பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வரி வசூலும் / விதிப்பும், வரி விலக்கும்

வரி வசூலும் / விதிப்பும், வரி விலக்கும் பற்றிய கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1. வரி விதிக்கும் அதிகாரம் GSTக்கு எங்கிருந்து பெறப்படுகின்றது?

பதில் : அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு நூற்றியொன்றாவது திருத்த சட்டம், 2016ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பிரிவு 246Aன் படி பாராளுமன்றம் மாநில சட்டமன்றம் இரண்டும் GSTயுடன் இணைந்து சட்டங்களை இயற்றும். அதாவது மத்திய வரி (CGST), மற்றும் மாநில வரி (SGST) அல்லது யூனியன் பிரதேசம் (UTGST). இருப்பினும், மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் வணிகம் தொடர்பான சட்டத்தை அதாவது ஒருங்கிணைக்கப்பட்ட வரியை (IGST) இயற்றும் சிறப்பு அதிகாரத்தை பாராளுமன்றம் மூலமாக சட்டமன்றத்திற்கு பிரிவு 246Aன் உட்பிரிவு 2 உடன் பிரிவு 269A வழங்குகின்றது.

கேள்வி 2. GSTன் கீழ் வரிவிதிப்புக்கு உட்படக்கூடியவைகள் என்றால் என்ன?

பதில் : சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் வழங்கல் அல்லது இரண்டும் GSTன் கீழ் வரிவிதிப்புக்குட்படக் கூடியவைகள். மாநிலத்திற்குள் நடக்கும் சரக்குகள் வழங்கல் மீது CGST/SGST மற்றும் UTGSTவரி விதிக்கப்படும். மாநிலங்களுக்கிடையே நடக்கும் சரக்குகள் வழங்கல் மீது IGST வரி விதிக்கப்படும்.

கேள்வி 3. பரிசீலக்கப்படாத வழங்கலும், GSTன் கீழ்வழங்கல் வரம்பிற்குள் வருமா?

பதில் : ஆமாம். CGST/SGST பட்டியல் Iல் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகள் மட்டுமே வரம்பிற்குள் வரும். இந்த விதிமுறைகள் IGST மற்றும் UTGSTலும் பின்பற்றப்படும்.

கேள்வி 4. ஒரு அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் அத்தியாவசியமான பொருட்களுக்கு வரி விதிக்கப்படுமா?

பதில் : பரிமாற்றங்கள் வியாபாரத்தை பெருக்கும் நோக்கிலிருந்தால், வழங்கப்பட்ட பொருட்களுக்கும் GST66T கீழ்வரி விதிக்கப்படும். மேலும், இதில் அறக்கட்டளைக்களுக்கு வழங்கப்படுவதின் மூலம் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் இல்லையென்றால், GSTன் கீழ்வரி விதிக்கப்பட மாட்டாது.

கேள்வி 5. சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்குவதற்கான பரிமாற்றங்களை அறிவிப்பது யார்?

பதில் : ஒரு செயல்பாடுகள் சரக்கு வழங்கல் மற்றும் சரக்கு வழங்கல் இல்லை என்றும், அல்லது சேவைகள் வழங்கல் மற்றும் சேவைகள் வழங்கல் இல்லை என்றும், இவைகள் சரக்கு வழங்கலோ சேவைகள் வழங்கலோ இரண்டுமே இல்லை என்று GST கவுன்சிலின் பரிந்துரைகளின்படி மத்திய, மாநில அரசாங்கங்கள் அறிவிக்கலாம்.

கேள்வி 6. தொகுப்பு வழங்கல் மற்றும் கூட்டு வழங்கல் என்றால் என்ன? இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எவ்வாறு வேறுபடுகின்றன?

