பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மின்னனு வர்த்தகம்

மின்னனு வர்த்தகம் குறித்த கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1. மின்னணு வர்த்தகம் என்றால் என்ன?

பதில்: எண்ணியமாக்கப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் மின்னணு நெட்வொர்க் மூலம் சப்ளை செய்வதே மின்னணு வர்த்தகம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

கேள்வி 2. மின்னணு வர்த்தக ஆபரேட்டர் என்பவர் யார்?

பதில்: மின்னணு வர்த்தகத்தின் பின்னணியில் எண்ணியமான மின்னணு வசதியைச் சொந்தமாக வைத்துள்ளவர், செயல்படுத்துபவர், நிர்வகிப்பவர் மின்னணு  வர்த்தக ஆபரேட்டர் எனப்படுவார்.

கேள்வி 3. மின்னணு வர்த்தக ஆபரேட்டர் பதிவு செய்துகொள்ள வேண்டியது  அவசியமா?

பதில் : ஆமாம். ஆரம்ப விலக்கின் ஆதாயம் மின்னணு வர்த்தக ஆபரேட்டருக்கு இருக்காது; மேலும் அவர்கள் சப்ளை செய்யும் பொருட்களின் மதிப்பு எப்படி இருந்தாலும் அவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டியதாக இருக்கும்.

கேள்வி 4. சரக்குகள் / சேவைகளை மின்னணு வர்த்தகம் மூலம் சப்ளை செய்யும் ஆபரேட்டருக்கு ஆரம்பகால விலக்கு கிடைக்குமா?

பதில்: கிடைக்காது. சப்ளை செய்யும் பொருட்களின் மதிப்பு என்னவாக இருந்தாலும் ஆரம்பகால விலக்கு இந்த சப்ளையர்களுக்குக் கிடைக்காது. மின்னணு வர்த்தகம் மூலம் ஆபரேட்டர் சப்ளை செய்திருந்தால் மட்டுமே இத்தேவை பூர்த்தியாகும்; இதற்கான வரையரையையும் அவர் பெற்றுக் கொள்வார்.

கேள்வி 5. வழக்கமான சப்ளையருக்குப் பதிலாகத் தான் சப்ளை செய்யும் பொருட்கள்தரும் சேவைக்கான வரியை மின்னணு வர்த்தக ஆபரேட்டர் செலுத்துவாரா?

பதில்: ஆம்; ஆனால் சில குறிப்பிடப்பட்ட சேவைகளுக்கு மட்டும்தான் இப்படி. அவ்வாறான சமயங்களில் சேவைகள் மின்னணு வர்த்தகம் மூலம் பெறப்பட்டால் அவற்றைத் தரும் ஆபரேட்டரால் வரி கட்டப்படும்; தரப்படும் சேவைக்கும் வரிகட்டும் இத்தகைய மின்னணு வர்த்தக ஆபரேட்டருகளுக்கு சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளும் பொருந்தும்.

கேள்வி 6. குறிப்பிடப்பட்ட சில சேவைகளை வழங்கி, வரி கட்ட வேண்டிய நிலையிலிருக்கும் மின்னணு வர்த்தக ஆபரேட்டர்களுக்கு ஆரம்பகால விலக்கு இருக்குமா?

பதில்: இருக்காது. குறிப்பிடப்பட்ட சில சேவைகளை வழங்கி, வரி கட்ட வேண்டிய நிலையிலிருக்கும் மின்னணு வர்த்தக ஆபரேட்டர்களுக்கு ஆரம்ப கால வரி விலக்கு தரப்பட மாட்டாது.

கேள்வி 7. வரி வசூலிக்கும் சோர்ஸ் (TCS) என்றால் என்ன?

பதில்: மின்னணு வர்த்தக முறையில் சப்ளை செய்யப்படும் பொருட்களின் நிகர மதிப்பின் ஒரு சதவீதத் தொகையை மின்னணு வர்த்தக ஆபரேட்டர் தானே வசூல் செய்து கொள்ளலாம்; இவ்வித சப்ளைகள் மூலம் வசூலிக்கப்படும் இத்தொகையே வரி வசூலிக்கும் சோர்ஸ் (TCS) எனப்படுகிறது.

