியாது. ஆனால், அவ்வாறு தவறாக செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெறும் உரிமை பெற்றுள்ளார் . சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி.எஸ்.டி சட்டத்தின் 77வது பிரிவின்படி
பதில்: தூதரகங்கள் அல்லது ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்களுக்கு வரிவிதிக்கப்படும், இது பின்னர் சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி.எஸ்டி சட்டத்தின் 54-வது பிரிவின் 2-வது உட்பிரிவின்படி பணம் திரும்பப் பெறுவதற்காகக் கோரப்படலாம். இந்தக் கோரிக்கை சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி.எஸ்.டி.யின் பணம் திரும்பப் பெறும் விதிமுறைகளில் பரிந்துரைக்கப்பட்ட முறையில் பொருள்கள் பெறப்பட்ட மாதத்தின் கடைசி தேதியிலிருந்து ஆறு மாதங்கள் முடிவடைவதற்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் வெளிநாடுகளின் இணை தூதரகம் அல்லது தூதரகங்கள் (சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 26 பிரிவின் 1-வது உட்பிரிவின்படி) தனிப்பட்ட அடையாள எண்ணை (Unique Identity Number) பெற வேண்டும். மேலும் இந்த அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்கள், விற்பனையாளர்களின்) உற்பத்தி வழங்கல்கள் வருமான வரி கணக்குத் தாக்கலில் இவர்களது தனிப்பட்ட அடையாள எண்ணில் காட்டப்படும்)
பதில்: சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 54-வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள விளக்கத்தின்படி "பொருத்தமான தேதி” யிலிருந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைவதற்குள் பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை ஒரு விண்ணப்பதாரர் கோர வேண்டும்.
பதில்: பணம் திரும்பப் பெறுதலில் பின்வரும் ஒருசில சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் நியாயமற்ற முறையில் வெறொருவர் பலன்பெறும் கோட்பாடு பொருந்தும்:
1) வரி விதிக்கப்படாத பொருள்கள் அல்லது சேவைகள் அல்லது இரண்டுமே அல்லது வரி விதிக்கப்படாத விற்பனைப் பொருள்கள் உற்பத்தி செய்யப் பயன்படும் கொள்முதல்கள் அல்லது கொள்முதல் சேவைகளுக்கு செலுத்தப்பட்ட வரியைத் திருப்பி வழங்குதல்.
(2) பின்வருவன தொடர்பான பயன்படுத்தப்படாத கொள்முதல் வரிக்கடன் (அ) வரி விதிக்கப்படாத வரிசெலுத்தப்படாத விற்பனைகள், அல்லது,
(ஆ) உற்பத்திப் பொருள்களுக்கான வரி விகிதத்தைவிட கொள்முதல் பொருள்களுக்கான வரிவிகிதம் அதிகமாக இருப்பதால், கடன் மொத்தமாக சேர்ந்திருக்கும்போது,
(இ) வழங்கப்படாத விலைப்பட்டி வழங்கப்படாத, விற்பனைக்காக செலுத்தப்பட்ட வரியை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ திருப்பிக் கொடுத்தல்
(ஈ) சி.ஜி.எஸ்.டி / எஸ்.ஜி.எஸ்.டி சட்டத்தின் 7-வது பிரிவின் படி தவறாக வதலிக்கப்பட்டு மாநில அல்லது மத்திய அரசிடம் செலுத்தப்பட்ட வரியை திருப்பிக் கொடுத்தல்
(உ) வரிச்சுமை அல்லது செலுத்தப்பட்ட வட்டி வேறு எந்த நபருக்கும் மாற்றப்படவில்லை என்றால்
(ஊ) அரசு அறிவிக்கக்கூடிய வரிச்சுமையை ஏற்றுக்கொண்ட இப்படிப்பட்ட வேறு வகையான நபர்கள்.