பதில் : தொகுப்பு வழங்கல் என்றால் வரி விதிக்கப்பட வேண்டிய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரக்கு மற்றும் சேவைகள் வழங்கல்கள் அல்லது இரண்டும் அல்லது ஏதாவதுடன் இணைந்தோ, இயல்பான முறையில் தொகுக்கப்படும். அல்லது வியாபாரத்தின் சாதாரண முறையில் ஒன்றோடொன்று இணைத்து வழங்கப்பட்டதில் ஒன்று முதல் வழங்கலாகும். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் தொலைக்காட்சிப் பெட்டி வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதனுடன் உத்தரவாதம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தமும் சேர்ந்து அவருக்குக் கிடைக்கும். இது தான் தொகுப்பு வழங்கலாகும். இந்த உதாரணத்தில், தொலைக்காட்சி பெட்டி முதல் வழங்கலாகும், உத்தரவாதம் மற்றும் பராமரிப்பு இரண்டும் இணைப்புச் சேவையாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட நபருக்கு கூட்டாக வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வழங்கல் அல்லது சாதாரணமாக தனித்தனியாக வழங்கக் கூடியவற்றை ஒன்றோடொன்று இணைத்து ஒற்றை விலைக்கு விற்கப்படும் எந்தவொரு இணைத்தலும் கூட்டு வழங்கல் என்பதாகும். உதாரணமாக, ஒரு கடைக்காரர் குளிர்ப்பதனப் பெட்டியுடன் தண்ணிர் பாட்டில்களையும் சேர்த்து விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பாட்டில்கள் மற்றும் குளிர்ப்பதனப் பெட்டி இரண்டிற்கும் விலையிட்டு தனித்தனியாக விற்கமுடியும்.

கேள்வி 7. GSTன் கீழ் தொகுப்பு வழங்கல் மற்றும் கூட்டு வழங்கலுக்கான நடவடிக்கைகள் என்ன?

பதில்: தொகுப்பு வழங்கலில் முதல் வழங்கப்பட்ட வழங்கலுக்கே வரி விதிக்கப்படும். கூட்டு வழங்கலில் குறிப்பிட்ட சரக்கு மற்றும் சேவைகளின் வழங்கலாக கருதி அதிகபட்ச வரி விகிதம் விதிக்கப்படும்.

கேள்வி 8. சரக்கு மற்றும் சேவைகள் GSTன் கீழ் வரி விதிக்கப்படுமா?

பதில்: மனிதன் உட்கொள்ளும் மசது நீங்கலாக மற்ற அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கு GSTன் கீழ் வரி விதிக்கப்படும்கச்சா பெட்ரோல், மோட்டார் எரிபொருள் (பெட்ரோல்), அதி வேக டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகியவற்றிற்கு வருகின்ற காலகட்டத்தில் வரி விதிக்கப்படும். இதற்கான தேதியை GSTகவுன்சிலின் பரிந்தரைகளின்படி அரசாங்கத்தால் அறிவிக்கப்படும்.

கேள்வி 9. நேர்மாறான வரி விதிப்பு என்றால் என்ன?

பதில்: அறிவிக்கப்பட்ட வழங்கல்களின் வகைகளைப் பொறுத்தவரை அம்மாதிரியான சரக்கு மற்றும் சேவைகளை வழங்கிய அனுப்புநருக்கு பதில் வழங்கப்பட்ட சரக்கு மற்றும் சேவைகள் பெற்றுக் கொள்பவரிடமிருந்து தான் வரி வசூல் செய்யப்படும்.

கேள்வி 10. நேர்மாறான வரிவிதிப்பு செயல்முறை சேவைகளுக்கு மட்டுமே பொருந்துமா?

பதில் : பொருந்தாது. GST கவுன்சிலின் பரிந்தரைகளின்படி அரசாங்கத்தின் அறிவிப்புப்படி நேர்மாறான வரிவிதிப்பு சரக்கு மற்றும் சேவைகள் வழங்கலாகிய இரண்டிற்குமே பொருந்தும்.

கேள்வி 11. பதிவு செய்யாத நபரிடமிருந்து சரக்குகள் வழங்கப்பட்டால், எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில் : பதிவு செய்யாத நபரிடமிருந்து சரக்குகள் வழங்கப்பட்டால், சரக்கு மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொண்ட பதிவு செய்யப்பட்ட நபர் நேர்மாறான வரி விதிப்பு செயல்முறையின் கீழ் வரி செலுத்தக் கடமைப்பட்டவர் ஆவர்.

