பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முன்னீட்டுத் தீர்ப்பு

முன்னீட்டுத் தீர்ப்பு (Advance Ruling) தொடர்பான கேள்வி பதில்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1: முன்னிட்டுத் தீர்ப்பு என்றால் என்ன?

பதில்: சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 95இன்படியும், யுடிஜிஎஸ்டி சட்டப்பரிவு 12இன்படி முன்னிட்டு தீர்ப்பு என்றால், மேல் முறையீட்டு ஆணையத்திற்கு இருக்கும் அதிகாரத்தைப் பற்றியது. இதன்படி மனுதாரரின் முறையீடு, சட்டப் பிரிவு 972இன் கீழ் வரும் கேள்விகள் பற்றியது என்றால், அல்லது சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 100(1)ன் கீழ்வரும் கேள்விகள் என்றால், அதிலும் குறிப்பாக மனுதாரர் தொடர்புடைய சரக்கு வழங்கல் மற்றும்/அல்லது சேவை வழங்கல் தொடர்பான விஷயங்கள் இருந்தால், அவற்றிற்கான முடிவை, தீர்ப்பை முன்னிடாக வழங்க மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் உள்ளது.

கேள்வி 2: எந்தெந்த கேள்விக்குப் பதிலாக முன்னிட்டுத் தீர்ப்பைக் கோர முடியும்?

பதில்:

(1) சரக்கு அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வகைப்பிரிவுகள் குறித்த முடிவு செய்வது.

(2) ஜிஎஸ்டி சட்டங்களின் ஷரத்துகளின் அடிப்படையில், வழங்கப்பட்ட அறிவிக்கைகளின் பொருந்து தன்மை பற்றி முடிவு செய்வது.

(3) வழங்கப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் நேரம், மற்றும் மதிப்பீடு குறித்து முடிவு செய்வது

(4) செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் உள்ளிட்டு வரிக் கடனை அனுமதிப்பது குறித்த முடிவு.

(5) இந்தச் சட்டத்தின் கீழ், சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக செலுத்த வேண்டிய வரிப் பொறுப்பேற்றல் குறித்து முடிவு செய்வது

(6) மனுதாரர். இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டுமா என்பது பற்றி முடிவு செய்வது.

(7) சரக்குகள் மற்றும் சேவைகள் தொடர்பாக மனுதாரர் செய்த குறிப்பிட்ட செயலைப் பற்றி முடிவு செய்வது. சரக்குகள் வழங்கல் மற்றும் சேவைகள் அளித்தல் ஆகிய பதங்களுக்கு சட்டபூர்வமான அர்த்தங்களின் கீழ் அவை வருகின்றனவா என்பதை முடிவு செய்தல் ஆகியன.

கேள்வி 3:முன்னிட்டுத் தீர்ப்பு என்ற முறைமை இருப்பதன் நோக்கம் என்ன?

பதில்: இதுபோன்ற ஆணையம் உருவாக்க பொதுவான காரணங்கள்

(1) மனுதாரர் எடுத்துக்கொண்டிருக்கும் செயல்பாடு அல்லது கோரிக்கை, தொடர்புடைய வரிக் கடன்பாடு பற்றி உறுதி செய்வதற்கு.

(2) நேரடி வெளிநாட்டு முதலீட்டைக் கவர்வதற்கு

(3) வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு.

(4) தீர்ப்பு வழங்கு முறையை வெளிப்படையாக்கவும் விரைவாகவும் செலவு குறைவான முறையிலும் செய்வதற்கு.

கேள்வி 4 ஜிஎஸ்டியின் கீழ் முன்னிட்டுத் தீர்ப்பு வழங்கும் ஆணையத்தின் (AAR) அமைப்பு முறை என்ன?

