பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பதிவு

GSTல் பதிவு செய்தல் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1. GSTல் பதிவு செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

பதில்: சரக்குகள் மற்றும் சேவை வரி (GST) ஆளுமையின் கீழ் பதிவு செய்து கொள்வதால் வர்த்தகங்களுக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றது.

  • சரக்கு அல்லது சேவைகள் வழங்குபவர் சட்டபடி அங்கீகரிக்கப்படுகிறார்.
  • உள்ளீட்டு சரக்குகள் அல்லது சேவைகள் முறையாக கணக்கில் காட்டப்பட்டு வரிகள் செலுத்தப்பட்டிருந்தால், அதை சரக்கு அல்லது சேவைகள் வழங்கல் அல்லது இரண்டிற்குமான GST வரி பாக்கியை செலுத்த பயன்படுத்தலாம்.
  • சரக்கு வாங்கியவர்களிடமிருந்து சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வரியை வதல் செய்ய வேண்டும். வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களுக்கு வழங்கப்பட்ட சரக்கு அல்லது சேவைகளுக்காக செலுத்தப்பட்ட வரிக்கான சலுகையாக மாற்றபடுகிறது.
  • GSTன் கீழ் மற்ற பலன்கள் மற்றும் தனிச்சலுகைகள் கிடைப்பதற்கு தகுதி பெறமுடியும்.

கேள்வி 2. GSTல் பதிவு செய்யாத ஒரு நபர் ITCஐப் பெற உரிமை கோர மற்றும் வரியை வசூலிக்க முடியுமா?

பதில்: முடியாது. GST பதிவு செய்யாத ஒரு நபர் அவருடைய வாடிக்கையாளர்களிடமிருந்து GST  வசூலிக்கவும் முடியாது, அவர் GSTக்கு செலுத்திய உள்ளீட்டு வரி வரவை பெற உரிமை கோரவும் முடியாது.

கேள்வி 3. அமலாக்கப்படும் பதிவு தேதி எது?

பதில் : பதிவு செய்ய வேண்டிய நபர், பதிவுக்கான விண்ணப்பத்தை முப்பது நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கப்பட்டவுடன், நபரின் பதிவுசெய்ய வேண்டிய தேதியே பதிவு அமலாக்கம் பெறும் தேதியாகும்.

பதிவு செய்ய வேண்டிய நபர், பதிவுக்கான விண்ணப்பத்தை முப்பது நாட்களுக்குப்பின் சமர்ப்பித்தால், அந்த நபரின் பதிவுக்கு அனுமதி கிடைத்தப் பின்னரே, பதிவு அமலாக்கம் பெறும் தேதியாகும்.

வரி செலுத்தும் தொடக்கநிலை வரம்பிற்குள் உள்ள நபர், தானாக முன்வந்து பதிவு செய்ய விரும்பினால், பதிவாணை கிடைத்த தேதியிலிருந்து, பதிவு அமாலாக்கம் பெறும்.

கேள்வி 4. GST மாதிரி சட்டத்தின் கீழ் யாரெல்லாம் பதிவு செய்ய வேண்டிய கடமைப்பட்டவர்கள்?

பதில் : வரி செலுத்துவதற்குட்பட்ட வழங்கலை முகவர்கள் உட்பட எவரெல்லாம் வழங்குகிறார்களோ, அவர்கள் அனைவரும் CGST/SGST 2017 சட்டம், 22ம் பிரிவின்படி பதிவு செய்ய கடமைப்பட்டவர்கள். அதாவது, GST சட்டப்படி சரக்கு வழங்குதல் / அல்லது சேவைகள் வரி விதிக்கப்பட வேண்டியவைகள், அவரின் ஒட்டுமொத்த விற்றுமுதல் நிதியாண்டின் தொடக்கநிலை வரம்பான 20 லட்சத்தை கடந்துவிட்டால், வரி செலுத்த வேண்டிய மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசங்களான டில்லி அல்லது புதுச்சேரிதானாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 279A(4)(g) குறிப்பிட்டுள்ளபடி, பதினொன்று சிறப்புவகைப்பட்ட நிலைகளில், தொடக்கநிலை வரம்பு ரூ.10 லட்சம் உள்ளவைகள் பதிவு செய்யக் கடமைப்பட்டவர்கள்.

அவர்களின் ஒட்டுமொத்த விற்றுமுதல், தொடக்கநிலை வரம்பு ரூ. 20 லட்சத்திற்கும் கீழிருந்தாலும்,

சட்டப் பிரிவு 24ன் கீழ் குறிப்பிட்டுள்ளபடி சில வகைப்பட்ட வழங்குபவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

சட்டப் பிரிவு 23ன் படி தன்னுடைய வேளாண் பொருட்கள் வழங்கும் ஒரு விவசாயி பதிவு செய்ய வேண்டியதில்லை. ஒரு நபர் GST சட்டத்தின் கீழ் பிரத்யேகமாக செய்யும் வரியில்லாத அல்லது மொத்தமும் விலக்களிக்கப்பட்ட சரக்கு மற்றும் / அல்லது சேவைகளுக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

கேள்வி 5. ஒட்டுமொத்த விற்றுமுதல் என்றால் என்ன?

பதில் : CGST / SGSTன்26) சட்டப்பிரிவின்படி, ஒட்டுமொத்த மதிப்பையும் உள்ளடக்கிய "ஒட்டுமொத்த விற்றுமுதல்” என்றால் :-

அ) அனைத்து வரி செலுத்த வேண்டிய வழங்கல்,

ஆ)அனைத்து வரி விலக்களிக்கப்பட்ட வழங்கல்,

இ) சரக்குகள் மற்றும் / அல்லது சேவை ஏற்றுமதிகள்,

ஈ) ஒரே PAN இருக்கும் ஒரு நபரின் மாநிலத்திடையேயான வழங்கல்.