பதில்: ஆம், அவ்வாறு திரும்ப வழங்கப்பட்ட தொகை நுகர்வோர் நல நிதியில் வரவு வைக்கப்படும். - சி.ஜி.எஸ்.டி / எஸ்.ஜி.எஸ்.டி. சட்டத்தின் 57-வது பிரிவின்படி.
பதில்: ஆம், அனைத்து வகையிலும் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெறப்பட்ட 60 நாட்களுக்குள் பணம் திரும்ப வழங்கப்பட வேண்டும். இந்தக் குறிப்பிட்ட 60 நாட்களுக்குள் பணம் திரும்ப வழங்கப்படாவிட்டால், சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 57-வது பிரிவின்படி அறிவிக்கப்பட்ட வட்டி விகித்துடன் பணம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், தாற்காலிகமாகப் பணம் திரும்பப் பெறுதலில் சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 54-வது பிரிவின் துணைப் பிரிவு 6-ன் ஒரு சில பிரிவுகளில் பதிவுபெற்ற நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வரி விதிக்கப்படாத விற்பனைகளில், உரிமை கோரப்பட்ட தொகையில் 90% திரும்ப வழங்கக்கூடிய தழ்நிலையில், இந்த தாற்காலிகமாக பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை ஏற்கப்பட்ட 7 நாட்களுக்குள் அந்தத் தொகை வழங்கப்பட வேண்டும்.
பதில்: முடியும். பின்வரும் சூழல்களில் பணம் திரும்ப வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்படலாம்:
1. அத்தகைய வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும்வரை எந்த வித வருமான வரி கணக்குத் தாக்கலையும் செய்ய அவர் தவறியிருந்தால்;
2. பதிவு செய்த வரி விதிக்கப்பட வேண்டிய நபர் ஏதாவது வரி வட்டி, அல்லது அபராதம் செலுத்த வேண்டியிருந்தால், அது மேல் முறையீட்டு ஆணையம்/தீர்ப்பாயம் நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்படாமல் இருந்தால், அப்படிப்பட்ட வரி வட்டி, அல்லது அபராதத் தொகையை அவர் செலுத்தும் வரையில்; உரிய அதிகாரி, சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 54வது பிரிவின் துணைப் பிரிவு 10 (d)-ன்படி செலுத்தப்படாத வரிகள், வட்டி அபராதம், தாமதக்கட்டணம் ஏதாவது இருந்தால் அவற்றை திரும்ப வழங்க வேண்டிய தொகையிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.
3. ஆணையர், பணம் திரும்ப வழங்கும் உத்தரவு மேல் முறையீட்டின் கீழ் இருந்தாலோ அப்படி திரும்ப வழங்கும் தொகையால் சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 54வது பிரிவின் துணைப் பிரிவு 11-ன்படி தவறான செயல்பாடுகள் அல்லது மோசடி செயல்கள் இந்த மேல் முறையீட்டின் வருமானத்தை மோசமாக பாதிக்கும் என்று இவர் கருதினாலோ திரும்ப வழங்க வேண்டிய எந்த வகையான தொகையையும் நிறுத்தி வைத்துக்கொள்ளலாம்.
பதில்: மேல் முறையீட்டின் அல்லது மேற்கொண்டு நடவடிக்கையின் விளைவாக வரி விதிக்கப்பட வேண்டிய நபர் பணம் திரும்பப் பெறுவதற்கு உரிமை உள்ளவராக மாறினால், சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 54-வது பிரிவின் துணைப் பிரிவு 12-ன்படி வட்டித்தொகைப் பெறவும் உரிமை பெறுகிறார்.
பதில்: சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 54-வது பிரிவின் துணைப் பிரிவு 14. ன்படி தொகை 1000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், எந்த தொகையும் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
பதில்: இப்போதைய சட்டப்படி திரும்ப செலுத்த வேண்டிய தொகையை தற்போதைய சட்டத்தின் விதிமுறைகளின்படி பணமாக செலுத்தப்பட வேண்டும், அது ஐ.டி.சி.யாக கிடைக்காது.