கேள்வி 8. மின்னணு வர்த்தகத்தில் வாடிக்கையாளர்கள் தாம் வாங்கும் பொருட்களை நிராகரிப்பது மிகப் பொதுவானது. இவ்வாறாகத் திரும்பத் தரப்படும் பொருட்களை நிறுவனங்கள் எவ்வாறு அட்ஜஸ்ட் செய்கின்றன?

பதில்: ஒரு மின்னணு வர்த்த நிறுவனம் தனது சப்ளைகளின் நிகர மதிப்பின் மீது கணக்கிட்டுத்தான் வரியை வசூலிக்கிறது. வேறு விதமாகக் கூறினால் நிராகரிக்கப்படும் சப்ளைகள் வரி விதிக்கப்பட வேண்டிய சப்ளைகளின் சராசரி மதிப்பில் அட்ஜஸ்ட் செய்யப்படுகின்றன.

கேள்வி 9. வரி விதிக்கப்படும் சப்ளைகளின் நிகர மதிப்பு என்றால் என்ன?

பதில்: சப்ளைகளின் நிகர மதிப்பு என்பது வரி விதிக்கப்பட வேண்டிய பொருட்கள் அல்லது  மற்றும் சேவைகளின் / சப்ளையின் சராசரி மதிப்பாகும்; மின்னணு வர்த்தக ஆபரேட்டரால் வரி முழுவதும் செலுத்தப்பட வேண்டிய தன்மையுடைய சேவைகள் இதில் அடங்காது. குறிப்பிட்ட மாதத்தில் சப்ளையர்களிடம் திருப்பி அனுப்பப்பட்ட (வரி உள்ள) சப்ளைகளின் சராசரி மதிப்பைக் கழித்த பின் வரும் இத்தொகையானது அனைத்து பதிவு பெற்ற நபர்களாலும் மின்னணு வர்த்தக ஆபரேட்டர் மூலம் அம்மாதத்தில் செலுத்தப் பட்டிருக்கலாம்.

கேள்வி 10. சப்ளையர்களின் சார்பில் ஒவ்வொரு மின்னணு வர்த்தக ஆபரேட்டரும் வரியை வசூலித்தே ஆக வேண்டுமா?

பதில்: ஆம்; ஒவ்வொரு மின்னணு வர்த்தக ஆபரேட்டரும் வரியை வசூலித்தே ஆக வேண்டும்.

கேள்வி 11. மின்னணு வர்த்தக ஆபரேட்டர் அவ்வாறு வரியை வசூலிக்க உகந்த நேரம் (காலம்) எது?

பதில்: சப்ளை டெலிவரி செய்யப்படும் மாதத்திலேயே அதற்கான வரியை மின்னணு வர்த்தக ஆபரேட்டர் வசூலிக்கலாம்.

கேள்வி 12. வசூலாகும் TCS தொகையை அரசாங்கக் கணக்கில் செலுத்த மின்னணு வர்த்தக ஆபரேட்டருக்கு இருக்கும் கால அளவு என்ன?

பதில்: மின்னணு வர்த்தக ஆபரேட்டரால் வசூலிக்கப்படும் தொகையானது தொகை வசூலிக்கப்பட்ட மாதம் முடிந்து 10 நாட்களுக்குள் பொருத்தமான அரசாங்கக் கணக்கில் செலுத்தப்பட்டாக வேண்டும்.

கேள்வி 13: TCS தன்னால்தான் உருவாகிறது என்று சப்ளையர்கள் எப்படி நினைத்துக்கொள்ள முடியும்?

பதில்: பொருத்தமான அரசுக் கணக்கில் மின்னணு வர்த்தக ஆபரேட்டரால் செலுத்தப்படும் TCS தொகை மின்னணு வர்த்தக ஆபரேட்டர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பதிவு பெற்ற சப்ளையரின் (வரி செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கின் சொந்தக்காரர்) பணக் கொள்கலனில் (cash ledge) காட்டப்பட வேண்டும். சப்ளைகள் அடிப்படையில் சப்ளையர் வரியைச் செலுத்துகையில் இது பயன்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி 14. மின்னணு வர்த்தக ஆபரேட்டர் ஏதாவது அறிக்கையைச் சமர்ப்பித்தாக வேண்டுமா? எந்தெந்த விஷயங்கள் அவ்வறிக்கையில் இடம் பெற்றாக வேண்டும்?

