பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வருமான வரி தாக்கல் செயல்முறைகள் மற்றும் உள்ளீட்டு வரி கடன்

வருமான வரி தாக்கல் செயல்முறைகள் மற்றும் உள்ளீட்டு வரி கடன் சார்ந்த கேள்வி பதில்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கே. 1. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் நோக்கம் என்ன?

பதில்:

அ) வரி நிர்வாகத்திற்கு தகவல் பரிமாற்ற முறைமை;

ஆ) வரி நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதை சரிபார்க்கும் திட்டம்;

இ) வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் வரி செலுத்துவோரின் வரிப்பொறுப்புகள் இறுதி செய்யப்படுதல்; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கான வரிப்பொறுப்புகளை அறிவிக்க

ஈ) கொள்கை முடிவெடுத்தல்களுக்குத் தேவையான உள்ளிடுகளை வழங்குதல்; வரி நிர்வாகத்தின் தணிக்கை மற்றும் எய்ப்புக்கு எதிரான திட்டங்கள் மேலாண்மை.

கே. 2.  ஜி.எஸ்.டி. ரெஜிமில் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்?

பதில்: ஜி.எஸ்.டியின் கீழ் பதிவு செய்திருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். பதிவு செய்துள்ள ஒரு நபர், மாதம் ஒரு முறை (சாதாரண வழங்குபவர்) அல்லது காலாண்டு அடிப்படையில் சர்வு திட்டத்தை (composition scheme) தேர்வு செய்யும் வழங்குபவர் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு ஐ.எஸ்.டி. மாதாந்திர வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதில் அந்தக் குறிப்பிட்ட மாதத்தில் விநியோகிக்கப்பட்ட கடன் விவரங்கள் காட்டப்பட வேண்டும். வரியை பிடித்தம் செய்ய வேண்டிய நபர் (டி.டி.எஸ்) மற்றும் வரி வதலிக்க வேண்டிய நபர் (டி.சி. எஸ்.) இருவருமே மாதாந்திர வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இதில் பிடித்தம் செய்யப்படவதலிக்கப்பட வேண்டிய தொகைகள் மற்றும் பிற விவரங்கள் பரிந்துரைக்கப்படலாம். குடியுரிமை பெறாத வரிசெலுத்த வேண்டிய நபரும்கூட தான் செயல்பட்ட காலகட்டத்திற்கான வருமான வரி   கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

கே. 3. வெளிப்புற விநியோகத்தின் எந்த வகை விவரங்கள் வருமான வரி கணக்கில் தாக்கல் செய்யப்பட வேண்டும்?

பதில்: ஒரு சாதாரண பதிவு பெற்ற வரிமானவரி செலுத்தும் நபர், ஒரு மாதத்தில் பதிவு செய்த நபர்களுக்கு வெளிப்புற வழங்கல்கள், பதிவு செய்யாதவர்களுக்கான வெளிப்புற வழங்கல்கள் (வாடிக்கையாளர்கள்) வரவுபற்று குறிப்புகள், பூஜ்ஜியமாக ரேட் செய்யப்பட்டவை, விதிவிலக்கு அளிக்கப்பட்ட மற்றும் ஜி.எஸ்.டி. அல்லாத வழங்கல்கள், ஏற்றுமதிகள், மற்றும் எதிர்கால வழங்கலுக்காகப் பெறப்பட்ட முன்பணம், மேற்கொண்ட வெளிப்புற வழங்கல்கள் போன்ற பல்வேறு வழங்கல்களை வெளிப்புற விநியோக விவரங்களை   ஜி.எஸ்.டி.ஆர்-1-ல் தாக்கல் செய்ய வேண்டும்.

கே 4. ஜி.எஸ்.டி.ஆர்-1-னுடன் ஸ்கேன் செய்யப்பட்ட விலைப்பட்டிகள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமா?

பதில்:  ஸ்கேன் செய்யப்பட்ட விலைப்பட்டிகள் எதையும் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை. விலைப்பட்டிகளில் உள்ள சில குறிப்பிட்ட பரிந்துரைக்கப்பட்ட   தகவல் பகுதிகள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.

கே 5.  அனைத்து விலைப்பட்டிகளும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமா?