மேலே குறிப்பிட்டவைகள் அனைத்திந்திய அடிப்படையில் கணக்கிடப்பட்டு, CGST சட்டம், SGST சட்டம், UTGST சட்டம் மற்றும் ITGST சட்ட்த்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. சொந்த கணக்கிலிருந்தோ அல்லது தனது மொத்த முதலீடின் மூலமாகவோ வழங்கலை செய்த வரி செலுத்தும் நபர் ஒட்டுமொத்த விற்றுமுதலை சேர்த்துக் கொள்ளலாம்.

உள்ளிடு வழங்கலின் மதிப்பு மற்றும் நேர்மாறான வரி அடிப்படையில் வழங்கலின் மதிப்பு மீதான விதிக்கப்பட்டவரி ஆகியவற்றை ஒட்டுமொத்த விற்றுமுதலுடன் சேர்க்கப்படவில்லை. பணியை முடித்த பின், அந்த பொருள்களின் மதிப்பை பணி எடுத்து செய்பவரின் விற்றுமுதலுடன் சேர்க்கப்படவில்லை. முதலீட்டின் சரக்கு வழங்கலாகவே கருதப்படும். முதலீட்டின் விற்றுமுதலில் அவை சேர்க்கப்படும்

கேள்வி 6. எந்தெந்த வகைகளுக்கு பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம்?

பதில் : CGST / SGST சட்டப்பிரிவு 24ன் படி கீழ்கண்ட வகையான நபர்களுக்கு அவர்களின் தொடக்கநிலை வரம்பு எதுவாக இருந்தாலும், கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

க) மாநிலங்களுக்கிடையிலான வழங்கலைச் செய்யும் நபர்கள்

ங) திட்டமிடாமல் வரி செலுத்தும் நபர்கள்

ச) நேர்மாறான வரி விதிப்பின் கீழ் வரி செலுத்த வேண்டிய நபர்கள்

ஞ) பிரிவு 9ன் உட்பிரிவு( 5)ன் படி, மின்னனு வர்த்தகம் இயக்குபவர் வரி செலுத்த வேண்டியவர்

ட) இந்தியாவில் வசிக்காமல் வரி செலுத்த வேண்டியவர்கள்

ண) பிரிவு 51கீழ் வரி பிடித்தம் செய்ய வேண்டிய நபர்கள்

த) பதிவு செய்த வரி செலுத்தும் நபருக்கு பதிலாக ஒரு முகவரோ அல்லது வேறு யாரோ சரக்கு மற்றும் / அல்லது வழங்கல்களை செய்தால்

ந) உள்ளீட்டு சேவை விநியோகஸ்தர் (சட்டப்படி பதிவு செய்திருந்தாலும் அல்லது செய்யாவிட்டாலும்)

ப) பிரிவு 52ன் படி வரி வசூலிக்க வேண்டிய நபர்கள்

ம) ஒவ்வொரு மின்னணு வர்த்தகம் இயக்குபவர்

ய) பதிவு செய்யப்பட்ட நபரைத் தவிர, ஆன்லைன் தகவல்கள் மற்றும் தரவுதள மீட்பு சேவைகள் போன்றவற்றை வெளிநாட்டின் ஒரு இடத்திலிருந்து, இந்தியாவிலுள்ள ஒரு நபருக்கு வழங்கும் ஒவ்வொரு நபரும்.

ர) கவுன்சிலின் பரிந்துரையின்படி மத்திய அல்லது மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட அம்மாதிரி நபர்கள் அல்லது நபர்களின் வர்க்கம்

கேள்வி 7. GSTன் கீழ் பதிவு செய்வதற்கான கால வரம்பு என்ன?

பதில் : நிபந்தனைகளுக்குட்பட்டு பதிவு விதிகளின் கீழ் பரிந்துரைத்தப்படி பதிவு செய்ய வேண்டிய தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் ஒரு நபர் பதிவு செய்ய கடமைப்பட்டவர், ஒரு திட்டமிடப்படாத வரி செலுத்துபவர் மற்றும் இந்தியாவில் வசிக்காமல் வரி செலுத்துபவர் ஆகியவர் வியாபாரம் தொடங்குவதற்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்பாவது பதிவு செய்வதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

கேள்வி 8. ஒரே PAN எண்ணை வைத்துக் கொண்டு ஒரு நபர் வெவ்வேறு மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரே ஒரு பதிவு செய்து இயங்க முடியுமா?

பதில் : முடியாது. CGST / SGSTன் சட்டப்பிரிவு 22ன் உட்பிரிவு (1)படி, ஒரு நபர் GST செலுத்த வேண்டியவராக இருந்தாலும், ஒரு வியாபாரம் செய்பவராக இருந்தாலும், அவர் எந்தெந்த மாநிலத்தில் செய்கின்றாரோ அந்தந்த இடத்தில் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

கேள்வி 9. ஒரே மாநிலத்தில் பல வியாபாரப் பகுதிகளை வைத்திருக்கும் ஒரு நபர், வெவ்வேறு இடத்தில் பதிவு செய்து கொள்ள முடியுமா?