பதில்: முன்னிட்டுத் தீர்ப்பாய ஆணையம் (AAR) சிஜிஎஸ்டியின் ஒரு உறுப்பினர் எஸ்ஜிஎஸ்டி/யுடிஜிஎஸ்டி யைச் சேர்ந்த ஒருவர், ஆகிய இருர், இவர்களை முறையே மாநில மற்றும் மத்திய அரசுகள் நியமிக்கும்.

கேள்வி 5: முன்னிட்டுத் தீர்ப்புக்காக முறையீடு செய்பவர்அதற்காகப் பதிவு செய்திருக்க வேண்டுமா?

பதில்: இல்லை. தேவையில்லை. ஜிஎஸ்டி சட்டங்களின் கீழ் பதிவு செய்திருக்கும் யார் வேண்டுமானாலும் முறையீடு செய்யலாம். இது தவிர, இவ்வாறு பதிவு செய்ய விரும்பும் நபரும் முறையீடு செய்யலாம் சட்டப் பிரிவு (95(b)

கேள்வி 6: முன்னிட்டுத் தீர்ப்பைப் பெற எப்போது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

பதில்: முன்னிட்டு தீர்ப்பாணை பெறுவதற்கு, குறிப்பிட்ட வணிகத் தொடர்பு (சரக்குகள் வழங்கல் மற்றும் சேவைகள்) குறித்த பணியை ஏற்கும் முன்பாகவே விண்ணப்பிக்கலாம். அல்லது வழங்கல் தொடர்பான பணியை எடுத்துக்கொள்ளும் சமயத்தில், அது பற்றியும் இருக்கலாம். இதில் இருக்கும் ஒரே தடை அல்லது கட்டுப்பாடு என்னவென்றால், எழுப்பப்படும் கேள்வி ஏற்கெனவே விசாரணையில் இருக்கக்கூடாது. அதேபோல, விண்ணப்பதாரின் வேறு வழக்குகளில் இதே கேள்வி எழுப்பப்பட்டு முடிவு செய்யப்படும் நிலையில் இருக்கக் கூடாது.

கேள்வி 7: முன்னிட்டு தீர்பாணை ஆணையம், எவ்வளவு காலத்திற்குள் தனது தீர்ப்பை வழங்க வேண்டும்?

பதில்: சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 98(6)இன்படி மனுதாக்கல் செய்த தொன்னூறு நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

கேள்வி 8: முன்னிட்டுத் தீர்ப்பாயத்திற்கு அடுத்தகட்ட மேல் முறையீட்டு முன்னிட்டுத் தீர்ப்பாயம் (AAAR) எது?

பதில்: முன்னிட்டு தீர்ப்பாயத்தின் மேல் முறையீட்டத் தீர்ப்பாயத்தை (AAAR) எஸ்ஜிஎஸ்டி/யுடிஜிஎஸ்டி) சட்டம் ஆகியவற்றின் கீழ் உருவாக்கலாம். இதுதான் குறிப்பிட்ட மாநிலம், யூனியன் பிரதேசத்திற்கான மேல் முறையீட்டத் தீர்ப்பாயமாக இருக்கும். முன்னிட்டுத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட மனுதாரரோ, துறை சார்ந்த அதிகாரியோ மேல முறையீடு செய்யலாம்.

கேள்வி 9: ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் எத்தனை AAR மற்றும் AAAR உருவாக்கப்படும்?

பதில்: ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு AAR மற்றும் ஒரு AAAR செயல்படும்.

கேள்வி 10: முன்னிட்டு தீர்ப்பு யாருக்குப் பொருந்தும்?

