பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மதிப்பீடு மற்றும் தணிக்கை

மதிப்பீடு மற்றும் தணிக்கை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1: சட்டத்தின் கீழ் செலுத்தப்பட வேண்டிய வரிகளை மதிப்பீடு செய்யும் பொறுப்பு யாருக்கு உள்ளது?

பதில்: சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைவருமே தான் ஒரு வரி காலகட்டத்தில் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் தாமாகவே மதிப்பீடு செய்து கொள்ளலாம், அப்படி மதிப்பீடு செய்த பிறகு சட்டப் பிரிவு 39-ன் கீழ் தேவைப்படும் வருமானம் மற்றும் செலவு விவரங்களை தாக்கல் செய்யலாம்.

கேள்வி 2: வரி செலுத்த வேண்டிய ஒரு நபர் தாற்காலிக அடிப்படையில் எப்போது வரி செலுத்த முடியும்?

பதில்: வரி செலுத்த வேண்டிய ஒருவர் சுய-மதிப்பீடு அடிப்படையில் வரி செலுத்த வேண்டும், தாற்காலிக அடிப்படையில் வரி செலுத்துவதற்கான கோரிக்கை வரி செலுத்துபவரிடமிருந்து வரவேண்டும், பின்னர் அது உரிய அலுவலரால் அனுமதிக்கப்படும். வேறு விதமாக சொல்வதென்றால், எந்த அதிகாரியும் தற்காலிக அடிப்படையில் வரி செலுத்த வேண்டும் என்று தானாகவே உத்திரவிட முடியாது. இது சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 60-வது பிரிவின்படி நிர்வகிக்கப்படுகிறது. உரிய அதிகாரி தானே பிறப்பித்த உத்தரவு மூலம் அனுமதித்த பிறகே தற்காலிக அடிப்படையில் வரி செலுத்தப்படலாம். இந்த நோக்கத்திற்காக, வரிசெலுத்த வேண்டிய நபர் உரிய அதிகாரிக்கு, தான் தற்காலிகமாக வரி செலுத்த வேண்டியதற்கான காரணத்தை விளக்கி எழுத்து மூலம் ஒரு கோரிக்கை அனுப்ப வேண்டும். ஒரு நபர் பின்வரும் விஷயங்களைத் தீர்மானிக்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே இப்படிப்பட்ட கோரிக்கையை விடுக்கலாம்:

(அ) தான் வழங்க வேண்டிய பொருள்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு அல்லது

(ஆ) தான் வழங்க வேண்டிய பொருள்கள் மற்றும் சேவைகளுக்குத் தான் செலுத்த வேண்டிய வரி விகிதத்தின் மதிப்பைத் தீர்மானிப்பது. இந்த சந்தர்ப்பங்களில் வரி செலுத்த வேண்டிய நபர் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில், ஒரு பத்திரத்தை உரிய அதிகாரி, பொருத்தமாக கருதும் வகையில் உறுதி பத்திரம் அல்லது ஈட்டு பத்திரத்துடன் தயார்செய்ய வேண்டும்.

கேள்வி 3: இறுதி மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டிய சமீபத்திய காலம் என்ன?

பதில்: தற்காலிக மதிப்பீட்டிற்கான உத்தரவின் தேதியிருந்து ஆறு மாத காலத்திற்குள் இறுதி மதிப்பீடுக்கான உத்தரவை உரிய அதிகாரி பிறப்பிக்க வேண்டும். ஆனால், போதுமான காரணங்கள் காட்டப்பட்டு காரணங்கள் எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால், மேலே குறிப்பிட்ட ஆறு மாத காலகட்டம் பின்வருபவர்களால் நீட்டிக்கப்படலாம்:

(அ) இணை / கூடுதல் ஆணையர் மூலம் மேலும் ஆறு மாத காலத்திற்கு மிகாமல், மேலும்

(ஆ) இந்த நீட்டிக்கப்பட்ட காலம் ஆணையர் பொருத்தமானது என கருதும் மேலும் நான்கு ஆண்டு காலத்திற்கு மிகாமல், எனவே தற்காலிக மதிப்பீடு தாற்காலிகமாகவே அதிகபட்சம் ஐந்து ஆண்டு காலத்திற்கு நீடிக்கலாம்.