பதில்: வேண்டாம். அது B2B அல்லது B2Cயா என்பதைப் பொருத்தும் இந்த வழங்கல்கள் மாநிலத்திற்குள்ளா அல்லது மாநிலங்களுக்கு இடையேயா என்பதைப் பொருத்தும் அமையும். B2B வழங்கல்களுக்கு, இதன் வழங்கல்கள் மாநிலத்திற்குள்ளே அல்லது மாநிலங்களுக்கு இடையேயிலானவை என எதுவாக இருந்தாலும் அனைத்து விலைப்பட்டிகளும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஏன் அப்படி? ஏனென்றால், பெறுபவர்கள் ஐ.டி.சி. எடுப்பார்கள் என்பதால், அது விலைப்பட்டியுடன் ஒப்பிடப்படப்பட வேண்டும். B2C வழங்கல்களுக்கு, பொதுவாக வாங்குபவர் ஐ.டி.சி. எடுக்க மாட்டார்கள் என்பதால், பதிவேற்றம் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் போய்ச்சேருமிடம் அடிப்படையிலான கொள்கையை நடைமுறைப்படுத்த, மாநிலங்களுக்கு இடையேயான, B2C வழங்கல்களில் 2.5 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள விலைப்பட்டிகள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான 25 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள விலைப்பட்டிகள் மற்றும் அனைத்து மாநிலத்திற்குள்ளன விலைப்பட்டிகளுக்கு, மாநிலவாரியான சுருக்கமான குறிப்பு போதும்.

கேள்வி 6. விலைப்பட்டியில் உள்ள ஒவ்வொரு பொருளுக்குமான விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமா?

பதில்: வேண்டாம். உண்மையில், விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய தேவையிருக்காது. பொருள்களை வழங்குதலுக்கான ஹெச்.எஸ்.என். குறியீடு மற்றும் சேவைகள் வழங்குதலுக்கான கணக்கியல் குறியீடு மட்டுடே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பூர்த்திசெய்பவர் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய குறைந்தபட்ச இலக்க எண்கள் கடந்த ஆண்டில் அவரது விற்றுமுதலைப் பொருத்து அமையும்.

கே 7. ஒவ்வொரு பரிவர்த்தனையும் அளிக்கப்பட வேண்டுமா? எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்றால் என்ன ஆகும்?

பதில்: ஆம். மதிப்பு மட்டுமல்லாமல் வரிவிதிக்கப்பட வேண்டிய மதிப்பும்கூட அளிக்கப்பட வேண்டும். சில சமயங்களில், இரண்டும் வெவ்வேறாக இருக்கலாம். எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை, ஆனால் வழங்கல் அட்டவணை 1-ன் நெறிகளின்படி என்றால், பரிந்துரையின்படி வரிவிதிக்கப்பட வேண்டிய   மதிப்பும்கூட கணக்கிடப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

கே 8. ஒரு பெறுனர் தனது ஜி.எஸ்.டி.ஆர்-2-ல் வழங்குபவர் தவறவிட்ட தகவலை வழங்க முடியுமா?

பதில்: முடியும். தனது வழங்குனர் பதிவேற்றம் செய்யாத விலைப்பட்டிகளைப் பெறுனர் தானே வழங்க முடியும். இந்த மாதிரியான விலைப்பட்டிகளில் கடனும் தற்காலிகமாக வழங்கப்டும் ஆனால், அது ஒப்பீடுட்டுக்கு உட்படுத்தப்படும். ஒப்பிடும்போது, வழங்குபவர் விலைப்பட்டியை பதிவேற்றம் செய்யவில்லை என்றால், இருவருக்கும் இது குறித்து தெரிவிக்கப்படும். இந்தப் பொருந்தாத்தன்மை சரிசெய்யப்பட்டால், தாற்காலிக கடன் உறுதிசெய்யப்படும். ஆனால், பொருந்தாத்தன்மை தொடர்ந்து இருந்துவந்தால், இந்தத் தொகை, பெறுபவரின் வெளியீடு வரி பொறுப்பில், முரண்பாடு வெளிப்பட்டுள்ள அந்த மாதத்திற்கு அடுத்த மாதத்திற்கான வருமான வரி கணக்குத் தாக்கலில் சேர்க்கப்படும்.

கே. 9. வருமான வரிவிதிக்கப்படக்கூடிய ஒரு நபர் தனது ஜி.எஸ்.டி.ஆர்-2-ல் ஏதாவது வழங்க வேண்டுமா அல்லது எல்லாமே ஜி.எஸ்.டி.ஆர்-1-லிருந்து தானாகவே விரிவடையுமா  (auto-populated)?