பதில்: வரி விதிக்கப்படாத பொருள்கள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் (அறிவிக்கப்படக்கூடிய பதிவுபெற்ற நபர்கள் அல்லாதவர்கள்) விற்பனை செய்த பதிவு செய்யப்பட்ட ஒரு நபர் பணம் திரும்பப் பெறக் கோரிக்கை விடுக்கும்போது 90% தொகையை தற்காலிக அடிப்படையில் சரிபார்ப்பதற்கு முன்னரே திரும்பப்பெற அனுமதிக்கப்படலாம். சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 54-வது பிரிவின் உட் பிரிவு 6-ன்படி விதிக்கப்படக்கூடிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இந்த அனுமதி வழங்கப்படும்.
பதில்: ஏற்றுமதி பொருள்களுக்கான பணம் திரும்பப் பெறுதலில், இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்ய பி.ஆர்.சி. ஆவணம் அவசியம் என்று பணம் திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளில் பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால், ஏற்றுமதி சேவைகளுக்கான பணம் திரும்பப் பெறுதல் விண்ணப்பத்துடன் பி.ஆர்.சி. விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியம்.
பதில்: வரி விதிக்கப்படாத பொருள்களை விற்பனை செய்யும்போது நியாயமற்ற முறையில் வேறொருவர் பலன்பெறும் கோட்பாடு பொருந்தாது (அதாவது சிறப்புப் பொருளாதார மண்டல தொழிற்கூடங்களுக்கு ஏற்றுமதி செய்யும்போதும் விற்பனை செய்யும்போதும்).
பதில்: திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையில் இடம்பெற்றுள்ள தொகை 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், விண்ணப்பதாரர், தன்னிடமுள்ள ஆவணம் அல்லது வேறு எந்த சான்றுகளின் அடிப்படையில், ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும். இதில், வரிச்சுமையை வேறு யாருக்கும் தான் மாற்றிக்கொடுக்கவில்லை என்பதால், பணத்தை திரும்பப் பெறுவதற்குத் தனக்குத் தகுதி உள்ளது என அவர் சான்றளிக்க வேண்டும். ஆனால், திரும்பப் பெறும் தொகை 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், வரிச்சுமை வேறு யாருக்கும் மாற்றப்படவில்லை என்பதற்கான ஒரு பட்டயக் கணக்காளர் அல்லது செலவுக் கணக்காளரின் சான்றிதழை விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டும்.
பதில்: ஜி. எஸ்.டி. சட்டத்தில் இப்படிப்பட்ட சலுகை இடம்பெறவில்லை. அவர்கள் வரி செலுத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 54-வது பிரிவின் உட்பிரிவு 1, 54-வது பிரிவின் உட்பிரிவு 3-ன்படி செலுத்தப்பட்ட வரி அல்லது பயன்படுத்தப்படாத கொள்முதல் வரிக்கான கடன் தொகையை திரும்பப் பெறுவதற்கு கோரிக்கை விடுக்கலாம்.
பதில்: இந்த வழிமுறை ஜி.எஸ்.டியிலும் இடம்பெற்றுள்ளது.
1. ஜி.எஸ்.டி சட்டம் 16-வது பிரிவின்படி, பதிவு செய்யப்பட்ட வரி செலுத்தும் ஒரு நபர் பின்வரும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தெரிவுசெய்யலாம்.
2. ஜி.எஸ்.டி செலுத்தாமல் பத்திரம் அல்லது கடிதம் உத்திரவாதம் கொடுத்து பொருள்கள்சேவைகளை ஏற்றுமதி செய்யலாம், ஐ.டி.சி. தொகையைத் திரும்பப் பெற கோரிக்கை விடுக்கலாம். அல்லது
3. ஜி.எஸ்.டி செலுத்தி பொருள்களை/சேவைகளை அவர் ஏற்றுமதி செய்யலாம். இப்படி செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி தொகையைத் திரும்பப் பெற கோரிக்கை விடுக்கலாம்.