பதில் : முடியும். சட்டப்பிரிவு 25ன் உட்பிரிவு(2)ன் விதிகளின்படி, பரிந்துரைத்த நிபந்தனைகளின்படி, பல வியாபாரப் பகுதிகளை ஒரே மாநிலத்தில் வைத்திருக்கும் ஒரு நபர் தனது ஒவ்வொரு வியாபாரத்தையும் தனித்தனியாக பதிவு செய்து கொள்ளலாம்.

கேள்வி 10. GST செலுத்தத் தேவையில்லாத நபர், தாமாகவே முன்வந்து பதிவு செய்து கொள்ள ஏதாவது வழிமுறைகள் உள்ளதா?

பதில் : பதிவு செய்து கொள்ள முடியும். சட்டப்பிரிவு 25ன் உட்பிரிவு(3)ன் விதிகளின்படி, வரி செலுத்த அவசியமில்லாத ஒரு நபர், பிரிவு 22கீழ் தாமாகவே முன்வந்து பதிவு செய்து கொள்ள முடியும். மேலும், ஒரு வரி செலுத்தும் நபருக்குரியசட்ட விதிமுறைகள் இவருக்கும் பொருந்தும்.

கேள்வி 11. PAN வைத்திருப்பவர்களுக்கும் பதிவு செய்வது கட்டாயமா?

பதில் : ஆமாம். வருமான வரி சட்டம், 96 (1961 ல் 43)கீழ் நிரந்தர கணக்கு எண் வழங்கப்பட்ட ஒவ்வொரு நபரும் CGST / SGST சட்டப்பிரிவு 25(6)படி பதிவு செய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.

இருப்பினும், மேற்க்கூறப்பட்ட சட்டப்பிரிவு 256)படி பிரவு 52 கீழ் ஒரு நபருக்கு வரி பிடித்தம் செய்ய்ய வேண்டுமானால், அவரிடம் PANக்கு பதிலாக, கூறப்பட்ட வருமான வரி சட்டத்தின் கீழ் ஒரு வரி பிடித்தம் மற்றும் வசூல் கணக்கு எண் இருந்தால் தான், பதிவு செய்யும் தகுதியே பெறுவார்.

கேள்வி 12. அதற்குரிய அதிகாரியின் மூலமாக துறை, ஒரு நபர் மீது சுவோ மோட்டோ தொடர இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியுமா?

பதில் : முடியும். சட்டப்பிரிவு 25ன் உட்பிரிவு(8)ன் விதிகளின்படி, இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டிய ஒரு நபர் பதிவு செய்ய தவறினால், அதற்குரிய அதிகாரி, இந்த சட்டத்தின் கீழ் எந்த பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியும் அல்லது பதிவு சட்டத்தில் பரிந்துரைத்துள்ளபடி, தற்போது அமலிலிருக்கும் வேறு ஏதாவது சட்டப்படி அந்த நபரின் மீதுவழக்கு தொடர பதிவு செய்யலாம்.

கேள்வி 13. அதற்குரிய அதிகாரிக்கும் பதிவுக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க முடியுமா?

பதில் : நிராகரிக்க முடியும். CGST / SGSTன் சட்டப்பிரிவு 25ன் உட்பிரிவு 10வது விதியின்படி, அதற்குரிய அதிகாரி ஒரு விண்ணப்பத்தை சரிபார்த்தப் பிறகு நிராகரிக்க முடியும்.

கேள்வி 14. எந்த நபருக்கும் அனுமதிக்கப்பட்ட பதிவு நிரந்தரமா?

பதில் : ஆமாம். ஒப்படைத்தல், ரத்து செய்தல், இடைநீக்கம் செய்தல், அல்லது தள்ளுபடி செய்தல் போன்ற செயல்கள் நடைபெற்றாலொழிய, அனுமதிக்கப்பட்ட பதிவு சான்றிதழ் நிரந்தரமானது.

கேள்வி 15. ஐக்கிய நாடுகள் சபை GSTன் கீழ் பதிவு செய்வது அவசியமா?

பதில் : ஆமாம். CGST / SGSTன் சட்டப்பிரிவு 25(9)ன் விதியின்படி, அறிவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபைகள், தூதரகம் அல்லது அயல்நாட்டு தூதரகங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட வேறு சில மற்ற நபர்கள் அனைவரும் GST  வலைவாயில் மூலமாக பிரத்யேக அடையாள எண்ணை (UIN) பெற வேண்டியது அவசியம். இந்த குறிப்பிட்ட அடையாள அமைப்பு, GSTIN அமைப்புடன் இணக்கமாக இருப்பதால் இது நாடு முழுக்க ஒரே மாதிரி சீராக இருக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கும் இதுவே பொதுவானதாகும். அவர்களால் அறிவிக்கப்பட்ட சரக்கு வழங்கல் மற்றும் சேவைகள் பெறப்பட்டதின் மீது செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெற உரிமை கோரும்போது இந்த UIN தேவைப்படுகின்றது.

கேள்வி 16. ஐக்கிய நாடுகள் சபைகளுக்கு வழங்கும் வரி செலுத்தும் நபரின் பொறுப்பு என்ன?

பதில் : இந்த மாதிரி அமைப்புகளுக்கு வழங்கும் வரி செலுத்தும் அனுப்புநர் அவர்களுடைய விலைப்பட்டியின் மீது UINஐ குறிப்பிட வேண்டும். மேலும், இந்த வழங்கல்கள் ஒரு அனுப்புநரிடமிருந்து மற்றொரு பதிவு செய்யப்பட்ட நபருக்குத்தான் வழங்க வேண்டும். அந்த விலைப்பட்டியை அனுப்புநரால் பதிவேற்றம் செய்யப்படும்.

