பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வழங்கல் என்ற சொல்லின் பொருளும் வீச்சும்

வழங்கல் என்ற சொல்லின் பொருளும் வீச்சும் குறித்த கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கே 1. ஜிஎஸ்டியின் கீழ் வரி விதிப்புக்குரிய நிகழ்வு என்றால் என்ன?

பதில் : ஜிஎஸ்டியின் கிழ் வரிவிதிப்புக்குரிய நிகழ்வு என்பது வியாபாரத்திலோ வியாபாரத்தின் முன்னேற்றத்துக்கோ நிகழ்த்தப்படும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் ஏதேனும் ஒரு மறுபயனுக்காக வழங்குதல் ஆகும். நடப்பில் உள்ள மறைமுக வரிச் சட்டங்களின் கீழ் வரிவிதிப்புக்குரிய நிகழ்வுகளாகக் கருதப்படும் உற்பத்தி, விற்பனை அல்லது சேவையாற்றுதல் ஆகியவை வழங்கல் என்ற வரிவிதிப்புக்குரிய நிகழ்வின் கீழ் உட்படுத்தப்பட்டுவிட்டன.

கே 2. ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வழங்கல்' என்பதன் குறியிலக்கு என்ன?

பதில் : 'வழங்கல்' என்ற சொல் விரிவான பொருளைக் கொண்டது. வியாபாரத்தில் ஈடுபடும் ஒரு நபர் ஏதேனும் ஒரு மறுபயனுக்காக சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும், விற்பனை, இடமாற்றம், பண்டமாற்றம், பரிமாற்றம், உரிமம், வாடகை, குத்தகை ஆகியவற்றுக்கு விடுதல் ஆகியவற்றைச் செய்தல் அல்லது செய்வதாக ஒப்புக்கொள்தல் ஆகியவற்றை இது உள்ளடக்குகிறது. சேவைகளை இறக்குமதி செய்வதையும் உள்ளடக்குகிறது. ஜிஎஸ்டி சட்ட மாதிரி மறுபயன் எதையும் பெற்றுக்கொள்ளாமல் செய்யப்படும்

கே 3. வரி விதிப்புக்குரிய வழங்கல் என்றால் என்ன?

பதில் : ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை ஈர்க்கும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்கல் தான் வரி விதிப்புக்குரிய வழங்கல் எனப்படும்.

கே 4. சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வழங்கல் என்பதை வரையறுக்கத் தேவையான அத்தியாவசியக் கூறுகள் யாவை?

பதில் : வழங்கல் என்று வரையறுக்கப்பட பின்வரும் கூறுகள் நிறைவேறப்பட்டிருக்க வேண்டும், அதாவது

(i) நிகழும் செயல்பாடு சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்கியதை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

(ii) வேறு வகையில் குறிப்பிடப்படாதவரை, அந்த வழங்கல் ஒரு மறுபயனுக்காக நிகழ்த்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

(iii) வியாபாரத்தின் பகுதியாகவோ அல்லது வியாபார முன்னேற்றத்துக்காகவோ வழங்கல் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.

(iv) வரி விதிப்புக்குரிய நிலப் பகுதிக்குள் வழங்கல் நடந்திருக்க வேண்டும்.

(v) வழங்கல் வரி விதிப்புக்குரிய வழங்கலாக இருக்க வேண்டும் மற்றும்

(vi) வரி விதிப்புக்குரிய நபரால் வழங்கல் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.

கே 5. மேற்சொன்ன அளவுகோல்களில் ஒன்றோ அல்லது அதற்கு மேலானவையோ நிறைவேற்றப்படாத ஒரு பரிவர்த்தனையை ஜிஎஸ்டியின் கீழ் வழங்கல் என்று கருத முடியுமா?

பதில் : ஆம். வியாபரமாகவோ அல்லது அதன் முன்னேற்றத்துக்கு உட்பட்டோ உட்படாமலோ (பிரிவு 7(1) (பி), மறுபயனுக்காக சேவைகளை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட சில சந்தர்பங்களில், அல்லது சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை-1ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி மறுபயனில்லாமல் நிகழ்த்தப்படும் வழங்கல் ஆகியவற்றில் கேள்வி எண் 4க்கான பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள கூறுகள் ஒன்றோ அதற்கு மேலானவையோ நிறைவேற்றப்படவில்லை என்றாலும் அவை வழங்கலாகக் கருதப்பட்டு ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள்ளாகலாம்.