கேள்வி 4: இறுதி மதிப்பீட்டின்படி வரி பொறுப்பு தற்காலிக மதிப்பீட்டைவிட அதிகமாக இருந்தால், வரிசெலுத்துவோருக்கு அதற்கான வட்டி செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளதா?

பதில்: ஆம். வரி செலுத்த வேண்டிய தேதியிலிருந்து அவர் வரி செலுத்திய தேதி வரையிலும் அதற்கான வட்டியை செலுத்தும் பொறுப்பு உள்ளது.

கேள்வி 5: சி.ஜி.எஸ்.டி சட்டம் 61வது பிரிவின் கீழ் அதிகாரி ஒருவர் மீளாய்வு செய்யும் சமயத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள வருமானம் மற்றும் செலவு விவரங்களில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளுக்கான உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், வேறு என்ன மாற்று வழி உள்ளது?

பதில்: வரி செலுத்த வேண்டிய நபர், தகவல் தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் (சம்பந்தப்பட்ட அதிகாரியால் நீட்டிக்கப்படலாம்) திருப்திகரமாக விளக்கம் வழங்கவில்லை என்றால், அல்லது முரண்பாடுகளை ஏற்ற பின் முரண்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதத்தில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையில் அவற்றை சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், உரிய அதிகாரி பின்வரும் விதிகளில் ஏதாவது ஒரு மாற்று வழியைத் தேர்ந்தெடுப்பார்:

(அ) சட்டப் பிரிவு 65இன் கீழ் கணக்குத் தணிக்கை நடத்துதல்

(ஆ)சட்டப் பிரிவு 66இன் கீழ் இந்த நோக்கத்திற்காகவே ஆணையரால் நியமிக்கப்பட்ட ஒரு பட்டயக் கணக்காளர் செலவு கணக்காளர் அல்லது ஒரு விசேஷ கணக்குத் தணிக்கை நடத்த வழிகாட்டுதல்; அல்லது,

(இ) சட்டப் பிரிவு 67இன் கீழ் ஆய்வு மேற்கொள்தல், தேடல், பறிமுதல் ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றுதல்; அல்லது

(ஈ) சட்டப் பிரிவு 73 அல்லது 74-ன் கீழ் வரி மற்றும் பிற நிலுவைகள் குறித்து தீர்மானிப்பதற்கான அடுத்த நடவடிக்கையைத் தொடங்குதல்.

கேள்வி 6: வரி செலுத்த வேண்டிய ஒருவர் சட்டப்படி (சட்டப்பிரிவு 39 (மாதாந்தரகாலாண்டு) அல்லது 45 (இறுதி வருமான வரி கணக்குத் தாக்கல்) வருமானம் மற்றும் செலவு விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறினால், வரி அதிகாரி சட்டபூர்வமான மாற்று வழி என்ன?

பதில்: வருமானம் மற்றும் செலவு விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறிய வரி செலுத்த வேண்டிய நபருக்கு முதலில் உரிய அதிகாரி சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 45-வது பிரிவின் கீழ் பதினைந்து நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யச் சொல்லி ஒரு அறிக்கையை அனுப்புவார். கொடுக்கப்பட்டுள்ள காலகட்டத்திற்குள் வரிசெலுத்த வேண்டிய நபர் வருமான வரிகணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால், உரிய அதிகாரி தன்னிடம் இருக்கும் இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்யத் தவறியவரிடமிருந்து வரவேண்டிய வரித் தொகையை பெறுவதற்காக தானாகவே முடிவுசெய்து நடவடிக்கைகளை எடுப்பார். (சட்டப்பிரிவு 62).

கேள்வி 7: சட்டப் பிரிவு 60இன் கீழ் துல்லியமாக கணிக்கப்பட்ட மதிப்பீட்டு உத்தரவு எந்த சந்தர்ப்பங்களில் திரும்பப் பெறப்படும்?

பதில்: உரிய அதிகாரி சி. ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 62-வது பிரிவின் படி உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட துல்லியமாக கணிக்கப்பட்ட மதிப்பீட்டு உத்தரவு பெறப்பட்ட முப்பது நாட்களுக்குள் பெறுனர், தவறவிட்ட காலகட்டத்திற்கான ஒரு செல்லுபடியாகக்கூடிய வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்து விட்டால், உத்தரவு தானாகவே வாபஸ் ஆகிவிடும்.