கேள்வி 17. அரசு நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டியது அவசியமா?

பதில் : UIN என்ற அடையாள எண்ணை அரசு அதிகாரிகள் மற்றும் GST சரக்குகளை வெளியூர் வழங்கலில் ஈடுபடாத ஆனால், மாநிலத்திற்குள் வாங்கலில் ஈடுபடும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநில வரி அதிகாரிகளால், GST வலைவாயில் வழியாக வழங்கப்படும்.

கேள்வி 18:திட்டமிடாமல் வரி செலுத்துபவர்கள் யார்?

பதில் : CGST  / SGSTன் சட்டப்பிரிவு 2(20)ல் திட்டமிடாமல் வரி செலுத்தும் நபர் பற்றி விளக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அல்லது யூனியன் பிரதேசத்திலோ ஒரு நிலையான வர்த்தக அலுவலகம் வைத்துக் கொள்ளாமல் இருக்கும். ஒரு நபர் சரக்கு மற்றும் சேவைகள் வழங்கல் பரிமாற்றத்தில் எப்பொழுதாவது ஈடுபட்டாலோ, அல்லது வர்த்தகத்திற்கு உதவி செய்தாலோ, அல்லது முதலீடு செய்தாலோ, அல்லது முகவரோ, அல்லது வேறு ஏதாவது வழியில் வர்த்தகம் செய்பவர்கள் என்று பொருள்.

கேள்வி 19. இந்தியாவில் வசிக்காமல் / வர்த்தகம் இடமில்லாமல் வரி செலுத்துபவர் யார்?

சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்கலில் முதலீடு செய்தவர் அல்லது முகவர் அல்லது வேறு ஏதாவது வழியிலோ, இந்தியாவில் வசிக்காமல் அல்லது நிலையான வர்த்தக விலாசமில்லாமல் எப்பொழுதாதவது வர்த்தகத்தை செய்பவர்களுக்கு CGST / SGSTன் சட்டப்பிரிவு 2(77)ன் படி இந்தியாவில் வசிக்காமல் / வர்த்தகம் இடமில்லாமல் வரி செலுத்துபவர் என்று பொருள்.

கேள்வி 20. இந்தியாவில் வசிக்காமல் / வர்த்தகம் இடமில்லாமல் வரி செலுத்துபவர் மற்றும் திட்டமிடாமல் வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலவரம்பு என்ன ?

பதில் : பதிவு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள காலம் அல்லது பதிவு செய்த நாட்களிலிருந்து தொன்னூறு நாட்கள் வரை காலவரம்பாகும். இருந்தாலும், இதில் எது முன்னதாக காலாவதியாகிறதோ அதுவே இந்தியாவில் வசிக்காமல் / வர்த்தகம் இடமில்லாமல் வரி செலுத்துபவர் மற்றும் திட்டமிடாமல் வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலவரம்பாகும். வரி செலுத்துபவரின் கோரிக்கையை ஏற்று, அதற்குரிய அதிகாரி தொன்னூறு நாட்கள் என்று மேலேக் கூறப்பட்ட காலவரம்பை மேலும், தொன்னூறு நாட்களுக்கு மிகாமல் காலநீட்டிப்பு செய்யலாம்.

கேள்வி 21. இந்தியாவில் வசிக்காமல்/வர்த்தகம் இடமில்லாமல் வரி செலுத்துபவர் மற்றும் திட்டமிடாமல் வரி செலுத்துபவர்கள் இந்த சிறப்பு வகையின் கீழ் பதிவு செய்யும் போது ஏதாவது முன்கூட்டிய வரி செலுத்தப்பட வேண்டுமா?

பதில் : முன்கூட்டிய வரி செலுத்து வேண்டும். சாதாரண வரி செலுத்துபவருக்கு பதிவின் போது முன்பணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், பிரிவு 27(2)ன் படிதிட்டமிடாத வரி செலுத்துபவர் மற்றும் இந்தியாவில் வசிக்காமல்/வர்த்தகம் இடமில்லாமல் வரி செலுத்துபவர்களுக்கு, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள காலத்திற்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிக்கு இணையான பணத்தை பதிவு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது முன்பணமாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவான தொன்னூறு நாட்களுக்கு பிறகு நீட்டிக்கப்பட்டு பதிவு செய்தால். குறிப்பிடப்பட்ட நீட்டிப்பு காலக்கெடுவான தொன்னூறு நாட்களுக்கு, செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கிக்கு இணையான பணத்தை கூடுதல் முன்பணமாக செலுத்தப்பட வேண்டும்.

கேள்வி 22. பதிவுச் சான்றிதழ் திருத்தம் செய்தலுக்கு அனுமதிக்கப்படுமா?

பதில் : பிரிவு 28ன் படி, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 15 சாதாரண வேலை நாட்களுக்குள், பதிவுக்கு விண்ணப்பித்தவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், திருத்தம் செய்ய வேண்டி சமர்ப்பித்த தகவல்களை திருத்தம் செய்வதற்கு அனுமதிக்கவோ அல்லது நிராகரிக்கவோ அதற்குரிய அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.

சில குறிப்பிட்ட முக்கியமான இடத்திலுள்ள தகவல்களை மட்டுமே திருத்தம் செய்ய அதற்குரிய அதிகாரிக்கு அனுமதியுண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், GST சாதாரண வலைவாயில் வழியாக பதிவு சான்றிதழின் மற்ற இடங்களில் திருத்தம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு திருத்த செய்ய அனுமதியுண்டு.

கேள்வி 23 பதிவுச் சான்றிதழை ரத்து செய்ய அனுமதியுண்டா?