பதில்:   ஜி.எஸ்.டி.ஆர்-2விலிருந்து ஒரு பெரும் பகுதி விரிவடையும் அதே நேரத்தில், பெறுநரால் மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிற இறக்குமதிகள் ஏற்றுமதி விவரங்கள், பதிவு செய்யாத அல்லது கலந்த வழங்குனர்கள் மற்றும் விதிவிலக்கு ஜி.எஸ்.டி-அல்லாத/ஒன்றுமில்லாத ஜி.எஸ்.டி வழங்கல்கள் முதலிய சில   வாங்கியதற்கான விவரங்கள்.

கே. 10 விலைப்பட்டிகள் பொருந்தாவிட்டால் என்னாகும்? ஐ.டி.சி. கொடுக்கப்பட வேண்டுமா அல்லது மறுக்கப்பட வேண்டுமா? மறுக்க வேண்டும் என்றால், வழங்குபவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்?

பதில்: ஜி.எஸ்.டி.ஆர்-2 ல் உள்ள விலைப்பட்டி இதன் எதிர்தரப்பு ஜி.எஸ்.டி.ஆர். 1னோடு பொருந்தாவிட்டால், இந்தப் பொருத்தமின்மை குறித்து வழங்குபவருக்கு தெரிவிக்கப்படும். பொருத்தமின்மை இரண்டு காரணங்களால் ஏற்படலாம். முதலில், பெறுபவர் செய்யும் தவறால் இது ஏற்படலாம், அப்படி என்றால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் தேவையில்லை. இரண்டாவதாக, குறிப்பிட்ட   அந்த விலைப்பட்டி வழங்குனரால் அளிக்கப்பட்டிருக்கலாம் ஆனால், அதை அவர் பதிவேற்றம் செய்யவில்லை. மேலும் அதற்கான வரி செலுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட தழலில், பெறுபவர் பயன்படுத்தியிருக்கும் ஐ.டி.சி. அவரது வெளியீட்டு வரி பொறுப்பில் சேர்க்கப்படும், சுருக்கமாக சொல்லப்போனால், வழங்குனர் ஒரு பொருளை வழங்கிவிட்டு அதற்கான வரியை செலுத்தவில்லை என்றால், அனைத்துப் பொருந்தாமைகளும் நடவடிக்கைகளுக்குத்தான் வழிகோலும்.

கே 11. வழங்குபவர் பின்னர் தவறை உணர்ந்து தகவலை அளித்துவிட்டால், திருத்தம் செய்யப்பட்ட உள்ளிட்டு வரிக்கடன் தொடர்பான சட்டபூர்வ நிலை என்னவாக இருக்கும்?

பதில்: எந்த கட்டத்திலும், ஆனால் அடுத்து நிதியாண்டின் செப்டம்பர் மாதத்துக்கு முன்பாக வழங்குனர் தனது ஜி.எஸ்.டி.ஆர்.3ல் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யத் தவறிய மாதத்திற்கான விலைபட்டிகளுக்கான வரியும் வட்டியும் செலுத்தி பதிவேற்றம் செய்யலாம். வழங்குனர் தனது பொருந்தாமயை சரிசெய்திருக்கும் தொகை அளவுக்கு, பெறுபவர் தனது வெளியீட்டு வரி பொறுப்பை கழித்துக்கொள்ளலாம். திருத்தம் செய்யப்படும் நேரத்தில் பெறுநரால் வழங்கப்பட்ட வட்டித் தொகையும் அவரது மின்னணு பண பேரேட்டில் தொகையை வரவு வைப்பதன் மூலம் அவருக்குத் திருப்பி அளிக்கப்படும்.

கே. 12. ஜி.எஸ்.டி.ஆர்-2வின் சிறப்பு அம்சம் என்ன?

பதில். ஒரு பெறுபவர் பெறும் வழங்கல்கள் அவரது எதிர்தரப்பான வழங்குனர் தனது ஜி.எஸ்.டி.ஆர்-1ல் பூர்த்திசெய்திருக்கும் விவரங்களின் அடிப்படையில்   தானாகவே விரிவடையும் என்பதுதான் ஜி.எஸ்.டி.ஆர்-2ன் சிறப்பு அம்சம்.