கே 6. பிரிவு 7ல் சரக்குகள் இறக்குமதி குறிப்பிடப்படவே இல்லையே. ஏன்?

பதில் : சரக்குகள் இறக்குமதி, சுங்கச் சட்டம் 1962ன் கீழ் தனியாகக் கையாளப்படுகிறது. அதன்படி சுங்கக் கட்டணச் சட்டம் 1975ன் கீழான அடிப்படை சுங்க வரியுடன், கூடுதல் சுங்க வரியாக ஐஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

கே 7. ஜிஎஸ்டியின் கீழ் சுய-வழங்கல்கள் வரி விதிப்புக்குரியவையா?

பதில் : கையிருப்புச் சரக்கு இட மாற்றங்கள், ஒரு கிளையிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல் அல்லது அனுப்புச் சரக்கு விற்பனை ஆகிய சுயவழங்கல்கள் இரண்டு மாநிலங்களுக்கிடையில் நடக்கும் சுய வழங்கல்கள், அந்தப் பரிவர்த்தனைகளால் மறுபயன் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்றாலும் ஐஜிஎஸ்டி வரி விதிப்புக்குரியவை தான். ஜிஎஸ்டி சட்டத்தின் 22ஆவது பிரிவின்கீழ் ஒரு வழங்குனர், சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வரிவிதிப்புக்குரிய வழங்கலாக நிகழ்த்தும்போது அதை எங்கிருந்து செய்கிறாரோ அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஒரே மாநிலத்துக்குள் நிகழும் சுய-வழங்கல்கள் வர்த்தகப் பகுதியாகப் பதிவு செய்யாமல் இருந்தால் வரி விதிப்புக்குரியதல்ல.

கே 8. ஒரு பரிவர்த்தனை சரக்குகள் வழங்கல் என்று கருதப்பட சட்ட உரிமை மற்றும் / அல்லது உடைமை மாற்றம் அவசியமா?

பதில்: உரிமை, உடைமை ஆகிய இரண்டும் மாற்றப்பட்டால் தான் ஒரு பரிவர்த்தனையை சரக்குகள் வழங்கல் என்று கருத முடியும். ஒருவேளை உரிமை மாற்றப்படவில்லை என்றால், அது சேவை வழங்கலாகவே கருதப்படும். சில நேர்வுகளில் உடைமை உடனடியாக மாற்றப்பட்டுவிடும், உரிமை எதிர்காலத்தில் தான் மற்றப்படும். உதாரணமாக ஏற்பின் அடிப்படையிலான விற்பனை மற்றும் தவணை முறை விற்பனை ஆகியவை. இதுபோன்ற பரிவர்த்தனைகள் சரக்குகள் வழங்கல் என்றே கருதப்படும்.

கே 9. வியாபாரத்தின்போதோ அல்லது அதன் முன்னேற்றத்துக்காகவோ நடத்தப்படும் வழங்கல் என்றால் என்ன?

பதில் : பிரிவு 2(17)ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, பணம் சார்ந்த பயனுக்காகவோ அது இல்லாமலோ நிகழ்த்தப்படும் வணிகம், வர்த்தகம், உற்பத்தி, தொழில், உள்ளிட்ட அனைத்தும் "வியாபாரம்" ஆகும். அதோடு மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளின் இடைநிகழ்வாக அல்லது அவற்றுக்குத் துணையாக நிகழும் செயல்பாடுகள் அல்லது பரிவர்த்தனைகளும் வியாபாரத்தில் அடங்கும். மேலும், மத்திய அரசு அல்லது ஒரு மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு ஒரு பொது அதிகார மையம் என்ற நிலையிலிருந்து செய்யும் எந்த ஒரு செயல்பாட்டையும் வியாபாரம் என்று பொருள்கொள்ளலாம். மேலே சொன்னவற்றிலிருந்து, வியாபாரத்தை முன்னேற்றுதல் என்பதற்கான வரையறைக்கு உட்பட்ட அனைத்து செயல்பாடுகளும் ஜிஎஸ்டி சட்டத்தின்படி வழங்கல் என்று வகைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கே 10. ஒரு நபர், சொந்தப் பயன்பாட்டுக்காக வாங்கிய காரை ஒரு ஆண்டுக்குப் பிறகு ஒரு வணிகரிடம் விற்றுவிடுகிறார். இந்தப் பரிவர்த்தனை சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டியின் கீழ் வழங்கல் என்று கருதப்படுமா? காரணங்களுடன் விளக்குக.