பதில் : ரத்து செய்ய முடியும், CGST / SGSTன் சட்டப்பிரிவு 29ல் குறிப்பிட்டுள்ளபடி சில சந்தர்ப்பங்களில் அதற்குரிய அதிகாரி சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்ட பதிவு ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது. குறிப்பிடப்பட்டுள்ளக் காலக்கெடுவுக்குள், இறந்த நபர் குறித்த வழக்கில், பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துபவராலோ அல்லது அவரின் சட்ட வாரிசுகளால் வழங்கப்பட்ட ஒரு விண்ணப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தனது சொந்த நடவடிக்கையினாலோ பதிவுச் சான்றிதழை அதற்குரிய அதிகாரியால் ரத்து செய்ய முடியும். பதிவுகள் விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துபவராலோ அல்லது அவரின் சட்ட வாரிசுகளாலோ பதிவுச் சான்றிதழை ரத்துச் செய்யக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினாலும் அல்லது அதற்குரிய அதிகாரி தன்னிச்சையாக பதிவு சான்றிதழை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவானாலும், SCNக்கு பதில் கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்ய வேண்டும்.

கேள்வி 24, CGSTன் கீழ் பதிவு ரத்தாகும் போது SGSTன் கீழும் ரத்தாகுமா?

பதில் : ஆமாம், ரத்தாகும். ஒரு சட்டத்தின் (CGST) கீழ் ரத்தாகும் பதிவு, மற்றொகு சட்டத்தின்(SGST) கீழும் ரத்தானதாகவே கருதப்படும். (பிரிவு 29(4))

கேள்வி 25. பதிவுகளை தன்னிச்சையாக அதற்குரிய அதிகாரிகள் ரத்து செய்ய முடியுமா?

பதில் : முடியும். CGST / SGST சட்டப்பிரிவு 29(2)ன் கீழ் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அதற்குரிய அதிகாரிகள் பதிவை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியும். ஒரு தொகுப்பு வர்த்தகர் வருமான வரி தாக்கலை குறிப்பிட்ட காலத்திற்குள் தொடர்ந்து மூன்று முறை செய்யாதிருத்தல், ஒழுங்காக வரி செலுத்துபவர் தொடர்ந்து ஆறு மாதங்கள் வரை வருமான வரி தாக்கல் செய்யாதிருத்தல், மற்றும் தானாகவே பதிவு செய்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் எந்த வர்த்தகமும் செய்யாதிருத்தல் போன்ற சந்தர்ப்பங்களில் பரிந்துரைக்கப்பட்ட விதிகளை மீறிய காரணங்களுக்காக CGST சட்டவிதிகளின் கீழ் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு அதிகாரி ரத்து செய்யும் நடவடிக்கை எடுப்பதற்குமுன் முறையான சில வழக்கமான சட்டக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். (பிரிவு 29(2)(e)விதி).

கேள்வி 26. பதிவு செய்யப்படும் போது, தெரிந்தே தவறான தகவல்களை தருதல், மோசடி, மற்றும் உண்மைகளை மறைத்தல் போன்றவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில் : அம்மாதிரி வழக்குகளில், கடந்த கால நிகழ்வுகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் பதிவை அதற்குரிய அதிகாரியால் ரத்து செய்ய முடியும்.(பிரிவு 29(2)(e) விதி).

கேள்வி 27. GST சட்டத்தின் கீழ் சேவைகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பதிவை தெரிவு செய்ய முடியுமா?

பதில் : முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்து செய்யப்படும் வரிக்குட்பட்ட வழங்கலை அவர் செய்யும் போது தனித்தனியான பதிவுகள் செய்ய வேண்டும்.

கேள்வி 28. ஒரு மாநிலத்தில் பல்வேறு பகுதியில் தன்னுடைய வர்த்தகப் பகுதியை வைத்திருக்கும் ஒரு வரி செலுத்துபவர், தன்னுடைய ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான பதிவை செய்ய வேண்டுமா?

பதில் : தேவையில்லை. இருப்பினும், CGSTன் சட்டம் 2017 பிரிவு 292)ன் படி, வரி செலுத்துபவர் தன்னுடைய வெவ்வேறான வர்த்தகப் பகுதிக்கு தனித்தனியாக பதிவு செய்ய தெரிவு செய்ய முடியும்.

கேள்வி 29. ISD என்பவர் யார்

பதில் : ISD என்றால் உள்ளிட்டு சேவை விநியோகஸ்தர் என்று பொருள். CGST / SGST சட்டப்பிரிவு 2 (61)ன் படி அதற்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது. உள்ளிட்டு சேவைகளுக்கான பெறும்போது தரப்படும் வரி விலைப்பட்டியை பெறுவதற்கும், அதன் சலுகையை அனுப்புநர் பகுதிக்கு (ஒரே PAN வைத்திருப்பவர்கள்) சமமான அளவில் பங்கீட்டுக் கொடுப்பதற்கான் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு அலுவலகம் ஆகும்.

கேள்வி 30. வரி செலுத்துபவர் ஏற்கனவே வேறொன்றுக்காக பதிவு செய்திருந்தாலும், ISDக்காக தனியாக பதிவு செய்ய வேண்டுமா?

பதில் : ஆமாம். ISD பதிவு என்பது சாதாரண பதிவிலிருந்து வேறுபட்ட, வரி செலுத்துபவரின் ஒரு அலுவலகத்திற்கு மட்டுமே ஆகும்.

கேள்வி 31 வரி செலுத்துபவருக்கு பல ISDக்கள் வைத்துக் கொள்ளலாமா?