பதில்: AAR மற்றும் AAAR ஆகியவற்றின் தீர்ப்பாணை, சட்டப் பிரிவு 972)ன் கீழ் முறையீடு செய்திருந்து மனுதாரர் மற்றும் அவரது வரி விதிப்பு சட்ட வரம்பெல்லைக்குள் இருக்கும் வரித்துறை அதிகாரி ஆகியோரைக் கட்டுப்படுத்தும். இதற்குப் பொருள் என்னவெனில், மாநிலத்தில் பிற இடங்களில் இருக்கும் வரி விதிப்புக்கு உட்பட்ட நபர்களுக்குப் பொருந்தாது. முன்னிட்டு வரி விதிப்புக்கு உட்பட்ட நபர்களுக்குப் பொருந்தாது. முன்னிட்ட தீர்ப்பானைக்காக, மனு செய்தவரக்கு மட்டுமே அந்தத் தீர்ப்பாணை கட்டுப்படுத்தும்.

கேள்வி 11: முன்னிட்டு தீர்ப்பானைணக்கு உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடும் அளவுக்கான முன்னுதாரண மதிப்புரிமை இருக்கிறதா?

பதில்: இல்லை. முன்னிட்டுத் தீர்ப்பாணையைப் பொறுத்தவரையில் அது எந்த விஷயத்திற்காக ஆணை பிறப்பிக்கப்படுகிறதோ, அதை மட்டும்தான் கட்டுப்படுத்தும். அதற்கு முன்னுதாரண மதிப்புரிமை கிடையாது. அதே சமயத்தில் மனுதாரரைத் தவிர மற்றவர்களையும் வலியுறுத்தும் மதிப்புரிமை பெற்றிருக்கிறது.

கேள்வி 12: முன்னிட்டுத் தீர்ப்பு எவ்வளவு காலத்திற்குப் பொருந்தும்?

பதில்: இதற்காக சட்டத்தில் குறிப்பிட்ட காலம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக 103(2) சட்டப்பிரிவின்படி, முன்னிட்டுத் தீர்ப்பு, அது தொடர்புடைய சட்டம், உண்மை நிலை, அல்லது தழ்நிலைகள், ஆகியன மாறாத அடிப்படைத் தீர்ப்புடன் ஒத்திசைவு இருக்கும் வரையில் பொருந்தும். அதாவது, ஒரு தீர்ப்பாணையை ஒட்டி ஒப்பந்தப் பரிமாற்றங்கள் நடக்கும் வரையிலும், அது தொடர்பான சட்டங்கள், உண்மை நிலை மற்றும் தழ்நிலைகள் மாறாத வரையிலும், அது செல்லபடியாகும்.

கேள்வி 13: முன்னிட்டுத் தீர்ப்பாணையை செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்க முடியுமா?

பதில்: சட்டப் பிரிவு 104(1)இன்படி AAR அல்லது AAARஇன் முன்னிட்டுத் தீர்ப்பாணை செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டுமானால் அந்தத் தீர்ப்பை மனுதாரர் மோசடியான வழிகளில் பெற்றிருந்தால், ஆதாரங்களை மறைத்தும், உண்மை நிலையை திரித்தும் அல்லது தவறாக அர்த்தப்படுத்தியும் தீர்ப்பு பெறப்பட்டிருப்பது கண்டறியப்படும் நிலை எழும்போது தீர்ப்பை செல்லாது அறிவிப்பது சாத்தியம்தான் இது போன்ற தழ்நிலையில் ஜிஎஸ்டி சட்டங்களில் உள்ள அனைத்து ஷரத்துக்களும், மனுதாரருக்குப் பொருந்தும் (ஆனால் முன்னிட்டத் தீர்ப்பு வழங்கப்பட்ட காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இது, இந்தத் தீர்ப்பு செல்லாது என்று அறிவிக்கப்படும் வரை தீர்ப்பு மனுதாரரை விசாரணை செய்த பிறகே வழங்க முடியும்.

கேள்வி 14: முன்னிட்டுத் தீர்ப்பைப் பெற வழிமுறைகள் என்ன?