கே 13. சர்வு திட்டத்தின் (composition scheme) கீழ் உள்ள வரி செலுத்துபவர்களும் கூட ஜி.எஸ்.டி.ஆர்-1 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்-2-வை தாக்கல் செய்ய வேண்டுமா?

பதில்:  வேண்டாம். சர்வு வரி செலுத்துபவர்கள், வெளியீடு அல்லது உள்ளிது வழங்கலுக்கான எந்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டாம். இவர்கள்   ஜி.எஸ்.டி.ஆர்-4 படிவத்தில் காலாண்டு முடிந்து அடுத்து வரும் மாததின் 18-ம் தேதிக்குள் காலாண்டு வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கு உள்ளிடு வரிக் கடனுக்கு தகுதி இல்லாதவர்கள் என்பதால், இவர்களுக்கு ஜி.எஸ்.டி.ஆர்-2 வோடு எந்தத் தொடர்பும் கிடையாது மேலும் வரிக்கடன் சர்வு வரியின் கீழ் செலுத்தப்படுவதால், இவர்களுக்கு ஜி.எஸ்.டி.ஆர்.1 னோடும் எந்தத் தொடர்பும் கிடையாது. இவர்களுடைய வருமான வரி கணக்குத் தாக்கலில் இவர்கள் வரி செலுத்தும் விவரங்களோடு தங்கள் வெளியீட்டு வழங்கல்களின் விவரங்களின் சுருக்கத்தை அறிவிக்க வேண்டும். தங்களது காலாண்டு வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போதே தங்களுடைய கொள்முதல் விவரங்களையும் வழங்க வேண்டும், இவற்றில் பெரும்பாலானவை   தாமாகவே விரிவடையும்.

கே. 14. உள்ளிட்டு சேவை விநியோகஸ்தர்கள் (ஐ.எஸ்.டி.க்கள்) தங்கள் வருமான வரி கணக்குத் தாக்கலில் உள்ளிட்டு மற்றும் வெளியீட்டு வழங்கல்களின் தனி   அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமா?

பதில்: வேண்டாம். ஐ.எஸ்.டி.க்கள், ஜி.எஸ்.டி.ஆர்-6 படிவத்தில் மட்டுமே தங்கள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். சேவை வழங்குவோரிடமிருந்து தாங்கள் பெற்ற கடன் விவரங்கள் மற்றும் பெறுனர் யூனிட்களுக்கு தாங்கள் விநியோகித்த கடன் விவரங்கள் வருமான வரி கணக்குத் தாக்கலில் இருக்க வேண்டும். இவர்களது வருமான வரி கணக்குத் தாக்கலிலேயே இந்த அம்சங்கள் இடம்பெற்றுவிடுவதால், உள்ளிட்டு மற்றும் வெளியீட்டு வழங்கல்களுக்கு தனியாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டிய   தேவையில்லை.

கே. 15. வரி செலுத்துபவரிடமிருந்து அவரது சம்பளம் அல்லது வருமானத்தில் பிடித்தம் செய்யப்படும் வரியை எப்படித் திரும்பப் பெறுவார்? இதைத் திரும்பப் பெறுவதற்கு பணம் பிடித்தவரிடமிருந்து பெறப்பட்ட டி.டி.எஸ். சான்றிதழை   அவர் தாக்கல் செய்ய வேண்டுமா?

பதில்:  ஜி.எஸ்.டியின் கீழ், பணம் பிடித்தம் செய்பவர், தான் யாரிடமிருந்து பணம் பிடித்தம் செய்கிறாரோ அவரது விவரங்களையும் தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பிடித்தங்களையும் குறித்த விவரங்களையும் தனது ஜி.எஸ்.டி.ஆர்-7 படிவத்தில் பிடித்தங்கள் மேற்கொள்ளப்பட்ட மாதத்திற்கு அடுத்த மாதம் 10-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து வருமான வரி கணக்குத் தாக்கல் அறிக்கையில் அளிப்பார். பிடித்தம் செய்பவர் பதிவேற்றம் செய்யும் பிடித்தங்கள் குறித்த விவரங்கள் யாரிடம் பிடித்தம் செய்யப்படுகிறதோ அவரது ஜி.எஸ்.டி.ஆர்-2 படிவத்தில் தானாகவே விரிவடையும். தன் சார்பில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையைப் பெறுவதற்கு பிடித்தம் செய்யப்பட்டவர் தனது ஜி.எஸ்.டி.ஆர்-2 படிவத்தில் இந்த விவரங்களை உறுதி செய்ய வேண்டும் இந்த தொகையை பெறுவதற்காக அவர் எந்த சான்றிதழ் அல்லது மின்னணு படிவங்களையுயோ சமர்ப்பிக்கத் தேவையில்லை. சான்றிதழும்கூட வரி செலுத்துபவர் ஆவணங்களை பத்திரப்படுத்துவதற்காக மட்டுமே தேவை, இதை இவர் பொது வலைவாயிலில்   பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கே. 16. எந்த வகையான வரிசெலுத்துவோர் வருடாந்திர வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?