கேள்வி 12. வழங்குபவர் அல்லது பெறுபவர் இவர்களைத் தவிர வேறு யாராவது GSTன் கீழ் வரி செலுத்தபடவேண்டுமா?

பதில் : ஆமாம். மத்திய மாநில அரசாங்கங்கள் குறிப்பிட்ட வகையான சில சேவைகளுக்கு வரி விதித்துள்ளது. அது மின்னணு வர்த்தகம் இயக்குபவர் சேவைகளாகும். சேவைகளை அதன் வழியாக வழங்கப்பட்டிருந்தால், அனைத்து சட்ட விதிமுறைகளும் இந்த மின்னணு வர்த்தகம் இயக்குபவர் சேவைகளுக்கு பொருந்தும். அம்மாதிரி சேவைகளை வழங்கிய நபர் வரி செலுத்த கடமைப்பட்டவர் ஆவார்.

கேள்வி 13. தொகுப்பு வரித் திட்டத்தின்கீழ் வரி செலுத்துவதற்கான வரம்பு என்ன?

பதில் : கடந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த விற்றுமுதல் ரூ.50 லட்சம் என்பது தொகுப்பு வரித் திட்டத்தின் வரம்பு ஆகும். தொகுப்பு திட்டத்தின் சலுகையை தற்போதைய நிதியாண்டின் விற்றுமுதல் ரூ.50 லட்சத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

கேள்வி 14. தொகுப்புத் திட்டத்தின் வரி விகிதம் என்ன?

பதில் : வெவ்வேறு துறைகளுக்கு வெவ்வேறான தொகுப்பு வரி விகிதம் உள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திலுள்ள சாதாரண சரக்கு வழங்குபவருக்கு (வணிகர்கள்) தொகுப்பு வரி விகிதம் 0.5% ஆகும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திலுள்ள உற்பத்தியாளர்கள் தொகுப்பு வரித் திட்டத்தை தெரிவு செய்தால், அதற்கு வரி விகிதம் 1% ஆகும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திலுள்ள உணவக சேவைகளுக்கு தொகுப்பு வரி விகிதம் 25% ஆகும். ஒரு சட்டப்பிரிவின் கீழ் உள்ள விகிதங்களாகும், மற்ற சட்டப்பிரிவுகளுக்கும் இதே விகிதங்கள் பொருந்தும். ஆகையால், 1%, 2% மற்றும் 5% (CGST மற்றும் SGST/UTGSTன் கீழ் தொகுப்பு வரி விகிதம்) என்பது முறையே சாதாரண வழங்குபவர் உற்பத்தியாளர் மற்றும் உணவக சேவைகளுக்கான திறன் வாய்ந்த தொகுப்பு வரி விதகிதமாகும்.

கேள்வி 15. தொகுப்பு வரித் திட்டத்தை தெரிவு செய்த ஒரு நபர் நடப்பு நிதியாண்டின் விற்றுமுதல் வரம்பான ரூ. 50 லட்சத்தைக் வருட முடிவதற்குள் கடந்து விட்டார். அதாவது, விற்றுமுதல் ரூ. 50 லட்சத்தை டிசம்பருக்குள் கடந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். தொகுப்பு வரித் திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள மாதங்களுக்கு, அதாவது 31 மார்ச் வரை, வரி செலுத்த அனுமதிக்கப்படுவாரா?

பதில் : இல்லை. நிதியாண்டின் ஒட்டுமொத்த விற்றுமுதல் வரம்பான ரூ. 50 லட்சத்தை கடந்த அதே நாளிலில் தெரிவுச் செய்யப்பட்ட சலுகைத் தானாகவே காலாவதியாகிவிடும்.

கேள்வி 16. பலமுறை பதிவு செய்த ஒரு வரி செலுத்தும் நபர், ஒரு சில பதிவுகளுக்கு மட்டும் தொகுப்பு வரி திட்டத்தை தெரிவு செய்ய தகுதி உள்ளதா?