கேள்வி 8: மதிப்பீட்டு உத்தரவை பிறப்பிப்பதற்கான கால வரையறை சட்டப்பிரிவு 62-ன் கீழ் (பெஸ்ட் ஜட்ஜ்மன்ட்) மற்றும் 63-வது பிரிவின் கீழ் தாக்கல்செய்யாத) என்ன?

பதில்: சட்டப் பிரிவு 62 அல்லது 63-ன்படி மதிப்பீட்டு உத்தரவை பிறப்பிப்பதற்கான கால வரையறை, வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்வதற்கான கெடு தேதியிலிருந்து ஐந்து ஆண்டு காலம்.

கேள்வி 9: வரி செலுத்த வேண்டிய ஒருவர், பதிவு பெறத் தவறினால் அவருக்கு சட்ட ரீதியில் என்ன மாற்று வழி உள்ளது?

பதில்: இப்படிப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட நபர் செலுத்த வேண்டிய வரியை உரிய அதிகாரி சி. ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின்படி தனது துல்லியமான கணிப்பின் அடிப்படையில் வரிவிதிப்பு காலத்திற்கு மதிப்பீடு செய்து உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால், இந்த உத்தரவு, வரி செலுத்தப்படாத நிதி ஆண்டுக்கான வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான கெடு தேதியிலிருந்து ஐந்தாண்டுகளுக்குள் பிறப்பிக்கப்பட வேண்டும்.

கேள்வி 10: எப்படிப்பட்ட தழ்நிலைகளில் ஒரு வரி அதிகாரி சுருக்கமான மதிப்பீட்டை தொடங்கலாம்?

பதில்: சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 64-வது பிரிவின் கீழ், வருமானத்தின் சார்ந்த நலனைப் பாதுகாப்பதற்காக பின்வரும் நிலைகளில் சுருக்கமான மதிப்பீடு தொடங்கப்பட வேண்டும்:

(அ) சட்டப்படி வரி விதிப்புக்கு உள்ளாகும் ஒரு நபருக்கு சட்டப்படி வரி செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதற்கான ஆதாரம் உரிய அதிகாரியிடம் இருக்கும்போது

(ஆ) மதிப்பீடு உத்தரவைப் பிறப்பிப்பதில் ஏற்படும் தாமதத்தால் வருவாய் சார்ந்த நலன் மோசமாக பாதிக்கப்படும்போது, கூடுதல் ஆணையர் இணை ஆணையரிடமிருந்து அனுமதி கோரப்பட்ட பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

கேள்வி 11: சுருக்கமான மதிப்பீட்டு உத்தரவுக்கு எதிராக வரிசெலுத்துபவருக்கு மேல்முறையீட்டு தீர்வு தவிர வேறு மாற்று வழிகள் என்ன உள்ளது?

பதில்: சுருக்கமான மதிப்பீட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வரி செலுத்த வேண்டிய ஒரு நபர், அந்த உத்தரவு பெறப்பட்ட முப்பது நாட்களுக்குள் தனது பகுதியின் அதிகார எல்லைக்குள் உள்ள கூடுதல்இணை ஆணையரிடம் அதை வாபஸ் பெறுமாறு கோரலாம். மேற்குறிப்பிட்ட அதிகாரி உத்தரவு பிழையாக இருப்பதாக உணர்ந்தால், அதை அவர் வாபஸ் பெறச்செய்து, உரிய அதிகாரியிடம் சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 73 அல்லது 74 வது பிரிவுகளின்படி வரி பொறுப்பைத் தீர்மானிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தலாம். சுருக்கமான மதிப்பீட்டு உத்தரவு தவறு என்பதைக் கண்டறிந்தால், கூடுதல்/இணை ஆணையர் இதே மாதிரியான நடவடிக்கையைப் பின்பற்றி தானாகவே சட்டப்படி நடவடிக்கையை மேற்கொள்ளலாம். (சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 64. வது பிரிவு).