பதில்: ஜி.எஸ்.டி.ஆர்-1 முதல் ஜி.எஸ்.டி.ஆர்-3 படிவம்வரை பூர்த்திசெய்யும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் அனைத்து வரிசெலுத்துவோர். ஐ.டி.எஸ். தவிர முறைமைக்குட்படாத குடியுரிமை பெறாத, சர்வு திட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர்கள், டி.டி.எஸ். டி.சி.எஸ். பிடித்தம் செய்பவர்கள் ஆகிய அனைவரும் வருடாந்திர வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். குடியுரிமை பெறாத ஐ.டி.எஸ்.கள் மற்றும் சம்பளம் அல்லது வருமானத்தில் வரி பிடித்தம் / வதல் செய்ய அதிகாரம் பெற்ற நபர்கள் வருடாந்தர வருமான வரி   தாக்கல் செய்ய வேண்டாம்.

கே. 17. ஆண்டு வருமான வரி கணக்குத் தாக்கலும் இறுதி வருமான வரி கணக்குத் தாக்கலும் ஒன்றுதானா?

பதில்: இல்லை. ஆண்டு வருமான வரி கணக்குத் தாக்கலை சாதாரண வரி செலுத்துவோராகப் பதிவு செய்துள்ள ஒவ்வொருவரும் சமர்ப்பிக்க வேண்டும். இறுதி வருமான வரி கணக்குத் தாக்கலை பதிவை ரத்து செய்வதற்காக விண்ணப்பிக்கும் நபர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த இறுதி வருமான வரி கணக்குத் தாக்கல், கான்சல் செய்யப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் அல்லது ரத்து செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படும் தேதியில் பூர்த்தி செய்யப்பட   வேண்டும்.

கே. 18. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஏதாவது திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் அதை எவ்வாறு செய்ய வேண்டும்?

பதில்: ஜி.ஸ்டியில் தனிப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்களிலிருந்து வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யப்படுகிறது என்பதால், திருத்தப்பட்ட வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு எந்த தேவையும் ஏற்படாது. விலைப்பட்டிகள் அல்லது பற்று/வரவு குறிப்பு தொகுப்புகள் மாற்றப்பட வேண்டும் என்றால் மட்டுமே ஒரு வருமான வரி கணக்குத் தாக்கலில் ஏதாவது மாற்றங்கள் தேவைப்படும். ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கு அறிக்கையில் திருத்தங்கள் செய்வதற்கு பதில், அந்தப் பரிவர்த்தனைகளின் (விலைப்பட்டிகள் அல்லது பற்று/வரவு குறிப்பு தொகுப்புகள்) மாற்றப்பட வேண்டிய விவரங்களை மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதியை அமைப்பு வழங்குகிறது. இவை குறிப்பாக, ஏற்கெனவே அறிவித்த விவரங்களில் மாற்றங்கள் செய்துகொள்வதற்காகவே உள்ள எந்த எதிர்கால ஜி.எஸ்.டி.ஆர்.1 அல்லது 2 அட்டவணைகளின் எதில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

கே. 19. வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கை எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும்?

பதில்: வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கு அறிக்கைகள் மற்றும் வருமான வரி கணக்குத் தாக்கல்களை பல்வேறு வழிமுறைகளில் மேற்கொள்ளலாம். முதலில், அவர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு விவரங்களை நேரடியாக பொதுவான இணையதள வலைவாயிலில் தாக்கல் செய்யலாம். ஆனால், ஏராளமான விலைப்பட்டிகளை இணைக்க வேண்டியிருப்பதால், வரி செலுத்துவோருக்கு இது சலிப்பூட்டும் வேலையாகவும் அதிகமான நேரம் செலவிட வேண்டியதாகவும் இருக்கும். இப்படிப்பட்ட வரி செலுத்துவோருக்கு, தானாகவே வரக்கூடிய விவரங்களை பதிவிறக்கம் செய்த பிறகு, இணையதளம் வாயிலாக அல்லாத வசதியைப் பயன்படுத்தி வருமானம் மற்றும் செலவு விவரங்களைத் தயார் செய்து, அவற்றைப் பொதுவான வலைவாயிலில் பதிவேற்றம் செய்யலாம். ஜி.எஸ்.டி.என். உருவாக்கியுள்ள ஜி.எஸ்.டி. சுவிதா வசதி, பொதுவான வலைவாயிலுடன் இணைக்கும்.