பதில் : பதிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் ஒரே நிரந்தர கணக்கு எண்ணின் (PAN) மூலம் தான் தொகுப்பு வரித் திட்டத்தை தெரிவு செய்ய முடியும். ஒரு பதிவு செய்த நபர் சாதாரண திட்டத்தை தெரிவு செய்துவிட்டார் எனில், மற்றவர்கள் தொகுப்பு வரி திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

கேள்வி 17, உற்பத்தியாளர் மற்றும் சேவை வழங்குபவரால் தொகுப்பு வரித் திட்டத்தில் சலுகை பெற முடியுமா?

பதில் : முடியும். உற்பத்தியாளர்கள் தொகுப்பு வரி திட்டத்தை தெரிவு செய்ய முடியும். இருந்தாலும், ஒரு பொருட்கள் உற்பத்தியாளர் மீது GST கவுன்சிலின் பரிந்துரைகளின்படி அறிவிப்பு வந்தால், அவரால் இந்த திட்டத்தை தெரிவு செய்ய முடியாது. உணவகங்களைத் தவிர மற்ற சேவைகளுக்கு இந்த திட்டத்தை பெற முடியாது.

கேள்வி 18. தொகுப்பு வரித் திட்டத்தை தெரிவு செய்ய தகுதியற்றவர்கள் யார்?

பதில் : பெரியளவில், பதிவு செய்திருக்கின்ற நபர்களில் ஐந்து வகையானவர்கள், தொகுப்பு வரித் திட்டத்தை தெரிவு செய்ய தகுதியற்றவர்கள். அவர்கள் :-

அ) உணவக சேவைக்கான வழங்குபவர் தவிர மற்ற சேவைகள் வழங்குபவர்.

ஆ) CGST சட்டம் / SGST சட்டம் / UTGST சட்டங்களுக்கு கீழ் வரி செலுத்தாத சரக்கு வழங்குபவர்;

இ) மாநிலங்களுக்கிடையில் சரக்கு வழங்குபவர்;

உ) ஒரு மின்னணு வர்த்தக இயக்குபவர் மூலம் சரக்குகளை வழங்கும் நபர்;

ஊ) அறிவிக்கப்பட்ட சில பொருட்களின் உற்பத்தியாளர்;

கேள்வி 19. பதிவு செய்திருக்கின்ற நபர் தொகுப்பு வரித் திட்டத்தின் கீழ் உள்ளிட்டு வரி வரவை உரிமைக் கோர முடியுமா?

பதில் : முடியாது. பதிவு செய்திருக்கின்ற நபர் தொகுப்பு வரித் திட்டத்தின் கீழ் உள்ளிட்டு வரி வரவை உரிமைக் கோர தகுதியற்றவர்.

கேள்வி 20. தொகுப்பு வரித் திட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கின்ற நபரிடமிருந்து வாங்கிய வாடிக்கையாளர் தொகுப்பு வரியை உள்ளீட்டு வரி வரவாக உரிமை கோர முடியுமா?

பதில் : கோர முடியாது. தொகுப்பு வரித் திட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கின்ற நபரிடமிருந்து வாங்கிய வாடிக்கையாளர் தொகுப்பு வரியை உள்ளீட்டு வரி வரவாக உரிமை கோர முடியாது, ஏனென்றால், தொகுப்பு வரி வழங்குபவரால் வரி விலைப்பட்டியை தர முடியாது.

கேள்வி 21. வாடிக்கையாளரிடமிருந்து தொகுப்பு வரியை வதல் செய்யலாமா?

பதில் : கூடாது. தொகுப்பு வரித் திட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கின்ற நபருக்கு வரி வசூல் செய்ய அனுமதி கிடையாது. தொகுப்பு வரி வழங்குபவரால் வரி விலைப்பட்டியை தர முடியாது என்பது இதன் பொருளாகும்.