கேள்வி 12: வரி செலுத்த வேண்டிய ஒரு நபருக்கு எதிராக சுருக்கமான மதிப்பீட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அவசியமா?

பதில்: இல்லை. ஒரு சில சமயங்களில், பொருள்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வந்து கொண்டிருந்தால் அல்லது கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ள நிலையில் வரி செலுத்த வேண்டிய ஒரு நபருக்கான வரியை இப்படிப்பட்ட பொருள்களின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட முடியாது. இந்தப் பொருள்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஒரு நபர்தான் வரிசெலுத்தப்பட வேண்டிய நபராக கருதப்பட்டு செலுத்தப்பட வேண்டிய வரி மதிப்பிடப்பட வேண்டும் (சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 64-வது பிரிவு).

கேள்வி 13 : வரிலுத்துவோருக்கான கணக்குத் தணிக்கையை யார் மேற்கொள்ள முடியும்?

பதில்: கீழே விளக்கப்பட்டுள்ளது போல ஜி. எஸ்டி சட்டத்தில்(ங்களில்) நான்கு வகை கணக்குத் தணிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது:

(அ) பட்டயக் கணக்காளர் அல்லது செலவு கணக்காளரால் மேற்கொள்ளப்படும் கணக்குத் தணிக்கை: பதிவு பெற்றுள்ள பரிந்துரைக்கப்பட்ட வரையறைக்கு மேல் வருமானம் ஈட்டும் ஒவ்வொரு நபரும், தனது கணக்குகளை ஒரு பட்டயக் கணக்காளர் அல்லது செலவு கணக்காளரைக் கொண்டு கணக்குத் தணிக்கை செய்துகொள்ள வேண்டும், (சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 355)-வது பிரிவு)

(ஆ) துறையினார் கணக்குத் தணிக்கை: சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. அல்லது யு.டி. ஜி. எஸ்.டி ஆணையர் அல்லது வேறு அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான அல்லது குறிப்பிட்ட உத்தரவின் பேரில் எந்த ஒரு பதிவு பெற்ற நபருக்கும் கணக்குத் தணிக்கை செய்யலாம். இதற்கான காலகட்டம் மற்றும் கணக்குத் தணிக்கை முறை உரிய நேரத்தில் பரிந்துரைக்கப்படும். (சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 65-வது பிரிவின்படி)

(இ) விசேஷ கணக்குத் தணிக்கை: மீளாய்வு, விசாரணை ஆய்வு அல்லது வேறு எந்த நடவடிக்கையின் எந்த ஒரு கட்டத்திலும் துறையின் கருத்துப்படி மதிப்பு சரியானபடி அறிவிக்கப்படவில்லை அல்லது பெறப்பட்ட கடன் சாதாரண வரையறைகளுக்குள் இல்லை என்றால், துறையால் நியமிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் அல்லது செலவு கணக்காளரை விசேஷ கணக்குத் தணிக்கை செய்யுமாறு துறை உத்தரவிடலாம். (சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 66. வது பிரிவின்படி)

கேள்வி 14: கணக்குத் தணிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன் ஏதாவது முன்கூட்டிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டுமா?

பதில்: ஆமாம். கணக்குத் தணிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு குறைந்தது 15 வேலை நாட்களுக்கு முன்பாகவாவது வரி செலுத்துபவருக்கு முன்கூட்டிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

கேள்வி 15: கணக்குத் தணிக்கை பூர்த்தி செய்யப்பட வேண்டிய கால அவகாசம் என்ன?

பதில்: கணக்குத் தணிக்கைத் தொடங்கப்பட்ட 3 மாத காலத்திற்குள் கணக்குத் தணிக்கை பூர்த்திசெய்யப்பட வேண்டும். இந்த கால அவகாசம், அதிகபட்சம் 6 மாதங்களுக்கு ஆணையரால் நீட்டிக்கப்பட முடியும்.

கேள்வி 16: தணிக்கை துவக்கம் என்றால் என்ன?