பதில்: சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 49-வது பிரிவின் உட்பிரிவு 6-ன்படி ஒரு விண்ணப்பதாரர் மின்னணு ரொக்க பதிவேட்டிலிருந்து பணம் திரும்பப் பெறுவது தொடர்பான கோரிக்கையை உரிய வரி செலுத்தும் காலத்திற்கான வரவு செலவு அறிக்கையின் மூலம் சமர்ப்பிக்கும்போது, இதற்கான ஒப்புகை இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடனேயே அனுப்பப்படும். மற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் பணம் திரும்பப் பெறும் கோரிக்கைக்கான ஒப்புகை, இந்த விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
பதில்: சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 54-வது பிரிவின் உட்பிரிவு 6-ன்படி வரி விதிக்கப்படாத பொருள்கள் விற்பனையைப் பொருத்தவரையில், பணம் திரும்பப் பெறுவதற்காக கோரப்பட்ட தொகையில் 90% வரையில், இதற்கான விண்ணப்பம் பெறப்பட்ட 7 நாட்களுக்குள் தற்காலிகமாக வழங்கப்படும்.
பதில்: பணம் திரும்பப் பெறுவதற்காக தாக்கல் செய்யும் ஒவ்வொரு கோரலும் ஜி.எஸ்.டி. ஆர்.எஃப்.டி.1 படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால், மின்னணு ரொக்க பேரேட்டில் உள்ள மீதமிருக்கும் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக கோரல், மாதாந்திர காலாண்டு வரவு செலவு தாக்கல் படிவம் பொருத்தமான ஜி.எஸ்.டி.ஆர்3, ஜி.எஸ்.டி.ஆர்4 அல்லது ஜி.எஸ்.டி.ஆர்7 இவற்றில் காலத்திற்கு பொருத்தமான படிவத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
பதில்: பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை முறையாக இருந்தால், உரிய அதிகாரி ஜி.எஸ்.டி. ஆர்.எஃப்.டி-06 படிவம் வாயிலாக பணம் வழங்குவதை அனுமதிப்பார். ஜி.எஸ்.டி. ஆர்.எஃப்.டி-05 படிவம் வாயிலாக அனுமதி ஆலோசனை வழங்கப்படும். திரும்ப வழங்கப்பட வேண்டிய தொகை விண்ணப்பதாரருக்கு அவர் கொடுத்த வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பட்டுவாடா முறையில் வரவு வைக்கப்படும்.
பதில்: பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அது குறித்து 15 நாட்களுக்குள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஜி.எஸ்.டி. ஆர்.எஃப்.டி-03 படிவம் உரிய அதிகாரி, குறைபாடுகளை விண்ணப்பதாரருக்குச் சுட்டிக்காட்டி இவற்றை நிவர்த்தி செய்த பிறகு, பணம் திருப்பப் பெறுவதற்கான படிவத்தைத் தாக்கல் செய்யும்படி, பொதுவான இணையதள வலைவாயில் மூலமாக கேட்டுக்கொள்ள வேண்டும்.
பதில்: நிராகரிக்க முடியாது. இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என உரிய அதிகாரி முடிவுசெய்தால் அவர் ஜி.எஸ்.டி. ஆர்.எஃப்.டி-08 படிவம் வாயிலாக விண்ணப்பதாரருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஜி.எஸ்.டி. ஆர்.எஃப்.டி-09 படிவத்தில் இதற்கான பதிலை அளிக்கும்படி விண்ணப்பதாரரை கேட்டுக்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரரின் பதிலை பரிசீலித்தப் பிறகு 15 நாட்களுக்குள் இந்த அதிகாரி பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிகையை ஏற்றக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். இதற்கான உத்தரவை ஜி.எஸ்.டி. ஆர்.எஃப்.டி-06 படிவம் வாயிலாக மட்டுமே அவர் பிறப்பிப்பார்.
ஆதாரம் : http://www.cbec.gov.in