கே. 20. ஜி.எஸ்.டி-யின் கீழ் வரும் விதிகளை எந்த சிக்கலும் இல்லாமல் பின்பற்றுவதற்கு வரிசெலுத்தும் ஒருவர் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

பதில்: வழங்கல் விவரங்களை ஜி.எஸ்.டி.ஆர்-1 படிவத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதிக்குள் தவறாமல் பதிவேற்றம் செய்வது ஜி.எஸ்.டி. விதிகளில் மிக முக்கியமான ஒரு விதியாகும். எந்தளவுக்கு இது மிக சிறந்த முறை என்பது வரி செலுத்துவோர் வழங்கும் B2B விலைப்பட்டிகளின் எண்ணிக்கையைப் பொருத்தது. இந்த எண்ணிக்கை குறைவானதாக இருந்தால், வரி செலுத்துவோர் அனைத்து தகவல்களையும் ஒரே தடவையில் பதிவேற்றம் செய்துவிடலாம். ஆனால், விலைப்பட்டிகளின் எண்ணிக்கை அதிகமானதாக இருந்தால், அவற்றை (அல்லது பற்று வரவு குறிப்பேடுகள்) முறையான கால இடைவெளியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விலைப்பட்டிகளை அவ்வப்போது பதிவேற்றம் செய்ய ஜி.எஸ்.டி.என். இடம் தரும். வருமான, செலவு விவர அறிக்கை இறுதியாக தாக்கம் செய்யப்படும் வரையில், பதிவேற்றம் செய்யப்பட்ட விலைப்பட்டிகளை வரி செலுத்துவோர் மாற்றி அமைப்பதற்கு ஜி.எஸ்.டி.என். அமைப்பில் வசதி உள்ளது.

எனவே, முறையாக விலைப்பட்டிகளை பதிவேற்றம் செய்வதற்கு இது எப்போதுமே வரி செலுத்துவோருக்குப் பலன் தரக்கூடியதாக இருக்கும். கடைசிநேர நெருக்கடியால் பதிவேற்றம் செய்வது சிக்கலாகும் இதனால் விடுபடுதல், தவறுகள் என கடும் இடருக்கு ஆளாக நேரிடும். தங்களுக்கு சரக்குகள், பொருட்களை வழங்குவோரிடமிருந்து கொள்முதல் செய்ததற்கான விலைப்பட்டிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை வரி செலுத்துவோர் தொடர்ந்து சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த வித நெருக்கடியும் தாமதமும் இல்லாமல் உள்ளிட்டு வரி சலுகையைப் பயன்படுத்திக்கொள்வதை உறுதிசெய்வதற்கு இது உதவியாக இருக்கும். கொள்முதல் செய்வோர், தங்களுக்கு சரக்குகளை விற்பனை செய்வோர், கெடு தேதியிலோ அல்லது அதற்கு ஒரிரு தினங்கள் முன்னதாகவோ விலைப்பட்டிகளை பதிவேற்றம் செய்வதை விடுத்து முறையான கால இடைவெளியில் பதிவேற்றம் செய்யுமாறு, கொள்முதல் செய்வோர் விற்பனையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். தங்களுக்கான விலைப்பட்டிகளை விற்பனையாளர்கள் பதிவேற்றம் செய்துள்ளார்களா என்பதை கொள்முதல் செய்வோர் சரிபார்த்துக்கொள்ளவும் வசதி உள்ளது.