பதில் : தணிக்கை துவக்கம் என்ற வார்த்தை மிகவும் முக்கியம், காரணம், கணக்குத் தணிக்கைத் தொடங்கப்பட்ட இந்த தேதியிலிருந்து வழங்கப்பட்டுள்ள கால வரையறைக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். தணிக்கை துவக்கம் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கும்:

(அ) எந்தத் தேதியில் ஆவணங்கள்/கணக்குகள் கணக்குத் தணிக்கை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்படுகிறதோ, அல்லது

(ஆ) வரி செலுத்துபவர் வியாபாரம் செய்யும் இடம்தான் கணக்குத் தணிக்கை நடைபெறும் நிறுவனம்.

கேள்வி 17: கணக்கு தணிக்கை அறிவிப்பைப் பெறும், வரி செலுத்தும் நபரின் கடமைகள் என்னென்ன?

பதில்: வரி செலுத்த வேண்டியநபர் பின்வருவனவற்றை மேற்கொள்ள வேண்டும்:

(அ) கையில் இருக்கும் அல்லது அதிகாரிகள் கோரிய கணக்குகள்/ஆவணங்களை சரிபார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்,

(ஆ) கணக்குத் தணிக்கை மேற்கொள்வதற்காக அதிகாரிகளுக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்க வேண்டும், மேலும்

(இ) கணக்குத் தணிக்கை சரியான நேரத்தில் பூர்த்தியடைய வேண்டிய உதவிகளை செய்தல்.

கேள்வி 18: கணக்குத் தணிக்கை முடிந்த பிறகு உரிய அதிகாரி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?

பதில்: கணக்குத் தணிக்கை முடிந்த 30 நாட்களுக்குள் வரிசெலுத்த வேண்டிய நபருக்கு தனது கண்டுபிடிப்புகள், அதற்கான காரணங்கள் மற்றும் அந்த கண்டுபிடிப்புகள் குறித்த வரிசெலுத்த வேண்டிய நபரின் உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

கேள்வி 19: எந்தச் சூழலில் விசேஷ கணக்குத் தணிக்கை நிறுவப்படலாம்?

பதில்: மீளாய்வு, விசாரணை முதலிய வரையறைக்குட்பட்ட தழல்களில் ஒரு விசேஷ கணக்குத் தணிக்கை ஏற்பாடு செய்யப்படலாம். இதில் ஒரு விஷயம் சிக்கலானது அல்லது வருவாய் இழப்பு மிக அதிகமாக இருந்தால், இது கவனத்திற்கு வரும். இந்த அதிகாரம் சி.ஜி.எஸ்.டி. எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 66. வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி 20: விசேஷ கணக்குத் தணிக்கைக்கான அறிவிப்புக்கான தகவலை யார் வழங்க முடியும்?

பதில்: ஆய்வாளரின் முன்கூட்டிய அனுமதி பெற்ற பிறகே உதவி | துணை ஆய்வாளர் விசேஷ கணக்குத் தணிக்கைக்கான அறிவிப்பை வழங்க வேண்டும்.

கேள்வி 21: விசேஷ கணக்குத் தணிக்கையை யார் மேற்கொள்வார்?

பதில்: ஆய்வாளரால் நியமிக்கப்பட்ட ஒரு பட்டயக்கணக்காளர் அல்லது ஒரு செலவு கணக்காளர் இந்த கணக்குத் தணிக்கையை மேற்கொள்ளலாம்.

கேள்வி 22: கணக்குத் தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கால வரையறை என்ன?

பதில்: கணக்குத் தணிக்கையாளர் 90 நாட்களுக்குள் அல்லது மேலும் நீட்டிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கேள்வி 23: விசேஷ கணக்குத் தணிக்கைக்கான செலவை யார் ஏற்பார்கள்?

பதில்: தணிக்கையாளருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் உள்பட ஆய்வு மற்றும் கணக்குத் தணிக்கைக்கான செலவை தீர்மானிப்பதும், ஏற்றுக்கொள்வதும் ஆய்வாளர்தான்.

கேள்வி 24: விசேஷ கணக்குத் தணிக்கைக்குப் பின் வரிவிதிப்பு அதிகாரிகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?

பதில்: சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 73 அல்லது 74-வது பிரிவின்படி விசேஷ தணிக்கையில் கண்டறிந்த ஆராய்ந்த விஷயங்களின் அடிப்படையில் நடவடிக்கைத் தொடங்கப்படலாம்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

Filed under:
2.95652173913
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top