பதில் : இல்லை ஏனென்றால் அந்த நபரால் ஒரு வியாபாரமாகவோ வியாபாரத்தின் முன்னேற்றத்துக்காகவோ அந்த வழங்கல் நிகழ்த்தப்படவில்லை. மேலும் அந்தக் கார், வியாபாரத்துடன் தொடர்பில்லாத பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டதால் அதை வாங்குகையில் அதற்கு உள்ளீட்டு வரி வரவு அனுமதிக்கப்பட்டிருக்காது.

கே 11. ஒரு குளிரூட்டி வணிகர், தனது சரக்குக் கையிருப்பிலிருந்த ஒரு குளிரூட்டியைத் தனது சொந்த பயன்பாட்டுக்காக நிரந்தரமாக விட்டில் போட்டுவிடுகிறார். இந்த பரிவர்த்தனை வழங்கல் என்று கருதப்படுமா?

பதில்: ஆம். அட்டவணை-1 தொடர் எண் 1ன்படி, உள்ளீட்டு வரி வரவு பெறப்பட்ட வியாபாரச் சொத்துகளின் நிரந்தர பயன் மாற்றம் அல்லது விற்பனை, அவற்றால் எந்த மறுபயனும் பெறப்படவில்லை என்றால் ஜிஎஸ்டி இன் கீழ் வழங்கல் என்றே கருதப்படும்.

கே 12. ஒரு மன்றம் அல்லது சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கும் சேவை அல்லது சரக்குகள் வழங்கல் என்று கருதப்படுமா இல்லையா?

பதில் : ஆம். மன்றம், சங்கம், சமூகக் குழு உள்ளிட்ட அமைப்புகளால் அவற்றின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் வழங்கல் என்று கருதப்பட வேண்டும். இது சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவில் 2(17) வியாபாரம் என்பதன் வரையறைக்குள் வருகிறது.

கே 13. ஜிஎஸ்டி சட்டத்தின்படி வழங்கல் என்பதன் வகைகள் என்னென்ன?

பதில் (i) வரி விதிப்புக்குரிய அல்லது வரி விலக்கு பெறக்கூடிய வழங்கல்கள்.

(ii) இரண்டு மாநிலங்களுக்கிடையில் அல்லது ஒரே மாநிலத்துக்குள் நடக்கும் வழங்கல்கள்.

(iii) தொகுப்பு மற்றும் கலப்பு வழங்கல்கள் மற்றும்

(iv) பூஜ்ய வரிவிகித வழங்கல்கள்.

கே 14. இரண்டு மாநிலங்களுக்கிடையிலான வழங்கல்கள் மற்றும் ஒரே மாநிலத்துக்குள் நிகழும் வழங்கல்கள் என்பவை யாவை?

பதில். இரண்டு மாநிலங்களுக்கிடையிலான வழங்கல்கள் மற்றும் ஒரே மாநிலத்துக்குள் நிகழும் வழங்கல்கள் ஆகியவை முறையே ஐஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 7(1), 7(2) மற்றும் 8(1), 8(2) ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ளன. பொதுவாக வழங்குபவர் இருக்கும் இடமும் வழங்கல் நடைபெறும் இடமும் ஒரே மாநிலம் என்றால் அது ஒரே மாநிலத்துக்குள் நிகழும் வழங்கல். வெவ்வேறு மாநிலங்கள் என்றால் அது இரண்டு மாநிலங்களுக்கிடையிலான வழங்கல்.