பதில்: ஆம்; மின்னணு மூலம் தரப்பட்ட சரக்குகள் / சேவைகள், சரக்கு சேவைகளின் வெளிப்புற சப்ளை, நிராகரிக்கப்பட்ட சரக்குச்சேவைகள் மற்றும் ஒவ்வொரு சப்ளை மாதத்திற்குப் பின்வரும் மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் TCS-ஆக வசூலிக்கப்பட்ட தொகை போன்ற விவரங்களை ஒவ்வொரு மின்னணு வர்த்தக ஆபரேட்டரும் ஒரு மின்னணு அறிக்கையின் மூலம் தெரிவித்தாக வேண்டும். ஒவ்வொரு ஆண்டிலும் நிதியாண்டு முடிந்த பின் வரும் டிசம்பர் 31. ஆம் தேதிக்குள் ஆண்டின் நிலவரத்தைக் கூறும் ஆண்டறிக்கையைச் சமர்ப்பிப்பதும் ஆபரேட்டரின் கடமையாகும்.

கேள்வி 15. மின்னணு வர்த்தகத் துறையில் மேட்சிங் என்பதன் கோட்பாடு என்ன, அது எவ்வாறு வேலை செய்யும்?

பதில்: சப்ளை விவரங்கள் மற்றும் ஒவ்வொரு ஆபரேட்டரும் தன் அறிக்கையில் அம்மாதத்தில் வசூலானதாகக் கூறும் தொகை ஆகியவை சப்ளையர்கள் அம்மாதத்திற்கோ அல்லது முந்தைய மாதத்திற்கோ சமர்ப்பிக்கும் வெளிப்புற சப்ளை தொடர்பான விவரங்களோடு மேட்சிங் செய்யப்படும். வரி  வசூலிக்கப்பட்ட வெளிப்புற சப்ளை பற்றி ஆபரேட்டர் தன் அறிக்கையில் தந்துள்ள தகவல்கள் அது தொடர்பாக சப்ளையரிடம் உள்ள விவரங்களுடன் மேட்சிங் ஆகவில்லையெனில் இப்பிரச்சனை பற்றி இரு தரப்பினருக்கும் தெரிவித்துவிடவேண்டும்.

கேள்வி 16. விவரங்கள் மேட்சிங் ஆகாமல் இருந்தால் என்ன நிகழும்?

பதில்:  செலுத்தப்பட்ட தொகைக்கு எதிரான சப்ளையின் மதிப்பு - அது தொடர்பான குறை சுட்டிக்காட்டப்பட்டு சப்ளையரால் அது அவரது மாதாந்திர ரிடர்னில் திருத்திக்கொள்ளப்படாமல் இருந்தால் - குறை பற்றி சப்ளையருக்குத் தெரிவிக்கபப்ட்ட மாதத்தின் அடுத்த மாதம் அவர் செலுத்த வேண்டிய தொகையுடன் இது கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்படும். அவரது நிலுவைத் தொகையில் இது சேர்க்கப்பட்ட பின் அந்த சப்ளையர் செலுத்தும் தேதியில் குறிப்பிடப்படும் குறிப்பிட்ட சப்ளைக்கான தொகையை வரியுடனும் வட்டியுடனும்  செலுத்துவார்.

கேள்வி 17. வருமான வரி அதிகாரிகளுக்குக் கூடுதலான அதிகாரங்கள் ஏதேனும் உள்ளனவா?

பதில்: துணை ஆய்வாளர் பதவிக்குக் குறையாத பதவியில் இருக்கும் எந்த அதிகாரியும் குறிப்பிட்ட தகவல்களைக் கோரி மின்னணு ஆபரேட்டருக்கு நோட்டிஸ் பெறப்படும் தேதியிலிருந்து 15 வேலை நாட்களுக்குள் தகுந்த பதில் அனுப்பும்படி கோரும் நோட்டீஸை அனுப்பலாம்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

Filed under:
3.07142857143
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top