பதில் : வைத்துக் கொள்ளலாம். வெவ்வேறு அலுவலகங்களுக்கு வரி செலுத்துபவர் ISDக்காக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

கேள்வி 32. வர்த்தகத்தை மாற்றும் போது பதிவுத் தொடர்பாக செய்ய வேண்டியது என்ன?

பதில் : வர்த்தகத்தை மாற்றிக் கொள்ளும் தேதியிலிருந்தோ அல்லது வாரிசுரிமை பெறும் தேதியிலிருந்தோ, பதிவு செய்ய வேண்டியது மாற்றிக் கொள்பவர் அல்லது வாரிசுதாரரின் பொறுப்பாகும். மேலும், மாற்றும் தேதியிலிருந்தோ, வாரிசுரிமை பெறும் தேதியிலிருந்தோ புதியதாக பதிவு செய்ய வேண்டும்.

கேள்வி 33. மத்திய சுங்க/சேவை வரி மதிப்புக் கூட்டு வரி சட்டத்தின் கீழ் பதிவு செய்த வரி செலுத்துபவர் / விற்பனையாளர்கள் புதிதாக பதிவு செய்ய வேண்டுமா?

பதில் : தேவையில்லை. அனைத்து வரி செலுத்துபவர் விற்பனையாளர்கள் GSTNலிருத்து GSTIN நெட்வொர்க்கிற்கு மாற்ற முடியும். நியமிக்கப்பட்ட நாளன்று, GSTIN எண்ணுடன் ஒரு தற்காலிக பதிவுச் சான்றிதழை வழங்கும். துறை அதிகாரிகளால் ஆறு மாதத்திற்குள் பரிசோதனை செய்த பின் இறுதியான பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும். தற்காலிக பதிவிலிருந்து இறுதி பதிவுக்கு மாற்றம் செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களை குறிப்பிட்டக் காலத்திற்குள் பதிவு செய்த விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்க தவறியதன் விளைவாக தற்காலிக GSTIN எண் வழங்குதல் ரத்து செய்யப்படும்.

எங்கேயெல்லாம் அவர்கள் வர்த்தகம் செய்கிறார்களே அந்தந்த மாநிலங்களில் புதிதாக விண்ணப்பிக்க சேவை வரி செலுத்துபவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பதிவு உள்ளது.

கேள்வி 34. பணி எடுத்து செய்பவர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டுமா?

பதில் : வேண்டாம். ஒரு பணி எடுத்து செய்பவர் என்பவர் சேவைகளை வழங்குபவர். பரிந்துரைக்கப்பட்ட வருடாந்திர தொடக்கநிலை வரம்பான 20/10 லட்சத்தை அவர் கடக்கும்போது, பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

கேள்வி 35. பணி எடுத்து செய்பவர் வர்த்தகம் செய்யும் இடத்திலிருந்து சரக்குகளை வழங்குவதற்கு அனுமதி உண்டா ?

பதில் : அனுமதி உண்டு. ஆனால், பணி எடுத்து செய்பவர் பதிவு செய்த இடத்திலிருந்து மட்டும், அல்லது, தனது கூடுதல் வர்த்தகம் செய்யும் இடம் என்று தன்னுடைய பிரதான வர்த்தகம் செய்யும் இடத்தை அறிவிக்காத வரை.

கேள்வி 36. பதிவு செய்யப்படும்போது, வரி செலுத்துபவர் தனது அனைத்து வர்த்தக இடங்களையும் அறிவிக்க வேண்டும்?

பதில் : ஆமாம். தனது பிரதான வர்த்தகம் செய்யும் இடம் மற்றும் வர்த்தகம் செய்யும் இடம் என்று அனைத்தையும் தனித்தனியாக CGST / SGSTன் கீழ் முறையே பிரிவு 2(89) மற்றும் பிரிவு 2(85)ல் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர் தன்னுடைய பிரதான வர்த்தகம் செய்யும் இடத்தையும் மற்ற வர்த்தக இடங்களின் கூடுதல் விவரங்களையும் பதிவு செய்யும் படிவத்தில் அறிவிக்க வேண்டும்.

கேள்வி 37. தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பும் இல்லாத விற்பனையாளர்கள் அல்லது சிறு விற்பனையாளர்களுக்கு என்று ஏதேனும் எளிமையான முறை உள்ளதா?

பதில் : வரி செலுத்துபவர்கள், IT ஆர்வலராக இல்லாததால், அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பின்வரும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

வருமான வரி தாக்கல் தயாரித்தல் (TRP): ஒரு வரி செலுத்தும் நபர் தன்னுடைய பதிவு விண்ணப்பம் / வருமான வரி தாக்கலை தானாகவோ அல்லது TRPன் துணையுடனோ தயார் செய்து கொள்ளலாம். வரி செலுத்துபவர் தரும் தகவலகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் வருமான வரி தாக்கலோ அல்லது சொல்லப்பட்ட பதிவு ஆவணங்களையோ TRP தயார் செய்து தரும். TRPயினால் தயார் செய்யப்பட்ட படிவத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதற்கான சட்டரீதியான பொறுப்பு வரி செலுத்துபவரை மட்டுமே சாரும். அப்படி ஏதேனும் தவறுகள் அல்லது தவறான தகவல்களுக்காக தரப்பட்டதற்காக TRP எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது.