பதில்: சட்டப் பிரிவுகள் 97 மற்றும் 98 ஆகியனவற்றில் முன்னிட்டுத் தீர்ப்பைப் பெறும் நடைமுறைகள் விளக்கப்பட்டு இருக்கின்றன. இதைப்பெற விரும்பும், மனுதாரர் அதற்கான படிவத்தை, முறையாகப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதை எப்படி பூர்த்தி செய்வது என்பது பற்றிய விவரமான குறிப்புகள் விதிமுறைகள் பகுதியில் தரப்பட்டுள்ளன. விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டதும், அதை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அது தொடர்பான ஆவணங்களைக் கேட்டுப் பெறும் விண்ணப்பத்துடன், அது தொடர்பான ஆவணங்களையும் வைத்து ஆய்வு செய்யும். தேவைப்பட்டால் விண்ணப்பதாரரையும் அழைத்து விசாரணை செய்யும். இதன் பிறகுஅந்த விண்ணப்பத்தை ஏற்பதா நிராகரிப்பதா என்பது முடிவு செய்யப்படும்.

கேள்வி 15: எந்தெந்தச் சூழ்நிலைகளில் முன்னிட்டு தீர்ப்பாணை கோரும் விண்ணப்பம் உறுதியாக நிராகரிக்கப்படும்?

பதில்: ஜிஎஸ்டி சட்டங்களின் ஷரத்துக்களில் எந்த அம்சத்தைப் பற்றிய கேள்வி, விளக்கத்தை விண்ணப்பதாரர் எழுப்புகிறாரோ, அதே கேள்வி ஏற்கெனவே விசாரணைக்கென நிலுவையில் இருந்தால் அல்லது தகுதி பெற்ற மன்றங்களால் முடிவு செய்யப்பட்டு இருந்தால், விண்ணப்பதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான விளக்கங்களுடன் வாய்மொழி உத்தரவு மூலம் நிராகரிக்கப்படும்.

கேள்வி 16: விண்ணப்பம் முறையீடு ஆகியன AARஇல் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பு என்ன நடைமுறைகள் பின்பற்றப்படும்?

பதில்: விண்ணப்பம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் அதற்கான தீர்ப்பாணை, அதிலிருந்து 90 நாட்களுக்குள் அறிவிக்கப்பட வேண்டும். தீர்ப்பாணை வழங்கப்படும் முன்பு விண்ணப்பத்தையும் அது தொடர்பான அதிகாரி அளித்த விளக்க ஆவணங்களையும் பார்த்து ஆய்வு செய்யும். தீர்ப்பு வழங்கப்படும் முன்பு, விண்ணப்பதாரர் அல்லது அவரது பிரதிநிதி ஆகியோரையும் வழக்குத் தொடர்பான அதிகாரிகளையும் சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி/யுடிஜிஸ்டி விசாரித்த பிறகே தீர்ப்பு வழங்கப்படும்.

கேள்வி 17: AAR உறுப்பினர்களிடையே தீர்ப்பாணை குறித்து வெவ்வேறான அபிப்பிராயங்கள் இருந்தால் என்ன நடக்கும்?

பதில்: AARஇன் இரண்டு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தால், எந்த அம்சத்தில் அவ்வாறு கருத்து வேறுபாடு இருக்கிறதோ, அதை AAAR விசாரணைக்கு அனுப்பிவிடுவார்கள். ஒருவேளை AAAR உறுப்பினர்களும் இது பற்றி உறுதியான முடிவு எடுக்க முடியாது போனால் குறிப்பிட்ட கேள்வியைப் பற்றி முன்னிட்டுத் தீர்ப்பு வழங்க முடியாது என்று கருதப்படும்.

கேள்வி 18: AAR தீர்ப்பாணையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும் வழிமுறைகள் என்ன?