வரி செலுத்துபவர் எந்தளவு முழுமையான அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளார் என்பது குறித்த விவரங்கள் குறிப்பாக சரியான நேரத்தில் அவர் தனது வழங்கல் விலைப்பட்டிகளை பதிவேற்றம் செய்வது தொடர்பான விவரங்கள், விற்பனையாளரால் வழங்கப்பட்ட விலைப்பட்டிகளில் தானாகவே நிகழும் திருத்தங்கள் குறித்த விவரங்களின் பதிவுகளையும் ஜி.எஸ்.டி.என். அமைப்பு வழங்கும். ஜி.எஸ்.டின் பொதுவான வலைவாயில் ஒரு இடத்தில் பான் இந்தியா தரவைக் கொண்டிருக்கும் இவை வரிசெலுத்துவோருக்கு மதிப்பு வாய்ந்த சேவைகளை பெறுவதற்கு வழிவகுக்கும். முறையான கால இடைவெளிகளில் எவ்வளவு சுலபமாக முடியுமோ அவ்வளவு சுலபமாக விலைப்பட்டிகளைப் பதிவேற்றம் செய்வதற்கான முனைப்புகள்   மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஈகோ-அமைப்பு உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி-யின் கீழ் வரும் விதிகளை எந்த சிக்கலும் இல்லாமல் பின்பற்றுவதற்கு இந்த ஈகோ அமைப்பை வரி செலுத்துவோர் திறனுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கே 21. வரிசெலுத்துவோர் தானாகவே வருமானம் மற்றும் செலவு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமா?

பதில்: வேண்டாம். பதிவுசெய்துகொண்ட வரிசெலுத்துவோர்கூட தனது வருமானம் மற்றும் செலவு விவரங்களை, மத்திய அல்லது மாநில வரி நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வருமான வரி கணக்கு அறிக்கை தயாரிக்கும் ஒருவர்   மூலம் தாக்கல் செய்யலாம்.

கே. 22. குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரி கணக்கு அறிக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும்?

பதில்: பதிவு செய்துள்ள ஒரு நபர் குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, வருமான வரி கணக்குத் தாக்கல் செய்தால், தாமதக் கட்டணமாக தாமதித்த ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். இது அதிகபட்சம் ஐந்தாயிரம் வரை போகலாம். கெடு தேதிக்குள் வருடாந்தர வரவு செலவு கணக்கு அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால், ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த சமயத்தில் அறிக்கை தாக்கல் செய்வது தொடர்ந்து தாமதம் செய்யப்பட்டால், அதிகபட்சமாக அவரது மொத்த ஒரு மாநிலத்தில் இவரது விற்றுமுதல் தொகையிலிருந்து கால் சதவிகிதம் (0.25%) கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்.

கே. 23. ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை ஒரே ஆவணத்தின் அடிப்படையில் ஐ.டி.சி. எடுக்கப்பட்டால் என்ன ஆகும்?

பதில்: ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை ஒரே ஆவணத்தின் அடிப்படையில் ஐ.டி.சி. எடுக்கப்பட்டிருப்பதை (உரிமைகோரலின் நகலெடுப்பு) அமைப்பு கண்டறிந்தால், அப்படிப்பட்ட வரி சலுகை பெறுநரின் வருமான வரி கணக்குத் தாக்கலில்   உற்பத்தி வரி பொறுப்பில் சேர்க்கப்படும்.

கே. 24.  ஜி.எஸ்.டி.ஆர்-1 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்-2 விற்கு இடையே காணப்படும் பொருந்தாமைதன்மையை அமைப்பு கண்டறிந்து உற்பத்தி வரியாக பிடித்தம் செய்யப்பட்டு மீட்கப்பட்ட தொகையை உரிமை கோர முடியுமா?

பதில்: முடியும், தவறு கண்டறியப்பட்ட விலைப்பட்டிகள் அல்லது பற்று குறிப்புகள் எதுவாக இருந்தாலும் அவற்றின் விவரங்களை தனது மாதாந்தர | காலாண்டு செல்லுபடியாகும் வருமான வரி கணக்குத் தாக்கலில் அறிப்பதன் மூலம் வழங்குனரால் பொருந்தாமை சரிசெய்யப்பட்ட பிறகு இந்த தொகை, அடுத்து வரும் வரி செலுத்தும் காலகட்டத்தில் உற்பத்தி வரி பொறுப்பிலிருந்து குறைக்கப்படுவதன் மூலம் மறுஉரிமை கோர முடியும். பிரிவு 42 (7). விற்பனையாளரால் வழங்கப்பட்ட வரவு குறிப்புகளைப் பொருத்தவரையில் சட்டப் பிரிவு 43-ல் இதே போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : http://www.cbec.gov.in

3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top