வசதி மையம் (FC): டிஜிட்டிலாக்கம், மற்றும்/அல்லது படிவங்கள் பதிவேற்றம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி கையெழுத்திட்ட சுருக்க தாளுடன் கூடிய ஆவணங்கள் போன்றவற்றிற்கு பொறுப்பாகும். மேலும், வரி செலுத்துபவர்களுக்கு அதை வழங்குவதும் அவர்கள் பொறுப்பாகும். அடையாள குறியீடு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தரவுகளை பதிவேற்றம் செய்தபின், ஒப்புகைக்காக அந்த பதிவேற்ற ஆவணங்களை ஒரு காகிதத்தில் அச்செடுத்து, அதில் FC  கையொப்பமிட்டு வரி செலுத்துபவரிடம் அவருடைய பதிவேடுக்காக ஒப்புவிக்க வேண்டும். FC ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்த சுருக்கத் தாள்களில் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்டவர்கள் கையொப்பமிடுவார்கள்.

கேள்வி 38. GSTN பதிவில் டிஜிட்டல் கையொப்பமிடும் வசதி ஏதாவது உள்ளதா?

பதில் : வரி செலுத்துபவர் கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் சரியான டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் மின்னணு கையொப்பமிடுதலுக்கு இரு தெரிவு முறைகள் உள்ளது அல்லது மற்ற சமர்ப்பித்தல் ஆதார் எண் பயன்படுத்தி மின்னணு கையொப்பம், அல்லது DSC வழியாக சமர்ப்பிக்கலாம். அதாவது, GST வலைவாயில் வழியாக வரி செலுத்துபவருடைய டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை பதிவு செய்தல் ஆகும். இருப்பினும், கம்பெனிகள் அல்லது குறைந்த முதலீட்டில் கூட்டு வியாபாரம் செய்பவர்கள் DSC வழியாக மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்பது கட்டாயம். கையொப்ப தேவைகளுக்காக DSC சான்றிதழ்கள் 2 மற்றும் 3ம் நிலைக்கு மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.

கேள்வி 39. ஆன்லைன் பதிவுகள் மீதான முடிவுகள் எடுப்பதற்கான காலவரை என்ன?

பதில் : தகவல்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகள் அனைத்தும் சரியாக இருந்தால், மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் விண்ணப்பத்திற்கு 3 சாதாரண வேலை நாட்களுக்குள் பதிலுரைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள், விண்ணப்பத்தில் தரப்பட்ட தகவல்களில் ஏதேனும் குற்றம், குறைகளிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தால், தகவல் தெரிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் விண்ணப்பதாரர் அந்த குற்றம் குறைகளை நீக்கி சரிசெய்து தர வேண்டும். அதன்பிறகு, வரி செலுத்துபவர் குறைகளை நீக்கி கொடுத்த தேதியிலிருந்து 7 நாட்களில் மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும். ஒரு வேளை குறிப்பிட்ட காலவரம்பிற்குள் துறை அதிகாரிகளிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கப்பெறவில்லையெனில், பதிவு நடைமுறைகளை வலைவாயில் தானாகவே இயங்கும்.

கேள்வி 40. ஆன்லைனில் விண்ணப்பிக்கப்படும் மனுவின் மீது எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு, எத்தனை நாட்களுக்குள் விண்ணப்பதாரர் பதிலுரை வழங்க வேண்டும்?

பதில் : பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஒரு வரி அதிகாரி மனுவின் மீது சந்தேகத்தை எழுப்பினாலோ, ஏதாவது தவறுகளை கண்டறிந்தாலோ, அதை உடனே GSTன் பொது வலைவாயில் வழியாக 3 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற வரி அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். குறைபாடுகள் குறித்த தகவல் கிடைத்த தேதியிலிருந்து 7 நாட்களுக்குள், சந்தேகத்துக்கான பதிலுரை / தவறை திருத்துதல் / கேள்விக்கான பதிலை விண்ணப்பதாரர் தெரிவிக்க வேண்டும்.

கூடுதல் ஆவணங்கள் அல்லது தெளிவுரைகள் கிடைக்கப் பெற்றவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரி தெளிவரை கிடைத்த தேதியிலிருந்து சாதாரண 7 வேலை நாட்களுக்குள் பதிலுரைக்க வேண்டும்.

கேள்வி 41. பதிவை மறுப்பதற்கான நடைமுறைகள் என்ன?

பதில் : ஒரு வேளை பதிவு மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு அந்த நிராகரிப்புக்கான காரணத்தை வாய்மொழி உத்தரவின் மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர் அதிகாரியின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். CGSTன் சட்டப்பிரிவு 26ன் உட்பிரிவு (2)ன் படி, CGST சட்டம் SGST சட்டத்தின் கீழ் ஒரு அதிகாரியால் பதிவு மனு நிராகரிக்கப்பட்டால், SGSTசட்டம் / UTGSTசட்டம் / CGST சட்டத்தின் கீழ் அந்த பதிவு மனு மற்ற வரி அதிகாரிகளாலும் நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும்,

கேள்வி 42. மனு நீக்கம் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படுமா?

பதில் GSTன் பொது வலைவாயிலால், குறுஞ்செய்தியாகவோ அல்லது ஈமெயில் வழியாகவோ மனுவை அங்கீரித்தது அல்லது நிராகரித்த காரணத்தை விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். இந்த நிலையில், சட்டரீதியான தகவல்களையும் மனுதாரருக்கு வழங்கப்படும்.

கேள்வி 43 GSTN வலைவாயில் வழியாக பதிவுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியுமா?

பதில் : பதிவுகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், மனுதாரர் பதிவுச் சான்றிதழை GST பொது வலைவாயில் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கேள்வி 44. பதிவு ரத்து ஆணையை ரத்து செய்ய முடியுமா?