கே 15. ஒரு சரக்கைப் பயன்படுத்தும் உரிமையை வேறொருவருக்கு அளிப்பது சரக்கு வழங்கல் என்று கருதப்படுமா சேவை வழங்கல் என்று கருதப்படுமா? ஏன்?

பதில் : ஒரு சரக்கைப் பயன்படுத்தும் உரிமையை வேறொருவருக்கு அளிப்பது சேவை வழங்கல் என்றே கருதப்படும் ஏனென்றால் இப்படிப்பட்ட வழங்கலில் பொருளின் உரிமையாளர் மாற்றப்படவில்லை. இதுபோன்ற பரிவர்த்தனைகள், சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை- IIன்படி சேவை வழங்கல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.

கேள்வி 16. பணிகள், ஒப்பந்தங்கள் மற்றும் கேட்டரிங் சேவைகள் சரக்கு வழங்கலாகக் கருதப்படுமா சேவை வழங்களாகக் கருதப்படுமா?

பதில் : பணிகள், ஒப்பந்தங்கள் மற்றும் கேட்டரிங் சேவைகள் ஆகியவை சேவை வழங்கலாகவே கருதப்படும். அவை இரண்டும், மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை-IIன் தொடர் எண் 6 (ஏ) மற்றும் (பி) ஆகியவற்றில் இவை இரண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கேள்வி 17. மென்பொருள் வழங்கல், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் சரக்கு வழங்கலாகக் கருதப்படுமா சேவை வழங்கலாகக் கருதப்படுமா?

பதில்: தகவல் தொழில்நுட்ப மென்பொருளை வளர்த்தெடுத்தல், வடிவமைத்தல், ப்ரோக்ராமிங், தவகவமைத்தல், தழுவல், தரம் உயர்த்துதல், மேம்படுத்துடதல், செயல்படுத்துதல் ஆகியவை சேவை வழங்கல் என்று, மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை-IIஇன் தொடர் எண் (2) (டி)இல் பட்டியலிடப்பட்டுள்ளன.

கேள்வி 18. தவணைக் கொள்முதல் திட்டத்தில் வழங்கப்படும் சரக்குகள் சரக்கு வழங்கலாகக் கருதப்படுமா சேவை வழங்களாகக் கருதப்படுமா? ஏன்?

பதில்: தவணைக் கொள்முதல் திட்டத்தில் வழங்கப்படும் சரக்குகள், சரக்கு வழங்கலாகவே கருதப்படும். ஏனெனில் அதில் வருங்காலத் தேதியிலாவது பொருளின் உரிமையாளர் மாற்றம் நிகழ்கிறது.

கேள்வி 19, சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி / யுடிஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் தொகுப்பு வழங்கல் என்றால் என்ன?

பதில்: வரி விதிப்புக்குரிய நபர், பெறுநருக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரக்கு மற்றும் சேவை அல்லது அவற்றின் ஏதாவது ஒரு சேர்க்கையை வழங்குவதே தொகுப்பு வழங்கல் எனப்படும். இவை இயல்பாக ஒன்றுக்கொண்டு இணைப்புகொண்ட ஒன்றாக கட்டப்பட்டு வழங்கப்படும். ஏதேனும் ஒன்று முதன்மை வழங்கலாக இருக்கும். உதாரணமாக சரக்குகள் கட்டப்பட்டு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு காப்பீட்டுடன் அனுப்பப்படும்போது, சரக்குகள் வழங்கல், கட்டுவதற்கான பொருட்கள், போக்குவரத்து மற்றும் காப்பீட்டு ஆகியவை தொகுப்பு வழங்கல் ஆகும். இவற்றில் சரக்கு வழங்கல்தான் முதன்மை வழங்கல்.

கேள்வி 20. தொகுப்பு வழங்கலுக்கான வரிப் பொறுப்பு ஜிஎஸ்டியின் கீழ் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

பதில்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வழங்கல்களை உள்ளடக்கிய தொகுப்பு வழங்கலில் அவற்றில் ஒன்று முதன்மை வழங்கலாக இருக்கையில் அந்த முதன்மை வழங்கல் எதுவோ அதுவே வழங்கல் என்று கருதப்படும்.