கேள்வி 22. தொகுப்பு வரித் திட்டத்திற்கு தகுதியை தீர்மானிப்பதற்கு ஒட்டுமொத்த விற்றுமுதலை கணக்கிடுவது எப்படி?

பதில் : ஒட்டுமொத்த விற்றுமுதலை கணக்கிடும் முறையை பிரிவு 2(6)ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரே நிரந்தர கணக்கு எண்ணுடைய (PAN) நபரின் வெளியே வழங்கியவற்றின் மதிப்புதான் (வரி விதிக்கப்பட வேண்டிய வழங்கல் + விலக்களிக்கப்பட்ட வழங்கல் + ஏற்றுமதி + மாநிலங்களுக்கிடையிலான வழங்கல்) ஒட்டுமொத்த விற்றுமுதல் என்பதன் பொருளாகும். மத்திய வரி (CGST), மாநில வரி (SGST) யூனியன் பிரதேச வரி (UTGST), ஒருங்கிணைந்த வரி (IGST) மற்றும் இழப்பீடு மேல்வரி இவற்றில் எதிலிருந்தும் வரி விதிக்கப்படாதவை. மேலும், உள்ளீட்டு வழங்கலின் மதிப்பு மீது நேர்மாறான வரி விதிப்பின் கீழ் வரி செலுத்துப்பட வேண்டியவற்றை ஒட்டுமொத்த விற்றுமுதல் கணக்கீடின் போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

கேள்வி 23. ஒரு நபர் விதிகளை மீறி தொகுப்பு வரி திட்டத்தை தெரிவு செய்தால், இதற்கு சட்ட பின்விளைவுகள் என்ன?

பதில் : வரி செலுத்தும் நபர், தனக்கு தகுதியில்லை என்று தெரிந்தே, தொகுப்பு வரித் திட்டத்தின் கீழ் வரி செலுத்தினார் என்றால், அந்த நபர் தண்டனைக்குரியவர். மேலும், வரி மற்றும் தண்டனையை தீர்மானிக்க பிரிவு 73 அல்லது 74 விதிகள் இதற்குப் பொருந்தும்.

கேள்வி 24. GST விதித்த வரிக்கு விலக்கு அளிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்குள் GST சட்டம் வழங்கியுள்ளதா?

பதில் : ஆமாம் வழங்கியுள்ளது. மக்கள் நலனுக்காக, சரக்கு மற்றும் சேவைகள் அல்லது இரண்டிற்கும் GST வரி விதிப்பிலிருந்து முற்றிலுமாகவோ அல்லது நிபந்தனை அடிப்படையிலோ விலக்களிக்க முடியும். இதற்கு GST கவுன்சிலின் பரிந்துரைகளின்படி, மத்திய மாநில அரசுகள், மொத்தமாகவோ அல்லது பகுதியையோ விலக்கு அளிக்கலாம். ஒரு விதிவிலக்கான தன்மையில் சூழ்நிலையின் ஏற்ப ஒரு சிறப்பு ஆணை பிறப்பித்து, எந்த சரக்குகளுக்கும் அல்லது சேவைகளுக்கும் அல்லது இரண்டிற்கும் வரி விலக்கு அளிக்க அரசாங்கத்தால் முடியும். SGST சட்டம் மற்றும் UTGST சட்டபபடி, CGSTன் கீழ் அனுமதிக்கப்பட்ட எந்த விலக்கும் சட்டப்படி கூறப்பட்டதாகும்.

கேள்வி 25. சரக்கு மற்றும் சேவைகள் அல்லது இரண்டிற்கும் மீது வதலிக்கப்பட்ட வரி மொத்தத்திற்கும் முற்றிலும் அனுமதிக்கப்பட்ட விலக்களித்த பின் ஒரு நபர் வரி செலுத்த வேண்டுமா?

பதில் : வரி செலுத்த வேண்டாம். விலக்களிக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது இரண்டிற்கும் அதிக திறன்பட்ட விகிதத்தின் வரி வசூலிக்கக்கூடாது.

ஆதாரம் : http://www.cbec.gov.in

3.125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top