பதில் : ரத்து செய்ய முடியும். ஒரு வேளை அதற்குரிய அதிகாரி தன்னிச்சையாக முடிவெடுக்கும் முறையிலோ, வரி செலுத்துபவர் அல்லது வாரிசுதாரர் விண்ணப்பிக்காத நிலையில் முதலில் ரத்து செய்யப்பட்டிருந்தால், ரத்தாணையை ரத்து செய்ய முடியும். தன்னிச்சையாக முடிவெடுக்கும் முறையில் பதிவு ரத்து செய்யப்பட்டிருந்தால், ரத்தானை கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் அதற்குரிய அதிகாரியிடம் ரத்தானையை ரத்து செய்யக் கோரி மனு அளிக்க வேண்டும். ரத்தாணையை ரத்த செய்வதற்கான மனுவோ அல்லது தகவல்களோ | தெளிவரையோ கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், அதற்குரிய அதிகாரி பதிவு ரத்தாணையை ரத்து செய்யலாம் அல்லது பதிவு ரத்தாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை நிராகரிக்கலாம்.

கேள்வி 45. ஒரு நபரின் பதிவை ரத்து செய்யப்படும் போது, அந்த நபர் வரி விலக்குக்காக செய்திருந்த பதிவும் ரத்த செய்யப்படுமா?

பதில் : ஆமாம். CGST / SGST சட்டப்பிரிவு 29(5)ன் படி, பதிவு ரத்தான ஒவ்வொரு வரி செலுத்தும் நபரும், மின்னணு பண வர்த்தனை / கடன் பதிவேட்டின் மூலமாகவோ ஒரு தொகையை செலுத்த வேண்டும். உள்ளீட்டில் தேங்கிய கையிருப்பு அளவைப் பொறுத்து உள்ளீட்டு வரியின் வரவுக்கு இணையான தொகை, பாதி வேலை நிறைவுப் பெற்ற நிலையில் உள்ளீடுகள், நிறைவு பெற்ற நிலையிலுள்ள பொருட்களின் கையிருப்பு அல்லது பதிவு ரத்து செய்யப்பட்ட தேதிக்கு முன் தெரிவிக்கப்பட்ட பொருட்களின் முதலீடு மற்றும் இயந்திரங்கள் அல்லது அம்மாதிரி பொருட்களின் மீது செலுத்த வேண்டிய வெளியீடு வரி, இதில் எது அதிகமாக உள்ளதோ அந்தத் தொகைக்கு இணையானத் தொகையை செலுத்த வேண்டும்.

கேள்வி 46. திட்டமிடாமல் வரி செலுத்தும் நபருக்கும், இந்தியாவில் வசிக்காமல் / வர்த்தக இடமில்லாமல் வரி செலுத்தும் நபருக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

பதில் : திட்டமிடாமல் வரி செலுத்தும் நபர் மற்றும் இந்தியாவில் வசிக்காமல் / வர்த்தக இடமில்லாமல் வரி செலுத்தும் நபர்கள் பற்றி CGST / SGST சட்டங்கள் முறையே பிரிவு 2(20), பிரிவு 2(77)ல் தனித்தனியாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

திட்டமிடாமல் வரி செலுத்தும் நபர்

இந்தியாவில் வசிக்காமல் / வர்த்தக இடமில்லாமல் வரி செலுத்தும் நபர்

எந்த ஒரு நிலையான வர்த்தக இடமும் இல்லாமல் ஒரு மாநிலத்திற்குள் அல்லது யூனியன் பிரதேசத்திற்குள், சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்கலில் எப்பொழுதாவது ஈடுபடுபவர்கள்

இந்தியாவிவ எந்த ஒரு நிலையான வர்த்தக இடமோ அல்லது இருப்பிடமோ இல்லாமல், சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்கலில் எப்பொழுதாவது ஈடுபடுபவர்கள்

PAN எண் உடையவர்

PAN எண் கிடையாது. அப்படி PAN எண்ணிருந்தால், திட்டமிடாமல் வரி செலுத்தும் நபர் போல் பதிவு செய்து பெற வேண்டும்.

சாதாரண வரி செலுத்தும் நபருக்கான பதிவுப் படிவமான GST REG-01 என்ற அதேப் படிவமே இதற்கும் பொருந்தும்

இந்தியாவில் வசிக்காமல் / வர்த்தக இடமில்லாமல் வரி செலுத்தும் நபருக்கென்று GSTல் தனிப்பட்ட பதிவு படிவம் உள்ளது.

வணிக, வர்த்தக பரிமாற்றம் மற்றும் பரிவர்த்தனைகள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்.

எந்த விதமான வரையறுக்கப்பட்ட வர்த்தக சோதனையும் கிடையாது.

GSTR-1, GSTR-2 மற்றும் GSTR-3 போன்ற சாதாரணமான வருமான வரி தாக்கல்களை செய்ய வேண்டும்.

GSTR-5 என்ற தனிப்பட்ட எளிதாக்கப்பட்ட வருமான வரி தாக்கலை செய்ய வேண்டும்.

அனைத்து உள்ளிடுகளுக்கான உள்ளிட்டு வரிச் சலுகையை (TC) பெற உரிமைக் கோர முடியும்.

இறக்குமதி செய்யப்பட்டவைகளுக்கு மட்டுமே உள்ளிட்டு வரிச் சலுகை (ITC) பெற முடியும்

ஆதாரம் : http://www.cbec.gov.in

Filed under:
3.02777777778
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top