கேள்வி 21. கலவை வழங்கல் என்றால் என்ன?

பதில்: கலவை வழங்கல் என்பது சரக்குகள் மற்றும் சேவைகளின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட வழங்கல்கள் அல்லது இது போன்ற ஏதுனும் ஒரு சேர்க்கை. இது ஒரு வரிவிதிப்புக்குரிய நபரால் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டு ஒரே விலைக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகு வழங்கல் தொகுப்பு வழங்கலாக இல்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக அடைக்கப்பட்ட உணவுகள், இனிப்புகள், சாக்லேட்கள், கேக்குகள், உலர் கனிகள், காற்றுாட்டப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் பழரசங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மூட்டையில் ஒரே விலைக்கு வழங்கப்படுவது கலவை வழங்கல் எனப்படும். இதில் ஒவ்வொரு பொருளையும் தனியாகவும் வழங்க முடியும். ஒன்றை மற்றொன்று சார்ந்திருக்கவில்லை.

கேள்வி 22. கலவை வழங்கல் மீதான வரிப் பொறுப்பு ஜிஎஸ்டியின் கீழ் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

பதில்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வழங்கல்களை உள்ளடக்கிய கலவை வழங்கல், எந்தப் பொருளின் வழங்கல் ஆகப் பெரிய வரி விகிதத்துக்குரியதோ அதன் வழங்கலாகவே கருதப்படும்.

கேள்வி 23. சரக்கு வழங்கலாகவும் கருதப்படாத சேவை வழங்கலாகவும் கருதப்படாத செயல்பாடுகள் ஏதேனும் உள்ளனவா?

பதில்: ஆம். மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை - III சில செயல்பாடுகளை பட்டியலிடுகிறது. (i) ஒரு வேலையாள் வேலை நிமித்தமாகவோ அல்லது வேலையுடன் தொடர்புடையதாகவோ வேலைகொடுத்தவருக்குச் செய்யும் சேவைகள், (ii) சட்டப்படி அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களின் சேவைகள், (iii) நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள், அரசியலமைப்பு பணியாளர்கள் ஆகியோரின் பணிகள் (iv) தகனம், அடக்கம், சுடுகாடு அல்லது பிணவறைச் சேவைகள் மற்றும் (v) நில விற்பனை மற்றும் (vi) லாட்டரி, பந்தயம் மற்றும் சூதாட்டம் அல்லாத உரிமைக் கோரிக்கைகள் ஆகியவை சரக்கு வழங்கலும் இல்லை சேவை வழங்கலும் இல்லை என்றே கருதப்படும்.

கேள்வி 24. ஜிஎஸ்டியின் கீழ் பூஜ்ய விகித வழங்கல் என்றால் என்ன?

பதில் : சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குபவர் அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலப் பிரிவுக்காக சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளை ஏற்றுமதி செய்வது அல்லது சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளை வழங்குதல் ஆகியவை பூஜ்ய விகித வழங்கல் எனப்படும்.

கேள்வி 25. மறுபயன் இல்லாத சேவை இறக்குமதி ஜிஎஸ்டியின் கீழ் வரிவிதிப்புக்குரியதா?

பதில் : ஜிஎஸ்டியின் பிரிவு 7ல் குறிப்பிட்டுள்ளபடி, மறுபயன் இல்லாமல் சேவைகளை இறக்குமதி செய்வது வழங்கல் அல்ல. ஆனால் அட்டவணை I- இன் தொடர் எண் 4இல் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு வரிவிதிப்புக்குரிய நபர், வியாபார முன்னேற்றத்தின் பகுதியாகத் தொடர்புடைய நபரிடமிருந்தோ அல்லது வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய வேறொரு நிறுவனத்திலிருந்தோ சேவைகளை இறக்குமதி செய்வது அதற்கு மறுபயன் எதுவும் பெறவில்லை என்றாலும் வழங்கல் என்றே கருதப்படும்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

2.81818181818
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top