பதில்: AAARன் முன் மேல் முறையீடு செய்வதற்கான வழிமுறைகள், சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டம் 100 மற்றும் 101 பிரிவுகளிலும் யுடிஜிஎஸ்டி சட்டப் பிரிவு 14இலும் விளக்கப்பட்டுள்ளன. AARன் தீர்ப்பினால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக விண்ணப்பதாரர் நினைத்தால், AAARஇடம் மேல் முறையீடு செய்யலாம். அதேபோல, சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி / யுடிஜிஎஸ்டி யின் சட்ட வரம்பெல்லைக்கு உட்பட்ட அதிகாரியும் AARன் முடிவோடு ஒத்துப் போகாவிட்டால், அவரும் AAARஇடம் மேல் முறையீடு செய்யலாம். இதில் சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி அதிகாரி என்றால் சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர் என்று பொருள்.

சாதாரணமான சூழ்நிலையில் விண்ணப்பதாரர் இருக்கும் சட்ட வரம்பெல்லைப் பகுதியில் உள்ள அதிகாரிதான் சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி- யின் அதிகாரபூர்வ சட்டப்பிரதி ரீதியாக செயல்படுவார். முன்னிட்டுத் தீர்ப்பானை பெற்ற முப்பது நாட்களுக்குள், மேல் முறையீடு செய்யப்பட வேண்டும். இந்த விண்ணப்பம் அதற்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு சரிபார்க்கப்பட்டு, அதன் பின் முறையீடு தாக்கல் செய்ய வேண்டும். இந்த முறையீடு தாக்கல் செய்த, 90 நாட்களுக்குள், இரு தரப்பினரையும் விசாரித்து, தீர்ப்பாணையை வழங்க வேண்டும். AAARஇன் உறுப்பினர்கள், தீர்ப்பு குறித்து கருத்து வேறுபாடுகள் எழுந்தால், அந்தக் குறிப்பிட்ட விஷயம் குறித்து எந்த முன்னிட்டுத் தீர்ப்பாணையும் வழங்கப்படாது என்று கருதப்படும்.

கேள்வி 19: முன்னிட்ட தீர்ப்பாணைகளை எதிர்த்து, உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியுமா?

பதில்: சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டத்தில் மேல் முறையீட்டு ஆணையத்தின் முன்னிட்டு தீர்ப்பாணையை எதிர்த்து முறையீடு செய்வதற்கு இடம் இல்லை. அளிக்கப்பட்ட தீர்ப்பாணை விண்ணப்பதாரர் மற்றும் சட்ட வரம்பெல்லைக்கான அதிகாரியையும் கட்டுப்படுத்தும். அதே சமயத்தில் ரிட் மனு தொடர்பான சட்ட அதிகாரம் உயர் நீதிமன்றத்திடமும், உச்ச நீதிமன்றத்திடமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி 20: தீர்ப்பாணையில் தவறுகள் இருந்தால், அதைத் திருத்த AAR மற்றும் AAAR உத்தரவிட முடியுமா?

பதில்: ஆம். முடியும். AAR AAAR ஆகிய இரண்டு ஆணையங்களுக்கும், தங்களது உத்தரவில் திருத்தங்கள் செய்ய அதிகாரம் இருக்கிறது. இதை, தவறு கண்டறியப்பட்ட ஆறு மாதங்களுக்குள்ளாகத் திருத்தப்பட வேண்டும். இந்தத் தவறை, ஆணையருமே தங்களது ஆவணங்கள் மூலம் கண்டறியலாம். விண்ணப்பத்தாரர் அதனைக் சுட்டிக் காட்டலாம் அல்லது இந்த தொடர்புடைய சிஜிஎஸ்டி/எஸ்ஜஎஸ்டி அதிகாரியும் தவறைக் கண்டறிந்து ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுவரலாம். இந்தத் திருத்தத்தினால் செலுத்த வேண்டிய வரித் தொகை அதிகமானாலோ அல்லது உள்ளிட்டு வரிக்கடன் குறைந்தாலோ, விண்ணப்பதாரர் மற்றும் சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி அதிகாரியையும் மறுபடியும் விசாரித்துவிட்டுத்தான் இறுதி உத்தரவு வழங்கப்பட வேண்டும்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

Filed under:
2.81818181818
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top